Friday, September 22, 2006

தேடினதும்..... கிடைத்ததும்....

கடந்த சில நாட்களாக ஐ.நா பொது சபை கூட்டம் நடைபெறுகிறது. உலக தலைவர்கள் காரசாரமாக அமெரிக்காவை அமெரிக்காவிலேயே தாக்கி பேசினார்கள். அவர்களில் குறிப்பிட தக்கவர்கள் ஈரானிய அதிபரும் வெனிஸூலா அதிபரும்.

வெனிஸூலாவின் அதிபர் ஒருபடி அதிகம் போய் புஷ்ஷை தனிமனித தாக்குதல் நடத்தினார். கேட்க நன்றாக இருந்தது. ஆனால் இப்படி பேச ஐ.நா சபை ஏற்ற இட்மல்ல என்பது என் தாழ்வான கருத்து.

அப்படியே அந்த தலைவர்களிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும் போலிருந்தது

"ஐயா உங்க ஊருலே உங்களே எதிர்த்து உங்க மக்கள்லே ஒருத்தர் சின்னதா பேசினா என்னய்யா பண்ணுவீங்க?"

என்ன பதில் வரும் என்று சரியாக சொல்வோருக்கு ஒரு கிளாஸ் ஜிகர்தண்டா இலவசமாக வழங்கபடும்.


அடுத்த செய்தி நான் வாழும் ஊரின் பிரதமர் ஆப்கானிஸ்தானில் பன்னாட்டு படைகள் அமைதியை ஏற்படுத்த வேண்டுமென்றார்.

அவர் என்ன பேச வேண்டுமென்று தான் எதிர்ப்பார்ப்பதாக நேஷனல் போஸ்ட்டில் Alistair Gordon என்பவரின் கட்டுரை என்னை கவர்ந்தது.

அவர் உலகின் 8 ட்ரில்லியன் டாலர்கள் பொருளாதாரமாக கொண்டுள்ள சீனாவிற்கு 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதார நாடான கனடா என் உதவ வேண்டும் என்கிறார்.

சுதந்திரம் கிடைத்து 60 வருடங்களில் உலகின் மிக பெரிய ஜனநாயக நாடும் வருங்கால வல்லரசுமான இந்தியாவிற்கு ஐ.நா பாதுகாப்பு குழுவில் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்த்து அளிக்க வேண்டும் என்கிறார். அது என்னை மிக கவர்ந்தது. அவருடைய முழு கட்டுரை இங்கே


காலகரி ஹெரால்டில் வார இறுதிக்கு என்ன செய்யலாம் என தேடிய போது பாகிஸ்தானின் அதிபர் முஷாரப் படம் போட்டு ஒரு செய்தி. அவர் CBS க்கு அளித்த பேட்டி வரும் ஞாயிறன்று ஒளிபரப்ப உள்ளது. அந்த பேட்டியில் அவர் அமெரிக்கா 9/11 க்கு பிறகு பாகிஸ்தானை மிக பயமுறுத்தியது. ஆப்கானிஸ்தானை தாக்க அனுமதிக்கவில்லை என்றால் நீங்கள் கற்காலத்திற்கு போக வேண்டியிருக்கும் என அந்நாளைய அமெரிக்காவின் துணை பாதுகாப்பு அமைச்சர் ஆர்மிடாஜ் பயமுறுத்தினார் என்று சொல்லியிருக்கிறார். எல்லாரும் அமெரிக்காவை திட்டும் போது நாமும் திட்டிவிடலாம் அப்போதுதான் லோக்கலில் நல்ல பெயர் கிடைக்கும் அதே நேரம் அமெரிக்காவும் அவ்வளவு கவனிக்காது என அவர் நினைத்திருக்கலாம்.

