Wednesday, October 11, 2006
காந்தீயம் ...
ஒரு உச்சி காலை நேரம். அமைதியாக இருந்தது. நான் மாகாத்மா காந்தியின் சிலையின் அடியில் ஒரு பெஞ்சில் அமர்ந்திருந்தேன். காந்தியடிகளிடம் உண்மையான காந்தியடிகள் எங்கே என கேட்கலாம் என நினைத்தேன். நான் கேட்க முற்படுதற்கு முன் காந்தி சிலை " இந்த முட்டாள்கள் என்னை இங்கே நிறுத்திவிட்டார்கள். அங்கே ரணா ப்ரதாபிற்கு ஒரு குதிரை, சிவாஜிக்கு ஒரு குதிரை ராணி லக்ஷ்மிபாய்க்கு ஒரு குதிரை இருக்கிறது நான் மட்டும் நிற்க வேண்டியிருக்கிறது" என முணுமுணுத்தது.
எனக்கு ஒரே ஆச்சரியம் காந்திக்கும் கோபம் வருமா என அவருக்கு அருகில் ஓடினேன். காந்தி மிக கோபமாகவும் அவர் சீடர்களை சபித்துக் கொண்டும் இருந்தார். " எங்கே அந்த கபடர்கள் எனக்கும் உட்கார ஒரு குதிரை வேண்டும்" என்றார். நான் அவரை ஆசுவாசப் ப்டுத்தி தோட்டத்தில் உள்ளே ஒரு மரத்தின் நிழலுக்கு அழைத்து சென்றேன். அங்கே போனதும் அவர் "I asked you for a horse mister, not an ass." என்று பீட்டர் விட்டார். ஆக்ஸ்போர்டு பட்டதாரி அல்லவா "நான் கேட்டது குதிரையை கழுதையை அல்ல நண்பரே"
அதற்கப்புறம் காந்தி எங்கே போனார் என தெரியவில்லை. என் பகல் தூக்கம் முழுவதும் களைந்திருந்தது ஆனால் இந்த நினைவுகள் இரவு முழுவதும் நிறைந்திருந்தன.
கழுதைகளை குற்றம் கூறி பிரயோசனமில்லை . மஹாத்மாக்கள் சுற்றி கழுதைகளின் கூட்டம் கூடும். ம்ஹாத்மாக்கள் முதல் ரேங்க் வாங்குபவர்கள. ஒரு மஹாத்மா இன்னொரு மஹாத்மாவின் காலடியில் அமர்வதில்லை. மாஹாவீராகட்டும் புத்தராகட்ட்டும் கிருஷ்ணராகட்டும் காந்தியாகட்டும் இவர்கள் யாரையும் பின் பற்றவில்லை. இவர்களுக்கென்று தனி பாதையை வகுத்து அதில் பயணம் செய்வார்கள். சொந்த காலில் நிற்க மனவலிமையும் அறிவும் இல்லாதவார்கள் தான் பின்பற்றுபவர்கள்.
காந்திக்கு பின்னால் இருந்தவர்கள் காந்தியின் பிம்பத்தை பிரதிபலித்தார்கள். ஆனால் இப்போது இருப்பவர்களோ மூன்றாம் தர நான்காம் தர அரசியல்வாதிகள்
நாம் எப்போது விமர்சிக்கிறோம். நாம் நல்லது என கற்பனை செய்தது நம் இஷ்டத்திற்கு இல்லாத போது விமர்சனங்கள் வருகின்றன.
கற்களையும் கண்ணாடி துண்டுகளையும் வைரம் என வாங்கி பிறகு அவை வெறும் கற்கள் என மன்ம் நோகும் போது யாரை குறை கூறவேண்டும் அந்த கற்களையா அல்லது அந்த ஏமாளியையா?. அந்த ஏமாளி தனது மூளையை உபயோகித்திருக்க வேண்டும்..
