Thursday, March 15, 2007

சில செய்திகள்

1. பாகிஸ்தானிய தீவிரவாதி "நான் தான் எல்லாம் செய்தேன்" என ஒப்புதல் வாக்குமூலம். சவூதியை சேர்ந்த ஒசாமா பின் லாடன் பணம் தந்தார் என்றான் (புஷ் பாகிஸ்தான் தீவிரவாத போரில் ஒரு நண்பன் என பெருமிதம். தீவிரவாதத்தை ஒழிப்பதில் சவூதியின் பங்கு பெரிது என பாராட்டு - இது வருங்கால செய்தி)

2. கனடாவின் மக்கள் தொகை G-8 நாடுகளில் அதிக வளர்ச்சி. இன்னும் மக்கள் தொகை அதிகமாக வேண்டும் என அரசியல்வாதிகள் மக்களை கேட்டுக் கொண்டனர். மக்கள் தொகை 3.2 கோடியாக உயர்ந்தது (தமிழக மக்கள் தொகை மட்டும் 6.2 கோடி. கனடாவின் பரப்பளவு இந்தியாவின் பரப்பளவை விட சுமார் 7 மடங்கு அதிகம்)

3. தொப்பை உள்ள ஆண்களுக்கு மனநோய் வரும் வாய்ப்பு கம்மியென்று ஆய்வு முடிவுகள தெரிவிக்கின்றன- சி என் என் செய்தி (தொப்பை வளர பீர் குடிப்போம் மன நோயை தவிர்ப்போம்)

4. கருக்கலைப்பு தவறு, கர்ப்பதடை தவறு, பாதிரியார்கள் பிரம்மாசாரியத்தை கடைப்பிடிக்வேண்டும் என போப்பாண்டவர் மீண்டும் வலியுறுத்தல் (மக்கள் தொகையை கட்டுபடுத்த இளம் வயது கத்தோலிக்கர்கள் பாதிரியார் ஆவதை தவிர வேறு வழியில்லை என புலமபல்)

5. ஆன்மிக சிந்தனைக்கு பரிசு $1.5 மில்லியன்கள். கனடாவை சேர்ந்த ஆன்மிக தத்துவஞானி சார்லஸ் டெயல்ர்க்க்கு கிடைத்தது ( ஆசையை அழியுங்கள் என சொன்னவருக்கு கிடைத்து பரிசு நல்ல காரியங்களுக்கு பயன்படும். ஆனால் 1.5 மில்லியன் கிடைக்கும் என ஆன்மிகத்தில் இறங்கினால் விபரீதம் ஏற்படும்.)

6. ஈரான் மேல் பொருளாதார தடைவிதிக்க 6 நாடுகள் சம்மதம் ( ஆனால் ஈரான் அதிபர் குரங்கு மார்க் அணுகுண்டை வெடித்தே தீருவேன் என சூளுரை)

7. பழைய பேப்பர், பாட்டில்கள், கேன்களை ரீசைக்கிள் செய்ய மாதம் $21 மக்கள் கொடுக்கவேண்டும் என கால்கரி முனிஸிபாலிடி முடிவு.( அடபாவிங்களா சென்னையில் இந்த ஐயிட்டங்களை மாதக் கடைசியில் விற்று பீர்-பிரியாணி சாப்பிடுவோம்டா என டெபுடேஷனில் கால்கரிக்கு வந்த சாப்ட்வேர் இளைஞர்கள் புலம்பல்)

8. பாரத பிரதமர் வீட்டின் மேல் பறக்கும் தட்டுகள் காணப்பட்டன (நாம் நம் கணவனை நோக்கி வீசிய தட்டுகள் அவ்வளவுதூரம் எப்படி போயின என மனைவியர் கலக்கம்)

9. The Hindu வின் கருத்துக்கணிப்பிற்கு மாறாக சமீப தேர்தல்களில் காங்கிரஸ் படுதோல்வியை தழுவியதற்கு காரணம் காங்கிரஸ் மேலிருந்த இந்துக்களின் கோபம் என கண்டுபிடிப்பு ( இனி சோனியா காந்தி ரூ 5,000 தந்து இந்துவாக மாறுவார் என நம்பதகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. கருணாநிதி சாய் பாபவிற்கும், அமிர்தானந்தமயிக்கும் எவ்வள்வு தந்தார் என்பதை தமிழக காங்கிரஸ் கோஷ்டிகள் அன்னை சோனியாவிற்கு அறிக்கைகள் சமர்பித்தனர். தென்னாப்ரிககாவிலிருந்து அமேசான் நதி நீரை கொண்டுவர சாய்பாபா உதவினால சோனியா மீண்டும் பிரதமர் ஆவது உறுதி என அந்த அறிக்கைகள் கூறின)

2 comments:

said...

ஹிந்து பத்திரிக்கை அப்படியா எழுதியிருக்கிறது.

இணைப்பு தர முடியுமா?

(உப கேள்வி. ஏன் இந்துக்கள் ஓட்டுப்போடமாட்டார்கள் என்று இந்து சார்பாக கருத்து கணிப்பு செய்தவர்கள் நினைத்தார்களாமா?)

said...

எழில், இந்த செய்தியை ரீடிப் சைட்டில் பார்த்தேன். மீண்டும் தேடினேன் கிடைக்கவில்லை. ஹிண்டு பத்திரிக்கை யும் ஐபிஎன் சி என் என் னும் தேர்தல்களுக்கு முன் கருத்துக் கணிப்பு நடத்தி சோனியாவும் சிங்கும் வெற்றி வாகை சூடுவார்கள் என்றும் மேலும் நாடளுமன்றத்திற்கு தேர்தல் வந்தால் யுபிஏ கூட்டணி 300 இடங்களுக்கு மேல் பெரும் என்றும் கூறி செக்யூலர் வெள்ளை அடித்திருந்தது. ஆனால் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் முகத்தில் மக்கள் கரியை பூசினார்கள். அதனால் இந்துக்கள் கோபம் அடைந்தார்கள் என அந்த செய்தி குறிப்பு கூறியது