Thursday, August 24, 2006

என் அரேபிய அனுபவங்கள் - 10.6

இந்த வாரம் கொஞ்சம் பிசி மேலும் நண்பர்கள் சிறில் அவர்களும் பேராசிரியர் தருமி அவர்களும் நான் வலைப் பதிவிற்கு வந்த புதிதில் இருந்ததைவிட இப்போது மாறி விட்டதாக கூறினதாலும் நானும் சரி இனிமேல் வலைப்பூ பக்கம் அடிக்கடி வந்து என் அறிவை பெருக்கிக் கொள்ளவேண்டாம் என pre-blogging வழக்கங்களை மேற்கொண்டிருந்தேன்.

நேற்று ஒரு போன் கலிபோர்னியாவிலிருந்து. "சார் உங்க தலைப்பை வைத்து இன்னொருத்தர் இங்கேஎழுதுறார்" என்று என் நண்பர் பதறினார். நானும் "சார் என் தலைப்புக்கு என்ன நான் காப்பி ரைட்டா வாங்கிவைத்துள்ளேன். நன்றாக யூஸ் பண்ணட்டும்" என சொன்னேன். மேலும் நம் தலைப்பை காப்பி அடிக்கும் அள்விற்கு நாம் முன்னேறிவிட்டோம் என செருக்குடன் அந்த பதிவை நேற்றே படித்துவிட்டு மறந்துவிட்டேன்.

இப்போது இந்தோனேசியாவிலிருந்து ஒரு நேயர் அண்ணே உங்க அனுபவத்தை படித்து ரொம்ப நாள் ஆயிடிச்சி அடுத்த இஸ்டாள்மெண்டை போடுங்க அண்ணே என் ஒரு மெயில் போட்டிருந்தார். ஆகையால் மீண்டும் :


அரேபியர்கள் பண்டிகைகள் எப்படி கொண்டாடுவார்கள் என போன பதிவில் பார்த்தோம்.
இப்போது நாங்கள் எப்படி கொண்டாடினோம் என பார்ப்போம்.
நம் பண்டிகைகள் பிள்ளையார் சதுர்த்தியில் ஆரம்பிக்கும். சவூதியில் இருக்கும் போது இரகசியமாக வீட்டில் திருடன் செய்வதுபோல் கொண்டாடுவோம். நம் நாட்டில் எல்லாமே ரெடிமேடாக கிடைக்கும். பிள்ளையார் சிலை, குடை, வாழைமரம், கொழுக்கட்டை போன்றவை.
பிறகு ஊர்வலமும் இருக்கும். இதெல்லாம் இல்லாமல் பண்டிகை எப்படி. எல்லாவற்றையும் குறையில்லாமல் செய்வோம். பிள்ளையார் சிலை செய்ய ஆர்ட் சாப்பில் கிளே கிடைக்கும் அதை வைத்து சிலை செய்வோம். இதை செய்யும் போது உங்களில் உள்ள சிற்பி வெளிவருவார். என்ன பிள்ளையார் மாடர்ன் ஆர்ட் மியூசியத்தில் உள்ள சிலை போல இருப்பார். அடுத்து வாழை மரம். இதுக்கும் ஆர்ட் சாப் தான். வித வித மான பிளாஸ்டிக் சீட்களை எடுத்து வந்து ஒரு வழியாக வாழை மரமும் மாவிலை தோரணமும் செய்து உங்களில் உள்ள என்னோரு கலைஞர் வெளிவருவார். உன் சிலை அழகா என் சிலை அழகா என விவாதங்களும் நடக்கும்.
பழம் , பொரி , கடலை இவைகளுக்கு பஞ்சமில்லை கொழுக்கட்டைகளின் பரிமாற்றங்கள் இவைகளால் பிள்ளையார் சைஸுக்கு வயிறு வீங்கிவிடும்.

