Thursday, October 12, 2006

இந்து மதத்தின் இறை தூதுவர்

இந்த தலைப்பில் சுவன்ப்ரியன் ஒரு பதிவிட்டிருந்தார். அதை பற்றி விவாதங்கள் நடந்தன. நானும் பங்கு கொள்ளலாம் என இருந்தேன். சந்தில் சிந்து பாடும் நான் கும்பலில் கோவிந்தா போடுவதில்லை.

முதலில் இந்து மதத்திற்கு தூதுவர்.. ..........இந்த கான்செப்டே தப்பு.
அவர் முகமதிய மதத்தை ஒரு பெஞ்ச் மார்க்காக வைத்து கேள்விகள் கேட்கிறார். அதுவே தவறு. .

சரி விஷயத்திற்கு வருவோம்.

இணைய இஸ்லாமிஸ்ட்களின் இந்துமத மற்றும் வேத அறிவு என்னை பலமுறை வியப்பில் ஆழ்த்திள்ளது.

எப்படி இது சாத்தியம் என நான் ஒருவரிடம் கேட்க போக அவரும் கூகுளில் தேடவும் அதில் இந்து மத குப்பைகள் நிறைய உள்ளன என்றார்.

நானும் கூகுளில் தேட போக இந்துமத குப்பைகளை மட்டும் அவர்கள் கண்ணுக்குத் தெரிய அதன் பக்கத்தில் உள்ள முகமதிய மதத்தின் குப்பைகள் என் கண்ணுக்கு தெரிந்தது. சரி நானும் குப்பைகளை அள்ளி வீசலாம்.

ஐயோகோ நான் செய்வது வேறு தொழில் அல்லவா.

ஆகையால் இந்த குப்பைகளை கிளறும் தலைவர் யார் என்று பார்த்தேன். இவர் எனக்கு அறிமுகமானவர்தான். இவர் பெயர் Dr. ஜாகிர் நாயக். இவர் எம்.பி.பி.எஸ் படித்தவர். பம்பாயில் உள்ளவர். (சிலபேர் எம்.பி.பி.எஸ் படித்து விட்டு வேறு வேலைப் பார்த்து கவர்மெண்ட் பணத்தை வீணடிப்பர். இவரைப் போல் இன்னொருவர் தமிழ் நாட்டில் டாக்டர் மாத்ருபூதமுடன் சேர்ந்து புதிரா புனிதமா என்ற நிகழ்சிகளை நடத்திய Dr.சர்மிளா.)

Dr. ஜாகிர் நாயக் குர்ரானை வலமிருந்து இடமாகவும் இடமிருந்து வலமாகவும் படித்தவர்.

அந்த வசனங்களை மனதில் நிறுத்தியவர். எப்போது வேண்டுமென்றாலும் சக்.... சக் என்று நின்ஜா வீரர் நட்சத்திரங்கள் வீசுவது போல் குரான் வசனங்களை வீசுவார். அவர் தான் நம் இணைய இஸ்லாமிஸ்ட்டுகளின் friend, philospher and guide அவர் இடுப்பில் இருந்து தான் இவர்கள் சுடுவார்கள்.

இணைய இஸ்லாமிஸ்ட்கள் கையில் இந்தமதத்தின் நான்கு வேதப் புத்தகங்கள் இருக்கும் என நம்பிய நான் ஒரு முட்டாள். இவர்கள் இருப்பது சவூதி அல்லவா

இந்தமாதிரி இந்து வேதங்களை இஸ்லாமிஸ்ட்கள் அங்கே படித்தால் அவர்களின் தாடி எவ்வளவு நீளமாக் இருந்தாலும் அவர்களுக்கு உடனே டிபோர்டேஷன் தான்.

Dr. ஜாகிர் நாயக்கும் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் அவர்களும் சேர்ந்து "Concept of God in Hinduism and in Islam" என்ற ஒரு நிகழ்சியை நடத்தினார்கள். அதை ஏற்பாடு செய்தது ஒரு இஸ்லாமிய அமைப்பு. பங்கு கொண்ட மக்களில் பெரும்பாலோர் முகமதிய்ர்கள். இந்த நிகழ்சியின் ஒலிப்பதிவு எனக்கு கிடைத்தது. இருவர் பேசியதும் எனக்கு தூக்கத்தை வரவழைத்தது. அதிலும் டாக்டரின் டார்ச்சர் தாங்க முடியவில்லை. இந்து மதத்தின் இந்த புத்தகத்தில் இந்த பக்கத்தில் இந்த வரிகளை பார் என கேப்டன் ரேஞ்சுக்கு புள்ளி விவரங்களை பட்டியலிட்டார். எல்லா இந்துமத புத்தகத்திலும் முகமதுவைப் பற்றி கூறியிருக்கிறார்கள் அதனால் நாங்க தான் டாப்பு என சொல்லவும் கரகோஷம் வானைப் பிளந்தது. அந்த சத்ததில் "உங்க முகமதுவை பற்றி சொன்ன எங்க வேதங்களையும் மதியுங்கள்" என்ற ஸ்ரீஸ்ரீயின் வார்த்தைகள் யாருக்கும் கேட்கவில்லை.


இந்த நிகழ்ச்சியின் கேள்விபதில் பகுதிதான் சிறப்பானது.

அதில் ஒரு பெண்மணி கேட்ட கேள்வியை கீழே உள்ள வீடியோவில் கேட்கலாம்( ஆடியோ கிளிப்பை எப்படி அப்லோட் செய்வது என தெரியாமல் அதை வீடியோவாக மாற்றி ஏற்றியுள்ளேன்)


Dr. ஜாகிர் நாயக்கிடம் ஒரு இஸ்லாமிய பெண்மணியால் கேட்கப்பட்ட கேள்வி "நான் ஸ்ரீஸ்ரீ அவர்களின் சுவாசப் பயிற்ச்சியை பயின்று இறைவனுடன் இரண்டர கலக்கும் உணர்வை பெற்றிருக்கிறேன். அதற்கு நன்றி. இறைவன் எங்கும் நிறைந்தவன் (omni-present) என்கிறார்களே அதைப் பற்றி குரான் என்ன சொல்கிறது?"

அதற்கு Dr. ஜாகிர் நாயக் " குரானிலோ ஹதீஸ்லோ எங்குமே இறைவன் எங்கும் நிறைந்தவன் என்று சொல்லவில்லை. ஒரு முறை முகமது ஒரு வயதான் பெண்மணியிடம் கடவுள் எங்கே உள்ளார் என கேட்க அவர் வானததைக் காட்டினார். நீ பாஸ் என முகமது மார்க் போட்டுவிட்டார். கடவுள் எங்கும் நிறைந்தவன் என்று எந்த இடத்திலும் குரானில் பேசவில்லை. இதைப் பற்றி மேலும் விவாதம் செய்ய தேவையில்லை" என முடித்துவிட்டார்"

வானத்தில் அமர்ந்துக் கொண்டு அவ்வப்போது தூதுவர்களை அனுப்பி வேதங்களை பப்ளிஷ் செய்யும் இறைவன் 1400 ஆண்டுகளுக்கு முன்பு கடைசி ஆளை அனுப்பி கடைசி புத்தகத்தை வெளியிட்டுவிட்டு கடையை மூடிவிட்டார் என்பது காஃபிரல்லாதவரின் நம்பிக்கை. அந்த நம்பிக்கைக்கு இந்துமதத்தின் சிபாரிசும் தேவைபடுகிறது

"உனை எனதுள் அறியும் அன்பை தருவாயே" என உருகிய அருணகிரிநாதரின் வார்த்தைகளில் என்னை போன்ற காஃபிர்களின் நம்பிக்கை

இறந்தபிறகு கடவுளுடன் ஜாலியாக பார்ட்டி செய்யவேண்டுமென்பது காஃபிரல்லாதவரின் நம்பிக்கை

அந்த கடவுளாக மாறி அவருடன் கலப்பது என்பது என்னை போன்ற காஃபிர்களின் நம்பிக்கை

ஒரு புத்தகத்தில் காலை முதல் இரவு வரை ஆண் என்ன செய்யவேண்டும் பெண் என்னசெய்யவேண்டும் என உத்திரவிடுவது காஃபிரல்லாதவரின் கடவுள்

நீ நானாக் இரு. நானும் நீயும் வேறல்ல என்று அன்பை பிழிவது காஃபிர்களின் கடவுள்

உன்னிலும் என்னிலும்
தூணிலும் துரும்பிலும்
நேற்றும் இன்றும் என்றும்
இருப்பவன் இறைவன்.
அடியும் முடியும்
இல்லாத இறைவன்
முற்றுப் புள்ளிகளை
என்றும் வைப்பதில்லை
மனிதனே கடவுள்
மனிதமே மதம்

யோவ்... அது சரி இந்து மதத்தின் தூதுவர் யாரு அத்த சொல்லுவியா ...?


