Tuesday, October 10, 2006

I.T.


IT என்ற வார்த்தைக்கு என்றைக்குமே ஒரு சக்தியுண்டு. இன்று Information Technolgy என அறியபடும் இந்த சொல்சுருக்கம் 80களில் Instrument Technology என அறியப் பட்டது.

கருவியியல் என்னுடைய தொழில். கருவியியல் அதாவது Instrumentation என்பது எல்லாரும் அறிந்த ஒன்றே. நம் வீட்டிலோ அல்லது அடுத்தவீட்டிலோ அல்லது சொந்த காரர்களில் ஒருவரோ இந்த படிப்பை படித்துக் கொண்டிருப்பார்.

இந்த படிப்பை இந்தியாவில் முதன் முதலில் அறிமுகப் படுத்தியது அடியேன் படித்த அண்ணாப் பல்கலைகழகத்தை சேர்ந்த எம் ஐ டி என அழைக்கப்படும் Madras Institute of Technology என்ற கல்லூரிதான்.

இந்த கல்லூரியை நிறுவியவர் திரு இராஜம் ஐயர் அவர்கள். சுமார் 50 வ்ருடங்களுக்கு முன் மிகுந்த தொலைநோக்கில் அந்தக் காலத்தில் முற்றிலும் வித்தியாசமான பொறியியல் துறைகளான Aeronautics, Automobile, Electonics and Instrumentation ஆகியவைகளை தொடங்கினார். அண்ணா பல்கலைகழகத்தில் இணைந்தவுடன் இங்கே Production Technology மற்றும் Rubber Technology பாட பிரிவுகள் ஆரம்பிக்க பட்டு விட்டன.

முதன் முதலில் இங்கே B.Sc. படித்தவர்களுக்கு மட்டும் மூன்று வருட பொறியியல் படிப்பு இருந்தது. இப்போது +2 முடித்துவிட்டு 4 வ்ருட படிப்பாக மாறிவிட்டது

இங்கே படித்த பிரபலமானவர்களில் முதன்மையானவர்கள் மாண்புமிகு இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களும் பிரபல எழுத்தாளர் திரு சுஜாதா என்ற ரங்கராஜன் அவர்களும்.
சரி கருவிகள் என்றால் என்ன அவைகள் எங்கே புழங்குகின்றன என்பதை பார்ப்போமோ?

கருவிகள் நம் வாழ்வின் தரத்தை உய்ர்த்துவதில் ஒரு இன்றியாமையாத பங்கு வகிக்கின்றன. வீட்டில், வாகனத்தில், ஆஸ்பத்திரியில், அலுவலக்த்தில், தொழிற்சாலைகளில் ஏன் கோவில்களில் கூட உபயோக்கிக்க படுகின்றன.

தொழிற்சாலைகள் என்றால் எந்த மாதிரி தொழிற்சாலைகள்? அனைத்து தொழிற்சாலைகளிலும் நீக்கமற நிறைந்துள்ளன கருவிகள். உண்மையில் சொல்லவேண்டுமென்றால் இந்த கருவிகள்தான் தொழிற்சாலைகளின் நரம்பியல் மண்டலம் என சொல்லலாம்.


வீட்டில் உள்ள கருவிகள் ... மின்சாரத்தை கணக்கெடுக்கும் Watt-Hour Meter ப்ரிட்ஜ். ஏசி மற்றும் ஹீட்டரில் உள்ள thermostat கள்


வண்டியில் மைலேஜைக் காட்டும் odometer. இது எத்தனை கிலோமீட்டர் வண்டி ஓடியுள்ளது எனக் காட்டும். செகண்ட் ஹாண்ட் விற்பவர்கள் இதை ரிவர்ஸில் சுத்தவிட்டு மைலஜை கம்மியாக காட்டுவார்கள். ஆட்டோவில் சூடு வைப்பதும் இந்த மீட்டரில் உள்ள சில பல்சக்கரங்களில் தான். ஆனால் இப்போது எல்லா கார்களிலும் கம்யூட்டர் உள்ளதால் இந்த odometer ஐ டிஜிடல் ஆக மாற்றி விட்டார்கள். இதில் ப்ராடு பண்ண வேண்டுமென்றால் Embedded software இல் பிஸ்தா வாக இருக்கவேண்டும். இந்த பிஸ்தாக்கள் நேர்வழியில் நிறைய சமபாதிப்பதால் இந்த ப்ராடுக்கு துணைப் போவதில்லை.

