சில பேருக்கு சில நேரங்களில் சில மனதடைகள் இருக்கும். மனத்தடை என்பது என்ன? ஆங்கிலத்தில் mental block என வைத்துக் கொள்ளலாம். ஒரு இடத்தைப் பற்றியோ அல்லது ஒரு உணவைப் பற்றியோ அல்லது சில பேரின் உருவங்களைப் பார்த்து அவர்களை பற்றியோ ஒரு மனத்தடையை ஏற்படுத்தி கொள்வார்கள்.
எனக்கு இந்த சூஷி பற்றி ஒரு மனத்தடை. அது வேகவைக்காத மீனால் ஆன உணவு பொருள் என்று. பொதுவாக ஸீ புட்களைப் பார்த்தலே அது நாறும் என்ற மனத்தடை எனக்கு உள்ளது.
என் அனுபவத்தில் நான் பார்த்த மனத்தடைகள் :
கடந்த வருடம் துபாய் ஏர்போர்ட்டில் சென்னை கனெக்டிங் பிளைட்டை தவறவிட்டு அடுத்த பிளைட்டிற்காக சுமார் 6 மணிநேரம் காக்க வேண்டியிருந்தது. கணிணியில் தமிழ் வலைப்பதிவுகளை மேய்ந்து கொண்டிருந்த போது ஒரு தமிழ் இளைஞர் அறிமுகமாகமானர். அவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். ஈமெயில் பார்க்க என் கணிணியைக் கொடுத்தேன். இலவசமாக உணவு கிடைத்தது. அங்கே நானும் அவரும் சென்று ஸ்டார்ட்டர்களான சமோசாவையும் ஒரு கிளாசில் ஜூஸும் எடுத்துக் கொண்டு அமர்ந்தோம். சமோசாவை நான் கடிக்க எத்தனிக்கும் போது. அந்த இளைஞர் நிறுத்துங்கள் என கத்திவிட்டார். ஏன் என்றேன் இது சிக்கன் சமோசா என்றார். அதனால் என்ன என்றேன். அவர் நீங்கள் சிக்கன் சாப்பிட மாட்டீர்களே என்றார். நான் உங்களைப் பார்த்து 1 மணிநேரம் தான் ஆகிறது. நான் சிக்கன் சாப்பிட மாட்டேன் என சொன்னமாதிரி எனக்கு ஞாபகமில்லையே என்றேன். இல்லை சார் உங்களைப்பார்த்தால் நான் வெஜ் சாப்பிடுபவர் மாதிரி இல்லையே என்றார். அவருக்கு நான் பிராமணராக இருப்பேன் என மனத்தடை. இந்த மாதிரி உருவ அமைப்பு உள்ளவர்கள் பிராமணர்களாகத்தான் இருப்பார்கள் என அவரின் மனத்தடை.
இன்னொருவர் இவர் வேதியியலில் டாக்டர் பட்டம் பெற்றவர். நல்ல உயரம். உயரத்திற்கு ஏற்ற பருமன். கரிய நிறம். இவருடன் ஹூஸ்டனில் ஒரு ஓட்டலுக்கு போனேன். நீ தண்ணியடி ஆனால் பாரில் வேண்டாம் ரெஸ்டாரண்டில் அடிக்கலாம் என்றார். நானும் சரியென்று ஒரு பீரும் சைட் டிஷ்ஷிற்கு சிக்கன் விங்க்ஸும் ஆர்டர் செய்தேன். அவர் சிக்கன் விங்ஸை என்னுடன் பகிர்ந்துக் கொள்வதாயும் குடிக்க கோக் பாட்டில் அல்லது கேனில் வேண்டும் கிளாஸில் வேண்டாம் என பல முறை அந்த பெண்ணிடம் கேட்டுக் கொண்டார். ஆர்டர் செய்தவுடன் அவர் தன்னை ஒரு டீ டொடலர் என்று சொல்லிக் கொண்டார். சிகரட் வாசனை ஆல்கஹால் வாசனை அறவே பிடிக்காது என்றார். அயிட்டங்கள் வந்தன அவருக்கு கோக் கிளாசில் வந்தது. மனிதர் கொதித்து விட்டார். சர்வரியும் அங்கே ட்ராப்ட் கோக் மட்டும் உள்ளது பாட்டிலோ / கேனோ இல்லை என்றார். கடைசியாக ஒரு பேப்பர் டம்ளரில் கோக்கை குடித்தார். நானும் ஏன்... ஏன் எனக் கேட்டேன். அவரிடமிருந்து வந்த பதில் என்னை ஆச்சரியப்படுத்தியது. கிளாஸில் ஆல்கஹால் ஒட்டியிருக்க வாய்ப்பிருக்குமாம் அதனால் வெளியே வந்தால் கிளாஸில் எந்த பானமும் குடிக்க மாட்டாராம். எங்கு போய் முட்டிக் கொள்வது. ஆல்கஹால் தண்ணீரில் இரண்டற கலக்கும் குறைந்த வெப்பநிலையில் ஆவி ஆகிவிடும். இங்கே ரெஸ்டராண்டுகளில் கிளாஸ் பாத்திரம் கழுவும் மெசினில் நன்றாக கழுவி சுடு காற்றால் காயவைப்பார்கள். ஆல்கஹால் இருக்க வாய்ப்பில்லை. வேதியியலில் டாக்டர் பட்டம் வாங்கியவருக்கு நான் சொல்லத் தேவையில்லை. சிக்கன் விங்ஸ் சாப்பிட்டு முடிந்தவுடன் அந்த விங்க்ஸ் வைன் ஊற்றி சமைத்திருப்பார்கள் என்றேன். அவர் பேய் அறைந்தவர் போல் ஆகி விட்டார். ஆல்கஹாலைப் பற்றி அவரின் மனத்தடை சற்று அதிகம்.
