Friday, July 07, 2006

என் அரேபிய அனுபவங்கள் - 10.4


சவூதியில் தணிக்கை கடுமை மற்றும் முட்டாள் தன மானது. அருகில் உள்ள காசட் கவரை பாருங்கள். இதில் கமலஹாசனும் ராதாவும் நடன மாடுகிறார்கள். ராதாவின் உருவம் கருப்பு மையால் அழிக்கப் பட்டுள்ளது. கருப்பு மையால் படத்தை அழித்தால் உள்ளே உள்ள பாடல்கள் மாறி விடுமா.

இதே போல்தான் வாரபத்திரிக்கைகளிலும், தினபத்திரிக்கைகளிலும் ஆங்காங்கே கருப்பு மை இருக்கும். அது

ஒரு ஆணும் பெண்ணும் அருகில் இருந்தாலோ இல்லையேல் இந்து கடவுள்களின் படங்கள் இருந்தாலோ உடனே அழித்து விடுவர்.

சரி வீடியோ காசெட்டுகள். கமலஹாசனும் கௌதமியும் அருகருகில் வந்தால் போதும் திரையில் ஒரு பூ வந்துவிடும். இதெல்லாம் என்னை மாதிரி அப்பாவியாக வெளியே கடையில் வாங்கும் ஆட்களுக்குத்தான் . அங்கிருக்கும் பிலிப்பினோ நண்பர்களை அணுகினால் குப்பை குப்பை யாக நீலப் படங்கள் கிடைக்கும். நான் ஏன் இந்த காசெட் படத்தினைப் போட்டேன் என்பதற்கு விளக்கம் பின் குறிப்பில்


திரு வடுவூர் குமார் அவர்கள் என்னுடைய முந்தைய பதிவில் இட்ட பின்னூட்டம்

சிவாஅந்த அமைச்சருக்கு ஒரு பெரிய வாழ்த்து கொடுங்க.அருமையான சிந்தனை.தான் வாழ அடுத்தவனை உபயோகப்படுத்தும் போதே அவனுடைய நலன்களை பார்பவரை மனிதனாக பார்க்கமுடியவில்லை.அதற்கு மேலாகத்தான் பார்க்கவேண்டும்."சமுதாய நலனே முக்கியம்"-என்ன வார்தைகள்.மனதை நெகிழ வைக்கின்றன.


குமார்,

இந்த பேட்டியைக் கேட்கும் போது எனக்கு அபுதாபியில் என் நண்பருக்கு காரியதரிசியாக இருந்த அம்மையாரின் ஞாபகம் வந்தது. இவருடைய பெயரை அனிதா என்று வைத்துக் கொள்வோம். அனிதாவிற்கு 5 வயது இருக்கும் போது அவருடைய அப்பா அபுதாபிக்கு குடிபெயர்ந்தார். அப்போது அமீரகம் என்ற நாடு இல்லை. அபுதாபி, துபாய் சார்ஜா போன்ற நாடுகள் சிறு சிறு ராஜ்ஜியங்களாக் இருந்தன. (1960களில்) அப்போதெல்லாம் அங்கே இந்தியா ரூபாய்கள் புழக்கத்தில் இருந்தன. இன்னும் சில் வயதான அரேபியர்கள் பணத்தை ரூபாய் என்றுதான் அழைப்பார்கள்.

அனிதாவின் குடும்பம், நண்பர்கள் என நாளடைவில் ஒரு சின்ன சமுதாயமே இங்கே குடியேறினர். இவர்கள் கோவாவை சேர்ந்தவர்கள். அனிதா அங்கேயே இவரைப் போல் வந்த வரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இவர் அங்கேயே பள்ளிப் படிப்பை படித்து கல்லூரிப் படிப்பிற்கு மட்டும் இந்தியாவிற்கு வந்து சென்றவர்.

