Monday, March 20, 2006

என் அரேபிய அனுபவங்கள் - 4

----------------------------------------------------------------------------------------------
முன் குறிப்பு : மீண்டும் நான் கூறிக் கொள்கிறேன். நான் அரேபியரைப் பற்றி எழுதுவது என் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளத்தான். இஸ்லாமியரை பற்றியோ இஸ்லாம் பற்றியோ குறை கூற அல்ல. தயவு செய்து இதை மனதில் வைத்துக் கொண்டு படியுங்கள். சக இஸ்லாமியரின் குறைகளை அறிய விருப்பமில்லையென்றால் தயவு செய்து என் பதிவை படிப்பதை தவிர்க்கவும்.
----------------------------------------------------------------------------------------------


9/11 நிகழ்ச்சிகளின் "கொண்டாட்டங்கள்" அடங்கியவுடன். ஐ.நா. சம்மததின் பேரில் அமெரிக்கா ஆப்கானிஸ்தான் படையெடுக்க ஆயத்தங்கள் செய்துகொண்டிருந்த போது. என்னுடைய அரேபிய நண்பர்கள். அமெரிக்கரை ஏளனம் செய்துக் கொண்டு இருந்தனர். அமெரிக்கர்கள் கோழைகள், பெண்பித்தர்கள், மதுஅடிமைகள் என்று திட்டித் தீர்த்தனர். ஆப்கானியர்கள் பிறவி போராளிகள் அவர்களை வெல்லவே முடியாது. அமெரிக்கர்கள் தோற்பது உறுதி எனென்றால் தாலிபான்கள் தூய்மயான இஸ்லாமியர் அவர்களை வெல்லவே முடியாது. நிஜ இஸ்லாமிய வல்லரசு ஆப்கானிஸ்தான் தான். இவைகளை சொன்னது அரேபியர்கள். ஆனால் என்னுடன் வேலை செய்த ஆப்கானிகள் தாலிபான் தோற்ப்பதையே விரும்பினர். போர் ஆரம்பித்து ஆரம்பத்தில் அமெரிக்கருக்கு சாதகமான செய்திகள் இல்லை. எனவே எனக்கு தினம் தினம் ஆபிஸில் இனிப்புகள் கிடைத்தன. பிறகு தாலிபான்களும் , பின்லாடெனும் அவனது சகாக்களும் துண்டைக் காணாம் துணியைக் காணாம் ஒடிய போது, அமெரிக்காவால் ஒரு போதும் பின்லேடனை உயிருடன் பிடிக்கமுடியாது என அரேபியர்கள் சொல்லிக் கொண்டார்கள். இந்த பேச்சுகள் நம் தமிழ் படங்களில் வரும் வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகளை நினைவுப் படுத்தின. சண்டைக்கு முன் ஆய் ஊய் என்று சலம்புவது பிறகு நன்றாக அடிப்பட்டவுடன் மீசையில் மண் ஒட்டவில்லை என சொல்லுவது. இதுதான் அரேபியரின் டிபிகல் காரக்டெர்ஸ்டிக். அரேபியரை எப்படி கையாளுவது என்று என் அரேபிய நண்பர்களே எனக்கு சொல்லிக் குடுத்திருக்கிறார்கள். ஒரு அரேபியனுடன் சண்டை போடும் போது கை ஒஙவேக் கூடாது. அவன் தொண்டைக் கிழிய அரபியில் கத்துவான். அவன் கத்தி முடிந்தவுடன் நீங்களும் உங்கள் குரலை உயர்த்தி நம் தமிழில் அவனைத் திட்டக்கூடத் தேவையில்லை, திருக்குறள் சொன்னாலும் போதும் பயந்து பின் வாங்கி விடுவான். எனக்கு இந்த முறை 99% வொர்க் அவுட் ஆகியிருக்கிறது.
இந்த போரில் உண்மையில் வென்றது பின்லாடன் தான். பின்லாடனின் முக்கியக் கோரிக்கை அமெரிக்கப் படைகள் சவூதியிலிருந்து வெளியெறவேண்டும். அமெரிக்கா சவூதியிலிருந்து வெளியேறி கட்டாரில் படைத் தளத்தை அமைத்து விட்டார்கள். இதற்காக என்னுடைய மரமண்டை அரேபிய நண்பர்கள் எனக்கு இனிப்பு வழங்காதது எனக்கு சற்று வருத்தமே.
ஈராக் மேல் அமெரிக்கா படையெடுப்பதை எதிர்த்து அமெரிக்கர் உட்பட உலகில் அனைத்து நாடுகளிலும் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அனால் இந்த அரேபிய மக்களோ அரசாங்கமோ ஆர்பட்டம் நடத்தவேயில்லை. சிரியா மற்றும் ஜோர்டன் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆனால் துய அரபு நாடுகளான சவூதி, யு.ஏ.இ, ஒமான், பஹ்ரைன், யெமன் ஆகியவை அமைதிக் காத்தன. குவைத்தும் கட்டாரும் அமெரிக்காவிற்கு ஆதரவு அளித்தன!!!!!.
போர் ஆரம்பித்தவுடன் வடிவேல் தனமான சலம்பல்கள் ஆரம்ப்ப்பித்தன. என் அரேபிய நண்பர்களுக்கு ஈடாக ஈராக்கின் அப்போதைய தகவல்துறை அமைச்சர் அல் சாஹாப் அளித்த பேட்டிகள் வயிறு குலுங்க வைத்தன. அவர் பேட்டிகளை டீவியில் பார்த்து பிற்காலத்தில் இவை பெரிய ஜோக்களாக பேச படும் என நான் சொன்னது பொய்க்கவில்லை. இவருடைய பொன்னான ஜோக்குகளை காண இங்கே க்ளிக்கவும்.
வழக்கமாக ஆரம்பத்தில் அமெரிக்கருக்கு தொய்வு ஏற்படும் போது அரேபியரும் அரேபிய பத்திரிக்கைகளும், டீவியும் துள்ளி குதிப்பார்கள். அமெரிக்கர்கள் வெற்றி பெற்றால் அவர்களை திட்டி தீர்ப்பார்கள். சதாம் ஒடி ஒளிந்தவுடன், சதாம் மிகப் பெரிய படைகளை திரட்டி வந்து அமெரிக்கரை வெல்லுவார் எனக் கூடி கூடிப் பேசினர். சதாம் மாட்டிக் கொண்டவுடன் சில நாட்கள் அது சதாமே இல்லை என் ஹேஸ்யம் கூறினர். பிறகு சதாம் அமெரிக்கரிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு தோற்றுவிட்டார் என சொல்லி அரேபியர்கள் தோற்கவே மாட்டார்கள். இவர்கள் வெல்லப் பிறந்தவர் என டீ அருந்திக் கொண்டே காலத்தைக் கடத்துவர்.
நான் அரேபியாவில் பார்த்த நம் இந்திய சகோதரர்களின் சோக கதைகள் ஏராளம் அவைகளை உங்களிடம் வரும் நாட்களில்......

