Thursday, January 04, 2007

Bloody America.... yaar

வெளிநாட்டிலிருந்து நான் இந்தியா போகும் போது வங்கிகள், LIC, டெலிபோன் மற்றும் இதரவேலைகள் ஏதாவது ஒன்று இருக்கும். அந்தந்த அலுவலகங்களுக்கு செல்லும் போது என்னுடன் என் சகோதரியின் மகனை அழைத்து செல்வது என் வழக்கம்.

இந்த அலுவலகங்களில் அலைகழிப்புகள், லஞ்சம், மெத்தனம் ஆகியவைகள கடந்து வேலை முடிந்தவுடன் Bloddy India...yaar என அங்கலாய்ப்பது என் வழக்கம். அச்சிறுவனும் கேட்டுக் கொள்வான். அவனுக்கு வேண்டியது அவனுக்கு தேவையான் வெஜிடபுள் பப்ஸ், கேக் மற்றும் கோக் McRennet இல் கிடைத்துவிடும்.

சிறுவன் வளர்ந்தான், சாப்ட்வேர் நிபுணன் ஆனான். இரண்டு வருடங்கள் இந்தியாவின் மிகப்பெரிய சாப்ட்வேர் கம்பெனியில் வேலைப்பார்த்தான். H1B விசா கிடைக்கப் பெற்று அட்லாண்டாவில் லாண்ட் ஆனான்.

சோசியல் செக்யூரிட்டி எண்ணிற்கு அப்ளை செய்ய அமெரிக்க அரசாங்க அலுவலகம் சென்றான். அங்கே வேலைப்பார்க்கும் பெண்மணி உன் பெயர் மிக நீளமாக இருக்கிறது என்னுடைய கம்யூட்டரில் அடக்க முடியவில்லை. இமிகிரேஷனில் போய் உன் பெயரை மாற்றிக் கொண்டு வா என்றார்.

சிறுவனும் இமிகிரேஷனுக்கு ஓடினான். இமிகிரேஷனில் இருந்த அம்மணி பெயரல்லாம் மாற்ற முடியாது. பெயர் மாற்ற வேண்டுமென்றால் சட்டரீதியாக மாற்றிக் கொண்டு வா இல்லையென்றால் மீண்டும் ஒரு முறை சோசியல் செக்யூரிட்டிக்கு சென்று அப்ளை செய்து பார் என்றார்.

சிறுவன் மீண்டும் சோசியல் செக்யூரிட்டிக்கு போனான். அங்கே இருந்த இன்னொரு அம்மணி ஒன்றும் சொல்லாமல் அப்ளிகேஷனை வாங்கி அப்ரூவ் செய்துவிட்டார்.

சிறுவன் வெளியே வந்து McDonald இல் அமர்ந்து ப்ரென்ச்ஜ் ப்ரைஸ் மற்றும் கோக் வைத்துக் கொண்டு கைத்தொலைப் பேசியில் என்னை அழைத்து Bloody America.... yaar என பழித் தீர்த்துக் கொண்டான்

36 comments:

said...

Hahahahahaha

said...

சிவா,

அமெரிக்காவில் அரசு அலுவலகங்களில் வாடிக்கையாளரை மிக நன்றாக நடத்துவார்கள். அலைக்கழிக்க மாட்டார்கள். லஞ்சம் வாங்க மாட்டார்கள்.How are you doing today மற்றும் Have a nice day கண்டிப்பாக சொல்வார்கள்.

உங்கள் சகோதரி மகனின் அனுபவத்துக்கு காரணம் அந்த அமெரிக்க அரசு ஊழியரின் அனுபவமின்மையாக இருக்கலாம்.

இந்திய அரசு ஊழியர்கள் மக்களை நாய்கள் போல நடத்துவார்கள். அமெரிக்காவில் வாடிக்கையாளராக நடத்துவார்கள்.

said...

