Saturday, October 14, 2006

மிக அசைவ சமையல் குறிப்பு

1. புனிதபிம்பம் கலைந்தது2. முகத்திரை கிழிந்தது3. பூனைக் குட்டி வெளியே வந்துவிட்டது


4. இதிலிருந்தே தெரியவில்லையா ஆரிய வந்தேறிகளின் உண்மையான உணவு எது வென்று

இது போன்ற பின்னூட்டங்காளோ அல்லது தனி பதிவுகளோ கூட வரும். இதற்கெல்லாம் பயந்தால் முடியுமா. இந்த் பயங்களையெல்லாம் மீறி தான் இந்த பதிவுஅசைவம் சாப்பிட ஆரம்பித்த பிறகு ஆடென்ன மாடென்ன எல்லாமே தசைதான்.

அதற்க்காக மனிதனை சாப்பிடுவியா? எனக் கேட்டால் உயிர் வாழ அவசியமேற்பட்டால் ஆம் என்பதே என் பதிலாய் இருக்கும். சில வருடங்களுக்கு முன் விமான விபத்தில் தப்பித்தவர்கள் இறந்த பயணிகளின் தசைகளை அறுத்து சாப்பிட்டு உயிர் பிழைத்த கதைகள் தெரியுமே.

இந்த சமையல் குறிப்பு சிலபேருக்கு உவ்வே.... என வாந்தி வந்தால் அதற்கு பொறுப்பு அவர்களே.

மேலை நாட்டினரின் முக்கிய உணவு Beef Steak. வாரத்திற்கு ஒரு நாளாவது சாப்பிடவில்லையென்றால் ஏங்கிவிடுவார்கள். இப்போதெல்லாம் நாம் எல்லா நாட்டிற்கும் போகிறோம் அந்தந்த நாட்டின் உணவுகளை உண்டு பார்க்கவேண்டுமெல்லவா. ஜிகர்தண்டாவில் நின்றுவிட்டால் வாழ்க்கை போரடிக்கும்.

Beef Steak செய்வதற்கு மிக எளிது. Beef Steak செய்வதற்கு முன் அது மாட்டின் எந்த பகுதியிலிருந்து அறுத்தெடுத்தது என்பதை பற்றி அறிய வேண்டும். கீழே உள்ள படத்தைப் பார்க்கவும்

Photobucket - Video and Image Hosting


1.Chuck
Chuck Arm Pot Roast
Chuck Shoulder Pot Roast
Chuck Shoulder Steak
Chuck Eye Steak
Chuck Top Blade Steak
Chuck Blade Steak
Chuck Short Ribs
Chuck 7- Bone Pot Roast


2. Rib Roast
Rib Steak
Rib Roast
Ribeye Roast
Ribeye Steak
Back Ribs

3. Short Loin
Strip Steak
T- Bone Steak
Porterhouse Steak
Tenderloin
Filet Mignon

4. Sirloin
Sirloin Steak
Tri-tip Roast
Tri-Tip Steak

5. Round
Top Round Steak
Round Tip Steak
Round Tip Roast
Bottom Round Roast Eye
Round Roast Eye
Round Steak

6. Shank & Brisket
Shank Cross Cut
Whole Brisket Flat
Cut Brisket

7. Plate & Flank
Skirt Steak
Flank Steak

நாம் செய்ய போவது அய்ட்டம் நம்பர் 5 .

இது Safeway போன்ற பலசரக்கு கடைகளில் கிடைக்கும்.

Photobucket - Video and Image Hosting

இதை வாங்கி இதன் மேல் உடைத்த மிளகு, மற்றும் காய்ந்த மிளகாயை அழுத்தி தேய்க்கவும் (வெள்ளைகாரர்கள் மிளகாயை உபயோகிக்க மாட்டார்கள்)

Photobucket - Video and Image Hosting
ஒரு கோப்பையில் சிறிது பூண்டு பேஸ்ட் தேவையான உப்பு எண்ணெய் ஆகியவைகளை கலந்து இறைச்சியின் மேல் பூசிவிடவும். இதை அப்படியே 1/2 மணிநேரம் முதல் 1 மணிநேரம் வரை ஊற விடவும்.