இந்து மதத்தின் இறைத்தூதுவர்.............


Photobucket - Video and Image Hosting


நீங்கள் தான்..........


Photobucket - Video and Image Hosting

நானும் தான்

57 comments:

said...

//
இந்து மதத்தின் இந்த புத்தகத்தில் இந்த பக்கத்தில் இந்த வரிகளை பார் என கேப்டன் ரேஞ்சுக்கு புள்ளி விவரங்களை பட்டியலிட்டார். எல்லா இந்துமத புத்தகத்திலும் முகமதுவைப் பற்றி கூறியிருக்கிறார்கள் அதனால் நாங்க தான் டாப்பு என சொல்லவும் கரகோஷம் வானைப் பிளந்தது.
//

இது பெரும் கதையாடல்...

இந்து மதப் புத்தகத்தில் முகம்மது பற்றி சொல்லியிருக்கிறார்கள் என்று இவர் கண்டுபிடித்தால்...

இந்து மதப் புத்தகத்தில் ஹிட்லர் பற்றி கூட என்னால் "துல்லியமாக கணித்து" சொல்ல முடியும்...

ஆட்டு மந்தைகள் எதை சொன்னாலும் நம்புவார்கள் உண்மையைத் தவிர.

//
"உங்க முகமதுவை பற்றி சொன்ன எங்க வேதங்களையும் மதியுங்கள்" என்ற ஸ்ரீஸ்ரீயின் வார்த்தைகள் யாருக்கும் கேட்கவில்லை.
//

அந்த லாஜிக்கிலே பார்த்து சொன்னது, அதை அவர்கள் கேட்க விரும்பவில்லை. வான்கோழிகள் போல் தலையை புதைத்துக் கொள்வார்கள்.

//
இணைய இஸ்லாமிஸ்ட்கள் கையில் இந்தமதத்தின் நான்கு வேதப் புத்தகங்கள் இருக்கும் என நம்பிய நான் ஒரு முட்டாள். இவர்கள் இருப்பது சவூதி அல்லவா

இந்தமாதிரி இந்து வேதங்களை இஸ்லாமிஸ்ட்கள் அங்கே படித்தால் அவர்களின் தாடி எவ்வளவு நீளமாக் இருந்தாலும் அவர்களுக்கு உடனே டிபோர்டேஷன் தான்.
//

இது காலத்தில் கொடுமை என்றே சொல்ல வேண்டும்.

ஒரு காலத்தில்

பகவத் கீதை போன்ற புத்தகத்தை அரபியில் மொழி பெயர்த்து இஸ்லாமிய அரசர்கள் நூலகங்களில் வைத்திருக்கின்றனர்...

நம் இணைய இஸ்லாமிஸ்டுகளுக்கோ, நூலகம் எல்லாம் கிடையாது...அதை கொழுத்தியவர்களையல்லவா இவர்கள் ஹீரோ வாக்குபவர்கள்..!! இந்த கேவலத்துக்கு இடது சாரி ஜிஞ்சா வேறு.

said...

பிரமாதம்.

அஹம் ப்ரம்மாஸ்மி, தத் தவ்ம் அஸி போன்ற இந்துகொள்கைகளை சவுகரியமாக மறந்துவிட்டு ஜாகீர் நாய்க் போன்றவர்கள் நூல்விட்டுகொண்டு இருப்பது கேட்பவன் லூசாக இருந்தால்.....

said...

"இந்து மத இறைத்தூதர் நீயும்தான், நானும்தான்"

ஏதோ அன்பே சிவம் படம் பாக்கிற மாதிரி இருந்தது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

அன்பின் சிவா,
//மனிதனே கடவுள்
மனிதமே மதம்//

பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட சொற்கள். பாராட்டுகள்.
வாழ்க! வளர்க!!

said...

மிக அருமையாக சொல்லியிருக்கிறீர்கள். உங்கள் இறை தூதர் யார், உங்கள் ரூல் புக் எது என்றெல்லாம் கேட்பவர்களை பார்த்து மனதிற்குள் சிரித்துக் கொள்வதுண்டு.

said...

Copy pasting one of my comment given in the following address:
http://virudu.blogspot.com/2006/08/allah-happy-when-kaafir-get-killed.html

My comment is as follows:

At 3:15 PM, Muse (# 5279076) said...
அஸலம் ஒன்,

டாக்டர். ஸாகிர் நாயக் நடத்துவது விவாதம் இல்லை. கேள்வி-பதில். நான் அவரது நிகழ்ச்சிகளின் ரஸிகன்.

ஒருவர் கேள்வி கேட்பார். அதற்கு ஸாகீர் எதேனும் ஒரு பதிலை சொல்லுவார். அவ்வளவுதான் முடிந்தது. இதற்கு கேள்வி-பதில் நிகழ்ச்சி என்று பெயர்.

விவாதம் என்றால் சொல்லப்படும் பதில் தவறாக இருக்குமானால் கேள்வி கேட்டவர் மீண்டும் கேள்வி கேட்க அனுமதியுண்டு.

இந்த வாய்ப்பு ஜனநாயகத் தன்மையுள்ள நிகழ்சிக்களில் மட்டுமே காணமுடியும். நீங்கள் சொல்லும் நிகழ்சிகளில் அல்ல.

உதாரணத்திற்கு ஒன்று சொல்லுகிறேன், ஸகீர் அவர்களிடம் ஒருவர் "உருவமில்லாத ஒன்றை மனத்தால் க்ரஹிக்கவே முடியாதே. அப்புறம் எப்படி உருவமில்லாத கடவுளை வணங்கமுடியும்?" என்று கேட்டார். அதற்கு டாக்டரின் பதில் என்ன தெரியுமா?

"இஸ்லாத்தில் சேர்ந்துவிட்டவர்களுக்கு அந்த ஷக்தி கிடைத்துவிடும்". இது எப்படி இருக்கு?

அங்கே கூடியிருந்தோர் பெரும்பாலும் இஸ்லாமியர் என்பதால் இந்த முட்டாள்தனமான பதிலை நன்றாக ரஸித்தனர். கையெல்லாம் தட்டினர்.

உடனடியாக மற்றொருவர் கேள்வி கேட்க எழுந்துவிட்டார். "நான் இன்றுதான் இஸ்லாத்திற்கு மதம் மாறினேன். இஸ்லாம் மிகவும் பெரிய மதம். ஆனால் எனக்கு ஒரு அரபி வார்த்தை புரியவில்லை. அந்த வார்க்தையின் பொருள் என்ன?". ஸாகீர் அந்த கேள்விக்கு அழகாகப் பதிலளித்தார்.

முதல் கேள்விக்கான பதிலை வேறு யாரும் கேள்வி கேட்க அனுமதிக்கப்படவில்லை.

மற்றபடி ஸாகிர் ஒரு மிகப்பெரிய ஸ்காலர். அவருடைய ஞாபக ஷக்தி வியக்க வைப்பது. எல்லா புத்தகங்களிலிருந்தும் ஒரு சில பகுதிகளையும், அந்த பகுதிகள் இருக்கும் அத்தியாயம், பக்கங்களையும் நன்றாக மனப்பாடம் செய்துள்ளார்.

எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நான் அவரிடம் பின்வரும் கேள்வியைத்தான் கேட்பேன்:

"இத்தனை விஷயங்களையும் மனப்பாடம் செய்ய நீங்கள் என்ன என்ன வழிமுறைகளை பின்பற்றுகிறீர்கள்?"


Post a Comment

said...

அஹம் ப்ரம்மாஸ்மி தத்துவம் தான்..
மிகப் பிராமாதம் சிவா அய்யா,

இனிமே என்ன, தினம் தலை வாரிக் கொள்ளும் போது தெய்வ தரிசனம் தான்.

பாலா

said...

ஞானவெட்டியான் ஐயா,

நன்றி ஐயா. என் சிற்றறிவிற்கு எட்டியது. என் மனதில் நின்ற இன்னொன்று

பொய்மையிலிருந்து உண்மைக்கு
இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு
சாவிலிருந்து மோட்சத்திற்கு

உங்கள் ஆசிர்வாததிற்கு தலைவணங்குகிறேன்

said...

வஜ்ரா,

எந்த ஒரு இந்து வேதத்தையும் ஒர் நாவல் போல் படித்தால் அதில் ஆப்ரஹாம், யேசு, முகமது ,ஹிட்லர் பெரியார் மற்றும் கால்கரி சிவா ;) வரை எல்லாரைப் பற்றியும் சொல்லியிருப்பதை காணலாம்.