செல்வன், உண்மை. அந்த அரசு அலுவலரின் அனுபவமின்மையும் என் சகொதரி மகனின் அனுபவமின்மையும் அவனை அலைக்கழிக்க வைத்துவிட்டது.

said...

என்னது அனுபவின்மையா?
அனுபவம் இல்லாதவர் முடிவெடுக்கும் இடத்திலா வைப்பார்கள்?
நிராகரிக்கும் முன்பு பக்கத்து சீட்டிடம் அல்லது மேலதிகாரியிடம் கேட்கமாட்டார்களா?
எங்கோ உதைக்குது.

said...

என்னுடன் படித்த ஒரு பெண்ணின் இனிஷியல், C.R. சோசியல் செக்யூரிட்டி அலுவலகத்தில் அதன் விரிவாக்கத்தைக் கேட்டிருக்கிறார்கள். C - கோயம்புத்தூர், R - அவள் அப்பா பெயரைச் சொல்லியிருக்கிறாள். அன்று முதல் அவளுடைய first name கோயம்புத்தூர் என்றாகிவிட்டது! (அலுவலகத்தில் அவளை எப்படி அழைப்பார்கள் என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன் :-)) last name தான் அவள் நிஜப் பெயர்! அவளும் பிளடி அமெரிக்கா யார்... என்று சொல்லியிருக்கக்கூடும்!

said...

நன்றாக சிரித்தேன். ஆனால், இது ஒரு தீர்க்கமுடியாத பொருளாகியிருந்தால் எவ்வளவு வருத்தமுற்றிருக்கும்? இதுமாதிரி சிறுசிறு குறைகளை மனிதர்கள் சொன்னாலும் அதை நிறுவனங்கள் (அரசும் அடங்கும்) அதை பொருட்படுத்துவதில்லை. இந்த பெயரின் நீளம் என்கிற வினா இந்தியாவிலும் இருக்கிறது. நான் இந்தியன் வங்கியில் ஒரு வரையோலை வாங்க போனேன் Institute of Cost and Works Accountants of India என்ற பெயரில் விண்ணப்பித்தேன். நீளம் அதிகமிருக்கிறது என்று கணிணி நிராகரித்தது.

இவ்வளவு மூளையற்ற நிலையில் ஒரு கணினியை செயல்படுத்தும் இந்த நிறுவனங்களை எண்ணவென்பது?

ஐயா, நான் இன்று "பதினைந்தாண்டு கனவு" என்று முதன்முதலில் ஒரு பதிவு எழுதியிருக்கிறேன் என் இடுக்கையில்.

முகவரி:

http://ayemarathavan.blogspot.com

தாங்கள் படித்து உங்கள் மேலான கருத்துக்களையுரையுங்கள்.

said...

குமார், சில அமெரிக்க இளைஞர்/ஞிகள் மிக கர்வம் பிடித்தவர்கள் மற்றும் முட்டாள்கள். அவர்கள் கணிணி வேலை செய்ய வில்லை என்றால் உலகத்தில் வேறு வழியே இல்லை என்ற முடிவெடுப்பார்கள். இவனும் உன்னால் முடியவில்லை என்றால் உன் மேலதிகாரியை கேட்டுபார் என சொல்லியிருக்கவேண்டும்

said...

சேதுக்கரசி, இங்கே லீகல் நேம் இது நார்மலாக அழைக்கும் நேம் இது சொன்னால் புரிந்து கொள்வார்கள். சீனர்கள் சீன பெயரையும் ஆங்கில பெயரையும் வைத்துக் கொள்கிறார்கள். டிங்சூ என்ற பெயர் டிம் சாண்டர்ஸ். சர்தார்ஜிகள்தான் மிக பெரிய ஜோக். ஹரிந்தர்சிங் மாண் என்ற பெயர் ஹாப்பி மேன் ஆகிவிட்டது

said...

