Monday, October 09, 2006
என் அரேபிய அனுபவங்கள்-10.7
நான் ரீபைனரியில் நுழைந்து, பாதுகாப்பு, தீயணைப்புதுறை ஆகியவர்கள் வழங்கும் பயிற்சிகளை முடித்து எனக்கு அளிக்கப்பட்ட சீட்டில் அமர்ந்தவுடன். "வணக்கம்" என குரலில் இனிமையை வரவழைத்து வாழ்த்திய இளைஞனை பார்த்தேன். இவரின் பெயரை ராஜா என்று வைத்துக் கொள்வோம்.
இவர் தஞ்சையின் விவசாய குடும்பத்தில் பிறந்த ஒரு உயர் சாதி 19 வயது இளைஞன்(பிரமாணர் அல்லன்) சந்தர்ப்பம் கிடைக்கும் போது இவன் தன் சாதியை பற்றி பெருமையாக பேச தவறியதில்லை. இவர் ஏஜண்டுகளால் பாதி ஏமாற்றப்பட்டவர். முழுமையாக ஏமாற்றப்பட்டவர் அரேபியாவிற்கே வருவதில்லை. கைக்காசை கொடுத்து ஏமாற்றுபட்டு இந்தியாவிலேயே தங்கிவிடுவர். ஆனால் இவர் அரேபியா வ்ந்துவிட்டார். இவர் அரேபியாவிற்கு வ்ந்து சேரும் வரை அந்த ஏஜெண்ட்டின் கழுத்தில் வீச்சறிவாள் இருந்தது. இவர் ஏஜெண்டிற்கு அளித்த தொகை 95,0000. வீச்சறிவாளின் பயத்தினால் 5000 கம்மி.
பிளேன் ஏறி அபுதாபி ஏர்போர்ட்டின் பள்பளப்பில் மயங்கி இருந்தவரை ஒரு பஸ்ஸில் ஏற்றி பாலைவனத்தில் உலகத்தின் ஒரத்திற்கே கொண்டு சென்றார்கள்.
அங்கே ஒரு தொழிற்சாலை அதன் அருகே லேபர் காம்ப் என சொல்லபடும் கட்டை டப்பாக்கள். இவரை அங்கே ஒரு அறையில் விட்டார்கள். அறையில் நுழைந்ததும் ஏசியின் தாக்கம் அவரை மகிழ்ச்சியூட்டியது. படுக்கையில் படுத்து உறங்கிவிட்டார்.
நடு இரவில் புழுக்கமாக இருந்தது என்னவென்று பார்த்தால் இவர் அறையில் மேலும் 5 பேர் படுத்துக் கொண்டிருந்தனர். அவரது சந்தோசம் சட்டென்று மறைந்தது. ஆஸ்ப்த்திரியின் ஜென்ரல் வார்டு போலிருந்தது அந்த அறை. அதில் அடுத்து 4 வருடங்கள் எனும் போது வேர்க்க ஆரம்பித்தது.
விடிந்தவுடன் அலுவலகத்திற்கு உற்சாகமாக கிளம்பினார். ஏஜெண்ட் அவருக்கு கம்ப்ய்யூட்டர் டிபார்மெண்டில் அட்டெண்டர் வேலை. அவர்களே கம்ப்ய்யூட்டர் டிரெய்னிங் கொடுப்பார்கள் , இவர் filing and data entry செய்யவேண்டும் என கூறியிருந்தார்.
ஆனால் அவருக்கு அங்கே வேலை கம்யூட்டர் டிபார்ட்மெண்டில் இருக்கும் கக்கூஸில் வேலை. ஒருநாளைக்கு ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை கக்கூஸை கழுவிவிட வேண்டும். ராஜாவின் மனது இடிதாக்கியது போல் இருந்தது, இவன் ஜாதி, இவன் திமிருக்கு விழுந்த சம்மட்டி அடி. இவன் எதிர்பார்க்கவேவில்லை.