32 comments:

said...

Siva, intersting to know ur experiences in Saudi. dinamalar-la unga blog link koduthu irunthathu.. came thro' that..

said...

A very bold attempt, shiva.All this is never told in any media.It is an eye opener to anybody who wants to work in gulf.

said...

சிவா,
தொடர்ந்து எழுதுங்கள்!

said...

நானும் ஒரு மூன்று மாதங்கள் ரியாத்தில் இருந்தேன்,உண்மையிலேயே அது நரகம்.சாலயில் நடக்கும் போது கூட ஒரு அச்ச உணர்வுடனேயே நடக்க வேண்டியிருந்தது.சுதந்திரம் இல்லாமல் சொர்கமே இருந்து என்ன பயன்,சரியாக சொன்னீர்கள்.

said...

excellent attempt.great writings siva.even i had the same kind of experience.keep up your good work.

said...

சிவா,
இன்னிக்குத்தான் உங்க வீட்டுப் பக்கம் வரமுடிஞ்சது. அம்மாடீ..... மக்கள்ஸ் அங்கெ வேலை கிடைக்குதுன்னு
போய்க்கிட்டுதான் இருக்காங்க. ஆனால் இப்படிப்பட்ட 'கசப்பான' அனுபவம் இருக்கறது இப்பத்தான் தெரியுது.
இன்னும் எழுதுங்க. இப்படி வெளி உலகுக்குத் தெரியாம இன்னும் எத்தனை இருக்கோ?

said...

This is not only a character of Arabians, it is a global character. But you see the another part of Gulf. From which part of world india gain more foreign currency for last ten years, the truth is not from US,UK,Europenan Union or Canada, only from Gulf.

said...

ஹாய் சிவா,

வணக்கம். நான் தங்களுடைய பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன். உங்களுடைய அராபிய அனுபவங்கள் பலருக்கும் ஏற்பட்டு இருக்கும். ஆனாலும் வெளியே சொல்ல பலருக்கும் தயக்கம்.

