Sunday, October 08, 2006

North Star - வணக்கம்

Calgary Siva said...
வாழ்த்துக்கள் சிவா.....,நட்சதிரமாய் ஜொலியுஙகள்........உங்கள் பெயரைப் பார்த்து விட்டு நான், மதுரை சிவா அல்லது சென்னை சிவா என்று பெயர் வைத்து கொள்ளாலாம் என நினைத்து, நான் வாழும் ஊர், கால்கரியின் பெயரை வைத்து பின்னூட்த்தில் பதிவு செய்துள்ளேன். நட்சதிரம் ஆகும் திறமையோ, தகுதியோ, எண்ணோமோ எனக்கில்லை.சிவா மீண்டூம் வாழ்த்துக்கள்.Calgary Siva
10:24 AMசிவா said...
வாங்க கால்கரி சிவா! நான் ஊர் பேரெல்லாம் வைக்கலீங்க :-). வெறும் சிவான்னே வச்சிட்டேன்..கால்கரின்னா எங்கே இருக்கு..சொல்லுங்க..வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே.//** நட்சதிரம் ஆகும் திறமையோ, தகுதியோ, எண்ணோமோ எனக்கில்லை. **// அப்படி எல்லாம் இல்லைங்க..எல்லோருமே நட்சத்திரம் ஆகலாம்..நானெல்லாம் ப்ளாக்கில் தான் முதலில் எழுத ஆரம்பித்தேன்...நீங்களும் ஒரு நாள் நட்சத்திரம் ஆக வாழ்த்துக்கள் ..

கடந்த பிப்ரவரி மாதத்தில் எனக்கும் சிவாவிற்கும் நடந்த பின்னூட்ட பரிமாற்றம்.

இவ்வளவு சீக்கிரம் என்னை நட்சத்திரமாக்கிய தமிழ்மண குழுவினருக்கு நன்றி.

நான் அதிகம் படிக்காதவன். என் தமிழ் சரியில்லை நிறைய எழுத்துப் பிழைகள் இருக்கும். இதையெல்லாம் பொறுத்து இவ்வளவு நாட்கள் என் பதிவை படித்தவர்களுக்கு நன்றி.

தமிழ்பதிவுகளின் தாக்கம் பெரிது.

கால்கரியில் ஒரு இந்தியர்கள் கூடும் கூட்டத்திற்கு சென்றிருந்தேன். கூட்ட இடைவேளையில் ஒரு தமிழருடன் அளவளாவி கொண்டிருந்த போது அவர் சந்தேகத்துடன் தமிழ் பதிவுகளை படிப்பீர்களா? என கேட்டார்.

"படிப்பதென்ன அதில் கிறுக்கவும் செய்கிறேன்" என்றேன்.

அவரும் "நான் சந்தேக பட்டது சரியாகி விட்டது கால்கரி சிவா வாகிய உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி" என்றார்.

அவருக்கு என் வலைபதிவின் லிங்கை அனுப்பியது திருச்சியில் இருக்கும் அவரது தந்தை

கர்வம என் தலைக்கு ஏறியது.

அடுத்த ஒரு வாரத்திற்கு இந்த மாதிரி சந்தில் சிந்து பாடும் என் டார்ச்சரை பொறுத்தருள வேண்டுகிறேன்.

52 comments:

said...

தலைவா

கலக்குங்கள்.வாழ்த்துக்கள்

said...

தலைவா

அப்போதே உங்கள் போட்டோ தமிழ்மண முகப்பில் வந்தும் பார்த்து விட்டு எங்கே இன்னும் பதிவை காணோம் என யோசித்து கொண்டிருந்தேன்.

இந்த போட்டோ சூப்பராக இருக்கிறது. சூப்பர் டாப்பிக்குகளில் கலக்குங்கள். தினமும் ஒரு பதிவேனும் போடுங்கள்.

அருமையான வாரத்தை எதிர்நோக்கி இருக்கிறேன்.வரும் வராம் சூடாக இருக்குமா சுவையாக இருக்குமா இரண்டும் சேர்ந்தே இருக்குமா என தெரியவில்லை:))

said...

போட்டுத்தாக்கும்வோய்!

said...

செல்வன், நன்றி.

said...

கொத்தனார், இன்னும் தூங்கலியா. எங்களுக்கு நாளை டாங்க்ஸ் கிவிங் டே

said...

