Friday, March 09, 2007

சாப்ட்வேர் எஞ்ஜினியர்ஸ் நோ டென்ஷன் ப்ளீஸ்

பொன்ஸின் இந்த பதிவு இதை எழுத தூண்டியது. அலுவலகத்தில் அதிக நேரம் தங்கி வேலைப்பார்ப்பதை பற்றி நல்ல கருத்துப் பரிமாற்றம் நடந்துள்ளது.

இந்த மாதிரி அதிகநேரம் அதிகம் தங்கி இருக்கும் மனப்பான்மை எங்கிருந்து தோன்றியது எனப் பார்த்தால் பள்ளியிலேயே ஆரம்பித்து விடுகிறது. முதல் ராங்க் வாங்கும் மாணவனும் 6 மணிநேரம் பள்ளி 6 மணிநேரம் டியூசன் என போவான். ஐஐடி கோச்சிங் அந்த கோச்சிங் என மேலும் மேலும் தன்னை வருத்திக்கொள்வான்.

கல்லூரி போனதும் அங்கேயும் எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிடிஸ், ஜி ஆர் ஈ, டோபல், சாப்ட்வேர் கம்பெனிகளின் எண்ட்ரன்ஸ் டெஸ்ட் பிரிபரஷன், அடிஷனல் சாப்ட் வேர் பயிற்சி என ஓயாத ஓட்டம்.

வேலைக்கு சேர்ந்ததும் டிரெய்னிங் அதில் முதல் ராங்க் வாங்க ஓட்டம். அதன் பிறகு வேலைக்கு வந்ததும் ஒரு வேலையை தந்தால் அந்த டெக்னாலஜி தெரியாவிட்டால் தனக்கு தெரியாது என சொல்பவர்கள் எத்தனை பேர்?

"சார்... சார்... எனக்கு எல்லாம் தெரியும் சார்" என மார்தட்டுபவர்கள்தான் அத்தனைபேரும்.

வேலை வந்தபிறகு அந்த டெக்னாலஜியைக் கற்றுக் கொண்டு பிறகு வேலை செய்யவேண்டும். ப்ராஜெக்ட் மானேஜர் வேறு அப்பர் மானெஜ்மெண்டிடம் ஒரு ambitious டார்கெட்டை கொடுத்திருப்பார். இதனால் தான் மக்கள் லேட்டாக தங்கி வேலை செய்ய வேண்டியுள்ளது.

இங்கே ஒரு வெள்ளைக்காரனை ஒரு புது டெக்னாலஜியில் வேலை செய்ய சொன்னால் அவனுக்கு முதலில் அதில் பயிற்சி அளிக்கவேண்டும் அதன் பிறகுதான் வேலையை ஆரம்பிப்பான். அவன் சொல்லும் கால அளவு இந்திய ப்ராஜெக்ட் மானேஜர்கள் சொல்லும் கால அளவைவிட 4 மடங்கு அதிகம் இருக்கும். ஆனால் வேலைத்தரமாக இருக்கும் முழுமையாகவும் இருக்கும்.

இந்தியகம்பெனிகள் ஆழம் பார்க்கால் காலை விட்டுவிட்டு பிறகு இரவுபகல் பாடுபட்டு வேலைப்பார்ப்பது வழக்கமாகிவிட்டது.

"இந்த வயசில் வேலை செய்யாவிட்டால் எந்த வயசில் வேலை செய்ய்முடியும் அட்ஸஸ்ட் பண்ணிக்கிருங்க சார்" என்ற மெண்டலிட்டிதான் நம் ஆட்களின் எல்லா கஷ்டங்களுக்கும் காரணம்

16 comments:

said...

//"இந்த வயசில் வேலை செய்யாவிட்டால் எந்த வயசில் வேலை செய்ய்முடியும் அட்ஸஸ்ட் பண்ணிக்கிருங்க சார்" என்ற மெண்டலிட்டிதான் நம் ஆட்களின் எல்லா கஷ்டங்களுக்கும் காரணம்////
ரொம்ப சரி சிவா, அதுவும் Bachelorஆக இருந்துவிட்டால் போதும் நீ வீட்டுக்கு போயி என்ன பண்ண போற கொஞ்சம் முடிச்சி குடுத்துட்டு போ அப்படின்னு நிறைய பேர் சொல்லுவாங்க.

said...