இங்கு பல அரேபியர்கள் வேலைக்கு பணியாளர்களை அமர்த்துவதாக நினைப்பதில்லை. பணத்துக்கு அடிமைகளை வாங்குவதாகத் தான் நினைக்கிறார்கள்.

சமத்துவம், சகோதரத்துவம் என வாய்கிழிய பேசுபவர்கள் என்றாவது அவர்கள் உணவு உண்பதற்கு முன் பணிபுரியும் வேலையாட்களுக்கு தந்திருப்பார்களா?

அல்லது அவர்கள் சமயத்தில் கூறியிருப்பது போல் ஒன்றாய் அமர்ந்து உணவு உண்பார்களா?

நாய் குதறியது போன்று கூட்டமாக அமர்ந்து குதறிவிட்டு மிச்சம் மீதி வீட்டு ஓட்டுனர்களுக்கும், மற்ற பணியாளர்களுக்கு தருவது தான் அவர்கள் மரபு. அதையும் பெருமையோடு உண்டு களிக்கும் இஸ்லாமியரும், அதை உதாசீனப்படுத்திவிட்டு ஆற்றாமையால் பொங்கும் இஸ்லாமியரையும் என்னால் ஒரே இடத்தில் காட்ட முடியும்.

மற்ற மதத்தினருக்கு என்று இல்லை. இஸ்லாமியரே பணிபுரிந்தாலும் கூட அரேபியரை பொறுத்தமட்டில் அவன் அடிமை. விலைக்கு வாங்கப்பட்டவன். அவனுக்கென்று சொந்த விருப்பு வெறுப்புகளை களைந்து தான் பணிபுரிய வேண்டி உள்ளதாக தினம் தினம் கூறும் பலரைக் கண்டிருக்கிறேன்.

அதைவிடக் கொடுமை, ஒரு மெளலவி உ.பி.யைச் சேர்ந்தவர் பணிபுரிந்து வருகிறார். அவர் ஒருமுறை தன்வீட்டில் உள்ளவர்களுக்கு நலமில்லை என பாக்கி சம்பளத்தை கேட்ட பொழுது அவருடைய முதலாளி அவனும் ஒரு முத்தபா சொன்ன பதில் "உன் வீட்டில் உள்ளவர்கள் சாப்பிட்டா எனக்கென்ன? சாப்பிடா விட்டால் எனக்கென்ன? நான் சம்பளம் தரும்போது தான் தருவேன். ஆறு மாத சம்பளம் நீ போகும் வரை என்னிடம் தான் இருக்கும் மீறி ஏதாவது பேசினால் நான் உள்னை சிறையில் தள்ள வேண்டியிருக்கும்" (இந்த பெய்த் நபர் அக்கீல், இல்ல மா அக்கீல், அத மா மஸ்கூல் அன, அன ரத்தீப் மீதா அத்திக் அத டைம் சீல் அந்த. அன லாஜிம் இம்சிக் சித்த சஹர். ஜாத கிர்கிர் அன ஒத்தி அந்த சஜ்ஜெயில்).

ஆனால் ஏதாவது காரியம் ஆகவேண்டுமானால் பேசும் போது மட்டும் "இந்த அன அகு" என சொல்வதற்கு தயங்குவதே கிடையாது.

இன்னும் பல விஷயங்கள் உண்டு. பின் அது ஒரு பதிவாக மாறிவிடும்.

உங்களைப்போல் பலர் எழுதும் போது தான் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும். தொடர்ந்து எழுதுங்கள்.

நன்றி.

குறிப்பு: என்னிடம் பிளாக்கர் அக்கவுண்ட் ஏதும் இல்லாததல் அனானியாக பிண்ணூட்டமிடுகிறேன்.

சாதிக் அப்துல்லா
ரியாத்.

said...

keep writing...(with necessary disclaimers)

said...

லார்ட் லபக்தாஸ், அனானிமஸ்_1, ஜோ, சாமிநாதன் பாலசுந்தரம், அனானிமஸ்_2, துளசி கோபால், அனானிமஸ்_3, முத்து ஆகியோருக்கு நன்றி.

சாமிநாதன், ரியாத் இருப்பதிலேயெ மோசமான நகரம் (நரகம்). நான் இருந்த அல் கோபார் சற்றே தேவலை. "சுதந்திரம் மட்டும் இல்லாமல் சொர்க்கமே இருந்தும் என்ன பயன்" இந்த வரி அந்த கால குத்துப் பாட்டு ஊர்வசி..ஊர்வசி லிருந்து சுட்டது.

கால்கரி சிவா

said...