நம் வலைப்பதிவுகளில் ஒருவர் இந்து மதத்தைப் பற்றி எழுதிவிட்டாலோ அல்லது கருப்புக் கொடி கேடிகளை தாக்கிவிட்டாலோ அவர் ப்ராமணராகத்தான் இருப்பார் என்பது சிலரின் மனத்தடை.
மனத்தடைகளே மனிதனின் முன்னேற்றத்திற்கான முக்கிய தடை கல்.
மனத்தடைகளை களைவோம் முன்னேறுவோம்
Tuesday, February 06, 2007
Subscribe to:
Post Comments (Atom)
17 comments:
நல்ல பதிவு திரு சிவா அவர்களே. நீண்ட நாட்களாக் தங்களின் பதிவுகளை படித்திருந்தாலும் முதல்முறையாய் பின்னூட்டம் இடுகிறேன். இது போல் வலுக்கட்டாயமாக ஏற்படுத்திக்கொண்ட அல்லது திணிக்கப்பட்ட mind blockகளே உலகில் மற்றும் பதிவுலகில் நடைபெறும் பல பிரச்சனைகளுக்கு காரணம் என்று நினைக்கிறேன்.
இன்னும் பல இடங்களில் இந்த மாதிரி மனத்தடைகளை நானும் பார்த்து இருக்கேன்.
ஒரு கருத்துக்கு எதிர்வினை அளித்தால் உடனே, சொன்னதை விட்டு விட்டு நீ என்ன சோ அண்ட் சோ க்ரூப்பா, அல்லது உன் புத்தி இப்படி இல்லாமல் எப்படி வேலை செய்யும் என்பது போன்ற பின்னூட்டங்கள்.
இது எனக்கு மட்டுமில்லை, என் நண்பர்கள் சிலருக்கும் கூடத்தான். அதை எல்லாம் இக்னோர் செய்து விட்டுதான் செல்ல வேண்டி இருக்கிறது. :(
எனக்கு கூட கேசரி / குலோப்ஜாமூன் சாப்பிடக்கூடாது என்று ஒரு கொடுமையான வியாதி இருந்தது...
கிட்டத்தட்ட கல்லூரி காலம் வரை இவை இரண்டையும் கண்டாலே காத தூரம் ஓடுவேன்..
என்னோட தாயார் ஒரு முறை (இப்போது உள்ள குலோப்ஜாமூன் மிக்ஸ் எல்லாம் மார்க்கெட்டில் இல்லாதபோது) முயற்சி செய்து தயாரித்த குலோப் ஜாமூனை ( அப்படி எல்லாம் அவசரப்பட்டு அதற்கு பெயர் வைத்துவிட முடியாது - கரிய நிறத்தில் உருண்டையாக நெல்லிக்காய் சைஸில் - வாலிப வயோதிய அன்பர்களுக்கு கொடுக்கும் உருண்டை மாதிரி இருந்தது) தின்று என்னோட பல் பப்படம் மாதிரி உடைந்தது...
பின் அடையாறு ஆனந்த பவனில் நெய்யில் பண்பாக செய்த கேசரி ஒன்றையும், தளதளவென ஜீராவில் ( ஜீ.ராகவனை அல்ல) ஊறிய மென்மையானதொரு ஜாமூனையும் உள்ளே தள்ளியபோது இவைகளை தின்னாமல் பல ஆண்டுகள் வேஸ்ட் செய்துட்டமே என்று சர்வரை (ஆம்பிளை) கட்டிப்பிடித்து அழுதேன்..
