Wednesday, October 11, 2006

நீமோ எனும் அன்புருண்டை

A pet in the house will change your life forever.

Photobucket - Video and Image Hosting
எங்கள் நீமோ வந்த பிறகு எங்கள் வாழ்க்கை மிக இனிமையாக இருக்கிறது.

பாலைவன குக்கிராமத்தில் இருக்கும் போது பற்பல வசதிகள் இருந்தபோதும் எந்த பொருளும் சொந்தமாக இல்லை.

இருந்த சில விலை உயர்ந்த பொருட்களை இந்தியாவிற்க்கு அனுப்பிவிட்டு, பல பொருட்களை குறைந்த விலையில் விற்றுவிட்டு, மிந்திய சில பொருட்களை இலவசமாக தந்துவிட்டு புத்தகங்கள், சமையல் பாத்திரங்கள், காசெட்கள், துணிமணிகளை மட்டும் எடுத்துக் கொண்டு கனடா வ்ந்தோம். வந்து வீடு, கார்கள், பர்னிச்சர்கள் வாங்கி செட்டில் ஆகிவிட்டது.

எதெற்கெடுத்தாலும் எங்களையே சார்ந்திருந்த எங்கள் மகனும் சுதந்திரமாக செல்ல நல்ல நகரமும் , பள்ளியும் நண்பர்களும் கிடைத்துவிட்டனர்.

வேலை, வீடு Friends, Raymond போன்ற அசட்டு சீரியலகள், வாரயிறுதி என வாழ்க்கை ஒரு ரோட்டீன் ஆனது.

அந்த சமயத்தில் என் மனைவியும் ஒரு மிகப் பெரிய நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் கடையில் கணிணி டெக்னீசியனாக சேர்ந்தார். அங்கே கடும் வேலை. உடல் அசதியும் மன அசதியும் ஒருங்கே அவருக்கு ஏற்பட்டன. கிடைக்கும் நேரங்களில் அருகிலுள்ள வளர்ப்பு பிராணிகள் கடைக்கு சென்று அங்குள்ள பிராணிகளை
பார்த்தும் தடவியும் கொடுக்கும் போது என் மனைவிக்கு ஒரு வித இளைபாறுதல் கிடைத்தது.

இப்பிராணிகள் தலைமுறை தலைமுறையாக மனிதனுக்கு அன்பை தந்தும் பெற்றும் வளர்கின்றன. இதைக் கண்டதும் எங்களுக்கும் ஒரு செல்ல பிராணி வைத்துக் கொள்ளவேண்டும் என ஆசை வந்துவிட்டது.

சரி ஒரு கிளி வாங்கலாம் என்று முடிவுசெய்து Cockatiel இனத்தை தேர்ந்தெடுத்தோம் .

Photobucket - Video and Image Hosting

Cockatiel என கூகுளினால் ஆ....கோடிகணக்கில் தகவல்கள்.

Cockatiel பற்றி படிக்க படிக்க சுவையான தகவல்கள்.

எங்களின் முதல் கேள்வி சுதந்திரத்தை விரும்பும் நாம் சுதந்திர பறவையை கூட்டில் அடைத்து வைப்பதா? (தெ.கா. முன்னோரு முறை இதே கேள்வியைக் என்னிடம் கேட்டார்)

தவறுதான். இயற்கையாக திரியும் சுதந்திரமான பறவைகளை பிடித்து கூண்டில் அடைத்து வளர்ப்பது பாவம். நீமோவின் முதாதையரை யாரோ பிடித்து அந்த பாவத்தை செய்துவிட்டார். நீமோ மற்றும் அதனுடைய தாய் தந்தை ப்ரீடர்களின் வீட்டில் பிறந்து மனிதர்களால் உணவு கொடுக்கப்பட்டு மனிதர்களின் கையால் வளர்ந்தவை. இவைகளுக்கு சரியாக பறக்க தெரியாது, சரியான உணவை தேட தெரியாது எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள தெரியாது. இவைகளுக்கு 'விடுதலை' தந்தால் அதுதான் பாவம். இந்த பறவைகளை வெளியே விட்டால் ஒரே நாளிலோ அல்லது சில நாட்களிலோ இறந்துவிடும். நம் அன்பை செலுத்தி அதன் அனபை பெற்று அவைகளுக்கு நல்ல வீட்டை அளித்து காப்பது எங்கள் நோக்கம். நாங்கள் சுதந்திர பறவைகளை பிடித்து விற்கும் வியாபாரிகளை எதிர்க்கிறோம்.



இந்த பறவைகள் அவர்களுடன் வாழும் மனிதர்களை தன்னுடைய சக பறவை என்றே நினைக்கும். அந்த பறவை வகைகள் Canaries, finches, cockatiels, parakeets, and lovebirds.

ஆனால் conures, parrots, macaws, cockatoos போன்றவைகளின் குணங்கள் மாற்றவே முடியாது. இந்தமாதிரி பறவைகளை வளர்பதற்கு தனி தேவைகள், நேரம் இடம் தேவை. இவைகளை வளர்ப்பதைவிட இயறகையில் பார்த்து ரசிப்பது சால சிறந்தது. அடுத்தமுறை நீங்கள் உங்கள் மாடியிலோ அல்லது தோட்டத்திலோ அடிப்பட்ட பறவைகளை கண்டால் அவைகளுக்கு வேண்டிய உதவிகளை செய்து பறக்கவிடுங்கள். அந்த பறவைகள் பறக்க விரும்பாமல் உங்களிடமே இருந்தால் மட்டும் அதெற்கென்று ஒரு வீட்டை (கூண்டு என்பது ஜெயில்) கட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

ஆக சுத்ந்திரமான பறவையை பிடித்து கூண்டில் வைக்கவில்லை அன்பான பறவையை வீட்டில் வைத்துள்ளேன்.

என் நீமோவிற்கு அவனுடைய வீடு ரொம்ப பிடிக்கும்.

Photobucket - Video and Image Hosting

பறவையை எப்படி செலக்ட் செய்வது?