அனானிமஸ்_4 அவர்களே, மன்னிக்கவும் தங்கள் பிராமண பாஷையில் அனுப்பியிருந்த பின்னூட்டம் பதிக்க படவில்லை. நான் அரேபியரிடம் மண்டியிட்டு வேலைக் கேட்டு செல்லவில்லை. அவர்களுக்கு என் திறமை தேவைப் பட்டது அது அமெரிக்கரின் விலையை விட வெகு கம்மியாக இருந்தது. எனக்கு அதுவே மிக அதிகமாக இருந்தது. வியாபாரம் படிந்ததால் அங்கு போனேன். அங்கு போய்த் தான் என் மனைவிக்கு மல்லிகைப் பூவும் என் குழந்தைக்கு சாக்லேட்டும் வாங்கி கொடுக்கும் நிலைமையில் நான் இருக்கவில்லை என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மற்றவரை வெறுக்கும் பிராமணரும் பிராமணரை வெறுக்கும் மற்றவரும் எனக்கு ஏற்புடையவர் அல்லர்.

said...

thanku
kaal..... siva nanum kuwaith, saudhi, behrain, qathar, UAE ingalam irundhirukkan. Edhe anubavam enakkum irukku, nan oru technician ennudaya nanbarkal anaivarum adhigamaga kuraindha sambalathil irukkm labargaldhan. Ivarkalin pasathukkana porattangalum izhappugalum ennakkum yedhavadhu yezhudha vendum pola irukkiradhu anal yenakku theryavillai. Ongal anubavathil ivargalin sogangalayum ezhudhungalen Pls.

said...

சிவா,
உங்கள் தொடர் சூடு பிடித்திருக்கிறது. தொடருங்கள். தினமலரில் உங்கள் பதிவை பார்த்தேன். வாழ்த்துக்கள்.

இந்த மாதிரி பதிவுகலை எழுதும்போது நிச்சயம் சிலர் புண்படவும் பலர் பயன்படவும் வாய்ப்புண்டு. தொடர்ந்து எழுதுங்கள்.

said...

திரு சாதிக் அப்துல்லா, தங்கள் வருகைக்கு நன்றி.

நானும் ஒரு முறை என்னுடைய நட்பை நிலை நாட்ட அந்த பெரியத் தட்டிலிருந்து சாப்பிட்டிருக்கிறேன். நீங்கள் சொல்லிய நிகழ்ச்சி அன்றாடம் அங்கு நடப்பவை தான். உயர் பதவியில் இருந்த எனக்கே ஒரு தலைவலி என்றால் 1/2 நாள் லீவிற்கு ஆஸ்பத்திரிக்கு சென்று டாக்டரிடம் சர்டிபிகேட் வாங்கி தரவேண்டும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

அடுத்த முறை எழுதும் போது தங்கள் ஊரையும் பெயரையும் மறைத்துவிடுங்கள். இதனால் உங்களுக்கு கஷ்டம் வந்தாலும் வரும்.

அன்புடன்

சிவா

said...

Cyril,

I think you won't expect a "Thanks" from me.

Regards

Siva

said...

அதித் ஜோஸ், நிச்சயமாக எனது அடுத்த பதிவுகள் நம் பங்காளிகளின் சோக கதைகள் தான். அதற்கு முன் ஆபிஸில் மீட்டிங்குகள் பயணங்கள் ஆகியவை. ஹோட்டல்களிலும் விமானநிலையங்களிலும் இணையம் இருப்பதால் இந்த வார இறுதிக்குள் இடுகிறேன். தமிழில் எழுத இங்கே சுட்டவும் அதித் ஜோஸ், நிச்சயமாக எனது அடுத்த பதிவுகள் நம் பங்காளிகளின் சோக கதைகள் தான். அதற்கு முன் ஆபிஸில் மீட்டிங்குகள் பயணங்கள் ஆகியவை. ஹோட்டல்களிலும் விமானநிலையங்களிலும் இணையம் இருப்பதால் இந்த வார இறுதிக்குள் இடுகிறேன். தமிழில் எழுத இங்கே சுட்டவும் http://www.suratha.com/leader.htm

அன்புடன்

கால்கரி சிவா (கால்கரி நான் இருக்கும் ஊரின் பெயர்)

said...

ithu oru mosamana samooga kaalam ,
see we have to put disclaimer to write the facts ..
pazhamozhiyinai maatri yezhuthungal
"thadi yeduthavan thandal kaaran"

"thaaadi vaithavan thandal kaaran"

said...