ஏமாறதவன்,

//Institute of Cost and Works Accountants of India என்ற பெயரில் விண்ணப்பித்தேன். நீளம் அதிகமிருக்கிறது என்று கணிணி நிராகரித்தது.
//

இது அந்த மென்பொருள் வல்லுனரின் தவறான டிசைன். என் செய்வது.

டேடாபேஸில் சில ஃபீல்டுகளை ஃப்ரீபார்மட்டில் விடமுடியும் என நினைக்கிறேன்.

உங்கள் பதிவை படிக்கிறேன்

said...

இந்த விவகாரங்களில் அனுபவமற்றவரை
நிச்சயமாக வேலைக்கு வைக்க மாட்டார்கள். இது அவரின் திமிர்த்தனம்
அன்றி வேறில்லை கனடாவிலும்
அமெரிக்காவிலும் இவை மிகச்சாதாரணம்
இருக்கிறது. இந்த விடயத்தில் என்க்கும்
பல அனுபமுண்டு.

said...

சிட்டிசன்களுக்கு மட்டும் தான் Social security ஆ இல்ல வரி கட்டும் அனைவருக்கும் social security யா ?

said...

// சில அமெரிக்க இளைஞர்/ஞிகள் மிக கர்வம் பிடித்தவர்கள் மற்றும் முட்டாள்கள்.//

சில இல்லீங்க, பல பல அந்த கேஸ்தான். அதான நம்ம இங்க வந்து குப்ப கொட்ட முடியுது!

ஆனாலும் வேலை செய்யாமலே படம் காமிப்பதில் எம்டன்கள். ஒருநாள் வேலையை ஒருவாரம் ஊருக்கே படம் காட்டி ஓட்டுவதும் ஒரு திறமை தான், நம்ம கத்துக்கவேண்டிய திறமை!

said...

//ஆனாலும் வேலை செய்யாமலே படம் காமிப்பதில் எம்டன்கள். ஒருநாள் வேலையை ஒருவாரம் ஊருக்கே படம் காட்டி ஓட்டுவதும் ஒரு திறமை தான், நம்ம கத்துக்கவேண்டிய திறமை!
//

:-))

ரொம்ப எளிதா கத்துக்கலாம்ங்க அது.

said...

சிட்டிசன்களுக்கு மட்டும் தான் Social security ஆ இல்ல வரி கட்டும் அனைவருக்கும் social security யா ?
//
அமெரிக்க குடிமகன்கள் அனைவருக்கும் சோஷியல் செக்யூரிட்டி உண்டி. வெளிநாட்டவர்களில் அமெரிக்காவில் வேலை செய்ய தகுதி பெற்றவர்(பகுதிநேரம் உட்பட) அனைவருக்கும் சோஷியல் செக்யுரிட்டி உண்டு.

said...

வஜ்ரா. இங்க SSN தேசிய அளவில் ஒரு அடையாளமாக இருக்கிறது. அதனை தேவையில்லாமல் வெளியே சொல்லக் கூடாது. அதனை வைத்துக் கொண்டு தான் வேலை, வங்கிக் கணக்கு, வங்கிக் கடன்கள் என்று எல்லாமும் கிடைக்கும். அதனால் குடியுரிமை பெற்றவர்கள் மட்டுமின்றி இங்கே வேலை, படிக்க என்று வரும் எல்லோருக்கும் SSN வேண்டும். அமெரிககா வந்தவுடன் முதல் வேலையே இதனைப் பெறுவது தான்.

ஆனால் சோஷியல் செக்யூரிட்டியின் நோக்கம் என்னவோ வேறு ஒன்று. பணி ஓய்விற்குப் பின் வருமானத்திற்கு வழிவகை செய்யும் PF மாதிரி தான் இது தொடங்கப்பட்டது. ஆனால் பின்னர் இது இரகசிய அடையாளமாக மாறிவிட்டது.

வேலை பார்க்கும் எல்லாருமே (இங்கேயே இருந்து பணி ஓய்வு பெறுகிறீர்களோ இல்லையோ) சோஷியல் செக்யூரிட்டிக்கும் வரி கட்டவேண்டும்.

said...

