--------------------------------------------------------------------------------------
நான் முன்பே குறிப்பிட்டது போல் அரேபியாவின் கூட கோபுரங்களிலும் மாடமாளிகைகளிலும் நம் இந்திய சகோதரர்களின் இரத்தக்கறையைப் பார்க்கிறேன். பளபளக்கும் கழிவறைகளில் அவர்களின் வேர்வை நாற்றத்தை முகர்கிறேன்.
அரேபியாவில் மிகவும் பரிதாபத்துக்குறியவர்கள் அங்கே வீட்டு வேலைக்கு வரும் நம் ஏழை சகோதரிகள். இவர்களில் இந்தியர் அதிகம் இருப்பதில்லை. இலங்கை, தாய்லாந்து, இந்தோனேஷியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டு சகோதரிகள்தான் அதிகம். இவர்களிடம் நான் நேரிடையாகப் பேசியதில்லை. இவர்கள் படும் வேதனைகளை அறிய எனக்கு வாய்ப்புஇருந்ததில்லை. ஒரு முறை என் மனைவி இந்தியாவிற்க்கு சென்றிருந்த போது நான் கம்பெனி க்ள்பில் உணவருந்திக் கொண்டிருந்தேன். அங்கே வந்த என் அரேபிய நண்பர் ஒருவர் " என்ன ஹோட்டல் சாப்பாடு?" என்றதற்கு "மனைவி ஊரில் இல்லை" என்றேன். அதற்கு அவர் "நீ எனக்கு நல்ல நண்பர் அதனால் என் வீட்டு பிலிப்பினோ வேலைக்காரியை அனுப்பி வைக்கிறேன் என்றார். "பிலிப்பினோ உணவு எனக்குப் பிடிக்காது" இது நான். "அடே சாப்பட்டிற்க்கு இல்லையப்பா, 'அதற்கு'" என்று கண்ணைச் சிமிட்டானார் என் உயிர் நண்பர். "இதெல்லாம் சகஜமப்பா.நாங்கள் இவ்வளவு செலவு செய்து அவர்களை இங்கே அழைத்து வந்து சம்பளம் கொடுத்து சாப்பாடு போட்டு வைத்திருப்பது எதற்காக. இவர்களை என்ன வேண்டுமானலும் செய்ய எங்களுக்கு உரிமை இருக்கிறது. எங்கள் அரேபிய நண்பர்கள் இவர்களை மாற்றிக் கொள்வோம்" என்று ஒரு குற்ற உணர்வே இல்லாமல் பேசிக் கொண்டிருந்தார். இவர் அமெரிக்காவில் 5 வருடம் தங்கிப் படித்தவர் பண்பாளர். இவரே இப்படியென்றால், மற்றவர்களிடம் இச்சகோதரிகளின் நிலைமை?
ஏதோ ஒரு காரை இரவல் தருவது போல் தன் வேலைக்காரியை எனக்கு அளித்தார். அங்கே மானிடம் இல்லை. அடிமைகள் ஒரு இயந்திரமே என்ற கணிப்பிருந்தது. என்ன செய்ய என் அரேபிய வெறுப்புக் கொண்ட மூளை இந்த மாதிரி சிந்தித்தது. என் அரேபிய நண்பனின் விசுவாசத்தை மறந்த நன்றிக் கெட்ட நாய்தானே நான்
இந்தியாவில் கோடிக்கணக்கான திறமையான வாலிபர்கள் பல்வேறு காரணங்களால் அவர்களின் திறமை வெளிபடாமல் போயிருக்கும். இவர்கள் அதிகப் பணம் சம்பாதிக்க கடைசி வழியாக தேர்ந்தெடுப்பது அரேபிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகள். அங்கே போய் அதிக பணம் சேர்த்து தன் பெற்றோர்களை நன்றாக வைத்துக் கொள்ளவும் தன் சகோதரிகளின் திருமணத்திற்க்காவும், சகோதரரின் படிப்பிற்க்காவும் வருகிறார்கள். இவர்கள் கண்களில் எவ்வளவு கனவுகள், ஆசைகள்.
முதலில் இந்தியாவில் அரேபியரைவிட கேவலமான மனித மிருகங்களான ஏஜெண்டுகள் சுரண்டுவார்கள். இந்த ஏஜெண்டுகளை அரேபியா பாலைவனங்களில் வதக்கவேண்டும். இந்த அவலங்களை வெளிக் கொணர்த்திய நல்ல தமிழ் திரைப் படம் வெற்றிக்கொடி கட்டு.
