Wednesday, March 08, 2006

வாரனாசி




வாரனாசி குண்டு வெடிப்பு சம்பவங்களை இணையத்தில் கனத்த மனத்தோடு படித்துக் கொண்டிருந்தபோது டீவியில் ஸ்வோர்ட் பிஷ் என்ற ஆங்கிலப் படம் ஓடிக் கொண்டிருந்தது. அதில் ஜான் ட்ரவோல்டா எக்காள்த்துடன் "இங்கு ஒருவர் இறந்தால் அங்கு பத்துப் பேர் இறக்கவேண்டும். அவர்கள் ஒரு விமானத்தை வீழ்த்தினால் அங்கு ஒரு விமான நிலையம் அழிய வேண்டும். இங்கு ஒரு கட்டிடம் விழுந்தால் அங்கே ஒரு ஊர் அழிய வேண்டும்" என சூளுரைத்துக் கொண்டிருந்தார். ஆஹா இதுவல்லவோ வீர்ம். நாமும் இதுபோல்தான் இருக்கவேண்டும் என நினைத்தேன். அது விவேகமில்லாத வீரம்
பிறகு காந்திய வழியில் யோசித்து என் மனதில் "தீவிரவாதியே வா 100 கோடி இந்தியர்கள் இருக்கிறோம். எங்கள் அனவரின் இரத்ததைக் குடி. அப்போதாவது உன் வெறி அடங்குகிறாதா என்று பார்ப்போம்" என ஒத்திகைப் பார்த்தேன். நோ இது வொர்க் அவுட் ஆகாது. இது 1940 கள் அல்ல நம் எதிரியும் நேர்மையானவன் இல்லை.
இப்போது என் தொண்டைக் கிழிய நான் அழைக்கிறேன். " தீவிரவாதி என்னும் கோழையே வா. நேருக்கு நேர் வா. அப்பாவி மக்களைக் கொல்லும் பேடியே நீ உன் படைகளைத் திரட்டிக் கொண்டு வா. நான் என் இந்திய வீரர்களைத் திரட்டிக் கொண்டு வருகிறேன். நேருக்க்கு நேர் மோத நெஞ்சில் துணிவிருந்தால் வா. சுத்தமான வீரனாய் இருந்தால் நீ வருவாய். நீயோ கோழை,, ஒரு பேடி. இந்தியப் படைகளின் பேரைக் கேட்டாலே காத தூரம் ஒடும் உனக்கு காத்த்ருக்கிறது நரகம்"

8 comments:

said...

முன்பு ஜூனியர் விகடனில் படித்த கட்டுரை ஒன்று ஞாபகம் வருகிறது.ஒரு போலிஸ் அதிகாரி சொன்னது என்னவென்றால் "ரவுடிகளை பெரிய வீரனாக காட்டி சினிமா எடுக்கிறீர்கள்.24 மணிநேரமும் உயிருக்கு பயந்து ஓடும் ரவுடி உண்மையிலேயே கோழை.தன்னை விட வலு குறைந்தவர்களிடம் தான் அவன் வீரத்தை காட்டுவான்.போலிஸ் ஸ்டேஷனில் தொடை நடுங்கி அழும் ரவுடிகள் ஏராளம்" என சொல்லியிருந்தார்.

அதே போல் தான் தீவிரவாதிகளும்.இவர்கள் வீரத்தை காட்டுவது யாரிடம்?பெண்கள்,குழந்தைகள்,முதியோர் ஆகியோரிடம் தான்

பதிவுக்கு சம்பந்தம் இல்லாத ஒரு ஆலோசனை

comment moderation வந்த பிறகு word verificationஎதற்கு?moderation இருக்கும் பதிவுகளில் junk mail வருவதில்லை

said...

Selvan,

I will turnoff the word verification.

Thanks for visitng my blog

said...

நல்ல பதிவு அண்ணா.

said...

Dear Siva

You spoke my mind. Well said.

I am a junior of you at TCE. What is your email-id?

Regards
Sa.Thirumalai
strajan123@gmail.com
360.yahoo.com/strajan123

said...

அண்ணா தீவிரவாதத்தை நாமும் துணிவுடன் எதிர்க்க அழைப்பு விடுத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்! நானும் உங்களுடன் பங்கேற்கிறேன். ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் எழுகிறது. அதையும் தாங்கள் தீர்த்து வைத்தார் சற்று நிம்மதியாக இருப்பேன்.
எது தீவிரவாதம் - எது பயங்கரவாதம்.

குஜராத்தில் நம் சொந்த மக்களை - சிறுபான்மை மக்களை 2000 பேரை வேட்டையாடிய சங்பரிவாரும், மோடியும் தீவிரவாதிகளா? பயங்கரவாதிகளா? இவர்களை எந்த பட்டியலில் வைப்பது!
நான் எல்லாவிரமான பயங்கரவாதத்தையும், தீவிரவாதத்தையும் எதிர்க்கிறேன். நீங்கள்!

said...

சந்திப்புத் தம்பி, நிச்சயமாக எதிர்க்கிறேன். அப்பாவி மக்களை ஒளிந்திருந்து தாக்குவோர் யாரயிருந்தால் என்ன அவர்கள் தீவிரவாதிகளே. அவர்களை நிச்சயமாக எதிர்க்கிறேன். இவர்கள் ஆட்சியில் இருப்பது துரதிருஷ்டம். மக்களின் உணர்ச்சிகளை தூண்டிவிட்டு ஓட்டு வாங்கிவிட்டு பிறகு அதிகாரத்தைக் கையில் வைத்துக் கொண்டு அப்பாவி மக்களை வேட்டையாடும் இத்தகைய அரசியல் வாதிகளை நம்மைப் போன்றவர்கள் தான் தோற்கடிக்க வேண்டும் ஓட்டு என்னும் ஆயுதத்தை வைத்து. வெடி வைக்கும் தீவிரவாதிகளை துப்பாக்கியால்தான் தோற்கடிக்க முடியும்.

said...

அட, தூக்கிட்டு வந்திட்டாரு சந்திப்பு. இங்க தீவிரவாதின்னு சொன்ன உடனே இவனுங்களுக்கு நம்ம ஆளுங்களை தான் சொல்றாங்கன்னு குத்த உணர்ச்சி குத்துது குடையுது. அடேய், அந்த பேடிப் பசங்களுக்கு நீங்க சப்போர்ட் பண்ணினா நீங்களும் தீவிரவாதிங்க தாண்டா. ஒரே ஒரு தபா மோடி குஜராத்திலே பதிலடி கொடுத்ததுக்கே இப்படி குதிக்கிறீங்களே. ஒரே ஒரு தடவை சங்பரிவார் அயோத்தியிலே ராமர் கோயில் மீண்டும் கட்ட முயற்சி பண்ணினதுக்கே இப்படி கோபப்படுறீங்களே. அப்படீன்னா இந்த மண்ணின் மைந்தர்கள் எங்களுக்கு உங்களால நாளுக்கு நாள் வரும் டார்ச்சர்க்கு நாங்க எப்படி கொதிச்சு எழுவோம்? நாங்க பொறுமையா இருக்கிறதை பயம்னு எடுத்துக்காதீங்க. அம்புட்டு தான் சொல்ல முடியும். ஜெய் ஹிந்த்.

said...

சிவா,
சந்திப்பு அவர்களுக்கான உங்கள் பதிலில் மோடி மக்களால் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சிக்கு வந்ததை கணக்கில் எடுத்துக் கொண்டுதான் சொன்னீர்களா?