அனானிமஸ்,

சரியாக சொன்னீர்கள். இன்னும் என்னிடம் நான் சவூதியில் வாழ்ந்ததற்கு சாட்சிகள் கேட்கவில்லை. கேட்டால் என்னுடைய பாஸ்போர்ட் காபிகளை காட்டுவதற்கு தயாராக உள்ளேன்.

ஐயா, நானும் தாடி வைத்திருக்கிறேன் : )

வருகைக்கு நன்றி

அன்புடன்
சிவா

said...

Anonymous,

Gulf was highest foreign exchange earner five / six years ago. It is longer true now. Software export and BPO operations earn almost double of gulf remittance.

said...

Ethanal shala indiararukaluku thervippadu ennavendral

endru thaniyum intha suthanthira thagam...bjp achiku vandal namadu kodiseswar arun jetli nammakaha poraduvar.varumayil valum india perumakkaluku siva avargal canada,europe matrum us visa eduthu tharuvar dum dum dum dum.....ayya ungaluku canada visa keedachachu engaluku????????

naan kuwaitil velai parthu varuhiren enudaiya kafeel vitil thangi irrukuren naan sapidamal avaar sapitathu illai(ippadi oru indiarkalai kuda naan parthathu illai)allow pannuvingala

said...

Hello Anonymous Kuwait Slave,

I have also lived in Kuwait and know what kind of treatment we all get. Unable to bear the torture our women had with Kuwaitis(absolutely no protection for labourers and house maids), our government banned the travel of house maids and other labourers to Kuwait.

Kuwaitis respect Americans, tolerate others but when it comes to Indians, they donot show any mercy or magnanimity. I wish Calgary Siva writes more and awaken our fellow Indians.

- Nagaraj

said...

anbare..

americavil irrukum eneadu naanbar ippadi sonnar george bushku kovam vandal iraqiai kolvan americanuku kovam vanthal indianai kolavan..maranthu vitirkala namathu desa thanthaiku veli naatil nadantha inna kodumaiyai...america police oru karupanai nayai vitu kadika vaitharkale.iraq kaithikalai americarhal nadthiyathai pathirikail paarka vilaya, bush avanudaya nayuku india endru peeyar vaithana,londanil nammavarkaluku ethuraha kaaruparhal thakuthal,srilankavil naadakum kodumaiyai avvarkalidam keetuparungal,en jathi kodumayal iranthu pona matukaha 5 dalithkalin uyyirai edutarkale, austraslia pathariyar avarudaiya 5 vayadu payan maranthu pooivitatha .....british miruhangal namadu naatil vanthu naamai enna seythargal endra histroy padikavillaya innum sollalam.....

maanitha miruhangal ullagam muluvathu irrukirarhal athil silarai siva paarthu ullar

siva pondra naala varkalaiyum naan kuwait arabuhalai paarthu irrukiren

said...

Anbare

Americavil irrukum enathu naan bar sonnar bush kovam vandal iraqiyarai kolvan americanuku kovam vanthal indiyarai kolvan

marandu vittirkala namadu desa thanthaiku veli naatil nadantha inna kodumaiyai

bush avanudaya nayuku india endru peeyar vaithana

iraq kaythigal koodumai pathirikayil pakavillaya(iraqiyar maanidargal illaya)

londonil namadu naatu driver kalidam poi kelungal enna nadakuthu endru

british miruhangal namadu natai adimaipadithi enna seythargal endra histroy padikavillaya

srilankavil mannin maintharkaluku enna nadkirathu endru ungalaku theriyatha

sethu pona matin tholai urithathukaha dalit 5 nabargal uyyirai edutharkale

aurtalia padariyar avarthu 5 vayadu seruvan maranthuvitirkala

kashmir,gujarat,up,bombay,andra,kovai jathi kodumai yendra peyaril tamil natil nadathubavarkal yaar???

naanbargale naan ingu hindu ,muslim,christ endru solla varavillai enadu arumai annan sivavai pol manitha mirungalai solluhiren ivargal ullagam muluvathum iruukirargal arabu desathil matum illai annan ithai accpt panuvar endru ninakiren

siva intha miruhangalin cellarai paarthar

naan sivavai pondra naala vargalai palarai pathu varuhiren

said...

திரு அனானிமஸ் அவர்களே, ஒரேடியா எல்லா சப்ஜெக்ட்டும் ஒரே பின்னூட்டத்தில் கேள்வி கேட்ட எப்படி சார் பதில் சொல்றது? முடிஞ்ச அளவிற்க்கு சொல்றேன்.