பைதவே, நீங்க தி.க எல்லாரையும் கேடி என்று கூறியது தவறு...நான் தி.க தான்.ஆகவே உடனே வாபஸ் முயற்சியோ / டிஸ்கியோ வெளியிடவேண்டும்.
//பைதவே, நீங்க தி.க எல்லாரையும் கேடி என்று கூறியது தவறு...நான் தி.க தான்.ஆகவே உடனே வாபஸ் முயற்சியோ / டிஸ்கியோ வெளியிடவேண்டும்.
//
ரவி, நான் சொன்னது கருப்பு கொடி கேடிகளை. தாங்கள் கேடியா? கருப்பு கொடி ஆதரவாளர்தானே. கேடியில்லையே?
கருப்புக் கொடி ஆதாரவாளராக தாராளமாக இருந்துவிட்டு போங்கள். உங்களிடம் பேசவோ அல்லது நட்பு கொண்டாடவோ அல்லது உங்களை எங்கள் வீட்டிற்கு அழைக்கவோ எனக்கு மனத்தடைகள் எதுவுமில்லை.
கருப்புக் கொடியை கேடயமாக்கி கேடியாகி தனிமனித தாக்குதல் நடத்துபவர்களைப் பற்றிதான் பேச்சே.
சோ நோ வாபஸ் ஆர் டிஸ்கி
மணிகண்டன், மிக்க நன்றி தாங்களின் முதல் வருகைக்கு நன்றி.
மனத்தடைகளைக் களைவோம் என்ற பதிவிலேயே, 'கருப்புக் கொடி கேடிகள்' என்ற உங்களது மனத்தடை ஓட்டத்தைக் காண்பித்தது நல்ல நகைமுரண்!
மற்றபடி, கொத்தனார் சொல்வதை நான் வழி மொழிகிறேன்.
நல்ல பதிவு சிவா.
என்னுடைய வர்ணாசிரமம் பதிவில் நீங்கள் மனத்தடைகளை பற்றி குறிப்பிட்டது நினைவுக்கு வந்தது சிவா. தடைகளை தகர்த்தெறிந்து ஒருவன் முன்னேற ஜாதி அழிவது அவசியம்.
பெரும்பாலான மனத்தடைகள் நமக்கு நாமே ஏற்படுத்தி கொள்வதுதான். அவற்றை அகற்றுவதும் நம் கையில் தான் இருக்கிறது. ஜன்னலை திறந்து வெளியே நோக்குவதற்கு பதில் பல சமயங்களில் கண்ணாடியில் நம் முகத்தையே நாம் உற்று பார்க்கிறோம்.
நல்ல பதிவு சிவா.
எனக்கும் முந்தியெல்லாம் 'சீட்டு ' விளையாடுறவங்களைப் பார்த்தா
மனசுலே ஒரு நெருடல்.
அது எவ்வளோ நல்ல விளையாட்டுன்னு மகள் சொல்லிக்கிட்டே இருப்பாள்.
அவளுக்கு, 'சாம்பார்'னனா ஒரு பெரிய மனத்தடை. அது எவ்வளோ ருசியானதுன்னு
நானும் சொல்லிக்கிட்டே இருப்பேன்.:-)
சிவா, சின்ன வயசிலே எதோ தெரியாம் இந்த சப்பாத்தி சாப்பிடுவது எனக்கு பிடிப்பதில்லை, வெரைட்டிக்காக எங்கள் வீட்டில் செய்யும் பொழுது எனக்கென எங்கள் பெரியம்மா வீட்டிலிருந்து இட்லி வந்துவிடும், ஆனா பாருங்க வாழ்க்கையிலே பாதிகாலம் ரொட்டின்னு வாழ்க்கையாயிடுச்சி, இதுவும் மனத்தடைகளை முறியடிக்கும் ஒன்றே?
செல்வன், மனத்தடைகள் களைந்தால் எதுவுமே சாத்தியம். நான் புகைப் பிடித்துக் கொண்டிருந்தேன் சில வருடங்களுக்கு முன். பிறகு புகைப்பிடிப்பதை நிறுத்த முடியவில்லை என கவலைப் பட்டேன்.
பிறகு எங்கோயோ படித்தேன். "நீ தானே சிகரட்டைப் பிடித்துக் கொண்டிருக்கிறாய். சிகரட்டா உன்னைப் பிடித்துக் கொண்டிகுக்கிறது" மனதுக்குள் பொறிதட்டியது சிகரட் கீழே விழுந்தது.