சரி அலுவலகத்திற்கு போகிறோம் அங்கே வாச்லில் உள்ள மாக்னெடிக் லாக் என்பது இன்னொரு கருவி. உங்கள் ID கார்டை ஒத்தி எடுத்தவுடன் கதவுதிறக்கும் அதேசமயத்தில் உள்ளே கம்யுட்டரில் நீங்கள் வந்த நேரம் பதிவாகிவிடும். ஒருநாளைக்கு எத்தனை மணிநேரம் ஆபிஸில் இருந்தீர்கள என மானஜ்மென்ட் துல்லிய கணக்கு வைக்க ஏதுவாயிருக்கும்

கருவியியலில் பல பிரிவுகள் உண்டு. Test and Measuring Instruments, Bio-Medical Inistruments, Process Instruments ஆகியவை முக்கிய பிரிவுகள் ஆகும்.

இதில் அதிகம் சம்பளம் கிடைக்ககூடிய பிரிவு Process Instruments தான் இதில் உள்ள உட் பிரிவான Control System Software இல் உள்ளவர்கள் அதிக சம்பளம் பெறுபவர். நான் எந்த பிரிவு என தெரிந்திருக்க்கும் ஹி..ஹி..ஹி..


கருவிகள அதிகம் பயன்படுத்தும் தொழிற்சாலைகள்

சர்க்கரை ஆலைகள், காகித ஆலைகள், பால்பண்ணைகள், சிமெண்ட் ஆலைகள், துணி ஆலைகள், அனல்மின்சார உற்பத்தி நிலையங்கள், அணுமின் நிலையங்கள், மின்சாரம் விநியோகிக்கும் கம்பனிகள் மருந்து தாயாரிக்கும் தொழிற்சாலைகள், சுரங்கங்கள் (தங்கம், தாமிரம், யுரேனியம் ஆகியவை). சிலிக்கான் சில்லுகள் செய்யும் தொழிற்சாலைகள், உணவு பண்டங்கள் செய்யும் தொழிற்சாலைகள், சாரயத் தொழிற்சாலைகள், பீர் தொழிற்சாலைகள், உரத்தொழிற்சாலைகள், இரசாயன தொழிற்சாலைகள் கடைசியாக எண்ணை மற்றும் எரிவாயு தொழிற்சாலைகள்.
Photobucket - Video and Image Hosting
இந்த தொழிற்சாலைகளில் யுரேனிய சுரங்கம் சிலிக்கான் தொழிற்சாலைகள் தவிர மற்ற எல்லா தொழிற்சாலைகளிலும் அடியேன் மூக்கை நுழைத்துள்ளேன்.
Photobucket - Video and Image Hosting
இதில் அதிக லாபம் தரும் தொழிற்சாலை எண்ணை மற்றும் எரிவாயு. அதில் தான் நான் புரிகிறேன்.

மேலே உள்ள அதிநவீன Control System மை வடிவமைத்ததில் அடியேனின் பங்கும் உள்ளது. இது இந்தியாவில் மேற்கோடியில் ஒரு குக்கிராமத்தில் அமைந்துள்ளது.


இந்த Control System தயாரிப்பாளர்கள் உலகில் 6 பேர் தான். அதில் 3 அமெரிக்க கம்பெனிகள். ஒரு சூவீடன் நாட்டு கம்பெனி (ஆனால் பெரும்பாலான தயாரிப்புகள் அமெரிக்காவில்), ஒரு ஜெர்மானிய கம்பெனி, ஒரு ஜப்பானிய கம்பெனி.