திண்ணை, தமிழ் மணம் ஆகியவைகளை இன்று படித்த போது இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம் என நாகூர் ரூமி முதல் பதிவுகளில் எழுதும் அனைத்து இஸ்லாமிஸ்டுகளும் எழுதி வெங்கட் சாமிநாதனையும் நேசகுமாரையும் திட்டியிருந்தார்கள். சரி நாமும் Religion of Peace என கூகுளில் தேடினால் கிடைத்தது இங்கே

அது சரி எதுக்கு இந்த பதிவு என்று கேட்கிறீர்களே. நண்பர் ஒருவர் "அண்ணே என்ன ஆளேக் காணாமே எழுத்து துறவறம் பூண்டு வீட்டீர்களா?" என ஈ-மெயில் அனுப்பி உசுப்பி விட்டிருந்தார் அதன் விளைவு தான் இந்த பதிவு

39 comments:

said...

//என்ன பதில் வரும் என்று சரியாக சொல்வோருக்கு ஒரு கிளாஸ் ஜிகர்தண்டா இலவசமாக வழங்கபடும்.//

சரியான பதிலைச் சொன்ன எனக்கு இன்னிக்கு ஜிகர்தண்டா கிடைக்கும். ஆனா அப்படி கேள்வி கேட்ட ஆளுக்கு அடுத்த நாள் பால்தான் கிடைக்கும்!

said...

//என்ன பதில் வரும் என்று சரியாக சொல்வோருக்கு ஒரு கிளாஸ் ஜிகர்தண்டா இலவசமாக வழங்கபடும்.//

எதுக்கு?குளிர்காலத்தில் ஜன்னி வந்து படுக்கவா?பல சமயங்களில் நீங்கள் உள்குத்து யாருக்கு வைக்கிறீர்கள் என்பதே புரிபடுவதில்லை:-)

said...

வெனிசுலா அதிபர்தாங்க மீச இல்லாத ஆம்பிள.

அமெரிக்கா அங்க போயி குண்டு போடச்சொல்லுங்க
பாக்கலாம். மாட்டாங்க,ஏன்னா பெட்ரோல் குடுக்கராங்களே.
பெட்ரோல் வித்த பணமெல்லாம் அமெரிக்கா வங்கிலேதானே இருக்குது.

ஒரு வகையிலே சாவேஸ் நன்றிதாங்க சொல்லனும் புதருக்கு.
ஏன்னா புதர் பதவிக்கு வந்தப்புறம்தானே சர்வதேச சந்தையிலே
எண்ணை விலை எகிருச்சி.

வெனிசுலா வருமானம் மூணு மடங்கு ஆயிருச்சு.

said...

கொத்தனார், உங்க பஞ்ச் டயலாக் சூப்பர்

said...

செல்வன், என் மனது தூய்மையானது யாருக்கும் உ.கு இல்லீங்க எல்லாருக்கும் உ.பா(நன்றி தினமலர்) குடுத்துதான் பழக்கம்

said...

//அமெரிக்கா அங்க போயி குண்டு போடச்சொல்லுங்க
பாக்கலாம். மாட்டாங்க//

பெருசு மாட்டவே மாட்டங்க பெட்ரோல் மட்டுமா தர்ரங்க?

அதிக அளவில் உலக அழகிகளை அள்ளி கொடுத்த நாட்டை குண்டு போட்டு அழிக்க நினைத்தால் நம்ம ஜொள்ளு பாண்டி பொங்கிட மாட்டாரு?

said...

//"அண்ணே என்ன ஆளேக் காணாமே எழுத்து துறவறம் பூண்டு வீட்டீர்களா?" //
நல்லா கிளப்பி விடுறாங்கய்யா :)).. மத்தபடி ஜ.நா ஒண்ணும் புஷ்ஷின் நாடு இல்லையே? அப்புறம் மத்தவங்க எல்லாம் குடிமக்களும் இல்லையே? எல்லாரும் ஒரு நாட்டின் அதிபர் தானெ?

said...

சந்தோஷ்,

நான் சும்மாதான் இருந்தேன் இப்படி கிளப்புறாங்களே. அவங்க கிளம்பாமே மத்தவங்களே கிளப்புறாங்களே.