அவனுடைய் சூப்பர்வைசரிடம் சண்டைக்கு போனான். இரண்டு நாட்கள் வேலைக்கு வரவில்லை. ஊரில் தொடர்புகொள்ள காசில்லை. இந்நிலையில் அவன் அவனுடைய சூப்பரவைசரால் மிரட்டபட்டான். வேலைக்க்கு வராவிட்டால் சிறை என்ற வரைக்கும் மிரட்டப்ட்டான்.
கடைசியில் வேலைக்கு வந்தான். விதியை நொந்தபடி வேலை செய்தான். ஒரு நாளைக்கு 10 மணிநேரம் வேலை. வாரத்திற்கு எழுநாட்கள் வேலை. இவ்வாறு வேலை செய்தால் இவருக்கு சம்பளம் 400 திராம்கள் அதாவது 4400 ருபாயக்ள். தங்க இடமும், உணவும் இலவசம். இவர் முதலிடு செய்த 95000 கிடைக்க இரண்டு வருடங்கள் ஆகும் வட்டியை சேர்த்துக் கொள்ளாவிட்டால்.
இவனுடன் வேலைக்கு வந்த இளைஞர்கள் அருகிலிருந்த காலனியில் உள்ளவர்களின் வீட்டில் வேலைப்பார்ப்பார்கள். அதில் ஒரு 400 திராம் சம்பாதிப்பார்கள். இந்த இளைஞர்கள் ஒரே வருடத்தில் அவர்களின் கடனை அடைத்து விட்டு பிறகு சேர்க்க தொடங்குவார்கள். திருமணமானவர்களின் பாடு படு திண்டாட்டம். குடும்ப செலவிற்கு பணம் அதே நேரம் கடன் இன்ஸ்டால்மெண்ட் போன்றவை வாட்டும்.
நம் தன்மான சிங்கத்திற்கு பார்ட்டைம் வேலை பார்க்க பிடிக்கவில்லை. நான் அவனுக்கு உதவி செய்கிறேன் என்று சொல்லி என் வீட்டிலும் பக்கத்து வீட்டில் இருந்த என் நண்பரின் வீட்டிலும் வேலை பார்க்க சொன்னேன். பையன் வேலையில் அப்படி இப்படி இருந்தாலும் மிகவும் நேர்மையானவன். அவனை நம்பி விடுமுறைக்கு போகும் போது வீட்டை அவன் பொறுப்பில் விட்டு போகும் அளவிற்கு நேர்மையானவன்.
ஒருநாள் என் மேலாளார் ஒரு அரேபியர் வீட்டிற்கு வந்திருந்தார் அலுவலக விஷயம் பேச. அங்கே அது சகஜம். அப்போது ராஜா எங்கள் வீட்டு சமையலறையில் நின்று காபி அருந்தி கொண்டிருந்தான். அது அரேபியர்க்கு பிடிக்கவில்லை. அன்று அவர் என் வீட்டில் டீ அருந்த வில்லை.
மறுநாள் என்னை கூப்பிட்டு கக்கூஸில் வேலைப் பார்ப்பவனை எல்லாம் சமையலறையில் இருக்கிறானே இது கொஞ்சம்கூட நல்லாயில்லை என்றான் அந்த அரேபியன் . நான் வாயடைத்து போனேன். (ஆனால் நம் இணய இஸ்லாமிஸ்ட்டுகள் அரேபியர் எல்லாம் பரிசுத்தமானவர்கள் என்றும் அவர்கள் மார்க்கத்தில் ஜாதிகள் இல்லை என்றும் மலம் அள்ளுபவன் கரீம்பாய் என மாறிவிட்டால் டாக்டர் ஆகிவிடுவார் என்றும் ஜல்லி அடிப்பார்கள்.)
