1. Wine மற்றும் Gin ஆகியவைகளை Dry என்று குறிப்பிடுவதேன்? ஒரு திரவம் எவ்வாறு உலர்ந்திருக்கும்?
2. சினிமா பிலிம்களை பல ஆண்டுகாலமாக யார் எப்படி பாதுகாக்கிறார்கள்?
3. சினிமா பாடல்களின் ராயல்டி எப்படி வழங்கபடுகிறது? அது முறையாக உரியவருக்கு போய் சேருமா?
4. இந்தியாவில் ரயில் நிற்காத நிலையங்களிலும் இஞ்சின் டிரைவரும் ஸ்டேசன் மாஸ்டரும் ஒரு டென்னிஸ் பாட்டை மாற்றிக் கொள்வார்கள் அது என்ன?
5. விமானத்தில் இருக்கும் ப்ளாக் பாக்ஸ் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் அப்புறம் எதுக்கு ப்ளாக் பாக்ஸ் என்று பெயர்? அதேபோல் வெள்ளை அறிக்கை, மஞ்சள் பத்திரிக்கை என நிறங்களை வைத்து எதற்கு பெயர் வைக்கிறார்கள்/
6. காரில் ஆட்டோமாடிக் கியர் எவ்வாறு இயங்குகிறது?
7. இரத்த பரிசோதனையின் போது ESR, CBC, LFT என்றால் என்ன? இதை வைத்து டாக்டர்கள் என்ன அறிகிறார்கள்?
8. இதய கோளாறு உள்ளவர்கள் பல் டாக்டரிடம் சென்று பல்லை சுத்தம் செய்தால் ஆண்டிபயாடிக் தருவதேன்? இதயத்திற்கும் பல்லும் என்ன தொடர்பு?
9. GPS/Satellite மற்றும் விமானம் வருவதற்கு முன் தேசங்களின் மேப்புகளை எப்படி உருவாக்கினார்கள்?
10. எலக்ட்ரானிக்ஸ் என்பது எலக்ட்ரானை அடிப்படையாக இயங்குவது. இந்த எலக்ட்ரானை கண்ணால் காணக் கூடிய மைக்ராஸ்கோப் உள்ளதா? இருந்தால் அது எங்கே உள்ளது? என்னைப் போன்ற சாமானியர்கள் போய் பார்க்க முடியுமா?
எல்லா விக்கி பசங்களும் ஒழுங்கா படிச்சி பதில் சொல்லனும் ஓ.கே வா?
Thursday, November 23, 2006
Subscribe to:
Post Comments (Atom)
21 comments:
இது எல்லாத்துக்கும் ஒரு சொல்லில் பதில் இருக்கு, அது என்ன தெரியுமா...? இப்போது மருத்துவர்களும் அதிகம் பாவிக்கிறார்களாம் "make a diagnosis" செய்ய...!!!
//இது எல்லாத்துக்கும் ஒரு சொல்லில் பதில் இருக்கு, அது என்ன தெரியுமா...? //
nono வா? :)
என்னுடைய அறிவிற்கு எட்டிய பதில்கள்...
//
1. Wine மற்றும் Gin ஆகியவைகளை Dry என்று குறிப்பிடுவதேன்? ஒரு திரவம் எவ்வாறு உலர்ந்திருக்கும்?
//
இங்கே dry என்பது உலர்ந்திருப்பதைக் குறிப்பதல்ல. சில நூற்றாண்டுகளுக்கு முன் இப்பானங்களில் சர்க்கரையைச் சேர்ப்பர். இக்காலத்தில் தயாரிக்கப்படும் மதுக்களில் சர்க்கரையை கிட்டதட்ட முழுமையாக நீக்கி விடுகின்றனர். எனவே இது dry - சுவையற்ற என்னும் பொருளில் குறிக்கப் படுகின்றது.
//
2. சினிமா பிலிம்களை பல ஆண்டுகாலமாக யார் எப்படி பாதுகாக்கிறார்கள்?