நீங்க சொல்றது சரிதான், அவங்க என்ன ஆடுனரியா அதிபர்கள் இல்லையா அதுதான் என்னவானாலும் பேசலாம்.

said...

//ஒரு வகையிலே சாவேஸ் நன்றிதாங்க சொல்லனும் புதருக்கு.
ஏன்னா புதர் பதவிக்கு வந்தப்புறம்தானே சர்வதேச சந்தையிலே
எண்ணை விலை எகிருச்சி.
//

சாவேஸ் மட்டுமா பெருசு நானும் தான். தொழில் நல்லா நடக்குதில்லே

said...

//
"ஐயா உங்க ஊருலே உங்களே எதிர்த்து உங்க மக்கள்லே ஒருத்தர் சின்னதா பேசினா என்னய்யா பண்ணுவீங்க?"
//

முதலில் அவரை "தேடுவார்கள்..."

பிறகு "கிடைத்தவுடன்.." போட்டுத் தள்ளிவிடுவார்கள்...!

//
இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம்
//

Death to those who say islam is violent!

said...

வாங்க வஜ்ரா, இஸ்ரேலுக்கு திரும்பி வந்துட்டீங்களா?

மதுரை ட்ரிப் எப்படி இருந்தது?

said...

//
இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம்
//

athu amathi markamilla mathavankala niranthara amathi paduthara markam.

said...

வீட்டில் உள்ள விண்டோஸில் பதிவு போட முயற்சித்து ஒரு பதிவு போட்டேன்...எக்கச்செக்க spelling mistake...!! ஆப்பிளின் சுகம் விண்டோசில் இல்லை.

மதுரையில் கூட அகலப்பட்டை வசதி வெகுவாக கிடைக்கிறது...!! மழை பெய்தால் மத்திய பஸ்டாண்டு (பெரியார் பஸ் ஸடாண்டு) தெப்பக்குளமாகாமல் இருக்கிறது...இது பெரிய மாற்றம் தான்!

ஜிகர் தண்டா குடித்து காய்ச்சல் வந்து படுத்தேன்.. மஞ்சனக்காரர் தெரு பாய், குடும்பம் பல்கிப் பெருகி பேமஸ் ஜிகர் தண்டா கடையை கீழ மாரட்டு வீதி, காமராஜர் சாலை சந்திப்பில் தள்ளுவண்டி இல்லாமல் ஒரு சின்ன கடையில் வைத்து வியாபாரம் செய்கிறார்கள்...கடை பூரா கஜாரியா டைல்ஸ் ஒட்டி அமர்க்களமாக இருக்கிறது...

சிக்குன் குனியா பரவிக்கொண்டிருக்கிறது...தப்பித்து ஓடி வந்து விட்டேன்.. நண்பர் அவதிப்பட்டிருந்தார்...

மற்றபடி ரோட்டோர புளுதி மணல் இன்றும் தமிழ்மண ஜல்லிகளைவிட அதிகம் இருக்கிறது... என்றைக்கும் போல்..

மகால்... நல்ல பெயிண்ட் அடித்து டூரிஸ்ட்கள் பார்த்து சந்தோஷப்படும் அளவிற்கு வைத்திருக்கிறார்கள்..ஆனால் வெளிச்சுவறில் ஒண்ணுக்கு அடித்து நாரடிப்பதை இன்னும் மதுரை மைந்தர்கள் நிறுத்தியபாடில்லை. அதே தான் மீனாக்ஷி கோவில் சுற்றியும்...வெளிமானில டூரிஸ்டுகள் வரும் இடத்தில் பொதுக்கழிப்பிடம், அதிகம் இருக்கவேண்டும் என்பதை மானகராட்சி உணர மருத்துக் கொண்டுதான் இன்றும் இருக்கிறது..

மற்றபடி மாற்றம் ஒன்றும் அதிகமில்லை..அதே போல் தான் இருக்கிறது..

said...