இவருக்கு இந்தியாவில் வேறு யாரும் இல்லை. இவர் அங்கெ வாழ்வது கடந்த 35 வருடங்களாக. இவருக்கு அபுதாபி என்ற காங்கீரீட் காடுகளின்றி வேறெதுவும் தெரியாது. இவரின் குழந்தைகளும் அவ்வாறே. ஆனால் இவர்கள் இன்னும் இந்திய குடிமக்களே. கடந்த 35 வருடங்களாக் இவருக்கு இல்லையேல் இவரின் கணவ்ருக்கு தொடர்ந்து வேலைக் கிடைத்து வருகிறது. இவரும் இவரின் கணவ்ரும் சாதரண வேலையில் தான் இருக்கிறார்கள். இரண்டு பேருக்கும் சேர்ந்து வேலை போனால் , இவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் .

இருந்தால் வேலையில் இரு இல்லையேல் வெளியெறு. இதுதான் அரபு நாடுகளின் கொள்கை

இவர்கள் எங்கு போவர்கள். இரண்டு தலைமுறைகள் அநநாட்டிற்கு செய்த ஊழியத்திற்கு நன்றி கடன் இதுதானா. இவரைப் போல் அமீரகத்தில் சில ஆயிரம் பேர்களாவது இருப்பார்கள் என்பது என் ஊகம். இவர்கள் உண்மையில் பரிதாபத்திற்குரியவர்கள்

பின் குறிப்பு.

திரு ஆசாத் அவர்களே, மேலே உள்ள காசெட்டின் படம் பாருங்கள். கமலஹாசன் பாடல்கள், ரஜினி பாடல்கள், திரையில் கர்நாடக இசைப் பாடல்கள், எம் ஜி ஆர் பாடல்கள், சிவாஜி பாடல்கள், சோக பாடல்கள், டப்பாங்குத்து பாடல் கள் என தாம்சன் கம்பெனியினர் காசெட்டுகள் வெளியிட்டனர். நேற்று என் வீட்டு பேஸ்மெண்டை குடைந்ததில் இந்த காசெட் கிடைத்தது. எம் ஜி ஆர் காசெட் இருக்கும் . இங்கில்லையென்றால் சென்னையிலோ மதுரரையிலோ என் வீட்டில் இருக்கும் இருக்கும் கிடைத்தவுடன் வெளிய்டுவேன்


திரு கேவி ராஜா அவர்களே, என் மனைவியை இஸ்லாமிய முறைபடி உடை அணிந்து போட்டோ எடுக்க சொன்னது உண்மை. அந்த போட்டோவும் என்னிடம் உள்ளது. மேலும் என் குடும்பத்தினருடன் எடுத்த போட்டோக்கள் ஆகியவைகள நான் வெளியிட விரும்பவில்லை. அந்த மெண்டல் கேஸ் உங்கக் குடும்பத்தினரை கேவலப்படுத்தியது மறந்துவிட்டதா.

பொய் என் இரத்ததில் இல்லை

தொடரும்.....

26 comments:

said...

சிவா, அரேபிய நாடுகளில் எவ்வளவு நாட்கள் தங்கியிருந்து வேலை செய்தாலும் குடியுரிமை வாங்க முடியாதா? என்ன கொடுமை.

said...

மகேஸ், முடியும் .

முதலில் முஸ்லிமாக மதம் மாறவேண்டும்.
இரண்டாவது கோடிஸ்வரராக இருக்கவேண்டும். அரச குடும்பத்தினரின்
வியாபாரத்திற்கு கோடிகளில் லாபம் ஈட்டி தருபவராக இருக்கவேண்டும்.

இடிஅமீன், நாவஸ் ஷெரீப் போன்ற கொடுங்கோலர்களாகவோ அல்லது உழல் பெருச்சாளிகளாகவோ அல்லது மினிமம் இந்தியாவில் ஒரு குண்டு வைத்த தீவிரவாதியாகவோ இருக்கவேண்டும். உ.ம். தாவூத் இப்ராகிம்

said...

நானும் சவுதி அரேபியாவில் மூன்று ஆண்டுகள் இருந்தவன் (1991-1994) என்ற முறையில் கூறுகிறேன்.. சிவா சொல்வது அனைத்தும் உண்மையாகத்தாண் தெரிகிறது.. எனது அனுபவங்களும் அல்லது என் நண்பர்களின் அனுபவங்களும் ஏறக்குறைய சிவா எழுதுவதையொத்துத்தான் இருந்தது..