பறவையை நீங்கள் செலக்ட் செய்ய முடியாது பறவை உங்களை செலக்ட் செய்ய வேண்டும். மேலும் பறவையை பெட் சாப்களில் வாங்கவே கூடாது. பெட் சாப் களில் சுதந்திர பறவைகளை பிடித்து விற்பார்கள். பறவைகளை humane சொசைட்டி அல்லது breeder இடமிருந்தோ தத்தெடுக்கவேண்டும். humane சொசைட்டியி லும் ப்ரச்னையான பறவைகள் இருக்கும். ஆகையால் நல்ல பறவை ஒரு நல்ல breeder இடம் மட்டும் தான் இருக்கும்

மீண்டும் கூகுள்........

கால்கரிக்கு அருகாமையில் 50 கிமீ தூரத்தில் Acme என்றொரு கிராமம் அங்கே ஒரு breeder காகடீல் களை தத்து தர விருப்பமாக இருந்தார். ஆனால் அவர் எங்கள் வீட்டையும் எங்கள் குடும்பத்தினரைப் பார்க்கவேண்டுமென்றார். நாங்களும் முதலில் பறவைகளை பார்க்கிறோம். அப்புறம் நீங்கள் எங்களை பாருங்கள் என்றோம். ஒரு சனி காலையில் அவர்கள் வீட்டிற்கு போனோம். அவர் அவரிடமிருந்த 3 குஞ்சுகளை காட்டினார். நான் அழைத்ததும் எங்கள் நீமோ என் மேல் தாவி அமர்ந்தது . என் விசிலுக்கு பதில் செய்தது என் கண்ணாடியை கடித்தது. அதைப் பார்த்த அந்த அம்மையார் நீமோவை எங்களுக்கு தத்து தர உடனடியாக சம்மதித்தார். Adoption fees ஐ 200 டாலரிலிருந்து 100 டாலருக்கு குறைத்தார்!!!.



நீமோவை ஒரு அட்டை டப்பாவில் அடைத்து எங்களிடம் தந்தார். நீமோவின் பிறப்பு சான்றிதழ் தந்தார். நாங்களும் வரும் வழியில் நீமோ வாழ வீடு, தானியங்கள் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வ்ந்தோம். நீமோவின் வீட்டை செட்டப் செய்துவிட்டு அட்டை டப்பாவை திறந்தால் நீமோ மிக பயந்திருந்தது. பாவம். புது இடம் புது வீடு புது மனிதர்கள் மிகவும் பய்ந்து நடுங்கி கொண்டே அதன் வீட்டின் மூலையில் பதுங்கியது. பார்க்கவே பாவமாக இருந்தது. ஐயோ தவறு செய்துவிட்டோமோ என எங்களை நினைக்கவைத்துவிட்டது. ஆனால் நாங்கள் ஒன்றை கவனித்தோம் நாங்கள் சாப்பிடும் போது அதுவும் கீழே இறங்கி வந்து அதனுடைய வீட்டின் வைத்துள்ள அதன் உணவை சாப்பிடும். சிறிது உற்சாகம் எங்களுக்கு வந்தது. நாங்கள் அதன் வீட்டில் அருகில் அமர்ந்து சாப்பிடுவது போல் பாவ்லா செய்தாலும் அது சாப்பிட ஆரம்பித்துவிடும். அதன் வீட்டிலிருந்து அது இரண்டு நாட்கள் வரேவே இல்லை. எப்படி வரவழைப்பது என்பதை மீண்டும் கூகுளினால். ஒரு தவறான தகவல். ஒரு டவலால் அதைப் பிடித்து கைகளால் தடவி கொடுத்தால் அது பழகிவிடும் என போட்டிருந்தது. நானும் நீமோ வை டவலால் பிடித்தேன். அது மரண ஒலமிட்டது பாவமாய் இருந்தது. பிறகு என் கையில் அதை எடுக்கும் போது என் விரலை செமையாக கடித்து இரத்தம் வந்துவிட்டது. சரி அப்போதைக்கு விட்டு விட்டேன்.
Photobucket - Video and Image Hosting

அதுவும் ஓடி போய் அதன் வீட்டில் அடைந்தது. மறுநாள் பறவைகளின் டாக்டரிடம் ஒரு செக்-அப். பறவைகள் மற்றும் வளாப்பு ஓணான், தவளை, பாம்பு இவைகளுக்காக ஒரு ஸ்பெசலிஸ்ட். அவர் நீமோவை நன்றாக செக் செய்துவிட்டு நல்ல பறவை இது. சிறிது பொறுமையாக அன்பாக இருங்கள் பழகிவிடும் என்றார். (இங்கே மனிதர்களுக்கு மருத்துவம் இலவசம். மிருகங்களுக்கு பீஸ் மிக அதிகம். ஒரு விசிட்டிற்கு $100 ஆகும்) நாங்களும் அதனுடைய treat ஆன spray millet என்ற கேழ்வரகு பொன்ற தானியத்தை வாங்கி கொண்டு வீட்டிற்கு வந்தோம். அதனை காட்டியும் அது அதன் வீட்டிலிருந்து வெளியே வரவே இல்லை. பொறுமை...பொறுமை.... மறுநாள் spray millet ஐ பார்த்து ஆசையுடன் இறங்கிவந்து பயத்துடன் சாப்பிட்டது . என் மனைவி பொறுமையாக..மிக பொறுமையாக தினமும் சுமார் இரண்டு மணிநேரம் அந்த spray millet ஐ கையில் வைத்து ஒரு தவம் செயவதை போல் அதன் முன் அமர்ந்திருப்பார். மெதுவாக... மெதுவாக நீமோ கையில் அமர்ந்தது. நாங்கள் அருகில் போனால் அதன் வீட்டில் தஞ்சமடைந்தது. சில நாட்களில் மெதுவாக எங்கள் கைகளில் உள்ள spray millet ஐ பயமில்லாமல் சாப்பிட ஆரபித்தது. ஒரு நாள் அருகில் உள்ள பெட் சாப்பில் ஒரு பெண்மணி ஒரு கிளியின் தலையை கோதி கொண்டிருந்தார். அந்த கிளியும் ஆனந்தமாக தலையை திருப்பி திருப்பி கோதிக் கொண்டது. அந்த டெக்னிக்கை பயன் படுத்துவது என முடிவு செய்து வீட்டிற்கு வந்து. என் மனைவி நீமோவை spray millet காட்டி வெளியே அழைத்தார். அது கையில் அமர்ந்தவுடன் மெதுவாக அதன் தலையை வருடினார். அவ்வளவுதான் அது மயங்கிவிட்டது. அழகாக தலையை குனிந்து மேலும் மேலும் வருட சொல்லி கேட்டுக் கொண்டது. பறவைகள் அதன் ஓய்வு நேரத்தில் அதன் உடல் முழுவதும் சொறிந்து கொள்வதை பார்த்திருப்பீர்கள். இதை preening என்பார்கள். அதன் இறகுகளின் அடியில் ஒருவித moisturising திரவம் ஊறும். அதைக் கொண்டு அதன் இறக்கைகளை பள பளப்பாக்கி கொள்ளதான் அது அவ்வாறு செய்கிறது. அதன் தலை அதற்கு எட்டாது அதனால் அருகில் உள்ள பறவையிடமோ அல்லது நம்மிடமோ preening செய்வதில் கொள்ளைப் பிரியம்.