வஜ்ரா,

அமெரிக்காவில் சம்பளம் வாங்கும் எல்லாருமே social security tax கட்டவேண்டும். ஆனால் social security benefit கிடைப்பதற்கு கிட்டத்தட்ட 10 வருடம் இங்கே வேலை செய்யவேண்டும் (40 points by social security calcuation to be precise)

அதனால் H1B விசாவில் சில வருடங்கள் வேலை செய்பவர்கள் இது அமெரிக்காவுக்கு கொடுக்கும் காணிக்கை தான் :-D

40 points இருந்தால் citizen இல்லாதவர்களுக்கும் 60 வயதில் கிடைக்கும். ஆனால் இப்போது இருக்கும் நிலைமையில் அமெரிக்க பிரஜைகளே திருவோடு ஏந்தவேண்டும்! எல்லாம் இந்த புஸ்ஸு மாமாவின் கைங்கரியாம்!

said...

//சிட்டிசன்களுக்கு மட்டும் தான் Social security ஆ இல்ல வரி கட்டும் அனைவருக்கும் social security யா ?//

வரி கட்டும் அனைவருக்கும்.
http://www.ssa.gov

said...

ஆகா சிவா,
என்ன என்னோட கதையை எப்படி நீங்க காப்பீரைட் இல்லாம பதிவா போடலாம். ஊரு கூட நம்ம ஊர் பெயரா இருக்குங்க. முடியலை சிவா முடியலை வந்து முதல் மூணு மாசம் அந்த நம்பரை வாங்குவதற்கும் அடுத்து என்னோட பெயரில் ஓட்டுனர் உரிமம் வாங்குவதற்கு நான் பட்ட பாடு இருக்கிறதே. இப்ப நினைச்சாலும் கண்ணுல ரத்தக்கண்ணீர் வருகிறது. இருங்க ரொண்டு ஒரு நாளில் அதையும் ஒரு பதிவா போட்டு விடுகிறேன்.

said...

Calgary சிவா,

/* சோசியல் செக்யூரிட்டி எண்ணிற்கு அப்ளை செய்ய அமெரிக்க அரசாங்க அலுவலகம் சென்றான். அங்கே வேலைப்பார்க்கும் பெண்மணி உன் பெயர் மிக நீளமாக இருக்கிறது என்னுடைய கம்யூட்டரில் அடக்க முடியவில்லை. இமிகிரேஷனில் போய் உன் பெயரை மாற்றிக் கொண்டு வா என்றார்.*/

அமெரிக்கா, கனடா போன்ற நாடுகள் தனி மனித சுதந்திரத்தை எவ்வளவு மதிக்கின்றனர் என்பது நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை. இந்த நாடுகளில் பெயர் நீளம், மாற்றிக் கொண்டு வா என்று நிச்சயமாகச் சொல்லியிருக்க மாட்டார்கள்.சொல்லியிருந்தால் அது சட்டவிரோதமானதும் கூட. வேண்டுமென்றால், சும்மா நகைச்சுவைக்காகச் சொல்லியிருக்கலாம்.
கிரேக்க நாட்டவர்கள் பலரின் பெயர்கள் எமது தமிழ்ப் பெயர்களை விடவும் நீளளளம். ஆக, கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் உங்களுக்கு, நீங்கள் விரும்பிய நீளத்தில் பெயர் வைக்கும் உரிமை உண்டு. எனவே இந் நாடுகளில் யாரும் உங்களின் இவ் உரிமைகளில் தலையிட முடியாது.

said...

வெற்றி சார், நீங்களோ நானோ இருந்திருந்தால் கதை வேறு மாதிரி இருக்கும். ஆனால் என் சிறுவனோ முதன் முதலில் விமானம் ஏறி சென்னையை விட்டு வந்திருக்கிறான். பாவம். ஆனால் தேறிவிடுவான்.