ஐயா சிவா,

மதுரை எப்படி இருந்தது என்று ஒரு நீண்ட பின்னூட்டம் போட்டேன்..அதை இன்னும் காணோம்!! ? ப்ளாக்கர் சொதப்பிவிட்டதா?

said...

கால்கரி சிவா அவர்கள் கொடுத்த லிங்க்-ல் பார்த்தால் மனம் "பக்"-என்றிருக்கிறது. இவ்வளவு அநியாயங்களுக்கு பின்னரும், "இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம்" ... "அது 'ஒரு சில' இஸ்லாத்தை சரியாக விளங்கிக்கொள்ளாதவர்களால் செய்யப்படுவது"... என்றெல்லாம் எழுத எப்படித்தான் மனம் வருகிறதோ. P.C.ஜேம்ஸ் சொல்லியபடி, காபிர்களை போட்டுத்தாக்கி "ஒரேடியாக அமைதிப்படுதுவது" என்ற அர்த்தம் இருக்குமோ என்னவோ ...

said...

வஜ்ரா,

உங்கள் பின்னூட்டம் கிடைக்கவில்லை

said...

பி.சி. ஜேம்ஸ்.

தங்கள் கருத்துக்கு நன்றி

said...

பாலாமணி,

வெகுசிலரே தவறானவர்கள் என்பது உண்மை.

அந்த வெகுசிலருக்கு வெகு பலர் பயப்படுவது வேதனை.

அந்த வெகுபலரும் காபிரல்லாதவருக்கு எதிராக பேசுவதா என தயக்கதுடனே இருப்பது மேலும் வேதனை

said...

//எல்லாரும் அமெரிக்காவை திட்டும் போது நாமும் திட்டிவிடலாம் அப்போதுதான் லோக்கலில் நல்ல பெயர் கிடைக்கும் அதே நேரம் அமெரிக்காவும் அவ்வளவு கவனிக்காது என அவர் நினைத்திருக்கலாம்.
//

:-))))

said...

சிவா
நல்ல பதிவு இட்டுள்ளீர்கள். நமது டிடி கிருஷ்மாச்சாரிதானே தொடர்ந்து 8 மணிநேரம் உலக சபையில் பேசியது?

said...

சிவா,

//
பாலாமணி,

வெகுசிலரே தவறானவர்கள் என்பது உண்மை.

அந்த வெகுசிலருக்கு வெகு பலர் பயப்படுவது வேதனை.

அந்த வெகுபலரும் காபிரல்லாதவருக்கு எதிராக பேசுவதா என தயக்கதுடனே இருப்பது மேலும் வேதனை//

மேற்கண்ட உங்கள் கருத்திலிருந்து சில சதவீதங்கள் மாறுபடுகிறேன். சற்றேறக்குறைய 100% என்று வைத்துக்கொள்வோம். 95% (இன்னும் அதிகமாகவே) இஸ்லாமியருக்கு இவ்வுலகில் முழுமையாய் இஸ்லாமிய ஆட்சி மலர வேண்டுமென்பதுதான் ஆசை, வேண்டுதல் எல்லாம். போர்கள் மூண்டு, அணுகுண்டுகள் வெடித்தாவது இது நடந்தால் சரிதான். அந்த 'வெகுசிலரைப்' பார்த்து 'வெகுபலர்' பயப்படுவதாக நாம் நினைப்பது, நமக்கு நாமே சொல்லிக் கொள்ளும் முட்டாள்த்தனமான சமாதானம். 'அமைதியான முறையில்' இஸ்லாமியர் கருத்துப் பறிமாறவும் விவாதம் செய்ய வரும் போதே எதிராளி முகமூடியோடு, பாதுகாப்போடு இருக்க வேண்டியிருக்கிறது. அதைத்தவிர எத்தனை முறை மூக்குடைபட்டாலும், சாதாரண கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் ஓடினாலும், உலகெங்கிலும் ஆதாரங்கள் கொட்டிக் கிடந்தாலும் தடித்த தோலுடையவர்களால் இஸ்லாம் அமைதி மார்க்கம் என்று சொல்ல முடிகிறது. சொல்கிறார்கள். ஏன் 'வெகுபலர்', 'வெகுசிலருக்கு' எதிராய் தெருவில் கொடி பிடிப்பதில்லை? ஷியாக்களின் புனிதத்தலத்தில் உள்ள மசூதி இராக்கில் குண்டால் தகர்க்கப்பட்ட போது இந்தியாவில் எத்தனை ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடந்தன? http://news.bbc.co.uk/2/hi/middle_east/4738472.stm

