Monday, September 04, 2006

கால்கரியில் மாபெரும் வலைப்பதிவாளர்கள் சந்திப்பு

சென்னையில் போண்டா சாப்பிட்டு ஒரு முறை, மாசால் வடை சாப்பிட்டு ஒரு முறை, ரத்னா கஃபே யில் ஒரு முறை என படு அமர்களமாக வலைப்பதிவாளர் சந்திப்புகள் நிகழும் போது நாமும் ஒரு சந்திப்பை வைத்துக் கொள்ளலாம் என நினைத்து சக வலைப்பதிவாளர் திரு வெளிகண்டநாதரை தொடர்பு கொண்டேன்.

இருப்பது இருவர்தான் அதனால் குடும்பத்தினரையும் மேலும் வரும்கால வலைப்பதிவாளர்/வலைப்பதிவு வாசகர்களையும் சேர்த்துக் கொள்வது என முடிவாகியது.


அவரும் சரி வருகிறேன் என்றார் ஆனால் ஒரு கண்டிஷன் என்றார். நானும் என்ன என வினவினேன். ஜிகர்தண்டா இருந்தால் தான் அவரது மனைவி வருவார் என சொன்னார். நானும் ஆஹா.. நானிருக்குமிடம் ஜிகர்தண்டா உண்டு (கடல் பாசி கிடைத்தால்) என்றேன். மேலும் கிழக்கு கடற்கரையில் இருக்கும் ஒரு மூத்த வலைப்பதிவாளர் ஜிகர்தண்டா செய்வதை படத்துடன் விளக்கவும் என ஒரு வேண்டுகோளை 3 மாததிற்கு முன் வைத்திருந்தார் அதையும் நிறைவேற்றி விடலாம் எனவும் இந்த கூட்டம் கூட்டபட்டது


நாள் : தொழிலாளர் தின வாரயுறுதி/கோடைக் காலத்தின் கடைசி வாரயுறுதி

இடம் : கால்கரியின் வடமேற்கில் உள்ள கால்கரி சிவாவின் வீடு

நேரம் : மாலை 6.30 மணியிலிருந்து

முதல் வரும்கால வலைப்பதிவாளர்/வலைப்பதிவு வாசகர் சரியாக 6.30 மணிக்கு ஆஜர்.

அவர் பக்கத்து தெருவில் இருப்பவர்.

அடுத்த வரும்கால வலைப்பதிவாளர்/வலைப்பதிவு வாசகர் 6.45 க்கு ஆஜர் அவர் நகரத்தின் தென் மேற்கு மூலையில் இருப்பவர்.

பரஸ்பர அறிமுகம் முடிந்தது. மாலைப் பொழுது ரம்யமாக இருந்ததினால் தோட்டத்தில் அமரலாம் என முடிவு செய்யப்பட்டது.

பெண்கள் வரவேற்பரையில் அமர்ந்தனர்.

குழந்தைகள் பாதள அறைக்கு சென்று வீடியோ ஆட்டங்களை ஆரம்ப்பித்தனர்.

தோட்டத்தில் அமர்ந்திருந்த வரும்கால வலைப்பதிவாளர்/வலைப்பதிவு வாசகர் களை என்ன அருந்துகிறீர்கள் என்று கேட்டன்?
இன்றைய தினம் என்னுடைய குளிர்சாதன பெட்டியில் அரசமீனவர், தென்றலார் மற்றும் நான்முகனார் உள்ளனர். இவர்களில் யார் வேண்டுமமெனக் கேட்டேன். அவர்கள் இருவரும் ஒன்றும் தெரியாமல் முழிக்கையில் வீட்டின் உள்ளே இருந்த வெளிகண்டநாதர் எண்ட்ரிக் கொடுத்தார்.

வலைப்பதிவு என்றால் என்ன? யுனிகோட் என்றால் என்ன? எப்படி தமிழில் எழுதுவது என் லெக்சர் கொடுத்துவிட்டு மொழி பெயர்த்தார். அரசமீனவர் என்றால் Kingfisher, தென்றலார் என்றால் Breezer. நான்முகனார் என்பது புதிதாக இருக்கிறதே என என்னைப் பார்த்தார். நானும் நம்ம பெருசு அவர்களின் பக்கத்து ஊரான ப்ரேசிலின் Brahma என்றேன்.