நம்ம டுபாக்கூர் நாடி ஜோஸ்யம் பார்ட்டிகளிடமும் நம்மை பற்றிய துல்லியமான விவரங்கள் இருக்கும்

இதை "கண்டுபிடித்து" ஜிகிடி செய்து மற்ற மதத்தவரை இணங்கவைத்து மதநல்லிணக்கம் காண இது ஒரு மோடி மஸ்தான் வேலை

said...

டோண்டு சார், அன்பே சிவம் என்பதே அத்வைததித்தின் மையம்

said...

சமுத்ரா, உங்களை போன்ற இளைய சமுதாயத்தின் எழுச்சி அறிதல் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது

said...

சுதர்சன், உங்களின் முதல் வருகை என நினைக்கிறேன். வணக்கம்

said...

அருமை அண்ணா. கடைசியில அடிச்சாலும் அடிச்சீங்க. அருமையான அடியா அடிச்சீங்க. அடி பட்டது நான். மற்றவர்கள் அடிபட்டார்களா இல்லையா என்ற கவலை எனக்கில்லை. ஆகா. இஸ்லாமியர்களைத் திட்டி எழுதியிருக்கிறாரோ என்று எண்ணிக் கொண்டே படித்துக் கொண்டு வந்தேன். ஆனால் கடைசியில் அருமையாக மிக மிக அருமையாக முடித்தீர்கள். என் எண்ணத்தில் மண் விழுந்தது. ஓங்கி ஒரு குத்து விழுந்தது. மிக்க நன்றி.

said...

அருமையான பதிவு...

said...

அன்பின் சிவா,
கடைசி பந்தில் 6 அடிச்ச மாதிரி இருந்தது..
/அஹம் ப்ரம்மாஸ்மி தத்துவம் தான்/
மிக மிக சரி..நாம் எல்லாருமே பிரம்மா தான்..ஒவ்வொருவருக்கென்று ஒரு உலகம்..உதாரணத்திற்கு நம் தமிழ் வலைப்பதிவை எடுத்துக் கொள்வோமே..எத்தனை படைப்புகள்..எல்லாருமே பிரம்மாதான்..இதை நன்றாக உணர்ந்து கொண்டால் மதம் ,சாதி எல்லாமே காணாமல் போகும்..அப்படி உணர்ந்தவர்களால் கிடைக்கப் பெற்றதுதான் தேவாரம்,திருவாசகம்,திருப்புகழ்,திருப்பாவை,வேதங்கள்..மற்ற மதத்திற்கும் இது பொருந்தும் என நினைக்கிறேன்..

/எந்த ஒரு இந்து வேதத்தையும் ஒர் நாவல் போல் படித்தால் /
வேதங்களை நாவல் போல் படிக்க முடியாது சிவா..வேதங்களின் மகிமையே அதன் ஒலி அதிர்வுகள் தான்.அவைகளை நாம் சரியான விதத்தில் உச்சரிக்க வேண்டுமானால் ஒரு குருவிடமிரிந்து முறையாக கற்க வேண்டும்.

மிக நல்ல பதிவு..

அன்புடன்
மாயக்கூத்தன் கிருஷ்ணன்.

said...

நீங்களும் நாமும் தான் இறைத்தூதர் என்பது உண்மை.

கடவுள் வானத்தில் இருக்கிறார் என்பது காமடி.நம்மூருக் காமடியே அடுத்தவன மட்டம் தட்டுவதுதானே..

ஸ்ரீ ஸ்ரீ யையே கடவுளாக்கும் போக்கை நான் சில ஸ்ரீ ரசிகர்களிடம் கண்டுள்ளேன் ..அப்ப நம்ம இஸ்லாமிஸ்டுகளைக் கேக்கவா வேணும்

said...

religion of fraud is used as a benchmark by fraud's followers. ithappoi serioousa edthukalama?

said...

.//கடவுள் வானத்தில் இருக்கிறார் என்பது காமடி//

I was reminded of a famous Omar Kayyam poem that brings out the point as mentioned above by Koothadi.

"The inverted bowl we call the sky,
Underwhich we crawl and die,
Do not lift your hand to it for help,
For it moves as impotently as you and I."
Bala

said...

மனிதனுக்கு தேவை நிம்மதி. அதை கடவுளிடமிருந்து பெறுபவனே இந்து என்றார் கவியரசர் கண்ணதாசன்.

தன்னை உணர்ந்தவன், கடவுளை உணர்ந்தவன்.அதை உணரும் வரை தான் நான் வேறு,.நீ வேறு என நினைப்போம், அதை உணர்ந்தால் ஆண்டவன் நம்க்குள்ளே தான் இருக்கிறார்ன் என்பதை உணர்வோம்.அதன்பின் ஆண்டவனே நாம்தான்.

said...

இந்து மதத்தில் குரு என்ற கருத்து உண்டே தவிர இறைதூதர் என்ற கருத்து இல்லை. குரு சொல்வது ஒரு ஆசிரியர் சொல்வது போன்றது. ஐன்ஸ்டீனுக்குச் கணிதம் சொல்லித்தந்த குருவை விட ஐன்ஸ்டீன் என்ற சீடன் அதிகம் அறிந்தார். அவர் குருவாக இருந்து இன்னும் பல ஐன்ஸ்டீன்களை உருவாக்குவார். அது போல இந்து மதத்தில் குருக்கள் முந்தைய குருக்களை விட அதிக ஞானமும் கல்வியும் கொண்டவர்கள். இவர்களுக்கு அடித்தளமாக வேதங்கள் இருக்கின்றவே தவிர வேதங்களே கட்டிடங்கள் அல்ல.

இறைதூதர் என்ற கருத்தே தவறு என்பது என் கருத்து. அதுவும் இறுதி இறைதூதர் என்ற கருத்து மிக மிகத்தவறு என்பது என் கருத்து.

எல்லோரையும் சமமாக பாவிக்கும் இறைவன் ஒருவரை மட்டும் உயர்த்தி மற்றவர்களை தாழ்த்துவது எல்லோரையும் சமமாக பாவிக்கும் இறைவனுக்கு சரியாகாது.

தன்னை மனிதன் கும்பிடவில்லை என்று வருந்தும் இறைவன், தன்னை மனிதன் கும்பிடவில்லை என்று கோபம் கொள்ளும் இறைவன், இறைவன் என்ற கருத்துருவத்துக்கு ஒவ்வாதது என் கருத்து.

அதே வேளையில் முற்பிறவியின் பயனாக, நற்கருமத்தின் காரணமாய் இறைவனை தொழும் இப்பிறவி பாக்கியம் பெற்று பலர் அவ்வாறு பாக்கியம் பெற்றிராத பலரை இறைவனை நோக்கி திருப்புகிறார்கள்.

அப்படிப்பட்ட ஒரு குருவாகவே என் கண்ணுக்கு ஜனாப் முகம்மது நபிகள் தெரிகிறார். வாழ்க்கையில் குருவுக்கு வந்தனம் செய்யவேண்டும். ஆனால், குருவையும் தாண்டி சிந்திக்கத்தான் குரு சொல்லித்தர வேண்டும். குரு சொன்னதில் வரிக்கு வரி அப்படியே எடுத்துக்கொண்டு மேலே சிந்திக்க, பரிணாமம் அடைய மறுப்பவன், குருவுக்கு துரோகம் இழைக்கிறான். குரு சூரியனை காட்டுகிறார். சீடன் விரலை மட்டுமே பார்க்கிறான்.

நன்றி

said...

கால்கரியார்,

இந்து மதத்தின் இறைத்தூதுவர் உம் போன்ற எம்போன்றவர்கள் என்றால் காஞ்சி கைலாசநாதன் கோவிலிலும் மயிலை கபாலீஸ்வரன் கோவிலிலும் ரிக்ஷாக்கார மாயாண்டியையோ அல்லது தெருக்கூட்டும் முனியம்மாவையோ பூசை செய்ய அனுமதிப்பீர்களா?

பிரேமானந்தா, சதுர்வேதி, காஞ்சி சுப்பிரமணியன் etc... இவங்களும் இந்துமதத்தின் தூதுவர்களா? பேஷ் பேஷ் பிரம்மாதாமய்யா உம் உளறல்.

(உம் போன்ற மரமண்டைகள் இருக்கும்வரை இந்து மதத்தை மொகலாயர்களோ அல்லது அல்காயிதாவோ ஒழிக்க வேண்டியதில்லை. தானாகவே மண்ணைப் போட்டு மூடிக்கொள்ளும் என்பது எம் போன்ற வந்தேறி அல்லாத திராவிடர்களின் கூற்று)

said...