அதன் பிறகு நீமோ மிக நன்றாக பழகிவிட்டது.


தினமும் காலையில் கண் முழிக்கும் போது பரபரப்பாக் போய் நீமோவை பார்ப்பதும் அதன் அதிகாலை பாடலை கேட்பதிலும் மனம் லயித்தது. ஒவ்வொரு மாலையும் அலுவலகத்தில் வந்தவுடன் க்கீ என நம் வருகையை அன்புடன் வரவேற்கும் அழகை காண வீட்டிற்கு வருவதில் ஒரு உற்சாகம் இருந்தது.

கால போக்கில் நாம் பேசும் வார்த்தைகளை அர்த்ததுடன் பேச துவங்கியது.

சாப்பிட வேண்டுமென்றால் நீமோ ஈட் என சொல்லும், ஸ்பெஷல் அய்ட்டங்களை நீமே ட்ரீட் என்று சொல்லும். ஊட்டா என வாட்டரை கேட்கும் . படுக்க போகுமுன் குட்நைட் என அழகாக சொல்லும்.


சில பாடல்களை விசிலடிக்கும். அந்த வீடியோ கீழே உள்ளது




இந்த பறவைகளுக்கு சந்தோஷம், துயரம், கோபம், டிப்ரஷன் போன்ற உணர்ச்சிகள் உள்ளன.

இந்த வகை பறவைகள் ஜோடி சேர்ந்துவிட்டால் உயிருள்ள வரை பிரியாது. ஆம் ஏக பத்தினி (பத்தனன்) விரதர்கள்.



நீமோ எங்களுடன் சேர்ந்து எங்கள் குடும்பத்தில் ஒன்றாகிவிட்டது. தினசரி மாலையில் என் மனைவியின் தோளில் அமர்ந்து அவர் செய்யும் எல்லா வேலைகளிலும் பங்கு கொள்ளும். மாலை வேளை பூஜையில் என் மனைவியின் தோளில் அமர்ந்து பூஜையில் பங்கு கொள்ளும். அவர் தியானத்தில் இருக்கும் போது தோளில் இருந்து இறங்கி வந்து கையில் அமர்ந்து கொண்டு உறங்கி விடும் . பிறகு விபூதியை பூசிக் கொள்ளும் போது அந்த வீபூதியை சாப்பிட சிறு குழந்தையை போல் ஓடி வரும். பிறகு தீர்த்தம் சாப்பிட ஆவலாக வந்து அந்த தண்ணீரை குடிக்கும்.

பிறகு மாலை முழுவதும் என் மனையின் கையால் தலையை வருடிக் கொள்ளூம்.

Photobucket - Video and Image Hosting

நீமோ இல்லாத வாழ்க்கை ஒரு சூன்யமாகதான் இருக்கும்




காகடீல் வகை பறவைகள் சுமார் 20 வருடங்கள் முதல் 25 வருடங்கள் வரை உயிர் வாழும். எங்கள் குடும்பத்தில் கலந்து எங்களின் இரண்டாவது மகனான நீமோவின் ஆயுட்காலத்தில் எங்கள் ஆயுள் முடிந்தால் அவன் வாழ்வதற்கு வகை செய்து அவனுக்காக உயில் எழுத ஏற்பாடுகள் செய்து வருகிறோம்

எங்கள் அன்பிற்காக ஏங்கி அன்பை மட்டுமே கொடுத்து வாழும் இந்த பறவைகளின் அன்புதான் நிபந்தனைகள் அற்ற தெய்வீக அன்பா.....

Photobucket - Video and Image Hosting


ஆம்... இந்த சின்னஞ்சிறு 70 கிராம் அன்புருண்டையின் அன்பினால் வாழ்க்கை இனிமையாய் இருக்கிறது

47 comments:

said...

சூப்பர்!
(துளசியை முந்திக்கொண்டேனா :-)

said...

ஒரு நல்ல பதிவு. புதுசா ஒன்ன படிச்ச திருப்தி.

said...

சூப்பர், நாங்கள் உங்கள் வீட்டுக்கு வந்த பொழுது என் பையனைப் போட்டியாய் நினைத்து சத்தம் போட்டு ஊரைக் கூட்டியது இன்னும் ஞாபக்கத்தில் இருக்கிறது. நாளை இதை அவனிடம் காட்ட வேண்டும்.

நயாகரா சென்ற பொழுது என்ன செய்தீர்கள்? காப்பகமா? படுத்தாமல் இருந்தானா?

said...

சிவா,

சூப்பர் பதிவு.

இந்தப் பசங்கதான் நமக்கு எல்லை இல்லாத அன்பை வாரி வழங்கறாங்க.
என் தோழி வீட்டுலே க்ரே கலர்லே ஒரு பறவை இருக்கு. ஆளுங்களைப் பார்த்தாப்போதும்
ஒரே ஆரவாரம்தான். ஸோ க்யூட்.

நல்லா அழகாப் பாடும் நீமோவை நாங்க ரசிச்சோம்.

நீமோ குட்நைட்:-)

said...

செல்லப்பிராணிகளிடம் அன்பு காட்டினால் 100% நம்மிடம் அந்த அன்பை கலப்படமின்றி வெளிப்படுத்தும். Manipulation துளிகூட இல்லாமல்.

