Friday, February 16, 2007

ஆன்மிகம் ஆனந்தமானது...

இன்று சிவராத்திரி. சிறுவயதில் மதுரை தெற்காவணி மூல தெருவில் திரு குன்னக்குடி வைத்தியநாதரின் வயலின் இசையை இரவு முழுக்க கேட்டு ஆனந்தமடைந்திருக்கிறேன்.

பிறகு அரேபிய பாலைவனத்தில் காபிரல்லாதவர்களின் நடுவில், மற்றவர்கள் பயந்து பயந்து இருக்க நான் ஆனந்தமாக இரவு முழுக்க சிவராத்திரி பஜனை மற்றும் அபிஷேகங்களை வீட்டில் நடத்தியிருக்கிறேன்.

பஜன் நடக்கும் போது அவ்வப்போது இஞ்சி ஏலக்காய் டீ, சுக்கு மல்லி காப்பிகளை தயாரித்து மக்களுக்கு விநியோகம் செய்திருக்கிறேன்.

இன்றைய ராத்திரி கால்கரியில் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் பக்தர்கள் நடத்தும் பஜனையில் கலந்து கொள்ள முடிவெடுத்துள்ளேன். ஸ்ரீஸ்ரீ " ஆன்மிகம் என்பது ஏன் இறுக்கமாக இருக்கவேண்டும். ஆனந்தமாக பாடி நடனமாடி சந்தோஷமாக ஆன்மிகத்தை பெறலாமே" என்று கூறுவார். பார்க்க ஸ்ரீஸ்ரீ பக்தர்கள் கொண்டாடும் வீடியோவை:




ஆன்மிகம் ஆனந்தமானது. நம்முள் இருக்கும் இறைவனை நாம் உணரும் போது கிடைக்கும் இன்பம் அளவிட முடியாது. பகலென்ன இரவென்ன அந்த ஆனந்ததிற்கு தடை கிடையாது. தங்கு தடையின்று ஆனந்த வெள்ளத்தில் நீந்த ஆன்மிகமன்றி வேறின்பம் ஏது இதைத் தான் முன்னோர்கள் பேரின்பனம் என்பார்களா?

இங்கே பாரதியாரின் பாடலை மனதிற்குள் பாடிக்கொண்டேன்.

எத்தனை கோடி இன்பம் வைத்தாய் -
எங்கள் இறைவா! இறைவா! இறைவா!

சித்தினை அசித்துடன் இணைத்தாய் -
அங்கு சேரும் ஐம்பூதத்து வியனுலகமைத்தாய்.
அத்தனையுலகமும் வர்ணக்களஞ்சியமாகப்
பலபல நல்லழகுகள் சமைத்தாய். (ஓ- எத்தனை)

முக்தியென்றொருநிலை சமைத்தாய் -
அங்கு முழுதினையுமுணரும் உணர்வமைத்தாய்
பக்தியென்றொரு நிலைவகுத்தாய் -
எங்கள பரமா! பரமா! பரமா! (ஓ - எத்தனை)

இந்த பாடலை என் அபிமான பாடகர் திரு உன்னிகிருஷ்ணன் குரலில் கேட்க
இங்கே

இசைக்குயில் பாடியதை கேட்க இங்கே

சின்னகுயில் மஹாநதி ஷோபனா பாடியதை கேட்க இங்கே

10 comments:

said...

ஆன்மிகம் ஆனந்தமானது. நம்முள் இருக்கும் இறைவனை நாம் உணரும் போது கிடைக்கும் இன்பம் அளவிட முடியாது. பகலென்ன இரவென்ன அந்த ஆனந்ததிற்கு தடை கிடையாது. தங்கு தடையின்று ஆனந்த வெள்ளத்தில் நீந்த ஆன்மிகமன்றி வேறின்பம் ஏது இதைத் தான் முன்னோர்கள் பேரின்பனம் என்பார்களா?//

Great lines siva.

In alien lands,when I am alone,only gods of motherland console me.That feeling cannot be told,but can be only experienced.

(Am touring.No tamil fonts availaible.posting from hotel computer)

said...

சிவா!
என் இளமைக்காலச் சிவராத்திரிகள் ஆனந்தமானவை; வீட்டில் யாருமே "படிடா" என்று சொல்லாத இரவெல்லவா?
விடிய விடிய விளையாட்டுத்தான்; ஆத்மீகம் பற்றி ஏதுமே தெரியாத வயது.
"அந்த நாளும் வந்திடாதோ"

said...

சிவா,

"லஜ்ஜையை விட்டு கஜ்ஜையை கட்டுன்னு" ஒரு சொல்வழக்கே உண்டுன்னு நினைக்கரேன்.ஹரிதாஸ் கிரி ஸ்வாமி யோட
"பிருந்தாவனுமே குஞ்ஜ பவனுமே நாச்சத்து கிரி லால்" கேட்ருகீங்களா?? கிருஷ்ணரோடு சேர்ந்து ஆடுவது போல் இருக்கும். Happy shivarathri!!

said...

திருமதி ராதா அவர்களின் முதல் வருகைக்கு நன்றி. ஹரிதாஸ் கிரி சுவாமிகள் என்றதும் எனக்கு நினைவுக்கு வருவது "ப்ரபோ கணபதே பரிபூரண வாழ்வளிப்பாயே" என்ற பாடல்தான்.

ஸ்ரீஸ்ரீ பக்தர்கள் பஜனைப் பாடல்கள் இளமை துள்ளலுடன் நடனமாட ஏற்றவாறு பாடுகிறார்கள்

said...

செல்வன், நிச்சயமாக. வெளிநாட்டிற்கு வந்து நான் சிவப்பழமாகிவிட்டேன்

said...

யோகன், கள்ளமில்லாத குழந்தை உள்ளம் தானே கடவுள். அதைப்பெறதானே சைவத்தை நாடியுள்ளோம்

said...

நல்லபதிவு கால்கரியாரே!

///சின்னகுயில் மஹாநதி ஷோபனா பாடியதை கேட்க///

சின்னக்குயில் என்றால் அது பாடகி சித்ரா அவர்களைத்தான் குறிக்கும்

ஷோபனாவை மஹாநதி ஷோபனா
என்றே அழைக்கலாம்

said...

//வெளிநாட்டிற்கு வந்து நான் சிவப்பழமாகிவிட்டேன்//

சத்தியமான வார்த்தை. இந்தமுறை சிவராத்திரிக்கு இருமுறை ஏகதச ருத்ராபிஷேகம் + ருத்ரம் சமகம் ஜபம் + சிவ பஜனை என்று சிவப்பழமாகி சிவனின் பாதம் தொழுதேன் அடியேனும்.

said...

MeRY Shiv RathRY! :D

said...

ஆம் சிவா. "Long faces dont make religion" என்ற விவேகானந்தர் மொழி தான் உங்கள் தலைப்பைப் பார்த்தவுடன் நினைவு வந்தது!

சிவ உணர்வின் ஆனந்தமே அலாதியானது. என் மனதில் தோன்றிய சில சிவ அனுபவத் துளிகள்:
http://jataayu.blogspot.com/2007/02/1.html