ஜப்பார், இவரது இயற்பெயரும் இதுவே. இவர் நான் சவூதியில் தங்கியிருந்த காம்பௌண்டில் காவலாளியாக வேலைசெய்து வந்தார். என் வயது ஒத்தவர். படித்தது பி ஏ ஆங்கில இலக்கியம். கேராளாவை சேர்ந்தவர். இவருக்கு தந்தை இல்லை. இரு தங்கைகள். இவருடைய தாயையும் தங்கைகளையும் கரையேற்ற இருந்த சொற்ப நிலத்தை விற்று அதை ஏஜென்ட்டிடம் கொடுத்து ஏமாறமல். சவூதிக்கு வந்து வகையாக ஒரு அரபியிடம் மாட்டிக்கொண்டு ஹொஃபுஃப் என்ற கிராமத்தில் அவர் வீட்டில் வேலையாளக இருந்தார்.
எப்படியோ அவரிட்மிருந்து தப்பித்து எங்கள் கம்பெனிக்கு வேலைக்கு வந்துவிட்டார். எங்கள் கம்பெனியில் அமெரிக்கர்கள் அதிகம் வேலை செய்ததால் ஆங்கிலம் நன்றாக பேச கூடியவற்க்கு கம்மியான சம்பளத்தில் உடனடியாக வேலைக் கிடைத்துவிடும். ஒழுங்காக 1 தேதி சம்பளம் 2 வருடத்திற்கு ஒரு முறை விடுமுறை, விமான டிக்கட் கரக்டாகக் கிடைத்துவிடும். எங்கள் கம்பெனியில் சேர்ந்த பிறகுதான், ஜப்பாரின் கனவு நனவாகத் தொடங்கியது. தன் தங்கைகளைக் கரைசேர்த்து தானும் திருமணம் செய்துக் கொண்டார். அவர் சொல்லித்தான் கேரள முஸ்லிம் மக்களிடையே வர்தட்சினை கொடுமை யிருபது எனக்குத் தெரிந்தது. ஜப்பார் அழுகாக ஆங்கில இலக்கியம் பற்றி பேசுவார். அவர் நைட் சிப்ட் பார்க்கும் போது செக்கியுரிட்டி கூண்டில் அமர்ந்து புகைத்துக் கொண்டே ஆங்கில இலக்கியத்தைப் பற்றி பேசிக் கொண்டும் ஜேசுதாஸ் பாடிய பாடல்களை கேட்டுக் கொண்டும் நட்பை வளர்த்திருக்கிறோம்.
ஒரு நாள் ஜப்பார் என்னிடம் "சாரே எனக்கு இடது கை அடிக்கடி வலிக்கிறது, ஹார்ட் அட்டாகக இருக்குமோ" என்றார். நானும் எதற்க்கும் நாளை காலை டாக்டரிடம் செல்லுமாறு கேட்டுக் கொண்டேன் . மறுநாள் கம்பெனி டாக்டர் அவரை பரிசோதித்து விட்டு ஆஸ்பத்திரிக்கு சென்று இருதய நிபுணரைப் பார் என்று அனுப்பிவிட்டார். ஆஸ்பத்திரியில் இவரை செக் செய்து ஒன்றுமில்லை என்று சொல்லிவிட்டார்கள். ஆனால் இவர் கைவலி குறையவேயில்லை. மீண்டும் ஆஸ்பத்திரிக்க்க் போனதில் நீ லீவ் எடுக்க அடிக்கடி பொய் சொல்கிறாய் என டாக்டர் சொல்ல அதைக் கேட்ட அவருடைய சூப்பர்வைசர் திட்ட மிகுந்த மனவேதனையுடனும் கை வலியுடனும் ஜப்பார் வேலை செய்தார். அதற்கு மறுநாள் அவருக்கு தாங்க முடியாத கை வலி, செக்யுரிட்டி கூண்டில் கடுமையான ஹார்ட் அட்டாக்கில் உயிரிழாந்தார்.
அவர் தன் மனைவியுடன் வாழ்ந்தது சரியாக நான்கு மாதங்கள் மகளுடன் இருந்தது 1 மாதம்.
இவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்த டாக்டர் சவூதியில்லை ஆனால் ஒரு எகிப்தியன். எகிப்தியர்களும் மனிதர்களை கேவலப்ப்டுத்துவதில் அரேபியவ்ற்க்கு சளைத்தவர்களில்லை. அந்த டாக்டர் ஜ்ப்பாரை ஒரு மனிதானாக பார்க்கவில்லை, ஒரு இந்தியானாக் பார்த்தார் ஜப்பாரின் கனவு பாதியில் கரைந்தது. நான் நல்ல் நண்பரை இழந்தேன். இது நடந்தது 1995/6.
