Wednesday, November 08, 2006

எண்ணை விலை

உலகின் ஆதரமான எண்ணைவிலை கடந்த 5 மாதங்களின் 25% குறைந்துள்ளது. லிட்டருக்கு $1.15 வரை இருந்த பெட்ரோல் இப்போது லிட்டருக்கு 80 செண்டுகள் அளவிற்கு உள்ளது.

என்ன காரணம்?


போன கோடையில் அமெரிக்காவில் தாக்கிய சூறாவளி, சீன மற்றும் இந்தியாவில் எண்ணை தேவை அதிகரிப்பு ஆகியவை எண்ணை விலை பீப்பாய்க்கு $78 வரை தூக்கி சென்றது.

இந்த கோடையில் சூறாவளியை எதிர்ப்பார்த்து அமெரிக்கா அதிக அளவில் எண்ணையை கொள்முதல் செய்தது. சூறாவளி அடிக்கவில்லை ஆனால் தேர்தல் வந்தது. கொள்முதல் செய்த எண்ணையை சந்தையில் விட்டு விலைக்குறைத்தது. இந்திய/சீன தேவைகளில் மாறுதல் இல்லை. ஆக எண்ணைவிலையை நிர்ணயப்பவர்கள் அமெரிக்கர்கள்

OPEC என்னும் கூட்டுக் களவாணிகள் மற்றும் அமெரிக்க எண்ணை கம்பனிக்கொள்ளைகாரர்கள் விலை அதிகம் இருக்கும் போது அதிக லாபம் சம்பாதித்தன. எக்ஸான் மொபில் உலக சரித்திரத்தில் அதிக லாபம் ஈட்டியது.

அரபு நாடுகள் பணக்கடலில் மூழ்கின.

இப்போது விலைக்குறைந்து 57 -59 டாலரில் எண்ணை விற்கிறது. இதுவும் அதிகம் தான். உலகின் அதிக செலவில் எண்ணையை எடுக்கப்படும் கனடாவின் எண்ணை மணல் குவாரிகளில் எண்ணை எடுக்க பீப்பாய்க்கு 20 முதல் 25 டாலர்கள் தான் ஆகிறது.

அரபு நாடுகளில் 1 முதல் 4 டாலர்கள் தான் ஆகிறது.

எண்ணை விலை 59 ஆன பிறகும் இவர்கள் சம்பாதிப்பது கொள்ளை லாபம்தான்.

இந்நிலையில் நேற்றைய செய்தி ஒன்று என்னை வெகுவாக பாதித்தது.


OPEC என்னும் கூட்டுக் களவாணிகளின் தலைவரான சவூதி எண்ணை விலையை ஏற்ற உற்பத்தியை குறைக்க போகிறார்களாம். விலை ஏறினால் இவர்களின் முதலீடுகள் அதிகமாகுமாம். விலைகுறைந்து இவர்கள் வருமையில் வாடுபவர்கள் போல் புலம்புகிறார்கள் இந்த கொள்ளைக்காரர்கள்.

ஆனால் விலை ஏறினால் வளரும் நாடுகளின் சமானியர்களின் வாழ்க்கை நரகமாகும்.

பல நாடுகளின் அக்கிரமங்களை கண்டிக்கும் சமூக நீதி காவலர்கள் இந்த கொள்ளைக்காரர்களின் இந்த பகல் கொள்ளை கண்டுக் கொள்ளாமல் இருப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்

8 comments:

said...

நம்ம நாயர்கடை சாயாவை, உடன் கொறிக்கும் மசால்வடையின் விலையை 50காசு உயர்த்தினாலோ நம்மூர் செஞ்சட்டை வீரர்கள் தர்ணா, ஆர்ப்பாட்டம், கடையடைப்பெல்லாம் செய்வார்கள்.

பெட் ரோல் மதசார்பற்ற நாடுகளின் தயாரிப்பாச்சே எதிர்த்துக் குரல்தரமுடியுமா? நம் நாட்டைவிட OPEC & வளைகுடா நாடுகள் வறுமையில் வாடும் நாடுகள் வேறு கருணைகாட்டத்தான் செஞ்சட்டை அட்டைகள் இந்த பெட் ரோலிய விலையேற்றம் அறச்சீற்றம் என கண்டுக்காம விட்டுடறாங்கன்னு நினைக்கிறேன்!

அமெரிக்க எதிர்ப்புக்கூட ஏன் எண்ணைய்விலை உயர்வில் சீறிவரவில்லை?

ரஷ்யாவும் கணிசமாக எண்ணைய் உற்பத்தி செய்கிறதாலே என்ணைய் விலை உயர்வை சட்டை செய்யாமல் இருக்கின்றன இந்திய செஞ்சட்டைகள்

said...

"சமூக நீதி காவலர்கள்"-இவர்களுக்கும் பங்கு போகுமோ?என்னவோ?

said...

//பல நாடுகளின் அக்கிரமங்களை கண்டிக்கும் சமூக நீதி காவலர்கள் இந்த கொள்ளைக்காரர்களின் இந்த பகல் கொள்ளை கண்டுக் கொள்ளாமல் இருப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்//

:))

said...

எண்ணெய் விலை குறைவதைக் கவனித்தேன். ஆனால் 25% குறைந்துவிட்டதா? கவனிக்காமல் விட்டுவிட்டேன்.

said...

பாலாமணி, கொஞ்சம் பிசி அடுத்தவாரம் வரைக்கும்.
சரி செய்து விடுகிறேன்

said...

ஹரி,

இதில் அக்கிரமம் என்னவென்றால் எண்ணைவிலை உயரும் ஆனால் அங்கு வேலை செய்யும் வெளிநாட்டவர் சம்பளம் குறையும்.

என்ன அக்கிரமப்பா.... இந்த எண்ணைக்கம்பெனிகாரர்கள் செய்வது.

போனவாரம் ஒரு பேச்சுவார்த்தையில் நீ இந்திய பொறியாளர்களை உபயோகிப்பதால் உன் விலை கம்மியாக இருக்கவேண்டும் ஏன் அதிகமாக இருக்கிறது என ஒரு சவூதி கம்பெனி கேட்க, நீங்கள் இந்தியாவிற்கு கம்மியான விலையில் எண்ணை விற்றால் உங்களுக்கும் டிஸ்கௌண்ட் கிடைக்கும் என நான் சொல்ல ஒரே ராஸாபாசமாகிவிட்டது.

said...

//நீங்கள் இந்தியாவிற்கு கம்மியான விலையில் எண்ணை விற்றால் உங்களுக்கும் டிஸ்கௌண்ட் கிடைக்கும் என நான் சொல்ல ஒரே ராஸாபாசமாகிவிட்டது.//

சிவா தங்களின் இந்த துணிவான கருத்தைப் போற்றுகிறேன். எல்லா இந்தியனும் இப்படி விறைப்பாக இருக்கவேண்டும் அப்போ இந்தியாவுக்கு மதிப்பில் டிஸ்கௌண்ட் தராமல் இருப்பார்கள் அரேபியர்கள்.

said...

ஹரி, அந்த டிஸ்கஸனில் நான் கனேடியனாக கலந்து கொண்டேன்.

தூய மார்க்கத்தை பின்பற்றும் சவூதி அரேபிய உத்தமருக்கு என் தோலின் நிறமும் என் பிறப்பும் என் மதமும் உறுத்தியிருக்க வேண்டும்.

நம் அடிமைகள் அவர்களிடம் தான் கைகட்டி சேவகம் புரிகிறார்கள்