இந்த மாதிரிதான் இந்த காந்தீயவாதிகளும் காந்தி என்ற ஒளி இருந்தவரை இந்த கண்ணாடிகற்கள் ஓளிந்தன. அது மறைந்தவுடன் அவை உடைந்த கண்ணாடி சில்லுகள் ஆகிவிட்டன. அவை இருக்க வேண்டிய இடம் குப்பை ஆனால் அவர்களுக்கு நாம் சிம்மாசனமல்லவா கொடுத்திருக்கிறோம்.
உண்மையான விடுதலை வேண்டுமென்றால் எல்லா இசம்களும் கொளகைகளையும் உடைத்தெறிய வேண்டும். காந்தியவாதிகளை சிம்மாசனத்தில் அமர்த்தி தவறு செய்தோம். மார்க்ஸீய வாதிகளை தேர்ந்தெடுத்தால் அது மற்றுமொறு மிக தவறு. ஒரு இசத்திலிரிந்து இன்னொரு இசத்திற்கு தாவும் குரங்குகளாக திரிகிறோம்
நாம் தேர்ந்தெடுக்கும் தலைவர் ஒரு மனிதரின் கொளகையிலோ ஒரு இயக்கத்திலோ தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாதவராக இருக்கவேண்டும். தன்னுடைய சுயப்புத்தியை உபயோகித்து மக்களின் அன்றாட ப்ரச்னைகளை மன உறுதியோடு அதன் வேரிலிருந்து களைபவராக இருக்கவேண்டும்.
ஒரு கொளகையை பின்பற்றுபவர்களுக்கு அந்த தனமை கிடையாது. அவருக்கு ப்ரச்னைகள் எழுப்பபடும் முன்னரே தீர்க்கப்பட்டு விட்டன. மஹாத்மாக்கள் எழுதிய புத்தகங்களில் எல்லா ப்ரச்னைகளுக்கும் தீர்வு தந்தாகி விட்டது.
இந்த மாதிரி தீர்வுகளை தந்த புத்தகங்கள் குப்பைகள் மேலும் மனித குலத்திற்கு அதிக தீங்குகளை விளைவிப்பவை. காந்தியடிகளின் அணுகுமுறை அந்த காலத்தில் அந்த ப்ரச்னைகளுக்கு ஒரு நல்ல தீர்வாக இருந்திருக்கலாம். தற்போது ப்ரச்னைகள் வேறு. காலம் மாறி விட்டது. ஆனால் காந்தியவாதிகள் ப்ரச்னைகளை தீர்க்க அதே முறையை கையில் எடுத்துக் கொள்கின்றனர். வாழ்க்கை முன்னோக்கி செல்ல இந்த காந்தியவாதிகள் இதை பின்னோக்கி இழுக்கிறார்கள்.
வினோபாவை அரசாங்க சந்நியாசி என்கிறார்கள் ஒரு சந்நியாசி அரசாங்கத்தில் ஆளாக இருக்க முடியுமா? இது விபசார-மனைவி என்பது போலல்லவா இருக்கிறது.
ஒரு சந்தியாசி என்பவன் ஒரு புரட்சிக்காரன் (நமது புரட்சி தலைவர், தலைவி, கலைஞர் இவர்களுடன் குழப்பிக்கொள்ள வேண்டாம்) . வினோபா யாரை எதிர்த்து புரட்சி செய்வார். காந்தி அரசாங்க அனுமதியுடன் ஒத்துழையாமை நடத்தினார். வினோபா அரசாங்க அனுமதியுடன் புரட்சி செய்கிறார். விந்தையுலும் விந்தை.
இந்த மஹாத்மாக்கள் சாதரணரால் பின்பற்ற முடியாத கடுமையான தத்துவங்களை சொல்லுவார்கள். இவைகளை கேட்க மிக அருமையாக இருக்கும் ஆனால் பின்பற்ற மிக கடினம். இதை பின்பற்றிய வெகு சிலர் மேலே செல்ல சாதரண மக்களின் வாழ்கை இன்னும் மோசமாகியது. சர்கஸில் கயிற்றில் நடப்பவனைப் பார்த்து கைத்தட்டி உற்சாகப் படுத்துகிறோம். நாம் எல்லாரும் அந்த கயிற்றில் நடக்க முயன்றால் நாம் போக போவது மருத்துவமனைதான்.
