Friday, September 22, 2006

தேடினதும்..... கிடைத்ததும்....

கடந்த சில நாட்களாக ஐ.நா பொது சபை கூட்டம் நடைபெறுகிறது. உலக தலைவர்கள் காரசாரமாக அமெரிக்காவை அமெரிக்காவிலேயே தாக்கி பேசினார்கள். அவர்களில் குறிப்பிட தக்கவர்கள் ஈரானிய அதிபரும் வெனிஸூலா அதிபரும்.

வெனிஸூலாவின் அதிபர் ஒருபடி அதிகம் போய் புஷ்ஷை தனிமனித தாக்குதல் நடத்தினார். கேட்க நன்றாக இருந்தது. ஆனால் இப்படி பேச ஐ.நா சபை ஏற்ற இட்மல்ல என்பது என் தாழ்வான கருத்து.

அப்படியே அந்த தலைவர்களிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும் போலிருந்தது

"ஐயா உங்க ஊருலே உங்களே எதிர்த்து உங்க மக்கள்லே ஒருத்தர் சின்னதா பேசினா என்னய்யா பண்ணுவீங்க?"

என்ன பதில் வரும் என்று சரியாக சொல்வோருக்கு ஒரு கிளாஸ் ஜிகர்தண்டா இலவசமாக வழங்கபடும்.


அடுத்த செய்தி நான் வாழும் ஊரின் பிரதமர் ஆப்கானிஸ்தானில் பன்னாட்டு படைகள் அமைதியை ஏற்படுத்த வேண்டுமென்றார்.

அவர் என்ன பேச வேண்டுமென்று தான் எதிர்ப்பார்ப்பதாக நேஷனல் போஸ்ட்டில் Alistair Gordon என்பவரின் கட்டுரை என்னை கவர்ந்தது.

அவர் உலகின் 8 ட்ரில்லியன் டாலர்கள் பொருளாதாரமாக கொண்டுள்ள சீனாவிற்கு 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதார நாடான கனடா என் உதவ வேண்டும் என்கிறார்.

சுதந்திரம் கிடைத்து 60 வருடங்களில் உலகின் மிக பெரிய ஜனநாயக நாடும் வருங்கால வல்லரசுமான இந்தியாவிற்கு ஐ.நா பாதுகாப்பு குழுவில் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்த்து அளிக்க வேண்டும் என்கிறார். அது என்னை மிக கவர்ந்தது. அவருடைய முழு கட்டுரை இங்கே


காலகரி ஹெரால்டில் வார இறுதிக்கு என்ன செய்யலாம் என தேடிய போது பாகிஸ்தானின் அதிபர் முஷாரப் படம் போட்டு ஒரு செய்தி. அவர் CBS க்கு அளித்த பேட்டி வரும் ஞாயிறன்று ஒளிபரப்ப உள்ளது. அந்த பேட்டியில் அவர் அமெரிக்கா 9/11 க்கு பிறகு பாகிஸ்தானை மிக பயமுறுத்தியது. ஆப்கானிஸ்தானை தாக்க அனுமதிக்கவில்லை என்றால் நீங்கள் கற்காலத்திற்கு போக வேண்டியிருக்கும் என அந்நாளைய அமெரிக்காவின் துணை பாதுகாப்பு அமைச்சர் ஆர்மிடாஜ் பயமுறுத்தினார் என்று சொல்லியிருக்கிறார். எல்லாரும் அமெரிக்காவை திட்டும் போது நாமும் திட்டிவிடலாம் அப்போதுதான் லோக்கலில் நல்ல பெயர் கிடைக்கும் அதே நேரம் அமெரிக்காவும் அவ்வளவு கவனிக்காது என அவர் நினைத்திருக்கலாம்.

