Thursday, December 07, 2006

ஒரு இராணுவ வீரரின் பார்வை

நேற்றைக்கு என்னுடைய ப்ராஜெட்டில் ஒரு புது மெம்பர் சேர்ந்தார். இவர் கனேடிய பொறியாளர். இராணுவத்தில் பணியாற்றிவிட்டு டிஸ்சார்ஜ் பெற்றுக் கொண்டு சிவிலியன் வாழ்க்கைற்கு திரும்பியுள்ளார். அவரின் முதல் சிவில் வேலை இது. மனிதர் கடோத்கஜனை போன்ற உடலுடனும் தீர்க்கமான பார்வையுடன், பொடியாக முடிவெட்டி இன்னும் இராணுவ வீரன் போல் காட்சிய்ளிக்கிறார். சமீபத்தில் ஆப்கானிஸ்தானிலுள்ள காந்தஹாரில் பணிபுரிந்துள்ளார். அவருடன் மதிய உணவு உட்கொள்ளும் போது நடந்த விவாதத்தில் ஒரு பகுதி. இவருடை பெயரை பீட் (Pete) என்று வைத்துக் கொள்வோம்:

நான் : ஆப்கானிஸ்தானில் அநாவசியமாக் நம் படைவீரர்கள் மடிகிறார்கள். (இங்கே நம் என்று என்னை பீட்டுடன் கனேடிய அடையாளம் காணுகிறேன்)

பீட் : மரணம் என்பது எல்லாருக்கும் நிச்சயம். படை வீரர்களுக்கு அது மிக நிச்சயம். அந்த மன்பான்மை இருந்தால் தான் படை வீரானாக இருக்க முடியும்.

நான் : நான் சொல்லவருவது என்னவென்றால் பீட், நம் படைவீரர்கள் நம் நாட்டை காக்க மடிந்தால் அதற்கு அர்த்தம் இருக்கிறது ஆனால் எங்கோ இருக்கும் அப்கானிஸ்தானில் போய்....

பீட் : சிவா நீ மிக குறுகிய நோக்கில் பார்க்கிறாய். நாம் அங்கே போனது ஒரு சர்வதேச உடன்படிக்கையில் ஒரு பயங்கரமான தீவிரவாதியை பிடிக்க. தீவிரவாதி ஓடி ஒளிந்துவிட்டான் அவனை நம்பிய மக்களை அம்போ என்று விட்டு விட்டு. நாம் திரும்பி வந்துவிட்டால் அவன் திரும்ப வருவான். அவனைப் பிடித்த பின்னால் உடனே நாம் திரும்பிவிட்டால் அதுவும் தவறு. சோவியத் ஆப்கானிஸ்தானை விட்டவுடன் நாம் திரும்பியது எவ்வளவு தவறு. ஒரு தீவிரவாத சமுதாயத்தை அல்லவா உருவாக்கிவிட்டோம். அந்த பாவத்திற்கு ப்ராயசித்தம் செய்ய வேண்டும்.

அங்கே பிறந்த குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள். அவர்களுக்கு நல்ல கல்வி, சுகாதாரம், மருத்துவ வசதிகள் ஆகியவற்றை அளிக்கவேண்டும். அவர்களை நல்ல மனிதராக ஆக்கி உலகில் தலை நிமிர்ந்து நடக்க வைக்கவேண்டும். அதற்கு 50/60 ஆண்டுகள் ஆகலாம்.

கல்வி ஒன்றே இந்த காலத்தில் முன்னேற வழிவகுக்கும்.

இயற்கை வளங்கள் அதிகம் இல்லாத உன் தேசம் வளரவில்லையா. மிக சிலர் மேற்கத்திய கல்வி மற்றும் விஞ்ஞானம் கற்றார்கள் முதலில். அவர்கள் நன்றாக வாழ்வதைப் பார்த்து மேலும் பலர் கல்வி கற்க முன் வந்தனர். உங்கள் நாட்டில் கல்வி கூடங்களில் இடம் கேட்டு போரட்டங்கள் நடப்பதைப் பார்த்து நான் பெருமை அடைகிறேன். (மிக விவரமான படைவீரர். நம் நாட்டின் ரிசர்வேஷன் பாலிஸி முதல் சாதி பிரிவுகள் வரை இவருக்கு தெரிகிறது). அவ்வாறு போரடுபவர் நிச்சயமாக முன்னேறுவர்.