இவன் ஒருவன் தானே இப்படி என்றால் இல்லை பெரும்பாலும் அரேபியர்கள் அதிலும் மிகவும் "பரிதாபத்திற்குறிய" பாலஸ்தீனர்கள் இந்த கக்கூஸ் கழுவும் மக்களை மிகவும் கேவலப்படுத்துகிறார்கள் என ராஜாவை போல் வேலைப் பார்ப்பவர்கள் என்னிடம் கூறியுள்ளார்கள். இந்த மாதிரி கேவலப்பட்டவர்களில் முஸ்லிம்களும் அடக்கம்.
மனிதனை மனிதனாக பார்ப்பவர்களும் கேவலமாக பார்ப்பவர்களும் உலகில் எங்கும் எல்லா சமயத்திலும் எல்லா இனங்களிலும் இருக்கிறார்கள்.
ராஜா உழைத்தான் ஒரு நாளைக்கு 16 மணிநேரம் உழைத்தான். கடன் அடைந்தது சிறிது காசு சேர்ந்தது.
அவனில் இருந்த சாதி கர்வம் முழுவதுமாக அழிந்தது.
அவனுக்கு என்னால் முடிந்த அளவிற்கு அறிவுரைகள் வழங்கினேன்.
தமிழ் மற்றும் தெரிந்தவன், ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம் மற்றும் அரபி பாஷைகளை கற்றான்.
ஆபிஸில் பைலிங்க் மற்றும் கணிணி இயக்கங்களை கற்றான். சமைக்க கற்றுக் கொண்டான். தட்டு முட்டு சாமான்களை
ரிப்பர் செய்வது, டிஷ் ஆண்டனா இன்ஸ்டால் செய்வது போன்றவைகளை கற்று தேர்ந்தான். வீடியோ காமிரா இயக்க கற்றுக் கொண்டான்.
பிறகு என்னிடம் வந்து "சார் நான் அடுத்த மாதம் ஊருக்கு போகலாம் என இருக்கிறேன். அங்கே போய் விவசாயம் செய்து மற்ற நேரங்களில் எலெக்ட்ரிகல் ஐட்டங்களை ரிப்பேர், வீடியோ காமிராவில் படம் பிடிப்பது போன்ற சைடு பிசினஸ்களை செய்ய போகிறேன். தஞ்சாவூரில் மாதம் 5000 சம்பாதிக்க தைரியம் எனக்கிருக்கிறது. உங்கள் கருத்து என்ன?" என்று கேட்டான். நான் "சபாஷ் நல்ல யோசனை. உன் முன்னேற்றம் என்னை விய்ப்பில் ஆழ்த்தியது. விவசாயத்தைப் பற்றி படி. விஞ்ஞான முறைப்படி விவசாய்ம் செய். மீத நாட்களில் மற்ற சைட் பிசினஸ்களை கவனி" என அறிவுரைகளை வழங்கினேன்.
அரேபிய அனுபவம் ஒரு முரட்டு இளைஞனை நல்ல பொறுப்புள்ள மனிதனாக மாற்றியது. அவனில் இருந்த சாதி என்ற கர்வம் நீங்கியது. அதற்கு காரணம் அவனே அன்றி ஒரு மதமோ இனமோ இல்லை.
அவமானங்களை எதிர்த்து முன்னேறிய்வர்களில் காந்தி முதல் இந்த இளைஞன் ராஜா வரை அடங்குவர்
Subscribe to:
Post Comments (Atom)
23 comments:
மனது நெகிழ்கிறது சிவா
அந்த இளைஞன் எங்கிருந்தாலும் நன்றாக வாழவேண்டும்.முடிந்தால் கெட்ட அனுபவத்தை மறந்துவிட்டு நல்லதொரு திட்டமிடலுடன் சென்று வெளிநாட்டில் சம்பாதித்து இந்தியாவில் முதலீடு செய்யவேண்டும் என தோன்றுகிறது.
அவன் ஜாதிபெருமை ஒழிந்ததல்லவா?அது மிகப்பெரும் மகிழ்ச்சி
ராஜா மாதிரி அந்த வேலை செய்ய அங்கு போகவேண்டாம்.
