Monday, June 04, 2007

எண்ணை வற்றிவிடுமா?

இதோ வந்துவிட்டேன் மீண்டும் எண்ணை மேல் அப்ஷசன் கொண்டுள்ள நான். இன்னும் 40 வருடம் தான், இன்னும் 100 வருடம்தான் பிறகு எண்ணை வற்றிவிடும் என சில பேர் பய முறுத்திக் கொண்டே இருப்பார்கள். மேலும் சிலர் இப்போது எண்ணை உற்பத்தி அதி உயரத்தில் இருக்கிறது இனிமேல் எண்ணை உற்பத்தி இறங்கியாக வேண்டும். அவ்வாறு உற்பத்தி இறங்கினால் எண்ணை விலை பீப்பாய்க்கு $150 க்கு மேல் உயரும். உலக பொருளாதாரம் சீரழியும் என பயமுறுத்துவார்கள். எப்படியிருந்தாலும் அரபு நாடுகள் பணக்காரர்களாக இருப்பார்கள். அதை வைத்துக் கொண்டு உலகை ஆளுவார்கள் என சில இஸ்லாமிஸ்டுகள் கனவுலகில் மிதப்பார்கள்.

ஆனால் மேற்குலகில் மாற்று ஏற்பாடுகளில் மும்முரமாக இறங்கியுள்ளார்கள். எலட்ரிக் கார்கள், ஹைட்ரஜன் கார்கள், பயோ டீசல் என ஆரவாரத்துடன் ஆராய்சிகள் செய்பவர்கள் ஒரு பக்கம். அமைதியாக நிலத்தடியில் இருக்கும் எண்ணையை தேடி அலைபவர்கள் இன்னொரு பக்கம்.

அமெரிக்காவின் அலாஸ்காவிலும், ரஸ்யாவின் சைபீரியாவிலும், கனடாவின் வட மாநிலங்களிலும் உள்ள எண்ணைவளம் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு போதுமானது, அந்த உறைபனியிலிருந்து எண்ணை எடுக்கும் தொழில் நுட்பம் கடந்த பத்து ஆண்டுகளில் நேர்த்தி செய்யப் பட்டுவிட்டன. உலக கூட்டு களவாணிகளான ஓபெக் நாடுகளின் பிடியிலிருந்து உலக எண்ணை விலை இன்னும் சில ஆண்டுகளில் விடுதலை பெறும். பிறகு இக்கூட்டு களவாணிகள் அமெரிக்க/சீன/இந்திய நாடுகளின் நுகர்வை நம்ப வேண்டியிருக்கும்.

கடந்த முப்பது வருடங்களாக கிடப்பில் போட பட்டிருந்த ஒரு பகுதியை அமெரிக்க கம்பெனிகள் மீண்டும் கையில் எடுத்துக் கொண்டுள்ளது. அமெரிக்காவின் வடமேற்கில் இருக்கும் ராக்கி மலைகள் உள்ள கொலராடோவும் யுடாவும் (உச்சரிப்பு சரியா?) தான் அந்த பகுதி. ராக்கி மலைகளின் அடியில் உள்ள சுண்ணாம்பு கற்களில் எண்ணை உள்ளது. இந்த எண்ணையை எடுக்க அமெரிக்க கம்பெனிகள் கடந்த சில ஆண்டுகளாக பற்பல ஆராய்ச்சிகளை மேற்க் கொண்டுள்ளன. இந்த கற்களை சூடாக்கி எண்ணையை எடுப்பதா, இல்லை வேதிப் பொருட்களைக் கொண்டு எண்ணையை எடுப்பதா என சில ஆராய்ச்சிகள் நடக்கின்றன. 2005ல் இங்கிருந்து எண்ணை எடுக்க ஆகும் செலவு பீப்பாய்க்கு $70 என இருந்தது. இதை எப்படியும் $30 க்கு கொண்டு வரவேண்டும் என்ற நோக்கில் ஆராய்ச்சிகள் நடக்கின்றன. இதில் ஓரளவிற்கு ஷெல் (Shell) வெற்றியும் பெற்றுவிட்டது. ஆராய்ச்சி சாலையில் பெற்ற வெற்றி வணிக படுத்த இன்னும் 5 முதல் பத்து வருடங்கள் ஆகும். பிறகு அமெரிக்கா எண்ணை இறக்குமதியை அடியோடு நிறுத்தி எண்ணை ஏற்றுமதியை ஆரம்பிக்கும் !!!!.

அது சரி ஏன் தீடிரென்று இந்த பதிவென்று பார்ர்கிறீர்களா?

இந்த இரு மாநிலங்களில் உள்ள எண்ணையின் அளவு, கூட்டுகளவாணிகளான ஓபெக் நாடுகளின் மொத்த எண்ணை வளத்தை விட மிக அதிகம் :)

3 comments:

said...

சிவா

நீங்கள் சொல்லும் கணக்கு சரி. ஆனால் வட அமெரிக்காவில் எண்ணை எடுக்க நீங்கள் சொல்வது போல் பேரலுக்கு $30 செலவாகிறது. வளைகுடா நாடுகளில் வெறும் $1 செலவில் ஒரு பேரல் எண்ணையை எடுக்க முடிகிறது.அதனால்தான் வட அமெரிக்காவில் எண்ணை எடுக்க எண்ணை கம்பனிகள் ஆர்வம் காட்டுவதில்லை.

பயோ டீசல் எரிபொருள் வந்தால் அப்புறம் கரும்பு விவசாயிகள் காசை அள்ளுவார்கள். அது காம்ரேடுகளின் வியாபாரத்தை குலைத்து விடும் என்பதால் பயோ டீசலை அவர்கள் கன்னா,பின்னாவென்று எதிர்த்து கொண்டிருக்கிறார்கள். அதுதான் விஷயம்:)

said...

எப்படியாவது பெட்ரோல் விலை குறைந்தால் சரிதான் ஐயா. கட்டுப்படி ஆக மாட்டேன் என்கிறது.

said...

good to know about this details Siva