Tuesday, November 28, 2006

மனம் சூடான இடம் நோக்கி அலைகின்றது,,,

நேற்றும் இன்றும் கால்கரியில் 119 வருடங்களாக இல்லாத வரலாறு காணாத குளிர் இருந்தது . வெப்பம் -29 டிகிரிக்கு கீழ் சென்றது. மேலும் வாடைக் காற்றின் தன்மையினால் குளிர் -43 டிகிரி என்றுணரப்பட்டது.

என் வீட்டு முற்றத்தில் இருந்த ஊஞ்சல் டாப் மெத்தைகள் கழற்றப்பட்டு எலும்புகூடாக காட்சி அளிக்கிறது. பெஞ்ச் கவிழ்ந்தடித்து படுத்துக் கொண்டிருக்கிறது




பச்சை பசேலென்றிருந்த புல்தரை பனியால் நிறைந்து சந்திர மண்டலத்தைப் போல் காட்சி தருகிறது.


ரோடுகளில் கார்கள் வழுக்குவதால் 40 நிமிட அலுவலக பயணம் இரண்டு மணிநேரம் ஆகிறது.

வழக்கமாக அடிக்கும் அரசம்பழங்களும், தென்றலார்களும், ப்ரம்ம தேவர்களும் உதவி புரியாததால் சிவாவின் ரீகல்களும் நடை மனிதர்களும் மாவீரன் நெப்போலியர்களும் மிக உதவியாய் இருக்கிறார்கள்.

ஆக மொத்தம் ....

மனம் சூடான இடம் நோக்கி அலைகின்றது....

16 comments:

said...

புது வெள்ளை மழை இன்னும் இங்க வரலையே....:( இன்னும் வெய்யில் அடிக்குது. நம்புவீங்களா?

said...

ப்ளாக் ஐஸ் கவனமா இருங்க.

(இது நம்ம ப்ளொக் இல்லை:-))))))

நமக்கு இப்போ இன்னும் ரெண்டே நாளில் சம்மர். இன்னிக்கு 22 டிகிரி.

said...

LEHல் தங்கியிருந்த ஒரு நண்பன் அங்குள்ள பனிப்பொழிவைப் பற்றி சொன்ன போது,

என் மகன் 'அப்போ ஒண்ணுக்கு போன கூட உடைஞ்சு உடைஞ்சு விழுமா?' என்று கேட்டது ஞாபகத்துக்கு வருகிறது.

இது மாதிரியான பனிப்போழிவு பிரதேசங்களை காண ஆசைதான். மரம் செடி கொடிகள் படமிருந்தால் போடலாமே.

said...

//
வழக்கமாக அடிக்கும் அரசம்பழங்களும், தென்றலார்களும், ப்ரம்ம தேவர்களும் உதவி புரியாததால் சிவாவின் ரீகல்களும் நடை மனிதர்களும் மாவீரன் நெப்போலியர்களும் மிக உதவியாய் இருக்கிறார்கள்.
//

சில பேரு இதுக்காகவே வெளி நாட்டுல செட்டில் ஆயிற்றானுங்க...

என்னத்தச் சொல்றது. உங்களச் சொல்லல்ல...

தண்ணி அடிக்க ஒரு நல்ல சான்ஸு.

நடுவுல இலவசக் கொத்தனார் வேற வந்து அவுங்க ஊர்ல வெள்ளை மழை வரலன்னு கவலைப் பட்டுகிட்டு இருக்காரு...

ஐயா சாமிங்களா நீங்கள்ளாம் நம்ம தேனி பக்கமா வந்து பார்க்கணும்முங்க...

45 C சூட்டுல நடுமுதலைக்குளம் பஸ்ரூட்டு 69 ல ஏறிகிட்டு லோக்கல் சரக்க வெயிட்டா ஏத்திகிட்டு ஃபுல் மப்புல நம்மூர் சாதி சனம் அடிக்கிற லூட்டி இருக்கே...

கடைசி சீட்ல உக்காந்துகிட்டு பீடி பத்த வைக்கிறதுக்குள்ள ஊரு வந்து சேர்ந்துரும்.!

said...

எங்க ஊர்லயும் இன்னும் 30, 40 டிகிரியிலேயே இருக்கு சிவா அண்ணா.

கொத்ஸ். எங்க ஊர்லயே அப்படின்னா உங்க ஊர்ல 40, 50 டிகிரின்னு இருக்கணுமே! :-)

விரைவில் எங்கள் ஊரிலும் வெள்ளைமழை வந்துவிடும். :-( ஆனால் எங்கள் ஊர் ஊராட்சிகள் பனியை சாலையிலிருந்து அகற்ற அல்லும் பகலும் பாடுபடுவார்கள். அதனால் அலுவலகத்திற்குப் போக வழுக்கத் தேவையிருக்காது.

said...