கடைசியாக 5000 ரூபாய் தஞ்சாவூரில் சம்பாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை வந்ததே..
அது தான் ராஜாவின் சிறப்பு.
சிவா அண்ணன்,
நீங்க சொன்னது 100/100 சரி. சில நாட்கள் முன்பு நானும் ஒரு நண்பரை சந்தித்தேன். அவரை பற்றி ஒரு பதிவே போடலாம் என்று உள்ளேன்
//
அவமானங்களை எதிர்த்து முன்னேறிய்வர்களில் காந்தி முதல் இந்த இளைஞன் ராஜா வரை அடங்குவர்
//
உண்மை.
//
அவனில் இருந்த சாதி என்ற கர்வம் நீங்கியது. அதற்கு காரணம் அவனே அன்றி ஒரு மதமோ இனமோ இல்லை.
//
இதுவே சரியானது. காந்தி மஹாத்மா ஆனதற்கு தென் ஆப்பிரிக்காவில் நடந்த சம்பவம் தான் முழு முதற் காரணம் என்று இன்றும் ஜல்லிகள் கொட்டப் பட்டு சிறு பிள்ளைகள் மூளையில் "ஹைவே"க்கள் போடப்படுகின்றது.
அத்தகய சம்பவங்கள் ஒரு Trigger factor ஆக இருக்கமுடியுமெ அன்றி அதுவே முழு மாற்றத்தையும் உண்டு பண்ணாது. அவனுள் இருந்த நற்குணம் மேலோங்க ஒரு உந்துதலே.
சட்டியில் இருக்கணும், அப்பத்தான் அகப்பையிலெ வரும்.
சிவா!
இப்போ நேரமில்லை. இரவு ஓர் விரிவான பின்னூட்டம் இடுகிறேன்.
மிக நன்று!
யோகன் பாரிஸ்
செல்வன், அரேபியாவில் நடந்த நல்ல அனுபவங்களில் இதுவும் ஒன்று
வடுவூர் குமார்,
நாம் முதலில் வெளிநாடு வருவது பணம் சம்பாதிக்க தான். பிறகு ஒன்றுக்கு மேல் ஒன்று என தேவைப்பட்டு, நம் குழந்தைகள் இங்குள்ள வசதி மற்றும் கலாசாரத்தில் மூழ்கி நம் ஊரில் வாழமுடியாது என்ற நிலை வருகிறது.
அப்போது என்னை போன்ற நடுத்தர வயதினரின் திண்டாட்டம் அதிகம். வயதான தாய் தந்தை ஒரு புறம் குழந்தைகள் ஒரு புறம் என வாழ்க்கையை பாலன்ஸ் செய்து ஓட்ட வேண்டியுள்ளது.
இந்தியாவிலும் வாய்ப்புகள் பெருகி பணம் என்பதை எங்கிருந்தாலும் சம்பாதிக்கலாம் நிலை வந்துவிட்டது இப்போது. அந்த வகையில் ராஜா போன்ற தன்னம்பிக்கை மிக்கவர்களின் ஆர்வத்தால் இயற்கை வளம் இல்லாவிட்டாலும் மனித வளத்தால் இந்தியாவை முன்னேற்றலாம் என்பது கண்கூடாக காணலாம்
நாகை சிவா, உங்கள நண்பரின் கதையை கேட்க ஆவாலாய் உள்ளேன்
வஜ்ரா,
மாற்றம் என்பதை ஏற்கும் மனம் மிக முக்கியம்
யோகன், உங்கள் பின்னூட்டத்திற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்.
வருகைக்கு நன்றி
அரேபியா இல்லாமல் கால்கரி சிவாவின் வாரமா! வெரும் பக்தி மார்க்கத்தோடு முடியப் போகிறதான்னு பார்த்தேன். நல்லவேளை தடம் மாறிவிட்டது. அப்பறம் அதிரடி சமையல் குறிப்பு பதிவு ஏதாவது உண்டா?
