Tuesday, February 27, 2007

AC-360


நேற்று ஆண்டர்ஸன் கூப்பரின் AC-360 நிகழ்ச்சியில் கணிசமான இடத்தைப் பெற்றது இரண்டு செய்திகள்

முதல் செய்தி இயேசு குடும்பத்தாரின் கல்லறைப் பற்றிய ஜேம்ஸ் காமரூனின் ஆவணப்படம். எழிலும் இதைப் பற்றி இரண்டு பதிவுகளை பதிந்துள்ளார். இந்த படம் கிருத்துவத்தின் ஆணி வேரை அசைக்கும் அளவிற்கு செய்திகள் கொண்டவை என விவாதித்தார்கள். இந்த விவாதத்தில் மத குருமார்கள், விஞ்ஞானிகள், நிருபர்கள் பங்கு கொண்டனர். விவாதம் ஒரு அறிவாளித்தனத்துடன் நடந்தது. இது இயேசுவின் எலும்பா? இதனால் கிருத்துவம் ஆட்டம் காணுமா என்பதில் என் கருத்து எதுவும் இல்லை. ஆனால் மக்கள் அதை எதிர்கொண்ட விதம் என்னை பொறாமை கொள்ள செய்தது. அமைதியாகவும் காரசாரமாகவும் விவாதித்தார்கள் வன்முறை வெடிக்கவில்லை.

ஆனால் நம் நாட்டில் ஜட்டியில் ராமர் படம் போட்ட பிரான்ஸ் கம்பெனிக்கு எதிர்ப்பு தெரிவித்து நம் நாட்டின் பஸ்ஸை உடைப்பார்கள்.

இஸ்லாமிஸ்டுகளுக்கு சொல்லவே வேண்டாம் முகமதுவின் படத்திற்கு செய்த அட்டூழியங்கள் கொஞ்ச நஞ்சமா? கடைசியில் என்ன நடந்தது எல்லாரும் அந்த படத்தைப் பார்த்தார்கள்.

டாவின்சி கோட் படத்தை தடை செய்தது நம் மத சார்பற்ற அரசு ஆனால் அதன் டிவிடி விற்பனையை உயர்த்தி கொள்ளை லாபம் சம்பாதித்தென்னவோ இதே அரசியல் வாதிகள்தான்

சரி, கிறிஸ்துமஸ் போதும் ஈஸ்டர் போதும் இந்த மாதிரி படங்கள் ஏன் வருகின்றன? எல்லாம் பணத்திற்கு தான். இந்த நேரங்களில் மக்கள் இயேசுவை நினைப்பார்கள் அப்போது இந்த மாதிரி படங்களை வெளியிட்டால் மில்லியன்களை சுலபமாக தேற்றலாம்.

இராண்டாயிரம் வருட இரண்டு பில்லியன் மக்களின் நம்பிக்கையை இந்த மாதிரி படங்கள் மாற்ற போவதில்லை என்பது எல்லாருக்கும் தெரிந்திருக்கிறது.

ஆனால் இந்த மாதிரி விவாதங்கள் அவசியம் என்பது என் அபிப்ராயம் . உண்மைகளை அறிய மனித மனம் மேற்கொள்ளும் ப்ரயத்தனங்கள் எத்தனை.... எத்தனை.......


அடுத்த செய்தி மாவீரன், பேட்டை ரவுடி, கூலிக்கு மாரடிக்கும் முஷாரப்பைப் பற்றியது.


இது சற்று வீரமானது.

இதுவரைக்கும் 10 பில்லியன் டாலர்களை தந்துவிட்டோம் இந்த முஷாரப் ஏன் இன்னும் தீவிரவாதிகளை டெலிவரி செய்யவில்லை என சட்டையை பிடித்து கேட்கிறது இந்த ரிப்போர்ட்.

நம் தோழர் என்கிறோம், அணு ஆயுதம் வைத்திருக்கும் இந்த நாட்டை அவ்வளவாக நாம் கண்டிப்பதில்லை, பில்லியன்களை கொட்டி உதவுகிறோம் ஆனால் தீவிரவாதிகளை இவர்கள் நாட்டில் இன்னும் சகல வசதிகளுடன் வாழ்கிறார்கள். நம் வரிப்பணத்தில் இவர்கள் உண்டு களிக்கிறார்கள் நாம் என்ன இளிச்சவாயர்களா? என அமெரிக்கர்களை உசுப்பேத்துகிறார் ஆண்டர்ஸன்.

