தடைகள் இல்லாத பயணம் உற்சாகமாக இருக்கும். சோம்பல் இருக்காது. புத்துணர்வும் அமைதியும் நிறைந்த பயணமாக இருக்கும்.
அதே போல் தான் வாழ்க்கையும்.
மனத்தடைகள் இல்லாத வாழ்க்கை அற்புதமானது. மனத்தடைகள் நமக்கு எங்கிருந்து வருகின்றன. முதலில் வீட்டிலிருந்து பிறகு பள்ளியில், சுற்றம், நட்பு இவர்களிடமிருந்து. இதைத்தான் ஒஷோ "பெற்றோர்களே உங்கள் குழந்தைகளை உங்களிடமிருந்து காப்பாற்றுங்கள்" என்றார். உலகில் அனைவரும் தங்கள் மனத்தடைகளை மற்றவர்கள் மேல் திணிப்பதில் மும்முரமாக உள்ளார்கள்.
ஒரு சாரர் குழந்தை பள்ளிக்கு செல்ல ஆரம்பித்தவுடன் இதை செய்யாதே அதை செய்யாதே என எல்லாவற்றுக்குக் தடை செய்துக் கொண்டே இருப்பார்கள்.
இன்னொரு சாரர் மியூசிக், காரத்தே, கிரிக்கெட், ஹிந்தி, டியூசன் என ஓய்வில்லாமால் குழந்தையை ஓட்டிக் கொண்டே இருப்பார்கள். சதாகாலம் டென்ஷன்தான். இந்த பெற்றோர்கள் வெளிநாடு வந்தும் இங்குள்ள அமைதியான வாழ்க்கையை ஏற்றுக் கொள்வதில்லை. குழந்தைகளுக்கு பாட்ம் கம்மியாக இருக்கிறது என புலம்பி கொண்டே இருப்பார்கள்.
இவ்வாறு வளரும் குழந்தைகள், ஓடி ஓடி அலைந்து அல்லாடி கூடிய சீக்கிரம் உடல் தளர்வடைவதை போல் மனதளர்வை சீக்கிரம் அடைகின்றனர். இதை மன அழுத்தம் அல்லது டிப்ரஷன் என்றும் அழைப்பர். (கிளினிக்கல் டிப்ரஷனுக்கு காரணம் மூளயில் சுரக்கும் சில இரசாயன திரவங்கள் சமநிலை தவறுவதால் ஏற்படுகிறது. இதற்கு மாத்திரைகள் மருந்துகள் உண்டு. அது வேறு விஷயம்.)
நாமும் மகிழ்ச்சியாக இருந்து மற்றவர்களயும் சந்தோஷமாக வைத்திருந்தால் மனத்தளர்விற்கு வாய்ப்பு ஏது?
மனம் தளர்வடையாமல் இருக்க சில யோசனைகள்:
1. உங்களுக்கு பிடித்த வேலையை அல்லது படிப்பை தேர்ந்தெடுங்கள்.
2. பிடித்தவேலை கிடைக்கவில்லை அல்லது மிக அசாதரண திறமை இல்லை என்ன செய்வது? வாழ ஒரு வேலை கிடைக்காமலா போய்விடும். கிடைக்கும். அங்கே சேர்ந்து அங்குள்ளவர்களை மகிழ்ச்சி படுத்துங்கள்.
3.உங்களுகாக உங்களுகாகவே ஒரு நாளில் ஒரு மணி நேரத்தை ஒதுக்கி தனியாக இருங்கள். தனிமையை அனுபவியுங்கள். மனம் ஓய்வு எடுத்துக் கொள்ளும். மகிழ்ச்சி தானக வரும்
4. எதிர்காலம் பற்றிய பயத்தை விடுங்கள். தாங்கள் செய்யும் வேலையை முழு மனதுடன் இன்றே செய்யுங்கள். எதிர்காலம் இன்று போல் நன்றாக தான் இருக்கும்
5. உங்கள் குழந்தைகள அவர்கள் மனம் போல் வளரவிடுங்கள். தவறான வழியில் போனால் மட்டுமே அவர்களை நல்வழி படுத்துங்கள். அதுவும் அன்பாக பேசி
இப்போது அனுபவம்:
கோபால் என்ன தான் முயற்சித்தாலும் கணக்கு வரவே இல்லை.
