1. வாழ்க்கை ஒரு சவால் அதை எதிர்கொள்
வாழ்க்கை ஒரு கனவு அதை நனவாக்கு
வாழ்க்கை ஒரு விளையாட்டு அதை விளையாடு
அன்பே வாழ்க்கை அதை அனுபவி
2. மானுட சேவையே உயர்ந்த தெய்வ சேவை. இதற்கு முன் ப்ரார்த்தனைகளும், வேத அறிவுகளும் ஒன்றும் இல்லை
3. மற்றவர்கள் உன்னை போற்ற வேண்டுமென்றால் முதலில் அவர்களை நீ போற்று.
4. இறந்த காலத்தை மற. நிகழ்காலத்தில் வாழ்
5. கடவுள் தூரத்தில் இல்லை உன்னுள் உள்ளவன் தான் கடவுள்
6. உண்மைக்கு பயமில்லை. பொய் தன் நிழலைக் கண்டும் பயப்படும்
7. பணம் வரும் போகும். குணம் வரும் வளரும்
8.உபநிடதங்களின் காலம் இந்த மண்ணின் (இந்தியாவின்) பொற்காலம் . அங்கே இருந்த ஏக்கம், தேடல் எல்லாம் தனனைப் பற்றி அறிவதற்கே இருந்தது. பணம் ,வெற்றி, பதவி, அதிகாரம் என்பவை துச்சமாக மதிக்கப் பட்டன. இவைகளை தேடுபவர்களை பைத்தியகாரர்களாக தான் அன்றைய உலகம் பார்த்தது. ஒவ்வொருவடைய முழு மூச்சும் இந்த பிரபஞ்சத்தின் இரகசியத்தை தேடுவதில் இருந்தது. அந்த இரகசியம் என்பது "அஹம் ப்ரம்மாஸ்மி" அதாவது "நான் கடவுள்" என்பதே
9 அலைகளை போல் தனிமனிதனாகவும் ஆழ்கடலை போல் தெய்வாமாகவும் நாம் இரு தளங்களில் இருக்கிறோம்
10 அன்பு செலுத்தும் போது பயங்கள் விலகுகின்றன. பயமாய் இருக்கும் போது அன்பு விலகுகிறது
11. நீ தான் கடவுள். நீ மட்டும் கடவுள் அல்ல எல்லாரும் கடவுள்
12. உனக்கு தேவையானதெல்லாம் அமைதியும் இருத்தலை கவனித்தல் மட்டுமே. மதங்கள், கடவுள், இறைதூதர்கள், இயக்கங்கள் தேவையற்றவை
13. வாழ்க்கை ஒரு tragedy அல்ல அது ஒரு comedy. வாழ்வதற்கு தேவை நகைச்சுவை உணர்வு
14. சுவனம் எவ்வளவு தூரத்தில் உள்ளது?.
கண்ணை திற.
நீ இருப்பது சுவனத்தில் தான்
15. வாழ்க்கை என்பது விளையாடும் பந்து போன்றது.
அந்த பந்தை சும்மா கையில் வைத்திருக்காதே விளையாடு.
16. நீ தெய்வீகமானவன் நானும் தான்
Monday, October 09, 2006
Subscribe to:
Post Comments (Atom)
23 comments:
சிவா,
நல்லதொரு தொகுப்பை வழங்கியிருக்கிறீர்கள். மிக்க நன்றி.
/* வாழ்க்கை ஒரு சவால் அதை எதிர்கொள்
வாழ்க்கை ஒரு கனவு அதை நனவாக்கு
வாழ்க்கை ஒரு விளையாட்டு அதை விளையாடு
அன்பே வாழ்க்கை அதை அனுபவி
*/
உண்மை.
சிந்தனைத் துளிகளை அள்ளி வீசி இருக்கீங்க. நமக்கு பிடித்தது
வாழு, வாழ விடு
மிண்டும் ஒரு பரவசப்பட வைக்கும் பதிவு.
வாழ்வின் வழியைத் தெள்ளிட விளக்கியிருக்கிறீர்கள்..... பொன்மொழிகளின் மூலம்.
Money Comes and Goes;
Morality Comes and Grows.
Maanava Sevaa is Maadhava Sevaa.
Sairam.
பெரியவங்க சொன்னா கேட்டுக்க வேண்டியது தான்!
உண்மையைச் சொல்லணும்னா உங்கள் தலைப்புகள் கொஞ்சம் வித்தியாசமா இருக்கு. எப்பவும் தமிழ்மணத்துல பரவலா பார்க்கும் தலைப்பின் டைப் "இதுவும் இஸ்திரிபொட்டியும்", "அதுவும் ஆட்டோவும்" என்கிற ரேஞ்சிலேயே இருக்கும்...
//
"அஹம் ப்ரம்மாஸ்மி"
//
பிரம்மாஸ்மி யாரு ஷபானா ஆஸ்மி யோட அக்காவா?
Jokes apart, இந்த உப நிடத உண்மைகள் விளங்கிக் கொள்ளக் கூடிய தமிழ்மண பதிவர்கள் மிக மிக சொர்பமே என்பது என் எண்ணம்..
வெற்றி, நாகை சிவா, எஸ், கே, குமரன், சமுத்ரா, வஜ்ரா நன்றி.
குமரன் கரக்டா புடிச்சிட்டுங்களே
வஜ்ரா, சப்னா ஆஸ்மியைக் கண்டால் உங்களுக்கு ஒரு கிக்கா
தமிழ்மணத்தின் உபநிஷத்துகளை அறிந்தவர்கள் அதிகம் என்பதே என் எண்ணம். ஏனென்றால் வேதங்களையும் உபநிடங்களையும் குறை சொல்லவாவது படிப்பார்கள்.
