எங்கள் நீமோவிற்கு துணையாக ரமோ வீட்டிற்கு வந்தாகிவிட்டது. ரமோ 21/2 மாதக் குழந்தை. இன்னும் ஒரு ஆணிற்குறிய அடையாளங்களை காட்டவில்லை. பெண்ணாக இருக்க வாய்ப்புகள் அதிகம். பெண்ணாக இருந்தால் நீமோவின் தோழி, ஆணாக இருந்தால் தோழன்.
மரகதமும் வெண்மையும் பழுப்பும் கலந்த கலவை ரமோ. பயங்கர சுட்டி.
ரமோ வந்ததிலிருந்து நீமோ ஒரு சவலைக் குழந்தைபோல் இருக்கிறது. ரமோவிடம் பேசக்கூடாது, ரமோவை தூக்க கூடாது என்ற ஒரே அலம்பல் மற்றும் அடம் பிடிக்கிறது.
நீமோ மற்றும் ரமோ இவைகளுடன் வாழ்க்கை சுவாரசியமாய் உள்ளது.
Wednesday, May 02, 2007
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
மூன்றாவது (ம)கண்?.
சிவமுருகன், மகனா, மருமகளா என்பது இன்னும் சிலநாட்களில் தெரிந்துவிடும்
அது என்ன வீட்டுக்கு வரும் போது ஆணா பெண்ணான்னு தெரியாதா? இவங்களும் பெண்ணாப் போனா அடுத்தது ஆணுக்கு அலையணுமா? கொஞ்சம் விவரமா சொல்லுங்க.
கொத்தனார், பறவைகளின் செக்ஸ் அறிய கொஞ்சம் கஷ்டம். அதனின் பிஹேவியரைப் பார்த்து கண்டுபிடிக்கலாம் அல்லது டி என் ஏ வைத்து கண்டுபிடிக்கலாம்.
ரமோவின் பிஹேவியர் எல்லாம் பெண்போல் தான் இருக்கிறது. டி என் ஏ டெஸ்ட் செய்ய அப்பாய்ண்ட்மெண்ட் வாங்கியிருக்கிறேன். பார்க்கலாம்
ரமாவின் ஃபோட்டோ மிக அழகாக இருக்கிறது சிவா. கோவையில் ஒரு கூண்டு நிறைய ஏகப்பட்ட லவ்பேர்ட்ஸ் வளர்த்தேன்.அந்த ஞாபகம் வருகிறது
செல்வன், நன்றி. இந்த போட்டோ ப்ரீடர் எடுத்த போட்டோ. நான் மேலும் எடுத்து அனுப்புகிறேன்
சிவா.
உங்களுக்கு மடல் அனுப்பணும்னு நினைச்சுக்கிட்டேயிருந்து ரொம்பவே தள்ளிப் போயிடுச்சி.
தனி மடல் அனுப்பறேன் எங்க வீட்டு வாண்டுப் பயலைப் பத்தி.
ரமோ அழகா இருக்கு! சுத்திப் போடுங்க.
Post a Comment