Thursday, December 21, 2006

கிறிஸ்துமஸ் சீசன்

அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

இந்த வருடம் வழக்கத்திற்கு மாறாக கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் எனக்கு சிறிது அதிகமாகவே இருந்தன(லோக்கல் கலாசாரத்துடன் கலக்கிறேனோ என்னவோ). கடந்த 3 வாரத்தில் 10 பார்ட்டிகள். அதாவது இரண்டு நாளைக்கு ஒரு பார்ட்டி.

பேர்தான் கிறிஸ்துமஸ் பார்ட்டி. ஆனால் அங்கே சற்றும் மதச்சாயம் இல்லை.

பீப்பாய் பீப்பாய் களாக திராட்சை மதுவும் பீர்களும் குடிக்கப் பட்டன. மாடுகளும் கோழிகளும் உண்ணப்பட்டன. பரிசு பொருட்களும் வாழ்த்துகளும் பரிமாறபட்டன. புதுப்புது நண்பர்கள் என வட்டம் பெரிதாகியது.

நேற்றைக்கு CNN இல் After Jesus என்ற ஒரு இரண்டு மணிநேர ஆவணத் திரைப்படம் காட்டப்பட்டது. அதில் புதுப்புது செய்திகள் எனக்கு ஆச்சரியம் அளித்தது. கிருத்துவம் பரவ காரணமே யேசுவிற்கு பின்னால் வந்த அவரின் சீடர்களான பீட்டரும் மற்றும் அறிவுஜீவியான பால் என்பவரும் தான். என்பது மிக ஆச்சரியம்.

மேலும் சில ஆச்சரியங்கள்

1. சில முந்திய காலத்து கிறித்துவர்கள் பல கடவுளர்களை நம்பினார்கள்

2. பல கோஸ்பெல்கள் புதிய ஏற்பாட்டில் சேர்க்கவேவில்லை

3. கிறிஸ்துமஸ் ஒரு வசந்தகால விழாவாகதான் இருந்தது பின்னர் குளிர்கால விழாவாக மாறியது

4. க்நாஸ்டிக்ஸ் (The Gnostics) என்ற பிரிவினர் ஏதோ தெய்வகுற்றத்தால் தான் மனிதனுக்கு இந்த லெளகீக ஆசைகள் வந்துவிட்டன என நம்பினர். இதை அழிக்க ஒரே வழி மனிதன் தன்னைதானே அறிந்தும் தன்னுள் இருக்கும் தெய்வீகத்தையும் அறிவதுதான் என்பதே . (இது நம் இந்து வேதங்களிலும் உபநிடதங்களிலும் கூறப்பட்டுள்ள மையக்கருத்துக்கள்)

5. தத்தமது நம்பிக்கைகளை நிலைநாட்ட போர்கள், கொலைகள் கொள்ளைகள் நடந்தேறின முதல் 400 வருடங்களில்

6. முதல் நூற்றாண்டில் இருந்த அதே சந்தேகம் இன்னும் இருக்கிறது. அதாவது யேசு ஒருவர் இருந்தாரா அவர் இறந்து உயிர்த்தெழுந்தாரா என்பதே

இங்கே மக்கள் இந்தப் படத்தைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை

இந்த ஆவணப்படம் இப்போது ஒளிப்பரப்பக் காரணம் பரபரப்பிற்குதான். இதேபோல் இந்தியாவில் ஒரு விழாக்காலத்தில் ஒரு மதக் காண்ட்ராவோர்ஷியல் ஆவணப்படம் திரையிடப்பட்டிருந்தால் இந்தியாவில் கலவரம் வெடித்திருக்கும்.
அரசியல்வாதிகள் முதல் சமூகநீதி காவலர்கள் வரை தொண்டைக் கிழிய கத்திருப்பார்கள்.

அந்தத் திரைப்பட தயாரிப்பாளர் தலைமறைவாகியிருப்பார்.

நாம் போகவேண்டிய தூரம் வெகுதூரம்....

18 comments:

said...

எதுவானால் என்ன? எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறார்கள். நன்றாக சாப்பிடுகிறார்கள். ஏழைபாழைகளுக்கு உணவளிக்கிறார்கள்.

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!

said...

எழில், சந்தோசம் மட்டும்தான் நம் கொள்கை எதுவானல் என்ன

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

சி என் என் படத்தைப்பற்றிய தங்கள் கருத்துகள் என்ன?

said...

நம்மூரில் அழகிய பொம்மைக் குடிலில் குழந்தை ஏசுபிரானும், தாய் தந்தையர், தேவ தூதர்கள், ஆடு மாடு பொம்மைகள், வைக்கோல் போர் எல்லாம் பார்த்து, ரசித்து பரவசப்பட்டா மாதிரி இங்கே இல்லையே சிவாண்ணா!