Photobucket - Video and Image Hosting

பிறகு இதை எடுத்து போய் oven னிலோ அல்லது க்ரில்லிலோ அல்லது தோசைகல்லின் மீதோ போட்டு வாட்டவும். கரில்லில் 400 டிகிரி பாரன்ஹீட்டில் ஒரு பக்கம் 5 நிமிடம் வீதம் வாட்டினால் ஸ்டேக் ரெடி. அவ்வள்வு சிம்பிள். சிக்கன் மட்டன் செய்வது விட எளிது.

Photobucket - Video and Image Hosting

அடுத்து என்ன பார்க்கவேண்டுமென்றால் “done-ness” அதாவது எவ்வள்வு வெந்து இருக்கிறது என்று பார்க்க வேண்டும்.

இந்த இறைச்சியை லேசாக சுடு பண்ணி சாப்பிட்டல் அதை VERY RARE என்பார்கள் இறைச்சி லேசாக வெந்துஇருக்கும் அப்படியே சிவப்பாக இருக்கும் கற்கால மனிதன் சாப்பிட்து போல் . அதற்கு அடுத்த ஸ்டேஜ் RARE உள்ளே Reddish pink கலரில் இருக்கும் இது கற்கால மனிதனுக்கு பின்னால் வந்தவன் சாப்பிட்டது. MEDIUM RARE அடுத்த தலைமுறை இதன் உள்ளே pink கலரில் இட்க்கும் மேலே முத்துக்கள் போல் juice இருக்கும். இது 18 ஆம் நூற்றாண்டு மனிதன் சாப்பிடுவது 19 ஆம் நூற்றாண்டின் மனிதன் MEDIUM சாப்பிட்டான் இது கொஞ்சம் அடர்ந்து ஆனால் juicy ஆக இருக்கும். 20 ஆம் நூற்றாண்ட்டின் மனிதன் சாப்பிட்டது WELL DONE இது Grayish pink கலரில் Somewhat moist ஆக இருக்கும். VERY WELL DONE என்பது உப்பு கண்டம் போல் கடினமாக இருக்கும்.

நான் 19-20 ஆம் நூற்றாண்டில் நின்று விடுவேன். அதாவது MEDIUM WELL தான் எனக்கு பிடித்த பதம்
Photobucket - Video and Image Hosting இது மெய்ன் புட். இதற்கு சைட் டிஷ் என்னவென்றால் சுட்ட உருளைக் கிழங்கு அல்லது அஸ்பாரகஸ் அல்லது ப்ரஞ்ச் ப்ரைஸ். இது செரிக்க இதை சாப்பிடும் முன்பும் சாப்பிடும் போதும் சாப்பிட்ட பிறகும் Wine குடிக்க வேண்டும்

டேய் மாடு எல்லாம் சாப்பிடேறே நீ இந்துவா என கேட்டால்

அதை சமாளிக்கவும் என் கிட்டே ஐடியா இருக்கு.
நம்மூர் மாட்டை பார் அதற்கு முதுகின் மேல் ஒரு திமில் இருக்கும். சிவபெருமானின் வெஹிகிள் அதுதான் .


Photobucket - Video and Image Hosting

நான் சாப்பிடும் மாட்டை பார் அதுக்கு திமில் கிடையாது ஆகையால் அதை சாப்பிடலாம்.

Photobucket - Video and Image Hosting

இதைப் படித்த பிறகும் பீப் ஸ்டேக் செய்து சாப்பிடுபவர்கள் எப்படி இருந்தது என்பதை எனக்கு தெரிய படுத்தவும்

பி.கு.1.