இந்த மாதிரி அரைகுறை டாக்டர்களினால் நான் இழுந்த நண்பர்களின் எண்ணிக்கை மூன்று. அதில் தமிழ் நண்பர் ஒருவர். அவரைப் பற்றி எழுத என்னால் முடியவில்லை. துக்கம் தொண்டையை அடைக்கிறது.
என்னுடைய கணிப்பில் ஒரு சாதரண டாக்டர் சிறிதே மனிதநேயத் துடன் செயல்பட்டிருந்தால் இவர்கள் நம்மிடையே இருந்திருப்பார்கள்.
இந்த அரேபிய மருத்துவர்கள் அவர்கள் இனத்தவரிடம் காட்டும் பரிவை சிறிதே நம்மவர்களிடம் காட்டியிருந்தால்..... நான் பார்த்து இறந்தது மூவரே.
அரேபியாவில் இருப்பவரே உங்கள் அனுபவம் எப்படியோ?
இந்த மண்ணின் மைந்தர்கள் அவர்களுடைய சிகிச்சைக்கு மட்டும்
அவர்க்ளுடைய எதிரி நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து போவர். வசதி குறைவானவர்கள் நீச நாடன இந்தியாவிற்கு வருவர்
இவர்களை நேசிக்கும் அளவிற்கு எனக்கு பக்குவ்ம் வரவில்லை
........ தொடரும்
Monday, March 27, 2006
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
கேட்பதற்கு மன்னிக்கவும்!
அந்த அரேபிய நண்பர் தன் வேலைக்காரியை 'உங்களுக்கு' அளித்தார், சரி.
நீங்கள் அவரைக் கண்ணியமாக நடத்தினீர்களா?
அறைகுறையாக விட்டு விட்டீர்களே!
வேறு யாரும் பொல்லாப்பாகச் சொல்லுமுன், அதை சீர் செய்தல் நலம்.
நன்றி.
Sorry Vengayam since I do not know your real name I cannot publish your comment. Please give me your real name and email address
எஸ் கே,
நன்றாக சொன்னீர்கள். யாரை மரியாதை செய்வது? அளித்தவரையா? அளிக்கப்பட்டவரையா? நான் அவருடைய "அன்பளிப்பை" பெற்றுக் கொள்ளவில்லை
என் நண்பன் ஒருவனுக்கும் இந்த கொடுமை நடந்தது. காய்ச்சலுக்கு ஏதோ மிக மிக தவறான மாத்திரை கொடுத்தன் விளைவு நடைபிணமாக அவன் சக்கர நாற்காலியில் இந்தியா வந்தான். இங்கு மருத்துவம் செய்து தேறினான் ஆனால் வளைகுடாவில் அவன் சாப்பிட்டது மிக மிக மோசமான மாத்திரையாக இருக்க வேண்டும் பக்க விளைவுகளினால் 3 வருடங்கழித்து மறைந்துவிட்டான். கொடுமை. இத்தனைக்கும் அவன் ஒரு பொறியாளன், சாதாரண தொழிலாளியின் கதை நினைக்கவே முடியவில்லை. என்னால் இன்னும் நம்ப முடியாதது எப்படி இவ்வளவு மோசமான மருந்தை ஒரு மருத்துவர் கொடுத்தார் என்பதே.
கேட்கவே கொடூரமாக இருக்கிறது. என் சித்தப்பா ஒருவரும் அரேபியாவில் இறந்துபோனார் அவர் இறப்பும் மர்மமாகவே இருந்தது. சரியான காரணங்கள் தெரியவில்லை.
Dear shiva,
It's ok if you dont publish this.But please avoid asking email id's and real names.There are so many problems with it.If you want to control derogatory comments please mention what sort of bad words are not allowed and allow decent comments.
In the long run asking for email id's and real names will not increase your viewer base.
This is just my suggestion.It's up to you to take it or not.
Fortunately I did not land up in Middle East, even though that should have been the natural choice for my profession abroad.
It was the last in my list of preferred destinations. I am quite happy with my decision.
Siva, keep writing your experiences. Do not mind the distractors. My full support to you.
munna
அன்புள்ள சிவா அவர்களே..
உங்களது அரேபிய அனுபவங்களையும் அதன் பின்னுட்டங்களையும் தொட்ர்ந்து வாசித்து வருகிறேன்.