இந்த 6 கம்பெனிகளும் பெருமளவு வேலைகளை இந்தியாவில் இருந்து தருவித்துக் கொள்கிறது. சென்னை, பெங்களூர், புனே ஆகிய நகரங்களில் இந்த கம்பெனிகளின் கருவிகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன

இந்த கருவிகளை உபயோகிக்கும் தொழிற்சாலைகள் இந்தியாவில் கிராமங்களில்தான் பெரும்பாலும் இருக்கும். அதனால் பல உள்கிராமங்களில் (ஆந்திரா, கேரளா, மஹாராஷ்ட்ரா, குஜராத், பஞ்சாப், மே.வ, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில்) தங்க வாய்ப்புக் கிடைத்தது. அந்தந்த ஊர் மக்களின் வாழ்க்கை முறைகளை கவனிக்கவும் வாய்ப்புக் கிடைத்தது. இதனால் பல நண்பர்கள் கிடைத்தனர். நான் இந்த தொழிலுக்கு வரமால் இருந்திருந்தால் ஒரு காங்கீரிட் ஜங்கிளின் குரங்காக இருந்திருப்பேன்..

என்னால் மறக்கமுடியாத தொழிற்சாலைகள்

1.இயற்கை அழகு வாய்ந்த இடத்தில் அமைந்த சர்ச்சைக்குரிய என்ரானின் டபோல் மின்சார நிலையம்..
2. சவுத் இந்தியா விஸ்கோஸ், மேட்டுப்பாளயம் (மூடப்பட்டுவிட்டது)
3. ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம், ஊட்டி (மூடப்பட்டுவிட்டது)
4. குதிரேமுக் இரும்பு சுரங்கம்
5. கனடாவில் ப்ரிட்டிஷ் கொலாம்பியாவின் தாமிர சுரங்கம்
6. சவூதி அரேபியாவில் நட்ட நடு பாலைவனத்தில் இருந்த எரிவாயு தொழிற்சாலை
7. அபுதாபியிலிருந்து 250 கிமீயில் அமைந்துள்ள ரூவைஸ் என்ற சின்னஞ்சிறு குட்டி நகரம் (மொத்தம் 2000 வீடுகள்)
8. டென்மார்க்கின் உள்புறத்தில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய பாலாடைக் கட்டித் தொழிற்சாலை
9. வான்கூவரின் மலைக்கும் கடலுக்கும் இடையே உள்ள அனல் மின்சார நிலையம்
10. மகேந்திரகிரியில் உள்ள ராக்கெட் சோதனை நிலையம்
11. NASA வின் Cape Canaveral
12. கல்பாக்கத்தில் உள்ள அணுமின் நிலையம்
13. சிங்கப்பூரின் டைகர் பியர் தொழிற்சாலை
14. குஜராத்தின் AMUL பால் பண்ணை
15. சத்தியமங்கலம் மற்றும் சிவகங்கையில் உள்ள சர்க்கரை ஆலைகள்
16, கொச்சியில் உள்ள ரிபைனரீயும், உரத்தொழிற்சாலையும் , பீனால் தொழிற்சாலயும்
17. கனடாவின் வடக்கே அமைந்துள்ள எண்ணை மணற் குவாரிகள்
என் தொழிலுக்கு வந்தனம்........

30 comments:

said...

நல்ல சுவாரசியமான பதிவு. சிமெண்ட் தொழிச்சாலைகள் எதிலும் பணிபுரியவில்லையா?

வைசா

said...

வைசா அவர்களே, நினைவுபடுத்தியதற்கு நன்றி. திருச்சிக்கு அருகில் உள்ள டால்மியா சிமெண்ட் மற்றும் காந்தி பிறந்த மண் போர்பந்தர்க்கு அருகில் ஒரு சிமெண்ட் தொழிற்சாலை ஆகியவைகளை பார்த்திருகிறேன்.

ரஷ்யாவின் கிழக்கு கோடியில் உள்ள சாக்களின் தீவில் அமைந்துள்ள எண்ணெய் கிணறுக்கு போக சொல்லி கேட்டுக்கொண்டார்கள். ஆனால் ரஷ்ய அரசாங்கம் இந்திய குடிமகன்களுக்கு விசா வழங்க மறுத்தது எனக்கு பெரிய ஏமாற்றம்

said...

எங்கப்பா என்னை B.Sc , இரசாயனம் படிக்க வெச்சதே,
இந்த S.I.V லே ஷிப்ட் வேலைக்கு அனுப்பத்தான்.
மேட்டுப்பாளைத்துல , ஒரு காலத்துல s.i.v க்கு வேலைக்கு
போறான்னு சொன்னாலே ஒரு தனு கெத்துதான்.