ஆனால் இவ்வளவு வருடங்களுக்குப் பின்னும் Dec 6 இந்தியா முழுவதும் எவ்வளவு பதட்டமாயிருகிறது. ஏன்? காபிர்கள் பொது எதிரிகள். அவர்களை ஒழித்து, உலகம் முழுவதும் இஸ்லாமிய ஆட்சி மலரச் செய்ய வேண்டும். அப்புறம் நம்ம சண்டையைப் போட்டுக்கொள்ளலாம். இதுவே அல்லாவின் விருப்பம். இதுவே எல்லோருக்கும் நல்லது. இதற்காக என்ன பொய் வேண்டுமானாலும் சொல்லலாம். என்ன அயோக்கியத்தனம் வேண்டுமானாலும் செய்யலாம். உயிரையே கொடுக்கலாம். இதுவே ஒவ்வொரு இஸ்லாமியருக்கும் புகட்டப்பட்ட விஷம். அந்த 'வெகுபலர்' பயத்திலில்லை. 'வெகுசிலருக்கு' வெளிப்படையான ஆதரவு தராவிட்டாலும், உள்ளூர மனப்பூர்வமான ஆதரவு உண்டு. இதற்கு ஆதாரம் வலைப்பூக்களெங்கும் கொட்டிக்கிடக்கிறது. 'வெகுபலர்' வெறுமே காத்திருக்கிறார்கள். தக்க தருணத்திற்காக.

கணேஷ்.

said...

என்னார் சார், நன்றி உங்கள் நட்சத்திர வாரம் அருமையாக இருந்தது.

டி.டி.கே அதிக நேரம் பேசினாலும் நம் இந்தியர்கள் ஐ.நா.வில் சாதித்தது கம்மி.

said...

கணேஷ், தங்கள் கருத்துக்கு நன்றி. 100% அவ்வாறு இருப்பதாக நான் நினைக்கவில்லை ஆனால் அவர்களின் அமைதி அவ்வாறு நினைக்க தூண்டுகிறது

said...

//
வெகுசிலரே தவறானவர்கள் என்பது உண்மை.

அந்த வெகுசிலருக்கு வெகு பலர் பயப்படுவது வேதனை.

//


இடதுசாரி "அறிவு சீவி"களும், இஸ்லாமிய அறிவு சீவிகளும் இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம் என்று சொல்லிக்கொண்டு தான் இருக்கிறார்கள்...

ஆனால் இஸ்லாமியர்கள் அதை உண்மை என்று நிறூபிப்பது இல்லை.

For a change let the muslims show really that islam is a religion of peace by not involving in terror attacks and justifying it in the name of Allah.

Let them walk the talk.

இந்த வெகு சிலர் செய்யும் தீவிரவாதத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் "அமைதி" யாக வெகு பலர் இருப்பதினால் தான் அது "அமைதி" மார்க்கமா?

said...

ஆக, உலகில் உள்ள ஒரு கோடிப் பேரும் தீவிரவாதிகள் என்கிறீர்கள். நல்ல சிந்தனை..

