Thursday, August 17, 2006

விடுதலை

Photobucket - Video and Image Hosting


இன்று ஆபிஸிற்கு வரும் போது என் CDயில் ஒலித்தப்பாடல்

எனக்கொரு மகன் பிறப்பான்
அவன் என்னை போலவே இருப்பான்
தனக்கொரு பாதையை வகுக்காமல்
என் தலைவன் வழியிலெ நடப்பான்.

சட்டென CD அணைந்து லோக்கல் FM க்கு மாறியது அதில் ஒலித்த பாடலில் எனக்கு புரிந்த வரிகள்

No.. no no. don't mess with my heart


சரி தமிழ் பாட்டின் வரிகளை பார்ப்போம். முதல் இரண்டு வரிகள் எந்த ஒரு இளந்தந்தைக்கும் ஆனந்தம் தரும் வரிகள்.

அடுத்து இரண்டு வரிகள் மிகக் கொடூரமானவை. பிறக்க போகும் குழந்தையை இப்போதே அடிமையாக்க பார்க்கும் ஒரு கொடிய அடக்குமுறை.
பிறக்க போகும் குழந்தை இப்போதே அவர் தலைவனின் வழியில் நடந்து அவன் தலைவனுக்கு அடிமையாவதற்கு வித்திடும் இந்த தந்தை ஒரு கொடூரமானவன். அதை புன்சிரிப்புடன் எற்ற அவன் தலைவன் மிகக் கொடூரமானவன்

இந்த பாடலுக்கு வாயசைத்தவரும் அவர் இருந்த கட்சியினரும் அவர் உருவாகிய கட்சியில் இருப்பவரும் அவரவர் குழந்தைகளை தலைவனுக்கு அடிமையாக்கிவிட்டு அவர்கள் விரும்பி படிப்பது "விடுதலை"

26 comments:

said...

அடடா, இந்த பாட்டின் முதல் இரண்டு வரிகள் மட்டும் தான் எனக்கு தெரியும்.இப்போ தெரிஞ்சு போச்சு.

//அவர்கள் விரும்பி படிப்பது "விடுதலை//

அது என்ன ஒரு பத்திரிக்கையா?
படிக்க ரொம்ப காமெடியா இருக்கும்மோ ?

said...

அருமையான சிந்தனை.இந்த பாட்டை இதுவரை நான் பலமுறை கேட்டதுண்டு.ஆனால் இப்படி ஒரு கருத்து என் மனதில் தோன்றியதில்லை.

கண்மூடி கேள்வி கேளாமல் அடுத்தவர் பின்னால் போகிறவன் ஆட்டுமந்தையில் ஒருவன்.

அப்படிப்பட்ட ஆடுகள் மதங்களில் தான் இதுவரை இருந்தன.கடவுளின் பெயரால்.

இப்போது திராவிட கட்சிகளிலும் உருவாகிவிட்டன.பகுத்தறிவின் பெயரால்.

சாமியார் காலில் விழுந்து கும்பிட்டவர்களை அன்று கிண்டலடித்தனர்.

இன்று ஜெயலலிதா காலிலும்,கருணாநிதி காலிலும் விழுந்து கும்பிடுகின்றனர்.

பிள்ளையார் சிலையை உடைத்த பெரியாருக்கு இன்று தெருவெங்கும் சிலை.மாலை மரியாதை.பெரியாருக்கும்,அண்ணாவுக்கும் கோயில் ஒன்று இல்லாத குறை இருந்தது.சமாதி,மணிமண்டபம் என்று கட்டியதும் அந்த குறையும் நீங்கிவிட்டது.

கவியரங்கம் என்ற பெயரில் கருணாநிதிக்கும்,சட்டமன்றம் என்ற பெயரில் ஜெயலலிதாவுக்கும் நடக்கும் ஸ்தோத்திரங்களை கண்டால் திருப்புகழை,வேதத்தை மிஞ்சும் வகையில் ஸ்துதிகள் இருக்கும்

பகுத்தறிவு என்பது கார்வாக மதமாகிவிட்டது:))

said...