ஒரு மனிதன் தலை கீழாக நகரத்தில் நடந்தால் நாம் கைதட்டி உற்சாகப்படுத்துவோம் . நாம் கைத்தட்டாவிட்டால் அவன் ஏன் தலைகீழாக நடக்கிறான். இந்த மஹாத்மாக்கள் இந்த சர்கஸ்காரர்களை போல்தான். சாதரண மக்கள் செய்பவைகளை அவர் செய்யவில்லை. செய்ற்கரிய காரியங்களை செய்துவிட்டு மறைந்துவிடுகிறார்கள். இவர்களின் சீடர்களின் பாடு படுதிண்டாமாகிவிடுகிறது.
ஒரு வகையில் இந்த மஹாத்மாக்களும் தீவிரவாதிகளே. அஹிம்சை என்ற கொள்கையை விட்டு சென்றார். அவருடைய சீடர்களால் அஹிம்சையை கடைப் பிடிக்க முடிந்ததா?
இவ்வுலகில் உயிர் வாழ சிறிதளவு வன்முறை தேவை. சரி காந்தியின் அஹிம்சை கொளகையை எடுத்துக் கொள்வோம்
ஒருவன் மார்பில் கத்தியை வைத்து அடங்கு என்றால் அது வன்முறை
அதே நேரம் அவன் வீட்டு வாசலில் அமர்ந்து சாகும் வரை உண்ணாவிரதமிருந்து அடங்கு என்றால் அஹிம்சையா?
இதுவும் ஒரு வன்முறை அல்லவா. முந்தையது அவனை நோக்கி என்றால் பிந்தையது தன்னை நோக்கி அல்லவா. இந்த விஷயத்தில் உண்மையானவர் அம்பேத்கார். நான் என்னுடைய கொள்கையிலிருந்து மாறவில்லை. காந்திஜியின் உயிர் காக்க நான் ஒத்துக் கொள்கிறேன் என்றார். இங்கே மனங்கள் மாறினவா?
இவருடைய சத்தியாகிரகத்தால் கிடைத்த சுதந்திரம் அதற்கப்பால் நடந்த பிரிவினையை தடுத்ததா? அல்லது பிரிவினையில் நடந்த வன்முறைகளை தான் தடுத்ததா? ஒரு வில்லின் நாண் எவ்வளகெவ்வளவு அதிகம் பின்னோக்கி இழுக்கப்படுகிறதோ அம்பு அவ்வளக்கவ்வளவு முன்னோக்கி பாயும் அது போல் தான் சுதந்திரம் கிடைப்பதற்கு அடக்கி வைத்த வன்முறை பிரிவினையின் போது அதிக சீற்றம் கொண்டு பாய்ந்த்து.
யேசு ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு என்று அனபை போதித்தார். ஆனால் நடந்த முடிந்த உலகபோர்கள் கிருத்துவர்க்ளுக்குள் தானே. எத்தனை வன்முறை எத்தனை உயிரிழப்பு அப்பப்பா...
ஒரு கிருத்துவனை இன்னொருவன் கன்னத்தில் அறைந்தான். சிறிது நேரம் கழித்து அந்த கிருத்துவன் தன்னை அடித்தவனின் கழுத்தை முறித்துக் கொண்டிருந்தான். அவனிடம் "என்னப்பா நீ இன்னொரு கன்னத்தை அல்லவா காட்டியிருக்க வேண்டும்" என கேட்டதற்கு அவனும் " என்னிடம் இருந்த இரு கன்னங்களையும் உபயோகித்துவிட்டேன். இப்போது மூளையை உபயோகிக்கிறேன்" என்றான். இந்த நிலைமையில் தான் இன்றைய காந்திய்வாதிகள இருக்கிறார்கள். வேண்டிய் அளவிற்கு காந்தீய தத்துவங்களை பின் பற்றிவிட்டு மனதில் உள்ள விகாரங்களை வெளி கொணர்கிறார்கள். அதன் விளைவுகளை நாம் இப்போது காண்கிறோம்.