நான் வாழும் கலையின் சுவாச பயிற்சியைக் கற்றுக்கொள்ளும் வகுப்பில் சுமார் 50 வயது மூதாட்டி ஒருவர் இருந்தார். இந்த வகுப்பு நடக்கும் காலத்தில் மாமிசம் உண்ணக்கூடாது என்பது வேண்டுகோள். இந்த மூதாட்டி அவருடைய 50 வருட வாழ்வில் முதல் முறையாக மரக்கறி உணவை உட்கொண்டார். மேலும் 7 நாட்கள் மாமிசத்தை உண்ணாமல் இருந்தார். அவர் அடித்த கமெண்ட் "50 வருடங்களாக காய்கறிகளை உண்ணாமல் இந்த உலகத்தில் நல்லதை இழந்துவிட்டேன்"

பி.கு.2
என் மகனின் உடம் பருமனை கூட்ட அவனை ஒரு பிட்னெஸ் வகுப்பில் சேர்த்தேன் அவர்களின் சிபாரிசால்தான் இந்த உணவு. இவைகளை சாப்பிட்டும் அவன் எடை கூட வில்லை. சின்ன வய்தில் நீங்கள் ஒல்லியாக இருந்தீர்களா என கேட்டார்கள். ஆம் என்றேன். அப்படியென்றால் உங்கள் மகன் எடை கூடும் வாய்ப்பு மிக கம்மி என்றார்கள். இந்த மாதிரி ஒரு தமிழ் பதிவு படித்ததாக ஞாபகம்

39 comments:

said...

மாட்டுக்கறிதான. சாப்பிடலாம். தப்பில்லை.

நேத்து இப்படிதான் சாப்பிட அலுவலகத்துக்கு வெளியில போனோம். பல்லவின்னு ஆந்திரா கடை. கூட வந்தவன் சைவம். அதுனால நானும் மினி மீல்ஸ் சொன்னேன். ரெண்டு பேருக்கும் பொதுவா கோபி 65 சொன்னோம். நல்லவேளைக்கு 65 பேரு நாந்தான் கோபின்னு வந்து நிக்கலை.

சாப்பாடு சுமார்தான். ஆனாலும் சாப்பிட்டோம். திடீர்னு பாத்தா சோத்துக்குள்ள புழு. அப்படியே கடைக்காரரைக் கூப்பிட்டுக் காட்டுனேன். மெல்ல ரொம்பவும் மெல்லிசான குரல்ல சாரி சாரின்னு சொன்னாரு. I am not going to eat this. I am not going to pay anythingன்னு சொல்லீட்டு வெளியில வந்துட்டேன்.

அப்புறம் பக்கத்துக்கடையில பிட்சா சாப்பிட்டு ஆபீசுக்கு வந்து நொய்டாவுல இருக்கிற நண்பனுக்குத் தகவல மெயில்ல அனுப்பினேன்.

"அடப்பாவி...சைவச் சாப்பாட்டு விலையில அசைவச் சாப்பாடு கிடைக்க இருந்தது. கெடுத்துட்டயே"ன்னு சொன்னான். :-)

என்னது...எனக்குப் புழுவப் பாத்ததும் கொமட்டுச்சான்னு கேக்குறீங்களா? இல்லீங்க. எடுத்து வெச்சிட்டு சாப்பிட்டிருப்பேன். ஆனா அங்க சாப்பிடப் பிடிக்கலை. அதுனால புழுவைக் காமிச்சி வெளிய வந்தாச்சு. :-)))))

said...

சிவா அண்ணா. அடியேனும் உங்கள் வகை தான். ஆனால் என்ன இன்னும் வீட்டில் சமைத்துச் சாப்பிடவில்லை. வீட்டில் சமைக்கவேண்டும் என்ற எண்ணமும் இல்லை. எங்காவது வெளியில் சென்றிருக்கும் போது சாம்பிள் சாப்பிட்டதுண்டு. பார்ட்டியில் சிறு துண்டைச் சாப்பிட்டுப் பார்த்ததுண்டு. :-)

இராகவன். இப்படிப் பண்ணீட்டீங்களே. பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காதுன்னு சொல்லுவாங்க. இது தான் சாக்குன்னு இப்படி சாப்பிட்டத்துக்கு காசு குடுக்காம வந்துட்டீங்களே? :-)

said...

//என்னது...எனக்குப் புழுவப் பாத்ததும் கொமட்டுச்சான்னு கேக்குறீங்களா? இல்லீங்க. எடுத்து வெச்சிட்டு சாப்பிட்டிருப்பேன். ஆனா அங்க சாப்பிடப் பிடிக்கலை. அதுனால புழுவைக் காமிச்சி வெளிய வந்தாச்சு. :-))))) //

பொழச்சிபிங்க ராகவன்..... தூர கிழக்கு நாடுகளுக்கு போனால் உங்களுக்கு சாப்பாட்டிற்கு ப்ரச்னையில்லை நண்பர்கள் கிடைக்கவும் ப்ரச்னை இல்லை.

