Monday, August 14, 2006

சுதந்திரமே நரகத்திற்கு போ....

நாளை இந்தியாவின் சுதந்திர தினம். பாடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் என்று ஆனந்த மாக இருக்க வேண்டிய நாள்.


(டமிளன் சன்/ஜெயா டிவீகளில் நடிக நடிகைகளுடம் கழிக்கும் நாள் என்பது வேறு விஷயம்)

செய்திதாள்கள் என்ன சொல்கின்றன

1. தில்லியில் வரலாறு காணத பாதுகாப்பு ஏற்பாடுகள், (இந்த ரிகார்ட் வரும் ஜன்வரியில் மீண்டும் முறியடிக்குப் படும்)

2. கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் இன்பார்மல் ஊரடங்கு உத்தரவு

3. தீவிரவாதிகளின் இரசாயன குண்டுகளை சமாளிக்க மத்திய அரசு அதிரடி திட்டம்

4. சென்னையில் சுதந்திர தினதிற்கு அதிக பாதுகாப்பு

நல்ல சுந்திரமய்யா இது என ஆயாசத்துடன் வேறு இணையதளங்களுக்கு சென்றால் நம் தலைப்புக்கு ஏற்ற படம் இதுவாகவா இருக்கவேண்டும் ... என்ன வில்லங்கமய்யா இது

23 comments:

said...

சிவா,

சும்மா வந்ததா சுதந்திரம்?உயிரை கொடுத்து,செக்கிழுத்து நமக்காக செத்தவர்களுக்கு தான் அதன் அருமை தெரியும்.அதன் பலனை அனுபவிக்கும் நமக்கு எங்கே அதன் அருமை தெரியும்?

நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும் என்பார்கள்.நம் சுதந்திரத்தை அழிக்க முயலும் அன்னிய சக்திகளை கண்டால் தான் நம் சுதந்திரத்தின் மதிப்பு நமக்கு தெரிகிறது.

நம்மோடு அதே தேதியில் சுதந்திரம் வாங்கிய பங்காளிகள் இப்போது படும் பாட்டை கண்டால் நாம் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள் என்பது தெரிகிறது.

எது எப்படியோ,உங்களுக்கும்,உங்கள் பதிவின் வாசகர்கள் அனைவருக்கும்,இந்திய மக்கள் அனைவருக்கும் என் சுதந்திர தின வாழ்த்துக்கள்.

வந்தே மாதரம்.ஜெய்ஹிந்த்.

said...

செல்வன், அவ்வளவு பாடுபட்டு வாங்கின சுதந்திரத்தை நம் அரழியவாதிகள் கையில் எடுத்துக் கொண்டார்கள். அந்த ஒரு நாள் ஆனந்தமாக இருக்கலாம் என்றால் தீவிரவாதிகளின் பயத்தால் அதையும் செய்ய முடியமால் இந்த பாழாய் போன முட்டாள் பெட்டியின் முன் அமர்ந்து கழிக்க வேண்டியிருக்கிறது.


நீங்கள் சொன்னது சரிதான் அதே தேதியில் பாஸான அவனைவிட வீ ஆர் பெட்டர் எம்ப்ளாய்ட்

said...

haappy august 15th...சுதந்திரதின நல்வாழ்துகள்..

நரகத்தில் தான் சுதந்திரம் உள்ளது என்றால் அந்த நரகத்திற்குச் செல்ல நான் தயார்...:D

said...

கால்கரியில் உக்காந்துகிட்டு பெக், எக், லெக் அப்படின்னு
வாழ்க்கை உங்களுக்கு.

இந்த நாளைக் கொண்டாட சக இந்தியர்கள் உண்டா அங்கு.???

said...

பெருசு, நிறைய பேர் உண்டு. கால்கரி ஒரு பெரிய நகரம் மக்கள் தொகை 1,000,000. மெட்ரோ இரயில் உண்டு. இந்து கோவில் உண்டு. தமிழர்கள் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உண்டு.

என்ன்னுடைய பக்கத்து வீட்டு காரர் முண்டாசு காரர். சீக்கியர். அருமையான நண்பர்.

என்னுடைய அலுவலகத்தில் 15க்கும் மேற்பட்ட இந்தியர்கல் உள்ளனர்.

ஆகையால் இந்த நாளை கொண்டாட நல்ல கோரம் உள்ளது இங்கே

said...

