Sunday, March 12, 2006

என்னுடைய அரேபிய அனுபவங்கள்- 1

---------------------------------------------------------------------------------------
முன்குறிப்பு - 1 இது நான் சந்தித்த சில மனிதர்களின் குணாதிசயைங்களைப் பற்றி. இஸ்லாமைப் பற்றி அல்ல.

முன்குறிப்பு - 2 அரேபிய நாடுகளின் சட்டதிட்டங்களை விமர்சரிக்க அல்ல

-----------------------------------------------------------------------------------
முதல் நாள் சவூதி அலுவலகத்தில் நுழைந்தவுடன் என்னை பெர்சன்னல் மனேஜரை பார்க்க சொன்னார்கள். அவர் ஒரு சவூதி. என்னை இன்முகத்துடன் வரவேற்று. டீ உபசரித்து பிரயாணம் பற்றி விசாரித்தார். என்னுடைய பாஸ்போர்ட்டைக் கேட்டார். என் பாஸ்போர்ட்டைப் பார்த்ததும் அவர் முகம் மாறியது. "நீ இந்தியனா? நான் அமெரிக்கன் என நினைத்தேன்" என்றார். "என்னைப் பார்த்தால் அமெரிக்கன் போலிருக்காதா? எதை வைத்து அமெரிக்கன் என்று நினைத்தீர்கள்" எனக் கேட்டதற்க்கு."உன்னை விமான நிலையத்திற்க்கு வந்து ஜான் அழைத்து வந்தாரே? உன்னை இந்த வேலையில் எடுப்பதற்க்கு ஒத்தைக் காலிச் நின்றாரே" என்று பதிலளித்து என்னை அவருடைய உதவியாளரிடம் ஒப்படைத்தார். ஜான் என் அமெரிக்க நண்பன். அவன் தான் இந்த வேலையை வாங்கிக் கொடுத்தான். இந்த சவூதி மானேஜர் அமெரிக்கர்களையும் பிரிட்டிஷாரை மட்டும் கையாளுவாரம். இந்தியர்களை கையாளுவது அவருக்கு இழுக்காம் என்பதை ஜான் மூலம் பின்னாளில் தெரிந்து கொண்டேன்


பெர்சன்னல் மானேஜரின் உதவியாளர் ஒரு இந்தியர். இவர் பெயரை சலீம் என்று வைத்து கொள்வோம். இவர் என்னிடம் இந்தியில் பேச ஆரம்பித்து விட்டார். எனக்கு இந்தி அவ்வளவாக வராது என்று சொன்னதற்க்கு இதுதான் தமிழர்களின் பிரச்சனை என சலித்துக் கொண்டே தொடர்ந்து எனக்கு சவுதீயைப் பற்றி இந்தியில் பயமுறுத்திக் கொண்டே இருந்தார். அப்போது அவருக்கு ஒரு தொலைபேசி வந்தது. அவர் தொலைபேசியில் மறுமுனையில் உள்ளவரிடம் சுத்தமான சென்னைத் தமிழில் பேசிக் கொண்ட்டிருந்தார். அவர் பேசி முடித்தவுடன். "நீங்கள் தமிழரா. எனக்கு தமிழ் நன்றாகத் தெரியும்" என்றேன். அவர் "நான் பொதுவாக தமிழில் பேச விரும்புவதில்லை. இந்தியாவில் முஸ்லிம்களைக் கொல்லுகிறார்கள். இந்தியாவில் அமைதியாக வாழ வழியில்லை. அதனால் தமிழில் பேசுவதில்லை" என சொன்னதும் எனக்கு தலைச் சுற்றியது. சென்னையில் எப்போது இந்து முஸ்லிம் கலவரம் நடந்தது என என் மூளையைக் கசக்கி கொண்டிருந்தேன். பின்னாளில் எனக்கு சில பேர்கள் இப்படி தங்களை சுற்றி ஒரு பரிதாபம் என்ற வலையையும் நசுக்க படும் சிறுபான்மையினர் ஒரு இமேஜையும் வளர்த்து தங்கள் எஜமானர்களிடம் நல்ல பெயர் வாங்கி அதிக நாள் அந்த நாட்டில் தங்க அவர்கள் போடும் நாடகம் என தெரிந்து கொண்டேன். அதன் பிறகு சலீம் என்னுடன் ஹிந்தியில் தான் பேசுவார் நானும் சளைக்காமல் தமிழில் பதில் சொல்வேன்.


