Wednesday, March 15, 2006

என் அரேபிய அனுபவங்கள்- 2யாசர் (பெயர் மாற்றம் செய்யப் பட்டுள்ளது) மூத்த கணிணிப் பொறியாளர். பாலஸ்தீனத்தை சேர்ந்தவர். இவர் என்னுடன் அபுதாபியில் பணியாற்றியவர். இவர் செய்யும் கோமாளித் தனங்கள், எங்கள் ரிபைனரியில் மிகவும் பேமஸ். இவருக்கு சாதிக் என்ற தமிழ் இளைங்ஞ்ர் ஹெல்பர் ஆக இருந்தார். சாதிக் போன்ற 1000 கணக்கான தமிழ் சகோதரர்கள் நம் நாட்டில் ஏஜெண்டுகாளால் வஞ்சிக்கப் பட்டு அரபு நாடுகளுக்கு வந்து அங்கே அரேபியர்களால் சக்கையாக பிழியப் படும் பரிதாபத்துக்குரியவர்கள். அரபு நாடுகளின் அலங்கார கட்டிடங்களைக் காணும்போது நம் இந்திய சகோதரர்களின் இரத்தக்கறைகள் என் கண்ணில் தெரிகிறது. அரேபிய நாடுகளில் உள்ள பளபளப் பான கழிவறைகளில் நம் சகோதரர்களில் வேர்வை நாற்றத்தை உணர்கிறேன். இவர்களைப் பற்றி பின்.

யாசரின் மூளை ஒரு பள்ளி மாணவனின் மூளையைவிட மிகச்சிறியது. மிகக் கஷ்டமான, மூளைக்கு வேலை தரும் பணிகளை இந்தியப் பொறியாளர்களிட்ம் தந்து விட்டு ( நம் ஆட்கள் சாவலான வேலைகளை அவர்களே எடுத்துக் கொள்வார்கள்) பைலிங், லேபிளிங், ஸ்டோர் கீப்பிங் போன்ற எளிய வேலைகளை மட்டும் செய்வான். ஆனால் தன் அறியாமையை மறைக்க ஆளாதிக்கம் செய்வதில் கைதேர்ந்தவர். அதுவும் சாதிக் போன்ற அப்பாவிகள் இவர் கையில் படும் பாடு அக்கிரமம். ஒரு முறை புதிய கணிணிகளை விநியோகம் செய்ய நான் இருக்கும் பகுதிக்கு யாசரும் சாதிக்கும் வந்தார்கள். சாதிக்கின் வேலை பெரிய பெரிய மானிட்டர்களை தூக்கி வைப்பது. நம்மாள் சுறுசுறுப்பானவன். எல்லா கணிணிகளையும் தூக்கி வைத்து விட்டு டீ குடிக்க பொய்விட்டார். நம் கோமாளி அங்குள்ள மானஜரின் அறையில் கனெக்ஷ்ன் கொடுத்துவிட்டு முழித்துக் கொண்டிருந்தான். டீ குடித்துவிட்டு வந்த சாதிக் மற்ற அறைகளில் உள்ள கம்ப்யுட்டர்களுக்கு கனக்ஷன் தந்து அவைகளை இயங்கவைத்துவிட்டு வந்துப் பார்த்தால் நம் பாலஸ்தீன கோமாளியின் கம்ப்யுட்டர் இன்னும் வேலைசெய்ய ஆரம்பிக்கவில்லை. சாதிக் அந்த கம்ப்யுட்டரில் மௌஸும் , கீபோர்டும் கனக்ஷன் மாறி இருப்பதைப் பார்த்து அதை சரி செய்தவுடன் கம்ப்யுட்டர் வேலை செய்ய ஆரம்பித்தது. அதைப் பார்த்து அந்த மானேஜர் சிரித்துவிட்டார். அது யாசரை மிகக் கோபப்படுத்திவிட்டது. அவர் சாதிக்கை மிகவும் கேவலமாகத் திட்டி இனிமேல் நீ கக்கூஸ் மட்டும் கழுவு கம்ப்யுட்டரில் கை வைக்காதே எனக் கூறிவிட்டான். ஆனால் சாதிக் கக்கூஸும் கழுவி கம்ப்யுட்டரையும் கற்றுக் கொண்டான்.


வலித், இவர் இன்னொரு பாலஸ்தீனர். ரிபைனரியில் மிக சிக்கலான ஹைட்ரோகிராக்கர் ஆபேரேட்டர். இவர் பானலில் இருக்கும் போது கேரளாவைச் சேர்ந்த அனுபவமிக்க மஹ்மூத் கூட இருப்பார். ஒரு நாள் வலித் வேலை செய்யும் கம்ப்யுட்டரில் எதோ பிரச்சனை. மஹ்மூதும் வலிதும் என்னை அழைத்தனர். மஹ்மூது ஒரு ஜாலி பேர்வளி. எப்போதும் சந்தோசமாகவும் புன்சிரிப்புடனும் இருப்பார். அவர் பானலில் இருந்தால் அவருடன் பேசிக் கொண்டே வேலை செய்வது என்க்கு மிகவும் பிடிக்கும். அன்றும் அவ்வாறு அவர் ஜோக் சொல்ல நான் சிரித்துக் கொண்டே அந்த கம்ப்யுட்டரில் உள்ள கோளாறைச் சரி செய்துவிட்டு ஸ்டைலாக "இந்த என்டெர் பட்டனை அமுக்கினால் சரியாகிவிடும்" எனெ கையைத் தூக்கினேன். அப்போது எங்களை எரிச்சலாகப் பார்த்துக் கொண்டிருந்த வலித் என் கையைப் பற்றி "என்டெர் அமுக்கவத்ற்க்கு முன் இன்ஸா அல்லாஹ் எனக் கூறு" எனெ ஆணையிட்டார். "இதற்க்கு கடவுளை அனாவசியமாக தொந்தரவு செய்ய வேண்டாம், இந்த கம்ப்யுட்டர் என் பேச்சையைக் கேட்கும்" என்றதற்க்கு " நீ கடவுளக்கே சாவல் விடுகிறாயா". நானும் சளைக்காமல் "கடவுள் பெயர் சொல்லி என்டெர் பட்டனை அமுக்கினாலும் சொல்லாமல் அமுக்கினாலும் அது வேலை செய்யும். அதனால் கடவுள் இங்கே தேவையில்லை. ஆனால் எனக்கு இன்ஸா அல்லாஹ் புக்ரா என்று கூறுவதில் ஒரு ஆட்சபணையும் இல்லை" என்றேன். அங்கிருந்த மஹ்மூத் அவருக்கே உரிய ஜோக் சொல்லி எங்களைப் பிரித்து வைத்தார். இன்ஸா அல்லாஹ் புக்ரா என்றால் கடவுள் சித்தமிருந்தால் நாளைப் பார்க்காலம் எனப் பொருள். நாளை உயிருடன் இருப்பது கடவுளின் சித்தம் தானே. அதில் எனக்கும் உடன்பாடே. ஆனால் மனிதாரால் உருவாக்கப் பட்ட கம்புயுட்டர், மனிதாரால்தான் சரி செய்ய முடியும். வலித் இந்த விஷயத்தை விடுவாகதில்லை. அவர் மானெஜ்மென்ட்டில் என்னுடைய ஆட்டிடியுட் (Atitude) சரியில்லை எனக் கம்ப்ளைன்ட் செய்து, அதற்க்கு ஒரு விசாரணைக் கமிஷன் வைத்து., இருவரும் நண்பராக இருங்கள் என அறிவுரை வழங்கப் பட்டது. அது வலித்தின் வெற்றி யாகவும் என் தோல்வியாகவும் கருதப் பட்டது.