அட்லாண்டாவில் ஏதோ ப்ரச்னை இருக்கிறது போலே. சந்தோஷ் சொல்வதை கேளுங்கள்.

மேலும் சிறுவனின் நண்பன் ஒருவனுக்கும் இதே ப்ரசனையாம்.

அட்லாண்டா ஏரியாவில் சம்திங் ராங்

பி.கு. சிறுவன் இப்போது 5 3/4 அட் உயரம் 120கிலோ கனபாடிகளாக இருக்கிறான்

said...

என்னமோ சோஷியல் செக்யூரிட்டின்னு பெரிய விஷயமாப் பேசுறீங்க.

நான் இருக்கும் குவைத்தில் இந்தப் பிரச்சினையே கிடையாது. எங்களுக்குத் தெரிஞ்சதெல்லாம் செண்ட்ரி செக்யூரிட்டி மட்டும் தான்.

வெறும் இனிஷியலோடு சிறியதாக இருந்த ஹரிஹரன்.எஸ் எனும் என்பெயரை இங்கே முதல் சர்நேம்... இரண்டாவது சர்நேம் என்று சேர்த்து எனது பித்ருக்களுக்கு என்னை மரியாதை செய்யவைத்தார்கள்!:-)))

said...

ஒரு முறை வெளிநாடு போய்விட்டு திரும்ப வரும் பொழுது இமிக்ரேஷனில் இருந்த அம்மாள் கேட்ட கேள்வி - "Why are you coming to the US?" அதற்கு நான் அளித்த பதில் - "I live here."

உடனே அடுத்த கேள்வி - "Are you an US citizen?" என் பதில் - "இல்லை". அந்த அம்மாள் உடனே - " In that case you should answer that you work here not live here!"

என்ன திமிர் பாத்தீங்களா. நம்ம நேரம் இதெல்லாம் கேட்டுக்கொள்ள வேண்டியதா இருக்கு. :((

said...

கொத்ஸ். அதெல்லாம் திமிர் தான். ரெசிடென்ட்ன்னு சொல்லி 180 நாளுக்கு மேல இந்த நாட்டுல இருந்து வேலை பாத்திருந்தா வரி வாங்குறாங்க. ரெசிடென்ட்ன்னா என்னன்னு அந்த அம்மாவை கேட்டிருக்கணும். இவங்க எல்லாம் லிப்டுக்கும் எலவேட்டருக்கும் வேறுபாடு சொல்ற ஆளுங்க தானே?! :-) லிப்டுன்னு சொல்லி இவங்க முழிக்கிறதைப் பாக்கணும். ரெண்டு மூனு தடவை வேணும்னே எரேசரை ரப்பர்ன்னு சொல்லி இவங்களை அதிர்ச்சி அடைய வச்சுட்டு அப்புறம் செக்சுவல் ஹராஸ்மென்டுன்னு உள்ள தள்ளிடுவாங்கன்னு இப்ப எல்லாம் சொல்றதில்லை. :-)

said...

//அந்த அம்மாள் உடனே - " In that case you should answer that you work here not live here!"//

அட கடவுளே!

said...

//அமெரிக்காவில் வாடிக்கையாளராக நடத்துவார்கள்.//
அப்படி எல்லாம் எதுவும் கிடையாது செல்வன். எனக்கு ஏற்பட்ட அனுபவங்களில் இருந்து கூறுகிறேன் நான் சென்ற இரண்டு அமெரிக்க அரசு அலுவலகங்கள் SSN ஆபிஸ், DMV லைசென்ஸ் வழங்கும் அலுவலகம் இரண்டு இடங்களிலும் நமது அரசு அலுவலங்களுக்கு இணையாக இருந்தது . எனது அமெரிக்க அலுவலக நண்பர்களும் இதை உறுதி செய்தனர். பெயர் சம்மந்தமானது என்னவென்றால் இவர்களது systemகளில் பெயரின் max length 30 characters அதற்கு அதிகமான நீளத்தில் உங்களின் பெயர் இருந்தால் அது ஒரு பிரச்சனையே.

said...