வித்தியாசமான பதிவு.

said...

//நீமோவின் முதாதையரை யாரோ பிடித்து அந்த பாவத்தை செய்துவிட்டார். நீமோ மற்றும் அதனுடைய தாய் தந்தை ப்ரீடர்களின் வீட்டில் பிறந்து மனிதர்களால் உணவு கொடுக்கப்பட்டு மனிதர்களின் கையால் வளர்ந்தவை. இவைகளுக்கு சரியாக பறக்க தெரியாது, சரியான உணவை தேட தெரியாது எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள தெரியாது. இவைகளுக்கு 'விடுதலை' தந்தால் அதுதான் பாவம். இந்த பறவைகளை வெளியே விட்டால் ஒரே நாளிலோ அல்லது சில நாட்களிலோ இறந்துவிடும். //


இதெல்லாம் அந்த கிளி சொல்லுச்சா?

:-))

பார்க்க
கிளி
http://nunippul.blogspot.com/2006/10/blog-post_11.html

நானும் சுதந்திரவானில் பறக்கப் போகிறேன்
என்று அறிவித்தது அக்கிளி
உன்னை கிழித்து கூறுப் போட்டு விடும்
கழுகுகளும், கோட்டான்களும்
அலறின தோழி கிளிகள்

said...

கேள்விப்படாத பல தகவல்கள்
படங்கள், நேரிலேயே பார்தது போல இருந்தது.

said...

இன்னும் ஒண்ணு சொல்ல மறந்து போச்சே, உங்க தங்கமணி குரலை விடியோவில் கேட்க முடிஞ்சது. நல்லா இருக்காங்களா? ஹலோ சொன்னேன்னு சொல்லுங்க!

said...

சூப்பர் அண்ணாத்த,

//A pet in the house will change your life forever//

இதை நான் அப்படியே வழிமொழிக்கின்றேன். உங்க நிமோ சூப்பரோ சூப்பர். நம்ம வீட்டில் லவ் பேட்ஸ் வாங்கி இருப்பாதாக சொன்னார்கள். இன்னும் பார்க்கவில்லை. நம்ம வீட்டு செல்லத்தை பற்றி ஒரு பதிவு போட்டு இருந்தேனே பாத்தீர்களா?

said...

கல்வெட்டு அவர்களே,

கிளி நிச்சயமாக சொல்லாது. அது சொல்லும் நிலையில் இருந்தால் மனிதனின் உதவி இல்லாமல் அதனால் வாழமுடியும்.

இந்த கிளியின் தாய் தந்தை யார் என்பதற்கு பிறப்பு சான்றிதழ் இருக்கிறது. அந்த தாய் தந்தையருக்கு பிறப்பு சான்றிதழ் இருக்கிறது.

இதனை தத்து தரும் போது இதனுடன் உடன் பிறந்த பெண்கிளிகள் எங்கிருக்கின்றன இதனின் தாய் எங்கிருக்கிறது என்ற தகவல்கள் பரிமாறபடுகின்றன. முறையற்ற உறவை தடுக்க முடிந்த அளவு முயல்கிறார்கள்.

இந்த பிறப்பு சான்றிதழ் உண்மையானது அல்லது போலியா என கேட்டால் அதற்கு பதில் என்னிடம் இல்லை. உலகம் பரஸ்பர நம்பிக்கையில் இயங்குகின்றது என்பது எனது மற்றும் இந்தபகுதியில் வாழும் பெரும்பாலானரின் இயல்பு.

பரஸ்பர அவநம்பிக்கையில் ஆரம்பித்து ஆதாரம் இருந்தால்தான் நம்புவேன் என்றால் வாழ்கை முழுவதும் சந்தேகம் மட்டும்தான் எஞ்சியிருக்கும்.

பற்பல விலங்கியல் வல்லுனர்கள், பறவை ஆர்வலர்கள் எழுதிய புத்தகங்களையும் வீடியோகளயும் பார்த்து பல உண்மைகளை அறிய முடிகிறது. டேவிட் ஆட்டன்பரோ எழுதிய பறைவைகளின் வாழ்கை என்ற புத்தகத்தையும் அவரின் 10 எபிசோட் கொண்ட பிபிசி வெளியிட்ட வீடியோவையும் கிடைத்தால் நேரமிருந்தால் பார்க்கவும்.

பறவைகள் எப்படி பறக்காமல் இருக்கும்? இந்த ஆராய்சியை நானே செய்தேன். எங்கள் நீமோவிற்கு பறக்கும் சிறகுகளை நாம் முடிதிருத்துவது போல் 3 மாததிற்கு ஒரு முறை வெட்டவேண்டும். பாவம் அது பறக்கட்டும் என நாங்களும் விட்டுவிட்டோம். சிறிது இறக்கை முளைத்ததும் அதுவும் பறக்க ஆரம்பித்தது. ஆனால் எப்படி லாண்ட ஆவது என தெரியாது. தரையில் விழும். ஒரு முறை சுவற்றில் மோதி அதன் நெற்றியில் அடிபட்டு சிறிது இரத்தம் வந்தது. பறவைகளின் உடம்பில் சிறிது இரத்தம் வெளியெறினாலும் உடனே இறந்துவிடும். ஆகையால் நாங்கள் நீமோவை எமர்ஜென்ஸிக்கு கூட்டி போகும் நிலை ஏற்பட்டது. சமையல் செய்யும் வேளையில் தவறி போய் வாணலியில் விழுந்தால் ப்ரைதான்.
பறக்க நாம் தான் கற்றுக் கொடுக்கவேண்டும். எப்படி கற்று தருவது?

நான் ஒரு டாகுமெண்டரியை பார்க்க நேரிட்டது. அதில் ஒருவர் ஒருவகை அபூர்வ நாரைகளை ப்ரீட் செய்கிறார். இந்த வகை நாரைகள் உலகில் 50/100 தான் இருக்கிறது. மிக உயரத்தில் பறக்கும் பறவைகளை வீட்டில் பிறக்கவத்து அதன் தாய் பறவைகளை போல் இவர் வாயால் அவைகளுக்கு உணவு தருகிறார். இவர் பின்னாலேய அந்த நாரைகள் சுற்றுகின்றன. பிறகு ஒரு இலகுரக விமானத்தில் இவர் பறக்க அந்த நாரைகள் விமானத்தின் பின்னால் பறந்து பறக்க பழுகுகின்றன.

