Monday, February 26, 2007

0 டிகிரியிலிருந்து 180 டிகிரிக்கு

மு.கு. : சாய் பாபா பற்றி பதிவு வந்ததும் அதற்கு எதிர் பதிவு என்னிடம் இருந்து வரும் என பல பதிவளார்கள் நினைத்தது எனக்கு தெரிந்தது. அதனால்தான் இந்த பதிவு.

சாரு நிவேதிதா தமிழ் எழுத்துலகில் பின்நவீனத்துவத்தை எழுதுவதில் முன்னோடி. இவரின் சென்னை அனுபவங்கள் விரும்பி படிப்பேன் ஏனென்றால் என் அனுபவத்தை படித்தது போலிருக்கும். இவரும் நான் அடிக்கடி சென்று வந்த பார்களைப் பற்றியும் உணவு விடுதிகளையும் பற்றியும் எழுதியுள்ளார். இவர் வீடும் சென்னையில் எங்கள் வீட்டிற்கு அருகில்தான். இவர் வாக்கிங் போவதை பார்த்திருக்கிறேன். இவரிடம் பேச நினைத்துண்டு ஆனால் இவர் அதை விரும்பவில்லை என ஒரு முறை எழுதியிருந்தார். அதனால் பேசவில்லை. இவர் எழுதும் பொலிவிய நாட்டு இலக்கியங்களும், இசைபற்றிய கட்டுரைகளும் மற்றும் இவரின் இணைய காதலிகளின் சாட்களும் என் மிடில் கிளாஸ் மூளைக்கு எட்டாது.

இவர் சாய்பாபாவைப் பற்றி எழுதிய கோணல்பக்கங்கள் படிக்கநேர்ந்தது. அதை தமிழ் உள்ளங்களிடம் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு.

அந்த பதிவில் அவர் கூறுகிறார் " "பாபா இதையெல்லாம் (மோதிரத்தை) சட்டைக்குள்ளிலிருந்து எடுக்கிறார்" என சில பகுத்தறிவாளர்கள் கூறுவதை கேட்டிருக்கிறேன் அப்படியென்றால் பாபா ஒரு தங்க மலையை தன் சட்டைக்குள் வைத்திருக்கவேண்டும்"

சாய் பாபா பஜனைகள் பாடும் போது உபநிடத சுலோகங்களை பாடி முடிப்பார்கள். அதை சமசுகிருதத்தில் தந்தால் எதையும் தாங்கும் இதயங்கள் தாங்காதல்லவா ஆகையால் செந்தமிழில் இதோ

பொய்மையிலிருந்து உண்மைக்கு
இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு
மரணத்திலிருந்து முக்திற்கு

கடைசியாக சாருவிற்கு

0 டிகிரியிலிருந்து 180 டிகிரிக்கு

------------------------------------------------------------------------------------------------
பி.கு தலைவா சாரு, அடுத்த முறை நான் சென்னை வரும்போது என் போன்ற இலக்கிய தற்குறிகளுடன் பேசுவீர்களா?. தங்களுக்கு பிடித்த விரால் மீன் குழம்பு எனக்கும் பிடிக்கும் சாய் பாபாவும் பிடிக்கும்

7 comments:

said...

பொய்மையிலிருந்து உண்மைக்கு
இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு
மரணத்திலிருந்து முக்திற்கு


0 டிகிரியிலிருந்து 180 டிகிரிக்கு//

நச் பஞ்ச் சிவா:))

//தலைவா சாரு, அடுத்த முறை நான் சென்னை வரும்போது என் போன்ற இலக்கிய தற்குறிகளுடன் பேசுவீர்களா?. தங்களுக்கு பிடித்த விரால் மீன் குழம்பு எனக்கும் பிடிக்கும் சாய் பாபாவும் பிடிக்கும் //

அவருக்கு பிடிக்கவில்லை என்றால் நாம் ஏன் போய் பேசவேண்டும் சிவா?நம்மூர் மாதிரி வழியில் பார்த்தால் ஒரு ஸ்மைல் அல்லது ஹாய். அவ்வளவு தான்.

said...

//இவரிடம் பேச நினைத்துண்டு ஆனால் இவர் அதை விரும்பவில்லை என ஒரு முறை எழுதியிருந்தார்.//
சிவா,
நீங்கள் ஆணாக இருக்கும் பட்சத்தில் மேலே உள்ள மேட்டர் applicable. :)) ஒரு பெண்ணாக இருந்தால் கண்டிப்பாக அவர் அதை விரும்புவார் உங்களிடம் chat செய்வார் அப்புறம் உங்களை சந்திக்க கண்டிப்பாக வருவார் (அந்த பெண் சந்திக்காத பட்சத்தில் அவரை பற்றி நல்ல முறையில் தன்னுடைய பக்கத்தில் எழுதுவார்.).அப்புறம் சாய்பாபாவின் லிங்கம், மோதிரம் முதலியவற்றை நான் நம்ப மாட்டேன் அதைக்குறித்து ஏராளமான வீடியோ BBC, youtube போன்ற இடங்களில் உள்ளன நீங்க கூட போயி பார்க்கலாம் ஆதாரத்துடன் நிருபித்து உள்ளனர் அது பொய்/வித்தை என்று.

said...

சிவா,


நானும் இதைப் பற்றிய என் கருத்துக்களை எழுதியுள்ளேன். என்ன ஒரு ஒற்றுமை பாருங்கள் :-)


சாரு மனதில் தோன்றியதை எழுதுகிறார். அவ்வளவுதான். ஒரே டிகிரியிம் மனம் எப்போதும் இருக்காது அல்லவா?

:-)

said...

ஏற்கனவே உயிர்மையில் இவர் ரஸ்புதீன் குறித்து எழுதியிருந்ததை படித்தேன். இந்த கட்டுரையில் எழுதியிருக்கிற விசயங்கள் குறித்தும் சில விமர்சனங்கள் உண்டு. விரிவாக பின்னால் எழுதுவேன் என்றுதான் நினைக்கிறேன். (யாராவது படிங்கப்பா). பாபா பற்றி அவர் எழுதியிருப்பது அவரது அசாத்திய தைரியத்தை காட்டுகிறது. ஏனென்றால் இண்டலக்சுவல் ஆன்மிகம் என்பதே ஜேகேயும் ஓஷோவும்தான் என்கிற மாதிரி தமிழ் சூழலில் சனாதன சாரதியை குறித்து நெகிழ்வாக ஒரு கட்டுரையை எழுத நிச்சயம் தைரியம் வேண்டும். இனி காலம் காலமாக அவரை திட்ட அவரது இலக்கிய 'நண்பர்கள்' கும்பல் இந்த கட்டுரையை பயன்படுத்தும் என்பது அவர் அறியாததல்ல. மேலும் இதே ஸ்டாண்டில் அவர் எத்தனை காலம் நிற்பார் என்பதும் தெரியாது. எதுவானாலும் சாருவுக்கு பாராட்டுக்கள். அது குறித்து பதிவு போட்ட உங்களுக்கும் தான்.

said...

செல்வன், ஆம் ஹாய் சாரு என சொல்லி நகர்ந்து விடலாம்

said...

சந்தோஷ், அற்புதங்கள் எனக்கு தேவையில்லை எனக்கு. பாபாவின் Serve All Love All என்ற கொள்கையில் நம்பிக்கை உண்டு

said...

நீல்ஸ், நன்றி. சாரு ஒரு இம்பல்ஸிவ் ரைட்டர் என்பது என் அபிப்ராயம். இந்த இம்பல்ஸ் எத்தனை நாளைக்கு என பார்க்கலாம்.