ஆனா இதுவும் வேறு ஒரு பரவசம் தான்! ஒளி விளக்குகள், சாண்டா, பரிசுகள்!
Happy Holidays என்று தானே எல்லாரும் சொல்கிறார்கள்!
Merry Christmas என்று சொல்வது ஒரு சிலரே!

said...

பிளாக் படிப்பதில் சி.என்.என் ஐ எல்லாம் மறந்து போய் விட்டது..
:-))

பார்க்கவில்லை. பார்த்தால் கருத்து சொல்கிறேன். மேலும் இந்த மதம் சம்பந்தமான விஷயங்களில் அதிகம் ஆர்வம் இருந்ததில்லை. இப்போதுதான் இப்படி மாட்டிக்கொண்டு எனக்கு சம்பந்தமே இல்லாமல் எழுதிக்கொண்டிருக்கிறேன்..

நன்றி

said...

கே ஆர் எஸ்,

இங்கே என் நண்பர் வீட்டில் நீங்கள் சொன்னதை போல் கொலு வைத்திருந்தார்கள். ஒரு அழகான செட் காஸ்ட்கோவில் கிடைக்கிறது

said...

சி.என்.என். படத்தைப் பார்க்கவில்லை அண்ணா. ஆனால் இதெல்லாம் ஏற்கனவே இணையத்தில் படித்திருக்கிறேன். டாவின்சி கோட் படித்ததால் ஏற்பட்ட ஆர்வம். :-)

said...

சிவா விழாக்கால நல்வாழ்த்துக்கள்.

நம்ம ஊர் பல விஷயங்களில் பலதூரம் போகவேண்டியுள்ளது.

ஆழமாகப் பார்க்கையில் பல மதக் கோட்பாடுகளும் ஒன்றாகவே இருக்கின்றன. Parallel thought போல சமகால கலாச்சாரங்களின் சாரங்கள் ஒத்துப்போக வாய்ப்புக்கள் அதிகம், முக்கியமாக கொள்கை ரீதியானவை.

சி. என். என் படம் பார்க்கவில்லை.
வரலாற்றில் பல கண்துடைப்புக்கள் நிச்சயம் நடந்துள்ளன. எனக்குத் தெரிந்தவரை எந்த கலாச்சாரமும், வரலாறும் இதற்கு விதிவிலக்கில்லை.

இதோ இந்த இன்ஃபர்மேஷன் ஏஜிலேயே நம் கண்களுக்கு முன்பாகவே எத்தனை திரிபுகள் நடக்கின்றன... (நன்றி: சன், ஜெயா)
.


கண்ணபிரான்,
எங்க வீட்டுக்கு வாங்க குடில் வச்சிருக்கோம் கி. மரம் வச்சிருக்கோம்..

:)
பொதுவாக சர்ச்களில் (கத்தோலிக்கம்) குடில் வைப்பார்கள். இது இந்த வாரம்தான் அதிகம் 24ம் தேதியே வைக்கப்படும்.

said...

//இதேபோல் இந்தியாவில் ஒரு விழாக்காலத்தில் ஒரு மதக் காண்ட்ராவோர்ஷியல் ஆவணப்படம் திரையிடப்பட்டிருந்தால் இந்தியாவில் கலவரம் வெடித்திருக்கும்.
அரசியல்வாதிகள் முதல் சமூகநீதி காவலர்கள் வரை தொண்டைக் கிழிய கத்திருப்பார்கள்.

அந்தத் திரைப்பட தயாரிப்பாளர் தலைமறைவாகியிருப்பார்.

நாம் போகவேண்டிய தூரம் வெகுதூரம்....//

சரியாகச் சொன்னீர்கள். நானும் இதே போலப் பலமுறை எண்ணியிருக்கிறேன்

said...

சிவா
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள் .

சந்தோசமா இருக்கதானேப் பண்டிகையே .

நம்ம ஊரிலதான் இப்பல்லாம் டிவிப் பொட்டி முன்னாலதான எல்லாம் கொண்டாடுறாங்க ..

நல்ல சீசன்ல எதுக்கு இதெல்லாம் ஒயினையும் பீரையும் குடித்து சந்தோசமா இருப்போம் ..

எழில்
சம்பந்தமே இல்லாம எழுதுவதுதான் பின் நவீனத்துவம் -:)

said...

இதைப் பற்றி நான் கொஞ்சம் சொல்ல வேண்டும்.