அமெரிக்கனுக்கு கோபம் வந்தாலும் ஈராக்கியைத் தான் கொல்லுவான். இந்தியரைக் கொல்லமாட்டன். இந்தியாரால் அவனுக்கு தற்போது லாபம் வந்து கொண்ட்டிருக்கிறது.

கந்திஜி அவமானப் பட்டார் அங்கே சுதந்திரம் வாங்கி தந்தார் இங்கே. நாம் அவமானப் படுகிறோம் அங்கே என்ன செய்யபோகிறோம் இங்கே.

புஷ் தன்னுடைய நாய்க்கு இந்தியா என பெயர் வைத்திருக்கிறார். இங்குள்ள மனிதர்களின் கலாசாரத்தை சற்றெ தெரிந்து கொள்ளவும். இங்கே வளர்ப்பு மிருகங்கள் மீது பெற்ற பிள்ளைகளைப் போல் அன்பை பொழிகிறார்கள். அது நாய் பூனை மட்டும் இல்லை ஓனான், மலைப் பாம்பு, எலி, கீரி, பறவைகள் ஏன் சிலந்தியைக் கூட அன்புடன் வள்ர்க்கிறார்கள். சொந்த மனைவி/கணவன், மகள்/மகணை விட அதிகமாக அவர்களை நேசிக்கிறார்கள். அந்த கண்ணோத்தில் பார்த்தால் புஷ் இந்தியாவின் மீது எவ்வளவு அக்கரை வைத்திருக்கிறார் என்பது புரியும்

ஈராக்கில் கைதிகளை கொடுமை செய்த அயோக்கியர்க்கும், தலித் மக்களைக் கொன்றவர்க்கும், பாதிரியாரை கொன்றவர்க்கும் தண்டனைகள் கிடைத்தன/கிடைக்கும். இந்தியரை தினம் தினம் கொடுமைப் படுத்தும் அரேபியர்க்கு எந்த கோர்ட்டில் தண்டனைக் கிடைக்கிறது?

லண்டனில் நமது நாட்டு டிரைவர்கள், அந்த நாட்டு குடியுரிமைப் பெற்றுள்ளார்கள். அந்த நாட்டின் பிரதமரை தேர்ந்தெடுக்கிறார்கள். அங்கே அவர்களின் மனைவி மக்களுடன் சொந்த வீடு வாங்கி வசிக்கிறார்கள். அவர்களின் பிள்ளைகள் டாக்டராகவும் இஞ்ஜினீயராகவும் ஆக வாய்ப்புகள் அதிகம். அரபு நாட்டில் வாழும் டிரைவர்கள் எத்தனைப் பேர் தம் குடும்பத்துடன் வாழ்கிறார்கள்?

சரித்திரத்தை ஏன் பிரிட்டிஷாரோடு நிறுத்திவிட்டீர்கள் இன்னும் சற்றே பின் சென்று மொகலாயர்கள் பற்றி பேசுங்கள் அதற்க்குன் பின் சென்று ஆரிய திராவிட யுத்தங்களைப் பற்றி பேசுங்கள்.


உலகத்தில் தீயவர்களும் தூயவர்களும் எல்லா நாட்டிலும் உள்ளனர். என்ன அரேபியாவில் அந்த சதவிகிதம் சற்றே அதிகம். தீயவர் 99.9% தூயவர் 0.01%

அன்புடன் கால்கரி சிவா

said...

//கந்திஜி அவமானப் பட்டார் அங்கே சுதந்திரம் வாங்கி தந்தார் இங்கே. நாம் அவமானப் படுகிறோம் அங்கே என்ன செய்யபோகிறோம் இங்கே//


anna neengal than oru solution solanum

en karuthu........

1. neengal soluvathai naan marukavillai irrupathu unmaithan aannal 99% endral naatuku povathukum varuvatharkum seat keedaika matikethu anna en?

2. ceella house maid,boy,drver matrun naanbar nagaraj adimayai irrupathu unmaithan(naan en kafiludaya anbuku adimai hehe) itharku enna seya pohirom naam?

//Unable to bear the torture our women had with Kuwaitis(absolutely no protection for labourers and house maids), our government banned the travel of house maids and other labourers to Kuwait//

irrunthum ingu ungalai anupiyavar yaar?antha agent ,(house maid pussing seyum airport athikari enna seeya pohirom(matter theriyuma indiaula ella airportum tightu chennai thavira angu irrunthu than house maid varuhirargal)

3. anna paditha nagaraj ponrogal ariyamal vandu matikittanaga avarkaluku poorivathu pola matrum agent,airport coustoms ivargalai kandithu oru blog podunga

4.ennathu arumai nanbargale.....
annan siva pondravargal soluvathu 100% illa 50% unmaithan

..poorapdungal tholargale india arasangamedam murai idungal gulfil ulla athanai indiaragalaim thirupi anupa solungal(appadiy vantha peerahu avarkaluku veelai vangi tharungal)intha anneiku periya anna MALARMANNAN avargalai thalamai thanga solungal,agent,airport athigarkalai thandika solungal...