இஸ்லாத்தில் உள்ள மிகப் பெரிய பலவீனம் என்ன வென்றால் இஸ்லாத்தைத் தழுவுகிறேன் என்று வருகிறவனையெல்லாம் ஏற்றுக் கொள்வது. அவன் நல்லவனா, கெட்டவனா, என்றெல்லாம் பார்ப்பதில்லை. டிவி மற்றும் பத்திரிக்கை மீடியாக்கள் எல்லாம் இஸ்லாமிய எதிர்ப்பாளர்களின் கையில் இருப்பதால் அவர்கள் சொல்லுவதெல்லாம் வேதவாக்காய்ப் போகிறது. இதில் வலைத்தளம் வேறு. 40 டாலர் கொடுத்தால் வலைத்தளம் கொடுக்கிறார்கள். எந்த இணையச் சட்டமும் செல்லுபடியாகத நாடுகளில் அதைப் பெற்று, இருக்கின்ற ஏனைய மதங்களைப் பற்றி அவதூறாக மற்றவர் எழுதி வைப்பதற்கு ரொம்ப நேரமாகாது. ஆனால் இது எங்கு போகிறது.

போட்டி போட்டுக் கொண்டு இங்கு எழுதித் திரிகிற அனைவருக்கும் எளிதில் வசப்படாதவன் இறைவன். இங்கு உள்ள அனைவரும் இறைவனின் பார்வையில் ஒன்றே. தேவையில்லாமல் என் மதம் பெரிது உன் மதம் பெரிது என்ற சர்ச்சையும் ஒரு சாராரை மறு சாரார் அவமதித்துப் பேசுவதும்இ வேடிக்கையாக உள்ளது. ஒரு சுனாமி வந்தால் அதற்கு எந்த மதத்தைச் சார்ந்தவனையும் தெரிவதில்லை. ஒரு புலியைக் கொண்டு வந்து ஊருக்குள் விட்டால் கூட அதற்கு சாதி மதம் பார்த்து அடித்துத் தின்னத் தெரியாது. அது போல்தான் இறைவனுக்கும், எந்த மதம் எந்த சாதி என்று பார்க்கத் தெரியாத பரம்பொருள் அவன். இயற்கையிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது எவ்வளவோ இருக்கிறது.

said...

நிக்சன் அமெரிக்க அதிபராக இருந்தபோது நான் படித்த நகைச்சுவை ஒன்று. "நிக்சனே நீ ஒரு முட்டாள் என்று என்னால் வாஷிங்டன் தெருக்களில் கத்த முடியும்" என்று சொன்ன அமெரிக்கனைப் பார்த்து ரஷ்யன் சொன்னான்,"என்னாலும் நிக்சனே நீ ஒரு முட்டாள் என்று மாஸ்கோ தெருக்களில் கத்த முடியும்".

said...

திருவடியான்,

//ஆக, உலகில் உள்ள ஒரு கோடிப் பேரும் தீவிரவாதிகள் என்கிறீர்கள். நல்ல சிந்தனை..//

நான் யார் தீவிரவாதி என எண்ணிக்கை எல்லாம் தரவில்லையே

//தேவையில்லாமல் என் மதம் பெரிது உன் மதம் பெரிது என்ற சர்ச்சையும் ஒரு சாராரை மறு சாரார் அவமதித்துப் பேசுவதும்இ வேடிக்கையாக உள்ளது. //

என் நிலையும் இதுவே. என் நம்பிக்கை எனக்கு உன் நம்பிக்கை உனக்கு. என் நம்பிக்கையைப் பற்றி அவதூறாகவும் வன்முறையாகவும் பேசுவதால் தான் எதிர்வினை.

மேலும் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த அரேபியர்களை குறை கூறும் போதும் அந்த நாட்டில் நடக்கும் அட்டூழியங்களை வெளிச்சம் போட்டு காட்டும் போதும் அதன் நல்லப் பக்கங்களை காட்டாமல் மதம் என்று சொல்லி பாயும் கூட்டங்களை எதிர்க்கிறேன்.

said...

ஓகை சார்,

கம்யூனிச நாடுகளிலும் சர்வாதிரிகள் நாடுகளிலும் இது தான் உணமை

said...

