Thursday, October 12, 2006

மோட்டார் மேட்டர்

கார் என்பது சமீப காலம் வரை நடுத்தர மக்களின் எட்டாக் கனியாக இருந்தது. இன்று அது எல்லாருக்கும் கிடைக்கும் கனியாக மாறிவிட்டது. கார்களின் மேல் எனக்கு ஆர்வம் சிறு வயதிலிருந்து உண்டு.

சிமுலேசன் அவர்கள் என்னுடைய பதிவில் கேட்ட கேள்வி இந்த பதிவை எழுத தூண்டியது.

நவீன ரக காரில் என்னென்ன வசதிகள் அல்லது ஆடம்பரம் உள்ளன என பார்க்கலாமா?

நீங்கள் ஆபிஸ்ற்கு காலையில் 7 மணிக்கு கிளம்புகிறீர்கள் வெளிய கடுமையான பனி அல்லது வெயில் என்றால் வீட்டிலிருந்தபடியே காரை ஸ்டார்ட் செய்து ஏசி அல்லது ஹீட்டரை துவக்க ஏதுவாய் ரிமோட் ஸ்டார்டர். அருமையான சாதனம்

Photobucket - Video and Image Hosting

கார் பெட்ரோலில் மட்டும் இயங்கி கொண்டிருந்த காலம் போய் பாதி பெட்ரோலிலும் பாதி எலக்ட்ரிக்கிலும் இயங்கும் ஹைப்ரிட் கார்கள் வந்துவிட்டன. மெதுவாக போகும் போது எலக்ட்ரிக் மோட்டாரில் இயங்கும். வேகமாக போகும்போது எலக்ட்ரிக் மோட்டார் ஆப் ஆகி எஞ்சின் இயங்கும் அப்போது எலக்ட்ரிக் மோட்டாருக்கு வேண்டிய மின்சாரம் உற்பத்தி செய்து சேமிக்க படுகிறது, இது ஒரு வகை என்றால் நாலு சக்கரங்களிலும் எலக்ட்ரிக் மோட்டாரை பொருத்தி எஞ்சினின் ஸ்ட்ரெஸை குறைத்து பெட்ரோல் சேமிக்க வழிசெய்வது இன்னோரு வகை.

ஆட்டோமாடிக்காக காரின் வேகத்தை செட் செய்யும் Cruise control இருப்பது தெரியும். இப்போது காரின் முன் ஒரு லேசர் சென்ஸரை போட்டு இதை இன்னும் அதிக ஆட்டோமாடிக ஆக்கிவிட்டார்கள். நீங்கள் ஒரு ஹைவேயில் 100 கி,மீ செட் செய்துவிடுகிறீர்கள் உங்கள் முன்னால் செல்லும் காரும் 100 கிமீ வேகத்தில் போகிறது. முன்னால் செல்லும் கார் அதன் வேகத்தை குறைத்தால், இந்த லேசர் சென்ஸர் அதை உணர்ந்து உங்கள் காரின் வேகத்தை குறைத்து விடும்.

காரின் சாவியிலும் நுணுக்கங்களை நுழைத்துவிட்டார்கள். உங்கள் சாவியில் ஒரு சங்கேத குறி இருக்கும். அந்த குறிக்கு மட்டும் பணிந்து காரில் உள்ள கணிணி காரை ஸ்டார்ட் செய்யும். ஒரே காரை இருவர் உபயோகித்தால் அவரவரர்க்கு ஏற்றவாறு கார் சீட், ஸ்டேரிங்க் வீல் மற்றும் ரியர் வியு மிர்ரர்களை அட்ஜஸ்ட் செய்யும் செட்டிங்களை அந்த சாவிகளில் செட் செய்யலாம். எந்த சாவி கொண்டு காரை ஸ்டார்ட் செய்கிறோமோ அந்த சாவிகேற்றவாறு செட்டிங்கள் மாறும்

கார் ஏசியில் உங்களுக்கு ஒரு செட்டிங், பக்கத்து சீட்டுக்கு ஒரு செட்டிங், பின் சீட்டிற்கு ஒரு செட்டிங் என பல செட்டிங்களை செய்யலாம்.

நாலைந்து சானல் உள்ள ஆடியோ சிஸ்டம் வந்துவிட்டது. காரில் பயணம் செய்யுன் நான்கு பேரும் நாலு வேறு வேறு பாடல்களை அவர்களின் ப்ரத்யேக ஹெட்போன்களில் கேட்கலாம்
Photobucket - Video and Image Hosting
கார் பார்ர்கிங் அசிஸ்ட் என்ற சிஸ்டம் நீங்கள் கார் பார்க் செய்ய உதவுகிறது. ஏதையாவது ஒன்றை இடிக்கபோனல் சத்தம் எழுப்பி உங்களை உசுப்பிவிடும்

உங்கள் செல் போனை காரின் ஆடியோவுடன் இணக்கபட்டு உங்களுக்கு போன் வந்தால் ஆடியோ சிஸ்டம் ஆப் ஆகி போன் அந்த ஸ்பீக்கர்களின் வழியாக கேட்கும். போனை கையில் எடுக்க தேவையில்லை. காரில் ஒட்டிக்கொண்டே கவனம் சிதறாமல் பேசலாம்

மழை வரும் போது தானாக செயல் படும் வைப்பர்கள் வேகமாக கார் போகும் போது வேகமாகவும் மெதுவாக போகும் போது மெதுவாகவும் இயங்கும்.