சரி முக்கியமான கடற்கரை பிள்ளையார் கரைப்பிற்கு வருவோம். கடற்கரை வீட்டிற்கு மிக அருகில இருந்ததால் 5/6 கார்களில் நண்பர்கள் வரிசையாக காரின் உள்ளே காதை கிழிக்கும் பிள்ளையார் பாடல்கள் ஒலிக்க கடற்கரைக்கு சென்று பிள்ளையார் கரைத்துவிட்டு நிம்மதியாக வருவோம்

ஆ...எங்கள் துபாயில் இந்த பிரச்னைகள் இல்லை. எல்லாம் பகிரங்கமாக செய்யலாம் பிள்ளையார் கரைப்பதை தவிர


அடுத்து வரும் பண்டிகை நவராத்திரி . சவூதியில் அமுக்கி வாசிக்கப்படும் ஆ..எங்கள் அமீரகத்தில் செம ரகளையாக இருக்கும். எல்லா பட்டு புடவைகளுக்கும் நகைகளுக்கும் வேலை வரும். சுண்டல், யார் வீட்டு கொலு நல்ல கொலு யார் வீட்டு பரிசு நல்லது போன்ற வம்புகளும். குஜராத்தி/வட இந்திய நண்பர்கள் வீட்டில் சரக்கடித்து விட்டு தாண்டியா ஆட்டங்களும் களைக் கட்டும்.

அடுத்து வரும் பண்டிகை தீபாவளி. எல்லா டமிளரும் ஆப்பி தீவாளி என போனில் சொல்லி கால்கடுக்க நின்று இந்தியாவிற்கு மிக முயன்று போனில் ஆப்பி தீவாளி என்பர். (நான் இருந்த காலங்களில் சவூதியில் இல் போனும் செல் போனும் இல்லை) . குழந்தைகளுடன் சீனாவில் இருந்து இறக்குமதி செயத துப்பாக்கியில் கேப் வைத்து வெடிப்பது மட்டும் தான் பட்டாசு.

ஆ..எங்கள் துபாயில் இந்த மாதிரி ப்ரச்னை இல்லை. ஒரே கொண்ட்டமாக இருக்கும். ஸ்வீட்கடைகளில் ஸ்வீட் என்ன பட்டாசு என்ன வண்ண வண்ண விளக்குகள் என்ன ஐயப்பாஸ் கடையில் துணி வாங்க அலைமோதும் கூட்டம் என்ன.... இந்தியா தோற்று விடும்.

அடுத்து வரும் பொங்கலும் சவூதியில் கமுக்கமாகவும் ஆ..எங்கள் அமீரகத்தில் பட்டி மன்றம் முதல் கச்சேரி வரை என ஆர்ப்பாட்டங்களுடனும் ஆப்பி பொங்கள் என்ற கோஷம் வானை பிள்க்கும்


என்னை போல் ஒரு கருவியல் பொறியாளர் சவூதியில் ஜூபைல் என்ற தொழில் நகரத்தில் 5 இலக்க ரியால் சம்பள்த்தில் அருமையான வேலையில் இருந்தார். அவர் அங்கே நம் தென்னிந்தியர்க்கு சேவை செய்ய ஆராதனா என்ற சுத்த சைவாள் ஒட்டலை திறந்தார். அதற்கு முன் டமிளனின் டமில் நேஷனல் புட் இட்லி தோசை சாப்பிட 100 கி.மீ தள்ளி உள்ள தம்மாமிற்கு வரவேண்டும். ஆகையால் இவருக்கு பிஸினஸ் சூப்பரோ சூப்பர். அவர் மேலும் சேவை செய்ய தீபாவளிக்கு பெஷல் ஸூவீட் பாக்ஸ் என் இன்னோரு சேவை செய்தார். பிஸினஸ் மேன்மேலும் பெருகியது.

பொறுக்குமா சக தமிழனுக்கு.

இது இந்துத்வாவியாதியின் சதி ஆராதனா என்பது இந்து பெயர், விஜிடேரியன் என்பது இந்து மதத் தத்துவம் என கோள் சொல்லி இரவோடு இரவாக அந்த ஓட்டலை மூடி அவரையும், அவரது குடும்பத்தாரையும் அந்த ஓட்டலில் வேலை செய்தவர்களையும் இரவோடு இரவாக நாடு கடத்த உதவினர் நம் மத நல் இணக்க சகோதரர்கள்.

சமய கடமையை முடித்து விட்டதாக எல்லா புகழையும் இறைவனுக்கு அர்ப்பணம் செய்தனர்

அவர் செய்த தவறுகள்

ஆராதனா என்ற பெயர். திராவிடஸ்தானில் ஆரிய பவன் மாதிரி சவூதிஸ்தானில் மக்கா உணவு விடுதி என்றோ மதினா உணவு விடுதி என்றோ பெயர் வைத்திருக்க வேண்டும்.

