Wednesday, February 15, 2006


தலைக்கு 400 டாலர்

நான் 1978 க்கு பிறகு தமிழில் எழுதுவதை நிறுதிவிட்டேன்.எனனாடா பெரிய எழுத்தாளான் மாதிரி பேசுறான்னு பார்க்க்ரிங்க்காளா.... 1978லே பி யு சி படிக்கும் போது தமிழ் பரிட்சையில் கட்டுரை எழுதினேன் அப்புறம் எஞ்ஜினீயரிங் காலேஜ்லெ சேர்ந்து பீட்டர் ஆயிட்டேன். அதுக்கப்புரம் நட்சதிர பதிவாளர் சிவா கொடுத்த தைரியத்தில் இந்தக் கட்டுரை:
உலகில் வாழ்வதற்க்கு 3 வது சிறந்த நகரம் கால்கரி. முதல் நகரம் ஜுரீச், இரண்டாவது வான்கூவர்.
கால்கரி நகரம் கனாடாவில் உள்ள ஆல்பெர்டா மாநிலத்தின் வணிகத் தலைநகரம் ஆகும். அடியேன் கடந்த 2 வருடங்களாக வாழ்வது இங்குதான்.
கால்கரி டொரண்டோவிற்கு மேற்கே 3 மணி விமான பயண தூரத்திலும் அல்லது வான்கூவர்லிரிந்து கிழக்கே 1 மணி விமான பயண தூரத்திலும் உள்ளது. தெற்க்கே 3 மணி நேரம் காரில் பயணித்தால் அமெரிக்காவின் மாண்டெனா மாநிலத்தை அடைந்து விடலாம்
ஆல்பெர்டா மாநிலதில் உலகிலேயெ சவூதி அரேபியாவிற்க்கு அடுத்து அதிக அளவில் எண்ணை உள்ளது. இங்கு எண்ணை மணலுடன் கலந்து உள்ளதால் அதைப் பிரித்தெடுக்க அதிக செலவகும். சுமார் ஒரு பீப்பாய்க்கு 19 டாலர் செலவாகும். இப்போது எண்ணையின் விலை பீப்பாய்க்கு சுமர் 59 டாலர் அல்லது அத்ற்க்கும் மேல். ஆகையால் நிறைய புராஜெட்டுகள் வருகின்றன அதனால் என்னை பொன்ற பொறியாளர்களுக்கு நிறைய வேலைக் கிடைக்கிறது. நானும் அரபு நாட்டிலிருந்து "விடுதலை.....விடுதலை" என்று ஓடி வந்து விட்டேன். புஷ் இன்னும் 1 வருடத்தில் ஆல்பெர்ட்டாவை ஆக்கிரமிப்பு செய்வார் என கனேடிய மற்றும் அமெரிக்கப் பத்திரிக்கைகள் கார்ட்டூன் வரைகின்றன. வரும் வருடங்களில் ஆல்பெர்ட்டாவைப் பற்றி நிரைய செய்திகள் வரும். சௌதி சேக்குகள் இங்குள்ள பெரிய பெரிய ஹோட்டல்களை வாங்க ஆரம்பித்து விட்டார்கள். சீன மற்றும் நமது இந்திய அரசாங்கங்களும் எண்ணை மணலை வாங்க போட்டி போடுகின்றன...........
அது சரி தலைப்புக்கும் இந்தக் கட்டுரைக்கும் என்னயா சம்பந்தம்?
வெய்ட் எ மினிட் பார் பைவ் மினிட்ஸ்.......
2005 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் ஆல்பெர்ட்டா சுமார் 2 பில்லியன் டாலர்களை மிச்சம் பிடித்து விட்ட்து. அதை என்ன செய்வது என்று தெரியாமல் மக்களுக்கேத் தலைக்கு 400 டாலராக திருப்பித் தந்துவிட்டனர் இந்த ஊர் அப்பாவி அரசியல்வாதிகள்.........
(நம்ம ஊர் கரை வேஷ்டிகள் இந்த செய்தியை வெளியிட்டு நம் மக்களை உசுப்பி விடவேண்டாம் என தத்தம் டீவி சானல்களுக்கும் பத்திரிக்கைகளுக்கு ஆணையிட்டு விட்டு பாரில் "இந்த வெள்ளைக்காரனுக்கு அறிவே இல்லெயா.... எவனாவது கஷ்ட்டப் பட்டு வசூலிச்ச வரி பணத்தே மக்களுக்கே திருப்பிக் கொடுப்பாங்களா? செம மாய்க்காங்களா இருப்பாங்க போலிருக்கு" என என் ஆர் ஐ ரேஞ்சுக்குப் புலம்பிக் கொண்டிருந்தனர்)

4 comments:

said...

வாங்க வாங்க சிவாண்ணா. உங்க அனுபவங்களை எல்லாம் பகிர்ந்துக்கோங்க.

நட்சத்திரப் பதிவாளர் சிவா கொடுத்த தைரியமா? சிவா நம்ம க்ளோஸ் ப்ரண்டாச்சே. என்னை வலைப்பதிக்கக் கூட்டிக்கிட்டு வந்ததே அவர் தான்.

said...

குமரன் தம்பி,

தேஜஸ்வினிக்கு என் அன்பு முத்கங்கள். என் மகன் அந்த வயதில் "சுப்ரமண்யம்....சுப்ரமண்யம்..." என பாடிக் கொண்டிருந்தான். 2 வருடத்திற்க்கு முன் பஜகோவிந்தம் பாடி பரிசுகள் வாங்கியுள்ளான். சற்று முன் அவனிடம் இந்த ப்ளாக்கைப் பற்றி சொல்லிக்கொண்டிருந்தேன். அவனுக்கு தமிழ் படிக்கத் தெரியாது ஆனால் படித்துக் காட்டினால் புரிந்துக் கொள்வான். என்னுடையப் பதிவில் இருந்த தவறைச் சுட்டிக் காட்டீனான். நான் மேற்க்கோள் காட்டியிருந்த கருத்து அவனுடைய சொந்த கருத்தாம் நான் கார்ல் சேகன் என்றுக் கூறியிருந்தது தவறு.

அவனும் அவனுடைய நண்பர்களும் சேர்ந்து 1 2 3 என்றக் கோட்பாட்டை உருவாக்குகிறார்களாம். அதை அவன் முடிதப் பிறகு உஙகளிடம் பகிர்ந்து கொள்கிரேன்

said...

//
ெய்ட் எ மினிட் பார் பைவ் மினிட்ஸ்.......
//

எஸ்.வீ சேகர் நாடகம் தானே...!

உங்கள் பதிவுகள் படித்துக் கொண்டிருந்தேன்...எப்படியோ இந்தப் பழய பதிவுக்கு வந்துவிட்டேன்...

வஜ்ரா ஷங்கர்.

said...

ஷங்கர், என்னுடைய அபிமான ஆசிரியர் திரு சோமயாஜுலு அவர்களின் உபயம்.

இவர் எனக்கு எம் ஐ டியில் பாடம் கற்றுக் கொடுத்தார். பின்னாளின் நானும் இவரும் இருவேறு தொழிற்சாலைகளில் ஒன்றாக பணிபுரிந்திருக்கிறோம்.

இந்த தவறை பலமுறை சுட்டிக் காட்டினாலும் கோப படமாட்டார்