//அது என்ன ஒரு பத்திரிக்கையா?
படிக்க ரொம்ப காமெடியா இருக்கும்மோ ? //
என்ன இப்படி கேட்டுடீங்க. இது தான் பெரிய காமெடியா இருக்கு.
வாங்கி ஒரு தடவை படிச்சு பாருங்க...
திருக்குறள்ல ஆரம்பிச்சு 4 வயசு குழ்ந்தை வரைக்கும் சொல்லி இருப்பாங்க. ஒரே விசயத்தை..... அது என்னனு நான் வேற சொல்லனுமா என்ன

said...

ஒரு மெல்லிசை கச்சேரி. லோக்கலில் புகழ் பெற்ற இரு நண்பர்கள் பாடுகின்றனர். ஒருவன் ஆரம்பிக்கிறான்: "எனக்கொரு மகன் பிறப்பான்.." இன்னொருவன் டேக் ஓவர் செய்கிறான்: "அவன் என்னைப் போலவே இருப்பான்..."

ஒரே கரகோஷம், விஸில். பாவம் பாடியவர்கள் அம்போ.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

நாகை சிவா,

பெரியார் சொன்னவகளில் சில சிந்தனைகள் அருமையானவை என்பதில் உண்மையுண்டு.

பிற்காலத்தில் அவர் கோமளியாகி அவருடைய சீடர்களையும் கோமளியாக்கியது தான் சோகம்

said...

செல்வன்,

தலைவரின் கருத்துகள் மரியாதைக்குறியவைத்தான். அவைகள் அவர்கள் வாழ்ந்த காலத்திற்கு சரி.இப்போது அவைகளை நூலகத்தில் வைத்துவிட்டு இன்றைய வாழ்க்கையை நாம் வாழ வேண்டும்

said...

டோண்டு சார், நல்ல ஒரு ஜோக்

said...

சிவா

உங்க மகனயாவது அவன் வழியில்
நடக்க விடுங்கள்.

said...

அட இந்த தினமலர் தினதந்தி இருக்கில்ல அந்த மாதிரி நாராசமா இருக்கும்

said...

சிவா அண்ணனே!
பெரியார் பல நல்ல கருத்துக்களை சொல்லி உள்ளார் என்பதில் எனக்கு எந்த தயக்கம் கிடையாது. ஆனால் அவரின் சிஷ்ய பிள்ளைகள் அவர் சொன்னது எல்லாத்தையும் விட்டு விட்டு கடவுள் இல்லை(அதுவும் இந்து மதம் முக்கியமாக) என்ற கொள்கை மட்டும் தான் பிடித்துக் கொண்டு நிற்கின்றார்கள். என்னனு சொல்லுறது அவங்களை.
அதிலும் நம்ம வீரமணி, திருக்குறளில் கடவுள் வாழ்த்து இடையில் தான் சேர்க்கப்பட்டது என்பது போன்ற ஆராய்ச்சிகளில் தான் குறியாக உள்ளார்.
அவர்களிடம் இல்லாத பணமா, அவ்வளவு இருந்தும் பெரியாரை பற்றி படம் எடுக்க அரசாங்கம் பணத்தை வாங்கி உள்ளார்கள்.
வேணாங்க அவங்களை பற்றி பேச ஆரம்பித்தால் நிப்பாட்டவே முடியாது... விடுங்க.

said...

பெருசு,

எப்பவோ அவனை விட்டாச்சி.

அவன் அவன் வழியில் தான்

said...

அப்படியா மகேந்திரன்

said...

//
ஆனால் அவரின் சிஷ்ய பிள்ளைகள் அவர் சொன்னது எல்லாத்தையும் விட்டு விட்டு கடவுள் இல்லை(அதுவும் இந்து மதம் முக்கியமாக) என்ற கொள்கை மட்டும் தான் பிடித்துக் கொண்டு நிற்கின்றார்கள். //

தி. க - திராவிடர் கட்சி அன்று..
தி. க - திம்மிக்கள் கட்சி இன்று.

said...

//வீரமணி, திருக்குறளில் கடவுள் வாழ்த்து இடையில் தான் சேர்க்கப்பட்டது என்பது போன்ற ஆராய்ச்சிகளில் தான் குறியாக உள்ளார்//

சிவா, அப்படியா இலக்கியங்களையும் அதன் ஆசிரியர்களையும் கட்சியில் சேர்த்துவிட்டார்களா

அடப்பாவிகளா

said...