ஆப்கானிஸ்தானில் கல்வி கற்றவர்கள் இல்லை. அங்கே கல்வி கற்று நல்ல வாழ்வு வாழியில்லாமல் கற்றவர்கள் வேறு இடத்திற்கு போய் விட்டார்கள். அங்குள்ள குழந்தைகளுக்கு கல்வியின் மதிப்பு தெரியவில்லை. என் போன்றவர்கள் துப்பாக்கி ஏந்தி தற்கொலை படையினரை கொல்வது மட்டும் எங்கள் வேலையில்லை மேலும் தற்கொலைப் படையினர் உருவாவதை தவிர்ப்பதும் எங்கள் வேலை. அதன் முதல் படியாக அந்த இளம் பிஞ்சுகளின் மனதில் கல்வி என்ற ஞானத்தை ஏற்றுவதுதான். இந்த வாழ்க்கை எவ்வளவு இனிமையானது. நிகழ்காலம் எவ்வளவு சிறந்தது என்பதை அவர்களுக்கு உணர்த்தினால் போதும். என்னால் ஒரு குழந்தை தற்கொலைப் படைவீரன் ஆவதை தவிர்க்க முடிந்திருந்தால் அதுவே நான் படைவீரனாய் பணியாற்றியதின் பெரிய பயன்.

நான் : அமெரிக்க இராணுவத்தில் வேலைக் கிடைக்காத ஒன்றுக்கும் உதவாத இளைஞர்கள் தான் உள்ளனர் என்ற பத்திரிக்கை/டிவி செய்திகள் உண்மையா?

பீட் : (பீட்டின் முகம் சிவக்கிறது) அமெரிக்க டாப்லாய்ட்கள் செய்யும் பரபரப்பு செய்தி இது. (டாப்லாய்ட் என்பது நம் ஜுனியர் விகடன், ந்க்கீரன் போன்ற பத்திரிக்கைகள்) நான் அமெரிக்க இராணுவத்தினருடன் மிக அதிகமாக வேலை செய்தவன். அவர்களின் நாட்டு பற்று என்னை வியக்க வைக்கிறது. அவர்களின் ஜனாதிபதி தவறு செய்கிறார் என் தெரிந்தும் அவர்கள் அளப்பறிய தியாகங்களை செய்கிறார்கள் . குள்ளநரிகள் எங்கும் இருக்கும் அந்த சதவீதம் மிக சிறிது. அது நம்முடைய இராணுவமாக இருக்கட்டும் அல்லது அமெரிக்க இராணுவமாக இருக்கட்டும். ஒருவருக்கு விருப்பமில்லையென்றால் அவர் இராணுவத்தில் சேர அவசியமில்லை. அரசாங்கம் யாரையும் கட்டாயப் படுத்தவில்லை. இராணுவத்தில் சேருபவர்கள் அவர்கள் விரும்பியே சேருகிறார்கள்.

அந்த நேரத்தில் அந்த உணவகத்தில் ஆல்பெர்ட்டாவின் (நான் வசிக்கும் மாநிலம்) முன்னாள் முதலைமச்சர் ரால்ப் கிளெய்ன் நாங்கள் அமந்திருந்த மேஜைக்கு அடுத்த மேஜைக்கு வருகிறார்.

ரால்ப் கிளெய்ன் சில நாட்களுக்கு முன் முதலைமச்சர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றவர். பீட் அவரிடம் சென்று தன்னை தானே அறிமுகம் செய்து கை குலுக்குகிறார். பிறகு என்னையும் அழைத்து ரால்ப் கிளெய்னிடம் அறிமுகப்படுத்தினார். நம் நாட்டில் முன்னாளோ இன்னாளோ என் போன்ற சாமனியர்கள் அருகில் போகதான் முடியுமா?

நான் : பீட் அங்கே மதபோதனைகளால் தான் மக்கள் மனம் மாறுகிறார்கள் என ஒரு கருத்து நிலவுகிறதே?

பீட் : சிவா... மனிதனுக்கு முதல் தேவை உணவு. அவன் பசி அடங்க எதையும் செய்வான். ஆப்கானில் உள்ள ஏழ்மையை இந்த அரபுகள் மதம் பக்கம் திருப்பி குளிர் காய்கின்றன. அதிகமான பணம் மூர்க்கனிடம் இருந்தால் அதுவும் ஆபத்தே.