திண்ணை, தமிழ் மணம் ஆகியவைகளை இன்று படித்த போது இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம் என நாகூர் ரூமி முதல் பதிவுகளில் எழுதும் அனைத்து இஸ்லாமிஸ்டுகளும் எழுதி வெங்கட் சாமிநாதனையும் நேசகுமாரையும் திட்டியிருந்தார்கள். சரி நாமும் Religion of Peace என கூகுளில் தேடினால் கிடைத்தது இங்கே

அது சரி எதுக்கு இந்த பதிவு என்று கேட்கிறீர்களே. நண்பர் ஒருவர் "அண்ணே என்ன ஆளேக் காணாமே எழுத்து துறவறம் பூண்டு வீட்டீர்களா?" என ஈ-மெயில் அனுப்பி உசுப்பி விட்டிருந்தார் அதன் விளைவு தான் இந்த பதிவு

Thursday, September 14, 2006

Austin னுக்கு வலைபதிவாளர் வருகை


வரும் அக்டோபர் மாதம் 23 முதல் 27 வரை காலகரி நகரத்தின் இரண்டாம் வலைப் பதிவாளரான நான் , அகில உலக தாதா புஷ்ஷின் சொந்த மாநிலமான டெக்ஸாஸில் இருக்கும் ஆஸ்டின் நகருக்கு பகிரங்கமாக வருகை தருகிறேன்.


அங்கே வலைபதிவாளர்களோ அல்லது வலைப்பூ படிப்பவர்களோ என்னை சந்திக்க விரும்பினால் தொடர்பு கொள்க.

Friday, September 08, 2006

மீண்டும்....

மீண்டும் இந்தியாவில் தீவிரவாதிகளின் வெறியாட்டம். இந்த முறை நாசிக் முஸ்லிம் கள் நிறைந்த பகுதியில் அடுத்தடுத்து 4 வெடிகுண்டுகள். இது வரை 40 பேர் பலி என்று செய்திகள்

ஒரு முறை மும்பை அடுத்து அருகில் இருக்கும் நாசிக்.

இது நடந்தது முஸ்லிம்கள் அதிகமுள்ள பகுதியில்.

இதை இந்து தீவிரவாத கும்பல் நடத்தியிருந்தால் அவர்கள் அதிகபட்ச தண்டனை பெறவேண்டுமென்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

இதுவே அந்திய நாடுகள் இந்து முஸ்லிம் கலவரத்தை இந்தியாவில் தூண்டிவிட நடத்தியிருந்தால் அவர்களை ஒடுக்க இதுதான் சரியான தருணம்

செய்யுமா நம் அரசு அல்லது சும்மா அறிக்கைகள் விட்டு அடுத்த வெடிப்புகளுக்காக காத்திருக்குமா?

புஷ் எவ்வள்வுதான் மோசமானவர் என்றாலும் அவரது நடவடிக்கையால் அமெரிக்காவில் 5 வருடங்களாக எந்தவித அசாம்பாவிதம் நடக்கவில்லை.

அவரிடமிருந்து இந்திய அரசு கற்றுக் கொள்ள நிறைய பாடமிருக்கிறது

தீவிரவாதிகள் ஒழிக.....

Tuesday, September 05, 2006

காலையும் நீயே...மாலையும் நீயே...

Photobucket - Video and Image Hosting


Photobucket - Video and Image Hosting

Monday, September 04, 2006

கால்கரியில் மாபெரும் வலைப்பதிவாளர்கள் சந்திப்பு

சென்னையில் போண்டா சாப்பிட்டு ஒரு முறை, மாசால் வடை சாப்பிட்டு ஒரு முறை, ரத்னா கஃபே யில் ஒரு முறை என படு அமர்களமாக வலைப்பதிவாளர் சந்திப்புகள் நிகழும் போது நாமும் ஒரு சந்திப்பை வைத்துக் கொள்ளலாம் என நினைத்து சக வலைப்பதிவாளர் திரு வெளிகண்டநாதரை தொடர்பு கொண்டேன்.

இருப்பது இருவர்தான் அதனால் குடும்பத்தினரையும் மேலும் வரும்கால வலைப்பதிவாளர்/வலைப்பதிவு வாசகர்களையும் சேர்த்துக் கொள்வது என முடிவாகியது.


அவரும் சரி வருகிறேன் என்றார் ஆனால் ஒரு கண்டிஷன் என்றார். நானும் என்ன என வினவினேன். ஜிகர்தண்டா இருந்தால் தான் அவரது மனைவி வருவார் என சொன்னார். நானும் ஆஹா.. நானிருக்குமிடம் ஜிகர்தண்டா உண்டு (கடல் பாசி கிடைத்தால்) என்றேன். மேலும் கிழக்கு கடற்கரையில் இருக்கும் ஒரு மூத்த வலைப்பதிவாளர் ஜிகர்தண்டா செய்வதை படத்துடன் விளக்கவும் என ஒரு வேண்டுகோளை 3 மாததிற்கு முன் வைத்திருந்தார் அதையும் நிறைவேற்றி விடலாம் எனவும் இந்த கூட்டம் கூட்டபட்டது


நாள் : தொழிலாளர் தின வாரயுறுதி/கோடைக் காலத்தின் கடைசி வாரயுறுதி

இடம் : கால்கரியின் வடமேற்கில் உள்ள கால்கரி சிவாவின் வீடு

நேரம் : மாலை 6.30 மணியிலிருந்து

முதல் வரும்கால வலைப்பதிவாளர்/வலைப்பதிவு வாசகர் சரியாக 6.30 மணிக்கு ஆஜர்.