அனுபவங்களின் சுரங்கத்தையே வைத்திருக்கிறீர்கள். அனுபவங்களின் புதையல் என்று கூட சொல்லலாம்.
"சுதந்திரம் மட்டும் இல்லாமல் சொர்கமே இருந்தும் என்ன பயன்"
எனக்கு மிகவும் பிடித்த வரிகள். இது பற்றி ஒரு பதிவு போடுங்கள்.
ஓகை சார், சமையல் குறிப்பு நிச்சயம் உண்டு அதுவும் அதிரடி சமையல்தான்.
//"சுதந்திரம் மட்டும் இல்லாமல் சொர்கமே இருந்தும் என்ன பயன்"
//
இது ஜென்டில் மேன் படத்தில் "ஊர்வசி...ஊர்வசி...டேக் இட் ஈசி ஊர்வசி" என்ற டப்பாங்குத்து பாடலில் வரும் வரி. மேலும் சுதந்திரத்தை விரும்பும் பறவையை நான் வளக்கிறேன் அதைப் பற்றியும் ஒரு பதிவு உண்டு
சிவா!
ஏதோ அரேபிய நாடுகளில்; இஸ்லாம் மதத்தவர் தவிர்ந்தவர்களுக்கு மரியாதையில்லை எனும் அப்பிராயம் பலரிடம் உள்ளது. ஆனால் ஏழை நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர்களுக்கும் மதிப்பில்லை.
இதைப் பலரிடம் நான் அறிந்தேன்.
நான் 2004 ல் இலங்கை சென்றபோது; யாழ்ப்பாணம் எம் பிறப்பிடமாக இருந்த போதும்; அரச வேலையால் என் மனைவிவீட்டார்; மன்னாரில் வாழ்ந்து போர்ச்சூழலால் திரும்பாமல் அங்கேயே வாழ்ந்ததால் ;அங்கே தங்கும்படி ஆனது.
ஒரு நாள் பேருந்தில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க வறுமையைப் பூசிய உருவில் ஓர் இஸ்லாமியப் பெண்;(மன்னாரில் கணிசமான இஸ்லாமியச் சகோதரர்கள் வாழ்கிறார்கள்) கையில் 2 பப்பாசிப்பழத்துடன் ,என் பின் இருக்கையில் ; அவருக்கு எதிர் இருக்கையில் இருந்த ஓர் வசதியான இந்துப் பெண்; அந்த பப்பாசிப் பழங்களுக்கு விலை கேட்டார்.
இப் பெண் 50 ரூபாய் சொன்னார். அப்பெண் 40 கேட்டார்; அவரோ 50 க்கு தரேன். இல்லாவிடில் பிள்ளைகள் சாப்பிடட்டும் என க் கூறிக் கொடுக்கவில்லை.
இந்நிலையில் அந்தப் பப்பாசிகளை நான் வாங்கலாம்; என எண்ணி முதல் கேட்டவரிடம்; அக்கா!! நீங்கள் வாங்காவிடில் நான் வாங்குகிறேன். எனக் கூறிய போது.
அவர்......." வெளிநாடா????" என என்னைக் சற்றுக் கேலி போல் கேட்டார்.
உடனே....நான் ......"ஓம்"......ஆனால் அங்க காசு மரத்தில் பிடுங்கயில்லை; கஸ்ரப்பட்டுளைச்ச காசு..;என சிரிச்சுக் கொண்டே சொன்னேன்.
உடனே அந்த பப்பாசிப் பெண் " சரியா?,,சொன்னீக காக்கா!!!"......(காக்கா-அண்ணா).... வதச்சுப் போட்டுத்தான் காசைத் தருவாக!!!!!! 2 வருசம் பாடாப் பட்டு விட்டுச் சீக்காளியா வந்திருக்கேன்.3 பொட்டைகள்;கட்டியதும் செத்துட்டுது. என மொட்டாக்குச் சேலையால் கண்துடைத்தார்.