அறிவுடைநம்பி, நல்ல கேள்விகள் திராவிட அறிவு கொழுந்துவிட்டு எரிகிறது
இந்த கேள்விகளை தாண்டி வாருங்கள். யார் வேண்டுமானாலும் நம்பிக்கை வைத்து முறைபடி பயின்றால் அர்ச்சகர் ஆகலாம். வருகிறார்களா உங்களை அர்ச்சகர் ஆக்குகிறேன்.

ஐயா, கடவுள் இல்லை என்னும் உங்களை போன்ற திரா'விட'ங்கள் அதில் நம்பிக்கை வையுங்கள் முதலில். அதற்கப்புறம் யார் என்ன செய்யவேண்டும் என பேசலாம்.

said...

//பிரேமானந்தா, சதுர்வேதி, காஞ்சி சுப்பிரமணியன் etc... இவங்களும் இந்துமதத்தின் தூதுவர்களா? பேஷ் பேஷ் பிரம்மாதாமய்யா உம் உளறல்//

இவர்கள் மட்டுமில்லை ஐயா, உங்கள் வெண்தாடி வேஸ்ட், மூக்குபொடி அறிஞர், கறுப்பு கண்ணாடி கலைஞர், வெண்தொப்பி நடிகர், நிரந்தர செல்வி நடிகை அவர்களுடம் உம்மையும் சேர்த்துதான் சொன்னேன்

ஆனால் என்ன செய்வது நீர்தான் திராவிட குஞ்சு ஆயிற்றே உமக்கு புரியாதெல்லாம் உளறலாகதான் இருக்கும்

said...

ம்யூஸ், டாக்டரின் ஞாபக சக்தி மிக அதிகம். ஜனநாயகமுறையா, இவர்களிடமா எல்லாம் ஒருவழி பாதை தான் சார்

said...

//இனிமே என்ன, தினம் தலை வாரிக் கொள்ளும் போது தெய்வ தரிசனம் தான்//

பாலா , தெய்வமே எங்கேயோ...போயீட்டிங்க்

said...

மாயா, மிக்க நன்றி

said...

எழில்,

உங்களின் கேள்விகளை கவனித்து படித்து வருகிறேன். நல்ல கேள்விகள் ஆனால் பதில்கள் புத்தகத்திலிருந்து வரும்.

என் பழைய பதிவிகளில் நீங்கள் தேவதூதரா ? என தொடரை படியுங்கள்

வருகைக்கு நன்றி

said...

ஆகா, சிவா சார்...கலக்கிட்டீங்க!
நானும் ஏதோ பிற மதத் துவேஷம் தலை தூக்கப்போதோன்னு பயந்து பயந்து படிச்சிக்கிட்டே வந்தா...கடைசியிலே இரண்டே படத்தைப் போட்டு, அத்தனை பேரையும் க்ளீன் போல்டு ஆக்கிட்டீங்க!

எங்களைக் காட்டி சுட்டும் விரலும், உங்களைக் காட்ட பணிவே வணக்கமான கைகளும் மிக நன்று!

நாம் அனைவரும் அடியவரே! தூதரே!!
"விநாசாயச துஷ்க்ருதாம்" ன்னு நல்லவங்களைக் காத்து தீயவங்களை அழிக்க மட்டும் இறைவன் வருவதில்லை! அதுக்கு straight-ஆ ஒரு நொடியிலே வந்துடலாம்! கஷ்டப்பட்டு குழந்தையாப் பிறந்து, காட்டுல அலைஞ்சி இதெல்லாம் எதுக்காக?

மனிதன் தான் எல்லாம்; மனிதன் மாதிரி நடந்துக்கிட்டா, மனிதனே என் தூதுவன் அப்பிடின்னு மனிதனாகவே வந்துச் சொல்லிப் போகத் தானோ!!
அருமையாச் சொல்லியிருக்கீங்க!!

said...

//(உம் போன்ற மரமண்டைகள் இருக்கும்வரை இந்து மதத்தை மொகலாயர்களோ அல்லது அல்காயிதாவோ ஒழிக்க வேண்டியதில்லை. தானாகவே மண்ணைப் போட்டு மூடிக்கொள்ளும் என்பது எம் போன்ற வந்தேறி அல்லாத திராவிடர்களின் கூற்று//

பகுத்தறிவு பாசறையிலிருந்து வந்ததாக சொல்லிக்கொள்ளும் இந்த அரை வேக்காடுகளுக்கு இந்த "concept" புரியாதது வியப்பில்லை.

இந்த மூஞ்சிகளுக்கு பார்க்கும் இடத்தில் எல்லாம் தாடிக்காரர் தான் தெரியும்,பாரதிக்கு பார்க்குமிடத்தில் எல்லாம் பராசக்தி தெரிந்ததுபோல்.

பாலா

said...

வாழ்க்கையில் குருவுக்கு வந்தனம் செய்யவேண்டும். ஆனால், குருவையும் தாண்டி சிந்திக்கத்தான் குரு சொல்லித்தர வேண்டும். குரு சொன்னதில் வரிக்கு வரி அப்படியே எடுத்துக்கொண்டு மேலே சிந்திக்க, பரிணாமம் அடைய மறுப்பவன், குருவுக்கு துரோகம் இழைக்கிறான்//
well said, ezhil

said...

உண்மைதான் வரதன்.

அதனால்தான் கடவுள் ஹிந்துக்கள் வாழும் பரத கண்டத்திற்கு பயத்தின் காரணமாய் தன்னுடைய தூதர்களை அனுப்பாமல், தானே அவதரிக்கிறார். இங்கே மனிதர்களுக்கு மட்டுமல்ல, மிருகங்களுக்கும், பறவைகளுக்கும் ஸுதந்திரமும், ஸந்தோஷமும் உண்டு என்பதால் எல்லா உருவங்களிலும் அவரை நாம் வணங்குகிறோம்.

சிவா, அரேபியாவில் வராகவதாரம் நடந்திருந்தால் என்னவாயிருக்கும்?

said...

//well said, ezhil//
Thanks Dharumi

said...

சிவா,

ஜாகிர் நாயக் பற்றிய தங்கள் மதிப்பீடு மிகச் சரி.

ஜயராமன் பதிவில் இது பற்றி சொன்னதை இங்கும் பின்னூட்டமிடுகிறேன்.
------
ஜயராமன், செய்திக்கு நன்றி.

அசாலமோன் சொல்லுகிறார்:
// EMINENT scholar of comparative religion Dr Zakir Naik has invited Pope Benedict XVI for an open inter-faith dialogue.//

ஆகாகா என்னென்ன அடைமொழிகள் ஜாகீர் நாயக்குக்கு! க்யூ-டிவி என்ற பெயரில் இஸ்லாமிய பெட்ரோ டாலர்களால் இயங்கும் ஒரு டிவி சேனலில் சதா சர்வ காலமும் இத்துப்போன இஸ்லாமிஸ்ட் ஜல்லிகளை இறக்குமதி செய்பவர் Eminent Scholar ஆம்! ஒரூமுறை பர்தா அணிவது எவ்வளவு அறிவியல் பூர்வமானது என்று அரைமணிக்கு மேலாக அளந்து கொண்டிருந்தார்.

இந்த ஆசாமி பெங்களூரில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருடன் நடத்திய inter-faith daialogue என்ற காமெடியை பார்த்து ரசிக்கும் பாக்யம் எனக்கும் கிடைத்தது.

இந்த ஆசாமி ஒரு புத்தகவேட்டு. சும்மா புத்தகங்களைப் பார்த்துவிட்டு சேப்டர் 5, வெர்ஸ் 23 லைன் 3 என்று எடுத்ததற்கெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பான். "ஆலையில்லா ஊருக்கு இலுப்பப் பூ சர்க்கரை" என்பது போல முட்டாள் முல்லாக்களுக்கு மத்தியில் கொஞ்சம் இங்கிலீஷ் பேசுபவன் எமினென்ட் ஸ்காலர்!
--------

மற்றபடி உங்கள் இறுதி பஞ்ச் லைன் அற்புதம். அந்தப் படங்கள் இரண்டும் ஒரு புராதன தத்துவத்திற்கு மார்டனிஸ்ட் டச்சும் தந்து விட்டன.
இறை தூதுவர் மட்டுமல்ல, இறையும் நாமே!

said...