உதாரண்மாக ஒசாமாவை எடுத்துக் கொள்வோம் அவன் ஏன் இன்னும் தற்கொலை செய்து கொள்ளவில்லை. உண்மையில் அவனுக்கு சொர்க்கம் கிடைக்கும் என நம்பிக்கை இருந்தால் சீக்கிரம் அங்கே போகலாமே. இங்கே என்ன வேலை. அவன் அனுப்பிய தற்கொலை படையினர் ஒன்றும் சும்மா வேலை செய்யவில்லை பணத்திற்காக தான். தான் அழிந்தும் தன் குடும்பத்தினர் வாழவேண்டும் என்ற தியாக மனபான்மையை மதம் என்னும் விஷம் கொடுத்து வ்ரவைத்தனர். மதம் மட்டுமே காரணம் என்றால் பணம் எதற்காக?. ஆப்கானில் சாகும் ஒவ்வொரு மனிதனுக்கும் பணம் தரப் படுகிறது. தற்கொலை என்பது ஒரு வியாதி. எத்தனைத் தற்கொலைப் படையினரை தடுத்து அவர்களுக்கு மருத்துவம் செய்து சரி செய்திருக்கிறோம் தெரியுமா உனக்கு?


இப்போது நாம் பேசியதை பதிவாக போடட்டுமா என கேட்டேன். ஓ தாரளமாக நான் ஆப்கானில் எடுத்த போட்டோ வேண்டுமா என்றான். இல்லை தேவை என்றால் எடுத்துக் கொள்கிறேன் என்றேன். பீட் என் டீமில் எனக்கு இணையாக வேலை செய்பவ்ர். அவர் என் பதிவுகளுக்கு அடிக்கடி தீனி போடுவார்

7 comments:

said...

ஓவ்வொருவரின் பார்வையும் ஒவ்வொரு விதம். பார்ப்பவற்றை எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதைப் பொறுத்து எல்லாம் அமைகிறது!

said...

நல்ல தீர்க்கமான பார்வை உங்கள் நண்பருக்கு. அவரது அனுபவங்களைத் தொகுத்துப் போடுங்களேன்.

said...

ஆமாம் சிவா,எனக்குக்கூட இந்த மாதிரி தோன்றியதுண்டு "நீ இந்த பணியை (தற்கொலை) செய்தால் சொர்கம் போவாய்,கன்னிப்பெண் கிடைப்பாள்" என்று போதனை செய்யும் ஆட்களை பிடித்து,முதலில் நீ போய் பார்த்துவிட்டு வா பிறகு நான் வருகிறேன் என்று சொல்லி அனுப்பவேண்டும்.அப்போது சொர்க்கம் எங்கு இருக்கு என்று தெரியும்.
தீவிரவாதியை பிடிப்பது மட்டும் எங்கள் வேலையில்லை அவர்கள் உருவாகாமல் இருப்பதும் கூட- என்பது எவ்வளவு உண்மையான வாதம்.

said...

கொத்தனார், பீட் இப்போதுதான் வேலையில் சேர்ந்தார், நானும் அவரும் பக்கத்துப்பக்கத்து அறைகளில் அமர்ந்திருக்கிறோம். ஒரே ப்ராஜெக்ட் வேறு. மனிதர் படு ஸ்மார்ட் ஆகையால் கூடிய சீக்கிரம் ப்ரமோஷன் கிடைத்தோ அல்லது வேறு கம்பெனிக்கொ போய்விடுவார்

said...

வடுவூர் குமார்,

அமெரிக்க படைவீரர்கள் ஆப்கான் போரின் போது அடிக்கடி இந்த வாசகம் சொல்லுவார்கள்

" கடவுளின் கடமை ஒசமாவிற்கு சொர்க்கத்தை தருவது. அந்த சந்திப்பிற்கு ஏற்பாடு செய்வது எங்களின் கடமை"

said...

ஆதிபகவான்,

நன்றி உங்கள் வருகைக்கு.

ஆம் ஒவ்வொருவரின் பார்வையும் ஒரு விதம்.

said...

சிவா, அந்த கனடியப் படைவீரரை எண்ணிப் பெருமை / பொறாமைப் படுகிறேன். ஏதோ கூலிக்கு மாரடிக்க வீரர்கள் சண்டைக்கு (அல்லது எல்லைப் பாதுகாப்புக்கு) போகிறார்கள் என்ற கருத்தைக் கூட சில 'லிபரல்' ஊடகங்கள் இந்தியாவில் பரப்பி வருகின்றன. இது தவறு.

அவரது எண்ணங்களில் இருக்கும் தெளிவு தான் செய்யும் பணியின் உன்னதத்தையும் தார்மீக லட்சியத்தையும் அவர் உள்வாங்கிக் கொண்டதால் ஏற்பட்டது. ஒரு கடைநிலைப் படைவீரர் வரை சென்றடைய வேண்டிய லட்சியத் தெளிவு இது.

அமெரிக்க ராணுவ வீரர்கள் பற்றிய அவர் கருத்துடன் உடன்படுகிறேன்.

இத்தகைய விஷயங்களை மேலும் எழுதுங்கள்.