ஒரு சனிக்கிழமை அதிகாலை 3.30 மணி அளவில் ரிபைனரியிருந்து ஓர் அழைப்பு கண்ட்ரோல் ஸிஸ்டம் வேலை செய்யவில்லையென்று. அழைத்தவர் ஒசாமா, இவரும் ஒரு பாலஸ்தீனர். சனிக்கிழமை என்பது அரேபியாவில் வீக் பிகினிங். காலை 7.30 மணிக்கு ஆபிஸ் அதற்க்கு 4 மணி நேரம் முன் ஒரு காலா சே.. வெருப்பாக இருந்தது. என் செல்லில் பானலில் இருந்த தமிழ் நண்பரிடம் பிரச்னையைப் பற்றிக் கேட்ட போது "அவரும் சின்ன பிரச்னைத்தான். நீங்கள் காலையில் வந்து ரிப்பேர் செய்யலாம்" என்றார். என்னை வெறுப்பேற்ற ஒசாமாவின் சதி எனத் தெரிந்துக் கொண்டேன். காரில் ரிபைனரி கண்ட்ரேல் ரூம் வாசலில் இறக்கிவிடப் பட்டேன். உள்ளே நுழைந்தவுடன் ஒசாமா தன் குரலை உயர்த்தி " இது மோசமான ஸிஸ்டம் இதை தூக்கி குப்பையில் போடு" எனக் கத்தி என்னை பயமுறுத்த நினைத்தான். இந்த வார்த்தைகளைக் கேட்டவுடன் "வைக்கிறேன்ட்டா உனக்கு ஆப்பு" எனக் கைப்புள்ளத்தனமா யோசித்து "இதைக் குப்பையில் போட வேண்டுமென்றால் ஜெனரல் சர்வீஸைக் கூப்பிடு" என்று சொல்லி மீதமிருந்தத் தூக்கத்தைத் தொடர வீட்டுக்கு சென்றுவிட்டேன்.

காலையில் விசாரணைக் கமிஷன் கூடியது. இந்த முறை நான் மானெஜர்களிட்ம் " நான் பேசுவதைக் கேட்டுவிட்டு கேள்விகளை கேளுங்கள்" எனத் தொடங்கி "ஸிஸ்டமில் பெரிய பிரச்னை இல்லை. அதை நான் 10 நிமிடத்தில் சரி செய்துவிட்டேன். ஆனால் ஒசாமா ஸிஸ்டத்தை குப்பையில் எறியச் சொன்னார். அது என்னுடைய டிபார்ட்மென்ட் வேலையில்லை, ஜெனரல் சர்வீஸைக் கூப்பிட்டு குப்பையில் போடு என்றேன். இந்த ஸிஸ்டத்தின் மதிப்பு சுமார் 20 மில்லியன் அமெரிக்க டாலர்கள். நான் செய்தது தவறு என்றால் இதோ என் ராஜினாமா, பாட்ஜ், சாவிகள், எனக்கு சுமார் 60 நாட்கள் லீவு இருக்கிறது அதை நோட்டிஸ் பிரீயடாக வைத்துக் கொண்டு என்னை ரிலீவ் செய்யுங்கள்" என முடித்தேன். வைத்தார்கள் ஒசாமாவிற்கு பெரிய ஆப்பு


அரேபியர்களில் மிகவும் நசுக்கப் பட்டவர்கள் பாலஸ்தீனர்கள். ஒரு பக்கம் இஸ்ரேலியர், மறுப்பக்கம் ஜோர்டனியர், சிரியர் எகிப்தியர்களால் பந்தாடப்பட்டவர்கள். ஐ.நா வும் அமெரிக்காவும் இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கமல் இருந்திருந்தால் , பாலஸ்தீனம் என்ற நாடு அவர்களுடைய அரேபிய சகோதர நாடுகளால் விழுங்கப் பட்டிருக்கும். இங்கு எண்ணை வளமோ, இயற்கை வளமோ இல்லை, மக்கள் சோம்பேறிகள் மற்றும் படிப்பறிவு இல்லாதவர்கள். இவர்களுக்கே இவ்வளவு ஆணவமும், ஆளாதிக்க எண்ணமும் இருந்தால் , இவர்களுக்காக வக்காலத்து வாங்கும் இவர்களுடைய புதுப் பணக்கார சகோதரர்களைப் பற்றி வரும் நாட்களில்


தொடரும்........ சென்றவை ...1

37 comments:

said...

உங்கள் அரேபிய அனுபவம் வாசிக்க சுவாரசியமாக இருக்கிறது. இது போன்ற ஒன்றை நான் வாசித்ததில்லை. இது அரேபிய மண்ணில் இருந்து வித்தியாசமான செய்தி.
எப்போதுமே கற்றுக்கொள்ள ஆர்வமில்லாத வேலை தெரியாத சோம்பேறிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

said...

சிவா,
இது மிகவும் சுவாரஸ்யமான தொடர்..தொடர்ந்து எழுதுங்கள்!

said...

உங்கள் அனுபவங்களை நன்றாக பகிர்ந்து கொள்கிறீர்கள். என் சக தொலைதொடர்பு அலுவலர்களும் இத்தகைய அனுபவங்களை சொல்லியிருக்கிறார்கள்.

said...

அரேபிய நாடுகளில் வேலை செய்வது மிக எளிது என நினைத்துக்கொண்டிருக்கும் அனைவரும் படிக்க வேண்டிய பதிவு இது.

வாழ்த்துக்கள்.

said...

//இங்கு எண்ணை வளமோ, இயற்கை வளமோ இல்லை, மக்கள் சோம்பேறிகள் மற்றும் படிப்பறிவு இல்லாதவர்கள். இவர்களுக்கே இவ்வளவு ஆணவமும், ஆளாதிக்க எண்ணமும் இருந்தால்//

கொஞ்சம் கவனித்து எழுதியிருக்கலாம் இந்த வரிகளை. நம்மூரில் இதே அடையாளங்களுடன் இருக்கும் மக்கள் பலர் அவர்களுக்கெல்லாம் ஆணவம் கூடாதா என்ன?
உங்கள் பார்வையில் தான் ஆணவம் அவர்கள் பார்வையில் தன்மானமாயிருக்கலாம்.

சிவா நீங்கள் சொல்லும் எல்லாமும் நம்மூரிலும் சகஜமாய் நடக்குதே. பாம்பே போய் வேலை பார்த்தால் மதராசி என சொல்லி சதிப்பதில்லையா?
உங்கள் எழுத்தில் அரேபியரென்கிற கோணம் அதிகமாய் தெரிகிறது என நினைக்கிறேன்.

said...

சிறில், நீங்கள் தவறாக புரிந்துக் கொண்ட்டிருகிறீர்கள். இங்கு நசுக்கப் படுவது நாம். தன்மானத் துடன் இருக்கவேண்ட்டியவர்கள் நாம் தான். அரேபியர்களையும் நம்மவர்களையும் ஒப்பிட முடியாது. தளங்கள் வேறு, சூழ்நிலை வேறு. அரேபியர்கள் நம்மவரை அழைப்பது நம்மை கரையேற்ற அல்ல. நாம் அங்கே போவது நம் திறமைகளையும் உழைப்பையும் அதிக விலைக்கு விற்கத் தான் அவர்களை கரையேற்றவோ அவர்கள் மேல் அனுதாப படவோ இல்லை. நீங்கள் எனனதான் அரேபியர்களை சக மனிதானாக கருதி பழகினாலும் அவர்கள் நம்மவர்களைஅதிலும் மாற்று மதத்தவரை அவர்கள் மனிதாரக மதிக்கவில்லை. நம்மை அங்கு வேலைக்கு வந்த அடிமைகளாகவே கருதுகிறார்கள்.

நம் நாட்டில் இந்த மாதிரி சம்பவங்கள் வெகு சாதரணம். இவைகளை நாம் எதிர்க்க நமக்கு வாய்ப்புகள் இயக்கங்கள் உரிமைகள் இருக்கின்றன. அனால் இவர்களைப் பற்றி முணுமுணுக்கக் கூட உங்களுக்கு உரிமை இல்லை. அந்த உரிமையை நான் எதிர்பார்க்கவும் இல்லை. என்னை அவர்களின் பிறந்த மண், இனம், மதம் என்ற ஆணவத்தால் என்னை அவமானப் படுத்தினார்கள். நான் என்னிடம் உள்ள் திறமை என்ற ஆணவத்தால் அவர்களை அவமானப் படுத்தினாலும், ஒரு நாளும் அவர்களின் இனம் பற்றியோ மதம் பற்றியோ பேசினதில்லை. பேசியிருந்தால் என் தலையை கொய்திருப்பார்கள்.