ஆனா பாருங்க, இப்ப அந்த ஆலையையே மூடிட்டாங்க.
இப்ப பாருங்க பெருவில குப்பை கொட்டிகிட்டிருக்கேன்.

said...

நல்ல பதிவு சிவா. உபயோகமான பதிவு.

said...

பெருசு,

எனக்கும் விஸ்கோஸ் மூடியதில் வருத்தமே. அதே இடத்தில் சுற்று சூழல் கெடாத ஒரு தொழிற்சாலையை அமைத்திருக்கலாம்.

வாழ்க்கை எவ்வாறு மாறுகிறது பார்த்தீர்களா. அந்த தொழிற்சாலை மூடாமல் இருந்திருந்தால் நீங்கள் அங்கே ஆபரேசன் மானேஜர் ஆக இன்று இருந்திருக்கலாம். மேட்டு பாளையத்தில் உங்கள் உலகம் சுருங்கியிருக்கும்

said...

முத்து,

நீங்கள் வசிக்கும் மங்களூர் வர எனக்கு பிடிக்கும். முதல் காரணம் அங்குள்ள இரும்பு சுரங்கம். இரண்டாவது காரணம் மஞ்சரன் ஹோட்டல் ஹி..ஹி...மூன்றாவது காரணம் மங்களூர் விமான நிலையம்.மலையை வெட்டி ரன்வே அமைத்திருப்பார்கள். விமானம் ப்ரேக் பிடிக்கவிட்டால் பாதாளம் தான் very thrilling

said...

இப்பல்லாம் இது மாதிரி படிப்பு Instrumentation and control வகையில் சேர்த்துவிட்டார்கள் என்பது என் அறிதல்.

MIT என்றால் Massachusetts Institute of Technology தான் ஞாபகம் வரும், ஆனால் இந்தியாவில் அதன் பெயர் Madras Institute of Technology.

//
odometer. இது எத்தனை கிலோமீட்டர் வண்டி ஓடியுள்ளது எனக் காட்டும்.
//
அதனாலத்தான் இதை "ஓடோ" மீட்டர் என்கின்றனரோ?

//
இதில் அதிகம் சம்பளம் கிடைக்ககூடிய பிரிவு Process Instruments தான் இதில் உள்ள உட் பிரிவான Control System Software இல் உள்ளவர்கள் அதிக சம்பளம் பெறுபவர்.
//

அப்ப மத்தவிங்களுக்கெல்லாம் கம்மி வரும்படி தானா?

//
ஒரு காங்கீரிட் ஜங்கிளின் குரங்காக இருந்திருப்பேன்..
//

இப்ப மட்டும் என்ன மனுசனாவா இருக்கீங்கன்னு கேக்கலாம்னு தோனிச்சு, இருந்தாலும் அடக்கிகிட்டு கேக்காம உட்டுற்றேன்..

தொழிலுக்குத் துரோகம் செய்யாமல் ஸ்டார் வாரத்தில் பதிவு போட்டுட்டீங்க...

பல புதிய விஷயங்கள் தெரிந்துகொண்டேன்..

நன்றி.

ஷங்கர்.

said...

ஷங்கர், சிஸ்டம் சாப்ட்வேரில் இருப்பவர்கள் தகவல்களை அறிய வரும் அப்பர் மானேஜ்மெண்ட் ஆட்களுக்கு அறிமுகமானவர்களாக இருப்போம். தவறுகளுக்கு இடமில்லை. சிறுதவறு நேர்ந்தால் உற்பத்தி நின்றுவிடும். உற்பத்தி நின்றால் பயங்கர நஷ்டம். இரவில் எந்த நேரம் அழைத்தாலும் உடனடியாக சென்று சரி செய்ய வேண்டும். மிகவும் பொறுப்பான பதவி மேலும் இதில் ஆட்கள் குறைவு அதனால் தான் சம்பளம் அதிகம்

said...

செய்யும் தொழிலே தெய்வம். இந்த பதிவு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

said...

சிவா!
இத் துறை பற்றி என் சிற்றறிவுக்கு எதுவும் பிடிபடுவதில்லை; ஆனால் பல இந்தியச் சகோதரர்கள் இத்துறையில் பிரகாசிக்கிறார்கள் என்பதனை வாசிப்பால் அறிந்து; மகிழ்வேன்; படங்கள்; பிரமிப்பை ஏற்படுத்துகின்றன.
நல்லாச் சொல்லியுள்ளீர்கள்.
யோகன் பாரிஸ்

said...

