சதாமை தூக்கிலிட்டவுடன் தமிழ்பதிவர்கள் குமுறிவிட்டார்கள். ( பல அப்பாவி பெண்களை கற்பழித்து கொன்ற ஆட்டோ சங்கர் என்ற கிரிமினலை தூக்கிலிட்டபோதும் நம் தமிழினம் இவ்வாறுதான் குமுறியது)
புஷ்ஷை தூக்கிலிட அறைகூவல்கள்,
அமெரிக்காவிற்கு சாவல்கள் என தூள் கிளப்பிவிட்டார்கள்.
அப்பா.... என்ன வீரம்.
சரி இந்த பட்டியலை பாருங்கள்
98% குழந்தைகளுக்கு போலிய தடுப்பு ஊசிகள்...
4500 பள்ளிகூடங்கள்
80 லட்சம் புத்தகங்கள்
நாடளுமன்றத்தில் 25% பெண்கள்
19000 புது போலிஸ்காரர்கள்
18000 எல்லைப் படை வீரர்கள்
33000 புது தொழிற் முதலீடுகள்
நாட்டிற்கு வேலை செய்வதைவிட உயிர் மேலா என கேட்கும் புது ஆட்சியாளர்
இவையெல்லாம் சதாம் பதவியிலிருந்து அகன்ற பிறகு ஈராக்கிய மக்களுக்கு கிடைத்தது.
இதை தடுப்பவர்கள் யார்?
இனவெறி கொண்டு ஒருத்தரை ஒருத்தர் அடித்து சாவடிக்கும் மனிதர்களே.
இத்தகைய மனிதர்கள் சிறுபான்மையினரே.
அவர்கள் வெகுசீக்கிரம் ஒழிந்து ஈராக்கில் அமைதி நிலவ அமெரிக்க அடிவருடியாகிய நான்...
எல்லாம் வல்ல மனிதனை வேண்டுகிறேன்.
மிக அறிந்த மனிதனே உயர்ந்தவன்.
இந்த விடீயோ கிளிப்பும் ஒரு அமெரிக்க அடிவருடையது
Wednesday, January 03, 2007
Subscribe to:
Post Comments (Atom)
20 comments:
ஈராக்கிற்கு சதாம் போல ஒரு கடுமையான மனிதர்தான் தேவை, இல்லாவிட்டால் அந்நாடு சிதறிவிடும் என்பதுதான் உண்மை. அமெரிக்காவால் நிச்சயமாக அங்கு அமைதியை ஏற்படுத்த முடியாது.
இனி புஷ் தனது வாழ்நாள் முழுவதும் ஆயுதம் தாங்கிய வீரர்களின் அடியில்தான் காலம் தள்ளவேண்டும்.
கால்கரி
பிசி ஜேம்ஸ் ஒரு உள்குத்து குத்தியிருக்காரு ?
அடிவருடின்ன பதம் அருமை ..
ஜேம்ஸ்,
இங்கே மதத்தை ஏன் அழைக்கிறீர்கள்?
குழந்தைகள் பொருளாதர தடையால் நோய்வாய் பட்டன. இளைய சமுதாயத்திற்கு கல்வியியும் நல்ல சுகாதாரமும் மறுக்கப்பட்டன.
நான் சதாமாக இருந்திருந்தால் என் நாட்டு குழந்தைகளுக்காக அமெரிக்காவின் அடி வருடியிருப்பேன். போரை தவிர்த்திருப்பேன். குறைந்த விலைக்கு அமெரிக்காவிற்கு எண்ணை விற்று சவூதி அரேபியாவிற்கு பெப்பே காட்டியிருப்பேன்
ஜெயகுமார்,
கடுமையான மனிதர் நல்லவராக இருந்திருந்தால் பரவாயில்லை. தன்னுடைய ஈகோவிற்கு தன் மக்களை பலி கொடுத்தவர் கதி அவரின் சாவுதான்.