கன்பூஸியஸ் " நான் இருமுறை சிந்தித்தால் போதும். ஆகையால் நடுவழியை தேர்ந்தெடுக்கிறேன்" என்றார். வாழ்க்கையின் ஒரு எல்லையில் இருப்பவன் வன்முறையை தேர்ந்தெடுக்கும் தீவிரவாதி என்றால் மறு எல்லையில் இருப்பவன் அஹிம்சையை தேர்ந்தெடுக்கும் மஹாத்மா. இருவருக்கும் அவ்வளவு வித்தியாசமில்லை
காந்தி உடையை குறை. சாப்பட்டை குறை. ஏழ்மையை ஏற்றுக்கொள் என போதித்தார். அது இயற்கைக்கு முரணானது.
நன்றாக சாப்பிடு அது அலுக்கும் வரை. நன்றாக உடுத்து அது அலுக்கும் வரை எல்லையில்லா பணம் சம்பாதி அது அலுக்கும் வரை. இதுதான் நான் காட்டும் வழி. எதையுமே முழுமையாக செய்பவன் தான் நல்ல பண்பாளனாகவும் உருவாகிறான். எதையுமே மறுப்பவனின் மனம் இருகூறாகிறது. இயற்கை ஒன்றை செய் என சொல்ல கொளகை தடுக்க மனிதன் இருகூறாகிறான்.
காந்தி முரட்டு காதி அணிய சொன்னார். அவரின் சீடர்கள் மிக மெல்லிய காதியை அணிய ஆரம்பித்துவிட்டனர். காதி மெலிய மெலிய விலை ஏறுகிறது. இன்றைய நாளில் காதிதான் அதிக விலையில் விற்கிறது. மனிதன் மெல்லிய பட்டு போன்ற ஆடைகளை அணிய விரும்புகிறான் ஆனால் காந்தியோ அதை எதிர்க்கிறார்.
காந்தி குடிசையில் வாழ வேண்டுமென்றார். அவர் இறந்ததும் அவரது சீடர்கள் மாளிகைகளை நாடி சென்றனர். நான் பாபு இராஜேந்திர பிரசாத் அவர்களை சந்திக்க ராஷ்ட்ரபதி பவனுக்கு சென்றிருந்தேன். அவர் வைஸ்ராய் அமர்ந்த சிம்மாசனத்தில் பாய் போட்டு அமர்ந்திருந்தார். அந்த மாளிகையில் கோமணங்கள் காயப்போடபட்டிருந்தன. என்ன ஒரு பகல் வேஷம். ஆயிரம் வேலைக்காரார்கள் இருக்கும் இடத்தில் இது விநோதமாக பட்டது. குடிசையில் இருக்கவேண்டுமென்றால் குடிசையில் இருங்கள் மாளிகையில் இருக்க வேண்டுமென்றால் மாளிகையில் இருங்கள். குடிசை வாசி போல் மாளிகையில் ஏன் வாசிக்க வேண்டும்?. ஏன் இந்த இரட்டை வேடம்
இவர்கள் மக்களை எளிதாக வாழ் என போதித்து ஏழ்மையை நோக்கி அழைத்து சென்றார்கள். செழிப்பாக வாழ் என போதித்து வளமையை நோக்கி மக்களை அழைத்து செல்ல மறந்துவிட்டார்கள்.
பாவம் காந்தீயவாதிகள்....
------------------------------------------------------------------------------------
ஜூலை 19ந்தீ, 1969 பாம்பேயில் ஒஷோ பேசியது. இது புத்தகமாக பதிப்பிடவில்லை
-------------------------------------------------------------------------------------
இங்கே காந்தீயம் என்பதை எடுத்துவிட்டு வேறு எந்த ஈயத்தையும் ஊற்றுங்கள் சரியாக வரும். எல்லா இசங்களும் ஈயங்களும் காலத்திற்கு காலம் மாறிவிடுகின்றன. அதை பற்றி தொங்கிக் கொண்டிருக்கும் மனிதன் தான் ஆபத்தானவன் அதுவும் அவன் தலைமை பீடத்தில் இருந்தால்.