சீனர்கள் அவர்கள் சாப்பிடும் சாப்பாட்டை மிகவும் மதிக்கிறார்கள். அவர்களின் சாப்பட்டை பார்த்து முகம் சுளிக்கும் சில இந்தியர்களால் துணுக்கிறார்கள்

ஆன்மிகத்திலும் சாப்பாடு விஷய்த்திலும் முதிர்ச்சி அடைந்தவர் நீங்கள் வயதில் இளையவராயிருந்தாலும்

said...

குமரன், நீங்களுமா....நீங்க கூட புனித பிம்பமில்லையா? :)

இந்த பதிவிற்கு முதல் இரு பின்னூட்டங்கள் இரு இளம் ஆன்மிக வாதிகளிடமிருந்து.

பேஷ்..பேஷ் சாப்பாடு பிரமாதம்

said...

இப்போதான் சாப்பிட்டு வரேன். என்னாது மாட்டுக்கறியா? அதெல்லாம் சாப்பிடறது இல்லைங்க. இதெல்லாம் பண்ணிப்பாக்கலாமுன்னா யாரு சாப்பிடறது? :(

ஜிரா, இதான் ஐடியான்னு இனிமே போற இடத்துக்கெல்லாம் கையில ரெண்டு புழுவோட போயிடாதீங்க. :)

கும்ஸ், சாப்பிடலான்னு முடிவு பண்ணியாச்சு. அப்புறம் என்ன சின்ன துண்டு? போட்டுத் தாக்க வேண்டியதுதானே.

நான் நான்வெஜ் சாப்பிட்டுக் கொண்டிருந்த சமயத்துல இங்க பில்லி சீஸ் ஸ்டேக் (Philly Cheese Steak) அப்படின்னு ஒண்ணு குடுப்பாங்க. நல்லாவே இருக்கும்.

ஆனா இந்த மாட்டுக்கறி உடம்புக்கு நல்லது இல்லைன்னு சொல்லறாங்களே. அது என்ன மேட்டர்? ஒரு வேளை இதை எல்லாம் பார்த்து தாங்க முடியாத வந்தேறிகளின் கட்டுக்கதைகளில் அதுவும் ஒண்ணா?

(உங்க நட்சத்திர வாரம் ஒரு (விவ)காரமில்லாம போனா எப்படி? அதான் ஒரு சின்ன வெடி கொளுத்திப் போடலாமேன்னு. நாராயணா, நாராயணா!) ;)

said...

//
நான் சாப்பிடும் மாட்டை பார் அதுக்கு திமில் கிடையாது ஆகையால் அதை சாப்பிடலாம்.
//

தலைவா, லாஜிக் கலக்கலா இருக்கே...

ஒரு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி இந்த ரகசியத்தை எனக்குச் சொல்லிருந்தீங்கன்னா...இந்த ஊருல குறைந்தபட்சம் 10-15 மாட்டையாவது அடித்து காலி பண்ணிருப்பேனே...!! சாப்பிட்டுக் கொண்டிருந்த போது Favorite- Fillet தான்..! இப்ப விட்டாச்சு...கொஞ்ச மனசு கஷ்டமாத்தான் இருந்துச்சு, என்ன சாப்பிடாம ஏன் டா வுட்டன்னு கேக்குற மாதிரி ஒவ்வொறு தடவையும் பீலிங் வரும்...இப்பல்லா அது வர்ரதில்ல..

பரவா இல்ல, மாட்டையும் மனுசனையும் தான் விட்டு வெச்சிருக்கேன்...அதுலயும் "சாதி" பார்த்து discrimination காட்டவேண்டாம்ன்னு நெனச்சிக்கிறேன்.

நமக்கு ஒலகத்துல எத்தனையோ ஜீவராசிகள் இருக்கு சாப்பிடுறதுக்கு...

"I love animals"

"They are tasty"

said...

