Wednesday, March 08, 2006

இந்தியாவின் வர்ணங்கள்

கலர்ஸ் ஆஃப் இந்தியா என்ற ஒரு அற்புதமான இசை ஆல்பம். இதில் அஹிம்சா ஒரு உன்னதப் பாடல் இங்கே.

என்னுடைய தமிழ் அறிவு இந்த பாடலை மொழிபெயர்க்கும் அளவிற்க்கு இல்லை. வலைப்பதிவாள்ர்களில் தமிழில் அழகாக எழுதும் தம்பி குமரன், ஜி .ராகவன், இராமநாதன், ஞானவெட்டியான் அவர்கள், போன்றவர்கள் மொழிப் பெயர்த்தால் மிக நன்றியுடையவானக இருப்பேன். இப்பாடல் சாய் பஜனிலும் இடம் பெற்றுள்ளது.

இப்பாடலின் வரிகளும் அதன் ஆங்கில அர்த்தமும் இதோ:

Govinda Bolo Gopaala Bolo
Ram Ram Bolo Hari Naam Bolo
Allah Maalik Isa Naanak
Zorashtra Mahaveer Buddha Naam Bolo
Ye Naam Saare Hain Jeevan Sahare
Paramanandke Kholte Hain Dvaare
Jo Naam Chaaho Vo Naam Bolo
Prem Sey Bolo Bhav Sey Bolo


(Sing (chant) the names of Govinda, Gopala, Ram and Hari; the names of Allah, Jesus, Nanak (Guru Nanak), Zoraster, Buddha and Mahaveera; all these names are the props in life. Open the wall (doors) to supreme Bliss; whatever name you like, call upon that name, but chant it with Love and Devotion)

6 comments:

said...

சிறில்,

மிக்க நன்றி. என் காதில் இப்பாடல். என் கண்ணெதிரில் உங்களின் மொழிப்பெயற்ப்பு.

said...

சிறில்,

ஒரு சிறு திருத்தம். சௌராஷ்ட்ரர் என்பது தமிழ் நாட்டில் வாழும் ஒரு சமூகம். நான் அந்த சமூகத்தைச் சார்ந்தவன். ஜொரஷ்டர் என்பது ஒரு மதம். நம் நாட்டில் பார்ஸிகள் இந்த மதத்தைப் பின்பற்றுபவர்கள் உ.ம் டாட்டா, கோத்ரேஜ், போன்றவர்கள்

said...

கோவிந்தனென்றுசொல்,
கோபலனென்றுசொல்
ராமனென்றோ ஹரியென்றோ சொல்,
அல்லா இயேசு நானக்
ஜொரஷ்டர் புத்தர் மேலும்
மகாவீரரென்ற்றுசொல்
எந்தப் பெயரானாலும் இவை
வாழ்வின் அடித்தளம்
பேரின்பமடைய சுவர்களை தகர்
எந்தப் பெயர் வேண்டுமோ
அந்தப்பெயர் சொல்
ஆனால்
அன்போடு சொல் பக்தியோடு சொல்..


தமிழாக்கம்.

பாடலும் வரிகளும் அருமை

தவரை திருத்திவிட்டேன் சிவா...
இந்த மாதிரி விஷயங்களை தவறாய் செய்யக்கூடாது.

said...

உங்கள் பதிவைப் பார்த்து விட்டு பதில் எழுதலாம் என்று நினைக்கும் போது சிறில் அழகாக தமிழாக்கம் செய்து விட்டார். அவர் தமிழாக்கத்தைப் பார்த்துவிட்டு சௌராஷ்ட்ரும் பார்ஸிகளாகிய ஜோராஷ்ட்ரர்களும் வெவ்வேறு என்று சொல்லுவதற்குள் நீங்கள் சொல்லிவிட்டீர்கள்; அதனை அவரும் திருத்திவிட்டார்.

எனக்கு சமஸ்கிருதம் தெரிந்தாலும் இந்தி அவ்வளவாகத் தெரியாது. அதனால் நீங்கள் இந்தப் பாடலைத் தமிழாக்கம் செய்யச் சொன்னவுடன் யோசித்தேன். நல்ல வேளை சிறில் செய்து விட்டார். இதனைப் பார்த்து என் 'சாயிபஜன்' பதிவிலும் இந்தப் பாடலுக்குப் பொருள் எழுதுகிறேன். கூடிய சீக்கிரத்தில் :-)

said...

சிறில்,

அழகான தமிழாக்கம்


Paramanandke Kholte Hain Dvaare
என்பதன் பொருள்
""அவை பேரின்பத்தின் வாசல்களை (கதவுகளை)த் திறக்கின்றன "

என நினைக்கிறேன். ஆனால் நீங்கள் கூறும்

// பேரின்பமடைய சுவர்களை தகர் //

என்பதும் மிகமிக பொருந்தும். சுவர்களைத் தகர்க்காமல் பரமானந்தம் அடைவது எப்படி ?

said...

குமரன்..எனக்கும் ஹிந்தி அவ்வளவா தெரியாது.. சிவா ஆங்கில பெயர்ப்பு பதித்திருந்தார்.