Tuesday, March 06, 2007

ரிசர்வேஷனின் பரிணாம வளர்ச்சி

மத்திய 80களில் ரிசர்வேஷன் என்பது அநியாயமாக இருந்தது. ஒவ்வொரு ஊருக்கு ஒரு அளவில் ரிசர்வேஷன் . சின்ன ஊர்களுக்கு மிக சிறிய கோட்டா. பணக்காரங்களுக்கு ஈசியாக ரிசர்வேஷன். என்ன அநியாயம்ன்னா பணக்காரனாய் இருந்தால் ராஜ மரியாதையாக ரிசர்வேஷன். ரிசர்வேஷனின் பலனை அனுபவிக்க மக்கள் பட்ட பாடு இருக்கே அப்பா பயங்கரம். அந்த இடமே ஒரே புழுக்கம், வேர்வை நாற்றம் எனக் கூட்டம் அலை போதும்.




அட ......நான் ரயில்வே ரிசர்வேஷனைப் பற்றி பேசறேன்.


அந்த காலத்திலே பாண்டியனுக்கு ஒரு லைன், வைகைக்கு ஒரு லைன், ப்ர்ஸ்ட் கிளாஸுக்கு ஒரு லைன் படா பேஜாராய் இருக்கும். இந்த ரிசர்வேஷன் பண்ற நேரத்துக்குள்ளே கே.பி. டிராவல்ஸ் பஸ்ஸை பிடிச்சி ஊருக்கே போயிடலாம்.

என் நண்பர் ஒருவர் சி எம் சி என்ற கவர்மெண்ட் கம்பெனியிலே வேலை பார்த்துகிட்டு இருந்தார் அப்போ. அவர் வந்து கதை கதை யாய் சொல்லுவார். கம்யூட்டர் ரிசர்வேஷன் சாப்ட்வேர் பற்றி. முழு சாப்ட்வேரும் போர்ட்ரானில் எழுதினார்கள் முதலில் என்பார். சென்னை, பம்பாய், டில்லி மற்றும் கல்கத்தா நகரங்களில் உள்ள கம்யூட்டர்களை இணைக்க போவதாய் சொல்லுவார். நாங்களும் வாயைப் பிளந்து கேட்டுக்கொண்டிருப்ப்போம்

அங்கிருந்து ஆரம்பித்தது நிற்கவே இல்லை. இப்போது ரயில்வே டிக்கட்டை வீட்டிலிருந்த படியே புக் செய்யலாம். சில சமயம் நான் கனடாவிலிருந்து என் தாயாராக்கு ரயில்வே ரிசர்வேஷன் செய்திருக்கிறேன்.

இதை ஆரம்பிக்கும் போது எத்தனை தடைகள். செங்கொடி தொண்டர்கள் முதலில் கம்யூட்டர் வந்தால் ஆள் குறைப்பு ஏற்படும் என்று கொடி தூக்கினார்கள்.

நடந்தது என்ன?

எந்த கவுண்டரிலும் எந்த டிரயினுக்கும் எந்த கிளாஸுக்கும் ரிசர்வேஷன் செய்யலாம் என சமத்துவம் வந்தது.

ஏஜெண்டுகள், லஞ்சம் பெருமளவு குறைந்தது.

எந்த ரயிலில் எந்த வகுப்பில் எந்த தேதியில் எவ்வளவு இருக்கைகள்/படுக்கைகள் உள்ளன என்பது மிக துல்லியமாக மக்கள் அறிய முடிகிறது.

இப்போது எந்த ரயில் எங்கு வந்து கொண்டிருக்கிறது என்ற தகவலையும் தருகிறார்கள்.

எஸ் எம் எஸில் கூட ரயில்வே பற்றி அறிய முடிகிறது...

எத்தனை எத்தனை மக்கள் பயன் பெற்றார்கள்.

ஆக மொத்தம் ரயில்வே ரிசர்வேஷன் செய்வது ஒரு இன்ப அனுபவமாகவே உள்ளது.

சாபஷ்டா... சாப்ட்வேர் இஞ்சினியா..... உன் பணி தொடரட்டும்

11 comments:

said...

//
சாபஷ்டா... சாப்ட்வேர் இஞ்சினியா..... உன் பணி தொடரட்டும்
//

சார் இந்த இஞ்சினியா இஞ்சினியா ன்னா என்ன சார் ?

இஞ்சி சட்னியா ? :D

said...

சிவாண்ணா, சமீபத்தில் படிச்சேன், சில குறிப்பிட்ட வங்கிகளின் ஏ.டி.எம்.களில் கூட பதிவு செய்யும் வசதி வரப் போகிறதாம்!! அது மட்டுமில்லாமல் சில ரயில்களில் டிக்கெட் பரிசோதகர் கையில் கைக்கணினி கொடுக்கப் போகிறார்களாம். அதன் மூலம் அவர் எந்தப் பெட்டிகளில் காலி இடம் உள்ளது என்பதை அறிந்து பயணிகளை அங்கு அனுப்ப முடியுமாம்.