//ஜிரா, இதான் ஐடியான்னு இனிமே போற இடத்துக்கெல்லாம் கையில ரெண்டு புழுவோட போயிடாதீங்க. :)
//
இந்த மாதிரி ஐடியா எல்லாம் தந்து புல் மீல்ஸை ப்ரீயாவே சாப்பிடுவீங்க போலிருக்கு

ஐயா இலவசம்ன்னா எல்லாமே இலவசமா

said...

அதென்ன பில்லி சீஸ் ஸ்டேக், அடுத்து அதுதான்

said...

//ஆனா இந்த மாட்டுக்கறி உடம்புக்கு நல்லது இல்லைன்னு சொல்லறாங்களே. அது என்ன மேட்டர்? ஒரு வேளை இதை எல்லாம் பார்த்து தாங்க முடியாத வந்தேறிகளின் கட்டுக்கதைகளில் அதுவும் ஒண்ணா? //

ஓ அப்படி ஒரு விஷயமிருக்கா... அதனால்தான் இந்தியாவில் மாட்டுகறி சீப்பா

said...

//ஆனா இந்த மாட்டுக்கறி உடம்புக்கு நல்லது இல்லைன்னு சொல்லறாங்களே. அது என்ன மேட்டர்? ஒரு வேளை இதை எல்லாம் பார்த்து தாங்க முடியாத வந்தேறிகளின் கட்டுக்கதைகளில் அதுவும் ஒண்ணா? //

ஓ அப்படி ஒரு விஷயமிருக்கா... அதனால்தான் இந்தியாவில் மாட்டுகறி சீப்பா

said...

//"I love animals"

"They are tasty"
//

என்ன சாமி கொஞ்சநாளைக்கு முன்னாடி ஐ லவ் பீமேல் இஸ்ரேலி சோல்ஜர் அப்படின்னீங்க இப்போ அவிங்க அனிமல் ஆயிட்டாங்களா...)))

said...

////
நான் சாப்பிடும் மாட்டை பார் அதுக்கு திமில் கிடையாது ஆகையால் அதை சாப்பிடலாம்.
//

தலைவா, லாஜிக் கலக்கலா இருக்கே...//


இந்த மாதிரி நிறைய லாஜிக்குகள் இருக்கு.

வெள்ளிகிழமை அசைவம் கூடாது என்பார்கள். இந்த சாத்திரபடி காலை 6 மணிமுதல் மாலை 6 மணி வரைதான் நாள். ஆகையால் வெள்ளி நாளில் சாப்பிட கூடாது இரவில் சாப்பிடலாம்னு ஒரு லாஜிக்

said...

ராகவன், கொத்தானார் ஐடியாவே பார்த்து ஓவ்வொரு வாட்டியும் புழுவே கொண்டு போகதீங்க. வண்டு,பூரான், கரப்பான் பூச்சி இந்த மாதிரி ஐய்ட்ட்ங்களயும் கையிலெ வச்சிகிருங்க அப்பதான் இலவசம் எங்கும் தொடரும்

said...

மிகக்குறைந்த நேரத்தில் பின்னூட்டம் பதிவுக்கு வந்துவிட்டேன்.
:-))

said...

வாங்க குமார், சிங்கபூர்லே மாடெல்லாம் எப்படி

said...

இத்தனை நாள் T-Bone கோமாதாவின் எந்த பாகத்தில் இருந்து வந்தது என தெரியாமல் விழுங்கியிருக்கிறேன். படம் போட்டு விரிவாக விளக்கியதற்கு நன்றி :-)

said...

அருண், தெரிஞ்சிருச்சா. இப்ப ஒண்ணோண்ணா ட்ரை பண்ணுங்க. பின்னூட்டமிடுங்க

said...

போட்டுட்டிங்களே1 நீங்க சொல்றது இங்கே வின்டாலோன்னு குளிர்க்கடைகளில் கிடைக்கிறதே அதுவா?

நான் நம்மவூர் சமையல் முறைப்படி சாப்பிட்டிருக்கிறேன். நன்றாகத்தான் இருக்கிறது. சற்று முற்றிய ஆட்டுக்கறிபோல் இருக்கும். கூடவே ஒரு விஷேச நல்ல மணம் இருக்கும்.

said...

