நான் வாழும் Alberta மாநிலத்தின் ப்ரொபெஷனல் அசோஷியனின் பெயர் The Association of Professional Engineers, Geologists and Geophysicists of Alberta (APEGGA). இங்கே சாதரணமாக பி.ஈ அல்லது பி.டெக் படித்துவிட்டால் தங்களை எஞ்ஜினியர் என அழைத்துக் கொள்ள முடியாது. APEGGA வில் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். ஒரு ப்ரஸ்ஸர் நான்கு வருடங்கள் EIT (Engineer-in-Traning) ஆக இருக்க வேண்டும் . பின்னர் Professional Ethics என்ற நன்னடத்தை பரீட்சை எழுதி பாஸ் செய்யவேண்டும், தாங்கள் வேலைப்பார்த்த கம்பெனிகளிடமிருந்து நல்ல ரெபரன்ஸ் இருக்க வேண்டும். இத்தனையும் இருந்தால் தான் Professional Engineer என்ற பட்டத்தை தருவார்கள்.
அந்தப் பட்டம் கிடைத்த பிறகு பெயருக்கு பின்னால் P.Eng. போட்டுக் கொள்ளலாம், எஞ்ஜினியர் என அழைத்துக் கொள்ளலாம். அடியேனுக்கு அந்த பட்டம் கிடைத்து விட்டது.
APEGGA வும் University of Calgary யும் சேர்ந்து நடத்திய விழாவில் பங்கு கொள்ள நேற்றைக்கு எனக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது.
முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு மாணவர்கள் என்னை போன்ற பெருசுகளிடம் பேசி எஞ்ஜினியர் வேலை எத்தகைய்து என அறிந்து கொள்ள அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம்.
சுமார் 50 பெருசுகளும் 300 சிறிசுகளும் 50 ஆசியர்களும் கலந்து கொண்ட நிகழ்சி. இதுவே மாணவர்களின் ஆண்டு விழாவாகவும் கொண்டாடப் பட்டது.
வெளிநாட்டு கல்லூரி விழாவில் நான் கலந்து கொள்வது முதல் முறை. மிக வித்தியாசமாக இருந்தது.
ஆங்கிலத்தாய்/ப்ரெஞ்ச் தாய் வாழ்த்து /இறைவணக்கம் இல்லை. விழாவின் தலைவர் வருகைக்கு கட் அவுட்டுகள், தலைவர் இதோ வந்துவிட்டார், வந்து விடுவார், வந்து கொண்டே இருக்கிறார் என்ற அறிவிப்புகள் இல்லை. விழாவின் மையப் பேச்சாளார் அந்த கல்லூரியின் முன்னாள் மாணவி. சுமார் 32 வயது நிறம்பியவர். சர்வதேச மோட்டார் சைக்கிள் ரேஸ் இஞ்ஜினியர். உலக மோட்டார் சைக்கிள் ரேஸ் வட்டாரத்தில் புகழ் பெற்றவர். தான் கலந்து கொண்ட பந்தயங்கள், சென்ற நாடுகள், புகழ் பெற்ற வீரர்கள், அவரை ஸ்பான்ஸர் செய்த கம்பெனிகள் என பவர் பாய்ண்டில் படம் காட்டி பேசி கொண்டே போனார். எனக்கு சிறிது அலுப்புத் தட்டியது. என்ன ஓவர் அலம்பல் ஆக இருக்கே என. பிறகு அவர் மோட்டர் சைக்கிள் ரேஸ் எஞ்ஜினியரிங்கள் உலகத்தில் முதுகலை பட்டம் அளிக்கும் கல்லூரி ஸ்பெயினில் இருப்பதாக குறிப்பிட்டார். சிறிது சுவாரசியம் வந்தது. இதற்கெல்லாம் பட்டம் அதுவும் முதுகலை என்பது ஆச்சரியமல்லவா. அந்தக் கல்லூரியில் அவருக்கு இடமும் கிடைத்துள்ளது என்பதையும் தெரிவித்தார். முத்தாய்ப்பாக "உங்கள் ஆசை எதுவோ அதில் உங்களை தொழிலை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அதாவது உங்கள் ஹாபி எதுவோ அதுவே உங்கள் காரியர் ஆக்கி கொள்ளுங்கள். அப்போதுதான் தினம் தினம் காலையில் உற்சாகமாக அலுவலகத்திற்கு செல்லுவீர்கள். உங்கள் வேலை உங்களின் மன உற்சாகத்தையும் தருவதால் நிச்சய வெற்றி உங்களுகுண்டு. நீங்கள் என்னவாக நினைக்கிறீர்களோ அதுவாக ஆகுங்கள்" என முடித்தார். நல்ல பேச்சு.