//ஊரு கூட நம்ம ஊர் பெயரா இருக்குங்க//

சந்தோஷ், நீங்க Alpheretta ஏரியாவில் உள்ளவர் என நினைக்கிறேன். சிறுவனும் அங்கேதான் உள்ளான். சந்திக்க வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம்

said...

//என்ன திமிர் பாத்தீங்களா. நம்ம நேரம் இதெல்லாம் கேட்டுக்கொள்ள வேண்டியதா இருக்கு//

கொத்தனார் என் திமிரை பார்க்கிறீங்களா

இது கால்கரி ஏர்போர்ட்டில் எனக்கும் அமெரிக்க ஸ்பெஷல் இமிக்ரேசன் ஆபிஸருக்கும் நடந்த உறையாடல்

Officer : How long you intend to stay in USA?

me : 5 days.

Officer : Are you sure are you going to stay only 5 days?

me : Yes. I have job only for 5 days/

Officer : Are you going to work in USA ?

me : I am employed by an american company in Canada and I going to America to teach the latest technology to americans

Officer : Will you come back?

me: What do you mean "Will I come back"?

Officer : I thought you will stay in america for ever

me : You are insulting me. No sane person will do that. Moreover nobody leaves beautiful Calgary.
Are you going to allow me or not? It is getting late

Officer : If I don't allow you what do you do?

me : Officer. I will go back to my home and enjoy the rest of the weekend with my family and ask my american colleagues to visit Calgary & learn.

அவர் முகம் சிவந்தது பிறகு விட்டுவிட்டார்.

திமிர் பிடித்தவர்களிடம் திமிராக பேசவேண்டும்

நான் 1989ல் இருந்து அமெரிக்காவிற்கு வருகிறேன். 9/11 பிறகுதான் இத்தகைய மாற்றங்கள்.

இதற்கு காரணமானவர்கள் நாட்டில் காலம் காலமாக் இப்படிதான்

நம் ஹரிஹரன் சொன்ன மாதிரி சோசியல் செக்யூரிட்டி எல்லாம் கிடையாது செண்ட்ரி தான். அதே போல அமெரிக்காவும் மாறுவது காலத்தின் கொடுமை

said...

//சந்தோஷ், நீங்க Alpheretta ஏரியாவில் உள்ளவர் என நினைக்கிறேன். சிறுவனும் அங்கேதான் உள்ளான். சந்திக்க வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம்//
இல்லை சிவா நான் Smyrnaவில் இருக்கிறேன். அவருக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டாலோ அல்லது சந்திக்க விரும்பினாலோ மிக்க மகிழ்ச்சி.

said...

குமரன்
/* ரெண்டு மூனு தடவை வேணும்னே எரேசரை ரப்பர்ன்னு சொல்லி இவங்களை அதிர்ச்சி அடைய வச்சுட்டு அப்புறம் செக்சுவல் ஹராஸ்மென்டுன்னு உள்ள தள்ளிடுவாங்கன்னு இப்ப எல்லாம் சொல்றதில்லை. :-) */

ஹிஹிஹிஹிஹி...

said...

//இதற்கு காரணமானவர்கள் நாட்டில் காலம் காலமாக் இப்படிதான்
//

அமெரிக்கர்கள் தானே 9/11 முக்கிய காரணகர்த்தாகள் சிவா அண்ணா. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது இவர்களுக்கு மிகப் பொருத்தம். அமெரிக்கர்கள் எத்தனை பேர் நல்லவர்களாக இருக்கிறார்களோ அவ்வளவு பேர் முட்டாள்களாகவும் திமிர் பிடித்தவர்களாகவும் உலக அறிவு இல்லாதவர்களாகவும் தெரிந்து கொள்ளத்தேவையில்லை என்று நினைப்பவர்களாகவும் இருக்கிறார்கள்.

said...