புஷ் அண்ட் கம்பெனி நல்லவர்கள் என நான் சொல்லவில்லை. ஆனால் அந்த வல்லரசுக்கு நல்லவர் ஒருவர் அதிபராக வர வாய்ப்பு இன்னும் இரண்டு ஆண்டுகளில் உள்ளது. சதாம் உள்ளமட்டும் அந்த வாய்ப்பு இருந்ததில்லை அவருக்குப்பின் அவரினும் கொடிய அவர் மகன்கள் காத்திருந்தனர் மேலும் ஒரு கொடுங்கோல் ஆட்சி புரிய
கூத்தாடி, ஜேம்ஸ் அவர்களுக்கு பதில் சொல்லிவிட்டேன்
சதானந்தன், அமெரிக்க ராணுவம் செய்யும் கொடுமைகள் வெளிவருகின்றன. குற்றம் புரிந்தவர்கள் தண்டனை அடைகிறார்கள். சதாம் அண்டு கம்பெனி செய்த கொடுமைகளுக்கு தண்டனை அனுபவிக்கிறார்கள். கடவுளே இன்னொரு பாசிசவாதியின் உருவில் வந்து தண்டனை அளித்துள்ளார்.
இந்த பாசிசவாதிக்கும் ஒரு நாள் வரும்.
"என்று எனக்கு நாளை உனக்கு" என்பதுதான் உண்மை
//ஒரு நாட்டிற்குள்
அந்நிய இராணுவம் புகுந்தால் அதன்
விளைவுகள் அந்நாட்டு பிரஜைக்கு
மட்டுந்தான் புரியும்.
//
உண்மை. அந்த ப்ரஜைகளை காப்பதுதானே மன்னனின் கடமை. தன் மானத்தை தந்து தன் மக்களின் மானத்தை காப்பாத்தியிருக்கலாமே. கர்வத்தால் கடைசியில் கிடைத்தது என்ன வீழ்ச்சி மற்றும் அவமானம்
சதானந்தன்,
தன் மக்களை பேரழிவிழிருந்து காப்பாற்றவில்லையா மாவீரன் முஷாரப். அது விவேகம். அந்த விவேகம் சதாமிடம் இருக்கவில்லை
சிவா,
ஈராக்கில் வாழுகிற மக்கள் அமெரிக்க ஆக்கிரமிப்பின் வலியை உணர்கிறார்கள். அந்த வலி உங்களது பட்டியல்களால் மறைந்துவிடுமா? அமெரிக்க ஆக்கிரமிப்பு யுத்தம் கொன்று குவித்த ஆறு லட்சம் மக்களின் உயிருக்கு உங்கள் இந்தபட்டியல் பதிலாகிவிடுமா? மனிதாபிமானத்தை எங்கே புதைத்து வைத்திருக்கிறீர்கள் நண்பரே? கொஞ்சம் தேடுங்கள்...
//கடவுளே இன்னொரு பாசிசவாதியின் உருவில் வந்து தண்டனை அளித்துள்ளார//
அப்போ அதே கடவுள் தானா முன்பு சதாம் உருவில் வந்தும் தண்டனை அழித்தார்.. இப்போ புஸ் உருவில கடவுள் வந்திருந்தால் இந்தக் கடவுளை அழிக்க இன்னொரு கடவுள் இன்னொரு பாசிச வாதியின் உருவில் வருவாரா..
ஏனுங்க.. வாறது தான் வாறாரு.. கொஞ்சம் நல்லவங்க உருவில வர கூடாதா..
Excuse me Mr.Adivarudi,
//98% குழந்தைகளுக்கு போலிய தடுப்பு ஊசிகள்...
4500 பள்ளிகூடங்கள்
80 லட்சம் புத்தகங்கள்
நாடளுமன்றத்தில் 25% பெண்கள்
19000 புது போலிஸ்காரர்கள்
18000 எல்லைப் படை வீரர்கள்
33000 புது தொழிற் முதலீடுகள்//
உன்னைக் கொன்றுவிட்டு உன் மனைவியை கற்பழித்துவிட்டு உன் பிள்ளைகளுக்கு இந்த வசதிகளை எல்லாம் செய்தால் நீங்கள் ஒத்துக் கொள்வீர்களா?