ஆம் இவைகள் மென் உற்சாக பானங்கள்




Photobucket - Video and Image Hosting
இவைகளை கோப்பைகளில் ஊற்றி ஊறவைத்த தந்தூரி கோழி துண்டுகள் நெருப்பில் வாட்டப்பட்டன.

அனவரும் தேசப் பற்றுடன் அரசமீனவரைக் கைப்பற்றி நம் தேசபற்றை பறை சாற்றும் நேரம் வந்திருந்த நண்பர் அரசமீனவர் இந்திய பிராண்டுதான் ஆனால் இங்கிலாந்தில் காய்ச்சப்படுகிறது என்றார்.

அரிதாரம் பூசுவதுப் பற்றியும் தமிழ்மக்களை ஒன்று சேர்க்க என்ன செய்ய வேண்டும் என்றும் விவாதிக்கப்பட்டது. வந்திருந்த நண்பர் போன் தமிழ்வருட பிறப்பில் தமிழ் நிகழ்ச்சிகளை கால்கரியில் நடத்தியவர்.

அடுத்த தமிழ் நிகழ்ச்சிகளில் வெளிகண்டநாதரின் பங்களிப்பு அதிகமிருக்கும் என நம்புகிறோம்

வலைபதிவு எதுவரை சென்றடைகிறது என்றறிந்து புளகாங்கிதம் அடைந்தோம்.


வலைப்பதிவில் வித்தியாசமான புனைபெயர்களை நண்பர்களுக்கு சொன்னோம். நாங்கள் சொன்ன பெயர்கள் : முகமூடி, விடாதுகருப்பு, இட்லி வடை, இலவசக் கொத்தனார், டுபுக்கு, விட்டும் சிகப்பு.

இரண்டு அரசமீனவரும் கணிசமான அளவிற்கு தந்தூரி கோழிகளும் உள்ளே சென்ற பிறகு நேரத்தைப் பார்த்தால் இரவு 9.30. சரி இரவு உணவு அருந்த உள்ளே சென்றோம்.

இரவு உணவு பட்டியல்:

விஜிடேரியன்களுக்கு

இட்லி-தக்காளி சட்னி- தேங்கய் சட்னி

விஜிடபுள் பிரியாணி - தயிர் பச்சடி

நடுநிலையாளர்க்கு

முட்டைக் கறி


நான் வெஜிடேரியன்களுக்கு

நாந் (Nan) - சிக்கன் குருமா- மட்டன் மிளகு வருவல்

எல்லாருக்கும்

தயிர் சாதம்

எல்லாரும் அவரவர்க்க்கு விருப்பமான அய்ட்டங்களை எடுத்துக் கொண்டு செட்டிலாயினர்.


ஒரு வழியாக சாப்பாடு முடிந்தவுடன். எல்லாரும் தோட்டதில் கூடினர்.

தோட்டம் நன்றாக குளிர்ந்திருந்தது. அதனால் அங்கே ஒரு சூடான விவாதம் நடைப்பெற்ற்து.

குழந்தைகள் vs பெற்றோர்

குழந்தைகளின் வய்து 13 முதல் 18 வரை.

அவர்களின் விவாத திறமை, ஆழ்ந்த சிந்தனைகள், எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கைகளை கண்டு பெற்றோர்கள் வாயடைத்து நின்றனர். இந்த விவாதத்தைப் பற்றி தனிப் பதிவு வரும்.

விவாதம் சூடேறியவுடன் அந்த சூட்டை தணிக்க ஜிகர்தண்டா சாப்பிடவது என முடிவாகியது.

ஜிகர்தண்டா செய்முறை. கனடாவின் கிழக்குக் க்டற்கறையில் உள்ள மூத்த வலைப்பதிவர்காக

1. கடற்பாசி இதனை கோந்த் கதிரா என்பர். பஞ்சாபிக் கடைகளில் கிடைக்கும். அருகில் உள்ள படத்தைப் பார்க்கவும்









2. படத்தில் காட்டியுள்ளது போல் சிறிதளவு ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்












3. அது மூழ்கும் வரை தண்ணீர்விடவும். மிகவும் குளிர்ந்த நீரோ அல்லது சூடான நீரோ வேண்டாம். தண்ணீர் ரூம் டெம்பரெச்சரில் இருக்க வேண்டும். சுமார் 12 மணிநேரம் ஊற வேண்டும். இவ்வாறு ஊறிய கடல்பாசி இந்த படத்தில் உள்ளது போல் ஆகிவிடும்.