அழிந்து வரும் இந்து மதத்திற்கு வலைப்பூ அவதாரமெடுத்துள்ள ஆரியக் குஞ்சுகளுக்கு வந்தனம். எல்லோரும் இறைத்தூதராகி விட்டால் யாரிடம் தூது செல்வது என்ற அநாவசிய திராவிடக் கேள்வி எழுந்ததால்தான் கேட்டேன். அதற்கு நேரடியாக எந்த அம்பியும் பதில் சொல்லவில்லை. இதைத்தான் உளரல் என்றேன். இத்தகைய புராண பிதற்றல் பேர்வழிகள் இறைத்தூதரானால் சாதிச்சண்டை போல் தூதர் சண்டைதான் விஞ்சும் என்பதை இணைய அம்பிகள் புரிந்து கொண்டால் ஆறாம் அறிவுக்கு பயனுண்டு.

//அது போல இந்து மதத்தில் குருக்கள் முந்தைய குருக்களை விட அதிக ஞானமும் கல்வியும் கொண்டவர்கள்.//

ஜகத்குரு காஞ்சி சுப்பிரமணியனுக்கு அடுத்ததாக இதுவரை எந்த குருவும் வரவில்லையே? ஏன்?

//எந்த ஒரு இந்து வேதத்தையும் ஒர் நாவல் போல் படித்தால் //

யாரெல்லாம் வேதம் படிக்கக் கூடாது, மீறி படித்தால் எங்கெல்லாம் என்ன திரவம் ஊற்றப்படும் என்பதையும் சொல்லிக் கொண்டு இன்னுமா எங்களை புரட்டு வேதங்களைப் புரட்டச் சொல்கிறீர்கள்?

//இனிமே என்ன, தினம் தலை வாரிக் கொள்ளும் போது தெய்வ தரிசனம் தான்.//

பீயள்ளுபவனும் தெருக்கூட்டுபவனும் மனிதர்கள்தான் என்று முதலில் மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். காலையில் சூத்திரனைக் கண்டால் தூரவிலகும் குடுமி பார்ப்பணர்களை அறிவீர்களோ?

//யார் வேண்டுமானாலும் நம்பிக்கை வைத்து முறைபடி பயின்றால் அர்ச்சகர் ஆகலாம். வருகிறார்களா உங்களை அர்ச்சகர் ஆக்குகிறேன்.//

எங்கு வரவேண்டும். முதலில் ஸ்ரீரங்கம் கோவில் கருவரையிலிருந்து தொடங்கலாமா? யாரும் அர்ச்சகராகலாம் என்ற முத்தமிழறிஞரின் அரசு இயற்றிய சட்டத்தை புதைக்ழொஇக்கு அனுப்பிய மூடர்களைப் பற்றியும் தெரியும்தானே?

//ரிக்ஷாகாரனை யாரய்யா பூசை செய்ய வேண்டாம் என்றது? முறையான பயிற்சி எடுத்துகொண்டு வந்தால் யார் வேண்டுமானாலும் பூசை செய்யலாம்.//

முதலில் பார்ப்பன வேதங்களை தமிழாக்க்கம் செய்யுங்கள்.நீசபாசை தமிழைப் படிக்க யாருக்கு யார் பயிற்சி கொடுப்பது என்று ஆறாமர முடிவு செய்வோம். அவாள் இவாள் ஆத்துக்காரர், தோப்பனார் இதெல்லாம் என்ன மொழி? இந்த பயிற்சி கொடுத்தவர் யாவர்?

//பிரேமானந்தா, சதுர்வேதி எல்லாம் ஏமாற்று வித்தைகளை கைவிட்டு திருந்தினால் அவர்களும் இறை தூதர்கள் தான்.//

காஞ்சி சுப்பிரமணியன் கொலை, கொள்ளை,கற்பழிப்புகள் செய்தாலும் இன்னும் பீடாதிபதி என்றுதானே சொல்கிறீர்கள்.ஜெயிலேயே இருந்தாலும் வாழை இலையில் இருந்தால்தானே திருநீரும்,பிரசாதமும் வெளிவருமாம். போதுமய்யா உங்கள் புரட்டல்கள்.

said...

நான் எழுதியதை மேற்கோள் காட்டி எழுதியதற்கு மட்டும் என் பதில்
//
//அது போல இந்து மதத்தில் குருக்கள் முந்தைய குருக்களை விட அதிக ஞானமும் கல்வியும் கொண்டவர்கள்.//

ஜகத்குரு காஞ்சி சுப்பிரமணியனுக்கு அடுத்ததாக இதுவரை எந்த குருவும் வரவில்லையே? ஏன்?
//

பீடங்களும் அதிகார மையங்களிலும்தான் குருக்கள் இருப்பார்கள் என்ற சிந்தனை, அதிகாரத்தையும் அரசியலையுமே சிந்திப்பவர்களுக்கு உரித்தானதாக இருக்குமோ என்னவோ?

ஓஷோவும், ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியும், மாதா அமிர்தானந்தமயியும், இன்னும் எத்தனை எத்தனையோ ஆன்மீக குருக்கள் இந்தியாவில் இந்து மத பாரம்பரியத்தில் தோன்றிய வண்ணமே இருக்கிறார்கள். இவர்களுக்கு ஜாதியோ மதமோ பூணூலோ முக்கியமல்ல, இவர்களிடம் அருளுரை கேட்கப்போகும் இந்துக்களுக்கும் முக்கியமல்ல.


நன்றி
எழில்

said...

அறிவு, அர்ச்சகர் எப்படி ஆவது என்பதை பற்றி சுவாமி ரெட்புல்லானந்தா என்பவருடம் நீண்ட பின்னூட்ட பரிமாற்றம் நடத்தினேன். என் பதிவுகளில் பின்னோக்கி சென்று காண்க

ஆமா முத்தமிழறிஞர் இந்த மாதிரி பட்டங்களை விடமாட்டீங்க இல்லே

said...

ஜடாயு சார், தங்கள் வருகைக்கு நன்றி

வரதன் சார் தங்களின் தத்துவம் சூப்பர்

ம்யூஸ், வாரக அவதாரம் நடந்திருந்தால் உலகில் போர்க் சாப்பிடபவர்கள் குண்டு வெடித்து இறந்திருப்பார்கள்

said...

ஹய்யோ! ஹய்யோ!!
காமெடியோ காமெடி!!!

நானும் ஒரு கடவுளா??

said...

ஆமாங்க, காமெடி கடவுளே

said...

கால்கரி சிவா!

முதலில் நடசத்திரமானதற்கு வாழ்த்துக்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திக்கிறோம் என்று நினைக்கிறேன்.

//இணைய இஸ்லாமிஸ்ட்கள் கையில் இந்தமதத்தின் நான்கு வேதப் புத்தகங்கள் இருக்கும் என நம்பிய நான் ஒரு முட்டாள். இவர்கள் இருப்பது சவூதி அல்லவா

இந்தமாதிரி இந்து வேதங்களை இஸ்லாமிஸ்ட்கள் அங்கே படித்தால் அவர்களின் தாடி எவ்வளவு நீளமாக் இருந்தாலும் அவர்களுக்கு உடனே டிபோர்டேஷன் தான்.//

முதலில் ஒரு கருத்தை யார் சொல்கிறார்கள் என்று பார்க்காதீர்கள். அந்த கருத்து சொல்ல வரும் செய்தி என்ன? அது உண்மையா? என்று பார்க்கும் மனப்பாங்கு நமக்கு வரவேண்டும். சொல்வது சுவனப்பிரியனா, ஜாகிர் நாயக்கா, ஜெய்னுல்லாபுதீனா, ரவி சங்கரா, சங்கராச்சாரியாரா என்று ஆட்களைப் பார்த்து படிக்க ஆரம்பித்தால் அங்கு உண்மை மறைந்து விடும். மேலும் நாம் ஒரு கருத்தை சொல்லும் போது நம்மைவிட அறிவிற் சிறந்தவர்களின் ஆக்கங்களை மேற்கோள் காட்டுவது நமது வாதத்தை மேலும் வலுசேர்ப்பதாகவே அமையும். இதை நான் மட்டும் செய்யவில்லை. நீங்களும்தான் செய்திருக்கிறீர்கள். இன்னும் நிறைய எழுத நினைத்தேன். நேரமில்லை. நேரம் கிடைக்கும் போது விரிவாக என் வாதத்தை வைக்கிறேன்.

நன்றி.

said...

சுவனப்ரியன், பார்த்தேன் நீங்கள் எழுதிய பதிவையும். நல்ல கருத்துகளை மட்டும் பார்க்கும் பண்பாளார் தாங்கள் என்பதில் என மிக மகிழ்ச்சி.