எனக்குச் சுவாரசியம் தொத்திவிட்டது. "எங்க வேலை செய்தீங்க !! சிங்கப்பூரா?? மலேசியாவா??,எனக் கேட்ட போது...;;
ம் கொட்டிவிட்டு "சவூதீங்க... காக்கா"!!!!என்றார்...... நான் வாயப் பிளந்து கொண்டு அவங்க !! ஒங்காக்களல்லா???? என்று கேட்டேன்.
அவர் மீண்டும் ம் கொட்டி பெருமூச்சு விட்டுவிட்டு; " நானும் அப்படிதான் காக்கா; நினைச்சேன்; ஆனா அவங்க !!! மிருகங்க!!!!!!!;
ஒங்களுக்குப் புரிசன் இல்லை;3 பிள்ளைகள் தெரியுமா?????; நல்லாத் தெரிந்து ...கடைசி2 மாதச் சம்பளக்காசு ஏதேதோவெல்லாம் சொல்லி தரயில்லை; தப்பினால் போது மென வந்து விட்டேன்.
மிகுந்த கல்வியறிவற்ற இந்த ஏழைப் பெண்ணின் பொய்யற்ற இந்த வாக்கு!!!! என்னை மிகப் பாதித்தது.
அப்போ எனக்கு நினைவுக்கு வந்தது.
பல வருடங்களுக்கு முன் பாரிசின் உறங்காத் தெருவில் avenue champs elysees ஓர் cafe யில் பிலிப்பையின் வேலைக்காரப் பெண்ணை இருக்கையில் கூட இருக்காமல் மணிக்கணக்கில் நிறுத்திய அரபுக்குடும்பம்.(அவர் ஓர் இஸ்லாமியப் பெண்ணாகவும் இருக்கலாம்) அந்தcafe,சர்வர் இருக்கையில் அமரும் படி அந்த பெண்ணைக் கேட்ட போதும்; அக் குடும்பத்தவர்கள் அனுமதிக்கவில்லை. சுமார் ஒரு 1 1/2 மணி நேரம் ; பச்சைத் தண்ணீர் கூட குடிக்கக் கொடுக்கவில்லை.
இவற்றைப் புரிந்து கொள்வது கடினமாக இருக்கிறது.
பல பிலிப்பைன் பெண்கள்; அரபுக்குடும்பங்களுடன் பாரிஸ்,லண்டன், ஜெனிவா,ரோம் வந்தால்; தங்கள் நண்பர்களுக்கு சொல்லி வைத்து விட்டு; அரபுக் குடும்பத்தை விட்டு ஓடிவந்து ஒளித்து விட்டு; பின் அரசியல் தஞ்சம் கோரியுள்ளார்கள். அதற்கு அவர்கள் சொன்ன காரணம்; அளவுக்கு மிஞ்சிய கொடுமைகள்; சுதந்திரமில்லை; அடிமைகளைப் போல் நடத்துவது. கூசாமல் திருட்டுப் பட்டம் கட்டுவது. ; பாலியல் ரீதியான கொடுமை!!!
இதற்கு; அவர்கள் இஸ்லாமியர் என எந்த வித்தியாசமும் பார்ப்பதில்லை.ஏழையென்பதே போதும்;
எல்லோரையும் ஓரே! தொட்டியில் தான் போடுராங்க!!!!!
எல்லோரும் என்றில்லைத்தான் ஆனால் பலர் இப்படித்தான் இருப்பது மிகக் கொடுமை!!!
இலங்கையில் இருந்து வெளிவரும் வீரகேசரியில் பல கண்ணீர்க்கதைகள் படிக்கலாம்.
கருவாட்டில் புழு வெனக் கத்துரோம்; கத்தரிக்காயிலும் புழுத்தான்.