கொத்தனார், வெய்ட் பார் டென் டேஸ்

said...

சுல்தான் சார், நானும் உங்க பையன் மாதிரி நினைச்சிக்கிட்டு இருந்தேன். இன்னும் சோதனை செய்து பார்க்கவில்லை.

இந்த தட்பவெப்ப நிலையில் எப்படி உடை உடுத்துவது என பார்த்தால்.. அப்புறம் ஒண்ணுக்கு போகும் ஆசையே வராது.

முதலில் வழக்கமாக அணியும் உள்ளாடை. பிறகு குளிர்காலத்திற்கேன பிரத்யேக உள்ளாடைகள். அதன் மேல் வழக்கமாக அணியும் நம் ஆடைகள். அதன் மேல் ஸ்வெட்டர். அதற்கு மேல் Thinsulated ஜாக்கெட். பிறகு குல்லாய், இரட்டை சாக்ஸுகள் மற்றும் கையுறைகள்.

இவ்வளவையும் அணிந்து சூடேற்றப்பட்ட காரில் அமர்ந்து ஆபிஸ் போய் மேலுல்ல இரண்டு லேயர்களை கழட்டிவிடுவோம். இவ்வளவு ஏற்பாடும் வழியில் மாட்டிக் கொண்டால் என்ன செய்வது என்ற முன் ஏற்பாடுதான். இந்த உடை அணிந்து ஒண்ணுக்கு போவது எப்படி :)

ஒண்ணுக்கு அடித்தாலும் அது சட்டென்று உறையாது. சிறிது நேரமாகும்.

மரம் செடி படங்களை பிடித்து ஏற்றுகிறேன்.

வருகைக்கு நன்றி

said...

துளசி மேடம், நீங்க தென்கோளமில்லையா..அதனால்தான்.

said...

வஜ்ரா, என்ன தேனீ பக்கம் ஏதாவது தேபிலை தோட்டம் அல்லது பருத்தி வயல் வாங்கிட்டீங்களா..

said...

அண்ணனைப் பார்க்கிற சாக்கில அப்பிடியே கிளம்பி நம்ம ஊர்ப்பக்கம் வர்றது!

இங்கே இன்னும் அவ்வளவு குளிர் இல்லை.

மத்த வசதிகள் எல்லாம் இங்கேயும் கிடைக்கும்!

அங்கே வசதி எப்படி?

said...

சிவாண்ணா
வெள்ளை மழையில் வீட்டுக்குள்ள அமைதியா ரீகல், நெப்போலியனார் கூட உரையாடுவதை விட்டு விட்டு, பனியில் என்ன வேலை?
ஒரே பாதச் சுவடுகளா (foot prints) தெரியுதே!

ஒருக்கா பனிப்புலிகள் வந்துச்சா? :-)))
ஸ்னோ மேன் செய்தீர்களா?

said...

குமரன், 30 டிகிரி பா. என்பது சுமார்
-1 டிகிரி C. எங்கள் ஊரில் இருப்பது -42 டிகிரி C அதாவது -43 டிகிரி பா

said...

KRS, அது காட்டு முயல்களின் கால்தடங்கள். இங்கே காட்டு முயல்கள் அதிகம். குளிருக்கு வசதியா அது வீட்டுக்கு அடியில் வந்து தங்கி கொள்ளும்

said...

SK சார், அவரும் ஊருக்கு போறார். ப்ராஜெக்ட் இப்பதான் சூடு பிடிக்குது.

இங்கே பயங்கர வசதிசார். உங்க ஊர் மாதிரி கண்ட்ரோல்டு கிடையாது. இரவு 3 மணி வரை சரக்கு கடைகள் ஜே என திறந்திருக்கும்.

இந்த விடுமுறையில் பேஸ்மெண்ட்டில் ஒரு பார் ஏற்பாடு செய்ய திட்டம்

said...

இங்கிட்டும் வெள்ளை மழை இன்னும் வர்லை! போன வருஷம் தேங்ஸ்கிவிங் நாளுக்கே பனிப்புயல் அடிச்சு நொறுக்கிருச்சி!

காலைல பூனை மூத்திரம் போனமாதிரி லேசா மழையோட சேந்து பனி. ஆனா அப்றமா சூரியன் போட்டுத் தாக்கினதுல அது பெஞ்சதும் தெரியலை, போனதும் தெரியலை. வார நடுவுல திரும்பவும் பனிப்பொழிவு இருக்கும்ங்கறாங்க. பாக்கலாம்! வர்ற வரைக்கும் வர்லையேன்னு இருக்கும். வந்ததுக்கப்புறம் எங்கடா சூரியனைக் காணோம்னு இருக்கும்! என்னமோ போங்க!

said...

sdsdsd