மாற்றம் மட்டும்தான் நிரந்தரம்
Subscribe to:
Post Comments (Atom)
29 comments:
ஓஷோயீயமும் இதில் அடக்கம்
அருமையான கட்டுரை.
கடைசி வரை இதை முழுவதும் நீங்கள் தான் எழுதினீர்கள் என்று நினைத்தேன்.
சமுத்ரா, நல்ல ஐடியா. இனிமேல் அதுமாதிரி செய்தால் அறிவுசீவி பட்டம் கிடைக்குமல்லவா
தலைவரே,
ஓஷோ என்னென்னமோ சொல்லிகிறாரு போங்க...
காந்தியோ, மார்க்ஸோ அவிங்க சொல்லிட்டு போயிட்டாய்ங்க...அத்த புடிச்சுத் தொங்குறவனுக்கு புத்தியில்ல ங்குறது தான் உண்மை. சுயபுத்தியுடன் சிந்திக்கவேணும்.
//
தன்னுடைய சுயப்புத்தியை உபயோகித்து மக்களின் அன்றாட ப்ரச்னைகளை மன உறுதியோடு அதன் வேரிலிருந்து களைபவராக இருக்கவேண்டும்.
//
சுய புத்தியில்லாதவங்கள்ளாம் பொதுபுத்திப் பத்தி பேசுறாங்க...என்னத்த பண்றது.?
சீனியர்,
நீங்க நட்சத்திரமா வந்தது தெரியாம போச்சே... மிஸ் பண்ணிட்டனே... வாழ்த்துக்கள்.
சிவா,
நல்ல பதிவு. ஓஷோவைப் படிக்கத் தூண்டுகிறது.
அற்புதமா எழுதியிருக்கீங்க அய்யா..
பார்பனீயம்,ஏகாதிபத்தீயம்.காந்தீயம் எல்லாத்தையும் புதைச்சுடலாம்..
ஒரு சந்தேகம்..
தந்தை பெரியாரீயம் ஈன்றெடுத்த திராவிடயீயத்துக்கும் இதே மாறி காரியம் பண்ணிடலாமா..
பாலா
//தந்தை பெரியாரீயம் ஈன்றெடுத்த திராவிடயீயத்துக்கும் இதே மாறி காரியம் பண்ணிடலாமா..//
பாலா, இந்த ஈயமும் இதில் அடக்கம். பெரியார் முறை அந்த காலத்தில் சரி.
கடவுள் இல்லை கடவுள் இல்லை என வலியுறுத்தினார். எத்தனை பேர் மாறினார்கள். அரசில் இருக்கும் அவருடைய சீடர்கள் கூட ரகசியமாக கோவிலுக்கு போகிறார்கள்.
பார்ப்பானை அடி என்றார். எத்தனை பார்ப்பனர்கள் அழிந்தார்கள் என சொல்லமுடியுமா?
சரி
பார்பணீயத்தைப் பார்ப்போம். என்னதான் சதி செய்து தனக்கு வேண்டியவனை வேலைக்கு வைத்தாலும் அதையும் மீறி முன்னேறியவர்கள் எத்தனை பேர். நான் சொல்வது 1947 லேயே.
அரசியல் பண்ணவும் மேடைகளில் அட்டகாசமாக பேசவும் இந்த ஈயங்கள் உதவலாம். ஆனால் வேலைக்கு ஆகாது
வைசா, உங்கள் பழமொழி சிந்திக்க வைக்கிறது
சுரேஷ், என் வலைப்பதிவின் முகப்பில் உள்ள சுட்டியை தட்டுங்கள்.
தமிழில் கவிஞர் புவியரசு என்பவர் நன்றாக மொழிபெயர்த்துள்ளார்.
ஓஷோவின் கீதை பற்றிய பொழிப்புறை வித்தியாசமானது.