இப்படி ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு புத்தகமோ டாகுமெண்டரியோ இருக்கிறது சார்.

அந்த கவிதை நன்றாக இருக்கிறது. கவிதை எப்போதுமே ஒரு ஃபாண்டசிதான்.

உண்மையில் கிளிகளுக்கும் பருந்துகளுக்கும் நீண்ட போர் நடக்கிறது என்பேன். கிளிகள் அன்பை பொழியும் அறிவுசீவிகள் என்றால் பருந்துகள் மூர்க்கர்கள். ஆனால் 99% கிளிகள் தங்களைதானே காத்துக் கொள்கின்றன. அந்த தன்மையை கற்றுக் கொள்ளும் வாய்ப்பு வீட்டில் வளரும் கிளிகளுக்கு இல்லை

said...

உஷா மேடம், முந்திக் கொண்டுவிட்டீர்கள்

said...

இளா, நன்றி. உங்கள் பண்ணையில் இயற்கை சூழ்நிலையில் கிளிகளை வளர்க்கலாமே

said...

கொத்தனார், நயாகரா போகும் போது Bird Boarding தான். நாங்கள் திரும்ப நீமோவை பெற்றுக் கொள்ளும் போது தாயை கண்ட குழுந்தைபோல் ஓடி வந்து என் மனைவியில் தோளில் அமர்ந்து அன்பை பிழிந்தது. பார்ர்க பாவமாய் இருந்தது,

said...

துளசி மேடம், கிளிகள் என்றால் ஆஸ்திரேலியாவும் தென் அமெரிக்காவும் தென் ஆப்ப்ரிக்காவும் தான்.

நீமோவின் பூர்வீகம் ஆஸ்திரேலியாதான்

உங்கள் குட்நைட்டை நீமோவிடம் சொல்லிவிடுகிறேன் -:)

said...

ஹரி, இதைதான் unconditional love என்பார்கள்

said...

குமார், சிங்கபூரின் பறவைகள் பார்கை பாருங்கள் மேலும் மேலும் புதிய தகவல்கள் கிடைக்கும்.

said...

கல்வெட்டு, முன் வந்து விளம்பரம் இட்டதற்கு நன்னி, நன்னி. நன்னி.

said...

இந்த பதிவை மிகவும் ஆர்வமாக படித்தேன்.

சிவா அண்ணா, ஆண்டவனின் படைப்பில் எத்தனை அதிசயங்கள் அத்தனையும் செல்ல நினைக்கும் ஒரு வார்த்தை அன்பு. தீவிரவாதியிடமும் ஒரு மூர்க்க தனமான அன்பு, அது பிறரை வெறுப்பேற்றும் அன்பு. ஆனால், இது போன்ற அன்பு கள்ளகபடமற்ற குழந்தையின் அன்பைப் போன்றது.

வாழ்வில் இது போன்ற உறவுகள் தேவைதான்.

நேமா குட்நைட்.

said...

ஆஹா...

சொத்தெல்லா எழுதி வைக்கப் போறீங்களா?

நீமோக்கு கல்யாணம் ஆயிருச்சா?

வீட்டில் வளர்த்து வளர்த்து இது போல் உள்ள வளர்ப்பு பிராணிகள் தங்கள் உண்மை Ecological niche ஐ மறந்து வீட்டிலேயே வாழத்துவங்கிவிடுகின்றது...

என் நண்பர் வீட்டில் இருக்கும் பூனையும் இப்படித்தான்...

பாலை வெளியில் வைத்துவிட்டுப் போனாலும் அது கிச்சன் டேபிள் மேல் ஏறி குடிக்காது...

ஏறினால் இறங்கத் தெரியாது!! மியாவ் மியாவ் தான்..!!

வீட்டை விட்டு வெளியே (வெட்ரினரியனிடம் என்றாலும்) கூட்டிட்டுப் போனால் hyperventilate ஆகி நம்மனை பயமுறுத்திவிடும். அவ்வளவு பயம் வீட்டை விட்டு வெளியில் போக.

சரி,

ஒரு வாரம் குடும்பத்துடன் ஊருக்குப் போனால் நீமோ என்ன செய்யும்? யார் கவனிப்பார்கள்?

said...

சிவமுருகன், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள கிளிகளின் படத்தை போடவில்லையா?

said...

வஜ்ரா, நீமோ அடுத்தவருடம் தான் பருவத்திற்கு வரும். கல்யாணம் செய்து வைத்தால் மேலும் கிளிகள் உருவாகும். அதை நாங்கள் விரும்ப்பவில்லை. அதற்கு மாற்று என்ன என்பதை யோசிக்க வேண்டும்

ஒருவாரம் ஊருக்கு போனால் Bird Boarding இல் விட்டுவிடுவோம். ஒரு நாளைக்கு $5 தான் including meals

said...

//இந்த சின்னஞ்சிறு 70 கிராம் அன்புருண்டையின் அன்பினால் வாழ்க்கை இனிமையாய் இருக்கிறது//

சூப்பர். டச்சிங்கான ஃபினிஷிங்க்!

said...

நல்ல பதிவு. வளர்ப்புப் பிராணிகளுடன் ஏகமாக அனுபவங்கள் இருக்கிறது எனக்கு. எல்லாம் ஊரை விட்டுக் கிளம்பியதும் போச்.!!

என் பெண் நாய்க்குட்டி வாங்கித்தரச் சொல்லிப் படுத்திக்கொண்டிருக்கிறாள். ஆனால் ஏகப்பட்ட 'என்றால் என்ன செய்வது?' கேள்விகளால் முடிவெடுக்க முடியாமல் தடுமாறுகிறேன்.

நீமோவைப் பார்த்ததும் இந்த மாதிரி ஒருத்தனை அல்லது ஒருத்தியைக் கண்டெடுத்து வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு வந்தால் என்ன என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டேன்.