யோகன், இந்ததுறையின் முடிசூடாமன்னர்கள் அமெரிக்கர்கள் அதன் பின் ப்ரிட்டிஷார் அதற்கு பின் உபகண்டத்தை சேர்ந்தவர்க்ள். சீனர்களும் ஜப்பானியர்களும் அதற்கப்பால் தான்.

உபகண்டத்திலிருந்து இந்தியர்கள் தவிர பாகிஸ்தானியரும் இலங்கையை சார்ந்தவர்களும் (சிங்களம் மற்றும் தமிழ்) கணிசமான அளவில் உள்ளனர். என் பக்கத்து சீட்டில் அமர்ந்திருப்பவர் யாழ் நகரத்தை பிறப்பிடமாக கொண்ட தமிழ் சகோதரர் தான்

said...

ஒவ்வொரு அனுபவத்தையும் பதிவா போடுங்க சாமி. இவ்வளவு சரக்கு வெச்சுக்கிட்டு சும்மா ஊரை ஏமாத்திக்கிட்டு இருக்கீங்க!

said...

சிவா

விஸ்கோஸ் எங்க ஊர் தொழிற்சாலை.பவானி ஆற்றை மாசுபடுத்தியதால் மூடிவிட்டார்கள். வருஷா, வருஷம் 45% போனஸ் கொடுப்பார்கள். ஆனால் தொழிலாளீக்கு சீக்கிரம் சீக்கு வந்து 45 அல்லது 50ன் வயதிலேயே இறந்துவிடுவான்

said...

அந்த கண்ட்ரோல் சிஸ்டம் ரூம் அருமையான அமைப்பு.வளைவு நெளிவு இருந்தாலே அழகு தான்.:-))
சிங்கையில் டைகர் பீர்-அலெக்ஸ்ஷான்ரா வீதியில் இருந்ததா? அப்படியென்றால் அதை இடித்துவிட்டு அந்த இடத்தில் இரு பெரிய கட்டிடங்கள் கட்டினார்கள் அப்போது தான் நான் சிங்கையில் வேலைக்கு சேர்ந்தேன்.இப்போது அந்த கட்டிடங்களில் ஒன்றில் தான் ஹெச்பி குடியேறியுள்ளது.

said...

கொத்தனார், போடலாம் நிச்சயமாக

said...

//தொழிலாளீக்கு சீக்கிரம் சீக்கு வந்து 45 அல்லது 50ன் வயதிலேயே இறந்துவிடுவான்//

அப்படியா. எனக்கு தெரியவில்லை

அந்த பெல்ட்டில் விஸ்கோஸ், ஈரோட்டில் சேஷாசாயி பேப்பர், கோயம்பத்தூர் ஆல்கஹால், மேட்டூர் கெமிக்கல்ஸ், சேலம் உருக்காலை, தமிழ்நாடு மக்னாசைட், கோபியில் பண்ணாரிஅம்மன் சுகர்ஸ் தொழிற்சாலை, அப்படியே சந்தன கடத்தல் வீரப்பன் இருந்த மலை ஏறி கர்நாடகவின் சாமரஜ் நகரில் உள்ள ஜெனரல் புட்ஸ் என பலமுறை சுத்தி சுத்தி வந்தாகிவிட்டது. பசுமையான ஏரியா. ரம்மியமாக இருக்கும். கோபியில் 3 ஸ்டார் ஒட்டல் உண்டு. நிச்சயமாக ஒரு படபிடிப்பு குழுவினரை அங்கெ காணலாம். உபயம் பாக்கியராஜ் அண்ட் பாரதிராஜா

said...

வடூவூர் குமார், எனக்கு நினைவில்லை. எங்கள் அலுவலகத்திலிருந்து காரில் அழைத்து செல்வார்கள்

said...

