Sunday, March 19, 2006

என் அரேபிய அனுபவங்கள் - 3



அரேபியாவில் நான் வாழ்ந்த காலங்களில் சில முக்கிய நிகழ்வுகளும் அதற்க்கு அரேபியர்களின் ரீயாக்ஷ்னும்:


1992, டிசம்பர் 6 ந்தேதி பாபர் மசூதி இடிக்கப் பட்டது. அதன் மறுநாள் ஆபிஸில் அகமது என்ற ஹைதராபாத்தைச் சேர்ந்த இளைஞர், மிகவும் துயரமாகக் காணப்பட்டார். (அந்த காலகட்டங்களில் சாடிலைட் டிவியோ, இணையாமோ இல்லை. அராப் நீயுஸ் என்ற சவூதி தினசரி படிக்கும் பழக்கம் அப்போது இருக்கவில்லை.டைம்ஸ் அப் இந்தியா இரண்டு தினங்களுக்கு அப்பால்தான் கிடைக்கும். ஆகையால் அந்த மசூதி இடிப்பு சம்பவம் பற்றி நான் அறிந்திருக்கவில்லை). இந்த சூழ்நிலையில் நான் அகமதுவிடம் "என்னப்பா சோகமாக இருக்கிறாய்? இந்த முறையும் கலயாணத்திற்க்குப் பார்த்த பெண் உன்னை நிராகரித்து விட்டாளா?" என்று சொல்லி அவர் மூடை சரி செய்யப் பார்த்தேன். அவர் என்னிடம் "நீங்கள் இந்து வெறியர்கள். மசூதிகளை இடிப்பீர்கள். எங்களைக் கொல்லுவீர்கள்" என எரிந்து விழுந்தார். பிறகுதான் நடந்த விசயங்களை அறிந்து அகமதிடம் அவர் உணர்வுகளை அறியாமல் ஜாலியாக பேசியதற்க்கு பலமுறை மன்னிப்பு கேட்டன். அவர் இதுவரை என்னை மன்னிக்கவில்லை. அதன் பிறகு சவூதியில் இந்திய முஸ்லிம் சகோதரர்களும் அரேபியர்களும் இந்துக்களையும் எதிரியாகத் தான் பார்த்தார்கள். நான் என் இந்து நண்பர்களிடமும் ஆங்கில நண்பர்களிடமும் இதைப் பற்றி பேசும்போது "யூ ஆர் வெரி சென்ஸிடிவ். டேக் இட் ஈஸி. வி ஹாவ் கம் ஹியர் டு செல் அவர் ஸ்கில்ஸ் அட் ஹையர் ப்ரைஸ். இக்னோர் தீஸ் ஜஸ்ட் வொர்க் அண்ட் கெட் அவுட் " என்று புத்திமதி வழங்கினார்கள். இந்த சம்பவம் நடந்து ஒரு 3 மாதங்கள் கழித்து ஒரு சவுதீ நண்பர் சென்னையைப் பற்றி சில சந்தேகங்கள் கேட்க வந்தார். அவர் இன்னும் ஒரு வாரத்தில் சென்னை செல்லவிருப்பாதாகவும் அங்கு ஹாலல் உணவுக் கிடைக்குமா எனெக் கேட்டார். நானும் தாரளமாக கிடைக்கும் எனவும் நிறைய முஸ்லிம் ஹோட்டல்கள் உள்ளதாயும் எனச் சொல்லி அவர் சென்னை செல்ல காரணம் என்ன எனக் கேட்டதற்க்கு அவர் தந்தைக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு போவாதாயும் மூன்று மாதங்கள் தங்க போவதாயும் அவர் சொன்னவுடன் என்னுள் இருந்த மானிடம் விழித்துக் கொண்டு "நான் உங்களுக்கு வேண்டிய எல்லா உதவிகளையும் செய்கிறேன். என்னுடைய ப்ளாட் காலியாகத் தான் உள்ளது அங்கு நீங்கள் இலவசமாகத் தங்கிக் கொள்ளலாம். உங்களுக்கு வேலைக் காரர்களையும் வாடகைக்கு கார் மற்றும் டிரைவர் இவர்களை ஏற்பாடு செய்கிறேன். நீங்கள் இந்த செலவையும் ஆஸ்பத்திரி செலவையும் செய்யுங்கள். உங்களுக்கு உதவ என்னுடையப் பெற்றோரும் உடன் பிறந்தோரும் சென்னையில் இருக்கிறார்கள். அவர்கள் உஙகளுக்கு எல்லா உதவிகளையும் செய்வார்கள். உங்களில் (அவருக்கு 19 சகோதர சகோதரிகள் இருப்பது எனக்குத் தெரியும்) உங்கள் தந்தைக்கு சிறுநீரக தானம் செய்யும் தியாகி யார்?" என மூச்சு விடாமல் பேசி நிறுத்தினேன். அவர் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்து விட்டு "நாங்கள் முஸ்லிம் அல்லாதோர் வீட்டில் தங்குவதில்லை.உன்னுடைய அழைப்பிற்க்கு நன்றி. என் தந்தைக்கு சென்னையில் உள்ள ஆஸ்பத்திரியே சிறுநீரகதிற்க்கு ஏற்பாடு செய்யும். நாங்கள் 3 மாசமும் நட்சத்திர ஹோட்டலில் தங்கும் அளவிற்க்கு பணம் என்னிடம் இருக்கிறது" என்று அவருடைய அரேபிய ஆணவத்தையும் புதுப்பணக்காரத் திமிரையும் வெளிப் படுத்திக் கொண்டார். அப்போதும் அவரை நான் வெறுக்கவில்லை. அவரது அறியாமையையும் ஆணவத்தையும் கண்டு அவர்மேல் அனுதாபமே ஏற்பட்டது. அவர் சென்னைக்கு சென்று அவருடைய தந்தையாருக்கு வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சை முடித்துவிட்டு வந்தார். அவரிடம் சென்னை எப்படி எனக் கேட்டதற்க்கு அவர் முகமலர்ந்து அருமையான ஊர் என சொல்லி " பாம்பேயை விட கிட்னி சீப். அதை விட அங்கு சினிமாவில் நடிக்கும் துணை நடிகைகள் அருமை" எனச் சொன்னான். இவன் தந்தைக்கு ஒரு ஏமாந்த்த இந்திய சகோதர(ரி) யின் கிட்னி இவனின் உடல் பசிக்கு ஒரு இந்திய சகோதரியின் உடல். அங்கு அவனுக்கு மதம் தடையில்லை. இவன் போன்ற மிருகங்களை என்னால் வெறுக்காமல் இருக்க முடியவில்லை.


