Friday, September 08, 2006

மீண்டும்....

மீண்டும் இந்தியாவில் தீவிரவாதிகளின் வெறியாட்டம். இந்த முறை நாசிக் முஸ்லிம் கள் நிறைந்த பகுதியில் அடுத்தடுத்து 4 வெடிகுண்டுகள். இது வரை 40 பேர் பலி என்று செய்திகள்

ஒரு முறை மும்பை அடுத்து அருகில் இருக்கும் நாசிக்.

இது நடந்தது முஸ்லிம்கள் அதிகமுள்ள பகுதியில்.

இதை இந்து தீவிரவாத கும்பல் நடத்தியிருந்தால் அவர்கள் அதிகபட்ச தண்டனை பெறவேண்டுமென்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

இதுவே அந்திய நாடுகள் இந்து முஸ்லிம் கலவரத்தை இந்தியாவில் தூண்டிவிட நடத்தியிருந்தால் அவர்களை ஒடுக்க இதுதான் சரியான தருணம்

செய்யுமா நம் அரசு அல்லது சும்மா அறிக்கைகள் விட்டு அடுத்த வெடிப்புகளுக்காக காத்திருக்குமா?

புஷ் எவ்வள்வுதான் மோசமானவர் என்றாலும் அவரது நடவடிக்கையால் அமெரிக்காவில் 5 வருடங்களாக எந்தவித அசாம்பாவிதம் நடக்கவில்லை.

அவரிடமிருந்து இந்திய அரசு கற்றுக் கொள்ள நிறைய பாடமிருக்கிறது

தீவிரவாதிகள் ஒழிக.....

7 comments:

said...

இந்தியாவில் கடுமையான சட்டம் வரவேண்டும் அப்பொழுது தான் தீவிர வாதத்தை ஒழிக்க முடியும்

said...

பாகிஸ்தானுக்கு ஆப்படிக்க இன்னொரு இந்திரா காந்தி இல்லையே என்ற வருத்தம் இருக்கிறது.நினைத்த போதெல்லாம் குண்டு வைக்கிரான்களே?

இந்து தீவிரவாதிகள் செய்திருந்தால் பிடித்து முட்டிக்கு,முட்டி தட்டி தூக்கில் போட வேண்டும்.யார் குண்டு வைத்திருந்தால் என்ன?சாகிறவன் இந்தியன் தானெ?

said...

இஸ்லாமிய வழிபாட்டுத் தலத்தில் குண்டு வெடித்துப் பலர் மரணம். ஹிந்துக்களுக்கு மட்டுமே விதிக்கப்பட்ட இந்த சாபம், இஸ்லாமியர்களின்மேலும் பாய்ந்துள்ளது. மேலோட்டமாகப் பார்த்தால் தீவிரவாதிகளின் செயல்களுக்கு மதம் காரணம் இல்லை என்பது போலத் தோன்றும். அது ஓரளவுக்குத்தான் உண்மை.

காரணம்: முழுமையான பொது நலம் என்ற ஒன்று பெரும்பாலும் இல்லை. ஸமூக ஸேவை என்கிற பெயராலும், மதரீதியான காரணங்கள் என்கிற பெயராலும் நடக்கின்ற காரியங்களின் முக்கிய காரணமாக இருப்பது எதேச்சதிகார சுயநலம். பின்னே, வெறுமே உதவி செய்வதற்கு மனிதர்கள் என்ன இளிச்சவாயர்களா? மகாத்மாக்கள்கூட நல்ல பெயருக்காகவும், எல்லாருடைய தலைவர் என்று அழைக்கப்படவேண்டும் என்பதற்காகவும்தான் மாற்று குழுக்களுக்கு உதவி செய்திருக்கிறார்கள். தங்களுடைய குழுவிற்குத் த்ரோகமும் செய்திருக்கிறார்கள் - அன்பின் பெயரால். அல்லது அதீதமான உடோப்பியாக்களின் ஆதிக்கத்தில் ஸ்வர்க்கத்திற்காகவும், தான் செய்வது ஒரு உயர்ந்த செயல் என்கிற மயக்கத்தாலும் செய்துவந்திருக்கிறார்கள். இதில் தீவிரவாத இஸ்லாமியக்குழுக்களை மட்டும் ஏன் விதிவிலக்காக்க வேண்டும்?