பிறகு மாணவர்கள் தாங்கள் ஒருவருடத்தில் செய்த அசட்டுதனங்களை வீடியோ போட்டுக் காட்டினார்கள்.
வித்தியாசமாக மாணவர்கள் சிறந்த ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கினார்கள்.
நான் அமர்ந்திருந்த டேபிளில் ஒரு சீன இஞ்ஜினியர், இரண்டு வெள்ளைக்கார ஆசிரியர்கள், ஒரு சிங்கள மாணவன், ஒரு பிலிப்பினோ மாணவி மற்றும் ஒரு பங்களாதேச மாணவி அமர்ந்திருந்தனர். சர்வதேச அரங்கில் வேலை செய்வது எப்படி இருக்கும் என என் அனுபவங்களை பகிர்ந்து கொண்டேன். அருகிலிருந்து டேபிளிலிருந்து ஒரு வெள்ளைக்கார இளஞர் கலந்து கொண்டார். "இஞ்ஜினியர் ஆனால் அதிக பணம் சம்பாதிக்க முடியுமா?" எனக் கேட்டார்.
80களில் இந்தியாவில் ப்கழ் பெற்று இருந்த வசனத்தை சொன்னேன். அது "40 வயதிற்குள் 40 லட்சம் சம்பாதிக்க வேண்டும்" என்பதே. அவர் "சம்பாதித்தீர்களா" என கேட்டார். நானும் "ஆம் சம்பாதித்தேன் ஆனால் நான் எதிர்பார்த்ததை விட 21/2 மடங்கு அதிகம் சம்பாதித்தேன்" என்றேன். அவன் கண்களில் எதிர்காலத்தைப் பற்றிய கனவு விரிந்தது.
அப்போது அந்த பங்காளாதேசத்துபெண் " இப்போது பொருளாதாரம் நன்றாய் இருக்கிறது. அதனால் எல்லாருக்கும் வேலைக் கிடைக்கிறது. ரிசஷன் காலங்களில் எஞ்ஜினியர்களுக்கு வேலை போய்விடுமே" என்றார்.
"கனேடிய P.Eng. களுக்கு சர்வதேச அரங்கில் நல்ல மதிப்பு இருப்பதால் உலகில் எங்கே பொருளாதாரம் நன்றாக இருக்கிறதோ அங்கே வேலைக்கு போங்கள். கடந்த 23 வருடங்களாக நான் வேலையை இழக்கவில்லை." என்றேன். அந்த பெண்ணின் கண்களிலும் ஒளிமயமான எதிர்காலம் தெரிந்தது.
பெருசுகளாகிய நாங்கள் சிறுசுகளுக்கு எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையை ஏற்றிவிட்டு வெளி வரும் நேரத்தில் சிறுசுகள் ஒளிமயமான எதிர்காலத்தை எண்ணி நிகழ்காலத்தை கொண்டாடிக் கொண்டிருந்தனர்.
வாழ்க சிறுசுகள்
Thursday, March 29, 2007
Subscribe to:
Post Comments (Atom)
17 comments:
எஞ்சினியர் சிவாவுக்கு வாழ்த்துக்கள்,
"அமெரிக்க கனவு" என்று ஒன்றை இங்கே உயர்வாக சொல்வார்கள் சிவா.அதாவது கஷ்டப்பட்டு உழைத்தால் முன்னேறலாம் என்பதைத்தான் இங்கே அப்படி சொல்வார்கள்.ஏழைகளும் அதனால் உழைக்க ஊக்கம் பெறுகின்றனர்.அரசுக்கும் அப்படி உழைப்பவர்களுக்கு உதவி செய்யவேண்டும் என்ற எண்ணம் வந்து நாடு முன்னேறுகிறது.
ஆனால் நம் நாட்டில் ஏழைக்கு உழைக்க வேண்டும் என்ற கனவை ஊட்டுவதை விட வன்முறையில் ஈடுபடவேண்டும் என்ற எண்ணத்தை ஊட்டுகின்றனர் நக்சல்கள், கம்யூனிஸ்டுகள் போன்ற இயக்கத்தினர்.அப்போதுதானே நக்சல் தலைவர்கள் முன்னேறவும், ஏழைகள் என்றும் ஏழைகளாகவும் இருக்க முடியும்?