4. இந்த கடல் பாசியில் உள்ள மரப்பட்டைகளையும் கசடுகளையும் நீக்கி, தண்ணீரில் நன்றாக கழுவி சுத்தம் செய்துக் கொள்ளவும். முக்கிய அய்ட்டம் ரெடி.














5. அடுத்த முக்கிய அய்ட்டம் நன்னாரி சிரப். இது இலங்கை கடைகளில் நிச்சயம் கிடைக்கும். பார்க்க படம். இதனுடைய ப்ராண்ட் நேம் ஸ்டார்ஸ். தாயரிப்பாளர் பாம்பே ஸ்வீட்ஸ் (இலங்கை)!!!!!!













ஒரு கரண்டி கடற்பாசி ஒரு உயர்ந்த கண்ணாடி கிளாசில் இடவும் இதன் மேல் ஐஸ் கட்டிகளை இடவும். பிறகு நன்னாரி சர்பத்தை 2/3 மேஜைக் கரண்டி விடவும். அதன் ஜில்லான பால் கொண்டு நிரப்பவும். ஜில் ஜில் ஜிகர்தண்டா ரெடி.

குழந்தைகள் "ஓ..திஸ் இஸ் மில்க் சேக் வித் ஜெல்லி நாட் கூல்" என ஒதுக்கி அங்கிருந்த் ஐஸ்கிரீம் கேக்கை சாப்பிட்டனர்.
பெரியவர்கள் வயிற்றைக் குளிர்படுத்தி உண்ட மயக்கத்தில் விடை பெறும் போது மணி மறுநாள் அதிகாலை ஒன்று

37 comments:

said...

kadalpaaSi Saivamaa aSaivamaa?

said...

ம்யூஸ், சுத்த சைவம்.

said...

சிவா,

//கனடாவின் கிழக்குக் க்டற்கறையில் உள்ள மூத்த வலைப்பதிவர்//னு அடிக்கடி சொல்லி பயமுறுத்துறீங்களே! :)

படத்துடன் செய்முறை போட்டதற்கு நன்றி. அடுத்த கோடையில்தான் செய்துபார்க்க முடியும் என்று நினைக்கிறேன். இப்போது இங்கே இரவுகளில் 10-13ம் பகல்நேர அதிவெப்பநிலை 23-26ம் இருக்கு. அதனால் வீண்பரீட்சைகளில் ஈடுபடவில்லை. ஒரு லைம் ருசி தென்றலார் மட்டும் அனுப்பி வையுங்க. :)

உழைப்பாளர் தின விடுமுறை சுவாரசியமாகப் போயிருக்கிறதுபோல.


//அதனால் அங்கே ஒரு சூடான விவாதம் நடைப்பெற்ற்து.

குழந்தைகள் vs பெற்றோர்

குழந்தைகளின் வய்து 13 முதல் 18 வரை.

அவர்களின் விவாத திறமை, ஆழ்ந்த சிந்தனைகள், எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கைகளை கண்டு பெற்றோர்கள் வாயடைத்து நின்றனர். இந்த விவாதத்தைப் பற்றி தனிப் பதிவு வரும்.//

காத்திருக்கிறேன்.

said...

மதி,

சும்மா ட்ரை செய்யுங்கள் ஒன்றும் ஆகிவிடாது. நாங்கள் -30 ல் ஐஸ்கீரீம் சாப்பிடுவோம்.

said...

லாங் வீக் என்ட், வாங்க பார்பேக்யூ சாப்புட்டு கதையடிப்போம்னுட்டு கூப்பிட்டுட்டு, அதை வலைப்பதிவர் மாநாடாக்கிட்டீங்க! சர்தான், இருந்தாலும் தமிழ்மணம், தமிழ்வலைப்பதிவு பத்தி தெரியாத நண்பர்களுக்கு எடுத்தி சொல்லி, கொள்கைப் பரப்பு செயலாளர் ரேஞ்சுக்கு மாநாட்ல பேசினதை கலைஞர் உடன்பிறப்புக்கு எழுதற கடிதம் மாதிரி, அடுத்த நாள் முரசொலியிலே வர்ற மாதிரி பதிவும் போட்டுட்டீங்க! பரவாயில்லை ஆனா பாட்லு படம் போட்டு தொண்டர்களை உச்சத்துக்கு கொண்டு போனமாதிரி இருக்கு போங்க!

said...

