யாரோ...... இவர்..... யாரோ....
1. தன்னுடைய மெர்ஸிடஸ் பென்ஸ் காரை வீட்டில் வைத்துவிட்டு பஸ்ஸில் ஆபிஸ்ற்க்கு போவார். பெட்ரோல் லிட்ட்ருக்கு 5 சென்ட் ஏறி விட்டதாம்
2. ஒரு எலுமிச்சம் பழத்தை வாங்கி ஊறுகாய் போட்டு ஒரு மாதத்திற்க்கு சாப்பிடுவார்.
3. தன் மகனின் பிறந்தநாள் பார்ட்டிக்கு அழைத்துவிட்டு நாம் சாப்பிடவேண்டிய சாப்பாடை நம்மை கொண்டுவரசொல்வார்.
4. தம்முடைய முழு சம்பளத்தை இந்தியாவில் அதிக வட்டிக்கு டெபொசிட் செய்துவிட்டு நண்பரிடம் வட்டியில்லா கைமாற்று வாங்கி காலத்தை ஓட்டுவார்.
5. சரியாக நாம் சாப்பிடும் நேரம் வீட்டுக்கு வந்து ஃப்ரீயாக லஞ்ச் சாப்பிட்டு டாலர்களை சேமிப்பார்
6. ஆபிஸில் ஸ்டேஷனரி சாமன்களை சுட்டு இந்தியாவில் நண்பர்களுக்கும் உறவினருக்கும் அன்பளிப்பாக கொடுப்பார்
7. ஆபிஸில் டீ பாக்கை சுட்டு வீட்டில் சுட சுட டீ அருந்தவார் அல்லது ஆபிஸ்லிருந்து ஒரு ஃப்ளாஸ்க் நிறைய காபியை நிறப்பி வீட்டுக்கு எடுத்து செல்வார்
8. கமெரா பொன்ற சாதனங்களை தேவைபடும் போது வாங்கி உபயோகித்து விட்டு கடையில் திருப்பிக் கொடுத்து காசை வாங்கிவிடுவார்
இவர்தான் ஆஃப் பாண்டுடன் இந்தியாவிற்க்கு வந்து மாமனார் செலவில் மினரல் வாட்டர் குடிக்கும் என்.அர்.ஐ மாப்பிள்ளை
Wednesday, March 01, 2006
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
அனுபவம் பேசுகிறதா?
என்ன சிவா, யாரையோ மனசில் வைத்துக்கொண்டு எழுதிய மாதிரி இருக்கு :)
கொத்தனாரே,
மனசிலே நெறய பேரே நினச்சி எழுதினேன்.
கங்க்ராட்ஸ் நிலாவில் வெற்றிப் பெற்றதற்கு
ஊமையாரே,
உங்கள் ஊரில் என் ஆர் ஐ மாப்பிள்ளைகள் நிறைய இருப்பார்களே.
சவூதிலேயும் அபுதாபிலேயும் அவங்க டார்ச்சர் தாங்க முடியாம இந்த குளிர் பிரதேசத்திற்க்கு வந்தா, இங்கேயும் அடங்காமே டார்ச்சர் பன்றங்கப்பா
Some people even ask you to bring the plate and water for their birthday party.It is disgusting
Deiva,
Post your experiences. People will feel ashamed after reading this. I do not know why people lower their life standard after coming to a foreign country.
நீங்க சொல்ற மாதிரி ஒருத்தன் மாட்டுனா....அவனை நேக்கா கழட்டி விடுறதுதான் நல்லது. பட்டியல் போட்டிருக்குற அத்தனை பண்பும் படு கேவலமா இருக்கே..............
ராகவன்,
இந்த பண்புள்ள மனிதர்கள், இந்தியாவில் வாழும்வரை நன்றாகத்தான் இருந்தார்கள். வெளிநாட்டிற்க்கு வந்தவுடன் இப்படிக் கேவலமாக மாறி விடுகிறர்கள். யாரிட்ம் புலம்பவது எனத் தெரியாமல் இப்படி பப்ளிக்கா புலம்பினேன்.
நான் உங்கள் எழ்த்தின் ரசிகன். நீங்கள் என் பதிவிற்க்கு என்னை கௌரவப்படுத்திவிட்டீர்கள். மிக்க நன்றி
உண்மையைச் சொல்றேனே. நீங்கள் பட்டியல் இட்டதில் 6வதை நான் செய்திருக்கிறேன். இப்போதும் செய்வேனோ என்னவோ? ஆனால் இப்போதெல்லாம் உறவினர்கள் பேனா கொண்டு போய் கொடுத்தால் மதிப்பதில்லை. அதனால் அமெரிக்காவில் இருந்து ஒன்றும் கொண்டுவரவில்லை என்று சொல்லிவிடுகிறேன். :-)
மற்றவற்றை இதுவரை ட்ரை பண்ணியதில்லை. பார்ப்போம் எப்போது அதற்கு சந்தர்ப்பம் கிடைக்கிறது என்று. இராகவன் அமெரிக்கா வந்தால் 3வதையும் 5வதையும் ட்ரை பண்ணலாம். :-)
சிவா அண்ணா. நீங்கள் வீட்டிற்கு வருவதாய் இருந்தால் சொல்லுங்கள். அதற்கும் சில என்.ஆர்.ஐ பாயிண்ட்ஸ் இருக்கு. :-)
நான் போட்ட கமெண்ட் வந்துருச்சா?
Post a Comment