(naagaraj udene indian emmbassyai annuhungal ungaluku naadantha kodumaiyai solungla pin indiavirku paaranthu selungal "just 70 kd in srilankan yaar" ungaluku thahudi irrunthal enn annan siva canadavuku parsilipar)

5. anna kastapadum indiargal unmaithan ennal onuseyamudiya villai thaangal than avargal kaanirai pokanum

udavi,udavi,udavi indiargalin alkural gulf thesam muluvathum

ennakum matum inga irruka veerupama enna (salikaha sontha makkalal aruthu erintha ooyir ulla mamisam naangal)india ula veela keedacha naan en sir ingu varanum illaina canada visa keedaithal naan en sir engu varanum

vaalha india

vaalarha india

vaalarntha pin en sangathinarukavathu veelai keedaikatum

said...

சிவா
நல்லப் பதிவு ,99.9% அராபியர் கெட்டவர் என்பது கொஞ்சம் அதிகம் என்பது என் எண்ணம். சவுதி பற்றிய பல மயக்க்ங்கள் நம் இஸ்லாமிய நண்பர்களுக்கு உண்டு .ஆனால் அங்கு வாழ்ந்த எவரும் அது நரகம் என்றே சொல்லுகின்றனர் . தொடர்ந்து எழுதுங்கள்.

said...

I no longer wonder about your objective. A real honest writer is a balanced one who knows when to differentiate HATRED from FACTS and clarifies it too. Now that you seem to be hesitant to go little further, I want to complete where you hesitated:

99.9% Arabs (including, women, children, new-born, un-born, etc) are evil. Only 0.01% is good. Ofcourse this 0.01% is non-muslim Arabs living outside middleeast. So, evil is to be eradicated and hence we support everyone who kills Arabs. Also, we will worship you if you could kill many at a time in the name of anything like 'unfound weapons of mass destruction'.

No wonder that you are a gift to Tamil literature world. Again thanks to Nesakumar.

So much for the 'new facts' and 'demand in literature world'

Regards,
...fill-in your version of me and maintain that as FACT...

said...

Dear Sir

I don't read Iraqi Ministers' thoughts in depth. In general it shows his love aganist his country.
We should see from his view also.

said...

சாதிக் என்ற பெயரில் உள்ளே வந்திருக்கும் இந்து சகோதரர் அவர்களுக்கு வணக்கம். உங்கள் பெயரிலேயே விஷத்தை கக்குங்கள். ஏன் முஸ்லீம் அடையாளம்?

அன்பு

said...

சிவா, உங்கள் பதிவுகளுக்கு நன்றி. அங்கே கொடுமைகள் நடக்கிறதென்று எங்களுக்கு குத்துமதிப்பாகத்தான் தெரியும். உங்கள் பதிவுகளை படித்தபிறகுதான் முழுமையாகத்தெரிகிறது. என்னைப் பொருத்தவரை அரபு நாடுகளுக்கு சென்று பனிபுரிவதில்லை என்ற கொள்கையில் உறுதியாக இருக்கிறேன். சுதந்திரத்தை விற்றுவிட்டு கிடைக்கும் காசு/சுகம் எனக்குத்தேவை இல்லை. அதற்கு இந்தியாவில் கிடைக்கும் கஞ்சியே மேல்.

இந்தப்பதிவுகளுக்கும் சிலபேர் எதிர்மறை பின்னூட்டம் இடும்போது ஒன்று தெரிகிறது. சில பேருக்குக்கு அடிமையாக இருக்கப்பிடித்திருக்கிறது. அடிமையாக இருந்தாலும் அவர்களுக்கு பணம் கிடைத்தால் போதும். அவர்களின் சுதந்திரத்திற்கான விலை என்ன என்று அவர்களுக்குத்தெரியவில்லை.
விட்டு விடுங்கள், அவர்களுக்கு அடிமையாக இருப்பதிலும் ஓர் சுகம் போலும் !

said...