ஆக மொத்தம் நம்ம தலையை எல்லாம் உருட்டி உம்ம பொழுது போச்சாக்கும். நல்லா இருங்க சாமிங்களா.

நான்முகனார் லேபிளை மட்டும் படமெடுக்காதது ஏன்? அதன் மூலம் உங்கள் திராவிட பற்றை... சரி விடுங்க. வம்பு வேண்டாம்.

//அனவரும் தேசப் பற்றுடன் அரசமீனவரைக் கைப்பற்றி நம் தேசபற்றை பறை சாற்றும் நேரம் வந்திருந்த நண்பர் அரசமீனவர் இந்திய பிராண்டுதான் ஆனால் இங்கிலாந்தில் காய்ச்சப்படுகிறது என்றார்.//

நல்லா லேபிளைப் பாருங்க. உங்க ஊருக்கு வர சரக்கு இங்க நியூயார்க்கில் காய்ச்சினதா இருக்கும்.

//அதன் ஜில்லான பால் கொண்டு நிரப்பவும். ஜில் ஜில் ஜிகர்தண்டா ரெடி.//

மதுரைக்காரங்க யாரும் இல்லையா? அவய்ங்க வந்து பால்கோவா போடணும், பாசந்தி போடணும் அப்படின்னு ஆரம்பிச்சிருப்பாங்களே! :D

said...

//லாங் வீக் என்ட், வாங்க பார்பேக்யூ சாப்புட்டு கதையடிப்போம்னுட்டு கூப்பிட்டுட்டு, அதை வலைப்பதிவர் மாநாடாக்கிட்டீங்க//

சார், அவங்க போண்டா, மசால் வடை சாப்பிட்டு மநாடு என சொல்லும் போது நாம மாபெரும் சந்திப்பு என் சொல்வதில் தவறில்லை ஹி....ஹி....

said...

//லாங் வீக் என்ட், வாங்க பார்பேக்யூ சாப்புட்டு கதையடிப்போம்னுட்டு கூப்பிட்டுட்டு, அதை வலைப்பதிவர் மாநாடாக்கிட்டீங்க//

சார், அவங்க போண்டா, மசால் வடை சாப்பிட்டு மநாடு என சொல்லும் போது நாம மாபெரும் சந்திப்பு என் சொல்வதில் தவறில்லை ஹி....ஹி....

said...

கொத்தனார், நான்முகனார் லேபிள் இல்லை நாலு பாட்டில் உள்ளே போன ஆரிய திராவிட வேறுபாடுகள் நீங்கிவிடும் ஐயா..


லேபிளை நன்றாக பார்த்து அது யு.கே. தான் என தெரிந்து கொண்டோம். மற்றபடி நீங்க அந்த பக்கம் ஏதாவது காய்ச்சி மார்கெட்லே விட்டிருந்தா சொல்லிடிங்க கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருக்கோம்

said...

தயவுசெய்து இனிமேல் நீங்கள் ஜிகர்தண்டா என்று எழுதும்போதெல்லாம் 'ஜிகர்தண்டா (கனடா); என்று போட்டுக் கொள்ளவும். ஏன்னா எங்க ஊர்ல - அதான், ஜிகர்தண்டா பொறந்த் ஊரு - இன்னும் என்னென்னமோ இருக்கிறது மாதிரில்லா இருக்கு. உங்களுடையது ஒரு abridged version மாதிரில்லா இருக்கு!

said...

இந்த ரேஞ்சுல போனா triglyceroids மட்டுமில்ல
sugar கூட எகிறப்போகுதுங்க.

இங்க லேசா காதுல புகை வரமாதிரி இருக்கு

said...

தருமி சார், நான் சொல்றது basic version.

உங்களைப் பற்றியும் பேச்சு வந்தது. வெளிகண்டநாதர் உங்களை சந்திக்க முயன்று செய்த சொதப்பல்கள். உங்களின் பெயர் காரணம் ஆகியவைகளையும் அலசினோம்

நான் மதுரைக்கு வரும் போது உங்கள் இடத்திற்கு நான் தேடி வருவேன். எனக்கு தெரியாத இடம் மதுரையில் இல்லை ஹி ஹி

said...

பெருசு சார், புகை விட்ட போதுமா..