அருமையான கட்டுரை. நீமோவுக்கு என் சார்பாகவும் "குட் நைட்" சொல்லிடுங்க. அப்றம் பாட்டுப் பாடும்போது ரெண்டு காலையும் மாறி மாறித் தூக்கறானே. டான்ஸா இல்லாட்டி கீ போர்ட் வாசிக்கற சைகையா? ரொம்ப சமத்துப் பையனா இருக்கான் போலருக்கு.

சரி சரி. அதுக்காக காலம் பூரா பிரம்மச் சாரியா வச்சுக்கலாம்னு நினைக்காதீங்க. தப்பு. நா வேணா ஒரு புள்ளையை வளக்கறேன்.

//மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள கிளிகளின்
//

இத வேற ஞாபகப் படுத்திட்டீங்களா? சரியாச் போச்சு. பாவங்க அந்தக் கிளிகள்.

said...

good picture movie

said...

சிபி, நன்றி

said...

சுந்தர், கல்யாணம் நிச்சயம் இருக்கும். முட்டைகளை அகற்றி குஞ்சு பொறிப்பதை தவிர்க்கலாம். ஆனால் அந்த பெண்கிளி அதை எப்படி எடுத்துக் கொள்ளும் என தெரியவில்லை.

பெண்கிளிகள் படாது பேசாது கவனத்தில் வைக்கவும்

said...

Rambling Traveller,

Cockatiels are no 1 pet bird in North America because they are gentle. once it is bonded with you even when leave it for a month or two at bird boarding they will not forget you.

It has feelings and mood changes everyday. I have seen him angry, sad etc.

I will definitely not get offended. Sometimes I shout at him "டே கிளி சும்மாயிரு"

When I was recording, my wife was talking with her mother in Madurai:)

If you want more information, please give me a call. You know where to get my phone number

said...

நல்லப் பதிவு..என்னிடமும் இரண்டு பாராகீட்ஸ் இருக்கிறது ..ஆனால் அந்த அளவிற்கு பழகவில்லை ..வெளியே வரவே வராது ..பீரிடர்ட்ட வாங்கியிருக்கணும் ?

சூப்பரா இருந்தது உங்க நீமோ ..ஒரு ஹாய் சொல்லியிருங்கோ ..

said...

எங்கள் வீட்டில் நான்கு நாய்கள், இரண்டு பச்சை கிளிகள் வளர்த்தோம் (அந்த கிளிகளை கூண்டில் பார்க்க பிடிக்காமல் அதை பறக்க விடுவதற்காகவே வாங்கி வந்தேன். அவைகளை ஒரு குறவன் சற்று நேரத்திற்கு முன்புதான் பிடித்திருந்தான். அதில் ஒன்று கடைசி வரை எங்களிடம் பழகவே இல்லாமல் இறக்கை வளரும் முன்பே இறந்துவிட்டது. மற்றொன்று இறக்கை வளர்ந்தவுடன் பறக்கவிட்டுவிட்டோம்) கிளிகளும் சரி, நாய்களும் சரி ஒவ்வொன்றும் எங்களை விட்டு பிரியும்போது பெரும் துக்கம். கடைசி நாய் இறந்த போது, போதும், இனி வளர்ப்புகள் வேண்டாம் என்று முடிவு செய்ததுதான்.

பழைய ஞாபகங்களை கிளறிய பதிவு. நீமோ கொள்ளை அழகு. அதிலும் மேலிருந்து இரண்டாவது படத்தில் ஒரு குழந்தையை போலவே இருக்கிறான்.

said...

கூத்தாடி சார், நன்றி. உங்களிடம் விபசானா தியானத்தைப் பற்றி கேட்கவேண்டும் என நினைத்திருந்தேன்.
அடுத்த வாரம் மெயிலிடுகிறேன்.

ஒரே ஒரு கேள்வி: இந்த பாரகீட்கள் வீட்டில் எங்கிருக்கின்றன?.
உங்கள் வீட்டிற்க்குள் வைத்துக் கொள்ளுங்கள் அது பழகிவிடும். வேண்டியதெல்லாம் பொறுமை பொறுமை

said...

முகமூடி,

நல்ல காரியம் செய்தீர்கள். இந்த முறை ஊருக்கு போகும் போது இந்த மாதிரி கிளிகளை கண்டால் மொத்தமாக வாங்கி பறக்கவிடபோகிறேன்.

இங்கே இந்த வளர்பு பிராணிகளை பிரிய நேர்ந்தால் என்ன செய்ய வேண்டும் என கவுன்சலிங் செய்கிறார்கள்

வளர்ப்பு பிராணிகளை துன்புறுத்துபவர்களை கைது செய்கிறார்கள் !!!!!

எனிவே வருகைக்கு நன்றி

said...

நீமோவின் மற்றொரு படத்தைக் காண இங்கு சுட்டுங்கள் .

சிவாண்ணா, ஒரு இலவச விளம்பரம்தான். கண்டுக்காதீங்க.

said...

எப்படியோ பல மாசமா நீமோ பற்றி பதிவு போடுவதாக் சொல்லி கடைசியில் நட்சத்திர வாரத்தில் பதிவிட்டிருக்கிறீர்கள்.

கட்டுரை மிக அற்புதமாக வந்திருக்கிறது.

நீமோ மீது உங்களுக்கு இருக்கும் அன்பை கொட்டி எழுதிய கட்டுரை.

எங்கள் வீட்டில் நாலு லவ்பேர்ட்ஸ் வளர்த்தோம்.இப்போதும் வளர்கிறது,அந்த ஞாபகம் எல்லாம் வந்துவிட்டது.

said...

கொத்தனார், இலவசங்களை தொடருங்கள்

said...

செல்வன், நம்மூரில் கிடைக்கும் லவ்பேர்ட்ஸ் Budgie என்ற இனத்தை சார்ந்தது என நினைக்கிறேன். அதுவும் பழக்கினால் நன்றாக பேசும்

said...

சிவா,
ரொம்ப நீளமான பதில் கொடுத்துள்ளீர்கள்.. :-)

பூனை,நாயில் ஆரம்பித்த இந்த வளர்ப்பு பிராணி வகை இப்போது முதலை,பாம்பு,சிங்கம்...என எல்லை தாண்டி போய் விட்டது. மேலும் இப்படியே வாழ்ந்து பழக்கப்பட்ட நாய்,பூனைகளில் பல தத்தெடுப்பார் இன்றி காப்பகங்களில் காத்துக் கிடக்கிறது.