உண்மையிலே இந்த சிஸ்டத்தை நினைக்கும் பொழுது எல்லாம் எனக்கு பிரமிப்பாகவே இருக்கிறது.

For the sheer geographical foot print and the volume, I am so surprised that this is so stable! Hats off to these folks.

said...

Why no new Blogs about Saudi Arabia????

said...

கால்கரி சிவா எதை எழுதுனாலும் படிப்பதற்கு முன்னர் மைனஸ் குத்து குத்திவிட்டுத்தான் படிக்கவேண்டும் என்று ஃபத்வா போட்டுள்ளார்கள் தி. ராஸ்கல்கள் மற்றும் இ. இஸ்லாமிஸ்டுகள்.

இதுக்கெல்லாம் மைனஸ் குத்து குத்துறாய்ங்க...

அடுத்த ஃபத்வாவாக Q வுக்கு முதலெழுத்தை நக்கி விட்டு படிக்கவேண்டும் என்று போட்டாலும் அதையும் செய்வார்கள் என்று நினைக்கிறேன்.

said...

வஜ்ரா,

இஞ்சி நீயா ஹா ஹா

- குத்தட்டும் சார் என்ன கெட்டு போச்சி இங்கே.

said...

கொத்தனார், என்ன சார் சமீப காலமாக என்னை அண்ணா என கூப்பிட்டா ரொம்ப சின்ன பையன் என காட்டிகிறீங்களா?

நம்மூரில் கம்யூட்டரைஸ் செய்ய நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.

பல்கலைகழங்களுக்குள் மார்க் சீட்பரிமாற்றங்கள்.

ஆர் டி ஓ ஆபிஸ் சமாச்சாரங்கள்

பத்திர பதிவுகள்

ஓட்டர் ஐடி

சோச்குஅல் செக்யூரிட்டி போன்ற மக்களுக்கு அடையாளங்கள்

இதையும் நம்மால் ஆக்க முடியௌம். இந்தமாதிரி இயந்திரமாக்கலால் ஒரளவிற்க்கேனும் லஞ்சம் குறையலாம்

said...

wcdma,

சவூதியை விட்டால் வேறு விஷயங்களும் எனக்கு இண்ட்ரஸ்ட் உண்டுங்க.

ஆனாலும் சவூதிப் பற்றி ஒரு பதிவை போடுகிறேன்

said...

ஆடி ஆத்தி, உங்களின் கஜினி முகம்மதுவின் சரித்திரத்திற்கும் இரயில்வே ரிசர்வேஷனுக்கும் சம்பந்த மில்லாத்தால் அதை வெளியிடவில்லை.

தயவு செய்து உங்கள் எஜமான விசுவாசத்தை உங்கள் பதிவுகளில் காட்டிக்கொள்ளவும்

தாங்கள் அரபுகளின் அடிமை என்று நான் ஒத்துக் கொள்கிறேன்.

said...

//அட ......நான் ரயில்வே ரிசர்வேஷனைப் பற்றி பேசறேன்//


இது கால்கரி சிவா டச்!!!!!!!!!!!!!!

said...

//
நம்மூரில் கம்யூட்டரைஸ் செய்ய நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.

பல்கலைகழங்களுக்குள் மார்க் சீட்பரிமாற்றங்கள்.

ஆர் டி ஓ ஆபிஸ் சமாச்சாரங்கள்

பத்திர பதிவுகள்

ஓட்டர் ஐடி

சோச்குஅல் செக்யூரிட்டி போன்ற மக்களுக்கு அடையாளங்கள்

இதையும் நம்மால் ஆக்க முடியௌம். இந்தமாதிரி இயந்திரமாக்கலால் ஒரளவிற்க்கேனும் லஞ்சம் குறையலாம்
//

ஐயய்யோ, இதெல்லாம் கம்ப்யூட்டரைஸ் செய்தால் ஆள் குறைப்பு நடந்து வேலைவாய்ப்பு குறையும். என்றெல்லாம் வந்துவிடுவார்கள் செங்கொடிச் சங்கங்கள்! (இந்தியாவின் முன்னேற்றத்திற்கு மிகப்பெரும் முட்டுக்கட்டைகள் இந்த முட்டா கள்)

லஞ்சம் ஒழியுதோ இல்லையோ, பாபூக்ரஸி (democracy, beuracracy மாதிரி அரசு உத்தியோகத்தில் இருக்கும் babu க்களின் ஆட்சி!!) நிச்சயம் குறையும்.

said...

நன்றி ஆதி