சிறில், நீஙகள் லக்கி. நேராக அமெரிக்கா வந்து விட்டீர்கள். அமெரிக்காவில் வெகு சிலசமயங்களில் இந்த மாதிரி அவமானங்களை சந்திதிருப்பீர்கள். அனால் அங்கே தினம் தினம் அவமானப்படுகிறோம். பணத்திற்க்காக இவைகளை பொறுத்தபோதும் ரணப் பட்ட மனம் மறக்க மறுக்கிறது.

என்னுடைய எழுத்தில் அரேபியர் வெறுப்பு இருப்பது உண்மை. என் ரணங்களை இந்த் ப்ளாக்கில் ஆற்றிக் கொண்டால் நான் மீண்டும் அரேபியர்களை மனிதராக நேசிக்க வாய்ப்பிருகிறது. அத்ற்க்கான சிறு முயற்ச்சி.


குறும்பன், ஜோ, மணியன், துபாய்வாசி அகியோருக்கு வணக்கங்கள்.

அன்புடன்

கால்கரி சிவா

said...

புரிந்துகொள்ள முடிகிறது.
என்னை பொறுத்தவரை அமெரிக்காவில் நேரடியாக எந்த மோசமான அனுபவமும் எனக்கு இருக்கவில்லை.

ஓரளவுக்கு வெளிப்படையாக, சிலநேரம் வரிந்து கட்டிக்கொண்டு, எல்லோரிடமும் பழகும் குணமும் எந்த நிலையிலும் இவர்கள் யாரும் நமக்கு மேலானவர்கள் இல்லை என்கிற ஒருவகைத் திமிரும், இவர்கள் எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையிலாவது ஓரளவுக்கு செம்மையாகவே ஆங்கிலம் பேசத் தெரிந்தவன் என்பதாலும் எனக்கு எந்தவித பிரச்சனையும் இருந்ததில்லை. என்னுடன் வேலைபார்த்த பல அமெரிக்கர்களும் நல்ல நண்பர்கள்.

said...

சிறில்,

புரிந்துக் கொண்டதற்க்கு நன்றி. உங்களுக்கு உள்ளது திமிர் அல்ல. சாதரண தன் நம்பிக்கை. இங்கே உள்ளவர்கள் நம் திறமையை மதித்து நம்மை சக மனிதராக ஏற்கிறார்கள். வெள்ளையர்கள் ஆங்கிலம் தெரியாத ஸ்பானிஷ் மக்களை வெறுத்து நான் பார்த்ததில்லை. ஆனால் அரேபியரோ அவர்கள் கடவுளுக்கே அரபி மட்டும் தான் தெரியும் மற்ற மொழிகள் சாத்தானின் மொழிகள் எனச் சொல்லிக் கொண்டு திரிகிறார்கள். இவர்களின் திமிரை அடக்கப் போவது யாரோ?

said...

அற்புதமான கட்டுரைகள். இது போன்று தமிழில்(வெகுஜன ஊடகங்கள் உட்பட) இதுவரை வந்ததில்லை.

தொடர்ந்து எழுதுங்கள்.

said...

நேசகுமார், தங்கள் வருகைக்கு நன்றி

அன்புடன்

கால்கரி சிவா

said...

சிவா,
இதே போன்ற சவுதி அனுபவம் என் உறவினர் ஒருவருக்கும் உண்டு.
மனித நேயம் தொலைத்த அரேபியர்களால் மனமொடிந்தோர் பலர்
அதை விடவும் கொடுமை என்ன தெரியுமா?இப்படி கஷ்ட பட்டு வரும் நம் மக்களை உறவுகள் படுத்தும் பாடு இருக்கே...எருதின் வலி காக்கைக்கு புரியாதே,..

திரு சிறில் அலெக்ஸ் அவர்களுக்கு சின்ன விளக்கம்...

அரேபிய நாடுகளில்..நம்மவர்கள் படும்பாடு சிவா எழுதியது ஒரு சின்ன உதாரணம் தான்...
இதன் முழுபரிணாம உண்மை விளக்கத்திற்கு அப்பாற்பட்டது.

அரேபியர்களை பொறுத்தவரை இன்ஞ்னியரும் சாதாரண கட்டிட தொழிலாளியும் ஓன்று தான்

இன்னமும் வளர்ந்த நாகரிக அரபு நாடாக கருதப்படும் துபாயில் தன்மானத்தை உடைக்கும் சூழலில் உழலும் அனுபவஸ்தன் நான்.

said...

தைலு,

தங்கள் வருகைக்கு நன்றி. அரேபியர்கள் நாகரிகம் அடைய இன்னும் 1000 ஆண்டுகள் பிடிக்கும். அதுவரைக்கும் நம் போல் மத்திய தர மக்களுக்கு வெளிநாட்டில்போய் அவமானங்கள் பட்டு தவிர்க்க முடியாத ஒன்று. எனக்கு ஒரு தமிழ் சீரியலின் பாட்டு ஒன்று நினைவிற்க்கு வருகிறது. " அவமானங்கள் இல்லாமல் வெகுமானங்கள் கிடையாது" என் அரேபிய வெறுப்பு தொடரும்........


சிவா

said...

இந்த அரேபியன்களுக்கு திமிர் அதிகம். அதுவும் சவுதிகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். இந்தியர்கள் என்றால் அவர்களுக்கு இளப்பமே. இந்துக்களைப் பற்றி அவர்கள் அபிப்பிராயம் சொல்லிக் கொள்ளும்படியில்லை.

அவன்களிடம் போய் வேலை செய்யவேண்டும் என்பது துரதிர்ஷ்டவசமானதே.

நான் ஐ.டி.பி.எல்லில் வேலைக்கு சேர்ந்தபோது எல்லா விஷயத்திலும் மகிழ்ச்சிதான், ஒரு விஷயத்தைத் தவிர. அல்ஜீரியாவில் வேலை என்றார்கள். ஐயோ இஸ்ரேலுக்கு விரோதியான அரபு நாடு ஒன்றுக்கு போக வேண்டியிருக்கிறதே என்பதில்தான் சோகம். நல்ல வேளையாக அல்ஜீரிய வேலை இல்லை என்று ஆயிற்று. பிழைத்தேன்.

இப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதை காட்டும் வண்ணம் இதன் நகலை என்னுடைய ஐ.டி.பி.எல். பதிவு ஒன்றில் பின்னூட்டமாக இடுவேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/03/idpl-4.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

//* thailu said... அரேபியர்களை பொறுத்தவரை இன்ஞ்னியரும் சாதாரண கட்டிட தொழிலாளியும் ஓன்று தான்*//

ஏங்க வர்ண அடையாளம் புகுத்தி வேறுப்படுத்தி காட்டலேயேன்னு வர்த்தப்படுவது போலத் தெரிகிறது?

//* கால்கரி சிவா said...
என் அரேபிய வெறுப்பு தொடரும்........ *//

முஸ்லிம்கள் மேலுள்ள காழ்ப்புணர்ச்சியைக் காட்டுவதற்கு இப்படியும் ஒரு வழியா? நேசக்குமாரின் தாக்குதல்கள் இப்பொழுது புது உருவத்தில் அல்லவா வருகின்றது?

said...

அரேபியர்கள் இஸ்லாமியர் என்ற ஒரே காரணத்துக்காக அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய ஆதரவு பார்ப்பனர்கள் இங்கே வந்து எதிர் கருத்துகூற விளையும். அவை அரேபியரை அவன், இவன் என ஏகவசனத்தில் குலைத்தாலும் குலைக்கலாம்.

என்னதான் அரேபியர் தவறு செய்தாலும் அவன் இவன் என ஏஎக வசனத்தில் அழைப்பது கண்டிக்கத் தக்கது.

திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன பயன்?

said...