பாலசந்தர், நன்றி
அருமையான கட்டுரை.அற்புதமான தனித்துவமான சிந்தனை. சமுத்ரா சொன்ன மாதிரி நீங்க எழுதினதுன்னு தான் கடைசி வரை நினைச்சுட்டு இருந்தேன்:))
கட்டுரையின் சில பகுதிகளில் மாறுபடுகிறேன்.ஆனால் அவர் சொல்ல வருவதை ஏற்றுகொள்கிறேன்.
செல்வன்,
இந்த அளவிற்கு எழுத எனக்கு திறமையிருந்திருந்தால் நான் மிக உயரத்தில் இருந்திருப்பேன்.
பேசிக்கலி ஐ ஆம் அன் எஞ்ஜீனியர்.
எழுதி வைத்த சூத்திரங்களின் படி வடிவமக்கவும் சரி செய்யவும் தெரியும்.
Siva,
//அருமையான கட்டுரை.
கடைசி வரை இதை முழுவதும் நீங்கள் தான் எழுதினீர்கள் என்று நினைத்தேன்.
//
Ditto ! Really excellent posting, Thanks, This inspires me to start reading OSHO.
சிவா,
போற போக்கப் பார்த்தா, எல்லாரையும் ஓஷோ சீடர்கள் ஆக்கிருவீங்க போல இருக்கே?
என்றென்றும் அன்புடன் பாலா,
சென்னையிருக்கும் நீங்கள் ஹிக்கின்பாதம்ஸ் போங்கள். இவருடைய தமிழ் புத்தகங்கள் கொள்ளை மலிவு விலையில் அடுக்கி வைத்திருக்கிறார்கள்
வஜ்ரா, ஒரு ப்ரான்சைஸ் எடுத்து ஒரு அங்கி மாட்டிக் கொண்டு கிளம்பிவிட வேண்டியதுதான்.
ஐடியாவிற்கு நன்றி ;)
சிவா அண்ணா. இதனை எற்கனவே நான் படித்திருந்ததால் ஓஷோ தான் எழுதியது என்று நாலைந்து பத்திகளிலேயே தெரிந்துவிட்டது. :-) ஓஷோவின் கீதைப் பேருரைகளைப் படித்ததில்லை; ஆனால் கண்ணனைப் பற்றி அவர் எழுதியிருப்பதை ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் படித்திருக்கிறேன். கண்ணனைப் பற்றிய ஒரு புது புரிதலையே அது தரும். அருமையான நூல் அது.
ஒஷோவின் இந்தக் கட்டுரை மிக அற்புதமாக வந்திருக்கிறது.
அவர் காந்தியிஸம் என்ற அளவில் சில தத்துவங்களை விமர்சித்திருக்கிறார்.
அன்பிலார் எல்லாம் தமக்குறியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு
திருவள்ளுவர் அன்பு குறித்து பலவாயிரம் வருடங்களுக்கு முன் சொன்னது. இதனை காந்தி திரும்ப சொன்னால் இதனை காந்தியிஸம் என்று சொல்லி விடக் கூடாது.
காந்தியிஸம் என்று ஓஷோ சொன்ன சில விஷயங்கள் அவர் இதனுடன் ஒப்பிட பயன்படுத்திய இஸங்களை விட எப்படி மாறுபடுகிறது என்றால் மற்ற இஸங்கள் அதிகமாக சமூக மாற்றங்களை, சமூகங்கள் குறித்த இஸம். ஆனால் காந்தியிஸம் என்று அவர் கூறியிருப்பது தனி மனித ஒழுக்கத்தை தனி மனித வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு அமைந்தது.
புத்தர் மஹாவீரரை காந்தி பின்பற்றவில்லை இவருக்காக தனிப் பாதை அமைத்துக் கொண்டார் என்று சொல்லி இருப்பதும் முழுக்க உண்மையில்லை. அவர் ஹரிச்சந்திரன் கதை கேட்டு உண்மை சொல்வதை வாழ்க்கையின் தத்துவமாக கொண்டிருந்தார் என்பது எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் பல நூல்கள் அவரை அஹிம்சை பாதையில் செல்ல உந்துதலாக இருந்தது என்பது உண்மை.