3. சினிமா பாடல்களின் ராயல்டி எப்படி வழங்கபடுகிறது? அது முறையாக உரியவருக்கு போய் சேருமா?
//
திரைஞானம் குறைவு என்பதால் இவ்விரண்டு கேள்விகளைத் தவிர்க்கிறேன்.
//
4. இந்தியாவில் ரயில் நிற்காத நிலையங்களிலும் இஞ்சின் டிரைவரும் ஸ்டேசன் மாஸ்டரும் ஒரு டென்னிஸ் பாட்டை மாற்றிக் கொள்வார்கள் அது என்ன?
//
நீங்கள் Single line working token ஐக் குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன். ஒரே இருவுள் பாதை இருக்கும் இடங்களில் எதிர் புறம் மற்றொரு வண்டி வருவதைத் தடுக்க இது போல் ஏற்படுத்தப் பட்டது. ஒரு நிறுத்தத்தில் இருந்து கிளம்பும் பொழுது இந்த token ஐ ஓட்டுனர் பெற்றுக்கொள்வார். இது இல்லாமல் எதிர் புறம் உள்ள வண்டி கிளம்ப முடியாது. இத்தடத்தில் உள்ள வண்டி அந்நிலையத்தை அடையும் பொழுது இந்த token ஐ அங்குள்ள station masterஇடம் கொடுத்துவிட்டுச் செல்வார். இம்முறை இப்பொழுது மாற்றப்பட்டு electric token வழங்கப்பட்டு வருகிறது. பழைய முறை இன்னும் எங்கேயாவது இருக்கிறதா என்று தெரியவில்லை.
//
5. விமானத்தில் இருக்கும் ப்ளாக் பாக்ஸ் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் அப்புறம் எதுக்கு ப்ளாக் பாக்ஸ் என்று பெயர்? அதேபோல் வெள்ளை அறிக்கை, மஞ்சள் பத்திரிக்கை என நிறங்களை வைத்து எதற்கு பெயர் வைக்கிறார்கள்/
//
இங்கே black என்பது வெளியில் தெரியாமல்/ மறைக்கப் பட்ட என்னும் பொருளில் வருகிறது. black box உள்ளே என்ன பதிவாகிறது என்பது எளிதில் கண்டு பிடிக்கவோ மாற்றவோ முடியாதது.
yellow journalism என்ற பதத்தை முதலில் பயன்படுத்தியது New york press என்னும் நிறுவனம். ஆனால் அதற்கான பெயர்க் காரணத்தை அவர்கள் தெரிவிக்கவில்லை.
இங்கிலாந்தில் அரசு நீளமான அறிக்கைகளை நீல அட்டை (blue binding) கொண்டும் சிறியவற்றை வெள்ளைத் தாள் கொண்டும் மூடி வைப்பது முறை. அதிலிருந்து வந்ததே வெள்ளை அறிக்கை. சுருக்கமாக உள்ள இவ்வறிக்கைகள் மக்களுக்கு எளிதில் ஒரு overview அளிப்பதாக இருக்கும்.
//
6. காரில் ஆட்டோமாடிக் கியர் எவ்வாறு இயங்குகிறது?
//
governor என்னும் கருவி gear pumpஇற்கு செல்லும் திரவத்தின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. வண்டியின் வேகத்திற்கு ஏற்ப இந்த governorஇன் வழியே செல்லும் திரவத்தின் அழுத்தம் கூடும். திரவத்தின் அழுத்தம் கூடக்கூட அடுத்த gear இல் வண்டி ஓடும். இதே போல் வண்டியின் வேகம் குறையும் பொழுது lower gear இல் வண்டி ஓடும்.
//
7. இரத்த பரிசோதனையின் போது ESR, CBC, LFT என்றால் என்ன? இதை வைத்து டாக்டர்கள் என்ன அறிகிறார்கள்?
//
ESR - Erythrocyte Sedimentation Rate குறிப்பிட்ட நேரத்தில் ஒரு குழாயில் உள்ள அரத்தத்தில் சிவப்பணுக்கள் எத்தனை புவியீர்ப்பினால் கீழே படிகின்றன என்று சோதித்தல்.