திரு. சதாமின் அடக்குமுறையில் இருந்த வலியை விட இந்த வலி மிக கம்மிதான். 6 லட்சம் பேர்களை அமெரிக்கா கொல்ல வாய்ப்பில்லை. அவர்களின் சாதி அல்லது இன உணர்வினால் ஒருத்தரை ஒருத்தர் அடித்துக் கொண்டு சாகிறார்கள். சுன்னி தலைவர் மறைந்து ஷியா என்ற ஒடுக்கப் பட்ட மக்கள் ஆள்வதை விரும்பாத சுன்னி ஆதிக்க வாதிகள் செய்யும் கொலைகள்.
ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பாக எழும் குரல் ஒடுக்கப்பட்ட ஈராக்கிய ஷியாக்களின் சார்பாக ஏன் எழுவதில்லை. ஆண்டாண்டு காலமாக சதாமின் ஆட்சியில் இயற்கை வளங்கள் பலவற்றைக் கொண்டும் ஏழைகளகாவே வாழ்ந்தார்களே அவர்கள் சார்பாக ஏன் உங்கள் குரல் ஒலிக்க வில்லை தோழரே.
சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்து கொடுங்கோல் ஆட்சி புரிந்தபோது இல்லாத மனிதாபிமானம்
இப்போது எப்படி எழுந்தது.
//ஏனுங்க.. வாறது தான் வாறாரு.. கொஞ்சம் நல்லவங்க உருவில வர கூடாதா.. //
எப்படிங்க ஒருத்தரை கொல்லும் கடவுள் கெட்டவராகதானே இருக்கமுடியும்
மனிதனே மிக அறிந்தவன்
அனானிமஸ், இல்லை நான் ஒத்துக்கொள்ளமாட்டேன் ஏனென்றால் அந்த மாதிரி தலைவர்கள் உள்ள நாட்டில் நான் பிறக்கவுமில்லை வாழவுமில்லை.
ஈராக்கில் நடப்பது இனக்கலவரம். சதாம் என்ற சுன்னி ஆதிக்கவாதி இருந்தவரை அடக்கப்பட்ட மக்களின் எழுச்சி. அமெரிக்கா அடிப்படி அடிப்படை வாதிகளை அடித்து கொள்கிறது அதனது எண்ணை தேவைக்காக
//உன்னைக் கொன்றுவிட்டு உன் மனைவியை கற்பழித்துவிட்டு உன் பிள்ளைகளுக்கு இந்த வசதிகளை எல்லாம் செய்தால் நீங்கள் ஒத்துக் கொள்வீர்களா?//
அமெரிக்கப்படைவீரர்களில் சிலர் தவறு செய்திருக்கலாம், அவர்கள் சட்டப்படி தண்டனை பெறுகிறார்கள். அதற்காக ஒட்டுமொத்தமாக குற்றம் சொல்லமுடியுமா? அப்படி பார்த்தால் நம்ம I.K.P.F செய்ததாக சொல்லப்படும் அட்டூழியங்களுக்கு விசாரணையோ, யாருக்கும் தண்டனையோ கிடைத்ததாக செய்தி வந்திருக்கிறதா?
பை தி வே, எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்பட்டு கூப்பாடு போடுவதால் தங்கள் இரத்த அழுத்தம் அதிகமாகி உடல்நலம் பாதிக்க்ப்படலாம். அதனால் சற்று சாந்தமாக விவாதிப்பது சாலச்சிறந்தது !