நான்காண்டுகளுக்கு முன் ஒரு கிருஸ்த்மஸ் சமயத்தில்தான் ஐரோப்பிய சுற்றுப் பயணம் மேற்கொண்டேன். அங்கு இது ஒரு மத விழாவாகவே கொண்டாடப் படவில்லை. ஸ்ட்ராஸ்பர்க் நகரில் உள்ள மிகப்பெரிய கதீட்ரலுக்குச் சென்றபோது மட்டுமே நம்மவூர் தேர்த்திருவிழா போல களைகட்டியிருந்தது. பொதுவாகவே மேற்கத்திய கலாச்சாரத்தில் மக்கள் மதத்திற்கு அப்பாற்பட்டு வாழ்கிறார்கள். நாம் இன்னும் அந்த நிலைக்கு வரவில்லை. வர விட மாட்டார்கள் போலிருகிறது. மதத்தை ஜாதியை மறந்து வெரும் மனிதராய் மட்டும் வாழ்பவர்களையும் இங்குள்ள அரசியல் - கேடுகெட்ட அரசியல் எந்த விதத்திலாவது மதம் மற்றும் சாதிகளைப் பற்றி எண்ண வைத்துவிடுகிறது.

எந்த மதமோ அல்லது ஜாதியோ போற்றப்படும்போது எனக்கு ஒன்றும் ஆவதில்லை. சில புரிதல்களும் சில வழிமுறைகளும் கூட கிடைக்கின்றன. ஆனால் மதத்தில் ஈடுபாடில்லாமல், மதமே இல்லை என்று இருந்தவன் கூட ஒரு மதமும் அதன் சிந்தனைகளும் தூற்றப்படும்போது, இதன் நோக்கங்களையும் விளைவுகளையும் கண்ணெதிரே பார்க்கும்போது சும்மா இருக்க முடியவில்லை.

மேற்கிலிருந்து நாம் அறிந்து கொள்ளவேண்டியது - மதத்தைக் கடந்தவொரு நாகரீகத்தை. தீபாவளியும் பொங்கலும் மதப்பண்டிகைகளாக இல்லாமல் மகிழ்ச்சிப் பண்டிகைகளாக மாறவேண்டும். இதற்கான சாவி அரசியல்வாதிகளிடம் இருக்கிறது. இதற்காக அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் - சும்மா இருந்தால் போதும்.

said...

//இதற்காக அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் - சும்மா இருந்தால் போதும்//

ஓகை சார்,

மிக சரியாக சொன்னீர்கள். 1997 என்று நினைக்கிறேன், சிங்கப்பூரில் ஹரி ராய கிரி (ரமதான் அல்லது ஹஜ்), சீன புத்தாண்டு மற்றும் சிவராத்திரி (சிவாஸ் நைட்) ஒன்று சேர வந்தது. ஒரே கொண்டாட்டம் பாட்டம், பார்ட்டி தான்.

எல்லா மத்ததினரும் மகிழ்ச்சியாக கொண்டாடினோம்.

அந்த நாளும் வந்திடாதோ

said...

//ஒயினையும் பீரையும் குடித்து சந்தோசமா இருப்போம் //

இந்த சீசனில் ஒயினைப் பற்றி பெரிய புரிதல்கள் இருந்தது.

இனிமேல் பியரும் இல்லை விஸ்கியும் இல்லை திராட்சை ரசம்தான்.

ஒரு மாத கொண்டாட்டம் பிறகு ஒரு வார விடுமுறை.

நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளி குழந்தையும் சந்தோஷம் பற்றிக் கொண்டுள்ளது.

வாழ்த்துக்கள்

said...

நானும் சென்ற வாரம் ஓரு ஆவணப்படம் பார்த்தேன்.. இயேசுநாதரின் பிறப்பைச் சுற்றி உள்ள சர்ச்சைக்குண்டான, தெளிவற்ற விசயங்கள் சிலவற்றைப் பற்றி புனித பைபிள் ஆய்வாளர்களின் கண்ணோட்டம். நீங்கள் சொல்வதுபோல், நம் நாட்டில் இதெல்லாம் சரிப்படாது.

said...

//
நாம் போகவேண்டிய தூரம் வெகுதூரம்....
//

Exactly, we have to go along way...to achieve this maturity in social behavior.

Merry chritmas and happy new year.

said...

சிறில், கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். வெள்ளையடிக்கபடாத வரலாறுகளை நாம் நம் குழந்தைக்களுக்கு கற்றுக் கொடுப்போம்

said...

நிலா மற்றும் சேதுக்கரசி தாங்களின் வருகைக்கு நன்றி மற்றும் விழாக் கால வாழ்த்துக்கள்

said...

சிவா,

பண்டிகைக் கால மகிழ்ச்சி வாழ்த்துக்கள்!!