திரு அடிஆத்தி , திரு வெங்காயம் அவர்களே,

னான் முஸ்லிமையோ அல்லது இஸ்லாமையோ வெறுப்பவன் அல்ல. மதங்களைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. மனிதத்தையும் சுதந்திரதையும் நேசிப்பவன் நான். என்னை ஒரு ஜாதியிலோ அல்லது ஒரு மதத்திலோ ஏன் ஒரு நாட்டிலோ என்னை அடக்கிக் கொள்ள விரும்பவில்லை. ஆனால் நான் என் தாயை நேசிப்பது போல் என் தாய் நாட்டையும் நேசிக்கிறேன்

அடிமைத் தனத்தையும் ஆளாதிக்கத்தையும் அறவே எதிர்ப்பவன். ஆளாதிக்கம் செய்பவன் அரேபியனாகவோ, அமெரிக்கனாகவோ அல்லது நம்மூர் உயர் சாதிக் காரனகவோ கீழ் சாதிகாரனாகவோ இருந்தாலும் அவனுக்கு என்னிடத்தில் மரியாதை இல்லை. இதை மிக உறுதியாக தெளிவுப் படுத்திக் கொள்ள விரும்புகிறேன். அரேபியர்கள் இஸ்லாமியர்கள் என்பதாலோ பணக்காரர்கள் என்பதாலோ அவர்கள் விமர்சனத்திற்க்கு அப்பாற்ப் பட்டவர் இல்லை.

நேசகுமார் அவர்கள் என்னுடைய பதிவைப் பார்த்து பின்னூட்டம் இட்டதால் என் எழுத்துகள் நேசகுமார்த் தனம் கொண்டவை என்றும், நான் சோ அவர்களை விரும்பி படிப்பதால் என் பதிவு சோ தனம் கொண்டவை என்றும், சுஜாதா அவர்கள் என் அபிமான எழுத்தாளர் என்பதால் என் பதிவு சுஜாதாதனம் கொண்டவை என்றும் கூறினால் அது உங்கள் குறுகிய மனப் பான்மையக் காட்டும்.


திரு தைலு அவர்களின் பின்னூட்டம் அவரின் திறமைக்கு மரியாதை இல்லை என்ற ஆதங்கம் தெரிகிறது. அதை புலுத்துப் போன வர்ணாச்சிரமம் என்ற ஆயுதத்தை எடுத்துக் கொண்டு எதிர்க்கிறீர்கள். அரேபியர்கள் தங்க்ளை அரேபியர் என்றும் மற்றவர்களை அடிமை என்றுதான் பார்க்கிறார்கள். இதை, உங்களின் இஸ்லாமிய அடையாளங்களுடன் நீங்கள் சவூதி அரேபிய தெருக்களில் உலவும் போது "ஹே..ஹிந்தி" (ஏய் இந்தியனே) என ஒரு அரேபியானால் அழைக்கப்படும் போது, உணர்வீர்கள். நீங்கள் இஸ்லாமியர் என்பதால் அவர்கள் ஒரு போதும் இந்தியரை நேசித்ததில்லை. அவர்கள் உஙகளை அவர்களில் ஒருவராக ஒருபோதும் கருதியதில்லை. இதுதான் உண்மை.

ஆளாதிக்கம் செய்யும் வரை என் அரேபிய வெறுப்பு தொடரும்


கால்கரி சிவா

said...

திரு டோண்டு அவர்களே, உங்களைப் போன்ற மூத்த வலைப் பதிவாளர்கள் என் வலைப் பதிவைப் படிப்பது எனக்கு பெருமை அளிக்கிறது. தங்கள் வருகைக்கு நன்றி


கால்கரி சிவா

said...

//* "ஹே..ஹிந்தி" (ஏய் இந்தியனே) என ஒரு அரேபியானால் அழைக்கப்படும் போது, உணர்வீர்கள். *//

கால்கரி சிவா! என்ன ஒரு அடிப்படை அறிவுகூட இல்லாமல் இப்படி உளருரீங்க? 'ஹே' க்கு எந்த அரபி அகராதியைக் கொண்டு 'ஏய்' என்ற அர்த்தத்தைக் கண்டுப்பிடித்தீர்கள்? அதற்கு தமிழுக்காண அர்த்தம் கொண்டு விளங்கினால் அது யாருடைய தவறு? பெயர் தெரியாத ஒருவரை அழைக்கும்பொழுது நீங்கள் எப்படி அழைப்பீர்கள்? என்னங்க? அல்லது ஹலோ? இதைப்போன்றதுதான் அந்த ஹே க்குமான அர்த்தம். சவுதியில் பல நாட்டு மக்கள் வசிப்பதால் குரிப்பிட்டு உங்களை அழைப்பதற்கு ஹே ஹிந்தி எனக் கூப்பிட்டிருக்கின்றான். இதில் என்ன பெரிய தவறைக்கண்டு விட்டீர்கள்? ஆங்கிலத்தில் He என்றால் அவன் என அர்த்தம், அதற்காக இது மரியாதை குறைந்ததாக ஆகிவிடுமா?

said...

//* கால்கரி சிவா said... அரேபியர்கள் தங்களை அரேபியர் என்றும் மற்றவர்களை அடிமை என்றுதான் பார்க்கிறார்கள். *//

அப்படியென்றால் மன்னர் அப்துல்லாஹ், இந்தியாவிற்கு வந்தபொழுது இந்தியாவை தன்னுடைய மற்றொரு தாய்நாடு என்று கூறினாரே... அதற்கு என்ன விளக்கம் கூறப்போகின்றீர்கள்?

said...

அடி ஆத்தி அவர்களே,

தங்கள் எனக்கு அடிப்படை அறிவு கூட இல்லை என அளித்த சான்றிதழுக்கு நன்றி.
சவூதி மன்னர் அப்துல்லாஹ் அவர்கள் அமெரிக்க அதிபர் புஷ ஐ கூட தன் நெருங்கிய நண்பர் என்று சொல்கிறார்கள். நீங்கள் எல்லோரும் ஏன் புஷ் ஐ வெறுக்கிறீர்கள்?
சவுதீ மன்னரிடம் அவருடைய இராண்டாம் தாய் நாட்டை சேர்ந்த இந்து, கிறித்துவ மற்றும் சீக்கிய மக்கள் வழிபட துபாயில் இருப்பது போல் ஒரு பாழைடந்த கட்டிதத்தை அல்கோபரிலொ ரியாதிலொ அல்லது ஜெத்தாவிலோ இனாமாக வேண்டாம் வாடகைக்கு வாங்கி தரமுடியுமா?

அரசியல் வாதிகளெல்லாம் இப்படி பேசுவது சகஜம் அடி ஆத்தி

சவூதியிலிருந்து உங்கள் உண்மைப் பெயரையும் படத்தையும் போட்டு அவர்களுக்கு ஆதராவக கூட எழுத உங்களுக்கு உரிமை இல்லை என்பதே உண்மை

said...

நான் தொண்ணூறுகளில் ஹிந்துஸ்தான் டைம்ஸில் படித்த ஒரு செய்தியை இங்கு கூறுவேன்.

ஒரு கார் விபத்தில் ஒரு ஹிந்து சவுதியில் இறந்தார். அவருடைய மரணத்துக்குக் காரணமான மோட்டார் ஓட்டியிடமிருந்து அபராதம் வசூலித்து, அதை பாதிக்கப்பட்டவர் குடும்பத்துக்கு வழங்குவது சவுதியில் சட்ட விதியாகும். நல்ல விதிதான். ஆனால் அதைச் செயல்படுத்திய முறை என்னவென்று பார்ப்போமா? அபராதப் பணத்தை வசூலித்த சவுதி அரசு அதில் ஒரு பகுதியைத்தான் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு வழங்கியது, ஏனெனில் இறந்தவர் ஹிந்து. மீதிப் பணம்? அரசு கஜானாவுக்கு சென்றது. இப்படி இறந்தவர் பணத்தைக் கையாள்வதற்கு பதில் சவுதி அரசு பிச்சை எடுக்கப் போகலாமே.

அப்படியே இந்த அபராத ஷெட்யூலையும் பாருங்கள்.

In Saudi Arabia, when a person has been killed or caused to die by another, the prescribed blood money rates are as follows:

100,000 riyals if the victim is a Muslim man
50,000 riyals if a Muslim woman
50,000 riyals if a Christian man
25,000 riyals if a Christian woman
6,666 riyals if a Hindu man
3,333 riyals if a Hindu woman.
Blood money is to be paid not only for murder, but also in case of unnatural death, interpreted to mean death in a fire, industrial or road accident, for instance.