கா.சிவா! அடிச்சி தூள் கெளப்புங்க என்ற வாழ்த்தெல்லாம் உங்களுக்கு தேவையில்லை :-)
தமிழ் மணம் இந்த வாரம்
சுவாரசியமாய் போகும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
ஆரம்பிங்க :-)

said...

கல்கேரி சிவா,
நட்சத்திர வார வாழ்த்துக்கள்.

said...

கால்கரி சிவாவுக்கு - * வணக்கம் !
இந்த வாரம் விவாத வாரம் !
:)

said...

உஷா அவர்களே, நன்றி

இந்த வாரம் என் இன்னொரு முகம் பார்க்கபோகிறீர்கள்.

ஒரு சராசரி மிடில் கிளாஸ் மாமாவின் முகம் அது

said...

வெற்றி, நன்றி. அடுத்தமுறை டோரண்டோ வரும் போது நிச்சயம் சந்திப்போம்

said...

GK, மேலே பாருங்க, இந்த வாரம் ஆமாம் சாமி வாரம்

said...

வாழ்த்துக்கள்...

said...

சிவா,
நட்சத்திர வாழ்த்துகள்

said...

இவ்வார நட்சத்திரமே, வாழ்த்துக்கள்.

said...

வாழ்த்துக்கள் தலை, கலக்குங்கள் காத்திருக்கிறோம்....
அன்புடன்
த.அகிலன்

said...

கால்கரி நட்சத்திரமே, கொண்டாடுங்க இன்பமான இந்த வாரத்தை! நான் சொன்ன மாதிரி வெளியூரு போறேன், இருந்தாலும், எல்லா பதிவுகளையும் படிச்சி பின்னோட்டம் போட்டுவிடுகிறேன், வாழ்த்துக்கள்!

said...

எழுதுங் சாமி..

ஒரு அரேபிய பதிவு..ஒரு பகுத்தறிவு பதிவு கொளுத்தி போடுங்க:))

வாழ்த்துக்கள்

said...

கால்கரியில் ஜிகர்தண்டா சமைத்த தானைத்தலைவர் கால்கரி சிவா உங்களுக்கு, இஸ்ரேல் ரசிகர் மன்றம் சார்பாக, இந்த வாழ்த்துக்களை கொடுத்து கவுரவிக்கிறோம்.

Star ஆனதற்கு வாழ்த்துக்கள்.

said...

வாழ்த்துக்கள் சிவா...

said...

ஹாலிடே சீசனில் நட்சத்திரம் ஆக்கிவிட்டார்களா? பிரமாதம்.

said...

கால்கரி சிவாவுக்கு நட்சத்திர வாழ்த்துக்கள்

said...

வாருங்கள் சிவா
வாழ்த்துக்கள்!
உங்களுடைய
இந்தவாரப் பதிவுகள் அனைத்தும்
எங்கள் நெஞ்சத்தை நிறைக்கட்டும்!
அன்புடன்,
SP.VR.SUBBIAH

said...

வாழ்த்துக்கள்!! இந்த வார இடுகைகள் இனிமையாக இருக்கும் என்று நம்புகிறேன்.

said...

எங்கள் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய எதிலும் தனித்தன்மையானக் கருத்தினை உடைய எங்கள் மாண்புமிகு நார்த் ஸ்டார் கால்கரி சூப்பர் ஸ்டார் கால்கரி சிவா அண்ணன் அவர்கள் இந்த வார தமிழ்மண நட்சத்திரமாய் தேர்ந்தெடுத்து தமிழ்மணம் இதுவரை நட்சத்திரமாய் இருந்தவர்களுக்கும் இனிமேல் நட்சத்திரமாய் வரப்போகிறவர்களுக்கும் ஒரு பெரிய மரியாதையையும் அந்தஸ்தையும் தந்துள்ளது. இந்த வாரம் இப்படிப்பட்ட அருமையும் பெருமையும் வாய்ந்த வாரமாக இருக்கப் போகிறது என்று யாரும் ஒரு க்ளூவும் தராததால் அலங்கார வரவேற்பு வளையங்களும் பிரம்மாண்ட பாராட்டு விழாக்களும் ஏற்படுத்த இயலாமல் போனதற்கு மிகவும் வருந்துகிறேன். எட்டாக் கனியென நட்சத்திரமாவதை எங்கள் அண்ணன் நினைத்ததாகச் சொல்வது அவரது தன்னடக்கத்தைக் (??) காட்டுகிறது. இது எட்டாக் கனியில்லை என்பதை பதிவுலகில் எழுதத் தொடங்கி எட்டாவது மாதத்திலேயே நட்சத்திரப் பெருமையை அடைந்து உணர்த்திவிட்டார். அவர் பல்லாண்டு காலம் அவரது பேரன் பேத்தி எல்லாரும் நூறாண்டு காலம் ஆகும்வரை வாழ்ந்து தமிழையும் தமிழ்மக்களையும் தமிழ்நாட்டையும் வாழவைக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல கடவுளை வேண்டி விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்.

said...