//
வஜ்ரா, சப்னா ஆஸ்மியைக் கண்டால் உங்களுக்கு ஒரு கிக்கா
//
கண்டவுடன் ஒரு "கிக்" வேணா கொடுக்க ரெடி..:D
//
தமிழ்மணத்தின் உபநிஷத்துகளை அறிந்தவர்கள் அதிகம் என்பதே என் எண்ணம். ஏனென்றால் வேதங்களையும் உபநிடங்களையும் குறை சொல்லவாவது படிப்பார்கள்.
//
அதுவும் சரிதான். ஆனால் அதைக் கூடச் செய்கிறார்களா என்று பார்க்கவேண்டும்.
அப்படியாவது படித்தால் சரி தான்...
//
13. வாழ்க்கை ஒரு tragedy அல்ல அது ஒரு comedy. வாழ்வதற்கு தேவை நகைச்சுவை உணர்வு
//
இதுக்குத்தான் practical பின்னூட்டம் போட்டேன், தப்பாக நினைக்கவேண்டாம்.
//Jokes apart, இந்த உப நிடத உண்மைகள் விளங்கிக் கொள்ளக் கூடிய தமிழ்மண பதிவர்கள் மிக மிக சொர்பமே என்பது என் எண்ணம்..//
அந்த சொற்ப பதிவர்களில் நானும் ஒருவனாக்கும்:))
அகம் பிரம்மஸ்வாமி(நானே கடவுள்)
என் பதிவின் தலைப்பு "உலகின் புதிய கடவுள்"
இப்ப ஒத்துகறீங்களா?எல்லாரும் தேடும் ரகசியத்தை முன்பே உணர்ந்தவன் நான் என்று?:)))
சிவா,
நீங்கதான் இந்த வார நட்சத்திரமா? நேத்து கவனிக்காம விட்டுட்டேன்.
இந்த பொன்மொழித் தொகுப்பு அருமையா இருக்கு.
நட்சத்திரத்துக்கு வாழ்த்து(க்)கள்.
ஜமாய் ராஜா ஜமாய்:-)
ஹை ஹோப்ஸ் சிவா. படித்து விட்டு வாதம் செய்ய வருகிறார்கள் என்றா எண்ணுகிறீர்கள்? எதிர்ப்புகளின் தளத்தையும் தரத்தையும் கண்டால் எனக்கு அப்படித் தெரியவில்லை. உபநிடதமோ, வேதமோ, சைவ சித்தாந்தமோ, எதையும் சுயதேடலுடன் படித்து விட்டு அதிலுள்ளவற்றை நேர்மையான அணுகுமுறையில் வாதிக்கும் பதிவுகளை நான் இனிமேல்தான் பார்க்க வேண்டும். மட்டையடி வசவுகளும், சுய சிந்தனை நீங்கிய மறுவாந்திப் பதிவுகளுமே கொட்டிக்கிடப்பதாய் உணர்கிறேன்.
நல்ல பொன்மொழிகள் சிவா. நல்லா தொகுத்து இருக்கிங்க.
நன்றி துளசி மேடம்
செல்வன்,
நீங்கள் ஈடு இணையற்றவர் என்பது தெரியும். எல்லாம் அறிந்தவர் என்றும் தெரியும் அதனால் தானே நீங்கள் என் நண்பர்.
வஜ்ரா, வாழ்க்கையில் யாரையும் தப்பாக நினைத்ததே கிடையாது. மனதுக்கு பட்டதை சொல்லுங்கள்
சதானந்தன், நன்றி.
அருணகிரி, இங்கே நடப்பது கட் அண்ட் பேஸ்ட் தான்.
Instruction Manual படிப்பதை போல் உபநிடதங்களையும் வேதங்களையும் படிக்க முடியமா?
அட்லீஸ்ட் தேடுகிறார்கள் இணையத்தில் அதுவே முதல் படி.
மாட்ரிக்ஸ் கடைசி படத்தின் கடைசி காட்சியில் வில்லன் ஏஜெண்ட் ஸ்மித் தன்னையும் அறியாமல் "Everything that has a beginning has an end" தன்னையும் அறியமால் சொல்வான்.
அதே போல் உபனிடதங்களை படிக்கும் ஆயிரத்தில் ஒருவர் ஒரு நாள் உய்யக் கூடும்
Dear Siva,
நட்சத்திரத்துக்கு வாழ்த்து(க்)கள்.
Best wishes for a Smashing week :)
சிவா,
மகாவாக்கியங்களில் பிரத்யேகமான "அகம் ப்ரம்மாஸ்மி" எனும் நீயே கடவுள் என்பதை வார்த்தையளவில் அர்த்தம் அறிந்துகொள்வது சாதாரணம்.
ஆனால் நம்மில் உறைந்திருக்கும் அந்த இறைத்தன்மையை எந்த அளவுக்கு வெளிப்படுத்தி நடக்கிறோம் என்பது தான் ப்ராக்டிக்கலாக சமூகத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.
இந்த சாதாரண உண்மையை பின்பற்றி நடந்தால் சதா ரணம் என்ற சூழலும் மாறும்.
அன்புடன்,
ஹரிஹரன்
//வாழ்க்கை ஒரு கனவு அதை நனவாக்கு//
இதற்க்காக தானே இத்தனை போராட்டம்?
பாலா, மிக்க நன்றி. பல வெரைட்டிகள் தர முடிவெடுத்துள்ளேன். என்னுடைய பதிவுகள் பெரும்பாலும் என் அனுபவங்கள் அல்லது என்னை சுற்றியே இருக்கும்
ஹரிஹரன்,
உங்கள் முதிர்ச்சி என்னை வியக்க வைக்கிறது.
நன்றி
Post a Comment