உங்களைப்போல் படிப்பாலும் உழைப்பாலும் உயர்ந்து நல்ல நிலையில் இருப்பவர்களை உதாரணமாக கொண்டால் தான் அடுத்த தலைமுறை முன்னேறும்.
வாழ்த்துக்கள் சிவாண்ணா!
//"உங்கள் ஆசை எதுவோ அதில் உங்களை தொழிலை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அதாவது உங்கள் ஹாபி எதுவோ அதுவே உங்கள் காரியர் ஆக்கி கொள்ளுங்கள். அப்போதுதான் தினம் தினம் காலையில் உற்சாகமாக அலுவலகத்திற்கு செல்லுவீர்கள்.//
எனக்கு மொழிபெயர்ப்பு செய்வது பிடிக்கும். :)
அன்புடன்,
டோண்டு ராகவன்
//அடியேனுக்கு அந்த பட்டம் கிடைத்து விட்டது.//
வாழ்த்து(க்)கள் சிவா.
அண்ணா,
வாழ்த்துக்கள்.
//அதாவது உங்கள் ஹாபி எதுவோ அதுவே உங்கள் காரியர் ஆக்கி கொள்ளுங்கள்.//
நல்ல அறிவுரைகள். ஆனா முடியுமா?
முடியனும். :)
சிவா சார்
வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். உங்களது வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துக்கள்.
அன்புடன்
ச.திருமலை
சரி இப்ப கொஞ்சம் குசும்பு டைம்:
உங்களுக்கு அவிங்க இஞ்சினியர் பட்டம் கொடுத்ததுக்குப் பதிலா ஒரு டாக்டர் பட்டம் கொடுத்திருக்கலாம். ஏன்னா அப்பத்தானே ஊருக்குப் போகும் போது பந்தாவா டாக்டர் கால்கரியார் என்று போஸ்டர் அடிச்சி ஒட்ட முடியும். எனக்கு ஒரு சந்தேகம்ணா, நம்ம தீரா விட அரசியல்வாதிகளுக்கு அப்படி என்ன டாக்டர்னா மட்டும் ஒரு இது ? உதயகுமாரனைக் கொன்னு போட்டாவது டாக்டர் பட்டம் வாங்கிப் போட்டுக்கிடுறானுங்க. அதுல இந்த ஊசி போடுற டாக்டரும் டாக்டர்தான், மாட்டு டாக்டரும் டாக்டர்தான், ஓசில வாங்கிக்கிற டாக்டரும் டாக்டர்தான். பந்தாவா டாக்டர் ராமதாசு, டாக்டர் அன்பு மணின்னு என்னமோ ஆராய்ச்சி பண்ணி டாக்டர் பட்டம் வாங்கின மாதிரி போட்டுகிடுறானுங்க. ஆனா பாருங்க இந்த இஞ்சினீயர்கள் அப்படில்லாம் போட்டுகிடுவதில்லை. நம்ம ஊருல நிறைய இஞ்சினீரு அரசியல்வாதி இருக்கானுங்க பிலு மோடில ஆரம்பிச்சு தங்கம் தென்னரசு வரைக்கும் ஆனா ஒருத்தன் கூட இஞ்சினீயர் பட்டத்தை போட்டு போஸ்டர் அடிச்சிகிடுவதில்லை அது ஏன்? மருத்துவம் படிச்ச ராமதாஸ் எப்ப பாரு டாக்டர்னு பட்டம் போடுறப்போ ஏன் இஞ்சினீயர் அரசியல்வாதிகள் அப்படி இஞ்சினீயர் பண்ருட்டியே வருக அப்பிடின்னு போட்டுக்கிடுவதில்லை ?