//திரு. சதாமின் அடக்குமுறையில் இருந்த வலியை விட இந்த வலி மிக கம்மிதான். 6 லட்சம் பேர்களை அமெரிக்கா கொல்ல வாய்ப்பில்லை. அவர்களின் சாதி அல்லது இன உணர்வினால் ஒருத்தரை ஒருத்தர் அடித்துக் கொண்டு சாகிறார்கள். சுன்னி தலைவர் மறைந்து ஷியா என்ற ஒடுக்கப் பட்ட மக்கள் ஆள்வதை விரும்பாத சுன்னி ஆதிக்க வாதிகள் செய்யும் கொலைகள்.//
இது தானாகவே நடக்கிறதா? இதுவும் கடவுளின் செயலா சிவா? இந்த சியாxசுன்னி கொலைகளை தான் சதாம் உசேனும் செய்தான். அமெரிக்க ஆக்கிரமிப்பின் பின்னர் அது ஆறு லட்சமாக வளர்ந்திருக்கிறது. வாழ்க ஜார்ஜ் புஸ்!
சிவா ஈராக்கில் ஒரு மாதம் சென்று வாழ்ந்து பாருங்கள் யுத்தத்தின் வலி அப்போதாவது உங்கள் மனதை உருக்குமா என பார்ப்போம்.
//ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பாக எழும் குரல் ஒடுக்கப்பட்ட ஈராக்கிய ஷியாக்களின் சார்பாக ஏன் எழுவதில்லை. ஆண்டாண்டு காலமாக சதாமின் ஆட்சியில் இயற்கை வளங்கள் பலவற்றைக் கொண்டும் ஏழைகளகாவே வாழ்ந்தார்களே அவர்கள் சார்பாக ஏன் உங்கள் குரல் ஒலிக்க வில்லை தோழரே.//
ஒடுக்கப்பட்ட மக்கள் எங்கு இருப்பினும் க்க்ரல் கொடுப்பது "மனிதனாக" உணர்பவர்களின் கடமை சிவா. அந்த விதத்தில் இந்தியாவின் ஒடுக்கப்பட்டவர்களிலிருந்து துவங்கியிருக்கிறேன். ஈராக்கில் சதாமீ அடக்குமுறையில் பாதிக்கப்பட்ட சியா, குர்திஸ் இன மக்களுக்கு நீதி கிடைக்கவேண்டும். அந்த நீதியை வழங்கும் தகுதி அமெரிக்காவிற்கு இல்லை என்கிறேன். ஹாலந்து நாட்டில் ஹேக் மாநகரில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஒன்று இருப்பதை அறிவீர்களா? ஒரு ஆதிக்க அரசு தனக்கு சாதகமான தீர்ப்பு வழங்குவதில் சர்வதேச நீதிமன்றத்தின் செயல்பாட்டில் தலையிடுவது என்பதை புரிந்துகொள்ளுங்கள். இது மிகவும் ஆபத்தான பாதை. நாளை இந்திய தலைவர்களுக்கும் இதே தீர்ப்பை அமெரிக்கா அல்லது இன்னொரு நாடு வழங்கிவிட இயலும்.
நீதி பற்றி உங்கள் அளவீடு இஸ்லாமிய எதிர்ப்பு என்ற அளவுகோலில் சிக்கியிருப்பது வெளிப்படுகிறது. மனிதனாக வெளிப்படுங்கள். ஈராக்கில் தினமும் செத்துக் கொண்டிருப்பவர்களை நமது உறவினர்களாக்க, குழந்தைகளாக ஒரு நிமிடம் மடும் நினைத்துப்பாடுங்கள். வலி கொடியது அது உணரப்பட்டால். வார்த்தைகளை கவனமாக பயன்படுத்துங்கள் நண்பரே!
இது பற்றி உங்களிடம் பேச எனக்கு வேறு எதுவுமில்லை.
//சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்து கொடுங்கோல் ஆட்சி புரிந்தபோது இல்லாத மனிதாபிமானம்
இப்போது எப்படி எழுந்தது.//
உங்களது ஒப்பீட்டை ரசிக்கிறேன். ஆப்கானில் சோவியத் ஆக்கிரமிப்பு மட்டுமல்ல அமெரிக்க தலிபான் ஆதரவின் தொடர்ச்சியையும் சேர்த்து ஆராய்வது தான் நல்லது. ஆப்கான் அரசியல் பற்றிய உங்கள் கருத்தை எல்லா கோணங்களிலிருந்தும் வையுங்கள் இது பற்றி விவாதிக்கலாம். எந்த ஆக்கிரமிப்பிற்கும் ஆதரவளிக்க எனக்கு அவசியமில்லை.
நீங்கள் தோழரே என அழைத்ததை நினைத்து சிரித்தேன். நாம் ஒரே கொள்கையுடைவர்கள் அல்லவே அப்படியானால் தோழரே என்ற பதம்? :))
//நீதி பற்றி உங்கள் அளவீடு இஸ்லாமிய எதிர்ப்பு என்ற அளவுகோலில் சிக்கியிருப்பது வெளிப்படுகிறது. மனிதனாக வெளிப்படுங்கள். ஈராக்கில் தினமும் செத்துக் கொண்டிருப்பவர்களை நமது உறவினர்களாக்க, குழந்தைகளாக ஒரு நிமிடம் மடும் நினைத்துப்பாடுங்கள். வலி கொடியது அது உணரப்பட்டால். வார்த்தைகளை கவனமாக பயன்படுத்துங்கள் நண்பரே!
//
திரு, சதாமின் காலத்தில் அவரின் அடக்குமுறையிலிருந்து வெளியேறிய நண்பர்கள் எனக்குண்டு. அவர்கள் என்னுடன் வேலைப்பார்த்தவர்கள். சுன்னி இனத்தவர். அவர்களிடம் தினம் தினம் பேசியுள்ளேன் ஆகையால் அவர்களின் வலி எனக்கு தெரியும். ஒரு சுன்னி இனத்தவரே இப்படியென்றால் சியா பற்றி சொல்லத் தேவையில்லை. அமெரிக்காவின் அடாவடி இல்லையென்றால் சதாம் மற்றும் அவரின் வாரிசுகளின் அராஜகம் தொடர்ந்திருக்கும்.
இஸ்லாமிய எதிர்ப்பு மட்டும் என் எண்ணமாய் இருந்திருந்தால் ஒரு குரூர புன்னகையுடன் நகர்ந்திருப்பேன்.
மதம் என்ற நம்பிக்கைக்கு அப்பால் மனிதம் இருப்பதை பார்ப்பவன் நான். அரேபியர்களை விமர்சித்ததால் அவர்களின் அடிமைகளால் மதசாயம் என் மேல் பூசப்பட்டது. அதுவே நிலைத்தும் விட்டது.
//ஏனுங்க.. வாறது தான் வாறாரு.. கொஞ்சம் நல்லவங்க உருவில வர கூடாதா.. //
//எப்படிங்க ஒருத்தரை கொல்லும் கடவுள் கெட்டவராகதானே இருக்கமுடியும்//
சிவா, தீயவனை அழிக்க தீயவனாகத்தான் உருவெடுக்க வேண்டுமென்று நம் புராணம் ஏதும் சொல்லுதான்னு பார்த்து சொல்லுங்க!
நாதர்,
தீயவனுக்கு தீயவன் நல்லவனில்லையா?
திரு கடைசியாக ஒன்று. கீழிருப்பவர்களை உயர்த்தி சமத்துவம் காண்பது சரியான ஒன்று. மேலிருப்பவர்களை கீழே இழுத்து சமத்துவம் காண்பது சரியானதல்ல
எனக்கென்னவோ சதாம் கொலை தான் செய்யப்பட்டார்.
இன்று சதாம்? எப்பொழுது புஷ்??
சதாம் கொல்லப்பட்டது சரியென்றால், புஷ்ஷும் கொல்லப்படவேண்டியவரே!
Post a Comment