ஆண்டர்ஸன் கூப்பர் போன்ற தேசப்பற்றுமிக்க பத்திரிக்கையாளர்கள் நம்நாட்டில் இல்லாதது நாம் செய்த துரதிருஷ்டமே.

ஆண்டர்ஸன் கூப்பர் வாழ்க

6 comments:

said...

ஆண்டர்சன் கூப்பர் நம்மை போல் ஒரு வலைபதிவரும் கூட சிவா.அந்த வகையில் நாம் அனைவரும் மகிழ்ச்சி அடைய வேண்டும்.

கிறிஸ்தவத்தை விமர்சிக்க அமெரிக்காவில் இருக்கும் சுதந்திரம் அளப்பரியது.இந்த விஷயத்தில் அமெரிக்க அரசின் மதசார்பின்மையை நினைத்து உண்மையிலேயே மகிழ்ச்சி அடைகிறேன்.

முஷாரப்பை தட்டிக்கொடுத்து வேலைவாங்க அமெரிக்காவுக்கு தெரியும்.அவர் பதவி இறங்கினால் அடுத்து பாகிஸ்தானில் ஆட்சிக்கு வர இருப்பது தலிபான் தான் என்பதால் அவரை அமெரிக்கா லேசாக மிரட்டுமே அன்றி வேறெதுவும் செய்யாது

said...

செல்வன், நான் ஆண்டர்சன் கூப்பரின் ரசிகன்.

நம் நாட்டில் மத விமர்சனங்கள் துவேஷங்களுடன் நின்று விடுகிறது.

முஷாரப் தீவிரவாதம் எனும் பொன்முட்டையிடும் வாத்தை வைத்துக் கொண்டு உலகை பயமுறுத்துகிறார். அது உயிருடன் இருக்கும் வரை அமெரிக்கா பணம் தரும்.

said...

நான் பார்க்காம விட்டுட்டேனே. நல்லா இருந்திருக்கும் போல.

said...

//அது உயிருடன் இருக்கும் வரை அமெரிக்கா பணம் தரும்.//

கால்கரி சிவா அய்யா,

முதலில் தீவிரவாதிகளை உற்பத்தி செய்ய பாகிஸ்தானுக்கு,அமெரிக்கா பண உதவி செய்தது.இப்போது உற்பத்தியை நிறுத்த.ஆனால் நிலமை எல்லை மீறிப் போய் விட்டது.

பாலா

said...

// ஆனால் மக்கள் அதை எதிர்கொண்ட விதம் என்னை பொறாமை கொள்ள செய்தது. அமைதியாகவும் காரசாரமாகவும் விவாதித்தார்கள் //

ஆமாம் சிவா. மேற்குலகமம், குறிப்பாக அமெரிக்கா இந்த விஷயத்தில் மிகவும் பக்குவம் அடைந்திருக்கிறது. நாம் இதிலிருந்து கண்டிப்பாக கற்றுக் கொள்ள வேண்டும்.

// ஆனால் நம் நாட்டில் ஜட்டியில் ராமர் படம் போட்ட பிரான்ஸ் கம்பெனிக்கு எதிர்ப்பு தெரிவித்து நம் நாட்டின் பஸ்ஸை உடைப்பார்கள். //

பஸ்ஸை உடைப்பது தவறு. ஆனால் எதிர்ப்பு தெரிவிப்பது கண்டிப்பாக தவறு அல்ல என்றே நான் கருதுகிறேன். ஏசு அல்லது மேரி படத்தை இப்படி அந்த பிரான்ஸ் கம்பெனி போடத் துணிந்திருக்குமா? இந்து தெய்வீகச் சின்னங்களை மட்டும் சகட்டு மேனிக்கு இவர்கள் அவமதிப்பது இளக்கார மனப்பான்மை தானே?

said...

ஆஹா, miss பண்ணிடேனே!
எனக்கும் அவரை பிடிக்கும்.

//
நம் நாட்டில் மத விமர்சனங்கள் துவேஷங்களுடன் நின்று விடுகிறது.
//

வருத்தம் தரும் உண்மை.

//
முஷாரப் தீவிரவாதம் எனும் பொன்முட்டையிடும் வாத்தை வைத்துக் கொண்டு உலகை பயமுறுத்துகிறார். அது உயிருடன் இருக்கும் வரை அமெரிக்கா பணம் தரும்.
//

இந்த விசயதில், பாகிஸ்தான் அமெரிக்கா-வை நன்றாக முட்டாள் ஆகுகிறது.