Tuesday, February 28, 2006
நீங்கள் நடிக்க வந்திருக்கவிட்டால் என்ன ஆகியிருப்பீர்கள்?
வருடம் 1989
இடம் சென்னை
நேரம் சனிக்கிழமை முற்பகல் நேரம்
எனக்கு கல்யாணம் ஆகி 1 மாதம் தான் ஆகியிருந்தது. நான் கையில் ஒரு தமிழ் வார இதழில் ஒரு நடிகை போட்டோ உள்ள படத்தை விரித்து வைத்துக் கொண்டு பகல் கனவு கண்டுக் கொண்ட்டிருந்தேன். அப்போது என் மனைவி என் அருகில் வந்து சோகமாக கண்ணீர் தளும்ப " ஏன்னா நமக்கு கலுயாணமாகி 1 மாசம்தான் ஆயிருக்கு அதுக்குள்ளேயே இந்த நடிகையைப் பார்த்து ஜொள்ளு விட்ரீங்களே இது நாயமா" என விசும்பினாள். நானும் " இல்லேமா இது ஒரு வித்தியாசமான பகற் கனவு சொல்றேன் கேளு" என ஆரம்ப்பித்தேன் அவளும் இன்ட்ரெஸ்டாக கேட்க ஆரம்ப்பிததாள் (கல்யாணமான புதில்லையா? அதனாதான்). " இந்த அக்ட்ரஸ்கிட்டே நீங்கள் நடிக்க வந்திருக்கவிட்டால் என்ன ஆகியிருப்பீர்கள்? என ஒரு கொஸ்டின் அதுக்கு அவளும் இஞ்ஜினியர் ஆகியிருப்பேன்னு பதில் சொல்லிருக்கா. இதே கொஸ்டினே என் கிட்டே வந்து நீங்க இஞ்ஜினியர் ஆகவில்லையென்றால் என்ன ஆகியிருப்பீர்கள் என்னு கேட்டா நான் என்ன சொல்லியிருப்பேன் என பகற்கனவு கண்டுக்கொண்ட்டிருந்தேன்" என்று சொல்லி நிறுத்தினேன். அவளும் "மிஸ்டர் சிவா, நீங்க இஞ்ஜினியர் ஆகவில்லையென்றால் என்ன ஆகியிருப்பீர்கள்?" என ஒரு நிருபர் போல் மோனோஆக்ட் கொடுத்தாள்.நானும் "சினிமாவில் சேர்ந்து ஒரு நல்ல டான்ஸ் மாஸ்ட்டர் ஆகியிருப்பேன்" என்றேன். என்மனைவி " ஆஹா, நிஜமாகவே வித்தியாசமானக் கற்பனைன்னா உங்களுக்கு. அன்னைக்கி பிங்க் கலர்லே பாண்டும் யெல்லோ கலர்லே சர்ட்டும் ஹை ஹீல்ஸ் சூவும் போடும் போதே நினைச்சேன் உங்களுக்கு இந்த மாதிரி டிபரண்டா ஏதாவது டாலேண்ட் இருக்கும்ன்னு. மல்டி டாலண்டட்ன்னா நீங்க" என சொல்லி அருமையான சிக்கன் 65 செய்து தந்தாள்
16 வருட்ங்களுக்கு பிறகு.........
வருடம் 2005
இடம் கால்கரி
நேரம் வெள்ளிக்கிழமை சாயங்காலம்
களைப்பாக ஆபிஸ்லிருந்து வீட்டிற்க்குள் நுழைகிறேன். என் மனைவி தீவிரமாக கூகிளில் எதையோ தேடிக்கொண்டே " இன்னைக்கி வீக் என்ட் டல்லா இருக்கிங்களே என்ன விசயம்" என்றாள். நான் " கனாடாவில் நான் இஞ்ஜினியர் இல்லையாம் டெக்னாலஜிஸ்ட்டாம். நான் இஞ்ஜினியர் ஆகனும்னா ப்ரொப்ஷனல் அஸோசியேஷன்லே ரிஜிஸ்தர் பண்ண வேண்டுமாம். அந்த புரஸீஜரை கொஞ்சம் பாரு" என்றேன். "சரி நீங்க போய் ட்ரஸ் பண்ணிட்டு வாங்கோ என்ன புரஸீஜர்ன்னு பார்த்து வைக்கிரேன்" என்றாள். நான் திரும்பி வந்தவுடன் என்னவள் என்னை பார்த்து மர்ம புன்னகை புரிந்து கொண்டே " ரிஜிஸ்ட்ரேஷனுக்கு மூணு ஸ்டெப் இருக்கு.
1 உங்க மார்க் லிஸ்டை யுனிவர்சிடியிலிருந்து கொடுக்கணும்,
2 நாலு பேருடைய ரெபரன்ஸ்,
3 Ethics and Law எக்ஸாம் எழுதி பாஸ் பண்ணனும்.
மொத ரெண்டும் ஈஸி. எக்ஸாமெல்லாம் எழுதி இந்த வயசிலே உங்களாலே பாஸ் பண்ண முடியாது So நீங்க கனவு கண்ட மாதிரி டான்ஸ் மாஸ்ட்டர் ஆயிடுங்க்கோ. கால்கரிலே நெறய டான்ஸ் ஸ்டூடியோ இருக்கு அன்ட் நிறைய வகன்ஸியும் இருக்கு" என நக்கல் செய்தாள்.
இந்த வயதில் இந்த தொப்பையுடன் டான்ஸா. அதெல்லாம் வேண்டாம்
படி சிவா.. படி என்று படித்து எக்ஸாமை பாஸ் செய்து விட்டேன் .
என்னுள் இருந்த டான்ஸ் மாஸ்ட்டரை எட்டி உதைத்து விட்டேன் என இறுமாப்பில் இருந்த என்னை நேற்றைக்கு வந்த லெட்ட்ர் என்னுடைய பிங்க் பாண்ட்டையும் யெல்லோ சர்ட்டையையும் தூரத்தில் காட்டுகிறது. அஸோஷியஷனிடமிரிந்து நான் சின்ன வயதில் எஞ்ஜினியரிங் எக்கானமிக்ஸ் படிக்கவில்லையாம் அதனால் இப்போது படித்து விட்டால் நான் இஞ்ஜினியராம் என்று லெட்டர் வந்திருந்தது.
இல்லையென்றால் நான் டான்ஸ் மாஸ்ட்டரா?
இப்போது என் தொப்பையைத் தூக்கிக் கொண்டு எனக்கும் என் மகனுக்கும் யுனிவெர்சிடியில் அட்மிஸனுக்கு அலைந்துக் கொண்டிருக்கிறேன்
ஆகையால் நண்பர்களே உங்களுக்குள் உள்ள திறமையைப் பற்றி சிறு வயதில் பீற்றிக் கொண்ட்டால், பிற்க்காலத்தில் அசடு வழிய நேரிடும். மனைவியற்க்கு ஞாபக சக்தி மிக அதிகம்.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
வாக்களித்து ரோஜா என்ற மறுபெயரும் கொண்ட 'பாண்டி நாட்டு தங்கம்ஸ்' அணியினரை வெற்றி பெறச் செய்தமைக்கு மிக்க நன்றி.
//மனைவியற்க்கு ஞாபக சக்தி மிக அதிகம்//
உண்மை. உண்மை. மறுக்க முடியாத உண்மை. :-)
Post a Comment