பார்க்க: http://en.wikipedia.org/wiki/Blood_money

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

அவ்வளவு கெட்டவர்களான அரேபியர்களிடம் தாங்கள் ஏன் வேலை செய்து பிழைத்திருக்க வேண்டும்? பேசாமல் சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் போன்ற பெருநகரங்களில் பிச்சை எடுத்து பிழைத்து இருக்கலாமே சார்? அல்லது தாங்களே பெரிய முதலாளி ஆகி அரேபியர்களை வேலைத்து அழைத்து இருக்கலாம்தானே?!!!

said...

டோண்டு,

பட்டியல் எல்லாம் பிரமாதமாகப் போடுகிறீர்கள். ரொம்ப சரி. தாங்கள் மட்டும் ஒழுங்கா என்ன? தலித்துகளை கோவிலுக்குள் விடமாட்டோம் என்று இன்றுவரைக்கும் சொல்கிறீர்களா? எங்கே நீங்கள் முழுமையான மனிதன் என்றால் என் கண்ணுக்கு முன்னர் ஒரு தாழ்த்தப்பட்டவரை உங்கள் வீட்டுக்குள் அழைத்துச் செல்ல முடியுமா? அது என்ன உங்களுக்கு ஒரு சட்டம்? சவுதிக்கு மட்டும் இன்னொருன் சட்டமா? போய் வேலையைப் பாருங்க டோண்டு.

said...

திரு வெங்காயம்,

தங்கள் யோசனைக்கு நன்றி. சவூதியில் பொறியாளர் வேலையை விட இந்தியாவில் பிச்சைகாரர் வேலை சிறந்தது எனச் சொல்லியிருக்கிறீர்கள்.

நான் ஏன் வேலையை விடவில்லை என்பதை என் பதிவில் இடுவேன். ஒரு வேலை நான் மறந்தால் தயவு செய்து நினைவுப் படுத்துங்கள்.

அரேபியர்க்கு இங்கே என்னால் வேலை வாங்கி தரமுடியும். அவர்கள் வேலை செய்ய தகுதி, அனுபவம், திறமை மற்றும் கனாடவில் வேலை செய்ய உரிமம், இவைகள் இருந்தால் போதும். இங்கே மதம், நிறம், இனம், வயது, ஆண்/பெண் இன்னபிற பேதங்கள் கிடையாது. என்ன வேலை செய்யும் அரேபியரைக் கண்டுபிடிக்க நிறைய சிரமப் படவேண்டும்.

said...

திரு டோண்டு அவர்களே,

நீங்கள் சொன்ன நிகழ்ச்சி அன்றாடம் நடப்பவை.

அவர்களின் சட்டதிட்டங்களைப் பற்றி பேச வேண்டாமே? ஒரு நாட்டில் இருக்கும்போது அதன் சட்டதிட்டங்களை மதிப்பது தானே முறை?

திரு வெங்காயம் அவர்களே, இவ்வளவு கடுமை ஏன்? நம் நாட்டில் உள்ள சமூக ஏற்றதாழ்விற்க்கும் சவூதி சட்டதிற்கும் என்ன சம்பந்தம்.

said...

//arabiargal nammai adimaiga paarkinranar//

avargal paarvaiyil naam yeppothum adimai than. ithu manitha iyalbu .

nam naatil kooda
if there are 2 employees in a company and if one is permanent and other is on Contract ..then Permanent employee will always have a different attitude towards Contract employee.

regarding domination:

We south indians ..eventhough we contribute heavily to Central Govt in terms of revenue ..we are always dominated by UP and other state fellows who are just liabilities for Central Govt.

said...

Dondu Said...
//ஐயோ இஸ்ரேலுக்கு விரோதியான அரபு நாடு ஒன்றுக்கு போக வேண்டியிருக்கிறதே என்பதில்தான் சோகம்.//

இஸ்ரேல் டோண்டு அய்யாவுக்கு தாய்நாடா? அல்லது இரத்த சம்பந்தம் ஏதேனும் உள்ளதா? இஸ்ரேலுக்கு விரோதி என்றால் இந்தியரான இவருக்கு என்ன வந்தது?

ஆரியர்கள் மத்திய ஆசியாவிலிருந்து வந்தவர்கள் என்பதற்கும் இதற்கும் சம்பந்தம் இருக்குமோ?

said...

//இஸ்ரேல் டோண்டு அய்யாவுக்கு தாய்நாடா? அல்லது இரத்த சம்பந்தம் ஏதேனும் உள்ளதா? இஸ்ரேலுக்கு விரோதி என்றால் இந்தியரான இவருக்கு என்ன வந்தது?//

எல்லாம் ஒரு நன்றி உனர்வு தான் அய்யா.

வேறு எந்த நாடு நமக்கு அவர்களின் வார்ரிசர்வுகளில் இருந்து அவசர-அவசரமாக அம்யூனிஷன் சப்பளை செய்தது கார்கில் போரின் போது?

உங்களுக்கு அரேபியர் மீதும் பாலஸ்தீன மக்கள் மீதும் இந்தியாவின் மீது உள்ளதை விட பாசம் அதிகம் இருக்கலாம்.அதற்காக எல்லோரும் அப்படி இருக்க வேன்டுமா என்ன?

நாங்கள் நன்றி உள்ள மனிதர்களாக இருக்கு விரும்புகிறோம்.

// ஆரியர்கள் மத்திய ஆசியாவிலிருந்து வந்தவர்கள் என்பதற்கும் இதற்கும் சம்பந்தம் இருக்குமோ? //

அப்படி எதுவும் நடந்த மாதிரி தெரியவில்லை.உங்களுக்கும் ஆரியர் என்று நீங்கள் கூறும் மனிதர்களுக்கும் ஒரு டி.என்.ஏ சோதனை செய்து பார்த்தால் இதை உறுதிபடுத்திவிடலாம்.

said...

//* கால்கரி சிவா said...
சவுதீ மன்னரிடம் அவருடைய இராண்டாம் தாய் நாட்டை சேர்ந்த இந்து, கிறித்துவ மற்றும் சீக்கிய மக்கள் வழிபட துபாயில் இருப்பது போல் ஒரு பாழைடந்த கட்டிதத்தை அல்கோபரிலொ ரியாதிலொ அல்லது ஜெத்தாவிலோ இனாமாக வேண்டாம் வாடகைக்கு வாங்கி தரமுடியுமா? *//

//* கால்கரி சிவா said...
அவர்களின் சட்டதிட்டங்களைப் பற்றி பேச வேண்டாமே? ஒரு நாட்டில் இருக்கும்போது அதன் சட்டதிட்டங்களை மதிப்பது தானே முறை? *//

மேலுள்ள இரண்டையும் கூறியது நீங்கள்தான்

அந்த நாடு இஸ்லாமிய நாடு என்பதும் உங்களுக்குத் தெரியும், அவர்கள் பின்பற்றுவதாகக் கூறுவதும் இஸ்லாமியச் சட்டம் என்பதும் உங்களுக்கு நன்குத் தெரியும். அப்புறம் எப்படிங்க உங்களுக்கு கோயில் கட்ட அனுமதிப்பாங்க? எதுவும் தெரியாது போல நடிக்கிறீங்களா? அவர்களின் முதன்மைக் கொள்கையும், சட்டமும் ஓர் இறைக் கொள்கை என்பதுவே.... இதற்கு கட்டுப்பட்டவர்கள் தான் அங்கு எதற்கும் வர இயலும். இதை உங்களின் ஏஜென்ட் உங்களுக்கு அறிவிக்கவில்லையென்றால் அது யாருடைய தவறு?

இதுதான் அவர்களின் சட்டம் எனத் தெரிந்தப் பிறகாவது வாடகைக்கு இடம் கேட்பது தவறு என்கிறதாவது புரிகிறதா? இந்த மாதிரி ஏறுக்குமாறாக ஏதாவது செய்வீர்கள் என்பதால்தான் முத்தவாக்கள் அங்கு வந்து குடைகின்றார்கள்.

said...