இஸ்லாமிய தீவிரவாதத்திலும் பல குழுக்கள் இருக்கின்றன. ஒவ்வொரு குழுவும் மற்ற குழுக்களை அடக்கியாள நினைக்கின்றது. என்னதான் பாக்கிஸ்தான் இந்தியாவை ஒரு இஸ்லாமிய நாடாக மாற்ற தீவிரவாத நடவடிக்கைகள் செய்துவந்தாலும், அதன் உண்மையான காரணம் இந்திய ஆக்கிரமிப்புத்தான். ஆளப்படுபவர்கள் இந்திய முஸ்லீம்களாக இருக்க வேண்டும் என்கிற நோக்கத்தில்தான் பாக்கிஸ்தான் இந்தத் தீவிரவாதச் செயல்களைச் செய்து வருகின்றது. ஏனெனில், ஆளுகின்ற மக்கள் ஆளப்படும் மக்களின் உழைப்பையும், சொந்தமான இயற்கை வளங்களையும், உரிமையையும் தங்களின் நலனுக்காக, வளத்திற்காக, சுகத்திற்காகப் பயன்படுத்திக்கொள்வர். இதற்கு வாய்ப்பில்லாத இடங்களில் ஸமூக ஸேவைகளும், மத போதனைகளும் நடைபெறுவதில்லை. அதனாலேயே ஆப்பிரிக்காவிலும், இந்தியாவிலும் நடைபெற்றுவரும் பொது நலச்செயல்கள் அந்தச்செயல்களை செய்துவரும் நாடுகளில் மிக மிகக் குறைந்த அளவில்தான் நடைபெறுகின்றன. (உதாரணமாக, அமெரிக்ககவில் கேத்ரீனா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த மதப்போதகர்களும் உதவி செய்யப்போகவில்லை. ஆனால் தமிழக சுனாமிக்கு இந்தியாவிலுள்ள அத்தனை மதக் குழுக்களும் உதவி செய்தன என்கிற விஷயங்கள்.)

இந்தியாவிலுள்ள தீவிரவாதத்தை நம்புகின்ற இஸ்லாமிஸ்ட்டுகளுக்கும் இது தெரியும். இவர்களின் நோக்கமோ இந்தியாவை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்பதுதான். அதனாலேயே பாக்கிஸ்தானிடமிருந்தும், மற்ற இஸ்லாமிய நாடுகளிடமிருந்தும் உதவிகளைப் பெற்றுக்கொண்டாலும், அந்த நாடுகளின் ஆதிக்கத்திற்குள் இருக்க இவை விரும்பவில்லை. இவர்களிடையே இருக்கும் உறவு செம்மொழியில் கூறப்படுவதுபோல "அநுகூல சத்ரு" என்கிற உறவுதான். எனவேதான் இந்தியாவில் இருக்கும் இஸ்லாமியர்கள் முழுக்க முழுக்க பாக்கிஸ்தான் ஆதரவாளர்கள் என்பது தவறாகின்றது.

இவர்களிடையே நடைபெற்றுவரும் அன்பு-வெறுப்பு (love hate) உறவின் வெளிப்பாடுதான் இஸ்லாமிய வழிபடு தலங்களில் ஏற்பட்டுவரும் குண்டு வெடிப்புக்கள்.

இதனால் பாக்கிஸ்தானுக்குத்தான் லாபம். ஒன்றல்ல, இரண்டல்ல, பல லாபங்கள். அவையாவன:

1. தீவிரவாத இஸ்லாமிஸ்ட்டுக்களுக்கு இது கையறு காலம். பாக்கிஸ்தானின் உதவியை எதிர்பார்க்கும் தீவிரவாத இஸ்லாமிஸ்ட்டுக்களால் இந்த நிகழ்விற்குப் பின்னும் பாக்கிஸ்தானுடன் முழுமையாக உறவை முறித்துக்கொள்ள முடியாது. ஏனெனில், பாக்கிஸ்தானின் ஆதரவு இவற்றிற்குத் தேவை.

2. இது பாக்கிஸ்தானின் ஆதிக்கத்தை இந்திய தீவிரவாத இஸ்லாமிஸ்ட்டுக்கள் ஏற்றுக்கொள்வதற்குச் சமம். ஏனெனின் அரஸியலில் பல உறவுநிலைகள் முழு சம்மதங்களோடு ஏற்படுவதில்லை. இப்படிப்பட்ட உறவு ஏற்பட்ட பின்னால், இந்த உறவில் உயர்படி நிலையில் இருப்பவர்களால் கீழிருப்பவர்களைச் சிறிது சிறிதாக தங்களின் ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்ள வைத்துவிட முடியும். (உதாரணமாக, சுதந்திரம் பெற்ற பின்பும் ஆங்கிலேயர் ஆதிக்கத்தை விரும்பும், எதிர்பார்க்கும் த்ராவிடஸ்தானிஸ்ட்டுக்கள், ஈவேரா உள்ளீடாக.)

