Thursday, March 08, 2007

பன்னாட்டு கம்பெனிகளில் பார்ட்டி கலாசாரம்

சமீபத்தில் சாப்ட்வேர் இஞ்ஜினியர்கள் குடித்து போதை மாத்திரை சாப்பிட்டு விட்டு செக்ஸ் பார்ட்டிகளில் கலந்து கொண்டு கைதானர்கள் என்ற செய்தியை வைத்து இரண்டு பதிவுகள் வந்துவிட்டன.

கடந்த 23 வருடங்களில் 18 வருடங்கள் (5 வருடங்கள் அரபு கம்பெனி) 2 மேலை நாட்டு கம்பெனிகளில் பணிபுரிந்தவன் என்ற வகையில் என் அனுபவங்கள் :

1980களில் இந்தியாவில் பன்னாட்டு கம்பெனிகள் 5 நட்சத்திர ஓட்டல்களில் பார்ட்டியை வைப்பார்கள். இந்த மாதிரி பார்ட்டிகள் வருடத்திற்கு ஒரு முறை நடக்கும். இது வழக்கமாக புத்தாண்டு/கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியாக இருக்கும். சில பார்ட்டி கேம்கள், பீர் முதல் விஸ்கி வரை இருக்கும். இங்கே குடித்துவிட்டு ஆட்டம் போடுபவர் மிக மிக கம்மி. அவ்வாறு ஒருவர் செய்தார் என்றால் அவரின் வேலை ஆட்டம் காணும் அல்லது அவரது வேலை ஆட்டம் கண்டிருக்கும். பெண்கள் கம்மி இந்த காலகட்டங்களில் அவர்கள் குடித்து பார்த்ததில்லை.

கஸ்டமர் எண்டெர்டெய்ண்மெண்ட் பார்ட்டிகள் அதிகம் இருந்தன. இதில் குடித்து ஆட்டம் போட்டவர்கள் கஸ்டமர்களே. கவனிக்கவும் கஸ்டமர்கள் அனைவரும் பாரத நாட்டின் அரசாங்க அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள். சில ஜட்ஜ்களும் உயர் போலீஸ் ஆபிஸர்களும் மிகக் கீழ்தரமாக நடந்து பார்த்திருக்கிறேன். ஜட்ஜூகள் போலீஸ் அதிகாரிகள் பப்ளிக் இடங்களுக்கு வரமாட்டார்கள். ஆனால் போட்கிளப், ஜிம்கானா கிளப் போன்ற கிளப்களுக்கு வருவார்கள்

1990 களில் பார்டிகளின் அளவு எகிறியது. ஒவ்வொரு புராஜெக்ட் வெற்றிக்கும் பார்ட்டிகள் நடந்தன. பெண்கள் அதிகமாக வேலை செய்ய வந்தனர். அவர்களில் மிக சிலர் மறைவாக குடித்தனர். ஆபிஸில் காதலும் பாலுறவு தொடர்பும் வதந்திகளகாவே இருந்தது. இந்த காலகட்டத்தில் பன்னாட்டு கம்பெனிகள் லோக்கல் கலாசாரத்தையும் ஏற்றுக் கொண்டனர். தீபாவளி மற்றும் ஆயுத பூஜைகள் விமரிசையாக கொண்டாடப்பட்டன.

2000 களில் சரிபாதி பெண்கள் இருந்தனர். அலுவலகம் பாலுறவு தொந்தரவுகளை மன்னிக்கவில்லை. சம்பந்த பட்ட ஆணோ பெண்ணோ வேலையை இழந்தார்கள். ஆனால் காதல் ஆங்கீகரிக்கபட்டது.

நான் ஒரு பெண்ணை நேர்முக தேர்வு செய்து அவளுக்கு வேலை தந்தவுடன் அவள் என்னிடம் வந்து என்னுடைய காதலனும் இண்ஸ்ட்ருமெண்ட் இஞ்ஜினியர் அவனை வேலைக்கு எடுப்பீர்களா என கேட்டாள். உன்னுடைய காதலன் தகுதியானவன் என்றால் வேலைதருவதில் சிரமமில்லை என்றேன். பின்னர் அவளின் காதலனும் என்னுடைய அலுவலகத்தில் சேர்ந்தார். இரண்டு வருடங்களுக்கு பிறகு அவர்கள் திருமணம் நடந்தது. பெண் நெல்லூர் ஆண் லக்னோ.

கள்ளக் காதல்கள் வதந்திகளாகவே இருந்தது.

இங்கே கால்கரியில் மாதம் ஒரு முறை பீர் பார்ட்டி அலுவலகத்திலேயே உண்டு. ஆண்களும் பெண்களும் கலந்துக் கொண்டு ஜாலியாக பேசிவிட்டு குடித்துவிட்டு செல்வர். 2 கேன்களுக்கு மேல் குடித்துவிட்டால் வீட்டிற்கு போக வர டாக்ஸி டோக்கனும் கொடுத்துவிடுவார்கள் இங்கே.