யப்பா எம்புட்டு விளக்கம் கொடுத்தாலும் நமக்கு இது வேணாம். அந்த வாசனையே ஒத்துக் மாட்டேங்குது. ஹைத்தியில் இருக்கும் போது என்ன சுத்தி எல்லா பயலும் இத தான் தின்பானுங்க. நான் ஒருத்தன் தான் கோழி கடிச்சிக்கிட்டு இருப்பேன். :)

said...

// இராகவன். இப்படிப் பண்ணீட்டீங்களே. பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காதுன்னு சொல்லுவாங்க. இது தான் சாக்குன்னு இப்படி சாப்பிட்டத்துக்கு காசு குடுக்காம வந்துட்டீங்களே? :-) //

என்ன சொல்றீங்க குமரன். பொய் சொன்னேனா? நானா? எப்ப? எங்க?

சரி. நாந்தான் காசு குடுக்கலை. அந்த ஓட்டல்காரன் பக்கத்தலயேதான நின்னான். கேக்க வேண்டியதுதானே? ;-)

// பொழச்சிபிங்க ராகவன்..... தூர கிழக்கு நாடுகளுக்கு போனால் உங்களுக்கு சாப்பாட்டிற்கு ப்ரச்னையில்லை நண்பர்கள் கிடைக்கவும் ப்ரச்னை இல்லை.

சீனர்கள் அவர்கள் சாப்பிடும் சாப்பாட்டை மிகவும் மதிக்கிறார்கள். அவர்களின் சாப்பட்டை பார்த்து முகம் சுளிக்கும் சில இந்தியர்களால் துணுக்கிறார்கள் //

சிவா, ஓ இதுவும் இப்படியா!

// ஜிரா, இதான் ஐடியான்னு இனிமே போற இடத்துக்கெல்லாம் கையில ரெண்டு புழுவோட போயிடாதீங்க. :) //

கொத்ஸ்....இதெல்லாம் நல்லால்ல சொல்லீட்டேன். அடுத்த வாட்டி சாம்பாருக்குள்ள கோழி கெடக்குதுன்னு வம்பு செஞ்சிருவோம்.

said...

நாகை சிவா,

மேலே பாருங்க அவர் நல்ல மணம் என்கிறார்.

நானும் சாப்பிடவதில்லை இந்த வயதில் இன்னொரு புது பழக்கம் எதுக்கு அப்பிடின்னுதான். அதனால் ஒரேடியாக ஒதுக்குவதுமில்லை

said...

ஓகை சார், எங்கேருக்கு அந்த கடை. என் கண்களில் மாட்டேவே இல்லை

said...

இராகவன், குமரனுமு ஓசியிலே கிடைச்சிடுத்து அப்பிடின்னு பொறாமை

said...

சீனாவிற்கு ஆன் சைட் போறீங்களா

said...

கொத்ஸ், இதுகெல்லாம் கவலை படமாட்டார். கோழியை இலவசமா அவர் பையனுக்கு தந்துவிட்டு சாம்பாரை பாத்திக் கட்டிவிடுவார்

said...

//
என்ன சாமி கொஞ்சநாளைக்கு முன்னாடி ஐ லவ் பீமேல் இஸ்ரேலி சோல்ஜர் அப்படின்னீங்க இப்போ அவிங்க அனிமல் ஆயிட்டாங்களா...)))
//

I have a fetish for women in uniform என்று சொன்னேன். அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை.

இது சாப்பாடு, அது ................ (கோடிட்ட இடத்தை நிரப்பிக்கொள்க) ;D

said...

சிவா சார்,
தன்ஊன் பெருக்க பிறஊன் தான்உண்பார் எங்கனம் ஆளும் அருள்-னு ஒரு திருக்குறள் இருக்கு. நீங்க குண்டலினி பற்றி பதிவு போட்ருக்க வேண்டாங்கரது என் தாழ்மையான எண்ணம்.

இதுல மாட்டோட திமில் உதாரணம் வேற.நாம வணங்கரது கோமாதாதான். திமில், திமில் இல்லங்கரது கணக்கு இல்ல.