துளசி மேடம்,
சீட்டு விளையாட்டில் 3 சீட்டு மிக மோசம் என்பார்கள். ஆனால் அது படு வேகமாக முக்கிய போட்டியாக வளர்ந்து வருகிறது.
உங்கள் மகள் என் மகனை போல பீட்சா/பர்கர் பார்ட்டியா? :)
எஸ் கே சார்,
கருப்புக் கொடி காரர்கள் எல்லாம் கேடிகள் என்றால் மனத்தடை. ஒப்புக் கொள்கிறேன்
கருப்புக் கொடி கட்சியில் உள்ள கேடிகளை தண்டிப்பது தவறா.
எனக்குக் கத்திரி(க்காய்) மேல் மனத்தடை!
பாலா, அப்படியா எனக்கும்தான். மனத்தடை மட்டுமல்ல உடலும் தடை. அலர்ஜி ஆகி ஆங்காங்கே வீக்கங்கள் வந்து விடும்
ஒரு கொள்கையைத் தீவிரமாகக் கடைபிடிப்பதும், அதற்காக அடுத்தவரை வெறுப்பதும் மனத்தடை ஆகுமா?
மன விகாரம் என்றே சொல்ல வேண்டும் இதை.
மனத்தடை என்பது பொதுவாக காரணமின்றி, அதில் உள்ள நியாயங்கள் தெரிந்தும் மறுக்கும் ஒரு நிலை என்று தான் மனோதத்துவம் சொல்கிறது.
சைவ உணவைக் கடைப்பிடிக்கும் ஒருவர் அசைவைத்தை ஒதுக்குவது இது போலவே![மனத்தடை]
உயிர்வதை கூடாது என்று தீவிரமாக நம்பி, அதனால் அசைவத்தை வெறுப்பது முந்திய வகை.[மன விகாரம்]
ஒரு வகை உணவு பிடித்தாலும், அதனால் ஏற்படும் விபரீத விளைவுகளைக் கருத்தில் கொண்டு ஒதுங்[க்]குவது சுயக்கட்டுப்பாடு.
இதனை மனத்தடை, மனவிகாரம் எனச் சொல்லமுடியாது.
உங்கள் கருத்து என்ன?
சிவா,
உங்களுக்கு பின்னூட்டமிட எப்போதும் எனக்கு மனத்தடை இருந்ததில்லை :)
நல்ல பதிவு !
எ.அ.பாலா
//ஒரு கொள்கையைத் தீவிரமாகக் கடைபிடிப்பதும், அதற்காக அடுத்தவரை வெறுப்பதும் மனத்தடை ஆகுமா?
மன விகாரம் என்றே சொல்ல வேண்டும் இதை.
//
மன விகாரமே நாளடைவில் தீவிரவாதம் ஆகிறது
//சைவ உணவைக் கடைப்பிடிக்கும் ஒருவர் அசைவைத்தை ஒதுக்குவது இது போலவே![மனத்தடை]
//
மிக சரி அதை சுவைக்காமல் அது சரிவராது என சொல்வது மனத்தடை
//உயிர்வதை கூடாது என்று தீவிரமாக நம்பி, அதனால் அசைவத்தை வெறுப்பது முந்திய வகை.[//
இதைவிட அசைவம் சாப்பிடுபவர்களை வெறுப்பதுதான் முற்றிய மனவிகாரம்.
//ஒரு வகை உணவு பிடித்தாலும், அதனால் ஏற்படும் விபரீத விளைவுகளைக் கருத்தில் கொண்டு ஒதுங்[க்]குவது சுயக்கட்டுப்பாடு.
//
அது சர்வைவல் இன்ஸ்டிங்க்ட். வேர்கடலை சிலபேருக்கு ஆபத்தான அலர்ஜியை உண்டுபண்ணும் என்பது எனக்கு இங்கே வந்த பிறகுதான் தெரிந்தது. பீ நட் பட்டர் சாப்பிட்டுவிட்டு தன் காதலியை முத்தமிட. வேர்கடலை அலர்ஜியுடைய அந்த பெண் இருந்தது பரிதாபம்.
சார், டாக்டர் நீங்க உங்களுக்கு தெரியாததா இந்த சப்ஜெக்ட்டில்.
அடுத்து மன அழுத்தம் அல்லது மன தளர்வு பற்றிய ஒரு பதிவு எழுத போகிறேன். தங்களின் மேலான ஒத்துழைப்பு தேவை
Post a Comment