இந்திய கம்பெனிகள் அதாவது இந்திய அரசாங்க கம்பெனிகள் இந்த மாதிரி பார்ட்டிகளை தருவதில்லை. ஆனால் மக்கள் பாருக்கு செல்லாமலா இருக்கிறார்கள். மது அருந்துவது ஒரு பொழுது போக்காக டென்ஷனை குறைக்கும் வழியாகிவிட்டது. அது கம்பெனியே வழங்கி மக்களை குஷி படுத்துகிறது. மதுவை குடித்தே ஆக வேண்டும் என யாரும் வற்புறுத்தவில்லை. அப்படியே மது குடிப்பவர்கள் 20 முதல் 25 % தான் மீதமுள்ளவர்கள் சைட் டிஷ்ஷை சாப்பிடுவதற்கும் பாஸை ஐஸ் வைப்பதற்கும் வருபவர்கள்

போதை மருந்து உட்கொள்வது மற்றும் கூட்டு பாலுறவு போன்றவை வெளிநாட்டிலும் நார்மலான வாழ்க்கை வாழ்பவர்கள் செய்யவில்லை.

ஆயிரகணக்கான பேர்கள் வேலை செய்யும் இடத்தில் ஒரு சிறு சதவிகிதம் இந்த மாதிரி கெட்ட கொண்டாட்டங்கள் செய்வது ஒன்றும் ஆச்சரியமான செய்தி அல்ல.

10 comments:

said...

போதைமருந்து எல்லாம் கண்டிப்பாக தடை செய்யப்பட வேண்டியது சிவா.மற்றபடி பார்ட்டியில் குடிப்பதை எல்லாம் யாரும் குற்றம் சொல்ல முடியாது.கூட்டுபாலுறவு எல்லாம் போதைமருந்தின் விளைவாக தான் இருக்கும் என நினைக்கிறேன்.

ஐடி கம்பனி ஊழியர்கள் எது செய்தாலும் பழியை நாராயணமூர்த்தியின் மீது போடுவது இப்போது பாஷனாகிவிட்டது. வெட்டிபயல் பாலாஜி இதைப்பற்றி நல்லதொரு கட்டுரை இட்டிருக்கிறார்

said...

இதே மாதிரி,போன வெள்ளிக்கிழமை,சீனப்பெருநாள் கொண்டாடம் என்று அழைத்திருந்தார்கள்.நீங்கள் சொன்ன அய்டங்கள் கூட பன்றியும் இருக்கும்.தண்னிக்கு தண்ணி,சாப்பாட்டுக்கு சாப்பாடு.
முடிந்தவரை இந்த மாதிரி நிகழ்ச்சிகளுக்கு போவதை தவிர்த்துவிடுவேன்,ஆனால் இந்த தடவை உனக்கு வேண்டிய சைவ உணவை வாங்கிக்கொள் என்று பணமும்,வண்டியும் கொடுத்தார்கள்.சரி என்று போனேன்.
அங்கு வந்த என் மேலதிகாரிக்கு கை கொடுத்து புது வருட வாழ்த்துக்களையும் சொன்னேன்.பல கூடல் நிகழ்ச்சிகளுக்கு போவதில்லை என்பதால்,என்னை என் மேலதிகாரிக்கே தெரியவில்லை!!.

said...

மாட்டுக்கறியும் கொடுப்பாங்களா கால்கரி சிவா?

said...

செல்வன், போதை மருந்து பழக்கம் என்பது ஒரு மோசமான நோய். அந்த நோய் உள்ளவர் சாப்ட்வேர் என்ன எந்த வேலையும் செய்ய்முடியாது.

நாரயணமூர்த்தியை பார்த்து அவரைபோல் காசு பார்க்கவேண்டும் என்பவர் அவரின் பழக்க வழக்கங்களை ஏன் பின்பற்றுவதில்லை,

ஆனால் மற்றவர்களின் பழக்கங்களுக்கு அவர் தான் காரணமென்பார்கள்.

இதற்கு பெயர்தான் பொறாமை என்பது

said...

குமார், வேலையில் திறமையும் பப்ளிக் ரிலேஷனும் சரிவிகிதத்தில் இருக்க வேண்டும். உங்கள் இருப்பை அடிக்கடி காட்டி கொண்டே இருக்கவேண்டும். அந்த பார்ட்டி அமைப்பாளாரிடம் சென்று விஜிடேரியன் உணவை ஏற்பாடு செய்யுங்கள் என மென்மையாக ஆனால் உறுதியாக சொல்லவேண்டும்.
Assertiveness நிச்சயமாக இருக்கவேண்டும். அப்போதுதான் வாழ்க்கையில் முன்னேறமுடியும்.