சுத்த சைவம் என்று சொல்லியிருக்க கூடாது. பேருக்கு முட்டை தோசை போன்றவைகளை மெனு கார்டில் போட்டு எந்நேரமும் இல்லை என சொல்லியிருக்கவேண்டும்

தீவாளி மற்றும் பொங்கலுக்கு இனிப்பு பண்டங்களை ரகசியமாக விற்றிருக்க வேண்டும். அப்போது தானே வாங்கும் எங்களுக்கும் ஒரு திரில் இருந்திருக்கும்.


இப்போது அதிரைகாரருக்கு. போலி புலிபாண்டிற்கு உங்கள பதில் இது

//அரபு நாட்டுல சின்சியரா இருந்தததாச் சொல்றார். இப்ப ப்ளாக்குல இஸ்டத்துக்கு அவுத்து உடுரதப் பார்த்தா இவருக்கு கனடாவுல முக்கியமான வேலையே அரபு நாட்டை திட்டுறதான் போலிருக்கு. நமக்கும் அதுமாதிர் யாராவது வேல போட்டுக் கொடுத்தா ச்சி..ச்சீ இந்த பழம் புளிக்கும்னுட்டு ஓடிடலாம். :-)//

என்னா சார் இது ஓவரா?

கனடாவில் நானாக வ்ந்து நானாகத்தான் வேலை வாங்கினேன்.

யாரும் வேலை போட்டு த்ருகிறேன் வா என அழக்கவில்லை சவூதி ஆ... எங்கள் அமீரகம் போலில்லாமல்

இங்கெ எனக்கு ஸ்பான்ஸர், எஜமானர், எக்ஸிட் எந்த்ரி விசா போன்ற கச்சடாக்கள் தேவையில்லை.

நீங்களும், விருப்பமிருந்தால் இங்கே வருவதற்கு தடையில்லை.

அதை செய்வதை விட்டு தனிமனித தாக்குதல்கள் வேண்டாம்..

ஒரு காட்டுமிராண்டி அரசிற்கு வக்காலத்தும் வேண்டாம்
12 comments:

said...

சிவா.. நான் சொன்ன கருத்து உங்களை ப்ளாக் எழுதாமல் இருக்கச் சொல்ல அல்ல. நீங்கள் மாறிவிட்டீர்கள் என்பதைவிட மாற்றப்பட்டுவிட்டீர்கள் என்பதே என் கருத்து. இங்கே வலைப் பதிவில் கிட்டத்தட்ட எல்லோருக்கும் இந்த நிலை இருக்கிறது ஆனா ஒரு சிலரே அந்த மாற்றத்தினை வெளிக் காட்டுகிறோம்.

மற்றபடி பதிவு படிக்கையில் அமெரிக்காவில் என் தோழி ஒருவர் ஸ்வஸ்த்திக் படத்தை வீட்டு வாசலில் போட்டு வைக்க பக்கத்து வீட்டுக்காரார் நீங்க நாசியா(Nazi) எனக் கேட்டதுதான் நினைவில் வருகிறது.

said...

மாற்றத்தை நண்பர்கள் சுட்டிக் காட்டும் போது அதை ஏற்றுக் கொள்வதுதான் நல்ல இயல்பு. சில வாரங்கள் நிறுத்தி வைத்தால் பழைய நிலைக்கு திரும்ப வாய்புள்ளது. நான் புரபெஷனல் ரைட்டர்ஸ் அல்லவே.

இரண்டு சுவஸ்திக்கும் வேறு வேறு திசையில் சுற்றும்.

நன்றி சிறில்

said...

பிள்ளையார் சிலை செய்ய ஆர்ட் சாப்பில் கிளே கிடைக்கும் அதை வைத்து சிலை செய்வோம். இதை செய்யும் போது உங்களில் உள்ள சிற்பி வெளிவருவார். என்ன பிள்ளையார் மாடர்ன் ஆர்ட் மியூசியத்தில் உள்ள சிலை போல இருப்பார். //

Pillaiyar pidikka kuranga maaRituchchaa siva?:)))))))

said...