ஷங்கர், சுத்ந்திரமே மட்டும் இல்லாமல் சொர்க்கபே இருந்தும் என்ன பயன் (ஊர்வசி..ஊர்வசி என்ற குத்துப் பாடலின் வரிகள்) ஆகையால் எனக்கும் நரகம் தான் பிடித்த இடம்

ஹி..ஹி...ஹி..

என்ன தீபாவளி முடிஞ்சிருச்சி போலே...

said...

என்ன பெருசு இப்படிக் கேட்டுட்டீங்க. அதான் இப்ப உலகத்துலெ எந்தப் பகுதிக்குப் போனாலும்
நம்மாட்கள் சிலராவது இருக்கத்தானெ செய்யறோம். அரசாங்க விடுமுறைன்னு இல்லாட்டாலும்,
ஒருத்தொருக்கொருத்தர் வாழ்த்து சொல்லாமலா இருக்கோம். போதாக்குறைக்கு நம்ம இந்தியன் ஹைகமிஷன்
நமக்கெல்லாம் வாழ்த்துச் செய்தி அனுப்புதேங்க.

அனைவருக்கும் இந்திய சுதந்திர தினத்துக்கான அன்பான வாழ்த்து(க்)கள்.

said...

நவீன பாரதி "காக்கை குருவியும்" என எழுதிய பதிவில் அண்டை வீட்டாருடன் சண்டை போடாமல் சமாதானப்புறாவாக இருக்க வேண்டும் என எழுதியதற்குப் பதிலாக நான் எழுதிய கவிதையை சுதந்திர தின காணிக்கையாக இங்கு பதிக்கிறேன்.

காக்கையும் குருவியும் தன்னினம் என்று
கற்பனை செய்தவன் மண்ணிலே
சாக்கினில் வடித்த மத வெறி கொண்டு
சாவை விதைப்பதன் பின்னிலே

அண்டை வீட்டின் கரமுண்டென்று
அறிந்துணர்ந்த பின்னரும்
குண்டை விதைக்கும் கொடியவரை நாம்
கோவில் கட்டியா கும்பிடணும்?

அன்னை மண்ணின் உடலை அறுத்து
அன்னியமானவன் அவனென்றால்
பின்னை யும்அவன் கூலிகளாகும்
பேடிகள் இந்தியர் ஆகுமா?

எத்தனை ரத்தம் குண்டடி சத்தம்
இந்திய உயிர்கள் இளைத்ததா
எம்மிடை இருந்து எம்முடன் வாழ்ந்தும்
இந்திய நாட்டை அழிப்பதா?

ருத்திரம் பழகு சொன்னவன் பாரதி
சித்தம் சுரணையை நீக்கினால்
உத்திரம் தன்னில் ஒருமுழக் கயிற்றில்
உடலினைக் கட்டித் தொங்கலாம்.

said...

நீங்க வேற துளசிக்கா

இங்க நாங்க இருக்கிற ஊரில் நாங்க ஒரே ஒரு
இந்தியக் குடும்பம்.

சக இந்தியர்கள பாக்கணுமின்னா
1300 KM போகணும்.

இல்லாட்டி, பக்கத்து நாடான chile க்கு போகணும்.

எல்லோருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்.

said...

சிவா
சுதந்திரத்தை சுதந்திரமாக கொண்டாட முடியாத நிலை ஆதிக்கப் போர் மதப்போர் ஜாதிச் சண்டை எல்லைச் சண்டை
பத்தாயிரம் படைவீர்கள் இருபதாயிரம் காவலர்கள் ஆயிரம் பூனைப் படையுடம் சுதந்திரமாக அதிபர் கொடியேற்றினார்

said...

பெருசு,

அப்ப நீங்க 'ஒண்ணெ ஒண்ணு கண்ணே கண்ணா?'

அடடாடா..... இந்தியன் இல்லாத ஊரே இல்லைபோல இருக்கே:-))))

said...

சிவா,

சுதந்திர தினத்தை வேலை செய்து கொண்டாடலாம் என்று நினைத்திருந்தேன். கம்பெனி மெயில் வந்தது. அதாவது சுதந்திர தினத்தன்று தீவிரவாதிகள் தாக்கலாம் என்பதால், அன்று அனைவரும் பரிசோதிக்கப்படுவார்கள், வெளியாட்கள் யாருக்கும் அனுமதியில்லை, வேலை செய்ய வருபவர்களும் அதிக நேரம் அலுவலகத்தில் இருக்க வேண்டாம், முதல் நாள்கூட விரைவில் வேலையை முடித்துக்கொண்ண்டு சென்றுவிடுங்கள், etc. etc. etc.