CBC - Complete Blood Count அரத்தத்தில் உள்ள ஒவ்வொரு அணுக்களின் அளவைக் கொண்டு என்ன நோயாக இருக்கலாம் என்று கணித்தல்.
LFT - Liver Function Test ஈரல் எவ்வளவு பழுதடைந்து இருக்கலாம் என்று கணித்தல்.
இவை எல்லாமே நோய் இருக்கலாம் என்பதற்கான அறிகுறிகளைக் கண்டுபிடிக்கவே. உண்மையில் இவற்றை வைத்து ஒன்றுமே அறிந்துகொள்ள முடியாது. இவை குறித்த அளவினுள் இருந்தால் நோயில்லை என்றும் அப்படி இல்லை என்றால் நோய் இருக்கலாம் என்றும் எவ்வகை நோயாக இருக்கலாம் என்றும் கொள்வர்.
//
8. இதய கோளாறு உள்ளவர்கள் பல் டாக்டரிடம் சென்று பல்லை சுத்தம் செய்தால் ஆண்டிபயாடிக் தருவதேன்? இதயத்திற்கும் பல்லும் என்ன தொடர்பு?
//
இதயத்திற்கும் பற்களுக்கும் உள்ள தொடர்பு இதுவரை நிரூபிக்கப்படவில்லையெனினும் பொதுவாக இதயம் பல்வேறு உடற்பாகங்களுடன் தொடர்புடையதாக நம்பப்படுகிறது. எனவே பற்கள், உடல் எடை, அரத்தம் மற்றும் பலவற்றையும் இதயத்தைப் பாதிக்கலாம் என்று கருதி முன்னெச்சரிக்கையாகச் செயல்படுகின்றனர்.
//
9. GPS/Satellite மற்றும் விமானம் வருவதற்கு முன் தேசங்களின் மேப்புகளை எப்படி உருவாக்கினார்கள்?
//
கால்நடையாக, பின்னர் குதிரைகளில், படகுகள் கப்பல்களில் செல்லும் பொழுது நேரம், தூரம் மற்றும் செல்லும் கோணத்தை வைத்து வரைபடங்களை உருவாக்கினர். 20ம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை சரியான வரைபடங்கள் என்று எதுவுமே இல்லை. எல்லாம் அரைகுறை தான்.
//
10. எலக்ட்ரானிக்ஸ் என்பது எலக்ட்ரானை அடிப்படையாக இயங்குவது. இந்த எலக்ட்ரானை கண்ணால் காணக் கூடிய மைக்ராஸ்கோப் உள்ளதா? இருந்தால் அது எங்கே உள்ளது? என்னைப் போன்ற சாமானியர்கள் போய் பார்க்க முடியுமா?
//
இல்லை. கண்ணால் காண முடியாது. மிக வேகமாய் படமெடுத்துத்தான் காண முடியும். அதுவும் அலைகளாகத் தான் காண முடியும். அப்படி ஒரு கருவி Pitts institute of nanoscience இல் உள்ளது என்று நினைக்கிறேன். இது போன்ற கருவிகள் வேறு இல்லை என்று நினைக்கிறேன்.
Floraipuyal,
அருமையான பதில்கள். கீப் இட் அப்.
நன்றி...நன்றி..நன்றி...
நீங்க விக்கி பசங்க குரூப்பிலே இல்லையா?
கொத்தனார், ப்ளோரைபுயல் மிக அருமையான கை அவரை உங்கள் டீமில் சேர்த்துக் கொள்ளுங்கள்
பகிரங்கக் கேள்வின்னா இப்டித்தான் இருக்குமா...
காலையில் பல்துலக்கும்போதுதானே இதெல்லாம் யோசிச்சீங்க?