3. இந்த நிகழ்ச்சியின்மூலம் பாக்கிஸ்தான் தன்னுடைய மகத்துவத்தை இந்திய முஜாஹிதீன்களுக்கு புரிய வைத்துள்ளது.

4. இந்த நிகழ்வின் விளைவாய் இந்திய தீவிரவாத இஸ்லாமிஸ்ட்டுக்கள் ஹிந்துக்களோடு ஒன்றிணைந்து பாக்கிஸ்தானை எதிர்ப்பார்கள் என்றும் எதிர்பார்க்க முடியாது. ஏனெனில், இவர்களுக்கு ஹிந்துத் தோழர்களின் உயிர் மற்றும் மானத்தைவிட இஸ்லாமிய முதலாளிகளின் பாராட்டு முக்கியமானது.

5. பாக்கிஸ்தானுக்குக் கிடைக்கும் மற்றொரு லாபம் என்னவென்றால், இந்தியாவிலுள்ள இஸ்லாமியர்கள் இதுபோன்ற செயல்களுக்கு ஹிந்துக்களின்மீதே பாய்வார்கள். பாக்கிஸ்தானை எதிர்க்கப்போவதில்லை. அதனால், இந்திய பொருளாதாரம் பாதிக்கும். (அப்படி நடைபெறாவிட்டால், இந்தியத் தீவிரவாத இஸ்லாமிஸ்ட்டுக்கள் பாக்கிஸ்தானின் இந்த சூழ்ச்சியை முறியடித்தார்கள் என்று பொருள்.)

6. தீவிரவாதம் என்பது மதம் தாண்டியது என்பதை இதுபோன்ற ஓரிரு செயல்களால் நிறுவிவிடுவதால் தீவிரவாதச்செயல்களுக்கு பத்திரிக்கைகளும், அரஸியல்வாதிகளும் பல ஸம்பந்தமில்லாத காரணங்களைக் கண்டுபிடித்து, அந்தக் காரணங்கள் உண்மையல்ல என்று நிறுவ அரஸு இயந்திரத்தை முடுக்கும். இதனால், அரஸு இயந்திரம் எதையும் நிறுவ முடியாது திணறும். சுய பலமும், அபிப்பிராய பலமும் இழக்கும். உண்மையான காரணங்களோ இந்தியா முழுக்க புனித யாத்திரை போகும். அரஸாங்கத்தின் செலவில் வெளிநாடுகளுக்கும் போகும். அரஸாங்கத்தின் இந்தச் செலவுகளுக்கு வரி கட்டிவரும் அப்பாவி மக்கள் உயிர், உடமை, மானம், நம்பிக்கை இழப்பர். எதேச்சதிகார ஷக்திகளுக்கு இந்திய அரஸாங்கத்தால் இருக்கும் கொஞ்ச நஞ்ச இடையூறுகளும் விலகும்.

7. இஸ்லாமிய வழிபடு தலத்தில் குண்டுக்களை இந்திய தீவிரவாத இஸ்லாமிஸ்ட்டுக்களின் ஆதரவில்லாமல் யாரும் செய்திருக்க முடியாது. மதத்தை மீறி இதுபோல செயல்பட்டுவரும் இந்திய முஸ்லீம்கள் கீழானவர்கள் என்று பாக்கிஸ்தான் தன் நாட்டு மக்களுக்கு போதிக்க இது ஏதுவாகும். இதனால், பாக்கிஸ்தானியர்கள் இந்திய முஸ்லீம்களை அடிமையாக நடத்த மேலும் ஒரு காரணம் கிடைக்கும். இதுபோன்ற கீழான செயல்களில் நாங்களெல்லாம் ஈடுபட மாட்டோம் என்று சுயகர்வம் கொள்ளவும் செய்யும். இந்த சுய கர்வம் அரஸாளயிருப்பவர்களுக்குத் தேவைப்படும் மனோரீதியான டானிக்.

8. இந்திய அரஸாங்கம் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறையைக் கட்டுக்குள் கொண்டுவரவில்லை என்பது.