நான் கூட கால் கரி என்பது கரிகால் சிவாவாக்கும் என நினைத்தேன் மதுரை சிவா இது தான் நன்றாக இருக்கிறது.
வாழ்த்துகள்

said...

குமரன்,
வெளியே -6 டிகிரி C இல் போயும் ஒன்றும் ஆகவில்லை
உங்க பின்னூட்டத்தைப் பார்த்த பிறகுதான் குளிர்கால உடைகளை அணிகிறேன்.

அநியாயத்திற்கு ஐஸ்

said...

மணியன் சார், நன்றி. என்னால் முடிந்த வரை பல வெரைட்டிகளை தர முயல்கிறேன்

said...

சுப்பையா சார், நன்றி

said...

சின்னகுட்டி, நன்றி

said...

கனக்ஸ், நன்றி

said...

ஆஹா தலைவா, நட்சத்திரமாக நீங்கள் கன்னா பின்னாவென்று ஜொலிக்க இந்த நாகை சிவாவின் வாழ்த்துக்கள்.

ஒரு சின்ன டவுட், குமரன் ரொம்ப பீல் பண்ணி கூவி இருக்காரே, ரேட் கட்டுப்படியாச்சா உங்களுக்கு.......

said...

முத்து,

அரேபிய பதிவு பகுத்தறிவு பதிவு இல்லாமல் என் புனித பிம்பத்தை கலைக்க போகிறேன்...ஹி..ஹி...

said...

Hearty congratulations!!

said...

முத்துக்குமரன்,

நன்றி

said...

தருமி சார், நன்றி

said...

வஜ்ரா, இரசிகர் மன்றம் வைத்து மறத்தமிழன் என மீண்டும் நிரூப்பித்தற்கு நன்றி

said...

நட்சத்திர வார பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்

said...

நாதர், அடாது வேலை இருந்தாலும் விடாது பின்னூட்டம் இடுவேன் என சொன்னதற்கு நன்றி.

உங்கள் பயணம் இனிதாக வாழ்த்துக்கள்

said...

வாழ்த்துக்கள் கால்கரி சிவா அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

நாகை சிவா. என்ன சொல்றீங்க? கூவியிருக்கேனா? இதுவும் சொல்வீங்க. இன்னமும் சொல்வீங்க. ;)

கலையுலக சூரியனுக்கு திரையுலகம் தந்த பிரம்மாண்டமான விழாவினைப் பார்த்த தாக்கமாக்கும் இது. உங்க ஊருல சன் டிவி பாக்க முடியாதோ? அதான்.

said...

கால்கரி சிவா,

வஜ்ரா, இரசிகர் மன்றம் வைத்து மறத்தமிழன் என மீண்டும் நிரூப்பித்தற்கு நன்றி

ரஸிகர் மன்றத்தில் பொருளாளர் பதவியை எனக்குத்தான் தரவேண்டும். இல்லாவிட்டால் வரவு செலவு கணக்குக்கேட்டு வஜ்ராவை டார்ச்சர் செய்வேன்.

said...

வாழ்த்துக்கள் சிவா. கலக்குங்க.

:)

said...

சிவா சார்,

நட்சத்திர வாழ்த்துகள்..

said...

கால்கரிசிவா!
நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துக்கள்.

said...

வாழ்த்துகள் கால்கரி சிவா.

வைசா

said...

வாழ்த்துகள் கால்கரி சிவா.

வைசா

said...

சிவா!
வாங்க!! வாழ்த்துக்கள். தாருங்கள் உங்கள் அனுபவத்தை!
யோகன் பாரிஸ்

said...

வாழ்த்துக்கள் , சிவா.

said...

வாழ்த்துக்கள் சிவா.

மகிழ்ச்சியாக உள்ளது.

said...

இரண்டு மூன்று நாட்களாக ஊரில் இல்லை. சுற்றுப் பயணத்தில் இருந்தேன்.

வாழ்த்துக்கள் கால்கரியாரே!

கலக்குங்க!

said...

வாழ்த்துக்கள்!!! வழக்கம் போல் கலக்கவும்...

said...

நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள்!