ஹி ஹி,
சிறில், பல்துலக்கம் போது இன்று ஆபிஸில் என்ன வேலை என்ன மீட்டிங் என்று யோசிப்பேன். இன்று பனிபொழிவு கொஞ்சம் ஜாஸ்தி பாதிபேர் ஆபிஸிற்கு வரலை.
ஏதாவது எழுதாலாம் என யோசிக்க ஆரம்பிச்சு சட்டென்று அப்ப தோணின கேள்விகள்..
காரில் ஆட்டொமாட்டிக் கியர் இயங்குவது குறித்த புயல் சொன்ன பதில் முற்றிலும் தவறு. அவர் சொல்லியிருக்கும் பதில் ஒரு இஞ்சின் எவ்வித வேலைத் திறனிலும் ஒரே வேகத்துடன்(RPM) இயங்குவதற்கான முறை. இதன் பயன்பாடு ஜெனரேட்டர் போன்றவற்றில் இருகிறது.
காரில் ஆட்டொமாட்டிக் கியர் Fluid cupling, மற்றும் torque converter இவற்றின் உதவியுடன் செயல்படுகிறது. மேல் விவரங்களுக்கு கூகுளாண்டவரை நாடவும்.
சிலபல நீண்டநாள் கேள்விகளுக்கு விடை கிடைத்தது...ரயில் வரும்போது மாற்றும் டென்னிஸ் மட்டை மேட்டர் அருமை...
நன்றி விக்கிகளே !!
சிவா,
நல்ல கேள்விகள். கேட்ட இரண்டு மணி நேரத்தில் floraipuyal வந்து மிகத் தெளிவாக பதில் சொல்லி அசத்தி விட்டார். wiki பசங்க 'ஹாலிடே ப்ளான் பண்றது எப்படி'-னு பதிவு யோசிச்சிட்டிருக்காங்க போல இருக்கு. :-))
சினிமாப் படங்கள் மட்டும் இல்லை, எந்த கலைப் பொக்கிஷமாக இருந்தாலும் அது நாட்டுடைமையாக்கப்படாத வரை அதன் உரிமையாளர் பாதுகாப்பில்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
இதற்கென்று சில தனியார்த் தொண்டு நிறுவனங்களும், philanthropist-களும் பழைய அரிய படங்களை சேகரிக்கும் / பாதுகாக்கும் தொண்டைத் தொடங்கி இருக்கின்றார்கள். மேல் தகவல்களுக்கு
royalty உரிய நபருக்குப் போய்ச் சேருமா என்பதுப் பற்றி 'மனி சித்திரதாழ்' (மலையாளப் படம்) க்தாசிரியரிடம் கேக்கலாம்.:-))
software testing-லும் black-box testing என்று ஒரு முறை உண்டு. கிட்டத்தட்ட அதேப் பெயர்க் காரணம்தான். குறிப்பிட்ட software நாம் கொடுக்கும் input-ஐ வாங்கி சரியான output-ஐ கொடுக்கின்றதா என்பதை சோதனை செய்யும் முறை. அதற்கு நேர் எதிர் 'white-box testing' என்னும் முறை. சோதனை முடிவுகள் மட்டும் அல்ல அது எந்தெந்த வழிகளில் எல்லாம் அந்த முடிவுகளை அடைந்தது என்றும் analyze செய்வார்கள்.
நீங்கள் சொன்னது தவிர நிறைய விஷயங்களுக்கு நிறத்தை துணையாக (adjective) சேர்க்கிறோம். blue film, blue baby, green paper etc. அததற்கு தனித்தனியாக ஒரு காரணம் இருக்கிறது போல.
நன்றிகள் நவின்ற (thanks giving) பிறகு இங்கதானே வரனும் விக்கிப் பசங்க... காத்திருப்போம்.