அது சரி பல்கலைக் கழகத்துல உங்களை அழைத்து பட்டம் கொடுத்திருக்காங்க, நீங்களும் அங்கன நாலு வார்த்தை பேசியிருக்கீங்க அதனால நீங்க இனிமே பேராசிரியர் கால்கரியார்தான். இனிமேல் எல்லோரும் உங்களை பேராசிரியர் கால்கரியார் என்றுதான் அழைக்க வேண்டும். அப்படித்தான் தமிழ் நாட்டுல காலேஜுப் பக்கம் மழைக்கு ஒதுங்குன ஒரு ஆளை இன்னைக்கு வரைக்கும் பேராசிரியர்னு கூப்புடுறானுங்க. அது சரி நான் உங்களைப் பேராசிரியர் கால்கரியாரேன்னு அழைச்ச உடனே இதுதான் சாக்குன்னு உங்க பையனோட கூட படிக்கிற பொண்ணுகளை நைசா தள்ளிக் கிட்டுப் போய் நெம்பர் டூவா வச்சிகிடாதீங்க.
பேராசிரியர் இஞ்சினீயர் கால்கரியார் வாழ்க வாழ்க
சிவா சார்,
வாழ்த்துக்கள்.
என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.
தேசிபண்டிட்டில் இணைத்துள்ளேன் நன்றி.
http://www.desipundit.com/2007/03/30/engmeet/
நண்பர்களே உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி. P.Eng. வாங்குவது கஷ்டமல்ல ஆனால் tedious process. நம்ம நாட்டின் யுனிவெர்ஸிட்டி ட்ரான்ஸ்கிரிப்ட்களை நேராக APEGGA விற்கு அனுப்ப வேண்டும். நான் 23 வருடங்களுக்கு முன்னால் படித்தவன். என் ஒரிஜினல் மார்க் சீட்களை அனுப்பி என் உறவினர்கள் யுனிவெர்ஸிடியில் வாங்கி தந்தார்கள். அதற்கப்புறம் நான் வேலைப் பார்த்த பழைய கம்பெனிகளிலிருந்து ரெபரன்ஸ் வாங்க வேண்டும். என் பழைய மானேஜர்கள் வயதாகி ரிடையர் ஆகிவிட்டார்கள் சிலர் வயதாகி இறந்தேவிட்டார்கள். ஒருவழியாக முடிந்தது.
இங்கே இஞ்ஜினியர் என்பது டாக்டர்/வக்கீல் போல ஒரு சமுக அந்தஸ்துள்ள தொழிலாக இருப்பது ஒரு மகிழ்சியான செய்தி.
செல்வன்,
இங்கே உழைப்பிற்கு அதிக மதிப்பு இருக்கிறது. இன்று முதல் என் மகன் ஒரு துணிகடையில் வேலைக்கு போகிறான் (குலத்தொழில் அல்லவா :))
பிடித்த துறையில் நுழைந்து அதன் எல்லைகளை காணவேண்டும் என்பது ஒவ்வொருவரின் கனவாக இருக்கிறது.
செய்கிற செயலில் தொழிலில் பெருமை கொள்கின்றனர்.
மாணவ மாணவிகளை ப்ராக்டிகலாக இருக்கவும் சுய சம்பாதியத்தில் வாழவும் ஊக்குவிக்கின்றனர். இதனால் சில நண்மைகளும் உண்டு தீமைகளும் உண்டு.
ஆனால் ஒன்று நான் இந்த நாட்டிற்கு குடிபெயர்ந்ததை எண்ணி மகிழ்சி அடைகிறேன். அரபுநாடுகளில் தங்கியிருந்தால் இன்னும் பணம் சம்பாதித்து இருக்கமுடியும். ஆனால் பணம் மட்டுமா வாழ்கை
திருமலை, தங்களின் நகைச்சுவை கண்டு ரசித்தேன். Yes Prime Minister என ஒரு பழங்கால பிரிட்டிஷ் காமெடி சீரியல் வரும். அதில் பிரதமர் ஒரு பல்கலைகழகத்திற்கு நிதி வழங்கமாட்டார். அவருடைய செக்ரட்டரி உங்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வாங்கி தருகிறேன் என பொய் சொல்லி கையெழுத்து வாங்குவார். அது காமெடி அங்கே. ஆனால் நிஜம் இங்கே. நம் அரசியல்வாதிகளின் காலடியில் கிடந்து துணைவேந்தர்கள் டாக்டர் பட்டங்களை அள்ளி வழங்குவார்கள். நன் இளங்கலை பட்டம் பெற்றவுடனேயே முடிவு செய்துவிட்டேன். எனக்கு பாடம் சொல்லிதர தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் இல்லையென்று
//ஊருக்குப் போகும் போது பந்தாவா டாக்டர் கால்கரியார் என்று போஸ்டர் அடிச்சி ஒட்ட முடியும்//
இப்ப கூட பைசா தந்தால் அடிப்பார்கள். ஒரு நிதி கம்பெனி நடத்திய குள்ளநரியும் தன்னை டாக்டர் என்று அழைத்துக் கொண்டது இந்தியாவில்.