இதை இப்போது வீட்டிலிருந்து டைப் செய்கிறேன்.

கனடாவில் வேலை கிடைக்க இந்தியாவில் சாக விரும்பாதவர்கள் என்ன செய்ய வேண்டும், சிவா?

தெருவில் குழந்தைகள் பள்ளியில் கிடைத்த மிட்டாய்களின் தித்திப்பில் இந்தியா ஒரு வளமையான, அன்பு கொழிக்கும் நாடு என்று பாடுகிறார்கள்.

இதைப் பாடும்போது அவர்கள் ஸந்தோஷமாக சிரிப்பதைத்தான் என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

said...

Happy 59th Birthday INDIA.
I feel, still INDIA is one of the better places in the world to live.

"அந்த நரகத்திற்குச் செல்ல நான் தயார்..."
Hope there won't be any problem of arya hell and aradha hell(just kidding)

said...

அரசியல்வியாதிகளை நகரத்திற்கு அனுப்பி விட்டு நம் நாட்டை சொர்க்கமாக்க வேண்டும்.

இனிய சுகந்திர தின நல்வாழ்த்துக்கள்

said...

எங்கே ஐயா அந்தப் படத்தை சுட்டீர்கள் என்று சொல்ல முடியுமா?

said...

காபிடல் ஐயா அவர்களே, கூகுள் இமெஜ் தேடலில் ப்ரீடம் என்று தேடி பாருங்கள்

said...

நாகை சிவா, நல்ல ஐடியாவா இருக்கே

said...

//கனடாவில் வேலை கிடைக்க இந்தியாவில் சாக விரும்பாதவர்கள் என்ன செய்ய வேண்டும், சிவா?
//

ம்யூஸ், www.cic.gc.ca என்ற தளத்தை பாருங்கள். இம்மிகிரேஷன் பற்றிய் தளம்

said...

சி.டி நல்ல நகைச்சுவை ஆறிய நரகம் ஆறாத நரகம்

said...

சிவா அண்ணா,

சுதந்திரதின நல்வாழ்துகள்.

நேற்று வீட்டிலிருந்து(தில்லியில்) வெளியே வரவில்லை.

சரியான கெடுபிடி. கூடவே 2 மணிநேரம் கரண்ட் கட்.

ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்.

said...

சிவமுருகன், நம் அரசியவாதிகல் ஒரு சபதம் எடுக்கவேண்ட்டும். அடுத்த சுதந்திர தினத்திற்குள் அனைத்து தீவிரவாதிகளையும் ஒழித்து கட்டி விட்டு ஆனந்தமாக சுதந்திரம் கொண்டாட வேண்டுமென்று

said...

//சிவமுருகன், நம் அரசியவாதிகல் ஒரு சபதம் எடுக்கவேண்ட்டும். அடுத்த சுதந்திர தினத்திற்குள் அனைத்து தீவிரவாதிகளையும் ஒழித்து கட்டி விட்டு ஆனந்தமாக சுதந்திரம் கொண்டாட வேண்டுமென்று//

என்ன விளையாடுறீங்களா?

அப்புறம் வோட்டு பொறுக்கி அரசியல் எப்படி நடத்துவது?

கருனாநிதி ஆட்சிக்கு வந்து ஏற்கனவே சில தீவிரவாதிகளின் மீது இருந்து வழக்கு வாபஸ் பெறபட்டதாக செய்திகள் வந்தது...கரெக்டாக தெரியவில்லை....

said...

சிவமுருகன், நம் அரசியவாதிகல் ஒரு சபதம் எடுக்கவேண்ட்டும். அடுத்த சுதந்திர தினத்திற்குள் அனைத்து தீவிரவாதிகளையும் ஒழித்து கட்டி விட்டு ஆனந்தமாக சுதந்திரம் கொண்டாட வேண்டுமென்று//

அப்துல் கலாம் கனவு காண சொன்னது உண்மைதான்.ஆனால் அரசியல்வாதிகள் திருந்துவது போல் கனவு கண்டால் அது நடக்குமா சிவா?:)
எல்லாரும் தப்பித்து புதரகமோ,கனடாவோ வந்து விடுவது தான் சாத்தியம்