//
இரண்டு சுவஸ்திக்கும் வேறு வேறு திசையில் சுற்றும்.
//

உண்மைதான்...இங்கே கூட தீபாவளி அன்று சுவஸ்திக் போட்டுக் கொண்டாடினோம்...!! யாரும் எதுவும் சொல்லவில்லை...கேட்டால், இந்திய சுவஸ்திகாவை ஹிட்லர் அபகரித்து திரித்துவிட்டான் என்ற உண்மையை அழகாக விளங்கி வைத்திருக்கின்றனர்.!

..
விஜிடேரியன் என்பது இந்து மதத் தத்துவம்
..

அப்புடியா...? மாடு மனுசனத்தவிர எல்லா உயிரினமும் என் வயிற்றிர்கே ஐயா...

நான் எந்த விதத்தில் இந்து இல்லை? நீங்க மாட்டக்கூட விட்டு வைக்கல்லை... நீங்க எந்த விதத்தில் இந்து இல்லை?!! ;D

..
குழந்தைகளுடன் சீனாவில் இருந்து இறக்குமதி செயத துப்பாக்கியில் கேப் வைத்து வெடிப்பது மட்டும் தான் பட்டாசு.
..

ஹா ஹா!! இங்கே புஸ்ஸுவானம் எல்லாம் விடுவோம்..."அவுட்டு" எல்லாம் வைக்க முடியாது...! அப்பப்ப ஹெஸ்பல்லாவும் ஹமாசும் ராக்கெட் விட்டு கொண்டாடுவார்கள்.. நம் இணய முல்லாக்கள் சார்பாக...! ;D

said...

செல்வன், இந்து மத பண்டிகைகள், சம்பிரதாயங்கள், வேதங்கள், ஸ்லோகங்கள், பூஜைகள் இவைகளைப் பற்றி அதிகம் கற்றுக் கொண்டது அரபு நாடுகளில் தான் என்பதை நான் சொல்வதில் எனக்கு சற்றும் வெட்கமில்லை.

நம் நாட்டில் இருக்கும் வரையிலும் இப்போது இங்கேயும் அரக்க பரக்க பறந்து கொண்டிருந்தேன்/இருக்கிறேன்.

அரபுநாடுகளில் அரபிகள் மதம் மதம் என பேச பேச எனக்கும் எம் மதம் பற்றிக் கொண்டது. அதற்கு அரபிகளுக்கு தாங்க்ஸ்

அபுதாபியில் எங்கள் வீட்டிலும் என் நண்பர் ஒருவர் வீட்டிலும் அடிக்கடி பஜனைகள், வேத பாரயணங்கள், சிவ ராத்திரி யன்று இரவு முழுவதும் பூஜைகள் நடைபேறும். எல்லாம் ரிஸ்க்குதான் பிடித்தால் டிபொர்டேசன் தான்.

ஒருமுறை துபாய்க்கு பூஜை செய்ய மதுரையிலிருந்த வந்த பூஜாரி ஒருவர் அப்ப்டியே நாங்கல் இருந்த குக்கிராமத்திற்கும் வந்தார். குழு பூஜைகள் வீட்டில்தான் நடக்கும் ரகசியமாக.

100 பேர் கூடும் அள்விற்கு வீடும் பெரிதுதான்.


பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடியும்

என்பதற்கு அவர் அளித்த விளக்கம்

பஜனையை பிள்ளையார் பாடலுடன் ஆரம்பித்து ஆஞ்சனேயர் பாடலுடன் முடிக்க வேண்டும் என்பதுதான்

இதை ஒருவர் ஆங்கிலத்தில் "When you catch vinyaka it will finish as monkey" என்று மொழி பெயர்த்தது இன்னொரு தமாஷ்

said...