குடியுரிமையைப் பற்றி: வெகு சமீபத்தில கடந்த வருடமோ அல்லது அதற்குள்ளோ.. சவுதி அரேபிய அரசு 1 மில்லியன் வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை அளிக்க இருப்பதாகவும் அதற்கான விண்ணப்பங்கள் அரசு அலுவலகங்களில் கிடைப்பதாகவும் செய்தி சொன்னது.. எவ்வளவு பேருக்குக் கெடச்சது.. என்ற விவரங்கள் என்னிடம் இல்லை.

சீமாச்சு...

said...

இப்போ எதோ ஒரு ஊரில் மட்டும் தராங்க இல்லை? அதுவும் டாக்டர் மாதிரி படிச்சவங்களுக்கு மட்டும்...

said...

ஷிவா அவர்களே,

உதாரணத்திற்கு 10ஆண்டுகள் வேலை செய்தவர்க்கு நிரந்தரதர ரெஸிடன்ஸி, 15ஆண்டுகள் வேலை செய்தவர்க்கு குடியுரிமை(சிட்டிஸன்ஷிப்) என்று தந்தால், பஹ்ரைன், கத்தார், குவைத், அமீரகம் போன்ற நாடுகளில் GCC-Indian citizens ன் மக்கள்தொகை ஒரிஜினல் GCC-Arabic Citizen மக்கள்தொகைக்கு இணையானதகிவிடும்.

சவூதி அரேபியாவிலும் பெரிய அளவிலான GCC-Indian citizens ன் மக்கள்தொகை பெருகிவிடும்.

அரசியல் ரீதியாக இது அரேபிய நாடுகளை இந்தியாவின் extended territories ஆக்கிவிடும் நிதர்சனம் மற்றும் தற்போதுள்ள Religious dogmatism நீர்த்துப்போய்விடும் நிதர்சனமும், இன்றளவுக்கும் "authoritative Moarchy" அரசியல் அமைப்பு உள்ள அரேபிய நாடுகளை ஆள்வோர் அறிந்துள்ளதும் காரணமாகின்றன.

இன்றும் 90% பெட்ரோலிய வருவாய் இந்த அரேபிய நாடுகளை ஆள்வோர் குடும்பத்திற்குத்தானே செல்கின்றன, இந்த அரேபிய அரச குடும்பத்தவர் பணம் பெரும்பாலும் சுவிஸ்,ஐரோப்பிய வங்கிகளில்தானே சென்று சேர்கிறது.

உழைத்து உளுத்துப்போவது இந்தியர்கள். "இண்டர்நேஷனல் நம்பிக்கையான-ரகசியக்காப்பு வங்கிதொழில்" நடத்தும் வெள்ளைக்கார நாடுகள்தானே முழுப்பயனாளிகள்!

இந்த அரேபியநாடுகளின் அரசியல் சிந்தனையில் புரட்சி வந்தாலேயன்றி ஏதும் மாறாது. புரட்சியாக எவெரேனும்
அரசியல் மாற்றத்திற்கு குரல் கொடுத்தால், ஷரியத்போரிவையில் தங்கக்கொடுவாளால் சிரச்சேதம் செய்யப்படுவர்..அல்லது ப்ளைட்பிடித்துத் தப்பி தாங்களிருக்கும் கனடாவிற்குத்தப்பி 'அரசியல் அகதி" கோட்டாவில் இம்மிக்கிரேட் ஆகவேண்டிய நிலைதானே நிதர்சனம்.

இந்த மத்திய கிழக்கு நாட்டு அரசியல் எல்லாவற்றையும் தாண்டி, priority-ல் முதலில் வரும் தன் குடும்பத்தில் உள்ள "நாலு பேருக்காக சவூதியில் வேலை செஞ்சாக்கூட பரவாயில்லை" என்று சொல்லும் "நாயகனாக"த் தானே நம்ம சராசரி இந்தியன் இருக்கிறான்.

said...