மனிதன் தனது சந்தோசத்திற்காக மற்ற இனத்தின் வாழ்க்கை முறையையே காவு கேட்கிறான். இது உங்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு அல்ல.வாங்குவது குறைந்தால் விற்பதும்,உண்டாக்குவதுமான இந்த பிசினஸ் படுத்துவிடும் என்று சொல்வது ,காந்தியின் கதர் கோட்பாடு போன்றதுதான். அதாவது இப்போதுள்ள வாழ்க்கை நடைமுறைக்கு உதவாது.

இதன் அடுத்த முன்னேறிய அமைப்பே மிருகக்காட்சி சாலைகள்.

மனிதன் வாழும் உலகில் இவை யாவும் தவிர்க்க முடியாததாக ஆக்கப்பட்டு விட்டது.நாம் அனைவரும் இந்த கொடுமைகளின் நுகர்வோரே.

மனிதனை அண்டி வாழும் பிராணிகள் இருந்தது.இப்போது அதன் லிஸ்ட் பெரிதாகிக் கொண்டே போகிறது.

//உண்மையில் கிளிகளுக்கும் பருந்துகளுக்கும் நீண்ட போர் நடக்கிறது என்பேன். கிளிகள் அன்பை பொழியும் அறிவுசீவிகள் என்றால் பருந்துகள் மூர்க்கர்கள். ஆனால் 99% கிளிகள் தங்களைதானே காத்துக் கொள்கின்றன. அந்த தன்மையை கற்றுக் கொள்ளும் வாய்ப்பு வீட்டில் வளரும் கிளிகளுக்கு இல்லை //

உண்மை ஒத்துக் கொள்கிறேன்.

நிமோவிற்கு நல்ல குடும்பம் கிடைத்துள்ளது.
வாழ்த்துகள் நிமோ !

said...

//சிவமுருகன், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள கிளிகளின் படத்தை போடவில்லையா?//

போட்டுள்ளேன் பார்க்கவும்.

ஆனால் தற்சமயம் இக்கூண்டு இல்லை. மறுபடியும் கானாமல் போய்விட்டது

said...

அருமையான பதிவு. மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள். உங்கள் பதிவுகளை வரிசைப் படுத்தச் சொன்னால் முதலிடம் இந்தப் பதிவுக்குத்தான்.

உண்மை வாழ்க்கையில் சில மனிதர்கள் இந்தப் பறவைகளைபோலவே மிக மென்மையானவர்கள். எனக்கு மீன்களைத் தவிர மற்ற பிராணிகளின் வளர்ப்பில் ஆர்வமில்லாததால் உங்கள் பதிவு அம்மாதிரி மனிதர்களை கவனத்துக்கு கொண்டு வந்துவிட்டது.

பலன் எதிர்பாராத அன்பு நட்பில் கிடைக்கும். ஆனால் நட்பெனும் பயனும் இல்லாத அன்பு உங்கள் வளர்ப்பில் மிளிர்கிறது.

இதற்கிணையான பறவை இந்தியாவில் உண்டா? தெரிந்தால் சொல்லுங்கள்.

அன்புடன்
ஓகை.

said...

நான் காந்திமதி நடராஜன், ஓகை நடராஜனின் மனைவி. கிளி மொழியில் எனது வணக்கங்கள். முக்கியமான மற்றும் சுவாரஸ்யமான பதிவுகளை நானும் ரசிப்பது வழக்கம். அந்த வரிசையில் தங்களது நீமோவையும் படிக்க, பார்க்க மற்றும் கேட்க நேர்ந்தது.
குழந்தை போல இருந்த நீமோ எங்களை கிறங்கடித்தது. கடைசி வரிகளில் நீங்கள் எங்களை கலங்கடித்துவிட்டீர்கள். நீமோ போல் ஒன்றைத் தேடத் தொடங்கிவிட்டோம்.
அருமையான பதிவுக்கு நன்றி.

said...

சிவா,

எனக்குத் தனியாக எழுதி, இப்படி ஒரு பதிவுட்டிருப்பதாக அறிவுரித்தியமைக்கு எனது முதல் நன்றி.

இரண்டாவது, இது போன்ற வளர்ப்பு பிராணிகள் எப்படி இப்படி நமது தேவைகளை பூர்த்தி செய்வதற்கெனவே பிறப்பெடுத்திருப்பதை போல எண்ணிக் கொள்ள வேண்டியதுதான்.

எனக்குத் தெரிந்தும் இன்று பல பேரால் petsகள் இல்லாமல் வாழ்கையை நகர்த்துவது கடினம்போல்தான் தெரிகிறது.

என்னுடைய சொந்த பார்வையின் பொருத்தே நான் உங்களுக்கு அப்படி ஒரு கேள்வியை முன் வைத்திருந்தேன். அதற்கென தனிப் பதிவிட்டமைக்கும் நன்றி. இன்னமும் என் வீட்டில் குறைந்த பட்சம் மீன் தொட்டியாவது வைக்கலாம்மென்றால், நம்ம பாலாப் போன concept (தத்துவம்) மனசு இடம் கொடுக்க மட்டேங்கிது... அந்த மீன்களை என்னுடைய சொந்த சுய நலத்திக்காக, பயித்தியமாக்கி குறுக்கும் நெடுக்குமாக தலை தெறிக்க சுத்தவைப்பதைப் போன்ற பிரமையை எனக்குத் தருவதால் அதனையும் தவிர்த்து வருகிறேன்...

மற்றபடி, நண்பர் *கல்வெட்டு* கூறுவதுடன் ஒத்துப் போகிறேன்.

நன்றி மீண்டும்.

தெகா.

பி.கு: உங்களின் நீமோவிற்கு ஒரு துணை இருந்தால் இன்னமும் வாழ்வை தனிப்பட்ட முறையில் ரசிப்பாள்/ர் என்று நினைக்கிறேன். நீங்கள் குடும்பமாக தூங்கும் பொழுது அவருக்கும் ஒரு துணை இருந்தால் தோளில் சாய்ந்து தூங்கும் பொழுது இரவு மிரட்டாது. இது ஒரு நீமோவின் வேண்டுகோல் ;-)

said...