//
இயற்கையிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது எவ்வளவோ இருக்கிறது.
//

திருவடியான்... நீங்கள் இயற்கையை வழிபடுபவரா...? அப்பொ உங்களுக்கு நிச்சயம் ஜெஹன்னும் தான்...அல்லா தான் ஒரே கடவுள். அவரை வழிபடாமல் கண்டதை கும்பிடுகிறீர்கள்...அல்ல்து புலிக்கு அல்லாவைவிட அதிக power இருப்பது போல் பேசுகிறீர்கள்...

அல்லாஹ் வந்தால் குல்லா, தாடி கேசுகளை தவிர மற்றவர்களை ஜெஹன்னுமுக்கு அனுப்பிவிடுவார்... பார்த்து...உடனே குல்லா போட்டு தாடி வளர்த்து, ஒரு தொள தொள ஜிப்பா போட்டு அத்தர் அடித்துக் கொண்டு ஐந்து முறை அரேபியா நோக்கி தொழுங்கள்...

said...

கால்கரி ஐயா,

ஐ.நா.வைப் பற்றிய பதிவில் அமைதி மார்க்கத்தை சாமர்த்தியமாக நுழைத்து அதை விவாதப் பொருளாக்கி விட்டீர்களே! பாராட்டுக்கள் :))

உங்கள் profile-ல் art-of-living அன்று interessல் போட்டிருக்கிறீர்கள். தத்துவார்த்தமாக எழுதியதா இல்லை ஸ்ரீஸ்ரீரவிசங்கர் அவர்களின் "வாழும் கலை" இயக்கத்தைக் குறிக்கிறதா?

said...

ஜடாயு, நான் குறிப்பிட்டிருந்தது ஸ்ரீஸ்ரீரவிசங்கரின் ஆர்ட்-ஆப்-லிவிங் பற்றிதான்.

நான் தேடும் போது அமைதி மார்க்கம் கண்ணில் படுகிறது. சிறு வயதில் மஞ்சள் காமாலையில் பாதிப்படைந்தவன் நான் ஹி..ஹி..

said...

நம்மளும் 50 வருஷமா முயற்சி பண்ணறோம் இன்னும் நெருங்கவெ முடியலே.
நீங்கள் கேட்ட தியகராஜ கீர்த்தனைக்கு விளக்கம் ஆரம்பித்துள்ளேன் வந்து பாருங்கள்.

said...

நண்றி தி.ரா.சா அவர்களே

said...

//"ஐயா உங்க ஊருலே உங்களே எதிர்த்து உங்க மக்கள்லே ஒருத்தர் சின்னதா பேசினா என்னய்யா பண்ணுவீங்க?"//

குட் கொஸ்டீன்

//சரியான பதிலைச் சொன்ன எனக்கு இன்னிக்கு ஜிகர்தண்டா கிடைக்கும். ஆனா அப்படி கேள்வி கேட்ட ஆளுக்கு அடுத்த நாள் பால்தான் கிடைக்கும்! //

குட் ஆன்சர்.

கீப் இட் அப் கைஸ்
:))))

said...

தாங்க்ஸ் தேவ்

said...

உங்களை உசுப்பிவிட்ட நண்பருக்கு நன்றி.. வாரதிற்க்கு ஒன்றாவது எழுதலாமே நீங்கள்.. எப்போதும் எழுதுவதை நிறுத்தாதீர்கள் சிவா

said...

நல்ல பதிவு..அந்த ஜிகர்தண்டா செய்முறையை மீள்பதிவாக்குங்க...மக்கள் தெரிஞ்சுக்கட்டும்...

said...

கார்த்திக், நிச்சயமாக. இந்த வாரம் கொஞ்சம் பிசி. அடுத்தவாரம் பாருங்கள்
கனடாவின் தாங்க்ஸ் கிவிங் டே முதல் மீண்டும்

said...

ரவி, நன்றி. ஜிகர் தண்டா போர் அடிக்கலியா. மற்ற பானங்கள் பற்றியும் எழுதலாம் என இருக்கேன்