கால்கரி சிவா,

நீங்கள் பணி செய்த வளைகுடா நாடுகளில் கிடைத்த கசப்பான அனுபங்களிலிருந்தும் ஒருசில அராபியர்களின் அணுகுமுறையாலும் பாதிக்கப்பட்டு வலைப்பதிவில் திட்டித் தீர்த்து சமாதானம் அடைவதாகச் சொல்வதன் மூலம் உங்களிடம் உப்பிட்டவரை உள்ளளவும் நினை(க்காத) மனப்பாங்கை அறிய முடிகிறது.

இதுபோன்ற ஏலனங்கள் வளைகுடா நாடுகளில் மட்டும்தான் நடக்கிறது என்றால் உங்களுக்கு உலக அறிவு குறறவு அல்லது நீங்கள் எதார்த்தவாதியல்ல என்பது என் கனிப்பு (மன்னிக்க!) எல்லாத் தகுதிகளும் இருந்தும் இந்தியர்களில் பலர் மதத்தகுதியும் உயர் சாதித்தகுதியும் இன்றி புறக்கணிக்கப்பட்ட ஏலனப்படுத்தப்படுவதோடல்லாமல் நிரந்தரமாக மறுக்கப்பட்டு வருவதை நீங்கள் அறிவீர்களா? ஆண்களாகிய நம்மை விடுங்கள், பெண் என்ற ஒரே காரணத்திற்காக சாதி மதப்பேதமின்றி அன்றாடம் பாலியல்/உளவியல் தாக்குதலுக்கு ஆளாகும் பெண்களின் எண்ணிக்கை, பெண்ணுரிமையை ஏற்கனவே வழங்கி விட்டதாகச் சொல்லி மார்தட்டிக் கொள்ளும் அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும்,வளைகுடா நாடுகளில் நடப்பதைவிட பல மடங்கு அதிகம் என்பதை அறிவீர்களா?

வளைகுடாவில் கஷ்டப்படும் பணியாளர்களில் ஆசிய நாட்டவர்களில் இந்தியர்களின் சதிவீதம் கொஞ்சம் அதிகம் என்பது கசப்பான உண்மையை உணர்ந்து கொண்டால் அரேபியர் மீதான உங்கள் வெருப்பில் நியாயமில்லை என்பது புரியும்.

நேர்மையான விமர்சனங்கள் நிகழ்வுகளின் இருபக்கங்களையும் விமர்சிப்பதில்தான் இருக்கிறது. தகுதிக்கேற்ற வேலையும் சூழலும் வளைகுடா நாடுகளில் அமையாதிருந்த போதிலும் இந்தியாவில் ஒரு வேளை உங்கள் தகுதிக்குத் தோதான வேலை கிடைத்து இருந்தால், தரப்படும் சம்பளத்தை விட சுமார் 7-8 மடங்கு அல்லது அதிகமாக வாங்கி இருப்பீர்கள் என்பதும் வளைகுடாவில் பெற்ற அனுபங்களை (கசப்பான அனுபவங்களையும் சேர்த்தே) உங்களின் சாதனை(SKILLS)களாகச் சொல்லி கனடாவில் வேலை வாங்கி இருப்பீர்கள் என்ற என் யூகம் சரியாக இருக்குமானால், துரதிஷ்டவசமாக நீங்கள் நன்றி மறந்தவர்! (மீண்டும் மன்னிக்க!)

உங்களுக்கு ஏற்பட்ட அரேபிய கசப்பான அனுபவங்கள் போல் கனடாவிலும் கசப்பான அனுபவங்கள் ஏற்படாமல் இருக்க இறைவன் அருளட்டும்!

அரேபியரோ அவர்கள் கடவுளுக்கே அரபி மட்டும் தான் தெரியும் மற்ற மொழிகள் சாத்தானின் மொழிகள் எனச் சொல்லிக் கொண்டு திரிகிறார்கள். இவர்களின் திமிரை அடக்கப் போவது யாரோ?

அரேபியர்கள், உங்களிடம் கடவுளுக்கே அரபி மட்டும்தான் தெரியும் என்றும் மற்ற மொழிகள் சாத்தானிய மொழிகள் என்றும் சொன்னதாகச் சொல்வதில் உண்மை இருக்காது என்று உறுதியாகச் சொல்ல முடியும். ஏனெனில், குர்ஆனையும் ஹதீஸையும் நம்பும் எந்த முஸ்லிமும் அவ்வாறு சொல்லி இருக்க முடியாது. (பார்க்க: அரபி மொழியும் நீசமொழிகளும் என்ற என் பதிவை) அப்படிச் சொல்லி இருப்பின் அவரை அறியாமையிலும் மொழி வெறியிலும் உழலும் ஒருவராகவே கருதி ஒதுக்க வேண்டும்.

சமஸ்கிருதம் மட்டுமே தேவபாஷை! மற்றவையெல்லாம் (தேனினுமினிய எம்தமிழ் உட்பட) நீச பாஷைகள் என்று சொன்ன பீடாதிபதிகள் போல் எந்த இமாமாவது அருள்வாக்கு சொல்லி இருந்தால் உங்கள் குற்றச்சாட்டில் நியாயமுண்டு.

//சவுதீ மன்னரிடம் அவருடைய இராண்டாம் தாய் நாட்டை சேர்ந்த இந்து, கிறித்துவ மற்றும் சீக்கிய மக்கள் வழிபட துபாயில் இருப்பது போல் ஒரு பாழைடந்த கட்டிதத்தை அல்கோபரிலொ ரியாதிலொ அல்லது ஜெத்தாவிலோ இனாமாக வேண்டாம் வாடகைக்கு வாங்கி தரமுடியுமா?//

பிறமத அடையாளங்களை பொதுவில் வெளிக்காட்டிக் கொள்வதை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்காத நாடுகளில் சவூதி மட்டுமே வளைகுடாவிலுள்ள முஸ்லிம் நாடாகும். ஒரு நாட்டின் சட்டம் தன் கொள்கைக்கு ஒத்துவராது என்று கருதும் பட்சத்தில் அந்த நாட்டிற்குச் செல்வதை தவிர்ப்பதுதான் அறிவுடையோர் செயலாகும்.

மனித உரிமைகளின் ஏகபோகச் சொந்தக்காரர்களான அமெரிக்க,ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் ஒலிபெருக்கி வைத்து முஸ்லிம்கள் தொழுகைக்கு அழைப்பதும், இந்து மற்றும் சீக்கியர்கள் பஜனை செய்வதும் தடுக்கப்பட்டுள்ளதையும், பிரான்ஸில் மாணவர்கள் மத அடையாளங்களுடன் பள்ளிக்குச் செல்வதை தடை செய்திருப்பதையும் கருத்திக் கொண்டால், நீங்கள் சொன்னது போல், அவர்களின் சட்டதிட்டங்களைப் பற்றி பேச வேண்டாமே? ஒரு நாட்டில் இருக்கும்போது அதன் சட்டதிட்டங்களை மதிப்பது தானே முறை?

//இந்த அரேபியன்களுக்கு திமிர் அதிகம். அதுவும் சவுதிகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். //

டோண்டு ராகவன்,

அரேபியர்களை மட்டும் குறிவைத்து விமர்சிப்பதின் நோக்கம், உங்களின் அபிமான இஸ்ரேலியர்களை எதிர்ப்பது மற்றும் பார்ப்பனீய வர்ணாசிரமக் கொள்கைகளுக்கு வடிகாலாக இருக்கும் இஸ்லாத்தைக் மதமாகக் கொண்டிருப்பதுமேயாகும் என்பது என் கனிப்பு.

பிறநாட்டவர்களிடம் குறிப்பாக ஆசிய நாட்டவர்களிடம் திமிராக நடந்து கொள்வதற்கு அவர்களிடம் கூலிக்கு வேலை செய்பவர்கள் என்பதும், நிறம், செல்வம் போன்ற முதலாளியத்துவ மனப்பான்மையுமே காரணம். உலகில் எங்கெல்லாம் இந்த மனப்பான்மை நிலவுகிறதோ அங்கெல்லாம் திமிர்த்தனமும் இருக்கும் என்பது நிகழ்கால உண்மை!