இனிய சிவாஜீ,

அழைப்பிற்கு நன்றிகள்.

1.
தாம்ஸன் வெளியீட்டில் எம்.ஜி.ஆர்.பாடல் இருந்தால் எனக்கு அறியத்தாருங்கள்.

2.
இதுபோல் கருப்பு வண்ணம் பூசுவதை ஏதோ ஒரு வாரப்பத்திரிகை நன்றாகக் கிண்டலடித்திருந்தது...அது ஆகிறது இருபது இருபத்தைந்து வருடம்.

அப்போது சிலுக்கு ஸ்மிதா உச்சத்தில் இருந்தார். சிலுக்கு ஸ்மிதா சவூதி போனால் எப்படி இருப்பார் தெரியுமா என்ற கேள்வியுடன் துவங்கி, அடுத்த பக்கத்தில் பார்த்தீர்களென்றால், பட்டைபட்டையாகக் கருப்பு மை பூசிய சிலுக்கைப் போட்டிருந்தார்கள்.

எனது நினைவு சரியாக இருக்குமானால் அது 'பொன்மேனி உருகுதே' பாடலின் ஸ்டில்.

எழுத்தாளள நண்பர் ஒருவர், 'பாய் அந்த மாதிரி கறுப்பு அடிச்ச ஸ்டில் கொண்டாங்க பாய்' எனக் கேட்டார்.

அவர் நேரம், இப்போதெல்லாம் கருப்பு அடிப்பதை விட்டுவிட்டார்கள். நேற்று வாங்கிய குங்குமம் ஹெல்த் ஸ்பெஷலில், பின் அட்டையில் நமீதா வெண்மையாகத்தான் சிரிக்கிறார்.

(ஜீ, சத்தியமா நான் சவூதிக்கு சப்போர்ட் பண்ணல. இப்ப நடக்றத எழுதுறன், அவ்வளவுதான்)

3.
//முதலில் முஸ்லிமாக மதம் மாறவேண்டும்.
இரண்டாவது கோடிஸ்வரராக இருக்கவேண்டும்.//

சவூதியிலென்றால் இரண்டும் தேவை.

அரபு அமீரகத்தில் இரண்டாவது இருந்தால் போதும் :) துட்டுதான் சார், மதமெல்லாம் ரெண்டாம் பட்சந்தான்.

பெருவணிகர் ஜாஷன்மல் - நம்ம தென்னிந்தியாக்காரவுங்க தண்ணி குடிக்கத்துக்கு முன்னமேயே இவரு ஹானரரி சிட்டிசன்ஷிப் வாங்கிட்டாரு.

அன்புடன்
ஆசாத்

said...

//திரு கேவி ராஜா அவர்களே, என் மனைவியை இஸ்லாமிய முறைபடி உடை அணிந்து போட்டோ எடுக்க சொன்னது உண்மை. அந்த போட்டோவும் என்னிடம் உள்ளது. மேலும் என் குடும்பத்தினருடன் எடுத்த போட்டோக்கள் ஆகியவைகள நான் வெளியிட விரும்பவில்லை. அந்த மெண்டல் கேஸ் உங்கக் குடும்பத்தினரை கேவலப்படுத்தியது மறந்துவிட்டதா.
//

அன்பு சிவா,

உங்கள் ஒருவருக்கு ஏற்பட்ட அனுபவத்தை ஒட்டுமொத்த சவுதி அரேபிய அனுபவமாக எடுத்துரைத்தீர்கள், அதனால் தான் அப்படி சொன்னேன்.

மற்றவை பற்றி பேச எண்ணம் இல்லை, மறப்போம் மன்னிப்போம்.

said...

முதலில் முஸ்லிமாக மதம் மாறவேண்டும்.

Siva, Can you please give me some expamples howmany converted muslims got citizenship?

இரண்டாவது கோடிஸ்வரராக இருக்கவேண்டும். அரச குடும்பத்தினரின்
வியாபாரத்திற்கு கோடிகளில் லாபம் ஈட்டி தருபவராக இருக்கவேண்டும்.