அந்த இளைஞரை மனிதனாக்க !!! இந்த தண்டனையுதவியுள்ளது.
அவருக்கு புரியவைத்ததற்கு நன்றி!!
யோகன் பாரிஸ்
யோகன்,
என்னை மிகவும் பாதித்து விட்டது உங்களின் பின்னூட்டம்.
பாவம் இந்த வீட்டுவேலைக்கு வரும் பெண்கள். அவர்களிடம் நான் பேசினதில்லை பேச வாய்ப்பு இருந்ததில்லை. இவர்களின் வாழ்வு கொடூரமானது. இவர்களை வேலை செய்ய, குழந்தைகளை மேய்க்க, தேவைபடும் போது பாலியல் இச்சைகளை தீர்க்க உதவும் இயந்திரங்களாகதான் பார்க்கிறார்கள்
மாற்று மனிதர்களை அடிமைகளாக தான் பார்க்கிறார்கள் அரேபியர்கள். அதுவும் ஏழை என்றால் மிக இளக்காரம்
தங்களின் அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டதற்கு நன்றி
கால்கரி சிவா
கீழே உள்ளது அப்படியே எனக்கும் கார்பன் காப்பி
"அப்போது என்னை போன்ற நடுத்தர வயதினரின் திண்டாட்டம் அதிகம். வயதான தாய் தந்தை ஒரு புறம் குழந்தைகள் ஒரு புறம் என வாழ்க்கையை பாலன்ஸ் செய்து ஓட்ட வேண்டியுள்ளது
மனது கொதித்துப் போய் இதை எழுதுகிறேன். நீங்கள் கூறிய உதாரணங்களில் வரும் திமிர் பிடித்த சவுதி அரேபியன்களை பற்றி நினைத்தாலே மனம் கசந்து போகிறது.
இந்தியாவுக்கு வந்து ஏழை முஸ்லிம் சிறுமிகளை (அவர்களில் பலர் 16 வயது கூட நிரம்பாதவர்கள்) காண்ட்ராக்ட் கல்யாணம் செய்து தவிக்க விடுபபவன்களைப் பற்றி என்ன கூறுவது?
அவர்களுக்கும் வக்காலத்து வாங்கும் இணைய கொ.ப.சே.க்கள், வெட்கம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு சார்,
பணக்காரர்களாக இருப்பதால் சவூதி அரேபியர்களை எதிர்ப்பதை யாருமே விரும்புவதில்லை.
மனித உரிமை குழுக்களும் வல்லரசுகளும் இந்த ரவுடிகளின் அடாவடிதனத்தை தட்டிக் கேட்பதில்லை
வாங்க சிவா.. வாங்க... கடசில நீங்க நம்ம சாதிக்காரரா போயிட்டிங்க.. அதான் சேப்டி ஆபிஸர்ங்கற சாதி. என்ன கனடாவில சேப்டி துறையில எப்படி வாய்ப்பு இருக்கு..?
இங்கே ஒருவர் சொல்லியிருந்தபடி அரபுக்கள் மனிதனை மனிதனாக மதிப்பதில்லை என்பதை நானும் கவனித்திருக்கிறேன். அது நான் துபைக்கு ஒரு விடுமுறையாக என் சொந்தக்காரர் ஒருவர் அழைப்பின் பேரில் போய் ஒரு 15 நாள் இருந்தேன். அப்பொழுது நான் கவனித்த அரபிகளின் குணாதிசயங்கள் அவர்களைப் பற்றிய ஒரு தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்தி விட்டது.
பிற்பாடு, எனக்கு இரு சாய்ஸ் இருந்தது.. ஒன்று துபாயில் வேலை.. மற்றது சிங்கப்பூரில் வேலை. சிங்கப்பூர் வேலை துபாய் வேலையை விட சிறிது சம்பளம் குறைவுதான். ஆனால் நான் தேர்ந்தெடுத்தது சிங்கப்பூரை. இங்கு மனிதனை மனிதனாக மதிக்கிறார்கள். அது வேலை செய்யும் இடத்தில் மிக முக்கியமல்லவா... காசுக்காக அடிமையாகவா இருக்க முடியும்.