அரேபியர்களின் திமிருக்காவது செல்வத்திமிர் காரணமாக இருக்கலாம். அதேசமயம் சகமனிதன் தன்னை விட செல்வந்தனாகவும் பிற எல்லாத் தகுதிகளும் இருந்தாலும் கூட, தங்களை பிரம்மனின் தலையிலிருந்து பிறந்தோம் என்று சொல்லி ஆண்டாண்டு காலமாக பிறமனிதர்களை அடக்கியாளும் பிராமனத் திமிரையும், உணவிற்காக/தொழிலுக்காக மாட்டைக் கொன்றதற்காக தலித்துகள் கொல்லப் படுவதையும் அவர்களுக்கு சமநீதியை மறுக்கும் இந்துத்துவ திமிரையும் சொல்லி இருந்தால் உங்களின் விமர்சனத்தில் நேர்மை இருந்திருக்கும். கைபர் போலன் கணவாய் இருக்கும் மத்திய ஆசியா அரேபியர்களிடமுள்ள அதே திமிர்தானே அங்கிருந்து இந்தியாவிற்கு வந்த ஆரியர்களிடமும் இருக்கும் என்பதற்கு அரேபியரை பற்றி உங்களின் விமர்சனமே சான்று!

அபராதப் பணத்தை வசூலித்த சவுதி அரசு அதில் ஒரு பகுதியைத்தான் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு வழங்கியது, ஏனெனில் இறந்தவர் ஹிந்து. மீதிப் பணம்? அரசு கஜானாவுக்கு சென்றது. இப்படி இறந்தவர் பணத்தைக் கையாள்வதற்கு பதில் சவுதி அரசு பிச்சை எடுக்கப் போகலாமே.-dondu(#4800161)

பாதிப்பை ஏற்படுத்தியவரிடமிருந்து பாதிப்புக்குள்ளானவர் கோரும் பணத்திற்கு இரத்தப் பணம் (Blood Money) என்று பெயர். இப்பணம் நாட்டுக் நாடு வேறுபடலாம். இரத்தப்பணத்தில் ஒரு பகுதி அரசு கஜானாவுக்குச் சென்றது என்பது ஆதாரமற்ற செய்தி.

சமீபத்தில், கண்ணுக்குக் கண் தண்டனையால் பாதிக்கப்பட்ட மலையாளியை மன்னித்து விடுதலை செய்ததையும், அதற்கான இரத்தப் பணத்தை அந்த மலையாளியின் அரேபிய முதலாளியே கொடுக்க முன்வந்ததையும் நினைவில் கொள்க. பாதிப்பை ஏற்படுத்தியவர் வசதியற்றவராக இருக்கும் பட்சத்தில் அதற்கு உதவுவதற்காக பிறர் தங்கள் ஜகாத் நிதியைப் கொடுத்து உதவுவதும் திமிர் பிடித்த அரேபியாவில்தான்!

//உங்களுக்கும் ஆரியர் என்று நீங்கள் கூறும் மனிதர்களுக்கும் ஒரு டி.என்.ஏ சோதனை செய்து பார்த்தால் இதை உறுதிபடுத்திவிடலாம். // Samudra

இதே டி.என்.ஏ சோதனைகள் மூலம் பிராமணர்களும் சூத்திரர்களும் ஒரே ஜாதி என்றும் கூட உறுதி செய்ய முடியும் என்றும் கொள்ளலாம்.

அன்புடன்,

said...

திரு. நல்லாடியார் அவர்களே, தங்கள் போன்ற மூத்த வலைப்பதிவாளார்கள் எனது வலைப் பதிவிற்க்கு வருகை புரிந்த்தற்கு நன்றி.

திரு நல்லாடியார் மற்றும் திரு வெங்காயாம் அவர்களே, சவூதியின் சட்டதிட்டங்களை விமர்சிக்க நான் அந்த நாட்டின் குடிமகனில்லை. அங்கே வந்து என் மத வழிபாடு செய்யவோ என் மத அடையாளங்கள் காட்டோவோ வேண்டும் என உரிமை கோரவில்லை. மன்னர் தன்னுடைய இராண்டாம் தாய் நாடு என என் தாய் நாட்டை சொல்லிக்கொண்டதற்கு என் பெரியம்மாவின் மகனிடம் சிறு சலூகைக் கேட்டேன்.

இதே மன்னர் அவருடைய நட்பு நாடுகளான அமெரிக்காவிற்கும் பிரிட்டனிற்க்கும் செய்த சலுகைகள் இங்கே:

1. அராம்கோ காம்பவுண்டில் பெண்கள் கார் ஓட்டலாம். சாதரண உடையில் நடமாடலாம். ஆண்களுடன் சரிசமமாக வேலை செய்யலாம்.
2.அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் கம்பெனிகளின் காம்பவுண்டில் மதுக்கூடங்கள் வைத்குக் கொள்ள அனுமதி.
3.அராம்கோ காம்பவுண்டில் கிறித்தவர்கள் வழிபட ஒரு சர்ச்.
4. அமெரிக்க படைகளை சேர்ந்த பெண்கள் அரைக்குறை உடையில் வர அனுமதி (நன்றி மன்னா, சிறிது காலம் ஜொள்ள ஜாலியாக இருந்தது -:))

இதுபோல் நிறைய பட்டியலிடலாம்.

திரு நல்லாடியார், எனக்கு உலகறிவு கம்மியென்று நீங்கள் செய்த ஊகம் தவறு. நான் வேலைசெய்யும் துறையில் உலகெங்கிலும் ஒரே சம்பளம் தான், சவுதியில் வேலை செய்த்தால் எனக்கு வருமான வரி இல்லை. அதே நேரத்தில் நான் இழந்தது பி.எப், போன்ற அடிப்படை சேமிப்புகள். நான் மீண்டும் ஒரு முறை சொல்கிறேன். நான் அரேபியரிடம் விற்றது என் திறமை. அங்கே நடந்தது ஒரு வியாபாரம். யாரும் யாருக்கும் உதவவில்லை. நன்றி என்ற வார்த்தைக்கு இங்கே வேலையில்லை. நான் அரேபியாவில் இருக்கும்போது என் அறிவை வளர்பதற்கு வாய்ப்புகள் குறைவு. நவீன தொழில்நுட்பம் பற்றி பயிற்ச்சிற்கு இந்தியானான அதுவும் ஒரு இந்துவான என்னை அரேபிய நிறுவனம் அனுப்பவில்லை. அதனால் கனாடாவில் எனக்கு வேலைக் கிடைக்க எனது அரேபிய அனுபவம் தடையாக இருந்தது தான் உண்மை.

கனாடவில் கசப்பான அனுபவங்கள் ஏற்படாமல் இருக்க கடவுளின் கிருபை தேவையில்லை. இங்கே வெறுப்புக் குற்றங்களை தடுக்க சட்டமுண்டு. ஆனால் எனக்காக கடவுளிடம் முறையிட்ட உங்களுக்கு நன்றி
//அப்படிச் சொல்லி இருப்பின் அவரை அறியாமையிலும் மொழி வெறியிலும் உழலும் ஒருவராகவே கருதி ஒதுக்க வேண்டும்.

சமஸ்கிருதம் மட்டுமே தேவபாஷை! மற்றவையெல்லாம் (தேனினுமினிய எம்தமிழ் உட்பட) நீச பாஷைகள் என்று சொன்ன பீடாதிபதிகள் போல் எந்த இமாமாவது அருள்வாக்கு சொல்லி இருந்தால் உங்கள் குற்றச்சாட்டில் நியாயமுண்டு.//

திரு நல்லாடியார், நீங்கள் சொலவது சரி அவன் மொழி வெறியன் தான். இறைவனுக்கு சமஸ்கிருதம் மட்டும் என சொல்லும் மடாதிபதிகளும் அறிவிலிகளே. நான் குற்றம் சொல்வது மொழிவெறிபிடித்த அரேபியனைத் தான் ஒட்டு மொத்த இஸ்லாமியரை அல்ல.

நான் அரேபியரைப் பற்றி குறை சொன்னால் அவரைப் பற்றி நிறைகளைச் சொல்லுங்கள். மேலை நாட்டினரைப் பற்றி பேச தனி தளம் வைத்துக் கொள்ளலாம்.

