Sunday, December 02, 2007

புஷ் பேட்டையில் கால்கரி

தந்தைக்கோ வயது 83. போரில் வெற்றிவாகை சூடி எதிரியை ஓட ஓட விரட்டியவர். இந்த வயதிலும் வானத்திலிருந்து பாராசூட்டில் குதிப்பதென்ன? ஓடியாடி வேலைப் பார்பதென்ன பேட்டி அளிப்பதென்ன..தனயனோ... அஞ்சா நெஞ்சன் எதிரிகளின் சிம்ம சொப்பனம்...எதிரிகளை வேட்டையாடி துவம்சம் செய்தவர். இவ்வீரமிக்க தலைவர்களின் ஊரான ஹூஸ்டனில் கால்கரியின் மாபெரும் பதிவாளாராகிய நான் வந்ததில் பெருமை அடைகிறேன்.

அடுத்த ஒரு வருடம் இங்குதான் வாழ்க்கை. என்னை வரவேற்க பெரிய புஷ் ஏர்போர்ட்டில் காத்திருந்தார் :)நீங்க ஹூஸ்டனுக்கு வந்தாலும் உங்களையும் வரவேற்பார். பெரிய புஷ்ஷின் சிலை இங்கே உள்ளது.


கால்கரியில் -25 டிகிரி சி இங்கே +25 அருமையாக உள்ளது. அருமை..


பல மாதங்களாக வலைப்பதிவில் எழுத முடியவில்லை. அதனால் யாருக்கும் நஷ்டமில்லை யாரும் வருந்தவும் இல்லை. சில விஷயங்கள் என்னை வருத்தின.


கடந்த வருடங்களில் நான் எழுதிய அரேபிய அனுபவங்களில் நம் இந்திய உழைப்பாளிகளின் அவல நிலையை சொல்லியிருந்தேன். அதற்கு காரணமான அரபு நாட்டினரை ஏசியும் இருந்தேன். அவர்களின் அடிமை காலசாரத்தை சாடியுமிருந்தேன். அதற்கு பல முனை தாக்குதல் எனக்கு இணைய இஸ்லாமிஸ்ட்களிடமிருந்து வந்தன. உழைப்பவரின் வேர்வை தரையில் சிந்துமுன் ஊதியம் வழங்கும் உன்னத குடியினர் அரேபியர் என தங்களது எஜமானரை தாங்கியவரும் உண்டு.


ஆனால் நடப்பது என்ன?


தினம் தினம் இந்தியர்/தமிழர் இவர்களின் துயர செய்திகள், தற்கொலை செய்திகள், சம்பளம் தரவில்லை, உழைக்கும் இடத்தில் சேப்டி இல்லை. தொழிலாளர் போராட்டம் என செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்திய அரசாங்கத்திற்கோ அரபு அரசாங்களை கண்டிக்கும் மன தைரியமில்லை.


அரபுகளை வக்கலாத்து வாங்கியவர்கள் காணவில்லை. உழைப்பாளிகள் என்றதும் ஓடிவரும் சமூகநீதி காவலர்கள் எங்கே போனார்கள்.. ஐயா வாங்கய்யா எல்லாரும் சேர்ந்து கண்டிக்கலாம் அரபு அடிமை கலாசாரத்தை எதிர்க்கலாம்.அடுத்து என்னை பாதிக்க வைத்தது. மலேஷிய இந்துகளின் போராட்டம். அவர்கள் இந்துகள் அல்ல தமிழர்கள் என சில வெண்தாடி வேஸ்ட்டின் சிஷ்ய கோடிகள் கூக்குரல் இடுகின்றனர்.


அமைதி மார்க்கத்தினரின் வாடிக்கை இதுதான். முதலில் சமூதாயத்தின் கீழ்தட்டில் இருக்கும் மக்களை அடிமை படுத்துவர்கள். மேல்தட்டில் உள்ள அறிவாளிகளான இந்துகளை பகைத்துக் கொள்ளமாட்டார்கள். ஏனென்றால் அவர்க்ளின் தயவு மலேஷியற்கு தேவை. பிறகு மெதுவாக மொத்தமாக எல்லாரையும் அரபு அடிமையாக்குவர். இது சரித்திரம் சொல்லும் உண்மை.


அங்கே மைனாரிட்டிகளின் வழிபாடு தளங்கள் தினம் தினம் இடிக்கபடுகின்றன. மலேஷியாவில் நடப்பது மைனாரிட்டி அடக்குமுறை. இதை இந்திய மைனாரிட்டிகள் உட்பட அனைவரும் எதிர்க்க வேண்டும்.


புஷ்பேட்டையிலிருந்து கால்கரி

3 comments:

said...

ரொம்ப நாள் கழிச்சு பதிவு பக்கம் வந்திருக்கீங்க! வெல்கம் பேக்!

அரேபிய அனுபவங்கள் ரேஞ்சுக்கு சூடான விவாதங்கள் அடுத்த ரவுண்ட் எதிர் பார்க்கலாமா?

said...

ஹரி,

அந்த அளவிற்கு சூடான மேட்டர் இல்லை. மேலும் அமெரிக்காவில் கிழக்கு கடற்கரையிலிருந்து மேற்கு கடற்கரை வரை ஊர் சுற்ற இருப்பதால் சப்பை மேட்டர்கள்தான் இப்போதைக்கு.

குவைத் எப்படி?

said...

சார் எனக்கு ஒரு சந்தேகம்
கேளுப்பா
ராத்திரி பன்னிரண்டு மணி ஆயிடுச்சே கேக்கலாமா?
எத்தனை மணி ஆனா என்னப்பா...
தொந்தரவு இல்லையே
அதெல்லாம் இல்லை சும்மா கேளு...
நீங்க கரிகாலனுக்குக் கொள்ளுப் பேரனா ?எள்ளுப் பேரனா?சார்?.......