அடுத்து 25 ஜுன் 1996. அன்றுதான் அல்கோபாரில் தீவிர வாதிகள் அமெரிக்க இராணுவம் தங்கியிருந்த அடுக்கு மாடிக் கட்டிடத்தை குண்டு வைத்துத் தகர்த்தார்கள். அதில் அநேக அமெரிக்க படை வீரர்கள் இறந்தார்கள். இது நடந்த இடம் நான் தன்கியிருந்த இடத்திலிருந்து 4 க்.மீ தூரததில் தான் இருந்தது. இந்த வெடி அதிர்ச்சியில் என் கட்டிததில் இருந்த சில எக்ஸாஸ்ட் பேன்கள் கழண்டு விழுந்தன. மறுநாள் ஆபிஸ் போனால் முக்கிய சவூதி மானேஜர்கள் பலர் பயந்து வெளியூருக்கு எஸ்கேப் ஆயிருந்தனர். இதுதான் அரேபிய வீரம். உண்மையில் அரேபியர்கள் மிகப் பெரும் கோழைகள்.


தேதி செப்டம்பர் 12, 2001 நேரம் காலை 8 மணி இடம் : நான் வேலை செய்த ரிபைனரி


செப் 11, 2001 நாம் எல்லோரும் அறிந்த நாள். அன்று இரவு முழுவதும் நான் சி என் என் இல் செய்திகளைப் பார்த்து விட்டு களைப்பாக அபிஸிற்க்கு போனால் அங்கே அரேபியர்கள் இனிப்புகளை வழங்கி அமெரிக்காவின் தோல்வியை கொண்டாடிக் கொண்டிருந்தனர். என்னைக் கண்டதும் அவர்கள் வெறி அதிகமாகி என் வாயில் இனிப்புகளைத் திணித்தனர். இதற்க்கு காரணம் என்னுடைய அமெரிக்க ஆதரவு பேச்சுகள். இனிமேல் இவ்வுலகை ஆளப் போவது அரேபியர்கள். அமெரிக்கர்கள் தோற்றுவிட்டார்கள். அரேபியரிடம் அமெரிக்கர் மண்டியிடுவார்கள் எனக் கொக்கரித்துக் கொண்டிருந்தார்கள். அன்று விநியோகம் செய்யப் பட்ட பானம் பெப்ஸி. சிகரெட் மார்ல்பரோ. இவை அமெரிக்க தயாரிப்புகள். இதே அரேபியர்கள் ஆப்கானிஸ்தான் வீழ்ந்த பிறகும் , ஈராக் வீழ்ந்த பிறகும் இந்த நிகழ்ச்சிகளை எப்படி எதிர்கொண்ட்டர்கள் என்பதை வரும் நாட்களில்...........


தொடரும்....... சென்றவை ...1 2

2 comments:

said...

சென்னையில் ஆபரேஷன் செய்த நண்பர், அந்த டாக்டரின் மதம் பற்றி கவலைப்பட்டாரா? இதை நீங்கள் கேட்டிருக்க வேண்டும்!

பாத்திரம் அறிந்து பிச்சையிட வேண்டும் என்பது உங்கள் அனுபவத்திலிருந்து நன்றாகவே தெரியவருகிறது.

said...

துபாய்வாசி அவர்களே, அந்த அரேபியன் உயிர் காக்கும் டாக்டர்களை அவனுடைய கூலிக்கு வேலை செய்யும் அடிமைகளாகவே பார்க்கிறார்கள்.

இவர்களின் சுயரூபம் வெளிபடும் போது அரேபியர்களின் அடிமைகளுக்கு வரும் கோபத்தை என்னுடைய முந்தய பதிவின் பின்னுட்டத்தில் பாருங்கள்.

சிவா