ஆனால் அழகாக படம் வரைவான். உங்களைப் பார்த்தால் உங்களை போட்டோ எடுப்பது போல் வரைந்துவிடுவான்.
பென்சில், சாக்கு, கரி ஏன் உளி கொண்டு கட்டையில் கூட வரைந்துவிடுவான். ஆனால் விட்டார்களா அவனை...... வீட்டில் கரித்துக் கொட்டிவிட்டார்கள். பக்கத்து வீட்டு பையன்கள் ஐஐடி பிட்ஸ் அண்ணா என போனபோது இவன் கரஸ்ஸில் லிட் படித்தான். ஆங்கிலத்திலும் நாம்மாளுக்கு புலமை அதிகம். அட்வர்டைசிங் கம்பெனியில் சின்ன ஆர்ட்டிஸ்ட் என ஆரம்பித்து காப்பி ரைட்டர் வரைக்கும் உயர்ந்தான். கம்யூட்டர் வந்தது அதில் கிராபிக்ஸ் அனிமேஷன் என தூள் கிளப்பி இவன் தவறவிட்ட, ஐஐடி அண்ணாவில் படித்த நண்பர்கள் சென்ற, அமெரிக்காவிற்கு சென்று அவர்களை விட அதிகம் சம்பாதிக்கிறான். இப்போது பெற்றோரும் சுற்றாரும் போற்றுகின்றனர். ஆனால் அவன் பட்ட அவமானங்கள் எத்தனை?
அப்பப்பா... சின்ன வயதில் அவனை அவன் வழியில் விட்டிருந்தால் அவன் இன்னும் சிறப்பாக வந்திருப்பான்.
மனத்தடைகளை களைந்து மனத்தளர்வுகள் இன்றி அமைதியான மகிழ்ச்சியான வாழ்கையை வாழுவோம்
பி.கு.
சுவாமி சுகபோதனந்தா, நித்தியானந்தா, சுகி.சிவம் போன்றவர்களுக்கு போட்டியாக வரவில்லை. ;))))
சிலா கார்பரேட் மொரேல் பூஸ்டர் செமினார்களில் பங்கு கொண்டதின் விளைவு.
எல்லா பசங்களும் நம் கீதை, யோகா, உபநிடதங்கள் இவற்றிலிருந்து தத்துவங்களை எடுத்து அழகாக கையாளுகின்றனர்.
5 நட்சத்திர ஓட்டல்களில் தங்கி நம் நாட்டின் தத்துவங்களை இவர்கள் மூலம் அறிந்து வியக்கிறோம்.
உம்ம்ம்..... "இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கொங்கோ அலைகின்றாய் ஞான தங்கமே" என்ற பாடல் மனதில் ஓடியது
Friday, February 09, 2007
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
//
எல்லா பசங்களும் நம் கீதை, யோகா, உபநிடதங்கள் இவற்றிலிருந்து தத்துவங்களை எடுத்து அழகாக கையாளுகின்றனர்.
//
இந்திய பள்ளிக் கல்லூரிகள் தவிர என்று கூடச் சொல்லலாம். பாழாய்ப் போன secularist மாங்காக்கள் கீதையெல்லாம் சாதி வெறி தூண்டும் புத்தகம் என்று தள்ளி வைத்து விட்டார்கள். யோகா உபனிடதங்கள் எல்லாம் sanskritization என்கிறார்கள்.
சுய ஏளனத்தின் உச்சகட்ட பரிணாமம் நம் இடது சாரி அட்டைகள்.