காந்தியம் என்பது ஒரு இஸம் அல்ல வாழ்வியல் தத்துவம். இந்தப் பதிவில் சொல்லி உள்ள காந்தியவாதிகளைப் போலத்தான் நானும். கம்மியாக உண்ணுவதில்லை, கதர் உடுத்துவதில்லை, எளிய வாழ்க்கை வாழ்வதில்லை இருப்பினும் அன்பு வழி உயிர்களிடத்தில் அன்பு செலுத்தும் வகையில் வாழ்க்கை அமைய வேண்டும் என்று நினைக்கிறேன். ஆக அப்படிப் பட்ட வகையில் காந்தியவாதி( புத்தவாதி, ஜெயினியவாதி என்று எப்படி வேண்டுமானலும் அழைத்துக் கொள்ளுங்கள் எல்லாம் ஒன்றுதான். அதற்காக நீ சமணணா இல்லை ஜெயினா என்று கேட்டு விடாதீர்கள் :))) ).
காந்தி போலவே வாழ்வதில்லை காந்தியம். காந்தியின் அஹிம்சை, அன்பு ஆகியவற்றை மனதில் நிறுத்தி அதன் வழி செல்வதும் காந்தியம் என்பது தாழ்மையான கருத்து.
//ஒரு மனிதன் தலை கீழாக நகரத்தில் நடந்தால் நாம் கைதட்டி உற்சாகப்படுத்துவோம் . நாம் கைத்தட்டாவிட்டால் அவன் ஏன் தலைகீழாக நடக்கிறான். இந்த மஹாத்மாக்கள் இந்த சர்கஸ்காரர்களை போல்தான். சாதரண மக்கள் செய்பவைகளை அவர் செய்யவில்லை. செய்ற்கரிய காரியங்களை செய்துவிட்டு மறைந்துவிடுகிறார்கள். இவர்களின் சீடர்களின் பாடு படுதிண்டாமாகிவிடுகிறது.//
கவனம்..அது ஓஷோவின் சீடர்களாக இருந்தாலும் இது பொருந்தும்.
//தன்னுடைய சுயப்புத்தியை உபயோகித்து மக்களின் அன்றாட ப்ரச்னைகளை மன உறுதியோடு ....//
இதுதான் அனைவருக்கும் தேவை...
எந்தப் புத்தகத்தைப் படித்தாலும் அங்கேயே நிற்காமல் சுயபுத்தியோடு அதைத் தாண்டிச் செல்ல வேண்டும்.அதுதான் நல்லது.
காந்தியுடையது ஸைக்கலாஜிக்கல் வயலன்ஸ்.
வயலன்ஸ் என்பதை முற்றிலுமாகவே தவிர்க்க இயலுமா என்பதுகுறித்த விழிப்பு இல்லாத நிலையில் அவர் செய்த பல காரியங்களை நாம் புனிதமாகவே பார்க்கிறோம்.
ஆனால், வன்முறை குறித்த குறைந்த அளவு விழிப்புகூட இல்லாதவர்கள் அவரைக் குறை சொல்லுவது தவறு.
ஜே க்ருஷ்ணமூர்த்தியின் பார்வை (அவருடைய மற்ற பேச்சுக்களைப்போலத்) தெளிவான புரிதலைத் தருகிறது.
படித்திருக்கிறீர்களா?
குமரன், கிருஷ்ணா என்ற மனிதனும் அவன் தத்துவங்களும் என்ற புத்தகம் படிக்கவேண்டும்.
அவருடைய புத்தங்களை படிப்பவர்களுக்கு அந்த வார்த்தைகளின் தன்மை உணர்த்திவிடும்
குமரன் எண்ணம், தாங்கள் காந்தியிடமிருந்து மிக மையக் கருத்தை பிடித்துள்ளீர்கள். மிக நன்று.