Please note that former lebanse president, Rafik Hariri, who was killed recenlty, was also running a nulti million company in Saudi Arbia but still he did net get a citizenship.

இடிஅமீன், நாவஸ் ஷெரீப் போன்ற கொடுங்கோலர்களாகவோ அல்லது உழல் பெருச்சாளிகளாகவோ

This is political asylum not an awarding citizenship. Even some EU countries has given political asylum.

அல்லது மினிமம் இந்தியாவில் ஒரு குண்டு வைத்த தீவிரவாதியாகவோ இருக்கவேண்டும். உ.ம். தாவூத் இப்ராகிம்

From where you got this info. Please give proof.

said...

அபிராமம், தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரின் கூட்டாளிகளின் இருப்பிடமே துபாய்தான்.

From where you got this info. Please give proof.

இங்கென்ன கோர்ட் கேஸா நடக்கிறது? ஐயா நான் சொல்வது "என் அனுபவங்கள்" கோர்ட் கேஸ் அல்ல

said...

//குடியுரிமையைப் பற்றி: வெகு சமீபத்தில கடந்த வருடமோ அல்லது அதற்குள்ளோ.. சவுதி அரேபிய அரசு 1 மில்லியன் வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை அளிக்க இருப்பதாகவும் அதற்கான விண்ணப்பங்கள் அரசு அலுவலகங்களில் கிடைப்பதாகவும் செய்தி சொன்னது.. எவ்வளவு பேருக்குக் கெடச்சது.. என்ற விவரங்கள் என்னிடம் இல்லை.
//

நானும் படித்தேன். முதலில் அரேபிய மக்களான பாலஸ்தீனர், எகிப்தியர்களுக்கு கிடைக்கும். பிறகு பாகிஸ்தானிகளுக்கு. பேருக்கு சில இந்தியர்களுக்கு கிடைக்கும்

said...

ஆசாத் சார், தாம்சன் இருவித வெளியீடுகள் இருக்கும் ஒன்று பெரிய பிளாஸ்டிக் டப்பாவில் காசெட்டுகள். அதில் அந்த கால புதுப் பாடல்கள்.

பிறகு காசெட்டின் ஒரிஜினல் டப்பாவிலே சில காசெட்டுகள் வரும். அந்த கால எம் ஜி ஆர் பாடல்கள் அந்த மாதிரி ட்ப்பாவில் வரும்.

கிடைத்தவுடன் தருகிறேன்

ஒகே வா?

said...

அபிராமம், தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரின் கூட்டாளிகளின் இருப்பிடமே துபாய்தான்.

From where you got this info. Please give proof.

இங்கென்ன கோர்ட் கேஸா நடக்கிறது? ஐயா நான் சொல்வது "என் அனுபவங்கள்" கோர்ட் கேஸ் அல்ல

OK Siva. It means you answer only to that point which you could and If we point your false propaganda in your blog, you just ignore it. Good Policy.

said...

ஹரிஹரன், சொல்வது 100% உண்மை. ஜனநாயகம் வருமா?

அங்குள்ள அரசர்களுக்கும் வியாபாரிகளும் அங்கே சம்பாதித்த பணத்தை வெளிநாடுகளில் தான் முதலீடு செய்கிறார்கள்.

அரேபியர்களுக்கே அவர்கள் நாட்டின் மீது நம்பிக்கை இல்லை


//இந்த மத்திய கிழக்கு நாட்டு அரசியல் எல்லாவற்றையும் தாண்டி, priority-ல் முதலில் வரும் தன் குடும்பத்தில் உள்ள "நாலு பேருக்காக சவூதியில் வேலை செஞ்சாக்கூட பரவாயில்லை" என்று சொல்லும் "நாயகனாக"த் தானே நம்ம சராசரி இந்தியன் இருக்கிறான்//

ஹரி இதுதான் நம் நாட்டின் வாழும் மத்தியதரத்தினருக்கும் எழைக்கும் உள்ள அவலநிலை.