கனடா-ல இருக்குர மாடெல்லாம் மம்மி-ன்னு கூப்புடுதா என்ன?.
என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.

said...

குண்டலினிக்கும் அசைவ உணவிற்கும் என்ன தொடர்பு? அசைவ உணவு உண்டால் குண்டலினி யோகம் பலிக்காதா???????

said...

முரளி, என்னுடைய வீட்டில் இருக்கும் 3 பேருக்கு 27 இண்ட்ரெஸ்ட் இருக்கு என போட்டிருந்தேன். ஒருவருக்கு தன் உடல் பெருக்க பிட்னஸ் ட்ரெய்னரின் அறிவுரை படி பீப். வேண்டாம் நீ யோகா மட்டும் கற்றுகொள் என நிர்பந்த படுத்த முடியவில்லை

இன்னொருவருக்கு ஆன்மிகம் விஜிடேரியனிசம் என நாட்டம்.

நடுவில் இருக்கும் நான் இரண்டிலும் நாட்டம் உள்ளவன்

said...

குமரன்,

குண்டலினி யோகத்தை கற்றுக் கொடுக்கும் குருவை பொறுத்தது. ஆனால் எல்லா குருக்களும்
தொடக்கநிலையில் குண்டலினியை கற்றுக் கொள்பவர்களுக்கு அசைவ உணவை தவிர்க்குமாறு கேட்டுகொள்கிறார்கள்

அசைவு உணவு குண்டலினி எழுச்சியை மட்டுபடுத்துகிறது/தாமதப்படுத்துகிறது.
ஆனால் எல்லா நிலைகளையும் கடந்த ஞானிகளுக்கு உணவு ஒரு பொருட்டாகாது.

said...

சிவா,

விண்டாலோ என்பதை கிருத்துவர்கள் குளிர்பதனக் கடைகளிலிருந்து வாங்கிச் செல்வதைக் கண்டிருக்கிறேன். நீங்கள் படத்தில் காட்டியது போல இருக்கும்.

நம்மவூர் சமையல் முறைப்படி மாட்டிறைச்சி என் கிருத்துவ நண்பர் வீட்டில் சாப்பிட்டிருக்கிறேன்.

இங்கே சென்னை fast food கடைகளில்
ச்சில்லி பீஃப் (chilli beef) கிடைக்கும். அதுவும் நன்றாகத்தான் இருக்கிறது.

said...

குண்டலினிக்கும் அசைவ உணவிற்கும் என்ன தொடர்பு? அசைவ உணவு உண்டால் குண்டலினி யோகம் பலிக்காதா???????
குமரன் ஐயா, ஆறறிவு பெற்று,
அனைத்து ஆற்றலையும் தன் வசமாக்கி கொண்ட மனித சமுதாயத்திற்கு முன்,பிற உயிர்கள் தூசிதான்.

ஆற்றல் படைத்திருந்தாலும்,ஒரு
தூசிக்கு கூட தீங்கு செய்யாமல் இருப்பதுதான் கருனையின் உச்சம்.அந்த
கருனைதான்,
"எல்லா உயிரும் இன்புற்று இருப்பதல்லால் வேறொன்றும் அறியேன் பராபரமே" என்றும்

"வாடிய பயிர்களை கண்ட போதெல்லாம்
வாடினேன்" என்றும், தவ யோகிகளால்
வெளிப்படுத்தப் பட்டுள்ளது.

அத்தகைய கருனை உள்ளம் யோகம் பயில்பவர்களுக்கு அடிப்படை தகுதியாகிறது.
என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.

said...

கருணை உள்ளம் என்பது எல்லாவற்றிற்கும் அடிப்படை அல்லவா? யோகத்திற்கு மட்டுமா? அசைவ உணவு உண்டவர்களில் சிறந்த யோகியர்கள் எத்தனையோ பேர் இருந்திருக்கிறார்களே.

என்னுடைய நிலை

ஜீவகாருண்யம் என்பது மிக முக்கியமானது தான்.

கொல்லான் புலாலை மறுத்தானை கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்

என்னும் பொய்யாமொழியை அறிந்தவனே. ஆனால் அதே நேரத்தில் யோகத்திற்கும் அசைவ உணவிற்கும் தொடர்பு இல்லை என்பதே என் துணிபு.

said...