//அப்படியா இலக்கியங்களையும் அதன் ஆசிரியர்களையும் கட்சியில் சேர்த்துவிட்டார்களா

அடப்பாவிகளா //

இது தெரியாதா அப்பாவிகளா:)

said...

நிச்சயமாக தெரியாது மகேந்திரன். அறிவைப் புகட்டும் விடுதலை போன்ற பத்திரிக்கைகள் படிக்கும் அளவிற்கு எனக்கு அறிவில்லை

அதனால் நான் அப்பாவித்தான்

said...

நானும் "ஏதோ சொல்லலாம்" என்று தான் நினைத்தேன் ஆனால் சிவா இப்படி
"வேணாங்க அவங்களை பற்றி பேச ஆரம்பித்தால் நிப்பாட்டவே முடியாது... விடுங்க."
சொல்லிட்டதால் விட்டுவிட்டேன். :-))

said...

பெரியாருக்கு முன் கண்ணாடியை கழற்றி வைத்துக்கொண்டாரே!! தலைவர். அது சரி இந்த போட்டோ எடுக்க பெரியார் ரூ10 கேட்டிருப்பாரே கொடுத்தாரா? எனென்றால் யார் போட்டோ அவருடன் எடுத்துக் கொண்டாலும் தொகை கொடுக்க வேண்டும்.

said...

Rambling traveller...Vishvesh,

Welcome to tamil blog sphere..

There are a zillion tools scattered allover the net to help you type tamil the way you like it...

said...

விஷ்வேஷ்,வருகைக்கு நன்றி

யுனிகோட் எழுதுவதற்கு சிரமமே இல்லை. இங்கே சென்று ஈ கலப்பை என்ற சாப்ட்வேரை நிறுவுங்கள். பிறகு உங்கள் கீ போர்டில் enna என்று டைப் செய்தால் அது என்ன என தமிழில் ட்ரான்ச்லிட்டரேட் ஆகும்.

வருக அருமையான கட்டுரைகளை தருக

said...

என்னார் சார், அப்படி சேர்த்ததுதான் அவ்வளவு சொத்தா

said...

//என்னார் சார், அப்படி சேர்த்ததுதான் அவ்வளவு சொத்தா //

நிச்சயமாக. அவருடைய சொந்த சொத்துக்களும், அவர் சேர்த்த அனா, ரூபாய்களும் பெரியார் அறக்கட்டளைகளாக மாறியுள்ளன. மகரிஷிகள் செய்தது போல தன் சொந்த பந்தங்களுக்கு அவர் சொத்தை விட்டு செல்லவில்லை.

said...

//அதிலும் நம்ம வீரமணி, திருக்குறளில் கடவுள் வாழ்த்து இடையில் தான் சேர்க்கப்பட்டது என்பது போன்ற ஆராய்ச்சிகளில் தான் குறியாக உள்ளார். //

வீரமணி அப்படி எடுத்த முயற்சிகளை சற்று விளக்க முடியுமா?

said...

ஆமாம் கடைசியாக சில சமயம் சொல்வார்,"முட்டாப்பசங்க எங்கூட போட்டா எடுக்க செலவுசெய்யிரானுவ"
என்பார்

said...

அருண்மொழி சார், எந்த அறக்கட்டளை யாருக்கு எவ்வளவு அறம் விவரங்கள் இல்லையே?

மகரிஷிகள் போட்டோ எடுக்க பைசா வாங்கினாரா? இல்லை அவ்வாறு பணம் கொடுத்தவர்களை மடப்பசங்கள் என திட்டினாரா?

said...

//அருண்மொழி சார், எந்த அறக்கட்டளை யாருக்கு எவ்வளவு அறம் விவரங்கள் இல்லையே?
//

முடிந்தால் மத்திய அரசிடம் கேட்கவும் :-) அவர்கள்தான் பெரியார் அறக்கட்டளைகளுக்கு வருமான வரி விலக்கு அளித்துள்ளனர்.

//அவ்வாறு பணம் கொடுத்தவர்களை மடப்பசங்கள் என திட்டினாரா? //

மடப்பசங்கள் என சொன்ன பிறகும் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்பவர்கள் .....