"பொறுக்குமா சக தமிழனுக்கு"
அப்படியெல்லாம் பொறுத்தால் அவன் தமிழனாக இருக்க முடியாதே. :)))))

அமீரகமா சவுதியா என்று நினைவில்லை. பல ஆண்டுகளுக்கு முன்னால் "ஏசுவின் மரணம்" என்பது போன்ற தலைப்பு வைத்து மலையாள நாடகம் போட்டிருக்கிறார்கள். அதை சக மலையாளிகள் அதிகாரிகளிடம் போட்டுக் கொடுத்திருக்கிறார்கள். ஏசுவும் இசுலாமியருக்கு ஒரு நபியானதால் சம்பந்தப்பட்டவர்களுக்கு சிறை நாடு கடத்தல் என்றெல்லாம் அமர்க்களப்பட்டது. அந்த விஷயம் பற்றி ஏதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

டோண்டு சார், அமீரகம்தான். சவூதி என்ற புண்ணிய பூமியில் நாடகம் சினிமா போன்றவை மூச்

மலையாள நாடகங்கள் ஒரே நக்கலாகதான் இருக்கும். இந்த குரூப் முகமதை நக்கலடிக்கிறார்கள். அதைப் பார்த்த சக மலையாளிகள் கொதித்தெழுந்து அந்த நாடக ஆசிரியரின் தலை வெட்டுமளவிற்கு போய் விட்டது. அதன் பற்றி வேறு செய்திகள் நான் பின்பற்ற வில்லை

அது தமிழர்களில்லை மலையாளிகள்

said...

//திராவிடஸ்தானில் ஆரிய பவன் மாதிரி சவூதிஸ்தானில் மக்கா உணவு விடுதி என்றோ மதினா உணவு விடுதி என்றோ பெயர் வைத்திருக்க வேண்டும்.
//

திராவிட நாட்டில் 'ஆரிய'பவனா? எவனாவது இது பார்பனர்கள் சூழ்ச்சின்னு ஆரம்பிச்சுடப்ப்போறான் ;D

என்னவோ, இந்தியாவை விட்டு வெளிநாடு வந்தபின் மத, கலாச்சார உணர்வு அதிகமாவது உண்மைதான். இங்கே அமெரிக்காவில் கோவிலுக்கு போனால், அமெரிக்கர்கள் வேதம் படிப்பதும், ருத்ரம் சொல்வதும் பார்க்க வியப்பாக இருக்கிறது.

said...

சிவா இதுவரை வெளிவந்த எல்லா அனுபவங்களையும் படித்துவிட்டு தான் எழுதுகிறேன்.நிதர்சணமான உன்மை.
99.9% என்பது மட்டும் சற்று மிகை.நாணும் சவுதியில் குப்பை கொட்டியிருக்கிறேன்.
நன்றி.
லியோ சுரேஷ்
துபாய்

said...

அன்புள்ள சுரேஷ்,

வருகைக்கு நண்றி

said...

டியர் சிவா!

கால்கரி என்பது ஊர் பெயரா?

நன்றி! நானும் அரேபிய மணலில் புரண்டவன் தான் ஆனால் நான் இருந்தது குவைத்தில்.

உண்மையாலும் டுபையிலா இந்த மாதிரி பெயர் மாற்றங்களை எதிர்பார்க்கிறார்கள்?

சவுதியை பற்றி நன்றாக கேள்விபட்டிருக்கிறேன்.

மற்றபடி இந்த ப்ளாக்கர்கள் சந்திப்பு நன்றாக இருக்கிறதே! அருமையான சாப்பாடு! ம்ம்ம்.

சிங்கையில் சாப்பாட்டிற்குதான் கஷ்டம்.

said...

கடைசி பக்கம் சார், கால்கரி (Calgary) கனடாவில் உள்ளது.கனடாவின் 4 வது பெரிய நகரம். நான் இப்போது வசிப்பது கால்கரியில். உலகில் சவூதிக்கு அடுத்த அதிக அளவில் எண்ணை இருப்பது கால்கரிக்கு அருகில் தான்!!!.

அதனால் எண்ணை/எரி வாயு துறையில் பணிபுரிபவர்க்கு வாய்ப்புகள் அதிகம்

சிங்கையில் சாப்பாடு பஞ்சமா? உலகின் அத்தனை சாப்படுகளும் கிடைக்குமே.

மேலும் தமிழ் உணவிற்கு கோமள விலாஸ் என்ன, சரவண பவன் என்ன, அஞ்சப்பர் என்ன, காயத்திரி, முத்துக் கறி ஆந்திரா கறி என பல் உணவகங்கள் உள்ளனவே.

லோக்கல் ஹாக்கர் செண்டர் கூட நன்றாக தானே இருக்கும்