இந்த பக்கம் வந்தா உங்களையும் அழைத்து இன்னும் கொஞ்சம் சுகர் ஏத்திப்போமில்லே

said...

சிவா

என்ன ரொம்ப நாளா ஆளை காணோம்?

மதுவகைகளை தூய தமிழில் பெயர் மாற்றம் செய்யும் உங்கள் தமிழ் சேவையை பாராட்டி "தமிழ் தேன் சிவா" (தேன்= மது) என்ற பட்டத்தை அ.கு.மு.க சார்பில் வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்:))

said...

சீனியர்,
கனடாவில் வலை பதிவாளர்கள் சந்திப்பை அரங்கேற்றிய சீன்ஸே,, கலக்குங்க...

said...

சீனியர்,
கனடாவில் வலை பதிவாளர்கள் சந்திப்பை அரங்கேற்றிய சீன்ஸே,, கலக்குங்க...

said...

சீனியர்,
கனடாவில் வலை பதிவாளர்கள் சந்திப்பை அரங்கேற்றிய சீன்ஸே,, கலக்குங்க...

said...

கொத்தனார், நான் ஆரியன் என்பதை பறை சாற்ற நான்முகனாரை விஸ்வரூபம் எடுக்கவைத்து விட்டேன். இப்போது லேபிள் தெரிகிறதா?

said...

பிரம்மாவுக்கு ஒரு பெரிய இடம் போட்டபோதே இங்கு ஏதோ?? இருக்கும் என் நினைத்தேன்.:-))
ஜிகிர்தண்டா தயாரிக்கும் முறையும் நன்றாக உள்ளது ஆனால் இங்கு சிங்கையில் கிடைப்பதாக ஞாபகம் இல்லை.
எப்போதோ சேலம் போனபோது இந்த வார்தையை கேட்ட ஞாபகம்.
இக்கால & வருங்கால வலைபதிவாளர்களூக்கும் வாழ்த்துக்கள்.

said...

இந்த மாதிரி அடிக்கடி பதிவு போட்டீர்களானால் உங்களது பெயரை "கால்கரி" சிவாவிலிருந்து மாற்றி, "குவார்ட்டர் கறி" சிவா என்று கூப்பிட ஆரம்பித்துவிடுவோம் :-) !!

said...

சிவா,

ம்யூஸ், சுத்த சைவம் .

எது? கடல் பாஸியின் உணவா அல்லது உணவாக உள்ள கடல்பாஸியா?

ஏனென்றால், இப்படித்தான் என் சுத்த ஸைவ நண்பர் ஒருவர் சீனா போனபோது, அவருக்கு பரிமாறப்பட்ட உணவு ஸைவமா, அஸைவமா என்று ஸர்வரிடம் கேட்டார். ஸர்வர் அது ஸைவம் என்று சொல்லியதால், ஒரு பிடி பிடித்துவிட்டார். இவ்வளவு சுவையாக இருக்கிறதே, இது என்ன பதார்த்தம் என்று கேட்டதற்கு, "ஆடு" என்று பதில் வந்தது. அதிர்ச்சியடைந்த என் நண்பர், "அடப்பாவி, நான்தான் முதலிலேயே இது ஸைவமா, அஸைவமா என்று கேட்டேனே" என்றதற்கு, ஸர்வரிடமிருந்து "ஆடு ஸைவந்தான் ஸார்" என்று பதில் வந்தது.

said...

பிரம்மா என்று உர்ச்சாக பாணம் பெயர் வைத்து விற்பனைசெய்வது வண்மையாக கண்டிக்கப் படவேண்டும்
:D

said...

//என்ன ரொம்ப நாளா ஆளை காணோம்?
//

செல்வன், ஒரு வாரம் உல்லாச பயணமாக நயாகரா போனேன். அதை சரிக்கட்ட ஆபீஸில் இரண்டு வாரம் அதிக வேலை அதுதான்

தங்கள் பட்டத்திற்கு நன்றி

said...

பாலசந்தர், வாங்க இந்த பக்கம் வலைபதிவாளர் சந்திப்பு எம் ஐ டி பழைய மாணவர்கள் சந்திப்பு என ஜமாய்ச்சிடலாம்

said...

வடூவூர் குமார், கடல் பாசி முஸ்தாபாவில் கிடைக்கிறது. முயற்சிக்கவும்

said...