கொத்தானார், நாங்க பஸ், டிரெய்ன் என இந்தியாவில் சுற்று சுற்று என சுத்தினோம். உங்களை மாதிரி இளைய தலைமுறைகள் வட அமெரிக்காவில் நகரம் நகரமாக பறந்து விதவித மான காரை ஓட்டி அனுபவிக்கிறீர்களே. அதைப் பற்றி நீங்களும் எழுதலாமே

said...

//அந்த கண்ட்ரோல் சிஸ்டம் ரூம் அருமையான அமைப்பு.வளைவு நெளிவு இருந்தாலே அழகு தான்.:-))//

வடுவூர் குமார்,
1.உண்மை.
2.உண்மை.

said...

Siva,

If you give so much information in one posting,it becomes mind boggling :)

Very good post, Thanks !

said...

சிவா,

எண்ணைய் சுத்திகரிப்பு ஆலைகளில் கெமிகல் எஞ்சினீயர்களுக்கு முக்கியத்துவம் இருந்தாலும், இந்த இன்ஸ்ட்ருமெண்ட் இஞ்சினீயர்கள் பொதுவாகத் துறுதுறுப்பாகப் பணியாற்றுவதைப் பார்த்திருக்கின்றேன்.

BTW,

'பவர் விண்டோஸ்' போன்ற பல வசதிகள் வந்த போதிலும், பெரும்பாலான கார்களில் 'டேங்கி'ல் எவ்வளவு பெட்ரோல் உள்ளது என்பதனைக் காட்ட 'அனலாக் இண்டிகேட்டரே' உள்ளது. பெட்ரோல் எத்தனை லிட்டர் உள்ளது என்பதனைக் துல்லியமாக 'டிஜிட்டல் இண்டிகேட்டர்' மூலம் காட்ட முடியாதா?

கோவையிலுள்ள 'ப்ரிகால்' நிறுவனத்தின் ஒரு இயக்குநரிடம் மேற்கண்ட கேள்வி கேட்டேன். சரியான் பதில் கிடைக்கவில்லை.

-சிமுலேஷன்

said...

சிவா,

U too IT in MIT?
அடியேனும் அஃதே!
சி.ராஜம் ஐயாவின் படத்தை வேறு போட்டு அசத்தி விட்டீர். Aero Hanger-இல் அவர் உருவச் சிலை ஒன்றும் இருக்கும்! 50 ஆண்டுகளுக்கு முன்னரே ஜெர்மனியின் கூட்டு சேர்ந்து FRG Lab for Instrumentation!

கலாம் ஏரோனாட்டிகஸ்
சுஜாதா எலெக்டரானிக்ஸ்
மேலும் padmashree RN Agarwal
ISRO ஆராமுதன்

//என்னால் மறக்கமுடியாத தொழிற்சாலைகள்//
சென்னையில் ICI Chemicals விட்டு வீட்டீர்களோ?
HVF, Avadi also hosts a great IT plant.

அப்பறம் பதிவில் அந்த கண்ட்ரோல் Processing Floor படம் மிக அருமை.

said...

சிமுலேசன் சார், வந்துவிட்டது. டாங்கின் லெவெல் காட்ட கப்பாசிடென்ஸ் சென்சர் உபயோகிப்பார்கள். டாங்கின் சேப்பின் ஜியமெட்ரியை வைத்து மொத்த கொள்ளளவை அளப்பார்கள்.

ஆனால் மக்கள் அதிகம் விரும்புவது அனாலாக் மீட்டரை தான். முள் கீழே வந்தவுடன் பெட்ரோலை போடு என்பது நம் மூளையில் பொதிந்துள்ளது.

என்னிடம் உள்ள ஒரு காரில் (இதுவும் ஒரு சந்தில் சிந்து) ஆன் போர்ட் கம்யூட்டர் உள்ளது. அந்த கணிணி டாங்கியில் உள்ள பெட்ரோல் இன்னும் எத்தனை கிலோமீட்டருக்கு வரும். உங்கள் காரின் இப்போதைய் பெட்ரோல் உபயோகம் என்ன. எந்த திசையை நோக்கி போகிறீர்கள், வெளியே உள்ள டெம்பரட்சர் என்ன போன்ற செய்திகளை சொல்லும்.
இன்னும் ஒரு 5000$ ஜாஸ்தி தந்திருந்தால் கொடுத்திருந்தால் GPS Navigator தந்திருப்பார்கள். அதில் நீங்கள் எங்கிருந்து எங்கு போகிறீர்கள் என்பதை சொல்லிவிட்டால் போதும் அது வலபுறம் திரும்பு இடபுறம் திரும்பு என கட்டளையிட்டு வேண்டிய இடத்திற்கு பத்திரமாக போய் சேர்த்துவிடும்.