பிறகு நான் சந்தித்தது அக்கௌண்டன்டை. இவர் கர்நாடாகவைச் சேர்ந்தவர். இவர் பெயரை ராம் என்று வைத்துக் கொள்வோம். இவர் என்னை ஒரு 1/2 மணி நேரம் காக்க வைத்துவிட்டு என்னிடம் பேசினார். அவர் கேட்ட முதல் கேள்வி "ஏன் இன்ஸ்ட்ரூமென்ட் துறையில் தமிழர் மட்டும் இருக்கின்றனர்?" நான் பதில் கூற முடியாமல் அமைதியாக இருந்தேன். அவர் தனக்கு அந்த கம்பெனியில் உள்ள அதிகாரங்களை பட்டியலிட்டுக் கொண்டிருந்தார். அவர்தான் அந்த கம்பெனியை நிர்வாகம் செய்வதாவாகவும் அவர் பேச்சிற்க்கு சவூதி மானேஜர்கள் கூட பயப்படுவார்கள். அவர் தான் அந்தக் கம்பெனியின் முதுகெலும்பு. அவர் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் வேலையிலிருந்து எடுக்கும் அதிகாரம் அவர் கையில் இருப்பதால் அவரை மதிக்கவேண்டும் என் அறிமுகப் படலத்தில் 4 /5 முறை பிரகடனப் படுத்தி விட்டார். நான் அமைதியாக கேட்டுக்கொண்ட்டிருந்தேன். எனக்கு என் திறமையின் மேல் அபார நம்பிக்கை உண்டு. அதனால் எனக்கும் தலை கர்வம் உண்டு. ராம் தனது பாரகிரமங்களைச் சொல்லி முடித்து "எனி கொஸ்டின்ஸ்?" எனக் கேட்டார். நானும் ஒரே ஒரு கேள்வி" என்றேன் "என்னை சவுதிக்கு அழைத்து வந்து வேலை கொடுக்கபோகிறீர்களா இல்லை வேலையிலிருந்து எடுக்க போகிறீர்களா?" எனகெட்டு அவர்க் கண்களை உற்று நோக்கினேன், அவர் தன் பார்வையைக்த் தாழ்த்தி " நீ வேலைக்கு ஜானிடம் ரிப்போர்ட் செய்" என தன் வேலையில் கவனம் செலுத்தினார்.

இப்படி தொடங்கியது என் சுவாரசியமான சவூதி வாழ்க்கை.


.........தொடரும்

7 comments:

said...

An interesting beginning shiva.

I am really shocked at the attitude of such people.An eye opening post.

Tj

said...

Dear Siva

Interesting starting. Go futher.

Regards
Rajan

said...

நல்ல துவக்கம்... உங்கள் தொடர் மேல் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளீர்கள்.

said...

பரவாயில்ல சுவாரசியமா இருக்கு!
கால்கரியில எங்க இருக்கீங்க!

said...

வெளிகண்டநாதரே, நான் எட்ஜ்மான்ட்லே(Edgemont) இருக்கேன். நீங்க எங்கே யு.எஸ்லே?

Tj, Rajan, Siril thanks for visiting

said...

Sorry for posting my comments in English as I do not have the Tamil Fonts in my computer.

Thanks for sharing your experiences. What has happened to you is typical of us from our country. Most of us do not udnerstand the meaning of the word "pride" when it comes to us as a country. We have divided ourselves so much on caste, community, religion and language that it becomes impossible to be identified as an Indian.

The attitude displayed by some of your collegues is nothing new! We all have our ego but when it comes to showing off our power, none can beat us!

I must complement you for answering in Tamil each time that person spoke to you in Hindi, even though he knew Tamil!

When I served the Indian Army, the common language was Hindi but in battalions or regiments where there was one class composition like Sikhs, Gorkhas or South Indians, it was essential for us to learn the language of the troops. The rule was that we should speak in a language understood by the group but when there are only persons in a group who could understand a common language, we should speak that language only. That rule made sense simply because if one person in that group did not understand the language spoken, he or she would feel left out and may take it as deliberate insult.

There are some people in our country who take pride in conversing in thieir mother tongue. Take Bengalis or the people from Assam, or Manipur, Nagaland, Meghalaya etc from the North East. You will always find them speaking in their language. But Tamilans do not follow this rule! I do not blame that gentleman who insisted speaking in Hindi when he knew Tamil!

Look forward to your next episode

Regards

Colonel (Retd) A Sridharan, VSM
Coimbatore

said...

இந்தியர்களை வெறுக்கும் சௌதி பெர்சனல் மேனேஜருக்கு உதவியாளர் ஒரு இந்தியராக இருக்கக் காரணம், அவர் ஒரு முஸ்லீம் என்பதா? தன் தமிழ் அடையாளத்தை மறைத்துக் கொண்டாலும் முஸ்லீம் அடையாளம் எங்கும் எதற்கும் உதவும் போல் இருக்கிறது.