//நாலு வார்த்தை பேசியிருக்கீங்க அதனால நீங்க இனிமே பேராசிரியர் கால்கரியார்தான். இனிமேல் எல்லோரும் உங்களை பேராசிரியர் கால்கரியார் என்றுதான் அழைக்க வேண்டும். //
ஆ....விடமாட்டீங்க போலிருக்கே....
இங்கே சாதித்தவர்களை போதிக்க அழைக்கிறார்கள். நம்மூரில் சாதிக்க முடியாதவர்கள் போதிக்க வருகிறார்கள்
//இஞ்சினீயர் பட்டத்தை போட்டு போஸ்டர் அடிச்சிகிடுவதில்லை அது ஏன்? மருத்துவம் படிச்ச ராமதாஸ் எப்ப பாரு டாக்டர்னு பட்டம் போடுறப்போ ஏன் இஞ்சினீயர் அரசியல்வாதிகள் அப்படி இஞ்சினீயர் பண்ருட்டியே வருக அப்பிடின்னு போட்டுக்கிடுவதில்லை ?
//
அண்ணே நம்மூரிலே இஞ்ஜியர் சீட்டு சுமார் 1 லட்சத்தில் கிடைத்துவிடும். டாக்டர் சீட் 25 முதல் 40 லட்சம் வரை ஆகும். அதான் டாக்டர்ன்னு போட்டுகிறாங்க. ஆமா..டாக்டர் ராமதாசு இப்பெல்லாம் வைத்தியம் பார்க்கிறா இல்லே கௌரவ டாக்டரை பைத்தியம் பிடிக்க வைக்கிறாரா?
//அது சரி நான் உங்களைப் பேராசிரியர் கால்கரியாரேன்னு அழைச்ச உடனே இதுதான் சாக்குன்னு உங்க பையனோட கூட படிக்கிற பொண்ணுகளை நைசா தள்ளிக் கிட்டுப் போய் நெம்பர் டூவா வச்சிகிடாதீங்க.
//
அண்ணே வீட்டுலே கலகத்தை மூட்டிவிட்டுடாதீங்க. அடுத்து ஏதாவது பங்சன்னு கூப்பிட்டா ஆப்பு வைச்சுடுவாங்க
//அடியேனுக்கு அந்த பட்டம் கிடைத்து விட்டது.//
வாழ்த்துக்கள் சிவா.
வாழ்த்துக்கள் சிவா.
சிவா, வாழ்த்துக்கள்.
பேராசிரியர் பட்டமெல்லாம் தேவையா? திமுகவில் ஒருத்தரை பேராசிரியர் என்று அழைப்பார்கள். நன்றாக யோசித்துக் கொள்ளுங்கள்.
சிவா, நீங்கள் போட்டிருக்கும் கொடியை பார்த்து நானும் ஒரு கொடி போட்டிருக்கிறேன்.
பாருங்கள்.
http://ezhila.blogspot.com/2007/04/blog-post.html
நன்றி
எழில்
"வாழுமிஞ்சினீர்" பட்டத்தை பெருசுகளின் சார்பாக வழங்கி
welcome to பெருசுகள் கிளப் என்று
வரவேற்கிறோம்.
// அந்தப் பட்டம் கிடைத்த பிறகு பெயருக்கு பின்னால் P.Eng. போட்டுக் கொள்ளலாம், எஞ்ஜினியர் என அழைத்துக் கொள்ளலாம். அடியேனுக்கு அந்த பட்டம் கிடைத்து விட்டது. //
வாழ்த்துக்கள் சிவா! எஞ்ஜினீயர் என்பவனது உண்மையான இலக்கணம் எஞ்சினில் (அதாவது இயந்திரத்தில்) வேலை செய்வது மட்டுமல்ல, ingenious ஆக இருப்பதும் தான் என்று சொல்லுவார்கள். அந்த வகையிலும் இந்தப் பட்டத்திற்கு மிகவும் தகுதியானவர் தான் நீங்கள்.
வருங்காலத் தலைமுறைக்கும் வழிகாட்டும் உங்கள் பண்பு பாராட்டுக்குரியது.
Post a Comment