கார் டயர்களின் காற்று இறங்கிவிட்டால் அதுவும் டாஷ் போர்டில் காட்டும்

வழிகாட்டும் GPS சிஸ்டம் உங்கள் குரலுக்கு மட்டும் கட்டுபட்டு வேலை செய்யும். வட அமெரிக்காவின் எல்லா நகரங்களின் மேப்புகள் அந்த சிஸ்டத்தில் உள்ளன. உங்களால் வழிதவறமுடியாது. திருடர்கள் இந்த கார்களை திருடினால் அதன் இருப்பிடத்தை துல்லியமாக காட்டி விடும். மேலும் இதை ஒரு ப்ளாக் பாக்ஸ் மாதிரி காரில் பொருத்தி நீங்கள் எந்த ரோட்டில் எந்த நேரத்தில் வேகமாக சென்றீர்கள் போன்ற செய்திகளை ரிகார்ட் செய்யபடும். வருட கடைசியில் நீங்கள் காரின் ரிஜிஸ்ட்ரேசனை புதுபிக்கும் போது அபராதங்களை தீட்ட வசதியாக இருக்கும்

ஆண்டி ரோல் ஒவர். காரில் வேகமாக போய் திரும்பும் நேரம் அதுகவிழும் அபாயத்திலிருந்து காப்பாற்றும்

சஸ்பென்ஷன் கண்ட்ரோல். ரோட்டின் கடுமையை பொறுத்து உங்கள் சஸ்பென்ஷனின் டென்சனை மாற்றி உங்களை சந்தோஷப் படுத்தும்

இப்போது பெட்ரோல் விற்கும் விலையில் சின்ன கார்களுக்கு மவுசு அதிகம். இரண்டு பேர் மற்றும் செல்லகூடிய ஆனால் வசதிகளில் சற்றும் குறைவைக்கத இந்த வகை கார்கள் அதிகமாக விற்கின்றன


Photobucket - Video and Image Hosting


இன்னும் என்னன்ன இருக்கிறது என்பது மேலும் அனுபவம் வாய்ந்தவர்கள் சொன்னால் நன்றாக இருக்கும்

7 comments:

said...

லெக்ஷஸில் ஒரு புதிய கார் வந்திருக்கிறது / வரப்போகிறது. அது தானாகவே பேர்லல் பார்க் (இணை நிறுத்தம் - நல்லா இருக்கா?) செய்து கொள்ளுமாம். உள்ளே இருக்கும் பார்ட்டி ஸ்டீரிங் எல்லாம் தொடாமால் ஆடாது அசங்காது வந்தால் போதும்!

said...

அடே சூப்பரா இருக்கும் போலே

said...

இல்லி நோடு குரு. இதில் ஹார்ட் டிஸ்க் மியூசிக் ப்ளேயர் கூட இருக்காம். இன்னும் என்னென்னமோ, அந்த LS460 பகுதிக்குப் போயி வீடியோவைப் பாருங்க.

said...

கொத்தனார், அடுத்த கார் அதுதானா?

said...

பாபிள், உங்க லிஸ்ட் அற்புதம்

said...

இந்தியாவில் உள்ளவர்களுக்கு என் கேள்விகள்

1. ஹைப்ரிட் கார் வந்துவிட்டதா?
2. இந்த ஆப்ஸன்கள் எல்லாம் கிடைக்கிறட்தா?

சில வருடங்களுக்கு முன் என் பெற்றோர்களுக்காக சாண்ட்ரோ வாங்கும் போது அந்த டீலர் சிகரட் லைட்டர் அவுட்லெட் வைக்க அழுதார்

said...

"இதை ஒரு ப்ளாக் பாக்ஸ் மாதிரி காரில் பொருத்தி நீங்கள் எந்த ரோட்டில் எந்த நேரத்தில் வேகமாக சென்றீர்கள் போன்ற செய்திகளை ரிகார்ட் செய்யபடும். வருட கடைசியில் நீங்கள் காரின் ரிஜிஸ்ட்ரேசனை புதுபிக்கும் போது அபராதங்களை தீட்ட வசதியாக இருக்கும்."
இதைத்தான் முதலில் கொண்டு வருவார்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்