9. இந்தியாவில் இஸ்லாமியர்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்ற வாதத்தைப் பரப்புவது.

10. பாக்கிஸ்தான் மற்றும் மற்ற இஸ்லாமிய நாடுகளின் தீவிரவாதத்தை எதிர்க்கும் மக்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரிப்பது. இந்திய அரஸாங்கத்தை இவர்களுக்கு எதிராகத் திருப்புவது.

11. இந்தியாவிலுள்ள போலி ஸெக்யூலர்வாதிகளுக்கு ஸமூக, அரஸியல், பொருளாதார, மற்றும் பொதுஜன அபிப்ராய ரீதியாகவும் பலத்தை அதிகரிப்பது.

12. இந்த இழிசெயலில் யாரேனும் ஒரு இஸ்லாமியரல்லாதவர் மாட்டினால், இதுவரை நடந்த, இனிமேல் நடக்கவிருக்கிற அத்தனைத் தீவிரவாதச் செயல்களுக்கும் இஸ்லாமியத் தீவிரவாதம் காரணம் இல்லை என்று மாஸ் ஹிப்னட்டைஸ் செய்வது. இஸ்லாமியத் தீவிரவாதத்தை எதிர்ப்பவர்கள்தான் உண்மையில் தீவிரவாதிகள் என்று நிறுவி அவர்களின் செயல்பாட்டை, வாழ்வைச் சிதைப்பது. இதன்மூலம் ஸமூக ரீதியாகவுள்ள எதிர்ப்பு அமைப்புக்களை அழிப்பது.

13. இந்தியாவிலுள்ள அமைதிவிரும்பும் இந்தியப் பற்றுள்ள இஸ்லாமியர்களின் பலத்தை அழிப்பது.

14. மெக்கத்து வஸனங்களை பின்பற்றும் இஸ்லாமியரை அவ்வழியிலிருந்து திருப்பி மெதினா வஸனங்களை (மட்டும்) நம்பும் இஸ்லாமியரின் எண்ணிக்கையை அதிகரிப்பது.

15. நடுநிலைமையான இஸ்லாமியரை பாபர் கட்டிட இடிப்பு, மற்றும் இதுபோன்ற குண்டுவெடிப்புக்களால் அவர்களது நடுநிலை தவறவைப்பது. இந்த நடுநிலைமை கொண்டுள்ளவர்களின் செல்வாக்கை அழிப்பது.

இப்படியும், இதற்கு மேலும் பாக்கிஸ்தானுக்கு லாபங்கள்தான். ஆயினும், இந்தியத் தீவிரவாத இஸ்லாமிஸ்ட்டுக்களிடம் முற்றிலும் பலம் இல்லை என்றும் கூறமுடியாது. இந்தியத் தீவிரவாத கட்டமைப்பு இன்னமும் இவர்கள் கையில்தான் உள்ளது. அதனால்தான், கோயம்புத்தூர் குண்டு வெடிப்புக்களின் பின்னால் கோயம்புத்தூரைச் சுற்றியுள்ள தர்ஹாக்களிலிருந்தும், மஸூதிக்களிலிருந்தும் குண்டுக்களை எடுத்த பின்பும், மும்பையிலிருந்து தாவுத் இப்ரஹீமை விரட்டிய பின்பும் இந்தியாவில் தொடர்ந்து குண்டுவெடிப்புக்கள் நடைபெற்று வருகின்றன. அரஸாங்கம் இந்த கட்டமைப்பின் மீது கை வைக்க அஞ்சுகிறது. குண்டு வைப்பவர்களை (மட்டும்) பிடித்துத் தண்டனை தருவோம் என்றும் கூறிவருகின்றது. அப்படியே யாரையாவது தப்பித்தவறி பிடித்துவிட்டாலும் (அதாவது இந்தத் தீவிரவாதிகள் தங்களின் முட்டாள்தனத்தால் மாட்டிக்கொண்டால்), ஆப்கானிஸ்தானிற்குக்கொண்டுபோய் விடுதலை செய்தோ, அல்லது ஆயுர்வேத சிகிச்சையளித்தோ, ஸாட்ஷிகள் போதவில்லை என்று விடுதலை செய்தோ தன்னுடைய தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளை முனைப்பாகச் செய்துவருகின்றது. அல்லது இந்தக் கட்டமைப்பின் வெளுத்த மயிர்களைத்தொட உதவிய சட்டங்களை விலக்கி வருகின்றது.