நீங்க சொல்லி இருக்கும் 5 பாயிண்ட்டுகளையும் தொடர்ந்து கடைபிடிக்க முயற்சி செய்கிறேன். அப்படியாவது ஒரு நல்ல வழி கிடைத்தால் சரிதான்.
//சுய ஏளனத்தின் உச்சகட்ட பரிணாமம் நம் இடது சாரி அட்டைகள்//
இதில் என்ன சந்தேகம்
கொத்தனார், 5 ஆ. நாலுதானே சொல்லிய்ருக்கேன்.
நிச்சயமாக நல்ல வழி கிடைக்கும்
1,2,3,3,4 - இது 5 பாயிண்ட்டுகளாச்சேண்ணா.
(கண்டுபிடிச்சு சொன்னது நம்ம இளையவர். தமிழ் படிக்கத் தெரியாதுன்னாலும் சும்மாகூட உக்காந்து நம்பர் எல்லாம் பாத்துடுவாரு!)
சூப்பர், சின்னவர். மனத்தடைகள் இல்லாதவர். மனத்தளர்வை அடையாதவர்.
என்னுடைய அன்பை தெரிவியுங்கள்.
பதிவை திருத்தியாகிவிட்டது.
//சுவாமி சுகபோதனந்தா, நித்தியானந்தா, சுகி.சிவம் போன்றவர்களுக்கு போட்டியாக வரவில்லை.//
பித்தானந்தாவை விட்டு விட்டீர்களே!
:))
இங்கே வளரும் எல்லாப் பிள்ளைகளும் அவரவர் விருப்பப்பட்ட பாடங்களையே
எடுத்துப் படிச்சாலும், பலர், நண்பர்கள் குழாமில் வருகிற ப்ரெஷராலெ இப்படி மனத்தளர்வு
ஏற்பட்டு மருந்து மாத்திரைகளை முழுங்கிக்கிட்டு இருக்கறாங்க. (-:
முதல் நான்குடன் ஐந்தாவது ஒட்டவில்லை.!!!
உங்கள் 'கோபால்' எப்படி தன் இளவயதைச் சமாளித்தார் எனச் சொல்லவில்லையே!
உதாரணத்தில் அவன் எப்படி இவற்ரைக் கடந்தான் என்பது சரியாக விளக்கப்படவில்லை எனக் கருதுகிறேன்.
//பித்தானந்தாவை விட்டு விட்டீர்களே!
//
சாரி மன்னித்துக்கொளுங்கள் :)
துளசி, மேடம் பியர் ப்ரஷ்ஷர் இருந்தால் நாம் வழிகாட்ட வேண்டும்.
எஸ் கே சார், 5 பாய்ண்ட் குழந்தைகள் வளர்ந்த பிறகு பெற்றோருக்கு வருவது.
கோபால், பெற்றோரை கண்டு கொள்ள வில்லை. உறவினர்களிடம் ஒட்டவில்லை. தன்னை மதித்தவர்களிடம் கூடினான். என்னிடம் நட்பாக இருந்தான். அபார மன தைரியம் அவனுக்கு
சிவா, நல்ல பதிவு. உங்கள் அனுபவத்தைக் கல்வியாக்கி மனத்தடைகள் இன்றி மற்றவர்களுடன் அதைப் பகிர்ந்து கொள்கிறீர்கள். அருமை!
டிப்ரஷன் பற்றி ஸ்ரீஸ்ரீ ஒருமுறை சொன்னார் - "வேறு எதையும் நினைக்காமல் தன்னைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பது தான் டிப்ரஷன் வருவதற்கு மன அளவில் முக்கியக் காரணம்" என்று. இளவயதினர் தனிமையில் இந்த நினைப்புகளில் பெருமளவு அமிழ்ந்து விடுகிறார்கள்.
இதற்காக தனிமையைத் தவிர்க்கக் கூடாது, அது மிகவும் தவறு. தனிமை சுய அறிதலுக்கு இட்டுச் செல்ல வேண்டுமே அன்றி சுய விரக்திக்கு அல்ல.
தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
- திருமூலர்
Post a Comment