நான் சொன்ன கருத்துகள் தங்களை சிரிக்க வைத்ததாக சொன்னீர்கள். இங்கேயும் அதே. தாங்கள் சொல்லும் கருத்துகளான இறைவன் ஒருவனே அவனின் தூதுவன் முகமதுவே என்ற வாசகங்கள் எனக்கு சிரிப்பை வரவைக்கும்.

பரஸ்பரம் சிரிப்பை வரவழைத்து ஆனந்தமாக வாழ்வோம்.

உங்கள் கருத்து உங்களுக்கு என் கருத்து எனக்கு (வசனத்தின் நம்பர் மற்றும் சாப்டர்களை நீங்களே பூர்த்தி செய்து கொள்ளுங்கள்)

ஆனால் என் கருத்து தான் உயர்ந்தது அதுதான் கட்டகடைசியாக சொன்னது என்றால் எள்ளல் இருக்கதான் செய்யும்

விமர்சர்ப்பவர்களை அடக்கி தங்களை தானே தீண்டதகாதவர் ஆக்கிகொண்ட உங்களின் சக இஸ்லாமியர்களினால்தான் ப்ரச்னையே.

அவர்களால்தான் நல்ல கருத்துகளை எங்கிருந்தாலும் ஏற்றுக் கொள்ளும் உங்களை போன்றவர்களுக்கு கெடுதல்

மற்றபடி உங்களின் பதிவிற்கு வரிக்கு வரி பதில் அந்த பதிலுக்கு பதில் என்ற விளையாட்டிற்கும் நான் ரெடி.

என்னுடைய அலுவலக வேலையாக ஒரு சூறாவளி பயணம் சென்று வருகிறேன். நீங்களும் உங்கள் விரதத்தை முடித்துவிட்டு வாருங்கள். ஆளாளுக்கு ஜோக் சொல்லி நாமும் சிரித்து மற்றவர்களையும் சிரிக்க வைப்போம்

said...

அன்பே சிவத்தை இப்படி ஒரு இடுகையில் சுருக்கி இருக்கிறதை கமல் பார்த்தார் என்றால்.. ஆகா... அற்புதம்.

said...

சிவா...!

திரு அறிவுடை நம்பியின் கேள்விகளில் எள்ளல் இருந்தாலும் எள்ளளவு கூட உண்மையில்லை என்று தள்ள முடியாது என்று கருதுகிறேன்.

அவருக்கான தங்களின் மறுமொழியை கான ஆவலோடு காத்திருக்கிறேன்.

said...

ஜி.கே. அறிவுடை நம்பியின் கேள்விகள் எப்படி இருந்தன என்றால் "தோசையை தந்தால் அதன் சுவை கூறமால் அதில் உள்ள ஒட்டைகளை எண்ணிக் கொண்டிருந்தவன்" போலிருந்தது. இந்த மாதிரி விவாதங்கள் எத்தனை முறை நடந்து முடிந்து இருக்கிறது.

இதற்கு பதில்கள் அளித்து என்னுடைய சக்தியை வீணடிக்கவில்லை.

ஆனால் பதில் கூறிதான் வேண்டுமென்றால் இரண்ட்டு வாரங்கள் தயவு செய்து பொறுங்கள். என்னுடைய அபிஸியல் சுற்று பயணத்தை முடித்துவிட்டு வருகிறேன்

said...

தருமி ஐயாவுக்கும், எழிலுக்கும என் பதில்!

//எல்லோரையும் சமமாக பாவிக்கும் இறைவன் ஒருவரை மட்டும் உயர்த்தி மற்றவர்களை தாழ்த்துவது எல்லோரையும் சமமாக பாவிக்கும் இறைவனுக்கு சரியாகாது.//

'இவ்வாறே நமது கட்டளையில் உயிரோட்டமானதை உமக்கு அறிவித்தோம். வேதம் என்றால் என்ன? நம்பிக்கை என்பது என்ன என்பதை முஹம்மதே நீர் அறிந்திருக்கவில்லை.'
42 : 52 - குர்ஆன்

இதன் மூலம் முகமது நபியும் நம்மைப் போன்ற ஒரு மனிதர்தான். தூதராக நியமிக்கப் படுவதற்கு முன்பு வரை வேதம் என்றால் என்ன? என்று தெரியாதவராகத்தான் இருந்தார். இந்த இறைக் செய்தியே நாற்பது வயதுக்குப் பிறகுதான் முகமது நபிக்கு கிடைக்கிறது. 'இறைச் செய்தி வருகிறது என்ற சிறப்பு ஒன்றைத் தவிர நானும் உங்களைப் போன்ற ஒரு சாதாரண மனிதன் தான்' என்று முகமது நபி பலமுறை விளக்கியும் இருக்கிறார்.

//அப்படிப்பட்ட ஒரு குருவாகவே என் கண்ணுக்கு ஜனாப் முகம்மது நபிகள் தெரிகிறார். வாழ்க்கையில் குருவுக்கு வந்தனம் செய்யவேண்டும். ஆனால், குருவையும் தாண்டி சிந்திக்கத்தான் குரு சொல்லித்தர வேண்டும். குரு சொன்னதில் வரிக்கு வரி அப்படியே எடுத்துக்கொண்டு மேலே சிந்திக்க, பரிணாமம் அடைய மறுப்பவன், குருவுக்கு துரோகம் இழைக்கிறான்.//

'குதிதைகள், கோவேறு கழுதைகள், கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் ஏறிச் செல்லவும் மதிப்புக்காகவும் அவன் படைத்தான். நீங்கள் அறியாதவற்றையும் இனி படைப்பான்.'
16 : 8 - குர்ஆன்

இந்த வசனம் அன்றைய அரபுகளைப் பார்த்து சொல்லப் பட்டது. அவர்கள் பயன் படுத்திய வாகனம் மட்டும் அல்ல இன்னும் விமானம், கார, சைக்கிள், ராக்கெட், போன்ற மக்களின் போக்குவரத்துக்கான சாதனங்களையும் இனியும் படைக்கவிருக்கிறேன் என்று இறைவன் கூறுவதிலிருந்து அறிவியல் கண்டு பிடிப்புகளை குர்ஆன் ஊக்கப் படுத்துகிறது. குர்ஆன் முழுக்க மனிதர்களைப் பார்த்து 'சிந்திக்க மாட்டீர்களா?' என்று பல தடவை இறைவன் கேட்கிறான்.

முகமது நபியை முஸ்லிம்கள் பின் பற்றுவது வணக்க வழிபாடுகளில் மாத்திரமே. அன்றைய மக்களுக்கு ஒரு நாளைக்கு ஐந்து நேரம் தொழ வேண்டும் என்றால் நமக்கும் அதே சட்டம் தான். வாழ்நாளில் ஒரு முறை செல்வந்தர்கள் மெக்கா புனிதப் பயணம் செல்ல வேண்டும் என்பதும் அனைவருக்கும் பொதுவானது.

'அதே நேரம் முகமது நபி ஒட்டகையிலும், குதிரையிலும்தான் பிரயாணித்தார். நான் விமானத்தில் ஏற மாட்டேன். முகமது நபி ரொட்டி சாப்பிட்டார். எனவே நான் சோறு சாப்பிடாமல் ரொட்டி மட்டும்தான் சாப்பிடுவேன். முகமது நபி மேலுக்கும் கீழுக்கும் சேர்த்து ஒரே ஆடையைத்தான் அணிந்தார். எனவே நான் பேண்ட் சர்ட் அணிய மாட்டேன்.முகமது நபி டிவியோ, கணிணியோ இன்ன பிற அறிவியல் சாதனங்களையோ பயன் படுத்தியது இல்லை. எனவே இவை எதையும் நான் பயன் படுத்த மாட்டேன்' என்று எந்த முஸ்லிமாவது சொன்னாரா? அல்லது இஸ்லாம்தான் இதற்கு தடை விதிக்கிறதா? இல்லையே!

அதே போல் குர்ஆனுடைய வசனம் இந்த காலத்திற்கு இந்த நாட்டிற்கு பொருந்தவில்லை என்று எப்போதாவது பிரச்னை வந்துள்ளதா? அல்லது ஏதேனும் அறிவியல் கண்டு பிடிப்புகளுக்கு குர்ஆன் தடை விதிக்கிறதா? இல்லையே ! இது போன்ற முன்னேற்றத்துக்கு தடையாக குர்ஆன் இருந்தால் உங்கள் வாதம் எடுபடும். ஆனால் அறிவியலை ஊக்கப் படுத்துவதாகத்தானே குர்ஆனிய வசனங்கள் அமைந்துள்ளது!

said...