திரு வெங்காயம் அவர்களுக்கும் திரு ந;ல்லாடியார் அவர்க்ளுக்கும் ஒரு சின்ன வேண்டுகோள். உங்கள் உண்மையான பெயரையும் முகத்தையும் பொதுவில் வைக்க விரும்ப்படாவிட்டாலும், தனியாக எனக்கு அனுப்பலாமே. முகம் தெரியாதவர்களிடம் பேச சிறிது அசௌகரியமாக உள்ளது

அன்புடன்

கால்கரி சிவா

said...

சட்டம் என்பதற்கும் நியாயம் என்பதற்கும் வித்தியாசம் உள்ளது. 60-வது வரை அமெரிக்காவில் seggregation was legal, ஆனால் நியாயம் அல்ல. 30 வரை ஓட்டுரிமை இல்லை- சட்டப்படிதான் ஆனால் நியாயம் அல்ல. ஜாலியன் வாலாபாக் படுகொலையைச் செய்த டையர் கூட முந்தைய நாள் இயற்றிய சட்டத்தை முகாந்திரமாகக் கொண்டே செய்தான், ஆனால் அது நியாயம் அல்ல. ஹிட்லர் யூதர்களையும் கம்யூனிஸ்டுகளையும் sterilize செய்ததும், அடக்கி ஒடுக்கி துரத்தியடித்தும்கூட சட்டப்படிதான், ஆனாலும் அது நியாயம் அல்ல.

நியாயமற்றவை எல்லா நாடுகளிலும் எல்லா சமூகங்களிலும் இருக்கும்தான், ஆனாலும் அவற்றை எதிர்த்துப் போராடவும் குரல் தரவும் அந்த நாடுகளிலும் சமூகங்களிலும் வழி இருக்கின்றது. அதனால்தான் பல நல்ல மாற்றங்களும் வந்தன; வந்து கொண்டும் இருக்கின்றன. அராபியாவில் அந்த வழி இல்லை. பல முஸ்லீம் நாடுகளில் இதுதான் நிலை என்றாலும், மத்திய கிழக்கில் உள்ளது போன்ற அடக்குமுறையும் அடிப்படைவாதமும் மலேசியா, இந்தோனேசியா போன்ற கீழ்த்திசை நாடுகளில் இல்லை என்பதுதான் உண்மை.

நல்லடியார் போன்ற நம் நாட்டு முஸ்லீம் நண்பர்கள், அராபியாவைக் குறித்து விமர்சிப்பது இஸ்லாத்தையோ அல்லது நம் நாட்டு முஸ்லீம்களையோ விமர்சிப்பதாகாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அராபிய அவமானங்கள் குறித்து சக தமிழர் ஒருவர் நொந்து போய்ப் பேசும்போது, அராபியர்களுக்கு வக்காலத்து வாங்க வரிந்து கட்டிக்கொண்டு வருவது எதனால் என்று விளங்கவில்லை. இந்த pan-islamist அணுகுமுறை மத நல்லிணக்கத்திற்கு வழிகோலாது என்பது மட்டும் நிச்சயம்.

said...

"30 வரை ஓட்டுரிமை இல்லை" என்பது "1930 வரை பெண்களுக்கு ஓட்டுரிமை இல்லை" என இருக்க வேண்டும்.

said...

நல்லடியாருக்கு துலுக்கர்கள் நாடுகளைக் குறித்து பேசினால் பொத்துக் கொண்டு வந்து விடும். இதே எண்ணம் தான் அடுத்தவர்களைப் பற்றி பேசும் போதும் இருக்க வேண்டும். நான்கு துலுக்கன்கள் உட்கார்ந்து சாப்பிடும் போது, ஐந்தாவதாக ஹிந்துவோ, கிருஸ்துவரோ வந்தால் சகஜமாக உட்கார்ந்து சாப்பிடவே மாட்டார்கள். காரணம் தலையிலிருந்து முடி வந்து விழுந்தால் பாவமாம். நேரடியாக அனுபவித்தவன் என்ற முறையில் சொல்கிறேன். கேட்டால் அப்படியெல்லாம் இல்லவே இல்லை, குரானில் அப்படி சொல்லவே இல்லை என்று சப்பைக்கட்டு. அட.. குரானில் சொன்னால் என்ன சொல்லாவிட்டால் என்ன.. நாட்டில் நடப்பதை தான் சொல்கிறேன். தமிழ்நாட்டிலேயே ஒரு பள்ளிவாசலில் ஒரு விருந்து வைத்து அதில் ஒரு தலித் உட்கார்ந்து சாப்பிட்ட போது கும்பல் கும்பலாக துலுக்க இளைஞர்கள் வெளியேறினார்கள் சாப்பிடாமல். காரணம் கேட்டதற்கு பள்ளிவாசலுக்குள் எப்படி தலித்தை அனுமதிக்கலாம் என்றார்கள். இதற்கெல்லாம் விடியோ ஆதாரமா எடுத்து காட்ட முடியும்? என்ன தான் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கப்பார்த்தாலும் துலுக்கன்களுக்கு அவர்கள் மனதுக்கே தெரியும் தங்கள் செயல்கள். அதே போல அவர்களை அருகில் இருந்து பார்ப்பவர்களுக்கும் தெரியும் அவர்களது புத்தி.

said...

அனானிமஸ், அநாகரிக வார்த்தைகள் வேண்டாமே. பிராமணர்களை பார்பாண்கள் என திட்டுவோர் லெவலுக்கு நாமும் இறங்கி முஸ்லிம்களை துலக்கன் என திட்ட வேண்டுமா. நீங்கள் எழுதிய பின்னூட்டத்தின் பொருளுக்காக அனுமதித்தேன்.வார்த்தைகளில் லலிதம் தேவை...ப்ளீஸ்

said...

இதெல்லாம் படித்துத் தெரிந்து அரபு நாடுகளில் இருக்கின்ற நம்ம ஊர் பார்ப்பனர்கள் திரும்பி வந்து விடப்பேவதில்லை. புதிது புதிதாக பேகாமல் இருந்து விடப்பேவதுமில்லை. இதெல்லாம் தெரிந்த நீங்களும் இந்த கேடு கெட்ட வியாபாரம் வேண்டாமென்று விட்டு விட்டு அத னால் வரவுமில்லை. அப்புறம் ஏன் சார் உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யுரீங்க.

said...

//
இதே டி.என்.ஏ சோதனைகள் மூலம் பிராமணர்களும் சூத்திரர்களும் ஒரே ஜாதி என்றும் கூட உறுதி செய்ய முடியும் என்றும் கொள்ளலாம்.
//

இதை ஏற்கனவே செய்து அறிவியலாளர்கள் அவர்களது கண்டுபிடிப்பை வெளியிட்டும் விட்டனர். இன்னமும், ஆரியன், வந்தேரிப் பார்பானக் கூட்டம் என்று ஜல்லி அடிக்கும் கூட்டத்திடம் இதை உறக்கச் சொல்லுங்கள்.

//
அப்புறம் ஏன் சார் உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யுரீங்க.
//

அவர்தான் தெளிவாக ஏற்கனவே சொல்லிவிட்டார்...அவர் அங்கு சென்றது அவரது திறமைக்கு அதிக விலை கொடுப்பவர்களிடம் வேலை செய்யத்தான் என்று...பிறகு அது என்ன உண்ட வீட்டுக்கு ரெண்டகம்... நன்றி கெட்ட, etc., போன்ற அடை மொழிகள்!!?

அதுல bracket போட்டு excuse வேறு கேட்டுக் கொள்வது.. ஏதோ ரொம்ப Decent ஆ பேசுர மாதிரி...


//
பார்ப்பனீய வர்ணாசிரமக் கொள்கைகளுக்கு வடிகாலாக இருக்கும் இஸ்லாத்தைக் மதமாகக் கொண்டிருப்பதுமேயாகும் என்பது என் கனிப்பு.
//

நல்லடியார்,

இஸ்லாம் வர்ணாசிரமக் கொள்கைகளுக்கு வடிகாலாக இருக்கிறது என்பதை என் வலைப்பதிவில் ஏற்கனவே உடைத்தெரிந்தாகிவிட்டது. தயவு செய்து அதை மறுபடியும், மறுபடியும் சொல்லி "Truth by repeated assertion" செய்யவேண்டாம்.

ஷங்கர்.