இந்தக் கட்டமைப்பின் ஆதிக்கதிற்கு நடந்த போட்டா போட்டியின் விளைவுதான் தற்போது நடைபெற்ற துயரச்சம்பவம்.

இதனால் இந்தியாவிற்கு ஒரு லாபம்கூட இல்லையா என்ற கேள்வி எழலாம். ஒரே ஒரு வாய்ப்பு இருக்கிறது. அந்த ஒரு வாய்ப்பை சரியாக பயன்படுத்தினால் இந்திய அமைதிக்கு வாழ்நாளில் ஓரிரண்டு நாட்கள் அதிகரிக்கலாம். அது பன்முகத்தன்மை என்கிற விஷயத்திற்கு இந்தியாவிலுள்ள அனைத்து இஸ்லாமியரையும் கொண்டுவருவது. இந்தியாவிலுள்ள மெக்கத்து இஸ்லாமியரை ஆதரித்தும், பன்முகத்தன்மையை எதிர்ப்பவர்களை அழிக்க விரும்பும் இஸ்லாமியரை ஒடுக்கவும் செய்வது. இது அந்த அல்லா இந்தியாவிற்கு வந்தால் மட்டுமே நடைபெற வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில், இந்தியாவில் இஸ்லாமிய தீவிரவாதம் என்கிற பெயரால் சாத்தானின் ஆதிக்கம்தான் நடைபெறுகிறது. இதற்கு எதிராக அல்லாவின் அருள் இந்தியாவிற்குக் கிடைக்கவேண்டும் என்பது ஹிந்துக்கள் மட்டுமல்ல, பல நடுநிலைமையுள்ள இந்திய இஸ்லாமியர்களின் வேண்டுதலும்கூட. செவிசாய்ப்பார் என்று நம்புவோம்.

said...

ம்யூஸ்,

தீவிரவாதம் ஒழிந்து அப்பாவி பொதுமக்கள் சுதந்திரத்துடன் வாழவேண்டுமென்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

இந்த குண்டு வெடிப்பு விசாரணை அரசியலின்றி நடைபெற வேண்டும்.

இதை இந்துமதத்தை சேர்ந்த தீவிரவாதிகள் செய்திருந்தால் அவர்களுக்கு அதிக பட்ச தண்டனையை விட அதிக தண்டனை தரவேண்டும்.

இதையே வெளி நாட்டு தீவிரவாதிகள் செய்திருந்தால் அந்த நாட்டை சர்வதேச அளவில் அன்னியபடுத்தி துவம்சம் செய்ய் இது நல்ல தருணம்

said...

இணைய முல்லாக்கள் எழுதுவதற்கு முன் என் பதிவு வந்துவிட்டது.

தீவிரவாதி தாடி ஆனாலும் காவி ஆனாலும் தீவிரவாதி தீவிரவாதி தான்

said...

//தீவிரவாதம் ஒழிந்து அப்பாவி பொதுமக்கள் சுதந்திரத்துடன் வாழவேண்டுமென்பதில் மாற்றுக் கருத்து இல்லை.இந்த குண்டு வெடிப்பு விசாரணை அரசியலின்றி நடைபெற வேண்டும். இதை இந்துமதத்தை சேர்ந்த தீவிரவாதிகள் செய்திருந்தால் அவர்களுக்கு அதிக பட்ச தண்டனையை விட அதிக தண்டனை தரவேண்டும். இதையே வெளி நாட்டு தீவிரவாதிகள் செய்திருந்தால் அந்த நாட்டை சர்வதேச அளவில் அன்னியபடுத்தி துவம்சம் செய்ய் இது நல்ல தருணம்//
//தீவிரவாதி தாடி ஆனாலும் காவி ஆனாலும் தீவிரவாதி தீவிரவாதி தான்//

இந்த விடயத்தில் மேற்குறிப்பிட்ட கால்கரி சிவாவின் கருத்தே என் கருத்தும்.
பாகிஸ்தான்தான் செய்திருக்கும் என்ற முன் முடிவோடு யோசிக்காமல் யார் என்பது சரியாக கண்டறியப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.

said...

நன்றி சுல்தான். மோதுவது என்றால் நேருக்கு நேர் மோதவேண்டும்

அதை விட்டு அமைதியாக வாழும் மக்களை கொல்வது எவ்வளவு கொடுமையானது