//"குவார்ட்டர் கறி" சிவா என்று கூப்பிட ஆரம்பித்துவிடுவோம் :-) !! //

ஆ...என்னை கால்கரியிலிருந்து பிரிக்க முயற்சி காப்பாற்றுங்கள்...

said...

வஜ்ரா, ப்ரம்மா என்றால் பிரேஸிலிய மொழியில் என்ன அர்த்தமோ?

ஆனால் 4/5 ப்ரம்மா பாட்டில்களை காலி செய்தால் எனக்கு 4 முகம் ஆவது உண்மை

said...

சிவா.

//தருமி சார், நான் சொல்றது basic version.//

அதானே பாத்தேன். நம்மூர்ல ஜில் ஜில் ஜிகர்த்தண்டா செய்யறதுக்கு இன்னும் என்னென்னவோ செய்வாய்ங்களேன்னு யோசிச்சுக்கிட்ருந்தேன்.

அடுத்த வாட்டி யாரு மொதல்ல மதுரைக்குப் போனாலும் கொஞ்சம் கவனிச்சு வந்து விவரமா மக்களுக்குச் சொல்லணும்.

said...

சிவா...!
இவ்வளவு பெரிய பாட்டிலில் உள்ள ஜிகிர்தண்டா கிடைக்கும் என்று தெரிந்திருந்தால் கடல்தாண்டி கால்கரிக்கு வந்திருப்பேன்..!

ஐ மிஸ்டு தட் ட்ரீட் !

சிங்கையில் புலிப்பால் தான் கிடைக்கும். உங்களுக்கு தெரிந்திருக்கும்

:))

said...

GK,

சிங்கை வருமொ போது உங்களை அழைத்து புலிப்பாலில் அபிஷேகம் செய்துவிடலாம்.

புலிப்பால் இங்கும் கிடைக்கிறது

said...

ம்யூஸ், அப்போ ஆடு சுவையாய் இருந்தது என்று ஒத்துக் கொள்கிறீர்கள்

கடல்பாசி என்பது பாதம் மரத்தின் பிசின்

said...

சுந்தர், அடுத்த முறை ஊருக்கு போகும் போது knowledge trnasfer தருமி சார் முன்னிலையில் நடக்கும்

said...

ஆஹா...சைவத்திற்கு புது definition கொடுத்த மியூஸ் வாழ்க...!
இனிமே எவனாவது கேக்கட்டும்..சைவமா அசைவமான்னு..!!அப்புறம் இருக்குடீ!!

ஆடு என்ன...எது எது சைவ உணவு சாப்பிட்டு வளருகின்றதோ அதையெல்லாம் சைவமாக அறிவித்துவிடுவோம்!!

said...

எனது அரேபிய நண்பர்கள் அடிக்கடி சொல்வது இதுதான். அவர்கள் ஆடு மாடு ஒட்டகம் ஆகியவைகளை சாப்பிடுவார்களாம் ஆனால் சிங்கம் புலி முதலை ஆகியவைகளை சாப்பிட மாட்டார்களாம். அவர்கள் சைவ உணவு உண்ணும் பிராணிகளை மட்டும் சாப்பிடுவார்களாம்.

அவர்களிடன் என் நண்பனை காட்டி இவனை சாப்பிடு இவனும் பிறந்ததிலிருந்து சைவம் என்றேன் :)

said...

கால்கரியில் கோழிக் கால்கறி
அதை சுட்டெடுக்க அடுப்புக் கரி
என்று ஒரு கவிதையே எழுதலாம்போலிருக்கிறது! ஜிகர்தண்டா ரெசிப்பிக்கு நன்றி! கனடா ஐஸ் ஒயின் பிரமாதமாக இருக்குமென்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

said...

ப்ளெமிங்கோ,

இது வரைக்கும் ஐஸ் வைன் சாப்பிட்டதில்லை.

உங்கள் புண்ணியத்தால் அதையும் முயற்சிக்கலாம்

வருகைக்கு நன்றி

said...

உங்கள் தமிழ் பற்றும் தேசப் பற்றும் எதிலிருந்து ஆரம்பிக்கும் விதம் நல்லாத்தானிருக்கு. ஜிகர்தண்டா செய்முறை தெரிந்து கொண்டேன்.
ஒரு ஸ்கூப் ஐஸ்கிரீம் விட்டுவிட்டீர்களே?
ஆடு சைவம் நல்ல நகைச்சுவை!