இந்திய ப்ராஜெக்ட் மானேஜர்கள் சொல்லும் கால அளவைவிட 4 மடங்கு அதிகம் இருக்கும். ஆனால் வேலைத்தரமாக இருக்கும் முழுமையாகவும் இருக்கும்.
இது தான் "நச்".
தெரியாததை தெரியாது என்று நமக்கு சொல்ல வராது,அது தான் பிரச்சனை.

said...

சந்தோஷ், இளம் வயதில் சம்பாதிக்க ஆரம்பித்த பிறகுதான் நம்மில் பலருக்கு பல விஷயங்களை கற்று கொள்ள பணம் கிடைக்கிறது. ஆனால் நேரம். 8 மணிநேரம் வேலை 8 மணிநேரம் கற்பது மீதமுள்ள 8 மணிநேரம் தூக்கத்திற்கும் போக்குவரத்திற்கு இருக்கவேண்டும்

said...

குமார், Do Not Say "Yes" when you want to Say "No" என்ற புத்தகத்தைப் படித்த பிறகு எனக்கும் ஞானம் வந்தது.

said...

இது முழுக்க முழுக்க bad time managementஆல் வரும் பிரச்சனை என்று நினைக்கிறேன் சிவா. அமெரிக்காவில் கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் வாரத்துக்கு only 40 மணிநேரம் வேலை.சனி,ஞாயிறு கண்டிப்பாக குடும்பத்தோடு ஊர் சுற்ற போய்விடுதல் என்றுதான் இருக்கிறது.இந்தியாவில் எனக்கு தெரிந்த ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் மூன்றுவேளை உணவும் கொடுத்து இரவு தங்கவும் வசதி செய்துதந்து விடாது வேலை வாங்குகிறார்கள்.ஆனால் கைநிறைய சம்பளம்.

said...

//அதுவும் Bachelorஆக இருந்துவிட்டால் போதும் நீ வீட்டுக்கு போயி என்ன பண்ண போற கொஞ்சம் முடிச்சி குடுத்துட்டு போ அப்படின்னு நிறைய பேர் சொல்லுவாங்க.
//
சந்தோஷ், சரியா சொன்னீங்க, எனக்கும் நடந்து இருக்கு.

சிவா,
நாம, மாடு மாதிரி 24 மணிநேரமும் வேலைப்பார்ப்போம்னு தான் எல்லாரும் (வெளிநாட்டு கம்பெனிங்க)இங்க வர்றாங்க.

//Do Not Say "Yes" when you want to Say "No" என்ற புத்தகத்தைப் படித்த பிறகு எனக்கும் ஞானம் வந்தது.
//
நானும் படிக்கிறேன்

said...

வினையூக்கி,

நன்றி. படித்துவிட்டு ஒரு பதிவை போடுங்கள்

said...

செல்வன், டைம் மானேஜ்மெண்ட் மட்டுமல்ல மற்ற விஷயங்களிலும் bad தான்.

இந்தியாவின் புகழ் பெற்ற சாப்ட்வேர்கம்பெனிகள் கூட ஸ்கில் செட் இல்லாமலேயே ஆர்டர் வாங்கிவிடுவார்கள். அதற்கு பிறகு தீயணைப்பு வேலைதான். அதாவது firefighting.

இவர்களின் கவனகுறைவால் ஆர்வகோளறு அதிகமுள்ள இந்திய இளைஞன் இளைமையைத் தொலைக்கிறான்.

அட இந்தியாவில்தான் அப்படி என்றால், இங்கே டெபுடேஷன் அனுப்புவர்களுக்கும் அதே.

இந்தியாவிலிருந்து ஒரு 72 மணி நோட்டீஸில் அமெரிக்கா போகவேண்டும் என்பார்கள். அமெரிக்காவில் 3 மாதம் முதல் 3 வருடம் வரை தங்க நேரிடலாம் என விட்டேத்தியாக ஒரு கமிட்மெண்ட்.