நம் நாட்டின் அரசியல்வாதிகளும், ரௌடிகளும், வியாபாரிகளும் அரேபியவர்க்கு சளைத்தவர் அல்லர். இவர்கள் சரியாக இருந்து நம் நாட்டின் சராசரி குடிமகன்கள் சந்தோசமாக இருந்தால் சவூதி போன்ற நாடுகளுக்கு நாம் ஏன் போக வேண்டும்

said...

ஆசாத் சார்

பெருவணிகர் ஜசன்மால் பேருக்கு முஸ்லிமாக மாறிவிட்டார். இன்னொரு வணிகர் சோய்த் ராம் அவர்கள் மாறவில்லை குடியுரிமையும் பெறவில்லை.

இவர்கள் இருவரின் முயற்சியால் / சிபாரிசால் அமீரகத்தில் சாய் பாபா பஜனைகள் தடையில்லாமல் நடக்கின்றன.

இந்த தகவல்கள் சாய் சேவையில் நான் ஈடுபட்டதால் இவர்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது

said...

//அவர் நேரம், இப்போதெல்லாம் கருப்பு அடிப்பதை விட்டுவிட்டார்கள். நேற்று வாங்கிய குங்குமம் ஹெல்த் ஸ்பெஷலில், பின் அட்டையில் நமீதா வெண்மையாகத்தான் சிரிக்கிறார்.
//

ஆஹா.. சீர்திருத்தங்கள் துவங்கிவிட்டன

said...

//உங்கள் ஒருவருக்கு ஏற்பட்ட அனுபவத்தை ஒட்டுமொத்த சவுதி அரேபிய அனுபவமாக எடுத்துரைத்தீர்கள், அதனால் தான் அப்படி சொன்னேன்.
//

ஆசாத் சார் எனக்கு மட்டுமில்லை என் நண்பர்கள் அனைவ்ருக்கும் இதுதான் நடந்தது

said...

//ஷரியத்போரிவையில் தங்கக்கொடுவாளால் சிரச்சேதம் செய்யப்படுவர்..அல்லது ப்ளைட்பிடித்துத் தப்பி தாங்களிருக்கும் கனடாவிற்குத்தப்பி 'அரசியல் அகதி" கோட்டாவில் இம்மிக்கிரேட் ஆகவேண்டிய நிலைதானே நிதர்சனம்.
//

ஹரி,

உண்மை....உண்மை..

said...

இது என்னவே முட்டால்தனமான கேள்வி. பொது இடத்துல தொங்கும் ஆபாசப்படங்கள் பார்க்கும் எவரின் கண்ணையும் கவரும். சவ்தி சட்டப்படி பொது இடங்களில் ஆபாசம் தடை செய்யப்பட்டுள்ளது. பாடல் வரிகளில் ஆபாசம் இருந்தால் அந்தந்த மொழிகள் அறிந்தவர்களுக்கு மட்டுமே ஆபாசமாகத் தெரியும். இதை இந்திய-தமிழக சென்சார் போர்ட் தனிக்கை செய்திருப்பார்கள் என்ற நம்பிக்கையில் சவூதியில் அனுமதித்திருபார்கள்.

நீர் மூளையை அடகு வைத்துதான் அரபு நாடுகளுக்கு பஞ்சம் பிழைக்க வந்தததாக சொன்னீர். முளையை மீட்காமலேயே கனடா சென்றுவிட்டமாதிரியல்லவா உமது கருத்துக்கள் இருக்கு.

சாமி படங்களை கருப்படிப்பதற்கு அவற்றில் இருக்கும் பாலியல் காட்சிகள் அல்லது வன்முறைக் காட்சிகள் காரணமாக இருக்கலாம். எந்த சாமிலே சாந்தமா இருக்கு? ஜீசஸ் படத்துக்கு கருப்பு இல்லே தெரியுமா?

போங்கடா நீங்களும் உங்க அனுபவமும்.

said...