அவர் பக்கத்து தெருவில் இருப்பவர்.

அடுத்த வரும்கால வலைப்பதிவாளர்/வலைப்பதிவு வாசகர் 6.45 க்கு ஆஜர் அவர் நகரத்தின் தென் மேற்கு மூலையில் இருப்பவர்.

பரஸ்பர அறிமுகம் முடிந்தது. மாலைப் பொழுது ரம்யமாக இருந்ததினால் தோட்டத்தில் அமரலாம் என முடிவு செய்யப்பட்டது.

பெண்கள் வரவேற்பரையில் அமர்ந்தனர்.

குழந்தைகள் பாதள அறைக்கு சென்று வீடியோ ஆட்டங்களை ஆரம்ப்பித்தனர்.

தோட்டத்தில் அமர்ந்திருந்த வரும்கால வலைப்பதிவாளர்/வலைப்பதிவு வாசகர் களை என்ன அருந்துகிறீர்கள் என்று கேட்டன்?
இன்றைய தினம் என்னுடைய குளிர்சாதன பெட்டியில் அரசமீனவர், தென்றலார் மற்றும் நான்முகனார் உள்ளனர். இவர்களில் யார் வேண்டுமமெனக் கேட்டேன். அவர்கள் இருவரும் ஒன்றும் தெரியாமல் முழிக்கையில் வீட்டின் உள்ளே இருந்த வெளிகண்டநாதர் எண்ட்ரிக் கொடுத்தார்.

வலைப்பதிவு என்றால் என்ன? யுனிகோட் என்றால் என்ன? எப்படி தமிழில் எழுதுவது என் லெக்சர் கொடுத்துவிட்டு மொழி பெயர்த்தார். அரசமீனவர் என்றால் Kingfisher, தென்றலார் என்றால் Breezer. நான்முகனார் என்பது புதிதாக இருக்கிறதே என என்னைப் பார்த்தார். நானும் நம்ம பெருசு அவர்களின் பக்கத்து ஊரான ப்ரேசிலின் Brahma என்றேன்.

ஆம் இவைகள் மென் உற்சாக பானங்கள்




Photobucket - Video and Image Hosting
இவைகளை கோப்பைகளில் ஊற்றி ஊறவைத்த தந்தூரி கோழி துண்டுகள் நெருப்பில் வாட்டப்பட்டன.

அனவரும் தேசப் பற்றுடன் அரசமீனவரைக் கைப்பற்றி நம் தேசபற்றை பறை சாற்றும் நேரம் வந்திருந்த நண்பர் அரசமீனவர் இந்திய பிராண்டுதான் ஆனால் இங்கிலாந்தில் காய்ச்சப்படுகிறது என்றார்.

அரிதாரம் பூசுவதுப் பற்றியும் தமிழ்மக்களை ஒன்று சேர்க்க என்ன செய்ய வேண்டும் என்றும் விவாதிக்கப்பட்டது. வந்திருந்த நண்பர் போன் தமிழ்வருட பிறப்பில் தமிழ் நிகழ்ச்சிகளை கால்கரியில் நடத்தியவர்.

அடுத்த தமிழ் நிகழ்ச்சிகளில் வெளிகண்டநாதரின் பங்களிப்பு அதிகமிருக்கும் என நம்புகிறோம்

வலைபதிவு எதுவரை சென்றடைகிறது என்றறிந்து புளகாங்கிதம் அடைந்தோம்.


வலைப்பதிவில் வித்தியாசமான புனைபெயர்களை நண்பர்களுக்கு சொன்னோம். நாங்கள் சொன்ன பெயர்கள் : முகமூடி, விடாதுகருப்பு, இட்லி வடை, இலவசக் கொத்தனார், டுபுக்கு, விட்டும் சிகப்பு.