குமரன், தடம் மாறுகிறது என நினைக்கிறேன். இருந்தாலும்....9/11 நடக்க அமெரிக்காவா காரணம்.

சரித்திரத்தை படித்தால் தெரியும் யார் காரணம் என்று. என்னுடைய கஜானா என்ற கதையே இதைப்பற்றிதான். கதை வெளியே வரவிட்டாலும் சரித்திரத்தைப்பற்றி கூடிய சீக்கிரம் ஒரு பதிவு போடுகிறேன்

said...

//9/11 பிறகுதான் இத்தகைய மாற்றங்கள்//

கொத்தனார் பதிவில் என்று நினைக்கிறேன்.. விமான நிலையத்தில் தமிழில் பேசிய ஒருவர் அதற்காக அதிகாரிகளிடம் மாட்டிக்கொண்டார் என்று வாசித்த ஞாபகம்!

said...

//அமெரிக்கர்கள் எத்தனை பேர் நல்லவர்களாக இருக்கிறார்களோ அவ்வளவு பேர் முட்டாள்களாகவும் திமிர் பிடித்தவர்களாகவும் உலக அறிவு இல்லாதவர்களாகவும் தெரிந்து கொள்ளத்தேவையில்லை என்று நினைப்பவர்களாகவும் இருக்கிறார்கள்.//

ஆமாங்க. அந்த திமிரு பிடித்த அம்மா இருந்த அதே ஏர்போர்ட்டிலேயே Welcome Home அப்படின்னு வரவேற்று சிரிச்ச ஆளுங்களும் இருக்காங்க. Just to set the record straight!

said...

சேது,

இதுதாங்க நீங்க சொல்லும் பதிவோட சுட்டி.

said...

அமெரிக்கர்கள் எத்தனை பேர் நல்லவர்களாக இருக்கிறார்களோ அவ்வளவு பேர் முட்டாள்களாகவும் திமிர் பிடித்தவர்களாகவும் உலக அறிவு இல்லாதவர்களாகவும் தெரிந்து கொள்ளத்தேவையில்லை என்று நினைப்பவர்களாகவும் இருக்கிறார்கள்.//

ஏன் இத்தனை கோபம் குமரன்?பொதுவாக அனைவரிடத்திலும் உள்ள அல்லவற்றை ஒதுக்கி, நல்லதையே அல்லவா நீங்கள் பார்ப்பீர்கள்? சராசரி அமெரிக்கன் கர்ட்டசி நிறைந்தவன்,தெருவில் போகும் அன்னியரை பார்த்து வாழ்த்து சொல்பவன், குறைந்த வருமானம் உள்ளவன், தெய்வ பக்தி நிரம்பியவன், பள்ளிபடிப்பை தாண்டாதவன் என்றல்லவா இதுவரை நினைத்திருந்தேன்?

said...

அமெரிக்கா/கனடாவில், சாதரண மனிதன் உண்மையானவாக இருக்கிறான். சட்டத்தை மதிக்கிறான். ஒழுங்காக வரி செலுத்துகிறான். பொது இடத்தில் மரியாதையாகவும் கண்ணியமாகவும் நடக்கிறான். கடைநிலை போலீஸ்காரர் முதல் அரசாங்க கிளர்க் வரை மிக பெரும்பாலோர் நேர்மையாக உள்ளனர். நான் சொன்னது ஒரு எக்சப்ஷன்.

இந்தியாவில் அரசாங்க அலுவர்கள்/டாக்டர்கள்/டாக்சி ஆட்டோ டிரைவர்கள்/பஸ் கண்டக்டர்கள்/ போலீஸ் கான்ஸ்டபிள்கள்/ அரசியல்வாதிகள்/ அழகான பெண்கள் எல்லாருமே மிக கர்வமாக நடந்து கொள்கின்றனர்.