அண்ணாத்தே...இப்போதைக்கு நம்ம பதிவுல ஒரு க்யூஸ் வச்சிருக்கேன். வந்து ஆசிர்வதிக்கனும்.
http://kaipullai.blogspot.com/2006/11/blog-post_24.html
//
காரில் ஆட்டொமாட்டிக் கியர் இயங்குவது குறித்த புயல் சொன்ன பதில் முற்றிலும் தவறு. அவர் சொல்லியிருக்கும் பதில் ஒரு இஞ்சின் எவ்வித வேலைத் திறனிலும் ஒரே வேகத்துடன்(RPM) இயங்குவதற்கான முறை. இதன் பயன்பாடு ஜெனரேட்டர் போன்றவற்றில் இருகிறது.
காரில் ஆட்டொமாட்டிக் கியர் Fluid cupling, மற்றும் torque converter இவற்றின் உதவியுடன் செயல்படுகிறது. மேல் விவரங்களுக்கு கூகுளாண்டவரை நாடவும்.
//
ஓகை, நீங்கள் குறிப்பிடும் torque converter மற்றும் fluid coupling engine வேகத்திற்கும் transmission குறைவான வேகத்தில் சுழல வகை செய்வது. இது இல்லாமல் engine ஐ நிறுத்தாமல் வண்டியை நிறுத்த முடியாது. நான் சொன்னது ஒரு கியரில் இருந்து மற்றொரு கியருக்கு தானாக மாற்றிக்கொள்ளும் automatic gear shift முறை.
A torque converter is a type of fluid coupling, which allows the engine to spin somewhat independently of the transmission. If the engine is turning slowly, such as when the car is idling at a stoplight, the amount of torque passed through the torque converter is very small, so keeping the car still requires only a light pressure on the brake pedal.
//
//
7. இரத்த பரிசோதனையின் போது ESR, CBC, LFT என்றால் என்ன? இதை வைத்து டாக்டர்கள் என்ன அறிகிறார்கள்?
//
ESR - Erythrocyte Sedimentation Rate குறிப்பிட்ட நேரத்தில் ஒரு குழாயில் உள்ள அரத்தத்தில் சிவப்பணுக்கள் எத்தனை புவியீர்ப்பினால் கீழே படிகின்றன என்று சோதித்தல்.
CBC - Complete Blood Count அரத்தத்தில் உள்ள ஒவ்வொரு அணுக்களின் அளவைக் கொண்டு என்ன நோயாக இருக்கலாம் என்று கணித்தல்.
LFT - Liver Function Test ஈரல் எவ்வளவு பழுதடைந்து இருக்கலாம் என்று கணித்தல்.
இவை எல்லாமே நோய் இருக்கலாம் என்பதற்கான அறிகுறிகளைக் கண்டுபிடிக்கவே. உண்மையில் இவற்றை வைத்து ஒன்றுமே அறிந்துகொள்ள முடியாது. இவை குறித்த அளவினுள் இருந்தால் நோயில்லை என்றும் அப்படி இல்லை என்றால் நோய் இருக்கலாம் என்றும் எவ்வகை நோயாக இருக்கலாம் என்றும் கொள்வர்.
//
ஒன்றும் சொல்லமுடியாது அல்ல, இதை வைத்துப் பல விஷயங்கள் நமக்குத் தெரிய வருகின்றது.
hepatitis போன்ற வியாதி இருப்பின், ரத்தத்தில் லிவரிலிருந்து வரும் என்சைம்களின் அளவு மாறுபடும்.
CBC வைத்து ரத்தத்தில் வெள்ளையணுக்கள் எண்ணிக்கை எவ்வாறு உள்ளது என்பதும், அலர்ஜி முதல் எயிட்ஸ் வரை நோயின் தீவிரம் எப்படி உள்ளது என்பதன் அறிகுறி சொல்லப் படும்.
உடலில் எங்கேயாவது inflammation இருப்பின் முதலில் ரத்தச் சிவப்பணுக்கள் sedimentation அளவில் தான் தெரியவருகின்றது. அதற்காகத்தான் ESR. inflammation இருப்பின் ரத்தத்தில் உள்ள fibrinogen அளவு அதிகரிப்பதால் சிவப்பணுக்கள் ஒன்றுடன் ஒன்று ஓட்டிக்கொள்ளும் அதனால் sedimentation வேகம் அதிகமாக இருக்கும்.