// மேற்கிலிருந்து நாம் அறிந்து கொள்ளவேண்டியது - மதத்தைக் கடந்தவொரு நாகரீகத்தை. தீபாவளியும் பொங்கலும்
மதப்பண்டிகைகளாக இல்லாமல் மகிழ்ச்சிப் பண்டிகைகளாக மாறவேண்டும். இதற்கான சாவி அரசியல்வாதிகளிடம் இருக்கிறது. //

இவர் என்ன சொல்ல வருகிறார்? இப்போது மட்டும் தீபாவளி, பொங்கல் மகிழ்ச்சிப் பண்டிகைகளாக இல்லையா? எல்லாப் பண்டிகைகளிலும் மதம் (மரபு என்பது இன்னும் பொருந்தும்) சம்பந்தமான சில விஷயங்கள் இருப்பது நமது கலாசாரத்திலேயே உள்ள விஷயம் (பெரியவர்கள் காலில் விழுந்து ஆசி வாங்குவது கூட மதச் சாயல் என்று சொல்வீர்களா?). நமது இசை, நடனம், சிற்பம் எல்லாம் இன்பமான விஷயம் தான்: அதில் ராமன், கண்ணன், ராதா போன்ற பண்பாட்டுக் குறியீடுகள் வருவதாலேயே "மதம் மதம்" என்று கூவக் கூடாது.

மற்றபடி இந்தப் பண்டிகைகள் முழுக்க முழுக்க மக்கள் கூடி மகிழவே உருவானவை. அப்படித் தான் செய்தும் வருகிறாம்.

சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி, கந்த சஷ்டி என்று இறை வழிபாட்டிற்காகவே சில பண்டிகைகளும் உள்ளன.

இதில் அரசியல்வாதிகள் எங்கே வந்தார்கள்??

said...

ஜடாயு,

முப்பது நாற்பது வருடங்களுக்கு முன் நம் சமூகத்தில் மத நம்பிக்கைகள் மிகவும் வேரூன்றி இருந்த அதே நேரத்தில் வேற்றுமைகள் பாராட்டுவதும் துவேஷங்களும் இல்லாமல் இருந்தது. இப்போது நிலைமை உங்களுக்குத் தெரியும். என் பின்னூட்டத்தில் அரசியல் வாதிகள் ஏன் வந்தார்கள் என்பது இதனால்தான். ஓட்டுக்காக இன்றும் தொடர்ந்து செய்யப்படும் மலினமான பிரித்தாளும் சூழ்ச்சிகளே இயல்பாகவே சகிப்புத்தன்மை மிகுந்த நம் மக்களை வேற்றுமை பாராட்டச் செய்கின்றன. 'உன் பெருந்தன்மை உன் பலவீனம்' என்று வலிந்து சொல்லப்படும் போது பெருந்தன்மை குறையத் தொடங்குகிறது. பெரும்பான்மையினரின் பெருந்தன்மைக் குறையும் நம் சமுதயத்தைப் பார்த்து கவலை வருகிறது. மேற்கிலிருக்கும் மக்களுக்கு இந்தப் பிரச்சனைகள் இல்லை. அமெரிக்காவில் எம்மதத்தினருக்கும் எவ்வித தொல்லையும் இல்லை. இதையே அவர்கள் மதத்தைக் கடந்து வாழ்கிறார்கள் என்று சொன்னேன்.

என் வீட்டில் கிருஸ்த்துமஸ் சமயத்தில் அந்த நட்சத்திர விளக்கு எரிவது வழக்கம். இந்த ஆண்டு அந்தப் பழக்கத்தை விட்டுவிடுமாறு நான் சில பெரியோர்களால் அறிவுருத்தப் படுகிறேன்.

என் பண்டிகையாக இருந்த விநாயகர் சதுர்த்தி இன்று என் மதப் பண்டிகையாக மாறும் அபாயம் ஏற்பட்டு விட்டது.

மத்தியில் காங்கிரஸும் கம்யூனிஸ்டுகளும் இங்கே திமுக மற்றும் திக வும் பெரும்பான்மை மக்களின் நலன்களைப் புறக்கனித்து சிறுபான்மையினரின் ஒட்டுக்களுக்காக செய்யும் அரசியல், நம் நாட்டை பெரும் சீரழிவுக்கு இட்டுச் சென்றுகொண்டிருக்கிறது. எல்லா மத மக்களும் சம எண்ணிக்கை வரும் வரை இந்தக் கொடுமை தொடரும் போலிருக்கிறது.

// (பெரியவர்கள் காலில் விழுந்து ஆசி வாங்குவது கூட மதச் சாயல் என்று சொல்வீர்களா?). //

தவறாகப் புரிந்துகொள்ளாதீர்கள். நானும் தெளிவாக எழுத முயற்சிக்கிறேன்.நன்றி.