புலிப்பாண்டி, என் கேள்விகள் முட்டாள்தனமானது தான். நான் இருந்தது முட்டாள்களின் நாடு அல்லவா?

ஆமாண்டா அதே மூளையோட கனடா வந்து இப்போ என் அறிவை மீட்கிறேன்.

இஷ்டமிருந்து படி இல்லேண்ணா மூடிக்கிட்டு போ உன்னை மாதிரி அறிவுசீவிகள் வந்து நான் எழுதுவதை படிக்கவில்லை என நான் வருத்தமே படலே

said...

Siva, when are you going to publish my comments? It has been more than three days and you are yet to publish it. Does it because of I am pointing where you did wrong? Does it because of I am pointing that you are trying to spread false information? You publish only side voices. Good Policy.

said...

Abiramam, which comment are you talking about. I have published all the comments.

Normally from Friday Evening till Monday morning I do not see internet. However this week I have published all the comments and replied to some of them.

Can you please email me your comment to calgarysiva@gmail.com? I will publish them

said...

எலே கரிக்கோலு சிவா.......என்னை அறிவுசீவின்னும் உன்னை மூளையில்லாதவன்னு ஒத்துக் கொண்டதுக்கு நன்றிலே. கல்ப்ல நீயி ஏமாந்தே. கனடாவுலே யாரை ஏமாத்தப்போறியோ!!!! பாவம்லே கனடாக்காரெங்க.

வர்ட்டாலே..........

said...

//இஷ்டமிருந்து படி இல்லேண்ணா மூடிக்கிட்டு போ உன்னை மாதிரி அறிவுசீவிகள் வந்து நான் எழுதுவதை படிக்கவில்லை என நான் வருத்தமே படலே//
ஆகா, சிவா, பொருமை, பொருமை. Zu Zu ஆகிடாதீங்க.

said...

என்ன மாதிரி முட்டாள் கிட்டே அறிவுசீவின்னு பட்டத்தே வாங்கிட்டு அந்த நினப்பிலே எங்கேயாவது ஏடாக்கூடமா மாட்டிக்காதேப்பூ.

கல்புலே நான் ஏமாந்தேன்னு யாருப்பூ சொன்னா?

எல்லாருக்குமே 'அறிவிசீவி' பட்டத்தே தரதுதான்ப்பு எங்க தொழிலு.

அமெரிக்காவிலே நீ எப்படி ஏமாத்துறயோ அதெ மாதிரிதான்பூ நானும் கனடாவிலே

வாப்பூ அடிக்கடி வந்து போ

said...

வாங்க சீனு, முதல் வருகைக்கு நன்றி. அறிவுசீவிகளுக்காக அவ்வப்போது பொறுமை குறையும்.

ஞாபக படுத்தினதிற்கு நன்றி

said...

அன்புள்ள சிவா,
புலிப்பாண்டி என்ற பெயரில் இங்கு இதுவரை எழுதி இருப்பது எவனோ இஸ்லாமிய பயங்கரவாதி..புனைப்பெயரில் என்ன இருக்கிறது? எனக்கொன்றும் இல்லை..இஸ்லாம் பற்றிய விவாதங்களை கவனிப்பவர்களுக்குத் தெரியும், புலிப்பாண்டி முஸ்லிம் பயங்கரவாதிகளின், நடுநிலைமை பேசும் திருடர்களின் விரோதி மட்டுமே என்று..நீங்கள் குழம்ப வேண்டாம்..

எனவே தமிழ்கூறும் நல்லுலகமே..தமிழ் இணைய புலிப்பாண்டி ஜிகாதிகளின்,முஸ்லிம் பயங்கரவாதிகளின் எதிரி..இப்புனைப்பெயர் அவர்களை எதிர்த்து எழுத மட்டுமே..நேசகுமார்,ஆரோக்கியம் அண்ணன்,கால்கரி சிவா போன்றவர்களை திட்டி எழுதுவது என் பின்னூட்டங்களால் கொலைவெறி அதிகரித்துவிட்ட இணைய முஸ்லிம் பயங்கரவாதிகள் என்பதை இதன்மூலம் அறிக:):)