சுவனப்பிரியன் பதிவில் எழுதியது.
இதற்கு சம்பந்தமுள்ளதால், இங்கும்பதிகிறேன். எந்த முஸ்லீம் வேண்டுமானாலும் இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லலாம்.
--

அன்புள்ள சுவனப்பிரியன்,

உங்களது பழைய பதிவுகளில் விவாதங்களை பார்த்தேன்.

உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் பதில் சொல்லமுடியாத போது, "இத்துடன் இந்த விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன்" என்று நழுவுகிறீர்கள்.


சகோதரர் அபுமுஹையிடம் கேட்ட கேள்வியை உங்களிடமும் கேட்கிறேன்.

--
நீங்கள் இயேசு கிரிஸ்து பிறப்பதற்கு முந்தைய காலத்தில் வாழ்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.

அப்போது உங்கள் சமூகத்தில் 4 மனிதர்கள் (ஒரு சில குறைகளும் ஒரு சில நிறைகளும் கொண்ட மனிதர்கள்) தன்னை உண்மையான இறைதூதர் என்று அழைத்துக்கொண்டு போதிக்கிறார்கள்.

நீங்கள் யாரை உண்மையான இறைதூதர் என்று பின்பற்றுவீர்கள்? எப்படி? ஏன்?
--

தயவு செய்து கவனியுங்கள். அப்போது இயேசு கிரிஸ்துவோ அல்லது குரானோ வரவில்லை. அதனால், குரானிலிருந்து மேற்கோள்காட்டி எதையும் நிரூபிக்க முடியாது.

கேள்வி மிக எளியது. அடிப்படையில் ஒரு நபரை இறைதூதர் என்று எப்படி கண்டுபிடிப்பீர்கள்?

ஒருவர் இறைதூதர் என்பது யாருக்குத் தெரியும்? அந்த நபருக்கும் இறைவனுக்கும் மட்டுமே தெரியும்.
ஆகவே நான்கு நபர்கள் தானே இறைதூதர் என்று கோரிக்கொண்டால், அவர்களில் யார் உண்மையான இறைதூதர் என்று மக்களிடம் தெரிவிக்கக்கூடிய ஒரே நபர் இறைவன் மட்டுமே.

இறைவன் அனைத்து மக்களிடம் "இவர்தான் இறைதூதர்" என்று பேச முடியுமென்றால், ஏன் இடையே இறைதூதர் என்ற இடைத்தரகர்? சொல்ல வேண்டியதை நேரடியாக இறைவனே எல்லா மக்களிடம் கூறிவிடலாமே? அது ஒன்றும் கடினமான வேலையாக இறைவனுக்கு இருக்காதே?

பதில் கூறுவீர்கள் என்ற நம்பிக்கையுடன்

அன்புடன்
எழில்

said...

த்தோடா...

அவரு பதிவுல போய் எழுதுனா மாங்கு மாங்குன்னு எழுதுறாரு...இங்க வந்து ///இன்னும் நிறைய எழுத நினைத்தேன். நேரமில்லை. நேரம் கிடைக்கும் போது விரிவாக என் வாதத்தை வைக்கிறேன்./// அப்பிடீனு போட்டு வுட்டுடாரு...

///'குதிதைகள், கோவேறு கழுதைகள், கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் ஏறிச் செல்லவும் மதிப்புக்காகவும் அவன் படைத்தான். நீங்கள் அறியாதவற்றையும் இனி படைப்பான்.'
16 : 8 - குர்ஆன்//////

கரெக்டாதான சொலியிருக்குது...ஆனா நீங்கள்ளாம் ஏன் அது மேல ஏறி போகாம புத்திய அது லெவெல்லியே வச்சுருக்கீங்க..சுவனப்பிரியன்...ஒருத்தரு அன்பே சிவம்..அனைவரிலும் கடவுள் உண்டு அப்படீன்னு சொல்லுறாரு..அத ஏத்துக்கிட்டு அவரு "அல்லா"ரையும் தான சொல்ராருன்னுட்டு போகாம..அது இருக்கா..இது இருக்கா..என் கடவுள்தான் ஒசத்தி அப்படீங்க வேண்டியது..கேக்காட்டி பாம் வெக்க வேண்டியது...கடந்து அலையாதிங்கப்பா... மதம் என்பது நல் வழியில் நடக்க சுட்டப்பட்ட பாதை அப்படீன்னு அதுல இருக்குற நல்லதை மட்டும் என்னிக்கு எடுத்துகிறீங்களோ அன்னிக்குதான் உலக அளவுல உங்களுக்கெல்லாம் விடிவு :)

said...

சீவா!

பகுத்தறிவுப் பகலவன், வெண்தாடி வேந்தர் பெரியாரையும் தாழ்ந்த தமிழகத்தை வாழ்விக்க வந்த இந்த நூற்றாண்டின் பேரறிஞர் அண்ணாவையும், உனக்கு நீயே இட்டுக் கொண்ட பின்னூட்டத்தில் அவமதித்துள்ளாய்.

உன்னைப் போன்ற 'பவ்'வனெல்லாம் தமிழகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழி ஏற்படுத்தித் தந்தது இவ்விருவரும்தான் என்பதை மறந்து விடாதே!

பன்றி - வராகமூர்த்தி

நாய் - பைரவமூர்த்தி

மாடு - கோமாதா

யானை - கணபதி

மீன் - மச்சாவதாரம்

முதலை - கூர்மாவதாரம்

பெண்பித்தன் - கிருஷ்ணாவதாரம்

சுடலைப் பித்தன் - சிவன்

ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்தவன் - ஐயப்பன்

இப்படி நீங்கள் கும்பிடும் பற்பல கடவுள்களில் எந்தக் கடவுள் உங்களுக்குத் தூதரை அனுப்புவான்?

நீங்களே தூதர் என்று சரியாகச் சொல்லியுள்ளாய். உங்களது கடவுள்களைப்போல் நீங்களும்.....

said...

//
நீங்களே தூதர் என்று சரியாகச் சொல்லியுள்ளாய். உங்களது கடவுள்களைப்போல் நீங்களும்.....
//

எங்க கடவுள் போல் நாங்க இருக்கோம்....எங்கே உங்க கடவுள் போல் Formless ஆக இருந்து காமி?
//
உன்னைப் போன்ற 'பவ்'வனெல்லாம் தமிழகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழி ஏற்படுத்தித் தந்தது இவ்விருவரும்தான் என்பதை மறந்து விடாதே!
//
ஜாதியச்சொல்லி திட்டுறியே, அண்ணாவும், பெரியாரும் ஒரு மண்ணும் பண்ணல, வணங்காமுடி! அந்த சாதி பெரியவர்கள் செய்து வைத்த வசதிகளினால் அவர்கள் நிம்மதியாக இருக்கின்றனர்.

கீழ் சாதி தமிழர்களுக்கு மதுரை மீனாக்ஷி கோவிலில் நுளைய அனுமதிக்க கோர்டில் கேஸ் வாதாடி ஜெயித்துக் கொடுத்ததே LK Tulasiram என்ற வக்கீல். இன்னிக்கு ஒரு வலைப்பதிவு account திரந்து இந்த பின்னூட்டம் போட்டிருக்கான்...இவன் ஒரு இணைய இஸ்லாமிஸ்டு அல்லது தி. குஞ்சு வருடி.

said...

வணங்காமுடி,

உங்களின் கடைசி ஆயுதமான ஜாதியை எடுத்துவிட்டீர்கள்.

உங்க வெண்தாடி வேஸ்ட் மற்றும் மூக்குபொடி அறிஞர் ,அவிங்க தாத்தாவிற்கும் தாத்தவிற்கும் தாத்தா வருவதற்கு முன்னாடியே மதுரையில் சுயமரியாதையா நெசவு தொழில் செய்துகிட்டு இருந்தவங்க தான் "பவ்"ங்க.


உங்காட்கள் வந்து அவிங்க குடும்பங்களின் சுயமரியாதையை ஏத்திவிட்டு உங்களை மாதிரி ஆட்களின் சுயபுத்தியை புடுங்கினதான் பார்க்கிறோம்.

இதிலிருந்து தெரிவது என்னவென்றால் விமர்சனங்களை தாங்கும் புத்தி இந்த வணங்காமுடி போன்ற ஆட்களுக்கு கிடையாது என்பதுதான்


பி.கு. நான் பிறந்த சாதியின் மக்களை "பவ்" என்று மதுரையை சேர்ந்த (ஒன்று எங்கள் ஜாதியே என பீற்றிக்கொள்ளும்) அறிஞர்கள் அழைப்பது வழக்கம். இது ப்ரமாணர்களை பார்த்து பார்ப்பான் என்றழைப்பதற்கு சமம்.

said...

