என்னடா அமெரிக்காவில் வெள்ளைகாரியை செட்டப் செய்துவிட்டானா இந்த பாழாய் போன கால்கரி என நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல..
இதோ என் ஜெனிபர்.......
இந்த ஜிபிஎஸ் தாங்க என் வழிகாட்டி. இதை காரில் பொறுத்தி ஏர்போர்ட்டிலிருந்து எந்த இடியாப்ப மேம்பாலத்தில் ஏறுவது என்ற கவலை வேண்டாம். வலது புறத்தில் 4 மைல் போய் திரும்பு, இடது புறம் ஆறாவது மைலில் இரண்டாம் தெருவில் திரும்பு சிறிது தூரம் போ வலபுறத்தில் பார் உன் ஓட்டல் என வழி சொல்லும்.
சரி பசியாக இருக்கிறதா ஜெனிபர் 5 மைல் சுற்றுவட்டாரத்தில் என்னன்ன ஓட்டல்கள் உள்ளன என்றால் ஜெனிபர் கபால் எனக் காட்டிவிடுவாள். இந்திய ஓட்டல்கள், இந்திய பலசரக்கு கடைகள், பெட்ரோ பங்குகள், ஏடிஎம் கள், சாப்பிங் சென்டர்கள், ஆஸ்பத்திரி, பார்க்கிங்கள் என சகலத்தையும் காட்டிவிடுவாள். இந்த விலாசத்திற்கு போக எந்த வழியில் போனால் சீக்கிரம் போகலாம், எந்த வழி மிக கம்மியான தூரம் என சொல்லுவாள். எந்த ரோட்டில் பள்ளம் தோண்டியிருக்கிறார்கள், எந்த வழியில் ட்ராபிக் அதிகம் என்பதையும் சொல்லுவாள், எந்த திசையில் பயணிக்கிறோம் எத்தனை வேகத்தில் பயணிக்கிறோம், எத்தனை மணிக்கு போய் சேருவோம் என்பதையும் சொல்லுவாள். எம்பி3 பாடல்களை இசைப்பாள், ப்ளூடூட்ல் உங்கள் போனை எடுப்பாள். மிக பெரிய நகரங்களில் கார் எந்த பார்க்கிங்கில் உள்ளது என்பதை ஞாபகம் வைத்துக் கொள்வாள்.
மொத்தத்தில் உற்ற தோழி இந்த ஜெனிபர்...
இந்த ஜிபிஎஸ் பிரயாணிகளுக்கு ஒரு வரப்ரசாதம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில்.
என்னங்க இந்த கிறிஸ்துமஸ் பர்சேஸ் ஜிபிஎஸ் தானே
6 comments:
ஜெனிஃபர் தமிழில் கதைக்குமா ?
இதே போன்ற ஜி.பி.எஸ் நேவிகேஷன் சிஸ்டம்கள் பல மொழிகளில் கதைப்பதைப் பார்த்திருக்கிறேன்.
ஐயா,
தங்கள் தகவலுக்கு மிக்க நன்றி. இந்த மாதம் இந்தியாவிலும் ஒரு நிறுவனம் இதை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உபயோகத்தை நான் வெளிநாட்டில் நன்று பார்த்திருக்கிறேன்.
ஆனால், இது எப்படி இயங்குகிறது? இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ள மாடலில் ஒரு டேடா கார்ட் தருகிறார்கள். அதில் எல்லா மேப்பும் இருப்பதாக சொல்கிறார்கள். வெளிநாட்டிலும் இப்படித்தானா? அப்படியானால், இதை எப்படி அப்டேட் செய்வார்கள். இங்கு திடீர் திடீரென்று மாற்றும் (தடை செய்யும்) ரோட் நிலைமைகளை எப்படி இதில் ஏற்றுவார்கள். கொஞ்சம் விளக்கவும்.
நன்றி
ஜயராமன்
வஜ்ரா, என்னிடம் உள்ள மாடல் ஆங்கிலம், ப்ரெஞ்ச், ஸ்பானிஷ் பேசுகிறது. தமிழில் மார்கெட் இருந்தால் அவுட் சோர்ஸ் செய்து ப்ரோக்ராம் எழுதிவிடுவார்கள்
ஜயராமன் சார், இங்கே வட அமெரிக்கா மேப்பை லோட் செய்து தருகிறார்கள். அப்டேட்களை யுஎஸ்பி போர்ட் மூலம் இணையத்தில் இருந்து இறக்கி கொள்ளலாம்.
ட்ராபிக் கம்யூட்டர்கள் ட்ராபிக் மற்றும் ஆக்ஸிடெண்ட்களை உடனடியாக சாட்டிலைட்களுக்க்கு அப்லோட் ஆகிறது. அதிலிருந்து ஜிபிஎஸ் க்கு சிக்னல் வருகிறது.
இங்கே ரோட் வேலை ஆரம்பிப்பதற்கு பலவாரங்களுக்கு முன்பே பத்திரிகைகள், ரேடியோ, டிவி, இணையம் மற்றும் ரோட்டோரோ போர்டில் அறிவிக்கிறார்கள். அதுவும் அந்த வொர்க் ஆர்டார் கம்ய்யூட்டர்கள் மூலம் சாடிலைட்களுக்கு அப்லோட் ஆகிறது.
இந்தியாவில் பாம்பே, சென்னை, கல்கட்டா நகரங்களில் மிக அவசியம்
இப்போ எல்லாம் இங்க இது இல்லாம வெளிய போகறது இல்லை. அதுவும் காரில் பில்ட் இன் ஜிபிஸ் வேற இருக்கு. ஆனா ரோட்டைப் பார்க்காம இது சொல்வதைக் கேட்டு நடக்கும் விபத்துகள் அதிகமாகிக்கிட்டே வருதாம்!! என்னத்த சொல்ல!
கொத்ஸ், பில்ட்-இன் ஜிபிஎஸ் களைவிட இது விலை கொள்ளை மலிவு. மேலும் ஒரு சௌகரியம் என்னவென்றால், நீங்கள் மாபெரும் நகரங்களான நியூயார்க், டொரோண்டோ டவுன் போகிறீர்கள். அங்கே பார்க்கிங் ஒரு படுபயங்கரமான சந்தில் இருக்கும். அங்கே காரை நிறுத்திவிட்டு, அந்த காரின் லொகேஷனை இந்த ஜிபிஎஸ் மெமரியில் போட்டுவிடலாம். பிறகு ஜிபிஎஸ் எடுத்து பாக்கெட்டில் போட்டுக் கொண்டு நடக்கலாம். இதில் கார், மோட்டர் சைக்கிள், பாதாசாரி என் மூன்று மோடுகளிலும் இயங்குகிறது. வேலை முடித்தவுடன், கார் எங்கே என தலை சொரிய தேவையில்லை. ஜெனிபரை தடவினால் சொல்லிவிடுவாள்.
அதுசரி, என்னதான் மெஷின் சொன்னாலும் நாம தானே உஷாரா இருக்கணும்
Post a Comment