விபாசனா பத்தி எப்ப வேணுன்னாலும் மெயில் போடுங்க ..என்க்கௌத் தெரிந்ததை உங்களுக்கு சொல்லுக்கிறேன் ..கனடால மெரிட் பக்கம் ஒரு செண்டர் இருக்கு ..நம்ம நண்பர் ஒருத்தர் அங்க அடிக்கடி விபாசனா பண்ணுகிறார்..

said...

உங்க ரெண்டாவது மகன் 'அன்புருண்டை' பற்றிய பதிவு நட்சத்திரப் பதிவாய் அமைந்துள்ளது.

:)

ரெம்ப நல்லா வீடியோ எடுத்து போட்டு கலக்கியிருக்கீங்க. வாழ்த்துக்கள்.

சரி நீமோவுக்கு ஒரு கல்யாணம் பண்னிவச்சீங்கன்னா நல்லா இருக்கும்ல?

said...

சிவா!
என் இளமைக்காலத்தில் ஈழத்தில் இருந்தபோது;மிருகங்கள்;பறவைகள் வளர்த்துள்ளேன். ஓர் பச்சைக்கிளி உட்பட;;;; அறிவு தெரிந்தபின் பறக்கும் பறவைகளைச் சிறையில் அடைப்பதில்லை எனும் முடிவுக்கு வந்தேன். கோழிப் பண்ணையே வைத்தேன்.
இங்கு குழந்தைகள் கூட இல்லாத நிலையிலும் ; அன்புக்கென மிருகமோ பறவையோ வளர்க்கவில்லை. நோக்கமும் இதுவரை இல்லை. அது என் பயணச் சுதந்திரத்தை தடை செய்து விடும். (நாளை லண்டன் பயணம் 2 வாரம்)
அதனால் வீட்டுக்குள்ளும் ,பல்கனியிலும் பலவண்ணப் பூ மரங்களே!!!
அவையும் பேசும்; தாகமா இருந்தால் இலையை சோரப் போட்டுப் பேசும்.
Fragrance is the language of flower
உங்கள் அன்புருண்டை ,உங்கள் சுதந்திரம் .என்னதான் சொன்னாலும் பறவைகள் அதன் வாழ் நிலை வித்தியாசமானது.
இயற்க்கையில் பார்த்து ரசிக்க வேண்டியது. இது என் கருத்து.
இதே கருத்தை "வாழும் புன்னகை வித்யா" வுக்கும் கூறியுள்ளேன்.
யோகன் பாரிஸ்

said...

கல்வெட்டு, யோகன் மற்றும் தெகா அவர்களே, தவறுகள் நடந்துவிட்டன. உலகில் உள்ள எல்லா மக்களையும் திருத்த முடியுமா? எங்களால் முடிந்த அளவிற்கு ஒரு பறவைக்கு வாழ்வளிக்கிறோம். நிச்சயமாக அதற்கு ஒரு ஜோடியை சேர்த்துவைப்போம்.

தங்களின் எண்ணங்களுக்கு நன்றி. மேலும் என் இவைகளைப் பற்றி என் படிப்புகள் தொடரும்

said...

திருமதி மற்றும் திரு ஓகை அவர்களே,

தங்கள் வருகைக்கு நன்றி. இந்தியாவில் இந்த வகை பறவைகள் நான் பார்த்ததில்லை. இந்த பறவையின் பூர்வீகம் ஆஸ்திரேலியா.

நம்மூர் பச்சைகிளிகளை இந்தியன் ரிங் நெக் அப்படி என்று அழைப்பார்கள். நம்முர் பச்சை கிளிகளுக்கு இன்னும் கவனம் வேண்டும்

பெரும்பாலும் நறிகுறவர்கள் இயற்கையாக பறக்கும் பறப்பவைகளை பிடித்து விற்பார்கள். முன்பொரு காலத்தில் மூர்மார்கெட்டில் விற்பார்கள். இந்த பறவைகள் பழகவே பழகாது

தயவுசெய்து நல்ல Breederகள் இருந்தால் மட்டும் அவர்களிடம் தத்து எடுங்கள்

said...

சிவா சார்

ஆகா, இதை எப்படியோ மிஸ் பண்ணிவிட்டேனே. இன்று தான் படித்தேன். இன்னும் 2-3 முறை படிக்கப் போகிறேன். நீமோ ரொம்பவே க்யூட்! பொதுவா ஆண்கள் நாயையும், பெண்கள் பூனையையும் விரும்புவாங்க! ஆனா கிளி என்பது இரு பாலரும் கொஞ்சுவது!

கிளி இல்லாத தமிழா? கிளி இல்லாத காதலா? கிளி இல்லாத ஆண்டாளா? இப்படி கிளி நம்மளோட ஒண்ணுக்குள்ள ஒண்ணு! அரங்கநாதர் இருக்கும் இடத்தையே ஒரு கிளி தான் முதலில் காட்டித் தந்தது! இன்றும் ஸ்ரீரங்கத்தில் கிளி மண்டபம் ரொம்பவும் ஃபேமஸ்! கூடிய விரைவில் வில்லிபுத்தூர் கிளிப்பதிவு ஒண்ணு போடணும்!

ஆமாம் நீமோவுக்கு அதன் மூக்கு மேலும் ஒரு சின்ன கண் போல உள்ளதே? என்ன?? உயில் எல்லாம் எழுதுங்க வேணான்னு சொல்லலை; ஆனா நீமோவுக்கு ஆபரணங்கள் எங்கே??

நீங்க கோவிச்சிக்கிலன்னா ஒண்ணு சொல்றேன்! இவ்வார தமிழ்மண நட்சத்திரம் நீங்கன்னு நினைச்சீங்களா? நோ! It's only Nemo!!
(இந்தப் பதிவ மட்டும் போடாம இருந்திருந்தா நீங்களே நட்சத்திரமா கன்டினியூ பண்ணியிருப்பீங்க...ஹூம்...எல்லாம் கலி காலம்...கிளி காலம் :-)))

said...

KRS, கிளி மூக்கின் மேல் உள்ளது அதன் நாசி