Wanted to share this mail from a Malayalee I came across in another blog site:
-----------------------------------
My Experiences in Saudi Arabia
P Sudheesh Kumar

While I am thankful to Saudi Arabia where I worked for many years, which also gave me a prosperous life, there are also questions that come to my mind when I see my friends from the Muslim community in Kerala behave here. I have some of the best friends from the community and many of them have helped me in times of need, some times more than my own relatives and friends. This is not in any way meant to hurt them but only to raise some questions, which they themselves are not conscious of. Though not Islam by religion I have great respect for many of the teachings in Islam and this write up is not to be misunderstood that way either. This is an eye opener about how an Islamic state works in comparison to a state where the Hindus are in a majority.

While living in Saudi Arabia I have often wondered about this, the freedom the other religions have in India, as a matter of right. The unsaid beauty of the Hindu mind. For every day, almost every hour, in Saudi Arabia a non-Mulsim is reminded of his faith. The Muslims have the Green Card and the non-Muslims Red Card and every time the card is produced to the religious police, Muthava, they show a scornful face. Some times at least they misbehave as well.

During the days of 'noyambu', fasting, the Hindus are not permitted to eat either, as a compulsion. People fear to cook or eat even in privacy as it brings stringent punishment if found out. Beating with the cane is a normal practice. For their own survival most of the victims keep silent, not telling about the experience to friends and relatives back home. There have been stray cases where Kerala Muslim friends have informed the local police about defaulters, Kerala Hindus.

While majority of the Muslim friends are loving and considerate there are few who find a vicarious pleasure in persecuting the non-believers, I once heard one of them tell 'how can they be allowed to enjoy like this in 'our own land' …' that about a Hindu who violated the Islamic code in his own room. There are no avenues for entertainment in the country, like cinema theatres, but people including the local population see these in their TV sets. Such violations are not punished.

Keeping images of Hindu gods is illegal and those caught doing that are punished, flogged. Many of the Hindus hide the images of gods and their religious books with great effort. Taking it out just to pray, then hiding them beneath the clothes or other materials. The Muthavas can enter anywhere to search and every one fears them. To have the lungi tied up as in Kerala is a violation, also wearing shorts, exposing body parts is un-Islamic, how many ignorant Hindus get caned on the road. Women whatever the faith have to follow the Islamic dress code.

During the call for prayer everyone has to stop working, shops down shutters, not doing that invites flogging. Muslims violating these are forcibly taken to mosques. It gives rest but is compulsory. It is said that earlier there was a practice of stopping vehicles as well.

There can be freak cases as well. As a friend said there was a case some time back when some one informed the Muthavas about a Malayalam cassette. The famous song 'Eeswaranorikkal virunninu poyi … rajakottarathil vilikkathe …' was translated by some mischievous Malayali as 'Allah' (Esawaran) going to 'Beg' and this promptly reported. The shocked Muthavas raided all shops, ceased the cassettes and destroyed them. At another incident heard in Riyadh the Malayali Hindus were once having an 'Ona Sadya' in a hotel. Complete with Mundu, Settu Mundu and Vazhayila. As they were devouring the hot Sambar came in the Muthavas. They caned the squatting 'sadyawallahs' and threw away the mysterious looking banana leaves. Some one had informed the Muthavas that it is a pagan cult in India where some infidel god is being worshipped. The Arab Muthavas had no idea what all this meant and came the attack. Some times Hindus themselves report such things to put others in to trouble. And no wonder the smart Keralites have their own 'addas' where they distill alcohol and consume it, also sell some to the Saudis themselves. Many have become rich over night in the teetotaler's kingdom.

Interestingly things are different in areas under the Americans. It is another world within the Islamic kingdom where everything is permitted and the Saudi police stand guard. The arrogant Americans are also often seen violating the codes and no charges are levied on them. Once an young American lady from the US military drove in to a shopping mal, clad scantily, when a Muthava, religious police, tried to cane her. The lady was furious and beat up the Muthava with her chappals and drove away in her car. Though the police chased her she escaped in to the American enclave and no action was possible. These are cases where the religious edicts become question marks. But in the case of Hindus and non-believers from different countries the punishment is strict. It has to be said the same treatment awaits the local people including the royalty. In fact the Arabs across the region prefer Indians, Muslim or Hindu, to Pakistanis, all of whom are Muslims. It is a love beyond the barriers of religion.
It is common for them to come to the rescue of the Hindus when they are in trouble. Some of the Kerala Muslim friends willing to go to any extend to help out the Hindus. The others are rare exceptions. But the question remains, how much freedom people enjoy in a Hindu environ and how much in a Muslim environ.
---------------------------------------------------------------------------------------------

said...

திரு அருணகிரி அவர்களுக்கும் , திரு சாணக்கியன் அவர்களுக்கும்
நன்றி