என்னுடைய எண்ணங்கள் + எனக்கு பிடித்த பின்னுட்டங்களையும் இடுகிறேன்.
ஒரு சின்ன சம்பவத்தை உ ங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
ரமலான் நோண்பு அவர்களின் கடமை.அதற்காக கூட வேலை பார்க்கும் யாரும் சாப்பிடக்கூடாது.அது மட்டுமில்லை..முஸ்லிம் அல்லாத ஒருவன் அந்த நேரத்தில் சமைத்தால் கூட மிகப் பெரிய குற்றம்.
வலைப்பூ நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்:
எத்தனையோ இந்தியர்கள் குடும்பச் சூழ்நிலை காரணமாக உண்மையாக உழைக்கிறார்கள்.தயவு செய்து பணம் ,பிச்சை என்று கொச்சை படுத்தாதீர்கள் நண்பர்களே..இந்தியாவில் நேர்மையற்ற முறையில் சம்பாதிக்க வழியிருத்தும் அதையெல்லாம் விட்டு விட்டு உழைத்து குடும்பங்களை காப்பாற்ற நினைக்கும் அவர்களும் மனிதர்களே..
/என்ன வேலை செய்யும் அரேபியரைக் கண்டுபிடிக்க நிறைய சிரமப் படவேண்டும்./
100 % உண்மை.எண்ணெய் வளம் இருக்கும் திமிர்.அவர்கள் ஒரு "வேலை" யில் மிகத் திறமை படைத்தவர்கள்.
/நான் அரேபியரிடம் விற்றது என் திறமை. அங்கே நடந்தது ஒரு வியாபாரம். யாரும் யாருக்கும் உதவவில்லை. நன்றி என்ற வார்த்தைக்கு இங்கே வேலையில்லை./
இதையும் மீறி யாரவது நன்றி,துட்டு போன்றவகளை பேசினால்..ஒரே ஒரு அர்த்தம்தான்..
அது "வயிற்றெரிச்சல்" எனவே மீண்டும் மீண்டும் விளக்கி உங்கள் நேரத்தை வீணாக்கதீர்கள்.
/நான் 99.9% அரேபியர்கள் தீயவர்கள் என்று சொன்னேன் /
சற்று மிகையாக தோன்றுகிறது சிவா..
/அன்பு என்பவர் அதற்க்கும் மேல். எதோ நான் அதிக பின்னூட்டம் பெற எழுதுவாதகவும் இஸ்லாமிய விரோதி என்றும் கத்துகிறார். /
அவருடன் நானும் ஒத்துப் போகிறேன்..உங்களது தலைப்பு 'மனித நேயம் வளர அழிக்கவேண்டியது ....' என்று இருந்திரிக்க வேண்டும்.அப்போதுதான் 'மணி' 'மணி' யான பின்னுட்ம் பெருகும்.குத்து மதிப்பா குகூள் ஒரு தேடல் அதிலிருந்து எல்லாவற்றையும் கரைச்சு குடித்து ஏப்பம் விடுகிற எffஎcஎட்ச்ல் ஒரு சில லின்க்கு கள் என்று பில்ட்ப் எல்லாம் இல்லாமல் எழுதுகிறீர்கள் அல்லவா ?? உங்களுக்குத் தேவைதான்.
/மற்றவரை வெறுக்கும் பிராமணரும் பிராமணரை வெறுக்கும் மற்றவரும் எனக்கு ஏற்புடையவர் அல்லர். /
சும்மா 'நச்'சுன்னு இருக்கு.
அப்புறம் திரு சிறில் அலெக்ஸ் அவர்களுடை கருத்துக்களை நானும் வழி மொழிகிறேன்..
மீண்டும் பேசுவோம்
மாயா
Sorry for taking a tangent. When we talk about doctors Vs humanity, we need to look back our experiences in India (or any place on earth ) as well.
Vasool Raja MBBS is a good eye opener.
"yEthilar kutrampol thankutram kangirpin, thIdundo mannum uyirkku?"
Cheers,
Saravanan
Saravana,
We will talk about professional ethics particularly for Doctors and Engineers in coming days
This is 100% true. My co worker in our company ( a filipino) fainted one day during working hours. He was immediatly rushed to the hospital. There a Egyption doctor told him, that it was just food poison and discharged immediatly without testing. After 2 hours he fainted again and this time went in to coma. Later it was diganosed that he has got tumer on the brain. But he didn't come out of coma.He was died after two days in Shumeshi Hospital in Riyahdh.
Nameless Friend....
Post a Comment