காரின் சாவியில் சங்கேத வார்த்தைகளை போட்டு உங்கள் கார் உங்கள் சாவிக்கு மட்டும் ஸ்டார்ட் ஆகும் என்ற பாதுகாப்பை அளித்திருக்கிறார்கள். சும்மா இரண்டு வயரை சார்ட்செய்து ஸ்டார்ட் செய்வதெல்லாம் இப்போது முடியாது. அதே நேரத்தில் சாவி தொலைந்துவிட்டால் அதை வாங்க அந்த கம்பெனிக்கு தான் போகவேண்டும். தீட்டு தீட்டு என்று தீட்டி விடுவார்கள்

said...

KRS, மிக்க மகிழ்ச்சி எந்த ஆண்டில் படித்தீர்கள்.

எம் ஐ டி யின் பிரபலமானவர்களின் பட்டியல் மிக நீளம்

இரட்டை கோபுரம் புலன் விசாரணையின் ஒரு குழுவின் தலைவர் எம் ஐ டி யில் படித்தவர்தான். பெயர் ஞாபகம் வரவில்லை

டாட் காம் பூமில் பிரபலமான கேபி சந்திரசேகர் அடியேனின் சீனியர்தான்

ஐசிஐ யில் நான் மூன்று மாதங்கள் பணி புரிந்தேன். HVF ஆவடியில் உள்ளது பாக்டரி ஆட்டோமேசன். அதில் எனக்கு அனுபவம் இல்லை

said...

Simulation has left a new comment on your post "I.T.":

சென்னை தொலைக்காட்சி செய்தி அறிவிப்பளர் திரு.xxxxxxx அவர்களும் எம்.ஐ.டிதானே? xxxx கன்ட்ரோல்ஸிலும், பின்னர் xxxxxஸிஸிலும் பணி புரிந்தார் என்று எண்ணுகின்றேன்.

- சிமுலேஷன் //

சிமுலெஷன் சார், மிக சரி. அவரின் அனுமதியில்லாமல் அவர் பெயரை வெளியிட விரும்ப் பவில்லை. அவர் எனக்கு பாஸ்ஸாக இருந்தார். எங்கள் குடும்ப நண்பராகவும் இருக்கிறார்.

நல்ல மனிதர் பழக இனிமையானவர்

said...

சுவாரஸ்யமாக இந்தத் துறையைப் பற்றி எழுதியுள்ளீர்கள்.

said...

சந்திரவதனா, மிக நல்லதுறை இது.

said...

டிஜிடல் இண்டிகேட்டரும் ஆழத்தை அளந்து இத்தனை ஆழத்திற்கு இத்தனை லிட்டெர் என்று செய்து வைத்த நிரலியின்படிதானே காட்டப் போகிறது. இதில் துல்லியம் வர வாய்ப்பில்லை. எண்ணெயின் எடையை அளக்கும்படி செய்தால்தான் அது துல்லியமாக இருக்கும்.

ஆனால் இதை துல்லியமாக அளக்கத் தேவையில்லை. பாதுகாப்பாக ஒரு சுழிப்பிழை (zero error) வைத்த அனலாக் இண்டிகேட்டரே போதும்.

சிவா, இப்போது நான் பாடுவதுதான் உண்மையில் சந்தில் சிந்து.

said...

அடியேன் இளநிலை பொறியியலில் படித்தது கருவியியல் என்பதே இப்போது நீங்கள் எழுதியிருப்பதைப் படித்த பிறகு தான் நினைவிற்கு வருகிறது. படித்தது ஒன்று; வேலை செய்வது வேறு ஒரு துறையில். வாழ்க்கை எனும் நதி அழைத்துச் செல்லும் வழியிலேயே சென்று கொண்டிருக்கிறேன். :-)

said...

எதாவது வேலை காலி இருந்தால் தெரிவிக்கவும் நானும் கருவியியல் தான் பயின்றுள்ளேன்.