சிவா!

விமர்சனத்தை எதிர் கொள்ளும் உங்களின் நேர்மையை மதிக்கிறேன்.

ஆனால் சங்கரநாராயனன் போன்ற ஆர்.எஸ்.எஸ். குஞ்சு வருடிக்கு இந்து மதத்தை விமர்சிப்பவரெல்லாருமே இஸ்லாமிஸ்ட்கள். அரண்டவன் கண்ணுக்கு எழுதுபவரெல்லாரும் இஸ்லாமிஸ்டே.

கடவுளைக் கற்பித்தவன் காட்டுமிராண்டி என்று பெரியார் சொன்னதே சங்கரநாராயணனைப் போன்ற ஆட்களைத்தான். இல்லையென்றால்

//எங்க கடவுள் போல் நாங்க இருக்கோம்....எங்கே உங்க கடவுள் போல் Formless ஆக இருந்து காமி?//

என்று கேட்டு நாங்களும் விலங்குகளே என்று ஒப்புக் கொண்டிருப்பானா?

நீங்கள் பெரியாரை விமர்சித்தால் நான் மீண்டும் வருவேன்.

நன்றி சிவா.

said...

//எங்க கடவுள் போல் நாங்க இருக்கோம்....எங்கே உங்க கடவுள் போல் Formless ஆக இருந்து காமி?//

ஆண்பாதி-பெண்பாதி சக்தி சிவன், ஆனை முகம், குரங்கு முகம், ஐயிரு கைகள், மண்டையோட்டை கடுக்கனாயிட்டு, குழந்தையை காலில் போட்டு நர்த்தனமாடும் Shameless மனிதர்களைப் பாரினில் காமி!!!

said...

அறிவுடைநம்பி/வணங்காமுடி,,

உங்க முதல் லிஸ்ட் படி அவர் இருக்காரு என ஒத்துகிட்டாரு.

நீங்க கேட்டமாதிரி அவரும் பார்ம்லெஸ் ஆக இருந்து காமி என கேட்டாரு.

பார்ம்லெஸ் ஆக இருந்து காமிங்க அவரும் அடுத்த லிஸ்டே பண்ணிக்காட்டுவாரு.

நான் பெரியார் மாதிரி ஆட்களை நிச்சயமாக விமரிசிப்பேன் வாங்க வச்சிகலாம் அப்ப

said...

ஜடாயு சார்,

இந்த மாதிரி டாக்டர்களெல்லாம் வரமட்டார்கள் என்று நம்பி போப்பிற்கு அழைப்பெல்லாம் விடுவார்கள்.

இந்த டாக்டரை இன்னொரு டாக்டர் அடிக்கடி அழைக்கிறார். இவர்தான் டபாய்க்கிறார். அந்த டாக்டரும் இஸ்லாமியர்தான். அவருடைய பதிவிற்கு இங்கே

said...

நண்பர் சிவா,
இறைதூதர் பற்றிய என் எண்ணத்தை இங்கே எழுதியிருக்கிறேன்.

மதிப்புக்குரிய சகோதரர் இப்னு பஷீர் பதிவ


நன்றி
எழில்

said...

//பார்ம்லெஸ் ஆக இருந்து காமிங்க அவரும் அடுத்த லிஸ்டே பண்ணிக்காட்டுவாரு.//

இது என்ன வம்பா போச்சு? பெரியாரிஸ்டுகளிடம் போய் Formless ஆக இருந்துகாமி என்று சொல்வது பெரிய 'காமி'டி"
அல்லது "விலங்குகள் சொன்னதற்காக பெரியாரிஸ்டுகள் Formless ஆக முடியாது.

எமது கேள்விகளுக்கு இன்னும் உமது நேரடி பதில் வரவில்லை என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

said...

ஐயா அறிவு இருப்பதாக நம்பி கொண்டிருப்பவரே,

இந்தாருமய்யா என் பதில்

நாவல் போல் படிப்பதற்கு உகந்தது அல்ல வேதம் என சொன்னேன் . எல்லாரும் படிக்க கூடாதா என சொன்னேன். பாடப் புத்தகங்கள் படிப்பதற்கும் கதை புத்தகங்கள் படிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. இல்லை நான் கதை மாதிரிதான் படிப்பேன் வரிக்கு வரி interpret செய்வேன் மொத்தமாக compile செய்ய மாட்டேன் என அடம்பிடித்தால் வெண்தாடி வேஸ்ட்டின் கிருக்கல்கள் தான் படிக்கவேண்டும் அறிவு.

தெருவில் போகும் பீஅள்ளும் மனிதனை கண்டு தூர போகும் அயிரை அறிவேன் அவனை தூற்றவும் தயங்குவதில்லை. அவனுக்கும் கடவுளுக்கும் வெகுதூரம். அதற்கு தான் இந்த பதிவே.

அந்தாளை போல் அர்ச்சகர் ஆக வேண்டும் என் அடம் பிடிப்பவரே மதுரையில் ஒரு குழு(ராமகிருஷ்ண மடத்தை சேர்ந்தவர்கள்) அனைத்து தரப்பினருக்கும் அர்ச்சர்கர் ட்ரெய்னிங் கொடுக்கிறது. அவர்களிடம் தொடர்பு கொள்ளவும். அர்ச்சர்கர் ஆக அனைத்து சம்பிரதயத்தையும் கற்று கொள்ளவேண்டும் எடுத்தவுடனே தமிழ்லே எழுதி கொடு அப்பதான் வருவேன்னா இதென்ன அழுவாச்சி ஆட்டமா இருக்கே. நீங்க போய் கத்து கிருங்க அப்புறம் மொழிபெயர்ச்சி செய்யுங்க யார் வேணமின்னா?. (அப்புறம் சிதம்பரத்தை பற்றி பேச ஆரம்பிச்சிங்கன்னா அதுக்கு லிங்க்தான் தரமுடியும்.)

எல்லா மனிதர்களும் மனம் திருந்தி நல்லவர்கள் ஆனால் அவர்களும் தெய்வங்களே.

(உடனே அப்ஸல் தெய்வமாக வாய்ப்பு குடு, காஞ்சி சுப்ரமணியம் தெய்வாமா, ப்ரேமானந்தா தெய்வமா என கிரிமினல்களை லிஸ்ட் போடுவீங்க.
ஒரு நாட்டின் சட்டபடி கிரிமினல்கள் தண்டனை அனுபவித்தே தீரவேண்டும்)

அர்ச்சகராக ஆரம்பிக்க சின்ன லெவலில் தான் ஆரம்பிக்க வேண்டும் எடுத்தவுடனே கர்ப்பகிரகத்தே கேட்டா எப்படி சாமி.

நானும் பகுத்தறிவு பகலவனா மாற விரும்புறேன் உங்க கருப்பு கண்ணாடி கலைஞர் அப்பாலே குந்த சொல்லு அவரு சீட்லே நான் குந்திக்கிறேன் என சொன்ன எப்படி இருக்கும்

//அவாள் இவாள் ஆத்துக்காரர், தோப்பனார் இதெல்லாம் என்ன மொழி? இந்த பயிற்சி கொடுத்தவர் யாவர்?
//

உமக்கு தெரியவில்லை அல்லது புரியவில்லை என்றால் அது மொழியே கிடையாதா.
##மா,##தா இதெல்லாம் மட்டும் தான் தமிழா..சூப்பர் பகுத்தறிவு..

இந்த மாதிரி பதில் சொல்லி சொல்லி ஆயிரம் பின்னூட்டம் வாங்கலாம் அதற்கு நேரம் இப்போதில்லை

இந்த பதிவின் நோக்கமே மூடபழக்கங்கள் முடநம்பிக்கைகள் இவைகளை எதிர்த்து சொல்லிய உபநிடதங்களின் மையக் கருத்தான "அஹம் ப்ராம்மாஸ்மி" அதாவது "நான் தான் கடவுள்" என்ற கருத்தை வலியுறுத்த தான்.

அதைவிட்டு அந்தாளை பாரு இதை பாரு இந்த கோவிலை பாரு அந்த கோவிலை பாரு என வெளியே பாத்துகிட்டு இருந்தீங்கன்ன எப்படி?

உங்களை பாருங்க சாமி மொதல்லே.

உங்களை சப்போர்ட் பண்ணிகிட்டு வந்த ஜி.கே கிட்டேயும் நான் சொன்னது என்னான்ன "தோசையை சாப்பிட சொன்னா அதில் உள்ள ஓட்டையை எண்ணுவதில் என்ன அர்த்த"மின்னு