அரபிக்கள் அடிமைக்கலாச்சாரம் கொண்டவர்கள். அவர்கள் அரபி முஸ்லிம்களாகவோ, அரபி பாலஸ்தீனனாகவோ, அரபி லெபனீஸாகவோ இருக்கலாம். ஆனால் அடிமை என்று ஒரு இனத்தை ஆண்ட அந்த ஜெனடிக் புத்தி இன்னும் போகவில்லை.
அவர்களுக்கு முஸ்லிம் என்றெல்லாம் அக்கறை கிடையாது. அவர்களைப் பொறுத்தவரை இவன் இந்தியன், இவன் பாகிஸ்தானி, இவன் பங்களாதேஷி... அவ்வளவு தான். இனவாதம் மதவாதம் சாதீயவாதம் பேசும் எல்லோரையும் கட்டாயமாக ஒரு ஒருவருடத்திற்கு அரபிக்களிடம் வேலைக்கு அனுப்பினால்தான் இந்தியன் என்ற தனது இனத்தை அவர்கள் அடையாளம் காணுவார்கள்.
இது உங்க ஃபேமஸ் பதிவாச்சே, அதுவும் நட்சத்திர வாரத்திலே ஆஜராகலேன்னா நல்லா இருக்காதே!
//அரேபிய அனுபவம் ஒரு முரட்டு இளைஞனை நல்ல பொறுப்புள்ள மனிதனாக மாற்றியது. // இரண்டு லைன் வரி தான், நல்லா சினிமா எடுக்கலாம் போல இருக்கே!
//வாங்க சிவா.. வாங்க... கடசில நீங்க நம்ம சாதிக்காரரா போயிட்டிங்க.. அதான் சேப்டி ஆபிஸர்ங்கற சாதி. என்ன கனடாவில சேப்டி துறையில எப்படி வாய்ப்பு இருக்கு..?//
திருவடியான் சார், நான் இருப்பது இன்ஸ்ட்ருமெண்டசன். சேப்டி அல்ல
கனடாவில் சேப்டி துறையில் நுழைய நிறைய சர்டிபிகேட் பரீட்சைகளை எழுத வேண்டும். மிக அதிகமாக பேச வேண்டும். பல அசோசியஷன்களின் மெம்பர்ஷிப் வேண்டும்.
உங்களுக்கு ஆர்வமிருந்தால் நான் மேலும் தகவல்களை திரட்டியோ அல்லது அந்த வலைதளங்களை அறிமுகப்படுத்துகிறேன்
//அரபுக்கள் மனிதனை மனிதனாக மதிப்பதில்லை..//
அரேபியர்கள் பலநாட்டில இருக்கிறாங்கப்பா.. எல்லா அரேபியரையும் ஏன் ஒரு குடையின்கீழ் இழுக்கிறிங்க....
http://en.wikipedia.org/wiki/Arab
இதுதான் உயர் வஹாபி கலாச்சாரம் என்பதோ?
இந்தியாவில் வேகமாகப் பரவிவரும் இக்கலாச்சாரம் நேர்மையான, உண்மையான இஸ்லாமியரினை அடக்குவதற்காகச் செயல்பட்டுவருகின்றது.
தவறான கைகளில் ஆதிக்கம் கிடைக்குமானால், மனிதரின் ஒவ்வொரு வாழ்நாளும் நரகம். நரகம்.
உங்களின் அரேபிய அனுபவம் அரேபிய நாடுகளை வெறும் உயர்ந்த கோபுரங்கள், அந்நியச் செலாவணி, ஆகியவற்றில் பார்ப்பவர்கள் அவசியம் படித்து அறிந்து கொள்ள வேண்டியது . . .
இன்னும் வருமா . . . ?
Post a Comment