அதே போல் முட்டை. அவித்த முட்டை, முட்டை பால், முட்டை தோசை, முட்டை
குழம்பு, முட்டை குருமா, உடைத்து விட்ட முட்டை குழம்பு, முட்டை ப்ரைட் ரைஸ், முட்டை ப்ரியாணி, முட்டை ப்ளேன் ஆம்லெட், முட்டை மசாலா அம்லெட், முட்டை புல் ஃப்ரை முட்டை ஆப்பாயில் (புல்ஸ் ஐ) முட்டை ஆப்பாயில் பொரட்டி போட்டது (ஓவர் ஈஸி), முட்டை போட்ட ப்ரென்ச் வெண்ணிலா ஐஸ்கிரீம், முட்டை பொடிமாஸ், முட்டை பஜ்ஜி, சப்பாதியில் சுற்றிய முட்டை பொடிமாஸ், முட்டை பரோட்டா இப்படி முட்டையை என்ன ஃபார்மில் கொடுத்தாலும் சாப்பிட்டு கொண்டிருந்தேன்.
இப்படியாக தேங்காயுடனும் முட்டையுடனும் காலம் இனிமையாக கடந்து கொண்டிருந்த போது டாக்டர் செக்கப்பிற்கு போன என் தந்தையார் இருண்ட முகத்துடன் வந்தார். அவருக்கு இரத்தத்தில் கொழுப்பாம், அது பரம்ப்பரை வியாதியாம் அதனால் அவரின் சந்ததியே தேங்காய் முட்டை ஆட்டுக்கறி மற்றும் இதர கொழுப்பு பதார்த்தங்கள் சாப்பாடு கூடாது அதிலும் முட்டையும் தேங்காயும் கூடவே கூடாது என்று சொல்லிவிட்டார். எங்கள் வீட்டில் தலைக்கு தடவகூட தேங்காய் எண்ணைக்கு தடை போட்டுவிட்டார்கள். தேங்காயும் முட்டையும் இல்லா வாழ்கை இருண்டுவிட்டது.
போனல் போகிறதென்று வாரம் இரண்டு முட்டைக்கு மட்டும் டாக்டர் பெர்மிட் தந்துவிட்டார். முட்டை சாப்பிடும் ஞாயிறு காலைக்கு சமீப காலம் வரை தவமிருந்தது உண்டு.
சோ...இவ்வாறாக கால் நூற்றாண்டு கடந்து விட்டது. இப்ப என்னங்கிறீங்க..
சமீபகாலமாக கனடா டிவியிலும் இணையத்திலும் முட்டையை சாப்பிடுங்கள். அதில் நல்ல கொழுப்பு இருக்கிறது, புரதம் இருக்கிறது அது இருக்கிறது இது இருக்கிறது என கூவி கூவி முட்டையை பரிமாறுகிறார்கள் பார்க்க
http://ca.shine.yahoo.com/healthy-living/great-reasons-to-love-eggs-blog-764-daniela-nahas.html
நேற்றைக்கு வலையை மேய்ந்த போது இந்த சுட்டியில் தடுக்க நேர்ந்தது.
http://www.nytimes.com/2011/03/02/dining/02Appe.html?pagewanted=1&_r=1
இவிங்க என்ன சொல்றாங்கன்னா தேங்கா ஒரு சூப்பர் சாப்பாடு, இது இதயத்திற்கு நல்லது தலைமுடிக்கு நல்லது சருமத்திற்கு நல்லது அது இதுன்னு உசுப்பேத்தறங்க
நானும் இந்த கார்ப்பரேட் ஆசாமிங்க அடங்கவே மாட்டாங்க எவனோ ஒருத்தன் ஒரு மெகா கோழி பண்ணையோ இல்லேன்னா சவுத் அமெரிக்காவிலே ஒரு மெகா தென்னை தோட்டத்தை வாங்கியிருப்பான் அவன் பிஸினஸ் அதிகமாக்க கெளப்பி விடாறன் என நினைச்சு அடங்கிட்டேன். நமக்கு தான் தேங்காயும் முட்டையும் சாப்பிடாமே நாக்கு செத்து போயிருச்சே.
நேற்றைக்கு ஒரு சயிண்டிபிக் அமெரிக்கன் பத்திரிக்கையை மேயும் போது அதில் பத்தாண்டுகளுக்கு முன்னால் உணவுகளைப் பற்றிய அபிப்ராயங்களை விஞ்ஞானிகள் இப்போது மாற்றிக் கொள்கிறார்கள் என இருந்தது.
ஆஹா மீண்டும் முட்டையும் தேங்காயும் சாப்பிடலாம் என முடிவெடுத்து என ஒரு ட்ரே முட்டையும், இரண்டு தேங்காயும், ஒரு கேன் தேங்காய் எண்ணையும், ஒரு கார்ட்டன் இந்த இளநீர் தண்ணியும் வாங்க கிளம்பிட்டேன்
கால் நூற்றாண்டை வீணடித்து விட்டேன் முட்டையும் தேங்காயும் இல்லாமல் :)

4 comments:
அண்ணா,
நானும் இந்த சுட்டியை அம்மிணி கிட்டக் காமிச்சேன். அவங்க, இந்த சயண்டிஸ்ட் எல்லாம் மாத்தி மாத்தி சொல்லுவாங்க. நமக்குத் தெரியாதா. நோ தேங்காய் மீன்ஸ் நோ தேங்காய்ன்னு சொல்லிட்டாங்க.
ஆனா பாருங்க. இளநீரில் பிரச்சனையே கிடையாது. எப்பவுமே. அதனால அது மட்டும் கார்ட்டன் கார்ட்டனா வாங்கி ஓடும் வீட்டில்!
நம்ம சைட் பக்கமெல்லாம் உங்க காத்து வீசாதோ?
இருக்கட்டும்.இருக்கட்டும்!
நான் சுத்த சைவம் - முட்டை சாப்பிடுவதில்லை, அதன் வாசனையும் பிடிக்காது. என் அம்மாவின் குடும்பம் மலையாளிகள் என்பதால், தேங்காய் எண்ணையில் புகுந்து விளையாடுவோம். கொலஸ்ட்ரால், ட்ரை க்ளிசெரிட் இது வரையில் இல்லை.
அருமை
Post a Comment