கல்வெட்டு, குருவை போல் ஆக ஆசைபடாதே. சுயபுத்தியை உபயோகி என்பதே இந்த கட்டுரையின் நோக்கம். அதை சரியாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள்.
ம்யூஸ், சைக்கலாஜிகல் வயலன்ஸினால் நாம் இழந்தது அதிகம்.
ஜே.கே யை படித்திருக்கிறேன். புரியும் அளவு எனக்கு முளை இல்லை. மெதுவாக மெதுவாக தான் என் முன்னேற்றம்
//"I asked you for a horse mister, not an ass." என்று பீட்டர் விட்டார். ஆக்ஸ்போர்டு பட்டதாரி //
இப்படி தான் எல்லாரிடமும் கேட்டு வருகிறாரோ?
//ஒரு மஹாத்மா இன்னொரு மஹாத்மாவின் காலடியில் அமர்வதில்லை. மாஹாவீராகட்டும் புத்தராகட்ட்டும் கிருஷ்ணராகட்டும் காந்தியாகட்டும் இவர்கள் யாரையும் பின் பற்றவில்லை. இவர்களுக்கென்று தனி பாதையை வகுத்து அதில் பயணம் செய்வார்கள். //
ஒரு சிங்கம் மற்றொரு சிங்கத்தின் காலடியில் கிடப்பதில்லை எவ்வளவு பெரிய பாடம்.
அருமை.
இதற்க்காக தானோ முப்பது முக்கோடி தேவர்கள் இருந்தனரோ (இந்தியாவில்).
//கடைசி வரை இதை முழுவதும் நீங்கள் தான் எழுதினீர்கள் என்று நினைத்தேன்.//
நானும் அப்படிதான் நினைத்தேன்.
//அரசியல் பண்ணவும் மேடைகளில் அட்டகாசமாக பேசவும் இந்த ஈயங்கள் உதவலாம். ஆனால் வேலைக்கு ஆகாது//
இது பேஷ்.
//காந்தி போலவே வாழ்வதில்லை காந்தியம். காந்தியின் அஹிம்சை, அன்பு ஆகியவற்றை மனதில் நிறுத்தி அதன் வழி செல்வதும் காந்தியம் என்பது தாழ்மையான கருத்து//
குமரன் எண்ணம் அய்யா,
அற்புதமாகா சொன்னீங்கய்யா.
அன்பும், அறமும், உயிரெனக் கொண்டால்,
அது தான் ஆனந்தம்.(சினிமாப் பாட்டு).
அது தான் காந்தீயம்.
பாலா
நல்லப் பதிவு ..
ஓசோ வின் விசிறிகளில் நானும் ஒருவன் .அவரின் பகவத் கீதை விளக்கவுரை அட்டகாசமாக இருக்கும் ..
ஆம் எல்லா இசங்களும் ஆபத்துக்குரியதே ..இசங்கள் நம்ப்பிக்கயின் பால் பட்டது,நம்ப்பிக்கைகள் மேல் இருக்கும் காதல் அதிகமானால் வன்முறைதான் ..
ஜேகே யோசிக்க வைப்பார் ,ஆனால் நிறைய நேரங்களில் படித்துக் கொண்டிருக்கும் போதே மரமண்டைக்கு குழப்பம் வந்து விடும் ..ஒசோ எளிதாகக் கூறுவதாக எனக்குப் படுகிறது..
புத்தமத விபாசனா தியான முறையில் "அனிச்ச" என்று பாலி மொழியில் திரும்பப் திரும்பக் கூறுவார்கள் ..ஒரு விதத்தில் "மாற்றம் மட்டுமே நிரந்தரமானதற்கு ஒத்த வார்த்தை"
As it Is இதுவே அதன் அர்த்தம் ..
ஒருவரை as it is யாக பார்ப்பது நம் புத்திக்கு அடங்குகிற விசயமில்லை ..
Any way Wonderful posting ..
சிவா சார்,
அருமையான பதிவு, நன்றிகள்.
என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.
Post a Comment