இதையெல்லாம் வைத்து ஒன்றும் சொல்ல முடியாது, என்று சொல்லமுடியாது. முதல் கட்ட அடிப்படை சோதனைகள் இவை.
//
10. எலக்ட்ரானிக்ஸ் என்பது எலக்ட்ரானை அடிப்படையாக இயங்குவது. இந்த எலக்ட்ரானை கண்ணால் காணக் கூடிய மைக்ராஸ்கோப் உள்ளதா? இருந்தால் அது எங்கே உள்ளது? என்னைப் போன்ற சாமானியர்கள் போய் பார்க்க முடியுமா?
//
எலக்ட்ரானைக் காண முடியாது.
காண்பதற்கு ஒளி வேண்டும். ஒளி பட்டால் எலக்ட்ரான் துள்ளிக் குதித்து வேறு இடத்திற்குச் சென்று விடும்.
//
ஏதாவது எழுதாலாம் என யோசிக்க ஆரம்பிச்சு சட்டென்று அப்ப தோணின கேள்விகள்..
//
சட்டுனு தோணின கேள்வியே இப்புடின்னா நீங்கள்ளாம் உக்காந்து யோசிச்சா நாடு தாங்குமா ?
:D
புயல், நான் மீண்டும் சரிபார்க்கிறேன்.
//சட்டுனு தோணின கேள்வியே இப்புடின்னா நீங்கள்ளாம் உக்காந்து யோசிச்சா நாடு தாங்குமா ?//
நாடு தாங்கமே தான் வெளிநாட்டிலே இருக்கோம் ....ஹி...ஹி... இது ஜொக்தான் வேறெந்த வெளிக்குத்தும் இல்லை
//. சினிமா பாடல்களின் ராயல்டி எப்படி வழங்கபடுகிறது? அது முறையாக உரியவருக்கு போய் சேருமா?//
சில சமயம் கிளிசரினாக சில சமயம் அதுவும் இல்லாமல் வெள்ளிவிழாக் கொண்டாடிய பின்பு ஜெலூசில் டேப்லட்ஸ் & சிரப்பாக சிறப்பாக வழங்கப்படும்!
விக்கி பசங்கள் எங்கே?
விடுமுறை முடிந்துவிட்டது. ஆபிஸ் வந்து 4 மணிநேரமும் ஓடி விட்டது. இன்னுமும் பதில் இல்லையா?
ஐயா, பதில் உடனடியாக வேண்டாம். இந்தா படிச்சிட்டோம் இன்னும் ஒரு வாரத்தில் பதிவிடுவோம் என சொன்னால் கூட போதுமே...
எங்கள் சார்பாக வந்து கேள்விகளுக்கு பதில் சொன்ன புயலாருக்கு நன்றி!!
(யோவ் சிவா, இன்னும் என்னய்யா விளக்கம் வேணும்? சும்மா பதிவு பதிவா போயி கூவிக்கினுக்கீற?)
அது சரிப்பு.. அவர் எல்லா கேள்விகளுக்கும் விடை அளிக்கவில்லை. அதுக்கு நீங்க பதில் சொல்லுங்க
automatic gear பற்றிய பதிலில் புயல், எப்படி ஒரு கியரிலிந்து மற்றொன்றுக்கு தானாக மாறுகிறது என்பதற்கான விளக்கத்தை தந்திருக்கிறார். சரியான விளக்கம் தான்.
ஆனால் நாமாக கியர் மாற்றும் வண்டிகளுக்கும் தாமாக மற்றிக்கொள்ளும் வண்டிகளுக்கும் இடையே உள் இயந்திர அமைப்பில் பல வேறுபாடுகள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமானது டார்க் கன்வெர்ட்டரும் பிளானட்டரி கியர்களும் ஆகும்.
உங்களை நான் குழப்பியதற்கு பதில் விரிவாக படங்களுடன் ஒரு பதிவு போட்டிருக்கலாம். முடிந்தால் செய்கிறேன்.
Post a Comment