நம்மவர்கள் செய்யும் பெரிய தவறு இந்த விஷயத்தில்தான். அசைவத்தைக் கண்டதும் விஷத்தைக் கண்டது போல் குதிப்பார்கள் அதே நேரம் அது மற்றவரின் உணவு என்ற மரியாதை தரவேண்டும் எனபதை மறந்துவிடுவார்கள். சீனர்கள் உணவிற்கு அதிக மரியாதை தருவார்கள். நான் சிங்கபூரில் அவர்களுடன் அமர்ந்து தவளை, ஆக்டோபஸ் மற்றும் பல பேர் தெரியாத உணவுகளை உண்டிருக்கிறேன். அதனால் நட்பு வட்டம் பெரிதானது.

said...

கருப்பு, நிச்சயமாக.. மாடும் பன்றியும் இல்லாமல் விருந்தா?

மாட்டின் ஸ்டேக்கும் பன்றியின் ரிப்ஸும், லாப்ஸ்டர் வாலும், ஸ்நோ கிராப்பின் காலும், கலமாரி என்ற கடல் வாழ் பிராணி வருவலும், சிரிம்ப் பொறியலும், கோழி இறக்கை கூட்டும் உணவு வகைகள். இதனுடன் எந்த திராட்சை ரசம் சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என பலவகை திராட்சை ரசங்களும், மொடா குடியர்களுக்கு விஸ்கியும், மிக மொடா குடியர்களுக்கு ரம்மும், பெண்களுக்கு ஜின்னும் இருக்கும்

said...

சிவா நல்ல பதிவு.. என்னப் பண்ண உங்கப் பதிவே இந்தியப் பத்திரிக்கைகளில் வந்து இருந்தால்..

பீர் பார்ட்டியும், ஆபிஸ் காதலும்.. இன்றைய அலுவலக அசிங்கங்கள் அப்படின்னு தலைப்போடத் தான் வரும்... நம்ம மக்கள் அதைத் தான் படிக்க விரும்புறாங்க...

said...

I heard the OUNE party only 5 people had drugs and police want to do cultural polising rather than go after criminals .

said...

தேவ் மற்றும் ரவீந்திரன் சின்னசாமி தங்களின் வருகைக்கு நன்றி.

பன்னாட்டு கம்பெனிகளில் (நான் சாப்ட்வேரில் இல்லை) சில புல்லுருவிகள் நுழைய அதிகம் வாய்ப்பிருக்கிறது. முக்கியமாக அரசியல்வாதிகளின் வாரிசுகள். இவர்கள் ஏதாவது சிபாரிசால் உள்ளே வந்து வெளிநாட்டிற்கும் வந்து விடுவார்கள். வெளிநாட்டில் ஹவாலா தொழில் செய்து அங்கும் இந்தியாவிலும் கோடி கோடிகணக்கில் பணம் சேர்க்கிறார்கள். இது போல் சிலரை நான் அறிவேன்.

நம் மக்களுக்கு சாப்ட்வேர் இஞ்ஜினியர் என்றால் நன்றாக படிப்பவர் அதிக மூளைத்திறன் உள்ளவர் என்ற நம்பிக்கை உண்டு. 99% சாப்ட்வேர் எஞ்ஜீனியர்கள் நல்ல படிப்பாளிகள். நன்றாக படிப்பவர்கள் எல்லாரும் ஒழுக்க சீலர்கள் என்ற நம்பிக்கையும் உள்ளது. அதுவும் உண்மை. அதில் சிலர் தவறும் போது அது பெரிய விஷயமாக இருக்கிறது.

சட்டகல்லூரி மாணவர்கள் வக்கீல்கள் செய்யாத அட்டூழியமா? இவர்கள் நம்நாட்டின் வருங்கால நீதிபதிகள்

மருத்துவகல்லூரி மாணவர்கள் டாக்டர்கல் செய்யாதா அட்டூழியமா? இவர்கள் நம்நாட்டின் உயிர்காப்பவர்கள்

அரசாங்க அதிகாரிகளும் பொறியாளர்களும் செய்யாத கெட்டகாரியமா? இந்திய வல்லரசு ஆவதை தடுக்கும் பங்கில் பெரும்பகுதி இவர்களிடம் உள்ளது.

கடைசியாக அரசியல்வாதிகள் . நம் நாட்டின் கடைந்தெடுத்த அயோக்கியர்களும் மொல்லைமாரிகளும் முடிச்சவிக்கிகளும் தான் அரசியல் வாதிகள். இவர்கள் பின்னால் ஓடும் ஒரு தறிக்கெட்ட இளைஞர் பட்டாளம். இவர்கள் செய்யாத கலாச்சார சீரழிவுகளா?

said...

சாப்ட்வேர் வல்லுநர்கள் ஏதோ பெரிய அறிவு ஜீவிகள் என்ற பெரிய மாயை அவர்கள் விட்டொழிக்க வேண்டும்..

இல்லாவிட்டால் ipod உடன் மன நல காப்பகங்களில் life time projects செய்ய நேரிடும்..

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால யாருக்கும் பயப்படாதே அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

வாழ்க்கைக்காக தான் வேலையே தவிர வேலைக்காக வாழ்க்கை அல்ல...

சூர்யா
துபாய்..
butterflysurya@gmail.com