இரண்டு அரசமீனவரும் கணிசமான அளவிற்கு தந்தூரி கோழிகளும் உள்ளே சென்ற பிறகு நேரத்தைப் பார்த்தால் இரவு 9.30. சரி இரவு உணவு அருந்த உள்ளே சென்றோம்.

இரவு உணவு பட்டியல்:

விஜிடேரியன்களுக்கு

இட்லி-தக்காளி சட்னி- தேங்கய் சட்னி

விஜிடபுள் பிரியாணி - தயிர் பச்சடி

நடுநிலையாளர்க்கு

முட்டைக் கறி


நான் வெஜிடேரியன்களுக்கு

நாந் (Nan) - சிக்கன் குருமா- மட்டன் மிளகு வருவல்

எல்லாருக்கும்

தயிர் சாதம்

எல்லாரும் அவரவர்க்க்கு விருப்பமான அய்ட்டங்களை எடுத்துக் கொண்டு செட்டிலாயினர்.


ஒரு வழியாக சாப்பாடு முடிந்தவுடன். எல்லாரும் தோட்டதில் கூடினர்.

தோட்டம் நன்றாக குளிர்ந்திருந்தது. அதனால் அங்கே ஒரு சூடான விவாதம் நடைப்பெற்ற்து.

குழந்தைகள் vs பெற்றோர்

குழந்தைகளின் வய்து 13 முதல் 18 வரை.

அவர்களின் விவாத திறமை, ஆழ்ந்த சிந்தனைகள், எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கைகளை கண்டு பெற்றோர்கள் வாயடைத்து நின்றனர். இந்த விவாதத்தைப் பற்றி தனிப் பதிவு வரும்.

விவாதம் சூடேறியவுடன் அந்த சூட்டை தணிக்க ஜிகர்தண்டா சாப்பிடவது என முடிவாகியது.

ஜிகர்தண்டா செய்முறை. கனடாவின் கிழக்குக் க்டற்கறையில் உள்ள மூத்த வலைப்பதிவர்காக

1. கடற்பாசி இதனை கோந்த் கதிரா என்பர். பஞ்சாபிக் கடைகளில் கிடைக்கும். அருகில் உள்ள படத்தைப் பார்க்கவும்









2. படத்தில் காட்டியுள்ளது போல் சிறிதளவு ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்












3. அது மூழ்கும் வரை தண்ணீர்விடவும். மிகவும் குளிர்ந்த நீரோ அல்லது சூடான நீரோ வேண்டாம். தண்ணீர் ரூம் டெம்பரெச்சரில் இருக்க வேண்டும். சுமார் 12 மணிநேரம் ஊற வேண்டும். இவ்வாறு ஊறிய கடல்பாசி இந்த படத்தில் உள்ளது போல் ஆகிவிடும்.






4. இந்த கடல் பாசியில் உள்ள மரப்பட்டைகளையும் கசடுகளையும் நீக்கி, தண்ணீரில் நன்றாக கழுவி சுத்தம் செய்துக் கொள்ளவும். முக்கிய அய்ட்டம் ரெடி.














5. அடுத்த முக்கிய அய்ட்டம் நன்னாரி சிரப். இது இலங்கை கடைகளில் நிச்சயம் கிடைக்கும். பார்க்க படம். இதனுடைய ப்ராண்ட் நேம் ஸ்டார்ஸ். தாயரிப்பாளர் பாம்பே ஸ்வீட்ஸ் (இலங்கை)!!!!!!













ஒரு கரண்டி கடற்பாசி ஒரு உயர்ந்த கண்ணாடி கிளாசில் இடவும் இதன் மேல் ஐஸ் கட்டிகளை இடவும். பிறகு நன்னாரி சர்பத்தை 2/3 மேஜைக் கரண்டி விடவும். அதன் ஜில்லான பால் கொண்டு நிரப்பவும். ஜில் ஜில் ஜிகர்தண்டா ரெடி.

குழந்தைகள் "ஓ..திஸ் இஸ் மில்க் சேக் வித் ஜெல்லி நாட் கூல்" என ஒதுக்கி அங்கிருந்த் ஐஸ்கிரீம் கேக்கை சாப்பிட்டனர்.
பெரியவர்கள் வயிற்றைக் குளிர்படுத்தி உண்ட மயக்கத்தில் விடை பெறும் போது மணி மறுநாள் அதிகாலை ஒன்று