டெபுடேஷனில் வந்தவனின் வாழ்கைதரம் கபால் என கீழே இறங்கிவிடும். தனி ரூமில் கட்டிலில் உறங்கியவன், முகம் தெரியா நபருடன் தரையில் படுப்பான். சுடுதண்ணிகூட வைக்கத்தெரியாதவன். சாம்பார் உருளை கிழங்கு வருவல் செய்ய தடுமாறுவான் இன்ன பிற

இங்கே வெகுதூர நாடுகளுக்கு செல்லவேண்டுமென்றால் 3 மாதத்திற்கு முன்னாலேயே விசா வாங்கிவிடுவார்கள். அந்த நாட்டிற்கு போனாலும் அதிக பட்சம் 6 வாரங்கள் தான் தொடர்ந்து தங்க முடியும். பிறகு இங்கே வந்து குடும்பத்துடன் 2 வாரங்கள் ரெஸ்ட் எடுத்துவிட்டு மீண்டும் 6 வாரம் போகவேண்டும் என்பார்கள்.

ஆக மொத்தம் வெளிநாட்டில் ஆபிஸ் வாழ்க்கையும் சொந்த வாழ்கையும் நன்றாக பாலன்ஸ் ஆகியிருக்கும். அதனால் உற்பத்தி திறன் அதிகம் இங்கே.

said...

நல்ல பதிவு. பின்னூட்டங்களிலும் சில விடயங்கள் தெரிந்துகொள்ள முடிந்தது. நன்றி.

said...

உண்மை தான் சிவா. மேலாளர்கள் டார்கெட்டை ஒழுங்கா, அதிக எதிர்பார்ப்பில்லாம முடிவு செய்தாலே பாதி பிரச்சனை இல்லை. ஆனால், நாம மேலாளர் ஆகும் போதும் அப்படிச் செய்ய முடியலைங்கிறது தான் நிதர்சனம்.

இது ஒரு மாதிரியான ஓட்டமா இருக்கு. நம்மை விட அடுத்தவன் வேகம ஓடுறானேன்னு நாம இன்னும் அதிக வேகமா ஓடுறோம். அதனால் தான் இலக்கை அடையுமுன்பே பலவித உடல்ரீதியான/மனரீதியான பிரச்சனைகளுடன் ரிடையர் ஆகிடறோம். என்னிக்கு இதெல்லாம் புரிஞ்சிக்க போறமோ.. தெரியலை..

said...

செல்வநாயகி, வருகைக்கு நன்றி.

said...

பொன்ஸ், இந்தியாவில் இருந்திருந்தால் எனக்கு இந்த வயதில் ஹார்ட் அட்டாக் நிச்சயமாக வந்திருக்கும். அவ்வளவு டென்ஷன் அங்கே. அத்துடன் கெட்ட பழக்கங்கள். கிளையண்டுகளுடன் சதா காலமும் பார்ட்டி, பார், 5 நட்சத்திர ஓட்டல் உணவு. மானெஜ்மெண்ட்டிடம் நோ சொல்லமுடியாது. இந்த ஒரு ப்ராஜெக்ட் மட்டும் என வருடம் 5 ஓடிவிடும். விட்டால் போதும் என வந்துவிட்டேன். 8 மணிநேரம் ஆபிஸ் அப்புறம் வீட்டில் குடும்பத்துடன் அமைதியான வாழ்கை இங்கே. வீட்டில் சாப்பிடும் ரசம் சாதம் 5 நட்சத்திர உணவுகளைவிட 100 மடங்கு மேல்

said...

good post dude

if u have time see my page

said...

Siva,

You are RIGHT !

The point is, if you work more than 8 to 9 hours a day (more than 40-45 hours a week), your OUTPUT (and quality of work you do) comes down and that is a serious issue when you are working for a customer.

Our schedules are always tight and engineers struggle to meet the timelines.

I have seen all these, happening around me, as an engineer and manager !!!

said...

Karthik, Thanks. I am a regular reader of your posts. I know you are a Ajit fan.

Keep it up

said...

பாலா, நான் இந்தியாவில் இருக்கும்போது சில பாரின் ஜாப்களுக்கு ஆட்களை அனுப்பியிருக்கிறேன். ஒரு வேலைக்கு எவ்வளவு நாள் ஆகும் என வெள்ளைக்காரர்களிடமே கேட்டு நம் ஆட்களை அனுப்புவேன். நம் ஆட்களின் மேன்-அவர் ரேட் அவர்களின் ரேட்டில் கால்பங்குதான். அங்கே செல்லும் இளைஞர்களிடம் எப்படி மேன் அவரை செலவழிக்க வேண்டும் நன்றாகவே பாடம் எடுத்து அனுப்புவேன்