Thursday, February 16, 2006
ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்.......ராத்திரி வானத்தில் கோலமிடும்....
இயற்க்கையின் அற்புத விளையாட்டுகளில் இதுவும் ஒன்று. அதை பற்றி என்னுடைய அனுபவமும் சிறு விஞ்ஞான விளக்கமும்.
நான் கனாடா வந்தப் புதிதில் கால்கரிக்கு வடேக்கே 700 கி.மீ தொலைவில் உள்ள் பொர்ட் மக்முர்ரே என்ற ஊரில் உள்ள எண்ணைச் சுத்திகரிப்ப்பு தொழிற்ச்சாலையில் பணிப் புரிந்து வந்தேன். காலை 5.30 கம்பெனி பஸ் வரும். சுமார் ஒரு மணி நேரப் பயணத்தில் தொழிற்ச்சாலைக்கு சென்று வ்விடலாம். குளிர் காலத்தில் சூரிய உதயம் காலை 9 மணிக்குத்தான். காலை 5.30 மணிக்கு வானம் கும்மிருட்டாக இருக்கும். குளிருன் கடுமையாக இருக்கும். நான் - 50 டிகிரி C வரை பார்திருக்கேன். ஒரு குளிர் கால காலையில் பஸ்ஸில் ட்ரைவர்க்கு அருகாமையில் அமர்ந்து பயணித்தப் போது அந்த அற்புதக்காட்சியைக் கண்டேன்.
திடீரென்று அடிவானத்தில் வார்த்தைகளால் விவரிக்க முடியாத வர்ணங்கள் தோன்றி சிறிது நடனம் ஆடி மறைந்தது. நான் கண்டது கனவா என்று ஆச்சரியம். பஸ்ஸின் பின் சீட்டை திரும்பி பார்த்தால் எல்லோருன் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். நானும் துணிந்து ட்ரைவரிடம் அந்த வர்ணகோலத்தைப் பார்தீர்களா? என கேட்டேன். அவரும் "ஓ அருமையான காட்சி....நீங்க ஊருக்கு புதுசா? இதை நார்த்ன் லைட்ஸ் அல்லது அரோரா போரீயாலிஸ் என்று அழைப்பார்கள்" என்று கூறி கவனமாக ஓட்ட ஆரம்பித்தார்.
ஆபிஸ் சென்றதும் "னார்த்ன் லைட்ஸ் அல்லது அரோரா போரீயாலிஸ்" என்று கூகுளினேன். நிறைய விவரங்கள் கிடைத்தன. அதில் கிடைத்த படம் ஒன்று மேலே உள்ளது.
கூகுளில் நான் படித்த விஞ்ஞான விளக்கம் இதோ:
இந்த நிகழ்வு சூரியனிடமிருந்து உருவாகிறது. சூரியனில் அன்றாடம் நடக்கும் வெடிப்பில் சில சூரியத் துகள்கள் சிதறி நொடிக்கு 300 முதல் 1000 கி.மீ வேகத்தில் பூமீயை நோக்கி பயணிக்கும். அத்துகள்கள் பூமியை நெருங்கும் போது , பூமியின் காந்த மண்டலம், இத்துகள்களை பூமியின் துருவங்களை நோக்கி திருப்பிவிடும். அவை பூமியின் வாயு மண்டலத்தில் நுழையும் பொது கொழுந்து விட்டு எரியும். அந்த ஒளித் துகள்கள் தான் அந்த அற்புத வர்ண ஜாலத்திற்க்கு காரணம்.
இந்த இயற்க்கையின் வண்ணக்கோலத்தை நார்வே, சுவீடன், கிரீன்லேண்ட், அலாஸ்க்கா, வட கனடா, வட ரஸ்யாவில் காணலாம்
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
Welcome to tamilblogs world Siva!
Really appreciate the power of freedom expressed through and through in your katturaigal..
Waiting to see more !!
Naresh
தமிழன் அவர்களுக்கும், நரேஷ் அவர்க்ளுக்கும் நன்றி --- கால்கரி சிவா
சிவா அண்ணா. உங்க ஊரளவிற்கு இல்லாட்டியும் இங்க மினசோட்டாவுலயும் நான் நார்த்தர்ன் லைட்ஸ் பாத்திருக்கேன். பார்த்த அளவிற்கு அருமையா இருந்தது. உங்க ஊருக்கு வந்தா இன்னும் அருமையா இருக்கும்ன்னு நினைக்கிறேன்.
சிவா,
மிக நன்றாக உள்ளது உங்களின் இக்கட்டுரை. ஆனாலும் உங்கள் உடன்பிறப்பிற்கு ஒரு சிறிய குறை. உங்களின் நடையில் ஒரு பி.பி.எம். சுஜாதா தெரிகிறார். அவரை குறைத்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து.
அன்பு தம்பி,
சரவணன்
அன்புத் தம்பி சரவணா,
பி பி ம் என்றால் என்ன? சுஜாதாதான் எழுத வேண்டும் என்றால் நிறையப் படிக்கவேண்டும் என்று கூறினார். அவருடையப் புத்தகங்களை நிறையப் படித்துவிட்டேன் போலிருக்கிறது. இனிமேல் அவர் படிக்கும் புத்தகங்களைப் படிக்கிறேன்.
கால்கரி சிவா
About this post in today's dinamalar...
http://www.dinamalar.com/2006feb22/flash.asp
About this in today's thenkoodu...
http://www.thenkoodu.com
இக்கட்டுரை இன்றைய தினமலரில் வெளியாகியுள்ளது. வாழ்த்துக்கள்!
தினமலர்
(இதன் நகல்:
http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html
நன்றி மாயவரத்தான் அவர்களே
நன்றி சிபி
Post a Comment