முரளி. நான் சைவ உணவைப்பற்றியும் ஜீவகாருண்யத்தைப் பற்றியும் கேள்விகள் கேட்கவில்லை. அவற்றிற்குத் தான் நீங்கள் பதில் சொல்லியிருக்கிறீர்கள். நான் கேட்ட கேள்விகள் - குண்டலினிக்கும் அசைவ உணவிற்கும் என்ன தொடர்பு? அசைவ உணவு உண்டால் குண்டலினி யோகம் பலிக்காதா???????

said...

குமரன் (Kumaran) has left a new comment on your post "மிக அசைவ சமையல் குறிப்பு":

சரி விடுங்கள் முரளி. உங்கள் கருத்து உங்களுக்கு. என் கருத்து எனக்கு. இல்லையா? :-)


I rejected this comment accidently

said...

சுவையான பதிவு. கொஞ்சம் தாமதமாகத்தான் ருசிக்க முடிந்திருக்கிறது : )

said...

இதைத் தான் கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி தமிழில் "ஆட்டக் கடிச்சு மாட்டக் கடிச்சு கடைசில மனுசனயே கடிப்பாய்ங்க" என்று சொல்லி வைத்திருக்கிறார்கள்! :-)

அது சரி. திமில் இருந்தா என்ன இல்லாட்டி என்ன?. அந்தக் கருகரு கண்களைப் பாத்ததுக்கப்புறமும் எப்படித்தான் திங்க மனசு வருதோ தெரிலை. அதுலயும் கன்னுக்குட்டி துள்ளிக் குதித்து ஓடித் தாவி செய்யும் சேட்டைகளை ஒரு நிமிடம் மனக்கண்ணில் கொண்டுவந்து விட்டால்?

நமக்கு செத்தாலும் அதைத் திங்கறதுக்கு மனசு வராது சாமி. கோரைப்பல் இல்லாம பொறந்துருக்கணும் போல (மனுசனுக்கு மேல் வரிசைல ரெண்டு கோரைப் பற்கள் இருக்கறதே மாமிசத்தைக் கடிச்சு இழுத்துத் தின்னத்தான் என்று எங்கோ படிச்சேன்!).

ரிப்ளக்ஸை சோதிக்கும் உத்திகளில் ஒன்று கொசு அடிப்பது. நொடி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் கடித்துக்கொண்டிருக்கும் கொசுவை அடித்துச் சட்னியாக்கி்யதும் உண்டு (இளைஞனாக சிறுவனாக இருக்கையில்). இப்போதெல்லாம் சுருக்கென்ற வலியைப் பொறுத்துக்கொண்டு மெதுவாக அதை உற்றுப் பார்த்து 'ப்பூ' என்று ஊதி விரட்ட முடிகிறது.

காலமும் வயதும் ஆக சிந்தனைகளும் எண்ணங்களும் நம்பிக்கைகளும் மாறுகின்றன என்பதை இப்போதே உணர்ந்து கொள்ள முடிகிறது.

என்னவோ தோணிற்று - குறிப்பிட்டேன். பதிவுக்குத் தொடர்பில்லை என்றால் நீக்கி விடவும்.

நன்றி.

said...

நல்லா எழுதியிருக்கீங்க ..நான் ரெஸ்டாண்டில சாப்பிடுவது தான் ..உங்க ரிசிபி பாத்தா பண்ணலாம் தான்னு தோணுது..

உங்க வெள்ளிக் கிழமை லாஜிக் சரிதான்..நம்ம லாஜிக்கு டைம் சோன்னயும் சேத்துக்கிடுவேன் ..இந்தியா நேரம் ..அமெரிக்க நேரம்ன்னு ..

வாழ்க வளமுடன் (மாட்டுக்கு உங்களுக்கு அல்ல)

said...

அசைவ சமையல் வகைகள், அசைவ போரியல் வகைகள், அசைவ குழம்பு வகைகள், போன்ற பலவகையான அசைவ உணவு வகைகளை பற்றி விரிவாக தெரிந்து கொள்ள பார்வையிடுங்கள். http://www.valaitamil.com/recipes_non-vegetarians